News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

அவனே உன் வாழ்க்கை மூர்க்கன்-5

by Layas Tamil Novel
577 views
A+A-
Reset

மூர்க்கன் 5

தான் போட்ட மாத்திரைக்கு வடிகால் தேடி ரக்ஷனா அவள் லேபிற்குள் நுழைந்தாள்.

அவள் வந்த நேரம் அங்கே ரம்யா லேபிள் வேலை செய்து கொண்டிருக்க.. அவளோடு புதிதாக சேர்ந்திருந்த விவேக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனையே முகத்தோடு பார்த்தவள் “ரம்யா மீதியை நாளைக்கு கன்டினியூ பண்ணிக்க.. ” என்று அவளை அங்கிருந்து போகச் சொன்னாள் .

அவள் நோக்கம் என்று புரிந்து போனது ரம்யாவிற்கு. தன்னிடம் பேசினாலும் ரக்ஷனாவின் பார்வை மொத்தமும் விவேக்கின் மீதிருக்க அதை உணர்ந்ததும் “ஓகே மேம் ” என்று அங்கிருந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

அவள் செல்லும்வரை பொறுமையாக இருந்த ரக்ஷனா ரம்யாவின் உருவம் மறைந்த அடுத்த நொடி விவேக்கின் சட்டையைப் பற்றி அங்கே இருந்த அவள் ஆபீஸ் ரூமிற்கு அழைத்து சென்றாள்.

விவேக் அவளின் காதலன் தான் . நீண்ட நாட்கள் தன் காதலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தவன் மோகனின் மறைவுக்கு பின் தன் கோபத்தை தனித்துக்கொள்ள விவேக்கை தான் நாடினாள்.

அவனும் அவள் ஆசைக்கும், தேவைக்கும் வளைந்து கொடுத்து தனக்கான காரியத்தையும் சாதித்துக் கொள்கிறான். அவள் ராவணை திருமணம் செய்துகொண்டதாக சொன்னதைக்  கூடப்  பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவளோடு இன்று வரை உறவில் இருக்கிறான். அதுவும் தீவிரமாக.

ஆஃபீஸ் ரூமிற்குள் சென்ற அடுத்த நொடி இருவரும் அவசர அவராமாக ஆடைகளை அவிழ்த்து வீசி இருக்க..

விவேக்கின் கழுத்தைப் பற்றி.. அவன் இதழை முற்றுகையிட்டிருந்தாள் ரக்ஷனா..

அவளை அப்படியே தூக்கி தன் இடையில் அமர்த்தி இருந்த விவேக் அங்கே இருந்த மேஜையில் கொண்டு போய் அவளை அமர வைத்தவன் “ஹை எடுத்துகிட்டியா..” என்று அவள் மேனியில் தன் கைகளை படர விட்டபடி கேட்டான்.

“ம்ம்ம் விவேக்.. அந்த ராஸ்களை என் வளைக்குள்ள விழ வைக்க அவனுக்கும் கொடுத்தேன். ஆனா அவன் என்னை ரூம்குள்ள தள்ளி லோக் பண்ணிட்டான். என்னால பொறுக்க முடியல.. அதான் உன்னை தேடி வந்துட்டேன் ” என்று அவள் மேல் இருந்த விக்கியின் கையை பற்றி இடைக்குக் கீழ் கொண்டு சென்றவள் அவனுக்கு தன் மோக விழிகளால் தன் தேவையை உணர்த்தினாள்.

அவள் நோக்கம் அறிந்த அவன் கரம் கொண்டு அவள்  தேவையை தீர்க்கத்  துவங்கியபடியே.. “என்னோட ஹை நீ தான் டி.. ” என்று மற்றொரு கையால் அவள் கழுத்து வளைவில் கை கொடுத்து அவள் இதழை மூர்க்கமாக முத்தமிடத் துவங்கி இருந்தான்.

அவர்கள் அறைக்கு பின்னால் இருந்த ரூமில் தான் ரம்யா தங்கி இருந்தாள் .

“ச்சே! இதுங்களோட இதே ரோதனையா போயிருச்சு.. தினமும் இதுங்க ரெண்டும் அடிக்குற கும்மாளத்தை எல்லாம் நான் சகிச்சுக்க வேண்டி இருக்கு.” என்று மற்றொரு அறையில் இருந்து ரக்ஷனாவும், விவேக்கும் எழுப்பும் சத்தத்தை கேட்டு முகம் சுழித்தவள் தன் ஹெட்ப்போனை காதில் மாட்டி அதில் சத்தத்தைக் கூட்டி பாடல் கேட்டுக்கொண்டே கண் மூடி படுத்துவிட்டாள்.

தன் தம்பி மோகனுக்கு அடுத்து ரக்ஷணா நம்பும் ஒரே ஜீவன் ரம்யா தான். அவள் மட்டும் தான் ஆரம்பத்தில் இருந்து ரக்ஷனாவின் அனைத்து விஷயங்களிலும் கூட இருக்கிறாள். நம்பிக்கையானவளும் கூட. அதனாலேயே. .அவளுக்கு என்று தனி அந்தஸ்தை கொடுத்து தன்னோடு வைத்திருக்கிறாள் ரக்ஷணா .

அவள் போதை மாத்திரை தயாரிக்கும் விஷயத்தில் உறுதுணையாக இருப்பது ரம்யா தான். ஈஸ்வரால் அவள் லேப் மொத்தமும் நாசமடைந்த பின்னும். அதை போல இவ்வளவு  சீக்கிரத்தில் தன் தொழிலை மீண்டும் தொடங்க முக்கிய காரணமே ரம்யா தான் , அழிந்து போல பார்முலாக்களை எல்லாம் ரீஸ்டோர் செய்து அதை திருப்பிக்கொடுத்தது ரம்யா தான்.

அதனாலேயே அவளை இந்த லேபிள் தனக்கு அடுத்த நிலையில் வைத்திருக்கிறாள் ரக்ஷனா. ரக்ஷணாவைத் தாண்டி ரம்யாவிடம் யாரும் நெருங்கி விட முடியாது, அந்த அளவுக்கு அவளை பாதுகாப்பாக வைத்திருக்கிறாள் ரக்ஷனா.

அதனால் தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் இங்கு நடந்தாலும் தனக்கு எந்த தீங்கும் வராது என்று நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் ரம்யா.

ஆனால் அவளுக்கு சீக்கிரமே ஆப்பு வரப்போகிறது என்று அவள் அறியவில்லையே..

இங்கே தன் நிலையை நினைத்து அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது இளங்கிளிக்கு.

தன் வாழ்க்கையை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் யாராக இருக்கும். அவன் எப்படி இருப்பான் , தனக்கு இல்லை என்றாலும் தன் பிள்ளைக்கு அவன் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு .

எப்படியாவது கர்ணனிடம் கெஞ்சிக் கூத்தாடி தன் கணவன் இருக்கும் இடம் , அவன் குடும்பம் பற்றி தெரிந்து கொண்டு அவர்களிடம் சென்று தன் வாழ்க்கைக்கு நியாயம் கேட்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு பின்னால் அமர்ந்து இருந்த கர்ணனை காண எழுந்து வெளியே சென்றாள்.

அவள் வரும் அரவம் கேட்டுத் திரும்பிய கர்ணன் அவசரமாக தான் குடித்துக்கொண்டிருந்த மதுவை பின்னால் ஒளித்து வைத்தான்.

“அண்ணா! எதுக்கு மறைக்குறிங்க.. தினமும் நான் தூங்கின பிறகு நீங்க இப்படி தனியா வந்து குடிக்குறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? எனக்கு இதெல்லாம் எப்பவோ தெரியும்” என்று சிரித்தபடி அவன் அருகே சென்று அமர்ந்தாள்.

“உனக்கு தெரியுமா கனி..” என்று ஆச்சர்யத்தோடு கர்ணன் அவளைப் பார்த்தான்,

“ம்ம்.., ஒரு நாள் நீங்க அதிகமா குடிச்சிட்டு தள்ளாடிட்டே வந்து படுத்து தூங்கிட்டிங்க. நான் பாத்ரூம் போக எழுந்து பின்னாடி வந்தேன். அங்க நீங்க குடிச்ச க்ளாஸும் , பாட்டிலும் பார்த்தேன் அப்போ தான் நீங்க குடிப்பிங்கன்னே எனக்கு தெரியும் ” என்றாள் .

“அடக்கடவுளே.. ” என்று தன் நிலையை நினைத்து சிரித்துக்கொண்டவன் “அண்ணா வேலை பார்த்து அலுப்புல தூக்கமே வர மாட்டேங்குதும்மா.. அதான் கொஞ்சம் குடிச்சா நிம்மதியா தூங்கலான்னு குடிக்குறேன் ” என்றான்.

“இப்படி கஸ்டமான வேலைக்கு தான் போகணுமா அண்ணா . வேற எதுவும் வேலை பாக்கலாமே.. ” என்றாள்.

“நாம இந்த ஊருக்கு வந்த அப்போ எங்கையும் எனக்கு வேலை இல்லேனு சொல்லிட்டாங்கம்மா.. அப்போ இந்த வேலை தான் நமக்கு சோறு போட கை கொடுத்துச்சு, முதலாளியும் நல்லவர் அதனால இங்கையே இருந்துட்டேன் ” என்றான்,

ரக்ஷனா சொல்லி தான் கர்ணன் இளங்கிளையை பார்த்துக்கொள்ள வந்தான். ஆனால் அவளோடு பேசிப்பழகிய பின் தான் அவள் யதார்த்தமான குணம் அறிந்து உண்மையாகவே தன் தங்கை போல பாவித்து அவளை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிறான் கர்ணன்.

அவள் என்ன சொன்னாலும், கேட்டாலும் தன்னால் முடிந்தவரை அவளுக்கு செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

இப்பொது ரக்ஷனாவும் அந்த நம்பிக்கையில் தான் அவனிடம் தன் கணவன் பற்றிக் கேட்கவந்தாள்.

அவள் என்ன கேட்டாலும் உண்மையை கர்ணன் வாயில் இருந்து வராது என்று அவள் அறிந்திருக்கவில்லையே..

என்னதான் கர்ணன் இளங்கிளியின் மீது பாசம் வைத்திருந்தாலும், அவன் ரக்ஷனாவின் விசுவாசி.. அவளுக்கு துரோகம் செய்வதை அவன் கனவிலும் நினைக்க மாட்டான். அதனால் தான் அவனை நம்பி இளங்கிளியை அவன் பொறுப்பில் விட்டிருக்கிறாள்.

அதே போல.. கனியைப் பார்த்துக்கொள்ள ரக்ஷனா அவனுக்கு மாதா மாதம் பணம் அனுப்புகிறாள் தான் . ஆனால் ஒரு கண் துடைப்பிற்க்காக தான் இந்த வேளைக்கு செல்கிறான் கர்ணன், அவன் வேலை பார்க்கும் முதலாளியும் நல்ல மனிதன், அவர் தான் அவன் கஷ்டப்படுகிறான் என்று சொன்னதை நம்பி அவனுக்கு வேலையும் போட்டுக் கொடுத்து இவர்கள் இருவரும் தங்க வீடும் கொடுத்து இருக்கிறார்.

“அண்ணா நான் உன்கிட்டே ஒன்னு கேக்கணும்” என்றாள்.

“என்னம்மா சொல்லு… ” என்றான் கர்ணன்.

“என் புருஷன் பேரு என்ன?” என்றாள்.

இப்படி திடீரென்று வந்து தன் கணவனின் பெயரைக் கேட்டதும் குடித்திருந்த மதுவின்  போதை சட்டென்று இறங்கியது போல தோன்றியது அவனுக்கு. சட்டென்று அருகே இருந்த மது பாட்டிலை எடுத்து அப்படியே தன வாயில் சரித்திருந்தான்.

“சொல்லுண்ணா அவர் பேர் என்ன? எங்க இருக்கார்? அவர் குடும்பம் என்னனு மட்டும் சொல்லு.. ” என்று கெஞ்சுதலாக அவனிடம் கேட்டாள்.

“அவனே உன் வாழ்க்கையில் இல்லையின்னு ஆகிருச்சேம்மா நீ எதுக்கு பழசை எல்லாம் கேட்டுட்டு இருக்க. அது தெரிஞ்சு என்னமா ஆகப்போகுது” என்றான்.

“இல்லேண்ணா  எனக்கு தெரிஞ்சுக்கணும். அவர் குடும்பத்தைப் பத்தி சொல்லாட்டியும் பரவால்ல.. அவர் பேராச்சும் எனக்கு தெரிஞ்சுக்கணும், நாளைக்கு என் குழந்தைக்கு அவன் அப்பா பேர் தெரியாம போயிடக்கூடாது இல்லையா. அதுக்காக தான் கேக்குறன் தயவு செய்து சொல்லுங்க ” என்று இறைஞ்சுதலாக அவனைப் பார்த்தாள்.

கர்ணன் அமைதியாக தலையை தொங்கப்போட்டு அமர்ந்து இருந்தான்.

இளங்கிளியோ விடாமல் கேட்டாள் அவனிடம் “அண்ணா! எனக்காக இல்லாட்டியும், என் குலைந்திக்காகவாவது சொல்லுங்க . அவர் பேர் என்னனு மட்டும் சொல்லுங்க அதுக்கு அப்பறோம் நான் எதுவும் கேட்கமாட்டேன் ” என்று கேட்கும்போது அவள் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

அவளை விருட்டென நிமிர்ந்து பார்த்தவன் இளங்கிளியின் கண்ணீரைப் பார்த்ததும் என்னவோ போல ஆனது அவனுக்கு. அவள்  கண்ணீர் அவனை ஏதோ செய்தது,

சிறிதும் யோசிக்காமல் “1 ராவண்” என்றான்.

“ராவண்” என்று அவள் உதடுகள் உச்சரித்துப் பார்த்துக்கொண்டது அவன் பெயரை.

எத்தனையோ விஷயத்தில் பொய்களை சொல்லி இளங்கிளியிடம் இருந்து நிறைய விஷயங்களை மறைத்திருக்கிறான். ஆனால் அவள் கணவன் விஷயத்தில் மறைக்க அவனுக்கு மனம் வரவில்லை. பாவம் அவள் இந்த வயதில் எத்தனையைத் தான் தாங்கிக் கொள்வாள். அவன் கணவன் பெயரும் பொய் என்று தெரிந்தால் சத்தியமாக உடைந்தே போய்விடுவாள் என்று உணர்ந்து தான் ராவண் பெயரை சொல்லி இருந்தான்,

“சரின்னா இனி நான் உன்கிட்டே எதுவும் கேட்க மாட்டேன்” என்றவள் “அண்ணா! வேற ஊருக்கு போகலாம்னு சொன்னேனே.. ” என்று தயக்கமாகக் கேட்டாள்.

“நாளைக்கு என் முதலாளியைப் பார்த்துப் பேசுறேன் ம்மா .. அவருக்கு தெரிஞ்ச இடத்துல வேலை பாத்து தர சொல்லி கேக்குறேன்” என்றான்.

அவனோடு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தாள் இளங்கிளி. கர்ணன் தோளில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள்.

இருவரும் அதன் பின் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவன் சட்டையை அவள் கண்ணீர் துளி நனைந்திருக்க..

சட்டென அவள் முகத்தை திரும்பிப் பார்த்தான் கர்ணன். தன் அண்ணன் என்ற உரிமையில் , பாதுகாப்பில் அவன் தோள்களிலேயே உறங்கிப் போய் இருந்தாள் . தூக்கத்திலும் கவலை அவளை விட்டுவைக்கவில்லை போலும். அதனால் தான் தூக்கத்தில் அழுத்தவள் கண்ணீர் கர்ணனின் சட்டையை நனைத்து இருந்தது,

மெல்ல அவள் தலையை வாஞ்சையாக வருடிக்கொடுத்த ராவண். “கனி.. எழுந்திருச்சு உள்ள போய் படும்மா.. குளிருது பாரு.. ” என்றான்.

அவன் குரல் கேட்டு மெல்லக் கண் விழித்தவள் “சரிண்ணா ” என்று எழுந்துகொண்டவள். “நீயும் நேரமே வந்து தூங்கு காலையில வேளைக்கு போகணுமில்ல.. ” என்று உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் ஒரு முடிவுக்கு வந்தவனாக , இந்த ஊரை விட்டு கண்காணாத தூர தேசத்திற்கு இளங்கிளியை அழைத்துச் சென்று அவளை நல்லபடியாக பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவளை எக்காரணம் கொண்டும் அவள் குடுபத்திடம் சேர்த்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். இல்லை என்றாள் ரக்ஷனாவினாள் இளங்கிளிக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும், இளங்கிளி பாதுகாப்பாக இருக்க வேண்டும். அது மட்டும் போதும் என்று நினைச்சிருந்தவன் எழுந்து உறங்கிவதற்கு உள்ளே சென்றுவிட்டான்.

ஹலோ டியர்ஸ்

நியூ ஸ்டோரி ஒன்னும் ஆரம்பிச்சு இருக்கேன். அது முழுக்க முழுக்க ரொமான்ஸ் மட்டுமே கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கப் போகுது. 18+ ரொமான்டிக் ஸ்டோரி தப்புத் தாண்டா காதல் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.இந்த கதை இங்க மட்டும் தான் கிடைக்கும். ரொமான்ஸ் பிடிக்காதவங்க இந்த ஸ்டோரியை ஸ்கிப் பண்ணிருங்க

தினம் பிரீ எபிசொட் மூர்க்கன் வரப்போகுது, நான் தொடர்ந்து பிரீ ஸ்டோரி கொடுக்கணும்னா நீங்க எனக்கு லைக், கமெண்ட் பண்ணனும்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.