மூர்க்கன் 24
“ஒரு ரெண்டு நாளைக்கு மருந்து எழுதி கொடுக்கிறேன் . சாப்பிட்டு நல்லா எடுக்க சொல்லுங்க.. அவர்களுக்கு கொடுத்த மருந்தோட தாக்கம் கொஞ்சம் கொஞ்சமா தான் குறையும். ” என்றார் கயலை பரிசோதித்த டாக்டர்.
“சரிங்க டாக்டர் ” என்று கயலோடு அவர் அறையை விட்டு வெளியே வந்தான் ராஜ்.
அவளோ இன்னமும் ஏதோ குழப்பத்தோடு தான் இருந்தாள் . என்னவோ தீவிர யோசனை அவளிடம் . அதை கவனித்தவாரே காரிற்கு வந்த ராஜ் காரை எடுக்காமல் கயலை பார்த்தான்.
“என்ன சார் ” என்றாள் கயல்.
“தலை லேசா வலிக்குற மாதிரி இருக்கு. இங்க ஹாஸ்பிடல் கேண்டின் போய் ஒரு காபி குச்சிட்டு கிளம்பலாமா?”என்றான்.
“சரிங்க சார் ” என்று அவன் முன்னே நடக்க அவன் பின்னால் சென்றாள் கயல்.
“நீ என்ன குடிக்கிற கயல் ” என்றான்.
“எனக்கு ஜூஸ் எதுவும் இருந்தா வாங்கி கொடுங்க சார். எவ்ளோ தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்க மாட்டேங்குது. தாகமாவே இருக்கு ” என்றாள் தன் வறண்ட இதழ்களை ஈரம் செய்து கொண்டே.
“சரி நீ உக்காரு ” என்று அவளை அமர சொல்லிவிட்டு போய் இருவருக்கும் காபியும், ஜூசும் குடிக்க வாங்கி வந்தான்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் குடித்துக்கொண்டு இருந்தனர்.
கயல் ஜூஸ் க்ளாஸையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள் . ராஜ் அவளை பார்த்துக்கொண்டு இருந்தான்.
“கயல்..” என்ற அவன் அழைப்பில் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
“ஏன் ஒரு மாதிரி டல்லாவே இருக்க? உடம்பு ஏதாவது பண்ணுதா? வேணும்னா டாக்டரை இன்னொரு தரம் பார்த்துட்டு வந்துரலாமா ?” என்றான்.
“இல்ல சார் அதெல்லாம் ஒன்னும் இல்ல.. கொஞ்சம் டீஹைடிரேட் ஆனா மாதிரி ஒரு பீல் இருக்கு அவ்ளோ தான், மத்தபடி நான் ஓகேதான்” என்றாள்.
“பார்ப்போம் ஏன் என்னவோ போல இருக்க.. ” என்றான்.
அவன் மீண்டும் மீண்டும் கேட்கவும் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது அவளுக்கு. அவசரமாக கண்ணீரை துடைத்தவள் “நீங்க மட்டும் என்னை ரக்ஷணா கிட்டே இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வரலையின்னா இந்நேரம் உங்க தங்கச்சி மித்ரா போல நானும் அந்த மோகனுக்கு இறையாகிருப்பேன் இல்லையா சார்” என்று இதயம் கனக்கக் கேட்டாள்.
அவள் வார்த்தைகளில் இருந்த வலியை ராஜ்ஜால் உணர முடிந்தது. அவள் பயன்பட்டது நியாயம் தானே.. ராவண் மட்டும் துரிதமாக யோசித்து அறிவையும், கயலையும் காப்பாற்றி இருக்கவில்லை என்றாள் இருவரின் நிலையம் என்னவாகி இருக்கும் என்று யாராலும் கணித்திருக்க முடியாது.
“கயல்… முதல்ல என் கண்ணைப் பார்த்துப் பேசு,” என்றான் ராஜ் உறுதியான குரலில்.
அவள் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இப்போ நீ இங்கே என் முன்னாடி பத்திரமா இருக்க. இனிமேல் இந்த மாதிரி யோசிக்கிறதை நீ நிறுத்து. அந்த மாதிரி ஒரு சம்பவம் இனி உன் வாழ்க்கையில நடக்கவே நடக்காது. நடந்ததை நினைச்சு வருத்தப்படலாம், ஆனா நடக்காத ஒரு விபரீதத்தை கற்பனை பண்ணி இப்போ ஏன் அழுதுட்டு இருக்க?” என்றான்.
“இல்ல சார்… அந்த நிமிஷம் நான் உணர்ந்த பயம்… மித்ராவுக்கு நடந்ததை நினைக்கும் போது…” என்று சொல்லும்போதே கயல் தேம்பி அழுதாள்.
“மித்ராவோட நிலையே வேற.. அவளை அங்க இருந்து கூப்பிட்டு வர நாங்க எவ்ளோ முஅயற்சி பண்ணிணோம்ன்னு நீயும் பாத்திருக்க தானே கயல். ஆனா உனக்கு அப்படி இல்ல. நான் இருக்கேன், அதைவிட முக்கியமா என் அண்ணா ராவண் இருக்கார். அவர் தான் உன்னையும், அறிவையும் அங்க இருந்து கூப்டு வர எல்லா ஏற்பாடும் செய்தார். எங்களை எல்லாம் தாண்டி உன் மேல ஒரு சின்ன கீறல் கூட விழ நாங்க விடமாட்டோம். ரக்ஷணாவோட ஆட்டம் இதோட முடிஞ்சது. இனிமேல் அந்த ரக்ஷணாவும், மோகனும் நிஃமத்தியா இருக்க முடியாது,” என்று அவள் கையை அழுத்தி நம்பிக்கை கொடுத்தான்.
“ஆமா சார், என்னவாவது பண்ணி அந்த லேப்பை அழிச்சு அவங்க ரெண்டு பேரையும் ஏதாவது பண்ணுங்க. அவங்க எப்பவும் இதே வேளையில் தான் இருக்காங்க . தினம் தினம் புதுசா ஏதோ போதை மருந்து கண்டு பிடிக்குறாங்க, இதை மார்க்கெட்ல ஆள் பிடிச்சு சின்ன பிள்ளைங்களுக்கு எல்லாம் கொடுத்து அவங்க வாழ்க்கையை நாசம் பண்ராங்க” என்றாள் மிகவும் கவலையாக.
“எங்களுக்கும் தெரியும் கயல். ஆனா அதுக்கெல்லாம் சரியான நேரம் வரட்டும்னு தான் நாங்க காத்துட்டு இருக்கோம்” என்றான் ராஜ்.
“சார் ஒரு விஷயம் சொல்லணும் ” என்று சுற்றும் முற்றும் ஒரு முறை திரும்பி பார்த்தாள்.
“என்ன கயல்?” என்றான் .
“வாரா வாரம் ஒரு பையன் அந்த ரக்ஷணாவை பார்க்க வரான். அவன்கிட்டே தான் புதுசா தயாரிக்குற மருந்தை கொடுத்து விட்றா . அவனும் திஹ்ரும்ப ஒரு வாரம் கழிச்சு ஏதோ போன்ல அவகிட்டே காட்டி அவ கொடுத்த மருந்தை சாப்பிட்டவங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு கட்டுறான். ஆனா அது எல்லாம் யாருன்னு எனக்கு தெரியல. “என்றவள் “ஆஹ்! அப்பறோம் மாசத்துக்கு ஒரு தரம் எங்களை எல்லாம் வெளியே அனுப்பிட்டு ஒரு மீட்டிங் ஒன்னு ஏற்பாடு பண்றங்க. அதுக்கு பெரிய பெரிய ஆளுங்க.. வேற ஓலை ஊர்ல இருந்து எல்லாம் ஆளுங்க அவளை பார்க்க வராங்க. அவங்களுக்கு எல்லாம் நிறைய மருந்து செய்து கொடுக்குறதா கேள்வி பட்டேன்” என்றாள்.
அது எல்லாம் சரி நான் பாத்துக்கிறேன். நீ எப்படி அந்த ரக்ஷணாகிட்டே மாட்டிக்கிட்ட..” என்றான் ராஜ்.
“அது வா சார்.. .அதுக்கு காரணம் இந்த வாய் தான் ” என்று தன் வாய் மேல் அடி ஒன்றை கொடுத்தவள் “மித்ராவை காணோம்னு தெரிஞ்சதும் அவங்க cctv கேமெராவுல எல்லாம் பார்த்து எல்லாரையும் பிடிச்சு விசாரிச்சிட்டு இருந்தாங்க, அதை எல்லாம் பார்த்து எனக்கு பயம் வந்திருச்சு. அப்போ இருந்த பதட்டத்துல என்கூட வேலை பாக்குற ரம்யாகிட்டே நான் எல்லாத்தையும் உளறிகொட்டிட்டேன். அவ சரியான ஆளு சார். என்கிட்டே நல்லவ மாதிரி பேசி எல்லா விஷயத்தையும் வாங்கிட்டு அடுத்த நாளே அதை எல்லாம் அந்த ரக்ஷணாகிட்டே போட்டுக் கொடுத்துட்டா.. ” என்றாள் பாவமாக.
“அப்போ அந்த ரம்யா தான் இதுக்கெல்லாம் காரணமா.. ” என்று யோசித்தவன் “இனி எதை பத்தியும் நீ கவலை படாத.. உன்னை பத்திரமா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு” என்று அவள் கைகளை பிடித்துக்கொண்டு உறுதி அளித்தான் ராஜ்.
அவன் தன் கையை பிடித்திருந்ததன் உணர்வு இப்பொது தான் கயல் உணர்ந்தாள், அவள் சற்று கூச்சத்தோடு… அவன் கைக்குள் இருந்த தன் கையை விடுவித்துக்கொள்ள…
ராஜும் அதை கண்டும் காணாமல் விட்டவன் “சரி போலாமா?” என்றான்.
“போலாம் சார்..” என்று அவளும் எழுந்து கொள்ள அவளை அழைத்துக்கொண்டு ராவண் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.
…
அறைக்குள் இருந்து மித்ராவின் கதறல் சத்தம் மெல்ல அடங்கி, ஒருவித அமைதி நிலவியது. ஈஸ்வர் பால்கனியில் நின்றபடி இருண்ட வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் சட்டையில் இருந்த ரத்தத்துளிகளை பார்த்து அவன் கண்கள் கலங்கி இருந்தது.
ஆனந்த் உள்ளிருந்து இரண்டு கிளாஸ் சூடான காபியுடன் வெளியே வந்தான்.
“இந்தா ஈஸ்வர், இதை முதல்ல குடி. சாயங்காலத்துல இருந்து நீ எதுவுமே சாப்பிடல.”என்று அவனிடம் காபி கப்பை நீட்டினான் ஆனதுஆனந்த்.
ஈஸ்வர் காபியை வாங்கிக் கொண்டான், ஆனால் அவன் கண்கள் கலங்கி இருந்தன.
“ஆனந்த்… ஒரு மனுஷன் உயிரோட இருக்கும்போதே நரகத்தை அனுபவிக்க முடியுமான்னு கேட்டா, இப்போ இந்த ஒரு வாரமா மித்ராவைப் பார்த்தா தெரியும்டா. அவ படுற கஷ்டத்தைப் பார்க்கும்போது, என் உயிரே போற மாதிரி இருக்கு. ஆனா என்னால அவளுக்கு எந்த உதவியும் செய்ய முடியலையே…” என்று தன் மனதில் இருந்ததை அவனிடம் கொட்ட ஆரம்பித்து இருந்தான் ஈஸ்வர்.
“நீ அவளுக்குப் பெரிய உதவிதான் பண்ணிட்டு இருக்க ஈஸ்வர். அந்த விஷத்தை அவகிட்ட இருந்து தள்ளி வச்சிருக்க பாரு, அதுதான் நீ அவளுக்குக் கொடுக்கிற ஆகச்சிறந்த அன்பு. அவ கொஞ்சம் கொஞ்சமா அதுல இருந்து மீண்டு வந்திருவா டா” என்று தன் நண்பனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தினான் ஆனந்த்.
“அன்பா? அவ என்னை என்னென்ன வார்த்தை சொல்றா தெரியுமா ஆனந்த்? ‘நீ என் வாழ்க்கையைச் சீரழிக்க வந்த ராட்சசன்’னு சொல்றா. ‘மோகன் என்னைச் சந்தோஷமா வச்சிருந்தான்’னு அவ புலம்பும்போது என் நெஞ்சு வெடிச்சிர மாதிரி இருக்குடா. அந்தப் பாவி அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்துட்டான். இப்போ அவகிட்ட இருந்து நல்ல பெயரை அவன் வாங்கிக்கிறான், அவளைக் காப்பாத்த நினைக்கிற நான் அவளுக்கு வில்லனாத் தெரியுறேன்.” என்றான் விரக்தியாக,
“அவளுக்கு இப்போ சுயநினைவு இல்லை ஈஸ்வர். அந்தப் போதை மருந்து அவ மூளையை அப்படி ஆட்டிப்படைக்குது. சூர்யா சொன்னது ஞாபகம் இருக்கா? இது ஒரு யுத்தம். இந்த யுத்தத்துல அவ தோத்துடக் கூடாதுன்னு தான் நீ இவ்வளவு கஷ்டப்படுற. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, அவளே உண்மையை உணருவா.” என்றான் .
“ஆனா அந்தத் தழும்பு ஆறாதுல்ல ஆனந்த்? இன்னைக்கு மருந்து கேட்டு அவ கையைத் தானே காயம் பண்ணிக்கிட்டா. அந்த ரத்தத்தைப் பார்த்தப்போ நான் அப்படியே உறைஞ்சு போயிட்டேன். ‘எனக்கு இது வேணாம், அவளை அவ கேட்ட இடத்துக்கே கூட்டிட்டுப் போயிடலாம்’னு ஒரு நிமிஷம் என் மனசு பலவீனமா யோசிச்சிருச்சு டா.. அப்படி என்னை யோசிக்க வெச்சுட்டா அவ… அவ்வளவு வேதனை அவ கண்ணுல…”என்று ஆவேசமாக தன் ஆற்றாமையை ஆந்திடம் கொட்டினான்.
“அப்படி மட்டும் பண்ணிடாத ஈஸ்வர். இப்போ நீ இறக்கம் காட்டுனா, அப்புறம் அவளோட பிணத்தைப் பார்க்கத்தான் நீ அங்க போகணும். சூர்யா இருக்காள்ள? அவ எவ்வளவோ கேஸ்களைப் பார்த்திருக்கா. அவளே சொல்றா, மித்ரா சீக்கிரம் மீண்டு வருவான்னு. நீ தைரியமா இரு.” என்று மித்ராவை பார்க்க அவர்கள் அமர்த்தி இருக்கும் நர்ஸ் சொன்னதை ஈஸ்வருக்கு நியாபகப்படுத்தி அவனை தைரியப்படுத்தினான்.
“எனக்குத் தெரியும்டா. ஆனா அவ தூங்கும்போது அந்த முகத்துல தெரியுற அமைதியைப் பார்க்கும்போது தான் எனக்குள்ள ஒரு நம்பிக்கை வருது. ‘மிது… சீக்கிரம் பழையபடி வந்துருடி… உன் ஈஸ்வர் உனக்காகக் காத்துட்டு இருக்கேன்’னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இருக்கேன்.”என்றான் ஈஸ்வர்
“கண்டிப்பா வருவாடா. நீ அவளுக்காகப் போலீஸ் கிட்ட பொய் சொல்லி, மேரேஜ் சர்டிபிகேட் எல்லாம் ரெடி பண்ணி இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க. உன் காதல் அவளை மீட்டுட்டு வரும். இப்போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.” என்று தன் நண்பனுக்கு ஆறுதல் சொன்னான் ஆனந்த் .
ஈஸ்வர் காபியை ஒரு மிடறு குடித்தான். அந்தச் சூடு அவன் தொண்டைக்கு இதமாக இருந்தது, ஆனால் அவன் மனதிற்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பு அணையவே இல்லை. மித்ராவை இந்த நிலைக்கு ஆளாக்கிய மோகனை ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவன் உள்ளம் கனன்று கொண்டிருந்தது
