மூர்க்கன் 20
“மோகன்.. மோகன்.. ” என்று படிக்கையில் பிதற்றியபடி போதையில் இருந்தாள் மித்ரா.
அவளை கை கட்டிப் பார்த்தபடி நின்று இருந்த ஈஸ்வர் “அவன் பேரை மூச்சுவிடாம சொல்லிகிட்டே இருக்கா” என்று புலம்பினான்
“யாரு டா அது மோகன். மித்ரா இங்க வந்ததில் இருந்து அந்த பேரையே தான் மந்திரம் மாதிரி சொல்லிட்டு இருக்கா” என்றான் ஈஸ்வரின் நண்பன் ஆனந்த் .
“அவன் தான் டா என் மிதுவை இந்த நிலைக்கு ஆளாக்கினது . அவனால தான் மித்ரா என்னை வேணாம்னு ரிஜெக்ட் பண்ணினா” என்றான்.
“ஏன் டா அவன் என்ன உன்னை விடா அழகா இருப்பானா? உன்னை வேணாம்னு சொல்லிட்டு அவன் பின்னாடி போயிருக்கா. அப்படி அவன்கிட்டே என்ன தான் இருக்கு. எனக்கு அவனை பார்க்கணும் மச்சான்” என்றான் ஆனந்த் .
அவனை திரும்பி முறைத்த ஈஸ்வர் “அவன் கொடுத்த போதை மருந்து தான் மித்ராவை அப்படி எல்லாம் பண்ண வெச்சிருக்கு, அவ அவளாவே இல்ல இப்போ வரை. நீயே பாக்குறியே எப்படி அடிக்ட் ஆகி இருக்கான்னு ” என்று கவலையாக சொன்னான் ஈஸ்வர்.
“புரியுது மச்சான் நீ வருதப்படாத சீக்கிரமே மித்ராவுக்கு குணம் ஆகும், அவ எல்லாத்தையும், எல்லாரையும் புரிஞ்சிக்குவா” என்று ஆறுதல் கூறினான் ஆனந்த் .
“ம்ம்… சரிபன்னனும் இவளை , இப்படியே போனா ரொம்ப கஷ்டம்” என்றவன் “மித்ராவை பாத்துக்க அவ கூடவே இருக்க ஒரு கேர் டேகேர் வேணும்னு சொன்னேனே கிடைச்சங்களா ” என்றான்.
“ம்ம்ம் எனக்கு தெரிஞ்ச இடத்துல சொல்லி வெச்சிருக்கேன். அவங்க நாளைக்கு மோர்னிங் ஒரு ஆளை அனுப்பறேன்னு சொன்னாங்க. அப்பறோம் வீட்டு வேலைக்கும் ஆள் கிடைச்சாச்சு . அவங்களும் தமிழ் தான். நாளைக்கு காலையில் அவங்களும் வந்துருவாங்க.” என்றான்.
“ம்ம்.. சரி டா நைட் பிரச்சனை இல்ல நான் ஆபீஸ் முடிஞ்சதும் நேரா இங்க தான் வரப் போறேன் . நான் ஆபீஸ் போற நேரம் இவளை பத்திரமா பாத்துக்கிட்டா போதும்” என்றவன் “அம்மாவுக்கு மித்ராவை பத்தி இப்போதைக்கு தெரிய வேணாம். அவங்க ஏற்கனவே இவ என்னை வேணாம்னு சொன்னதுல கோபமா இருக்காங்க. இதுல இந்த மாதிரி ஒரு நிலைமையில் இவளை பார்த்தா எதுவும் சொல்லிருவாங்க டா.. . “என்றான்,
“நான் எதுவும் சொல்ல மாட்டேன் டா ” என்றவன் “மித்ரா டிரீட்மென்டுக்கு என்ன பண்ணலாம்னு இருக்க ” என்றான்.
“நாளைக்கு அந்த கேர் டேகேர் வரட்டும் , அவங்ககிட்டேயே ஒரு நல்ல ரீஹாபிலேஷன் சென்டர் பெர்சனலா , அன்அபிஷியலா ட்ரீட் பண்ண யாரும் இருக்காங்களான்னு கேக்கணும். இல்ல அந்த கேர் டேக்கெரே மித்ராவுக்கு ட்ரீட் பண்ணினா இன்னும் சரியா இருக்கும்” என்றான்.
“ம்ம்ம்ம் புரியுது. யாருக்கும் தெரியாம மித்ராவுக்கு இங்க வெச்சு டிரீட்மென்ட் கொடுக்கணும் அப்படித் தானே..” என்றான் ஆனந்த்.
அதை ஆமோதிக்கும் விதமாக ஈஸ்வர் தலையை ஆட்ட..
“சரி டா.. நான் கிளம்பறேன் . எதுவும் தேவைன்னா எனக்கு கால் பண்ணு ” என்று அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
அவனை அனுப்பிவிட்டு ஹாலில் வந்து சோபாவில் பொத்தென விழுந்தான் ஈஸ்வர். பயணக் களைப்பு, மித்ராவை சமாளிக்க அலைந்தது என்று அனைத்தும் சேர்ந்து அவனை ஆழ்ந்த தூக்கத்திற்கு அழைத்து சென்றது.
திடீர் என்று ஒரு குரல் “ஈஸ்வர்!.. ஈஸ்வர்!… ” என்று அவன் தோளை உலுக்கி அவனை எழுப்பினார் பக்கத்து பிளாட்டில் இருந்த சிவகாமி பாட்டி .
தலையை குளிக்கிக்கொண்டே எழுந்தவன் “ஹாய்! சிவு.. ” என்று எழுந்து அமர்ந்தான்.
“உன் வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணை காலையில கூப்டு வந்தியே அந்த பொண்ணு மேல இருந்து குதிக்க போறேன்னு மாடியில நின்னுட்டு இருக்கா ப்பா ” என்றார்.
அதை கேட்டு அதிர்ந்தவன் “மித்ராவா?” என்று திரும்பி உள்ளே பெட் ரூமை பார்த்தான். அங்கு அவள் இல்லை.
அவசரமாக எழுந்தவன் “பாட்டி , மித்ரா இப்போ எங்க? ” என்றான்.
‘
“நம்ம அபார்ட்மெண்ட் மொட்டை மடியில இருக்கா ப்பா , யாரோ போலீஸ்க்கு தகவல் கொடுத்திருக்காங்க அவங்களும் வந்துட்டாங்க,” என்றார்.
“போலீஸ்… ஓஹ்! ஷிட்! ” என்றவன் வேகமாக தன் பிளாட்டை விட்டு வெளியே வந்தவன் காரிடரில் நின்று மேலே பார்த்தான்.
ஸ்லீவ்லஸ் கவுன் போட்டு அதில் காற்றில் அலைபாய… அதை கூட கவனத்தில் கொள்ளாமல் தள்ளாடிக்கொண்டு நின்று இருந்தாள் மித்ரா.
கீழே பலர் அங்கு கூடி அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க..
வேகமாக மாடியை நோக்கி ஓடத்துவங்கினான் ஈஸ்வர்.
‘என் கிட்டே வராதீங்க… நான் கீழ குதிச்சிருவேன் ” என்று அவளை நெருங்க நினைத்த ஆட்களை மிரட்டிக்கொண்டு இருந்தாள்.
வியர்க்க விறுவிறுக்க மூச்சு வாங்க மேலே வந்த ஈஸ்வர் “ஏய்! மிது என்ன டி பண்ணிட்டு இருக்க , ஒழுங்கா கீழ இறங்கு “என்று அவளை நெருங்கினான்.
“நான் எங்கையும் வர மாட்டேன். எல்லாம் உன்னால தான். நான் மோகன் கூட சந்தோசமா இருந்திருப்பேன் . நீ தான் நீ தான் அவன்கிட்டே இருந்து என்னை பிரிச்சு இங்க கூட்டிட்டு வந்து விட்டிருக்க.. ” என்றவள் போதை மருந்தின் வீரியம் குறைந்து நடுங்கிக்கொண்டிருந்த கைகளைக் காட்டி “இங்க பாரு என் கை எல்லாம் எப்படி நடுங்குதுன்னு. மோகன் இருந்திருந்தா அவன் எனக்கு மருந்து !… கொடுத்திருப்பான். என்னை இப்படி எல்லாம் கஷ்டப்பட விட்டிருக்க மாட்டான். ஆனா நீ என்னை இங்க கூப்டு வந்து ரொம்ப கஷ்டப்படுத்துற.. ” என்றாள்.
” நீ கை நடுங்கி அடிமை ஆகுற அளவுக்கு அவன் உன்னை கொண்டு வந்து விட்டிருக்கான் . இது புரியலையா உனக்கு. அவன் கூட இன்னும் கொஞ்ச நாள் இருந்தா நீ செத்து தான் போயிருக்கணும்.” என்றான்.
“செத்து போறேன் இங்க இருக்கறதை விட.. நான் செத்து போறேன்” என்று திரும்பி குதிக்க போனாள்.
“ஹேய்! மிது வேணாம் டி.. நான் உன்னை மோகன்கிட்ட கூப்டு போறேன்” என்றான் ஈஸ்வர். அவளை சமாதானம் செய்ய ஈஸ்வருக்கு வழி தெரியவில்லை. எங்கே அவள் குதித்துவிடுவாளோ என்று பயந்து தான் போனான் அவன்.
அவன் அப்படி சொன்னதும் திரும்பி அவனை பார்த்தவள் “நிஜமா என்னை மோகன்கிட்ட கூப்டு போறியா? ” என்றாள்.
“ம்ம்.. ஆமா .. கூப்டு போறேன். நிஜமா கூப்டு போறேன்” என்றபடி தன் சட்டையை கலட்டிக்கொண்டே அவளை நெருங்கினான்.
“எனக்கு இப்பவே மோகன்கிட்ட போகணும் . கூப்டு போவியா ?” என்றாள்.
“கூப்டு போறேன் டி. நீ முதல்ல கீழ இறங்கு ” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.
அதை கவனித்துவிட்டு மித்ரா “இல்ல நான் இறங்க மாட்டேன். நீ என்கிட்டே பொய் சொல்ற.. நீ என்கிட்டே கோபமா பேசுற.. ” என்று இறங்க மறுத்தாள்.
“ஹே! ஹையோ.. இல்ல மித்ரா நான் பொய் எல்லாம் சொல்லல. கூப்டு போறேன் டி கண்டிப்பா அவன்கிட்டே கூப்டு போறேன். நீ முதல்ல கீழ இறங்குமா..” என்றான்.
“நிஜமாவா?”
“ம்ம்ம்.. ஆமா நிஜமா தான்” என்றான்.
“அப்போ சத்தியம் பண்ணு ” என்று தன் கையை அவனை நோக்கி நீட்டினாள்.
இது தான் சமயம் என்று அவளிடம் சத்தியம் செய்வது போல கையை நீட்டியவன் சட்டென அவள் கையை பற்றி கீழே இழுத்து தள்ளி இருந்தான் ஈஸ்வர்.
அவனும் அவள் அருகில் விழுந்து இருக்க.. கீழே விழுந்த அதிர்ச்சியில் மித்ரா அரைகுறை மயக்கத்தில் இருக்க, இரண்டு போலீசார் அவர்களை நெருங்கி இருவரையும் தூக்கி நிறுத்தினர். ஒரு போலீஸ் அதிகாரி சந்தேகத்தோடு மித்ராவின் சிவந்த கண்களையும், அவளது உடல் நடுக்கத்தையும் பார்த்தார்.
“என்ன நடக்குது இங்கே? இந்தப் பொண்ணு ஏன் இப்படிப் பண்ணுது? போதைப் பொருள் ஏதும் எடுத்திருக்களா?” என்று மலாய் கலந்த தமிழில் அந்த அதிகாரி அதட்டலாகக் கேட்டார்.
ஈஸ்வர் சட்டென சுதாரித்துக் கொண்டான். காற்றில் ஆடிய அவள் கவுன் பார்ப்பதை தடுக்க… தன் சட்டையை மித்ராவின் இடையில் கட்டிவிட்டவன் , மித்ராவைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
“இல்ல சார்… நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லை. இவ என் வைப் மித்ரா. நாங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இவங்க வீட்ல எங்க கல்யாணத்தை ஏத்துக்கல. அந்த வருத்தத்துல இவளுக்குச் சரியாத் தூக்கம் வராம ரொம்பக் கஷ்டப்படுறா,” என்றான் ஈஸ்வர், குரலில் ஒருவித நடுக்கத்தை வரவழைத்துக்கொண்டு.
அவன் சொன்னது கேட்டதும் அதிர்ச்சியில் மித்ரா அவனை திரும்பி பார்க்க..
“பேசாம அமைதியா இருந்தா உன்னை மோகன்கிட்ட கூப்டு போவேன். நீ ட்ரக்ஸ் எடுத்திருக்கேன்னு அவங்களுக்கு சந்தேகம் வந்திருச்சு. அதை கன்பார்ம் பண்ணிட்டா அப்பறோம் ஜெயில்ல போட்ருவாங்க. அப்பறோம் நீ காலத்துக்கும் மோகனை பக்க முடியாது. ட்ரக்ஸ் எடுத்துக்க முடியாது புரிஞ்சுதா?” என்று கம்மியா குரலில் அவளை மிரட்டினான்.
மித்ராவும் அமைதியாக தலையை ஆட்டினாள்.
இன்ஸ்பெக்டர் அவனை மேலும் கீழும் பார்த்தார். “மனைவியா? உங்க ரெண்டு பேருக்கும் இடையில் சண்டையா? தற்கொலை முயற்சிங்கிறது மலேசியாவில பெரிய குற்றம் அது உனக்கு தெரியுமா?” என்றார். அவன் அருகே நின்று இருந்த மித்ராவை சந்தேகமா பார்த்தபடி.
ஈஸ்வர் இடைமறித்தான், “சண்டை இல்லை சார். இவளுக்கு மன அழுத்தம் அதிகமா இருக்கு. அதுக்காக ‘டிப்ரஷன்’ டேப்லெட்ஸ் எடுத்துக்கிறா. இன்னைக்கு மார்னிங் ஒரு டேப்லெட் எக்ஸ்ட்ரா போட்டுட்டா போல… அதோட வீரியத்துல என்ன பண்றோம்னு தெரியாம மொட்டை மாடிக்கு வந்துட்டா. ப்ளீஸ் சார்… இதை ஒரு போலீஸ் கேஸா ஆக்கிடாதீங்க. இப்போவே இவ பயந்து போய் இருக்கா, ஸ்டேஷனுக்கு எல்லாம் கூட்டிட்டு வந்தா இன்னும் உடைஞ்சு போயிடுவா.” என்று சமாளிக்க முயன்றான்.
“உங்க கல்யாணம் செல்லுபடியாகும்னு என்ன நிச்சயம்? ஏதாவது ஆதாரம் இருக்கா?” என்று அதிகாரி அழுத்தமாகக் கேட்டார்.
ஈஸ்வர் அவர் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னான், “நாங்க முறைப்படி பதிவு செஞ்சிருக்கோம் சார். இப்போ இவளை முதல்ல வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் ரெஸ்ட் எடுக்க வைக்கணும். நாளைக்குக் காலையில நீங்க ஓகே சொன்னா எங்க ‘மேரேஜ் சர்டிபிகேட்’ எல்லாத்தையும் கொண்டு வந்து ஸ்டேஷன்ல காட்டுறேன்.
“அதுவரைக்கும் இவளை இங்கையே விட முடியுமா? மறுபடியும் இப்படி ஏதாவது பண்ணிக்கிட்டா என்ன செய்றது ” என்று சுற்றியிருந்த மக்கள் முணுமுணுக்கத் தொடங்க, ஈஸ்வர் மித்ராவின் கையை இறுகப் tஹனோடு சேர்த்து அணைத்தவன்.
“நீ பண்ணின காரியத்தை பார்த்தியா . உன்னைப் பார்த்து எல்லாரும் பயப்படுற அளவுக்கு நீ பண்ணி வெச்சிருக்க. .” என்று அவளை முறைத்தவன்.
“ப்ளீஸ் சார்… நீங்க இவளைத் தப்பா புரிஞ்சுக்காதீங்க. அவளோட ‘மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்’ கூட என்கிட்ட இருக்கு. தூக்க மாத்திரை ரெகுலரா எடுக்கிறதுனால வர ‘சைடு எபெக்ட்’ இது.” என்றான் கெஞ்சுதலாக.
அவன் சொன்ன காரணங்கள் ஓரளவுக்கு நம்பும்படி இருக்கவே, அந்த அதிகாரி சற்று மென்மையானார். “சரி, நாளைக்குக் காலையில மறக்காம ஸ்டேஷனுக்கு வந்து ஒரு ‘ஸ்டேட்மென்ட்’ கொடுத்துட்டு ஆதாரங்களைக் காட்டிடுங்க. இப்போ இவளை பத்திரமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க. மறுபடியும் இப்படி நடந்தா நாங்க சும்மா இருக்க மாட்டோம்,” என்று எச்சரித்துவிட்டு விலகினார்.
“தேங்க்ஸ் சார்!” என்று சொன்ன ஈஸ்வர், மித்ராவைத் தூக்காத குறையாக அங்கிருந்து அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.
அவள் இன்னும் பிதற்றிக் கொண்டே இருந்தாள், “ஈஸ்வர்… மோகன்…”
அவன் அவள் காதருகே குனிந்து, பல்லைக் கடித்தபடி மெதுவான குரலில் சொன்னான், “வாயை மூடிட்டு அமைதியா வா மித்ரா… இல்லைன்னா போலீஸ் உன்னைக் கொண்டு போய் ஒரு ஜெயில்ல போட்டுடுவாங்க. அப்புறம் உனக்கு அந்த ‘மருந்து ‘ கொடுக்க ஒருத்தனும் வரமாட்டான்!”
அந்த மிரட்டலில் அவள் ஓரளவு அமைதியாக, ஈஸ்வர் அவளைத் தன் பிளாட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
