News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என்னை மயக்கப் பாக்குறியா? வெறியன் 20

by Layas Tamil Novel
648 views
A+A-
Reset

வெறியன் 20

அக்னி அலுவலகம் கிளம்பும் நேரமெல்லாம் அந்த மாளிகையே போர்க்களமாக மாறும். சமையலறையில் மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் பவளமல்லி சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருந்தாள். யூடியூப் பார்த்துத் தட்டுத்தடுமாறி அவள் சமைத்த உணவை டைனிங் டேபிளில் அடுக்கிவிட்டு, கைகளை பிசைந்த படி ஓரமாய் நின்றாள்.

அக்னி கம்பீரமாக வந்து அமர்ந்தான். உணவை ஒரு வாய் எடுத்து வாயில் வைத்தவன், முகத்தைச் சுளித்து ஸ்பூனை தட்டில் எறிந்தான். சத்தம் கேட்டு பவளமல்லி பதறிப்போனாள்.

“என்னடி சமைச்சு வச்சிருக்க? சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கு. உருளைக்கிழங்கு பிரட்டல்ல காரம் தூக்கலா இருக்கு. இத மனுஷன் திம்பானா? ஒழுங்கா சமைக்கக் கூட துப்பில்லாம, வெளியில வந்து அவ்வளவு திமிரா பேசுற?” என்று கத்தினான்.

“இல்ல சார்… நான் அளவா தான்…” என்று பயந்துபோய் அவள் இழுக்க,

“வாயை மூடு! நான் சொன்னா சொன்னதுதான். ஒழுங்கா சமைக்கத் தெரியுற வரைக்கும் நீ சாப்பிடுறதுக்கு இங்க சாப்பாடு கிடையாது. இந்தத் தட்டையெல்லாம் எடுத்துட்டுப் போய் கிளீன் பண்ணு போ!” என்று அதட்டினான்.

பவளமல்லி கண்களில் கண்ணீருடன் சாப்பிட இடத்தை சுத்தம் செய்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் நகர்ந்தாள். அவளுக்குத் தெரியாது, அவள் நகர்ந்த பிறகு அக்னி அதே உணவை ரசித்து ருசித்து முழுமையாகச் சாப்பிட்டு முடித்தான் என்பது! அவள்  சமையல் அவனுக்குப் பிடித்துப்போயிருந்தது, ஆனால் அதை ஒப்புக்கொண்டால் அவள் தன் வசப்பட மாட்டாள் என்ற அவன்  புத்தி அவளை வம்புக்கிழுக்கக் காரணங்களைத் தேடியது.

நாட்கள் நகர நகர, அக்னியின் சீண்டல்கள் எல்லை மீறத் தொடங்கின. பவளமல்லியைத் தண்டிப்பதாகக் கூறி, அவளைத் தன் அறைக்கே வரவழைத்தான்.

“ஏய்! மல்லி , என்ன பண்ணிட்டு இருக்க? இங்க வா வந்து என் ரூமை கிளீன் பண்ணு ஒரே குப்பையா இருக்கு ” என்று அவன் அறை வாசலில் இருந்து கத்தினான் அக்னி.

“மதியம் தானே இவன் ரூமை கிளீன் பண்ணினேன் . அதுக்குள்ள குப்பை எப்படி வரும் ” என்று கண்ணாடியின் முன்னின்று தலை சீவிக்கொண்டே யோசித்தாள்.

“ஏய் மல்லி.,..” என்று அவன் மீண்டும் அழைக்கவும். “இவனோட பெரும் ரோதனையா போச்சு.. என்னை கஷ்டப்படுத்தி பாக்குறதுல அவ்ளோ சந்தோசம் அவனுக்கு ” என்று நினைத்தவள் தோட்டத்தில் இருந்து பறித்து கட்டி வாய்த்த மல்லிகை பூ சாரத்தை குட்டியாக தன் தலையில் சூடிக்கொன்டே.. இதோ வரேன் சார் என்று குரல் கொடுத்தபடி தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

சிவப்பு நிற பாவாடை, ஜேக்கெட் அணிந்து அறைக்கு பச்சை நிறத்தில் தாவணி போட்டிருந்தாள் பவளமல்லி. அதிக மேக் அப் இல்லை. ஆடம்பரமான நகைகள் இல்லை. முகம் கழுவி பவுடர் போட்டிருக்கிறாள் . தலையில் மல்லிகை சூடி இருக்கிறாள். அவள் உடையை பார்த்ததுமே புரிந்து போனது இன்று வெள்ளிக்கிழமை என்று.

எப்போதும் அவள் வெள்ளிக்கிழமைகளில் தான் பாவாடை , தாவணி உடுத்துவாள். இன்று கொஞ்சம் ஸ்பெஷலாக பூ வைத்திருக்கிறாள். அவளை அப்படி பார்க்கவே அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். அவள் அழகில் வந்த நாளில் இருந்து அக்னி விழுந்து கொண்டு தான் இருக்கிறான்.

அது அவளுக்கு தான் புலப்படவில்லை. அவன் எப்போதும் தன்னை வேலை ஏவிக்கொண்டே இருக்கிறான் என்று மட்டும் தான் அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள்.

அவன் வாசலில் துடைப்பமும் , குப்பை அள்ளும் முரத்தோடும் நின்று இருந்தவளை அவ்வளவு ரசித்தான் அக்னிவரதன் அவனையும் அறியாமல் அவள் அழகில் மாய்ந்து தான் அமர்ந்து இருந்தான்.

தன்னையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை புரியாமல் பார்த்த மல்லி.. “சார்..” என்று அழைத்தாள்.

அவள் குரலில் சட்டென்று சுதாரித்துக் கொண்டவன் “அங்கேயே ஏன் நிக்குற வந்து வேலையை ” பாரு என்றவன் சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்யத் துவங்கினான். பவளமல்லி வீட்டைத் கூடிக்கொண்டே அவன் அருகே வந்தாள். அவள் அருகில் வருவது தெரிந்ததும் வேண்டுமென்றே தன் கால்களை நீட்டி அவள் வழியை மறித்து அமர்ந்திருந்தான் அக்னி.

“சார்… கொஞ்சம் காலை நகர்த்திக்கிறீங்களா? கூட்டணும்,” என்றாள் மெல்ல.

“முடியாது! உனக்கு வழி வேணும்னா என் கால் மேல ஏறிப்போ, இல்லன்னா குனிஞ்சு கூட்டிவிட்டுட்டு போ,” என்றான் வஞ்சகச் சிரிப்புடன்.

பவளமல்லிக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. வேறு வழியின்றி குனிந்து அவன் காலடி அருகே தரையைத் கூட்ட முயன்றாள். சட்டென்று அக்னி தன் காலால் துடைப்பத்தை மிதித்துக் கொண்டான். அவள் அதை இழுக்க முயல, அதை விடாமல் மிதித்திருந்தான்.

“என்ன சார் பண்றீங்க? விடுங்க,” என்று அவள் நிமிர்ந்து பார்க்க, அவள்  முகத்திற்கு மிக அருகில் குனிந்தான் அக்னி. அவள் கூந்தலில் இருந்து வீசிய மல்லிகைப் பூவின் வாசமும், சோப்பின் மணமும் அவனைக் கிறங்கடித்தது.

“ஏய்… என் முன்னாடி நீ ஏன் இப்படி குனியுற.. இது உனக்கு நல்லதுன்னு நினைக்குறியா?” என்றவன் அவள் சூடி இருந்த மல்லிகையின் வாசத்தை கண் மூடி நுகர்ந்தவன் ” என் ரூமை கிளீன் வர்ற அப்போ ஏன் டி நீ பூ வச்சிட்டு வர்ற? என்னை மயக்கப் பாக்குறியா?” என்று அவளது காதோரம் கிசுகிசுத்தான்.

“ஐயோ… அப்படியெல்லாம் இல்லை சார், தோட்டத்துல பூ நிறைய பூத்திருக்குன்னு தோட்டக்கார அண்ணன் கொண்டு வந்து கொடுத்தார், சாமிக்கு போட்டது போக மிச்சம் இருந்துச்சுன்னு நான் கொஞ்சம் வெச்சுக்கிட்டேன்  …” என்று பயத்தில் அவள் நடுங்க.

“சரி கூட்டு..” என்று தன் காலை தூக்கி எதிரே இருந்த ட்ரெயின் மீது வைத்துக் கொண்டான்.

அவள் குனிந்து அவன் காலடியிலும், சோபாவிற்கு கீழேயும் கூட்டிவிட… அப்போது அவள் தாவணி விலகி அவள் பளிங்கு இடை அப்பட்டமாக அவன் கண்களுக்கு காட்சி அளித்தது.

செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவள் இடையை ரசித்துக் கொண்டு இருந்தான் அக்னி. கூடி முடித்து மேலே நிமிர்ந்தவள் அக்னியைப் பார்க்க.. அவன் பார்வை அவளை பார்க்காமல் வேறு பக்கம் இருப்பதை கவனித்தவள் அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்தவள் சட்டென்று தாவணியை இழுத்து தன் இடையை மூடிக்கொண்டாள்.

அதை கண்டதும் அவனுக்கு கோபமும் , ஏமாற்றமும் வந்துவிட்டது. தன்னிடம் இருந்து அவள் மறைத்தது கோகமாக வந்தாலும், அதை பார்க்க முடியாமல் ஏமாற்றமும் சேர்ந்து கொண்டது அவனுக்கு.

ஆனால் அதை அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை. அவளிடம் உரிமை எடுக்கும் அளவுக்கு அவன் இன்னமும் முன்னேறவில்லை  மீண்டும் லேப்டாப்பில் மூழ்கிவிட.. . அவனை உள்ளுக்குள் திட்டிவிட்டு அறையை சுத்தம் செய்தவள் “சார் கிளீன் பண்ணிட்டேன்” என்று அவன் முன் வந்து நின்றாள்.

அவன் முகத்திற்கு நேராக நின்றவளை நிமிர்ந்து பார்த்தவன் மூச்சே அடைத்துவிட்டது, அவள் திமிறிய அழகு அவள் அணிந்திருந்த தாவணியோடு சேர்ந்து அவன் கண்களில் பட்டுவிட.. அதை கண்டு ஏக்கப் பெருமூச்சு விட்டவனாக கஷ்ட்டப்பட்டு தன் பார்வையை அவளை நோக்கி மேலே  நிமிர்த்தி ” என்ன?” என்றான்.

“கிலீன் பண்ணிட்டேன் சார்.. ” என்றாள்.

தன் பார்வையை சுழலவிட்டு அறையை பார்த்தவன் “சரி போ.. எனக்கு ஷார்ப்பா 7 மணிக்கு டின்னெர் வேணும் புரிஞ்சுதா?” என்றான்,

அவளும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு  அவன் அறையை விட்டு நகர்ந்து இருந்தாள்.

வெளியே சென்றவேளை ஏக்கத்தோடு பார்த்தவன் “இவளை ரொம்ப டோர்சேர் பண்றேன்னு எனக்கும் தெரியுது.. பாவம் தான் அவளும்.. ஒத்தை ஆளா இங்க வேலை பாக்குறா.. ” என்று நினைத்தவன் “இனி இவளை டோர்சேர் பண்றதை குறைச்சுக்கணும். இனிமேல் இவ  வீட்டு வேலை செய்யக் கூடாது . முழு நேரமும் என்னோடவே இருக்கணும் . என்னை மட்டும் பாத்துக்கணும். எனக்கு வேணும்ங்குறதை செய்யணும் ” என்று நினைத்தவன் ஒரு முடிவோடு வேளையில் மூழ்கினான்.

இங்கே ஸ்டேஷனில் “சார், ஒரு லேடி உங்களை பார்க்கணும்னு வாசல்ல வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க ” என்று கான்ஸ்டபிள் வந்து சொன்னார்.

“வர சொல்லு ” என்று கேஸ் பைலை மூடிவிட்டு அமர்ந்தான் ஐராவதன் .

அவர் சென்ற சற்று நேரத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணியும், அவரோடு இரு பள்ளி செல்லும் பெண்களும் வந்திருந்தனர். இருவரையும் பார்த்தாலே இரட்டையர்கள் என்று தெரிந்துவிடும்,

அவர்களை பார்த்தாலே தெரிந்தது ஏழைக் குடும்பம் என்று அவருடன் வந்த பிள்ளைகள் ரெண்டும் அந்த பெண்ணின் கையை ஆளுக்கு ஒரு பக்கம் விடாமல் பிடித்துக்கொண்டு நின்று இருந்தனர்.

வாங்க வந்து உக்காருங்க என்று முன் இருக்கையை காட்ட .. அவர் வந்து தயக்கத்தோடு இருக்கையில் அமர்ந்தார்.

“சொல்லுங்க என்ன பிரச்சனை ” என்றான்,

“சார் என் பேரு முத்துமாரி, இவங்க என்னோட பொண்ணுங்க,, ரெண்டு பேரும் நம்ம ஏரியாவுல இருக்க பிரைவேட் ஸ்கூல்ல தான் 10th படிக்குறாங்க” என்றவர் சற்று தயக்கத்தோடு நடந்ததை எப்படி அவனிடம் சொல்வது என்று தெரியாமல் அவனை பார்த்தார்.

“என்ன பிரச்சனையின்னு தைரியமா சொல்லுங்க.. உங்க பேரோ, உங்க பொண்ணுங்க பேரோ வெளிய வராம நான் பார்த்துக்கிறேன் ” என்று அவருக்கு நம்பிக்கை அளித்தான் ஐராவதன்.

“சார் நாங்க ஏழைப் பட்டவங்க தான் . அதுக்கு மானத்தை வித்து தான் எங்க பொழப்பு நடத்தணும்னு எந்த அவசியமும் இல்ல. இவங்க படிக்குற ஸ்கூல்ல போன டேர்ம் பீஸ் கட்ட என்னால முடியல. அதனால் இவங்க ஸ்கூல் ஹெட் மாஸ்ட்டர்கிட்டே போய் ஒரு மாசம் டைம் வேணும்னு கேட்டேன். முதல்ல திட்டினார் அப்பறோம் நான் திரும்ப கூப்பிட்ற அப்போ வாங்கன்னு சொன்னார். நானும் பிள்ளைகளை கிளாஸ்ல விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன். “என்றவர் தன் இரு பிள்ளைகளையும் அழைத்து மார்போடு அணைத்துக் கொண்டவர்.

“நான் கிளம்பின அப்பறோம் அந்த ஆளு என் புள்ளைங்கள அவனோட ரூமுக்கு தனித் தனியா வர சொல்லிருக்கான்.. ” என்றவர் அடுத்து சொல்ல முடியாமல் வாயில் சேலை தலைப்பை பொத்திக்கொண்டு கதறி அழ..

ஐராவுக்கு புரிந்துவிட்டது. “நீங்க கொஞ்சம் வெளிய இருங்க . நான் உங்க பொண்ணுங்க ரெண்டு பேர் கிட்டேயும் விசாரிக்கணும்” என்றான்.

அவரோ தயக்கத்தோடு அவனை பார்க்க.. “உங்க பொண்ணுங்களுக்கு நான் பாதுகாப்பா இருப்பேன் . கவலை படாதீங்க. வெளிய இருங்க.. ” என்று அவரை வெளியே அனுப்பியவன் அவர் பெண்கள் இருவரையும் பார்த்தான் . “உக்காருங்க.. ” என்றான் இருக்கையை காட்டி,

இருவரும் தயங்கி வந்து அமர்ந்தார்கள்.

“உங்க பேர் என்ன?” என்று பேச்சை ஆரம்பித்தான்.

“என் பேரு பிரகதி, இவ பேரு ப்ரக்ருதி” என்றாள் பிரகதி.

“பேர் ரொம்ப அழகா இருக்கு . யார் வெச்சது இந்த பேர் உங்களுக்கு”என்றான்.

“எங்க அப்பா ” என்றாள் ப்ரக்ருதி.

“அவர் என்ன பண்றார்?” என்றான்.

“அவர் உயிரோட இல்ல போன வருஷம் காய்ச்சல் வந்து இறந்துட்டார் ” என்றாள் சோகமாக பிரகதி.

அதை கேட்டதும் அவனுக்கு கஷ்டமாக இருந்தது. சமூகத்தில் கணவன் இல்லாமல் அதுவும் பெண் குழந்தைகள் ஒன்றுக்கு இரண்டை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வது எவ்வளவு கடினம் என்று அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.

“உங்க அம்மா எதுவும் வேளைக்கு போறாங்களா ?” என்றான்,.

“ம்ம்… ஆமா. எங்க ஏரியாவுல ஒரு பெரிய போலீஸ் வீடு இருக்கு. அங்க தினமும் வீடு வேலை செய்யப் போறாங்க.” என்றாள்.

“போலீசா!? ” என்று ஆச்சர்யபட்டவன் “அப்பறோம் ஏன் அவர்கிட்டே சொல்லாம உங்க அம்மா என்னை தேடி வந்திருக்காங்க” என்றான் புரியாமல்.

“இல்ல.. அவர்கிட்டே பேசவே அம்மா பயந்து நடுங்குவாங்க. அவர் பெரிய ஆபிஸேர்னு அம்மா சொன்னாங்க. அதுவுமில்லாம நீங்க நியமானவர் உங்ககிட்டே சொன்னா எங்களுக்கு எந்த பிரச்னையும் வராதுன்னு அம்மா சொன்னாங்க” என்றாள் ப்ரக்ருதி.

அவர் நம்பிக்கை நினைத்து பெருமையாக இருந்தது ஐராவுக்கு “சரி சொல்லுங்க,. உங்க ப்ரின்சிபிள் என்ன பேசினார் உங்ககிட்டே” என்றான்.

ப்ரக்ருதி அவன் பேசியதற்கு பதில் சொல்லத் தயங்க.. பிரகதி தான் தைரியமாக அவனிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்து இருந்தாள்.

அவள் பேசப் பேச கேட்டவனுக்கு ரத்தம் கொதித்து சூடேறியது, கண்கள் சிவந்து அவன் முகமும் கழுத்து நரம்புகளும் இறுகிப்போனது.

“ரெண்டு பேரும் கிளம்பி என்கூட வாங்க.. ” என்று தன் போலீஸ் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டவன் அறையை விட்டு வெளியேறி இருக்க..

அங்கே கைகளை பிசைந்து கொண்டிருந்த முத்துமாரி அவனை பார்த்ததும் பதட்டத்தோடு எழுந்து நின்றார்.

சிவா வண்டியை எடு என்றவன் “காஞ்சனா அக்கா, ரேணுகா ரெண்டு பேரும் என்ன கூட வாங்க..  “என்றவன் “நீங்களும் வாங்க.. ” என்று முத்துமாரியையும் அழைத்துக் கொண்டு ஸ்டேஷனில் இருந்து இரண்டு ஜீப்புகள் சீறிப்பாய்ந்து அந்த தனியார் பள்ளிக்கு

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.