Home Uncategorizedஸ்டெமினா கொஞ்சம் கூட குறையல.. மூர்க்கன் 21

ஸ்டெமினா கொஞ்சம் கூட குறையல.. மூர்க்கன் 21

by Sinamika Writes
17 views

மூர்க்கன் 21

“என்ன டா ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க ?”என்று தன் கேபின் கதவை திறந்து வரும்போதே அவன் அறைக்குள் வந்த ராஜ்ஜை கண்டதுமே புரிந்துகொண்டான் ராவண்.

“அண்ணா! ஒரு பெரிய பிரச்சனை ஆகிருச்சு.” என்றான் ராஜ்.

“என்ன?” என்று கேள்வியாக அவனைப் பார்த்தான் ராவண்.

“அறிவு தான் நம்ம மித்ரா தப்பிக்க காரணமா இருந்தான்னு மோகனுக்கும், ரக்ஷணாவுக்கும் தெரிஞ்சிருச்சு. அவனை அவங்க குடோன்ல கட்டி வெச்சு கொடுமை படுத்துறாங்க” என்றான் ராஜ்.

அதை கேட்டதுமே புருவம் சுருக்கிய ராவண் “மித்ராவை நம்ம அங்க இருந்து அழைச்சிட்டு வந்தாச்சே. அப்பறோம் அந்த அறிவுக்கு அங்க என்ன வேலை வேண்டி இருக்கு” என்றான் இறுக்கமான குரலில்.

“அது வந்து நான் தான் அவனை கொஞ்ச நாள் அங்கையே வேலை பாரு அப்போதான் அவங்களுக்கு உன்மேல சந்தேகம் வராதுன்னு சொல்லி அங்க வேலை செய்ய சொன்னேன் ” என்று தலை கவிழ்ந்தபடி சொன்னான்.

அவனை முறைத்த ராவண் “அவங்களுக்கு தெரியுற மாதிரி CCTV எல்லாம் ரெகார்ட் ஆகுற மாதிரி கடத்திட்டு வந்துட்டான் . அதுக்கு அப்புறமும் அவங்களால எப்படி மித்ராவை அங்க இருந்து தப்பிக்க வெச்சது அறிவு தான்னு கண்டுபிடிக்க முடியாம போகும். ” என்றான்.

“அண்ணா அப்போ இருந்த மனநிலையில் நான் இதை எல்லாம் யோசிக்காம விட்டுட்டேன். இப்போ என்ன பண்றது. அந்த அறிவு மாட்டிக்கிட்டான் . அவன் மட்டும் வாயை திறந்தா நம்ம பிளான் எல்லாமே அவங்களுக்கு தெரிஞ்சிருமே.. ” என்றான் ராஜ்.

“அந்த அறிவு சொல்லலையின்னாலும் மித்ராவை அங்க இருந்து கூடி வந்தது நாம தான்னு அவங்களுக்கு எப்பவோ தெரிஞ்சிருக்கும் ராஜ். நீ தேவை இல்லாம கவலைப் படாத ஒரு ரெண்டு நாள் அவனை டோர்சேர் பண்ணிட்டு அப்பறோம் அங்க இருந்து துரத்தி விட்ருவாங்க. அவனுக்கு அதுவும் ஆகாது. வந்திருவான்” என்ற ராவண் அழுத்தமாக ராஜ்ஜை பார்த்தான் .

“அவன் மட்டும்னா பரவாயில்ல கூட கையாளும் மாட்டிகிட்டாளே. அவ்னுங்ககிடை மாட்டிகிட்டு நம்ம மித்ரா எவ்ளோ கஷ்டப்பட்டா அதே போல கயலையும் ஏதாவது செய்துட்டா என்ன அண்ணா பண்றது “என்று பதட்டமாக பேசினான்.

“அப்போ அறிவுக்காக நீ இவ்ளோ நேரம் கவலை படல , அந்த பொண்ணு கயலுக்காக தான் அப்படித்தானே.. “என்றவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்து சாவகாசமாக பேசினான்.

“எப்படி வேணா வெச்சுக்கோங்க . எனக்கு கயல் எந்த பிரச்சனையும் இல்லாம வரணும் . அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது. மித்ராவை அந்த வீணாப்போனவங்க கிட்டே இருந்து மீட்கவே 2 வருஷம் முழுசா ஆகிருக்கு . இதுல கயல் மாட்டிக்கிட்டா அவளை என்ன எல்லாம் பண்ணுவானுங்களோன்னு நினைச்சாலே என் உயிரே போற மாதிரி இருக்கு” என்றான் ராஜ் உட்சபட்ச பதற்றத்தில்,

“சரி இப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு” என்றான் ராவண்.

“அண்ணா , என்ன பண்ணனும்னு என்கிட்டே கேக்குறீங்க. நம்ம ஆளுங்களை அந்த மோகன் இடத்துக்கு அனுப்பி அறிவையும், கயலையும் எப்படியாவது அங்க இருந்து காப்பாத்தி கூப்டு வந்துடனும்” என்றான்,

“சரி அந்த பெண்ணுக்காக நீ ஏன் இவ்ளோ பதட்ட படுற.. அவ வெறும் ஸ்பை தானே.. இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்குன்னு தெரியும்போது அவ தானே கேர்புல்லா இருந்திருக்கணும்” என்றான் ராவண்.

“ஐயோ! இப்போ பேசிட்டு இருக்க நேரம் இல்ல,. நாம லேட் பண்ண பண்ண கயலுக்கு தான் ஆபத்து அதிகமா இருக்கும். பிலீஸ் ஏதாவது பண்ணுங்க அண்ணா . ” என்று ராவணின் காலில் விழாத குறையாக கெஞ்சினான் ராஜ்.

“சரி டா அந்த பொண்ணுக்கும் , உனக்கும் என்ன சம்மந்தம்னு கேட்டேன்” என்றான் ராவண்.

“ஐயோ! அவளை நான் லவ் பண்றேன் போதுமா. அவ இல்லாம நான் உயிரோடவே இருக்க மாட்டேன். அவளுக்கு மட்டும் அந்த மோகனால ஏதாவது ஆச்சு அப்பறோம் அவனை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது’ என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தினான் ராஜ்.

“ஹே கூல் டா ராஜ்,. இப்போ என்ன அந்த பொண்ணை அங்க இருந்து கூட்டி வரணும் அவ்ளோதான்..  “என்றவன் “சரி நீ லவ் பண்றது அந்த பொண்ணுக்கு தெரியுமா?” என்றான்.

“ம்ஹும்.. இல்லன்னா இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு மித்ரா குணம் ஆனதுக்கு அப்பறோம் அவகிட்டே லவ் சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள அவனுங்க கயலை பத்தி தெரிஜுகிட்டானுங்க… “என்றவன் “நான் நம்ம ஆளுங்களை எல்லாம் கூட்டி போறேன். எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் நான் காப்பாத்திடுவேன் ” என்று நம்பிக்கையாக சொன்னான் ராஜ்.

“சரி டா போலாம் பொறு.. ” என்றவன் தன் வாட்சில் மணியை பார்த்துவிட்டு வாசலை பார்த்தான்.

“அண்ணா இன்னிக்கு உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ அமைதியா இருக்கீங்க. நான் எதுக்காக இப்படி பதறுறேன்னு உங்களுக்கு புரியலையா?” என்றான் ராஜ்.

அப்போது ராவணின் கேபின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. “கம் இன்..” என்று ராவண் குரல் கொடுக்க.. அவன் அறை கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான் பத்ரி .

அவனையும் ராவணையும் மாரி மாரி பார்த்த ராஜ்ஜிற்கு ஒன்றும் புரியவில்லை. பத்ரி உள்ளே வரவும் அவன் பின்னே வந்த அறிவை பார்த்தான் அவனை பார்த்ததும் ஆச்சர்யத்தில் வாயை பிளந்த ராஜ்ஜின் கண்கள் அடுத்து தேடியது என்னவோ கயலைத் தான்.

அவளும் அறிவின் பின்னால் தயங்கிய படி சற்று தள்ளாட்டத்தோடு உள்ளே வந்தாள்.

வேகமாக அவளிடம் சென்ற ராஜ் “உனக்கு கொஞ்சமாச்சு அறிவு இருக்கா இப்படியா மாட்டிப்ப . உன்கிட்டே படிச்சு படிச்சு சொன்னேன் அந்த மோகன்கிட்ட கவனமா இருன்னு கேட்டியா நீ.. ” என்று அவள் வந்ததும் வராததுமாக திட்டினான்  ராஜ் ,

“எனக்கு என்ன சார் தெரியும் அந்த ரம்யாவை அவ்ளோ நம்பினேன். அதனால தான் அவகிட்டே எல்லாமே சொன்னேன். ஆனா அவ அந்த ரக்ஷ்ணா கூட படிச்சவளமா. அவளோட திக்கெஸ்ட் பிரெண்டுனு நான் மாட்டிக்கிட்டா அப்பறோம் தான் தெரியும்” என்று குளறிக்கொண்டே ஒரு வழியாக சொல்லி முடித்தாள் கயல்.

அவளை முறைத்த ராஜ் “நீ ஏன் ஒரு மாதிரி பேசுற..” என்றவன், ராவணிடம் திரும்பி “அண்ணா இவங்க எப்படி ?.. ” என்றான்.

“இந்த அறிவும், கயலும் மட்டும் நம்ம ஸ்பையா வேலை செய்யல. இன்னோருத்தரும் அங்க இருக்காங்க ” என்றான் ராவண்.

“யாருண்ணா அது?” என்றான் .

“அது இப்போதைக்கு தேவை இல்ல. ” என்றவன் “உங்க ரெண்டு பேருக்கும் இப்போ ஓகேவா அவங்க எதுவும் உங்களை டோர்சேர் பண்ணிட்டாங்களா?” என்றான் ராவண்.

“இல்ல சார் அதுக்குள்ள தான் உங்க ஆளுங்க வந்து எங்களை காப்பாத்திட்டாங்களே… ” என்ற அறிவு “கயலுக்கு தான் ட்ரக் கொடுத்துட்டாங்க. அவளை வெச்சு ஏதோ டெஸ்ட் பண்றேன்னு அந்த ரக்ஷணா மோகன்கிட்ட போன்ல பேசிட்டு இருக்கறதை நான் கேட்டேன். நல்ல வேலை அந்த நேரம் மோகன் வெளிய போய்ட்டான். இல்லேன்னா கயல் நிலைமையும். நம்ம மித்ரா மேடம் போல மோசமாகிருக்கும்” என்றான்.

அதை கேட்டு ராஜ்ஜிற்கு நெஞ்சே அடைத்து விடும் போல இருந்தது. கயலை பாவமாக பார்த்தான். அவளிடம் வந்தவன் “உனக்கு இப்போ எப்படி இருக்கு.. மயக்கம் வர மாதிரி எதுவும் இருக்கா?” என்றான்.

“ம்ஹும்… மயக்கம் எல்லாம் வரல.. எனக்கு அப்படியே வானத்துல பறக்குறது போல இருக்கு.. ” என்றாள் கயல் கண்கள் செருக..

அவளை பார்க்கவே பாவமாக இருந்தது அவனுக்கு தன்னால் தான் இவளுக்கு இந்த நிலை என்று தன்னை நினைத்தே குற்ற உணர்வோடு இருந்தான் ராஜ்.

“ராஜ்!” என்று ராவண் அழைப்பில் கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டே “அண்ணா!” என்றான்.

“பீல் பண்ணாத அவ ரெஸ்ட் எடுத்த சரியாகும் ” என்றவன் “கயலுக்கு பேமிலி எங்க இருக்காங்க ” என்றான் ராவண்.

“அவளுக்கு யாரும் இல்ல ண்ணா கொரோனா வந்த சமயம் இவ அம்மா, அப்பா ரெண்டு பேரும் இறந்துட்டாங்கன்னு சொன்னா. அவ மெடிக்கல் முடிச்ச சமையம் அது நடந்துச்சுனு சொன்னா . அப்போ இவளுக்கு சீனியரா இருந்த ஒரு பொண்ணு தான் ரக்ஷ்ணாகிட்டே இவளை அறிமுகம் பண்ணி வெச்சிருக்கா. இவளுக்குன்னு யாரும் இல்லன்னு தான் நினைக்குறேன்” என்றான்.

“ம்ம்.. ஆமா சார் , எனக்கு யாரும் இல்லேனு தான் நானும் நினைக்குறேன் ” என்று கயல் போதையில் உலர..

அவள் பேசியதில் சிரித்த ராவண் “உனக்கு இங்க நிறைய பேர் சொந்தமா இருக்க போறாங்க . நீ யாரும் இல்லேன்னு பீல் பண்ணாத” என்றான் ராவண்.

“நான் பீல் பண்ணல சார்.. ” என்று தடுமாறிக்கொண்டே நடந்தவள் கால் இடறி கீழே விழப்போனாள்.

“ஏய்! ஏய்! பார்த்து.. ” என்று ஓடி வந்து ராஜ் அவளை தாங்கிப் பிடிக்க..

“ர்ர்..ராஜ்.. ” என்று அவன் தோளில் மயங்கி சரிந்தாள் கயல்விழி

“இப்போதைக்கு அவளை பாதுகாப்பை பாத்துக்கணும். முதல்ல நம்ம வீட்டுக்கு கூப்டு போகலாம். ” என்று தன் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினான்.

 அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ராவண் தன் ஆஃபிஸில் இருந்து கிளம்பி இருந்தான். கார் கீயை டிரைவரிடம் இருந்து வாங்கியவன் “எங்க இருக்க?” என்று யாருக்கோ போன் செய்து பேச..

“இப்போதான் கிளம்பினேன் ராவண். நீ கிளம்பிட்டியா?” என்று மறுமுனையில் கேள்வி வந்தது.

“ம்ம்… 20 மினிட்ஸ் ரீச் ஆகிருவேன்” என்றான் ராவண்.

“நானும் ” என்று மறுமுனையில் போனை துண்டிக்க..

போனை வைத்துவிட்டு தான் செல்ல வேண்டிய இடத்திற்கு காரை செலுத்தியவன் அந்த பிரமாண்ட ஹோட்டல் முன் தன் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் அந்த ஹோட்டலை அண்ணாந்து பார்த்தான். சிட்டியில் உள்ள செவென் ஸ்டார் ஹோட்டல் அது.  உள்ளே ரிசெப்பனில் அவன் வரவும் அனைவரும் எழுந்து அவனுக்கு வணக்கம் சொன்னவர்கள் முன்னே வர..

“என் ரூம் ரெடியா?” என்றான்.

“எஸ் சார், வழக்கம் போல ரெடியா தான் இருக்கு” என்று அவர்கள் ஹோட்டலின் மேனேஜர் பணிவோடு பேசினான். அந்த பிரமாண்ட ஹோட்டலின் உரிமையிலாளரே ராவண் தான். அவன் இப்படி ஒரு ஹோட்டல் நடத்துவது யாருக்கும் தெரியாது, ராஜ் மட்டுமே அறிவான் . அவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

“ஓகே என் கெஸ்ட் வருவாங்க, வந்ததும் என் ரூமுக்கு அனுப்பி வை” என்று அவனிடம் ரூம் கார்டை வாங்கிக்கொண்டு லிப்டில் ஏறினான்.

சற்று நேரத்திலேயே அவனுடைய கெஸ்டும் வர.. அவரை மரியாதையோடு உள்ளே அனுப்பி வைத்தனர்.

ராவனுடைய சூட் ரூம் 7வது மடியில் உள்ளது , அவன் அறைக்கு வந்த அந்த நபர் அறைக்கதவை தடவும் ராவணே வந்து கதவை திறந்தான்.

“ஹாய்! டார்லிங்!” என்று ஒரு பெண் அவனை கண்டதும் முகமெல்லாம் சிரிப்பாக ராவணை அழைத்தவள் பாய்ந்து அவனை கழுத்தோடு கட்டிக்கொள்ள..

“ஹே நீலா ! மெதுவா… ” என்று தன் மேல் விழுந்தவளை பிடித்தபடி கதவை சாற்றியவன் அவள் இடையில் கை கொடுத்து அறைக்குள் அழைத்து சென்றான்.

“என்ன டார்லிங், முன்ன விட மசில்ஸ் எல்லாம் செம்ம போர்ம்ல இருக்கும் போல.. டெய்லி ஜிம்ல ஒர்க் அவுட் பண்றியா? இல்ல உன் பொண்டாட்டி கூட ஒர்க் அவுட் பண்றியா?” என்று கேட்டாள்.

அவனும் சிரித்துக்கொண்டே.. ரெண்டும் தான் ” என்றவன் “நம்ம ஒர்க் அவுட்டை ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றான்.

“வந்ததுமே என்ன அவசரம் டார்லிங். கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போமே.. உன்கிட்டே நான் நிரைய பேசணும்னு வந்திருக்கேன் “என்றால் நீலா.

“பேசலாமே.. ஒர்க் அவுட் பண்ணிட்டே பேசலாம் ” என்று தன சட்டையை கழட்டிகொண்டே அவளைப் பார்க்க..

“நானும் ரெடி தான் டார்லிங் ” என்று அவளும் தயார் ஆனால்.

மாலை ஐந்து மணியைப் போல இருவரும் அறைக்குள் சென்றவர்கள் இரவு 9 மணியைப் போல தான் அந்த அறையை விட்டு ஒன்றாக , ஜோடியாக வெளியே வந்தார்கள்.

“செம்ம ஸ்ட்ரோங் மேன் நீ.. உன்னோட ஸ்டெமினா கொஞ்சம் கூட குறையல.. “என்று அவள் சொல்லிக்கொண்டே ராவண் மார்பில் குத்த.

“ஹே நீலா , இது காரிடோர்…  ரூம் இல்ல.. ” என்றான்.

“ஓகே.. ஓகே.. நான் சொன்னது எல்லாம் நினைவு இருக்கு இல்ல.. சீக்கிரமே எல்லாம் நடக்கணும் சரியா”என்றாள்.

“ம்ம்… “என்றான் ராவண் .

வாசல் வரை வந்த பிறகு இருவரும் அவரவர் காரில் ஏறி கிளம்பி இருந்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured