மூர்க்கன் 17
“என்ன தான் டி உனக்கு பிரச்சனை ” என்று மலேசியாவில் தரை இறங்கியதில் இருந்து ஈஸ்வருடன் செல்ல மறுத்து ஏர்போர்ட்டிலேயே தர்ணா செய்து கொண்டிருந்த மித்ராவின் முன் எரிச்சலாக நின்றிருந்தான் .
ஏர்போர்ட் வாசலில் இன்னமும் அரை போதையில் தெளியாமல் தள்ளாடியபடி நின்று இருந்த மித்ரா “எனக்கு மோகன்கிட்ட போகணும்… என்னை இந்தியா கொண்டு போய் விடு.. ” என்று ஈஸ்வரின் சட்டையை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தாள் .
அந்த நள்ளிரவில் ஏர்போர்ட் வாசலில் அவன் சட்டையை பிடித்துக்கொண்டு பேசுபவளையும், அவள் கோலத்தையும் அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தனர்,
அவர்களை எல்லாம் பார்த்தப்படி மித்ராவின் கையை பிடித்து தன் சட்டையில் இருந்து விளங்கிவிட்டு அவள் காதருகே குனிந்தவன் “ஏய் நான் சொல்றதை கவனமா கேளு. இனிமேல் மோகன்னு உன் வாயில இருந்து அவன் பேரு மட்டும் வந்துச்சு.. ” என்றவன் சுற்றிலும் நோட்டம் விட்டவன் அங்கே இருந்த கார்ட்ஸை காட்டி “அங்க இருக்க கார்ட்ஸ்கிட்டே போய் நீ ட்ரக் எடுத்திருக்கன்னு மட்டும் சொன்னேன்னு வை உன்னை பிடிச்சு ஜெயில்ல போட்டிருவாங்க, உன்னை மட்டும் இல்ல உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின அந்த மோகனையும், அவன் அக்காவையும் பிடிச்சு உள்ளே போட்ருவேன் , உன்னை கூட நான் சீக்கிரம் ஜெயில்ல இருந்து ரிலீஸ் பண்ணிருவேன். அவங்க ரெண்டு பேரையும் சாகுற வரைக்கும் கலி திங்க வெச்சிருவேன்” என்றான்.
இப்படி சொன்னவனின் முகத்தை மிரட்சியாக பார்த்த மித்ரா எச்சில் விளிக்கினாள்.
“இப்போ சொல்லு என் கூட அமைதியா வரியா ? இல்ல அந்த கார்ட்ஸை கூப்பிட்டு நீ ட்ரக் எடுத்திருக்கேன்னு சொல்லட்டுமா?” என்று அவளை மிரட்டினான்.
“நா.. நா.. எங்க ட்ரக் எடுத்தேன். மோகன் கூட இருந்தா அவன் எனக்கு கொடுத்திருப்பான் , இங்க அது எல்லாம் இல்லையே. நீ போய் போலீஸ்கிட்டே சொன்னா எப்படி அவங்க நம்புவாங்க” என்று பேசும்போதே அவள் நா குழறியது.
“நீ வாயை திறந்து பேசினாலே போதும் அவங்களுக்கு எல்லாம் புரிஞ்சிரும். தவிர.. உன்னை எப்படியும் மெடிக்கல் செக் அப் செய்ய வெப்பாங்க. அதுல கண்டிப்பா காட்டி கொடுத்திரும். எப்படி பார்த்தாலும் எனக்கு தான் லாபம்” என்றான் நக்கலாக.
மித்ராவுக்கோ இப்பொது தான் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மூளைக்கு உரைக்க ஆரம்பித்தது. போதை மருந்துகளை பற்றி பேசியதும் அவளுக்கு இப்போதே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்க.. அவள் உடல் எல்லாம் ஏதோ செய்தது. அவள் நரம்புகளில் எல்லாம் ஒருவித ஊறல் எடுப்பது போல தோன்ற…
“ஐயோ! என்னை ஏன் இப்படி டோர்சேர் பண்ற.. ” என்று சத்தமிட்டவள் தலையில் கைவைத்து தன் முடியை இருக்க பற்றி “ஆஹ்!!” என்று மேலே பார்த்து அலரத்துவங்கினாள்.
“மிது ! ஹேய் என்ன டி பண்ற? எல்லாரும் உன்னையே பாக்குறாங்க பாரு.. ” என்று aval கையை பிடித்தான்.
“என்னை தொடாத.. எனக்கு இப்போ ட்ரக் வேணும். இப்போவே வேணும் கொடு.. ” என்றாள் அவனிடமே.
“ட்ரக்கா !?” என்றவன் “அதை எல்லாம் நீ இனிமேல் கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாது ” என்றவன் “நீ முதல்ல கிளம்பி என் கூட வா.. ” என்று அவள் கையை பிடித்து இழுத்தான்.
“நான் வரணும்னா எனக்கு ட்ரக் வேணும் தருவியா?” என்றாள்
“முடியாது நீ வா.. ” என்று இழுத்தான் அவளை.
“கார்ட்ஸ் ஹெல்ப் மீ.. ” என்று மித்ராவே இப்பொது பின்னிருந்தவர்களை பார்த்து குரல் கொடுத்தாள்.
ஏற்கனவே இவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்தவர்கள் மித்ரா அழைக்கவும் அவர்களை நோக்கி வர..
“நீ மட்டும் எனக்கு ட்ரக் வாங்கி கொடுக்கலையின்னா இவங்க கிட்டே நீ தான் எனக்கு ட்ரக் கொடுத்து இங்க கூட்டிட்டு வந்தேன்னு சொல்லுவேன். என்னை இப்படி ஆக்கினத்துக்கு காரணமே நீ தான்னு உன் மேல கம்பளைண்ட் கொடுப்பேன்” என்றாள்.
இப்பொது ஈஸ்வர் அவளை மிரட்சியாகப் பார்த்தான்.
அவளோ அவனை நக்கலாக பார்த்துவிட்டு “சொல்லு.. தரியா?” என்றாள்.
ஈஸ்வர் ஒன்று நினைக்க.. மித்ரா ஒன்றை சொல்கிறாளே.. பின்னால் அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்த கார்ட்ஸ்களை பார்த்தான் . இப்போதைக்கு மித்ராவை தன்னோடு அழைத்து செல்ல வேறு வழி இல்லை என்று அவனுக்கும் புரிந்தது.
அவள் இருக்கும் நிலையில் சொன்னதை செய்யக்கூடியவள் தான் என்றும் அவனுக்கு நன்றாகவே தெரியுமே..
“சரி வாங்கி தரேன் ” என்றான்.
வெற்றிப்புன்னகையோடு அவனை பார்த்தவள் தன் பேண்ட் பேக்கெட்டில் இருந்த ஒரு சிறிய மது பாட்டிலை எடுத்து அப்படியே மொத்தமாக தன் வாயில் சரித்தாள். அவள் குடிக்கும்போது அவள் வாயில் இருந்து சிதறி அவள் ஆடையையும் அந்த மது நனைத்து இருந்தது.
குடித்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
ஈஸ்வரோ.. “இதை எப்போ எடுத்தா” என்று அவளை பார்த்தான்
“எனி ப்ரோப்லேம்” என்றான் ஒரு காவலாளி.
“எஸ் சார்…” என்று தள்ளாடிய படி பேசியவள் ஈஸ்வரை கை காட்டி “பிலைட்ல கொடுத்த ட்ரிங்க்ஸ் தீர்ந்திருச்சு. எனக்கு இன்னும் வேணும் வாங்கி கொடுன்னு கேட்டா நீ நிறைய குடிச்சிருக்கே போதும்னு சொல்றான். நீங்களே இவன்கிட்டே என்னனு கேளுங்க.. ” என்று ஆங்கிலத்தில் பேசியவள் அவர்களை பார்க்க..
அவள் பேசிய விதமும் , தள்ளாட்டமும் அவளிடம் இருந்து வந்த மதுவாடையுமே அவள் போதையில் பிதற்றுகிறாள் என்று அவர்களுக்கு புரிந்தது.
ஈஸ்வரிடம் திரும்பியவர்கள் “நாங்க உங்களை கவனிச்சிட்டு தான் இருக்கோம் . கொஞ்சம் ட்ரிங்க்ஸ் அதிகமா சாப்பிட்டுட்டாங்களா?” என்றார் அதில் ஒருவர்.
“அ… ஆமா ” என்றவன் வேகமாக மித்ராவிடம் வந்து அவளை கை தாங்களாக பிடித்தவன் “ப்ரோப்லேம் எதுவும் இல்ல நீங்க போங்க நான் பாத்துக்கிறேன் ” என்று மித்ராவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்லப்போனான் .
“நோ நோ .. வெய்ட் ” என்று அவனை நிறுத்திய மற்றொரு ஆள் மித்ராவின் முன் வந்து நின்றவன் “உங்களுக்கு வேற எதுவும் ப்ரோப்ளேமா? இவருக்கும் உங்களுக்கும் என்ன ரிலேசென்ஷிப் ” என்று கேட்டான்.
மித்ரா என்ன சொல்லப்போகிறாள் எதுவும் உளறிவிடுவாளோ என்று ஈஸ்வர் சற்று பதற்றமாக அவளையே பார்க்க..
“இவன் என்னோட மாமா பையன் தான் , எனக்கு ட்ரிங்க்ஸ் வேணும் கேட்டா கொடுக்க மாட்டேங்குறான். அது தான் ப்ரோப்லேம் . அதனால இவனை அர்ரெஸ்ட் பண்ணி உள்ள போடுங்க” என்றாள்.
“நோ..நோ..நோ.. இதுக்கெல்லாம் அவரை அர்ரெஸ்ட் பண்ண முடியாது. நீங்க அதிகமா குடிச்சிருக்கீங்க. இது தப்பு ” என்றார்.
“இவன் என்ன பேசிட்டே இருக்கான் .” என்று நினைத்த மித்ரா.. தன் அடுத்த நாடகத்தை அரங்கேற்ற துவங்கினாள்.
“டேய் எனக்கு ட்ரிங்க்ஸ் வேணும் வாங்கி கொடு ” என்று ஈஸ்வரின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆடம் பிடிக்க ஆரம்பித்தவள் சட்டென்று வாந்தி எடுப்பது போல பாவனை செய்தாள்.
அதை பார்த்ததும் கார்ட்ச்கள் சற்று பின்னால் தள்ளி நகர்நதவர்கள் “இவங்களை முதல்ல இங்க இருந்து கூப்டு போங்க.. அந்த லேடீஸ் டாய்லெட் இருக்கு ” என்று அவர்களுக்கு கை காட்டினர்.
“இல்ல.. இல்ல.. எனக்கு வீட்டுக்கு போகணும்” என்றாள் .
“ஓகே சார் நாங்க கிளம்பறோம்” என்று அவளை அழைத்துக்கொண்டு தான் இந்தியா கிளம்பும்போது பார்க் செய்துவிட்டு சென்ற தன் காரிலேயே அவளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
அவர்கள் செல்வதை பார்த்த இரு காவலர்களும் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து நகர்ந்தனர்.
இங்கே காரில் இருந்த மித்ராவோ “எனக்கு ட்ரக் வேணும் இப்போவே.. ” என்றாள்.
“ஏய் இப்போவே வேணுன்னா நான் என்ன அந்த மோகனா? கேட்டதும் லேப்ல இருந்து எடுத்து கொடுக்க… டி டோட்லர் டி நான். எங்கேன்னு போய் நான் இந்த கருமத்தை வாங்குறது” என்றான்.
“அப்போ உனக்கு இதெல்லாம் எங்க குடைக்கும்னு தெறியாதா?” என்றாள் ஏமாற்றமாக.
இல்லை என்று ஈஸ்வர் தலையாட்ட..
“அப்பறோம் எனக்கு வாங்கி தரேன்னு ஏண்டா பொய் சொன்ன.. ” என்று சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு எட்டி அவன் முடியை கொத்தாகப் பிடித்தாள்.
“ஏய் என்ன டி பண்ற.. மிது .. விடு டி ” என்று காரை ஓடிக்கொண்டே அவளை தன்னிடம் இருந்து பிரிக்க பார்த்தான்.
ஆனால் அவளோ தனக்கு கேட்டது கிடைக்கவில்லை என்ற கடுப்பில் அவன் தலை முடியை பிடித்து மேலும் ஆட்டினாள் .
வலி தாங்க முடியாமல் அவள் கையை பிடித்து தன் கேசத்தில் இருந்து எடுத்தவன் காரை ஓரமாக பார்க் செய்துவிட்டு இருந்த கோபத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான்.
இதை மித்ராவும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
ஈஸ்வருக்கு அவளை அவசரப்பட்டு அடித்துவிட்டோமே என்று ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“மிது .. சாரி டி… ஒரு கோபத்துல அடிச்சுட்டேன்” என்று அவளிடம் மன்னிப்பும் கேட்டான்.
அவனையே அழுத்தமாக பார்த்தவள் “ங்கே!….” என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
“மோகன் மட்டும் இங்க இருந்திருந்தா என்னை அடிச்சதுக்கு உன்னை ஒரு வழி பண்ணிருப்பான். நான் என்ன கேட்டாலும் அவன் வாங்கிட்டு வந்து கொடுப்பான் தெரியுமா. அவன் என்னை ஒரு நாள் கூட அடிச்சதே இல்ல. ஆனா நீ.. நீ.. ” என்று தேம்பிக்கொண்டே.. அழுதாள்.
மோகனைப் பற்றி பேசியதும் ஈஸ்வருக்கு ஆத்திரம் ஆனது.
“ஆமா டி நீ என்ன கேட்டாலும் அவன் கொடுப்பான். உன்னை அடிக்க மாட்டான் தான் . நீ தான் அவன்கிட்டே ஒரு அடிமை மாதிரி இருக்கியே அதை எல்லாம் எப்படி அவனால செய்ய முடியும். அதான் உன்னை போதைக்கு அடிமையாக்கிவெச்சு அவன் காரியத்தை சாதிச்சுக்கிறானே.. உன்னை எப்படி ஆக்கி வெச்சிருக்கான் தெறியுமா . ஒரு ட்ரக் அடிக்ட்டாவே மைத்திருக்கான் டி. ஆனா நீ அவனை பெருசா பேசுற.. அதுவும் என்கிட்டேயே.. ” என்றவன் மீண்டும் அவளை அடிக்க கையை ஓங்க..
மித்ராவோ அதில் பயந்து உடலை குறுக்கிக்கொண்டு கார் கதவோடு ஒன்றி அமர்ந்தவள் அழுதுகொண்டே மிரண்டு போய் அவனைப் பார்க்க..
ஈஸ்வருக்கு அவளை அப்படிப் பார்த்ததுமே.. தான் செய்த தவறு உரைத்தது. அவள் இப்பொது சுயமாக யோசிக்கும் நிலையில் இல்லையே.. அவளிடம் போய் தான் இப்படி கோபம் காட்டி இருக்கக் கூடாது என்று என்று எண்ணியவன் கண்கள் மூடி தன் கோபத்தை சமநிலைக்கு கொண்டு வந்தவன் . கண் திறந்து தன் முன் இருந்த மித்ராவை பார்த்தான்.
அவள் இன்னமும் அழுதுகொண்டு தான் இருந்தாள்.
அவள் பக்கம் தன் கையை நீட்டினான் ஈஸ்வர் அவளோ பாய்ந்து மேலும் பின் வாங்க. “அடிக்க மாட்டேன் டி.. ” என்றவன் எட்டி அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டவன் “நான் எப்படியாவது உனக்கு அந்த கருமத்தை வாங்கி தரேன் அழாத சரியா” என்றான்.
“நிஜமா வாங்கி தருவியா?” என்றாள் சிறுபிள்ளை போல..
சற்று முன்பு ஏர்போட்டில் காவலர்களை சமயோஜிதமாக சமாளித்த மித்ராவா இது என்று அவளை ஆச்சர்யமாக பார்த்தான். இப்பொது அவன் முன் குழந்தையாக இருப்பவளை என்னவென்று சொல்வது என்று காரை கிளப்பியவன் தன் நண்பன் ஆனந்துக்கு கால் செய்து விபரம் சொல்ல..
அவனோ அதிர்ந்து போனான்.
“நீ என்ன பண்ணுவியோ.. எது பண்ணுவியோ எனக்கு தெரியாது, நான் கேட்டது இன்னும் அரை மணிநேரத்துல கொண்டு வரணும் நீ.. நான் என்னோட பிளாட்ல இருக்கேன் வந்திரு ” என்று போனை வைத்தான்.
அவன் பேசுவதையே பார்த்தவள் “கொண்டு வருவாங்க தானே… எனக்கு வேணும்.. ” என்று அழுத்தவள் தன் கைகளை அவன் முன் நீட்டி தன் நிலையை அவனுக்கு காட்டினாள்.
போதை மருந்தை தொடர்ந்து எடுத்ததின் விளைவாக அவள் நரம்புகள் வலுவிழந்து கைகள் நடுங்கியது,
ஈஸ்வரின் மனம் வலித்தது அவள் நடுங்கிய கைகளையும் அவள் உடலையும் பார்த்து மொத்தமாக உருக்குலைந்து போய் இருந்தாள் மித்ரா தோற்றத்திலும், உள்ளத்திலும்
“ம்ம்.. சீக்கிரம் வந்திரும் ” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளுக்கு கொடுத்து குடிக்க வைத்தவன் தன் பிளாட்டுக்கு காரை செலுத்தினான்.
