மூர்க்கன் 44
“என்ன டி இவ்ளோ முரண்டு பிடிக்குற நீ.. என் அம்மா, பெரியம்மா, பாட்டி எல்லாரும் கூப்பிட்டும் நீ வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டியாமே.. அம்மா என்கிட்டே சொல்லி வருத்தப்பட்டாங்க ” என்றான் ராஜ்.
“ம்ம்.. ஆமா ராஜ்” என்று மட்டும் பதில் அளித்தான் கயல்.
“ஏன் டி ? நீ அங்க தனியா தானே இருக்கனும். செர்வெண்ட் எல்லாரும் லீவ்ல இருக்காங்க . அவ்ளோ பெரிய வீட்ல நீ மட்டும் தனியா இருக்க உனக்கு பயமா இல்லையா?” என்றான் அவர்கள் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து அவளுடன் பேசிக்கொண்டே வெளியே வந்தான்.
“எனக்கு என்ன பயம் ராஜ், அங்க தான் மைலோ இருக்கானே.. அவன் இருக்க அப்போ என்னை யாரும் நெருங்க முடியாது ” என்றபடி அவன் தோள்கள் உரச வந்தாள்.
அவள் நெருக்கமாக நடந்து வருவதை பார்த்தவன் “என்ன டி ஒரசிட்டு வர,, “என்றான்.
“நீ தான் எதுவுமே பண்ண மாட்டெங்குறியே… அதான் நானே களத்துல இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் .
“ரொம்ப தான் குசும்பு டி உனக்கு. கல்யாணத்துக்கு முன்ன எதுவும் கூடாதுனு நான் எவ்ளோ கட்டுப்பாட்டோட இருக்கேன். அதை கலைக்க பார்க்குறியா நீ.. ” என்று சிரித்துக்கொண்டே அவளுக்கு கார் கதவை திறந்து விட்டான்.
ஏறி அமர்ந்தவள் “தேங்க்ஸ் ” என்றாள் கண்ணடித்து.
“நீ சரி இல்ல டி இன்னிக்கு..”என்று கதவை சுற்றிவிட்டு சுற்றி வந்து டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.
“ஆமா சரி இல்ல தான் என்ன டா பண்ணுவ.. ” என்றவள் அவள் அமர்ந்து இருந்த கார் கதவை லாக் செய்து கண்ணாடியை மேலே ஏற்றி விட்டவள் இப்பொது வசதியாக கார் கதவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு ராஜ்ஜின் மடியில் தன் காலைத் தூக்கிப் போட்டாள்.
அவள் செயலை அதிர்ந்து பார்த்தவன் சட்டென திரும்பி அவளைப் பார்க்க..
கார் கதவில் அவனை பார்த்தவாறு அமர்ந்து இருந்த கயலோ… “என்ன?” என்ற ரீதியில் அவனை புருவம் உயர்த்திப் பார்த்தாள்.
“நீ ஒரு முடிவோட தான் இருக்க ” என்றவன் அவள் பாதத்தை வருடிவிட்டவன் காரை ஸ்டார்ட் செய்து ஆட்டோ டிரைவ் மோடில் காரை ஆன் செய்தவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்,
“டேய் என்ன பண்ற?’ என்று கயல் அவன் காரை ஒட்டாமல் கை கட்டி அமர்ந்தவனை அதிர்ந்து கேட்டாள்.
“ஆட்டோ டிரைவ் மோட் போட்டிருக்கேன் டி.. ஷேப் தான்” என்றவன் அவள் பாதங்களை பிடித்து விடத்துவங்கினான்.
அவளும் அமைதியாக அமர்ந்துவிட..
அவள் பாதங்களை மென்மையாக வருடியவன் “என்ன டி ஆச்சு உனக்கு.. ” என்றான் சிரித்துக்கொண்டே..
“ம்ம்ம்.. என்னென்னவோ ஆகுது.. ” என்றாள் நக்கலாக.
“அதான் என்னனு கேக்குறேன் . சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன் இல்ல.. ” என்றான் அவளை ஆர்வமாக பார்த்து.
“தெரிஞ்சா மட்டும் நீ வந்து என்ன பண்ண போற.. கொஞ்ச நேரத்துக்கு முன்ன சொன்னது போல.. கல்யாணம் முடியட்டும்னு சொல்லுவ… ஒரு பொண்ணு நானே வெட்கமில்லாம பேசுறேன். நீ கொஞ்சம் கூட உனக்கும், அதுக்கும் சம்மந்தம் இல்லாதவன் மாதிரியே இருக்கியே டா..” என்றாள் அவனை முறைத்துக் கொண்டே.
“எனக்கு மட்டும் இதெல்லாம் தெரியாது, எனக்கு ஆசை இல்லேனு நீ நினைக்குறியா டி.. ” என்றவன் அவளை மோகம் கலந்த விழிகளில் பார்த்தவன் “எனக்கும் எல்லாம் இருக்கு டி.. ஆனா ஒரு தடவை ஆரம்பிச்சுட்டா என்னால எதையும் நிறுத்த முடியாது, அப்பறோம் உன் பாடு தான் கஷ்டம் ” என்றான்.
“நீ முதல்ல ஸ்டார்ட் பண்ணு , என் பிரச்னையை நான் பாத்துக்கிறேன். நீ அதை பத்தி எல்லாம் யோசிக்க வேணாம் ” என்று அவனை வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.
“நீ இன்னிக்கு சரி இல்ல டி.. என்னவோ ஆகிருச்சு உனக்கு” என்றவன் அவளோடு இன்னமும் பேச்சை வளர்த்தால் தன் கட்டுப்பாடுகள் மொத்தமும் இழந்துவிடுவோம் என்று நினைத்தவன் திரும்பி ஆட்டோ டிரைவ் மோடை ஆப் செய்தவன் காரை ராவண் வீட்டிற்கு விட்டான்.,
அவன் நிலை அறிந்த கயலும் மேலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்துவிட..
ஒரு கையை ஸ்டியரிங்கிளும், மற்றொரு கையை அவள் பாதத்திலும், கியரில் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டான்.
வீடும் வந்தது கேட்டை வாட்ச்மன் திறந்துவிட.. காரை கொண்டு வந்து போர்ட்டிக்கோவில் நிறுத்தியவன் அவளை திரும்பிப் பார்த்தான். “போகட்டுமா?” என்றாள் ஏக்கமாக.
“போ டி.. ” என்று தன் தலை முடியை விரல்களால் கோதிக்கொண்டே சிரித்தான்.
அவனை முறைத்துக்கொண்டு.. ம்ஹும்… என்றபடி காலை கீழே இறக்கியவள் “கல்யாணம் மட்டும் ஆகட்டும் உன்னை பட்டினி போடறேனா? இல்லையா? பாரு.. ” என்று பொருமிக்கொண்டே காரைவிட்டு கீழ் இறங்கியவள் கதவை ஓங்கி அறைந்தாள்.
அவன்னும் சிரித்துக்கொண்டே.. கார் ஜன்னலை திறந்தவன் “அதையும் பாக்குறேன் டி.. ” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
“ம்ஹும்.. இந்த எருமையை காதலிச்சதுக்கு ஒரு செவுத்தை காதலிச்சிருக்கலாம். ஒரு ஹக் கூட இல்ல. நானா கட்டிபிடிச்சுக்கறேன்னு சொன்னாலும் முடியாதுனு வீம்பு பேசுவான்.” என்று சலித்துக்கொண்டே நேராக கார்டனுக்கு சென்றாள். அங்கே மைலோ அவனுக்கென்று இருந்த இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்க..
“மைலோ குட்டி.. என்ன டா பண்ற?” என்றபடி அவன் சங்கிலியை அவிழ்த்துவிட்டாள்.
மைலோவும் அவள் கொலுசொலி கேட்டதும் எழுந்து நின்று வாலை வேகமாக ஆட்டி தன் அன்பை வெளிப்படுத்த.. அவனை அழைத்துக்கொண்டு அப்படியே மேல பின்னால் நடந்தவள் அவன் உச்சா.. கக்கா போகும்வரை அவனை அங்கே விளையாட விட்டவள் அதன் பின்னே வீட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.
மைலோவும் கொஞ்ச நேரம் அலைந்து திரிந்தவன் கயலை தேடி வீட்டிற்குள் நுழைந்தது. அவன் வரவும் அவனுக்கு பாலும், அவனுக்கென்று இருந்த பிஸ்கெட்டையும் எடுத்து சாப்பிட கொடுத்தவள் தனக்கு டீ போட்டு வந்து டிவியை ஆன்செய்து அதை பார்க்க துவங்கினாள்.
ஒரு ஆக்ஸன் படம் ஓடிக்கொண்டிருக்க.. அதை பார்த்தவாறு டி குடித்தவள் சோபாவில் வசதியாக சாய்ந்துகொண்டு படத்தை பார்க்கத் துவங்கி இருந்தாள்.
திடீர் என கயலின் முகத்தில் சில்லென்று ஈரம் படர.. டிவி பார்த்ததில் அவளையும் அறியாமல் உறங்கி இருந்தவள் அடித்துப் பிடித்துக்கொண்டு கண்களை திறந்தாள்.
அவள் முன்னே மைலோ நின்று இருக்க.. அது அவள் முகத்தை நக்கி அவளை எழுப்பி விட்டது.
“டேய்.. மைலோ…” என்று அவனை பிடித்து நிறுத்தியவள் எழுந்து உட்கார்ந்த பின் தான் தான் டிவியை பார்த்துக்கொண்டே ஹாளிலேயே தூங்கிவிட்டோம் என்று நினைத்தவள் எழுந்திருக்க போக.. அப்போது வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
சற்று அதிர்ந்தவள் யார் என்று பார்க்க.. அவள் கதவை திறந்து கொண்டு உள்ளே முகமூடி அணிந்த ஒரு ஆள் வந்தான்.
அவனை பார்த்ததும் திக்கென்று ஆகிவிட்டது அவளுக்கு “ஹே! யாரு நீ.. நீ எப்படி வீட்டுக்குள்ள வந்த.. ” என்றவள் “மைலோ! அட்டாக்.. ” என்று மைலோவை முகமூடி அணிந்தவன் மீது ஏவிவிட்டான்.
மைலோவும் வந்தவனை பிடிக்க அவன் மீது பாய.. அவனை பிடித்து ஒரே சுழற்றில் கயலின் அறையை விட்டு தூக்கி வீசியவன் சட்டென கதவை தாளிட்டான்.
பயத்தில் அவள் உடல் எல்லாம் வியர்த்து விட்டது.
“ஹேய்! யாரு நீ? ” என்று குரல் நடுங்க பேசியவள் “வாட்ச்மேன்.. வாட்ச்மென்.. “என்று கத்தினாள்.
“நீ என்ன கூச்சல் போட்டாலும் அவன் வர மாட்டேன். அவனுக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கேன் எப்படியும் 2 மணி நேரம் ஆகும் .. ” என்று அவளை நெருங்க..
கயலுக்கு உடல் எல்லாம் நடுங்க துவங்கியது . நா வறண்டு அவளால் பேசக்கூட முடியவில்லை.
தெரியாமல் கண்ணயர்ந்தவளுக்கு இப்படி ஒரு நிலையா? என்று தன்னையே நினைத்து நொந்துகொண்டவள்.
“இங்க பாரு ஒழுங்கா வெளியே போய்டு.. இது யார் வீடுன்னு தெரியுமா உனக்கு” என்று அவனை வெளியே துரத்தும் முனைப்போடு பேசினாள்.
“தெரியும் டி.. அந்த பைனான்ஸ் கம்பெனி நடத்துறானே ராவண் அவன் வீடு தானே.. ” என்றான்.
“அவர் வீடுன்னு தெரிஞ்சுமா இவ்ளோ தைரியமா நீ உள்ள வந்திருக்க… ” என்று பின்னால் நடந்தபடி கேட்டாள்.
“அவன் வீடு தான். ஆனா அவன் தான் ஊர்லையே இல்லையே… அதான் துணிஞ்சு இறங்கிட்டேன். ரொம்ப நாளா உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன். சும்மா சொல்லக்கூடாது செம்ம குட்டி டி.. நீ…” என்றவன் வேக எட்டுக்கள் வைத்து அவளை நெருங்கி இருக்க..
அவனிடம் இருந்து தப்பிக்க முடியாத படிக்கு சுவற்றில் மோதி நின்றவள் அவளுக்கு எதிரே நின்றவனை பார்த்தாள். அவன் கண்கள் மட்டும் நன்றாக தெரிந்தது. முகமூடி அணிந்து இருக்க.. அவனை யார் என்று அவளால் அடையாளம் காண முடியவில்லை.
மெல்ல தன் கரத்தை அவள் முகத்திற்கு கொண்டு சென்றவன் கலைந்த அவள் தலை முடியை சரி செய்தவன் “அந்த பிரம்மன் உன்னை ஸ்பெஷலா செஞ்சிருப்பான் போல.. அப்படியே செஞ்சு வெச்ச சிலை போல சும்மா நச்சுன்னு இருக்க.. ” என்று அவள் மேல் தன் மொத்த எடையையும் போட்டான் .
“நான் எப்படி இருந்தா உனக்கு என்ன டா ராஸ்கல் முதல்ல வெளிய போ..” என்று அவனை தன்னிடம் இருந்து தள்ள முயன்றாள் .
அவளால் ஒரு இம்மி கூட அவனை தன்னை விட்டு விளக்க முடியவில்லை, “இந்த ராஜ் அப்போவே சொன்னான் . தனியா ஏண்டி இருக்க என்கூட வீட்டுக்கு வந்திருனு நான் தான் அவன் பேச்சை கேக்கல.. இப்போ அனுபவிக்குறேன் ” என்று நினைத்தவள் தன் முன்னே நின்றவனை பார்த்தாள்.
அவள் இருபக்கமும் கையை சுவற்றில் ஊன்றி அவளை தப்பிக்க விடாமல் பிடித்து இருந்தான்.
“இங்க பாரு சொன்ன கேளு.. ஒழுங்கா இங்க இருந்து போயிரு.. ” என்றாள்.
“போறேன் டி.. அதுக்கு முன்ன உன்னை அனுபவிச்சிட்டு போறேன்” என்றான் அவன்.
அதை கேட்டு அவள் அதிர..
அதிர்ந்த அவள் முகத்தை தன் ஒன்றை கையால் பற்றியவன் ” இந்த லிப்ஸ் இருக்கே,, அதை பார்க்கும்போது எல்லாம் அப்படியே கடிச்சு சாப்பிடணும் போல இருக்கும் டி.. ” என்றவன் தன் கட்டைவிரலால் அவள் கேள் இதழை அழுத்தமாக தடவினான்.
அதற்க்கே பெண்ணவளுக்கு சகலமும் வியர்த்துவிட்டது..
எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “ப்ளீஸ் என்னை எதுவும் செஞ்சுறாத விட்டுடு” என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாள் அவனிடம்.
“இப்படி கெஞ்சினா அப்படியே விட்டுட்டு போயிருவேன்னு நினைக்குறியா? உன்னை இன்னிக்கு முழுசா அனுபவிக்கணும்னு தான் டி வந்திருக்கேன். விட்டுட்டு போக இல்ல…” என்றான்.
“ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளு. எனக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம். இதனை வருசத்துல என் வாழ்க்கையில் நடக்குற ஒரு நல்ல விஷயம் அது. நீ என்னை எதுவும் செய்துட்டா என் வாழ்க்கை நாசம் ஆகிடும். என்னை தயவு பண்ணி விட்டுரு. இதை தவிர நீ என்ன கேட்டாலும் நான் செய்றேன்” என்று கையெடுத்துக் கும்பிட்டு கண்ணீர் மல்க அவனிடம் கெஞ்சினான்.
