Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல்.. 32

அஸ்க்..லஸ்கா..காதல்.. 32

by Layas Tamil Novel
331 views

EPISODE 32


ஆரா காலேஜ் விட்டு வீட்டிற்கு வரும்போதே அவளுக்காக வாசலிலேயே காத்திருந்தான் வினித்.

காரை விட்டு பேசிக்கொண்டு ஆராவும் இலக்கியாவும் இறங்கி படிகளில் ஏறி வீட்டுக்குள் வர…

வாசலில் நின்றிருந்த வினித்தை பார்த்ததும் ஆரா அப்படியே நின்று விட்டாள்.

ஆராவை பார்த்துவிட்டு அவளிடம் எப்படி பேசுவது… என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கிக் கொண்டே வினித் நின்று இருக்க…

ஆராவோ வினித்தை இப்போது எதிர்பார்க்காதவள் அன்று வினித்துக்கு தானாக சென்று முத்தம் கொடுத்தது நினைவிற்கு வர…

அந்த சம்பவத்திற்கு பிறகு அவனை இன்று தான் நேருக்கு நேராக சந்திக்கிறாள் ஆரா.

அவனை பார்த்ததும் அவனிடம் என்ன பேசுவது எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் விழித்த ஆரா.

அன்று தான் முத்தம் கொடுத்ததால் தன்னைப் பற்றி வினித் என்ன நினைத்துக் கொண்டிருப்பான் என்று மனதில் ஒருவித பயமும் அவளுக்கு இருக்க அவனிடம் எப்படி சென்று பேசுவது என்று தயக்கத்தோடு மெதுவாக படிகளில் ஏறி வந்தால் ஆரா.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தயங்கியபடி பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த இலக்கியா… இங்கே தான் இருப்பது சரியாக இருக்காது என்று உணர்ந்தவள் நாசுக்காக ஆராவியிடம் சொல்லிவிட்டு எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு நான் உள்ளே போறேன் நீ அண்ணா கூட பேசிட்டு வா என்று சொல்லிவிட்டு இலக்கியாவிடம் வந்தவள்.

அண்ணா எப்படியோ அவளை உஷார் பண்ணிட்டீங்க… அப்படித்தானே என்று சொல்லி சிரிக்க…

இலக்கியா பேசியதை வைத்து ஆரா தன்னை காதலிப்பதை இலக்கியாவிடம் சொல்லிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டான்.

வினித்திடம் பேசிவிட்டு அவள் அறைக்கு இலக்கியா செல்ல… திரும்பி ஆராவை பார்த்தவன் அப்படியே நிற்க…

படி ஏறி வந்து ஆரா வினித்தை பார்த்துவிட்டு அவனிடம் பேச தயங்கிப்படியே திரும்பி தன் அறைக்கு செல்ல போக…

அவள் தன்னிடம் பேசாமல் செல்வதை பார்த்த வினித் ஆரா ஒரு நிமிஷம் என்று ஆராவை அழைத்தான்.

வினித் அழைத்ததும் அப்படியே நின்ற ஆரா தான் நின்ற இடத்திலிருந்து திரும்பி அவனை பார்த்தாள்.

அவனைப் பார்த்துவிட்டு ஆரா எதுவும் பேசாமல் இருக்க…

என்ன ஆரா ஏன் நீ என்கிட்டே எதுவுமே பேச மாட்டேங்குற.. முன்னாடி எல்லாம் நான் வந்தாலே என் பின்னாடி என் கூட பேசணும்னு சுத்துவ…

ஆனா இந்த ரெண்டு மூணு நாளா நீ என்னை பார்க்க வரவே இல்லை.. நானும் உன்னை பார்க்க இங்கே வந்தா என் கண்ணில் படாமல் ஏன் ஓடி ஒளிஞ்சுக்குற என்று தயக்கமாக கேட்டான் வினித்.

ஆரா வினித் கேட்டதற்கு பதில் கூற வர…. அப்போது அவர்கள் வீட்டு வேலையாள் அங்கே ஏதோ வேலையாக வரவும் ஆரா பேசுவதை நிறுத்திவிட்டு இங்கு பேச வேண்டாம் நாளைக்கு என் காலேஜ்க்கு பக்கத்துல இருக்க காபி ஷாப்க்கு வாங்க…. அங்க வச்சு பேசிக்கலாம் என்றாள் ஆரா.

என்னது…. நாளைக்கா!!! நாளைக்கு வரை எல்லாம் என்னால காத்துட்டு இருக்க முடியாது ஆரா.

எனக்கு உன் கூட இப்பவே பேசணும் ப்ளீஸ் என்கூட வெளியே வா என்றான் வினித். இன்று தானாக வந்து பேசவேண்டும் என்று சொல்வதை ஆச்சர்யமாக பார்த்த ஆரா.

சரி வெயிட் பண்ணுங்க நான் பிரெஷ் ஆகிட்டு வரேன் என்றாள்.

சரி என்று பல் 32 ஐயும் காட்டி சிரித்த வினித் சீக்கிரமா வா ரொம்ப நேரம் என்னை காத்திருக்க வைக்காதே என்றவன்.

நான் காரில் வெயிட் பண்றேன் என்று சொல்லிவிட்டு தன் காருக்கு வினித் செல்ல…

அவனைப் பார்த்து சிரித்தவள் வேகமாக தன் அறைக்குச் சென்று ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு ஐந்தே நிமிடத்தில் வினித் உடன் வெளியே செல்ல போகிறோம் என்று ஆவலில் வெளியே வந்தால் ஆரா.

வினித்தை சந்திக்க வாசலுக்கு வரவும் அப்போது சரியாக ரேவதியின் இரண்டாவது மகள் சவிதா காலேஜ் சென்று விட்டு அங்கே வந்தால்.

ஆராவுக்கும் சவிதாவுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான். சவிதா மிகவும் சந்தோஷமாக சிரித்த படி வந்த ஆராவை பார்த்தவள்.

ஆராவிடம் வந்து என்ன ஆரா ரொம்ப சந்தோஷமா இருக்க போல இருக்கு..

எதுவும் முக்கியமான விஷயம் நடந்திருக்கா என்ன… என்று தானாகவே வந்து ஆராவிடம் பேசினாள்.

அவளை முறைத்த ஆரா அதெல்லாம் ஒன்னும் இல்லையே நான் எப்பவும் போல தான் இருக்கேன் என்றவள்.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவளை தாண்டி செல்லப் போக… அவள் கை பிடித்து நிறுத்திய சவிதா எங்கே போற ஆரா என்றாள்.

ஏய் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? யாராவது வெளியே போறவங்களை பிடித்து நிறுத்தி எங்க போறாங்கன்னு கேள்வி கேப்பாங்களா? நான் எங்க போனா உனக்கு என்ன என்றால் ஆரா.

ஏன் ஆரா இப்படி தேவையில்லாமல் டென்ஷன் ஆகுற.. எங்க போறன்னு தானே கேட்டேன்.

இதுல என்ன தப்பு இருக்கு நீ எங்க போறேன்னு சொல்லிட்டு போனா நான் பாட்டுக்கு என் வேலையை பாக்க போறேன் என்றால் சவிதாவும் விடாமல் ஆராவை பிடித்துக் கொண்டு.

அதெல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை என்றால் ஆரா.

ஏன் என்கிட்ட சொல்ல கூடாதா நேத்து வந்த அந்த இலக்கியா கூட அவ்வளவு சந்தோஷமா சிரிச்சு பேசிக்கிட்டு இருக்க…

நீயும் நானும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா பிறந்து வளர்ந்தவங்க என்கிட்ட ஏன் நீ சகஜமா பேச மாட்டேங்குற என்று கேட்டால் சவிதா.

இங்க பாரு சவிதா என் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க போறவளும் நீயும் ஒன்னா கிடையாது அத முதல்ல புரிஞ்சிக்க..

தவிர என் அண்ணா இலக்கியாவிற்கு எவ்வளவு சப்போர்ட் பண்ணாங்கன்னு நீயும் தானே காலையில பார்த்த… அவளை பத்தி பேசுறதுக்கு முன்னாடி நீ யோசிச்சு பேசு என்றவள்.

முதலில் என் கையை விடு நான் போகணும் என்று தன் கையை பிடித்திருந்த சவிதாவின் கையை உதற..

அவளை முறைத்த சவிதா ஆராவின் கையை விட்டவள் நீ வேணா பாரு உன் அண்ணனை கண்டிப்பா என் அக்கா தான் கல்யாணம் பண்ணிக்க போறா…

இது யார்னாலயும் மாத்த முடியாது இப்போ வந்திருக்காளே இலக்கியா அவ இல்லை அவளவிட இன்னும் 100 பேர் வந்தாலும் கடைசியில் தமிழ் மாமா என் அக்காவை தான் கல்யாணம் பண்ணிக்க போறாரு என்றால் சவிதா திமிராக.

அது இன்னும் ஆறு மாசம் கழிச்சு என் அண்ணா இலக்கியாவை கல்யாணம் பண்ணிக்க போறாரா இல்லையான்னு தெரியும்.

நீ இப்பவே தேவையில்லாம கற்பனை வளர்த்துட்டு சுத்திட்டு இருக்காத… இங்கே எதுக்கு வந்த எங்க வீட்டுக்கு ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்து கொட்டிகிட்டு போகத்தானே வந்த… அதை போய் செய் எனக்கு நிறைய வேலை இருக்கு என்று அவள் கையை உதறிவிட்டு படிகளில் இறங்கி ஆரா வெளியே சென்றாள்.

ஆரா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சவிதா அப்படி அவசரமாக அவள் எங்கே செல்கிறாள் என்று பார்ப்பதற்காக படிகளில் இறங்கி வர…

அதற்குள் ஆரா ஓடிச் சென்று வினித்தின் காரில் முன் சீட்டில் ஏறிக் கொள்ள இருவரும் சிரித்த படியே காரில் கிளம்புவதை பார்த்த சவிதா.

ஓஹோ.. நீ இவன் கூட பேசத் தான் இவ்வளவு அவசரமா கிளம்பி போனியா இரு.. இரு.. உன்னை அத்தை கிட்ட சொல்லி மாட்டி விடுறேன் என்று திரும்பி காவேரியை தேடி உள்ளே சென்றாள்

…..

ஆராவும் வினித்தும் தனியாக பேசிக் கொண்டிருக்கட்டும் என்று அவர்கள் இருவரையும் தனியாக விட்டுவிட்டு தன் அறைக்கு இலக்கியா சென்று கொண்டிருக்க…

அவளை பாதியிலேயே வழி மறித்த… தமிழின் சித்தப்பா மகன் சேகர்.

அவனைப் புரியாமல் பார்த்த இலக்கியா இவன் தமிழின் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு காலையில் வந்தவன் தானே என்று யோசித்த படி இலக்கியா சேகரை பார்த்தால்.

சேகரோ இலக்கியாவை பார்த்து மிகவும் சினேகமாக புன்னகைத்து அவள் முன்பு தன் கையை நீட்டி ஹலோ… ஐயம் சேகர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

தன்னிடம் சினேகமாக பேசிய சேகரை பார்த்த இலக்கியாவிற்கு அவன் மீது நல்ல அபிப்பிராயம் தோன்ற.. தன் கையை நீட்டி இலக்கியா என்று சிரித்த முகமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

நான் காலையிலேயே உங்க கூட பேசலாம் என்று நினைத்தேன். ஆனா என் அப்பாவும் அத்தையும் தான் எல்லார்கூடயும் சண்டை போட்டுட்டு இருந்தாங்களே…

அந்த நேரத்துல உங்க கூட பேசறது சரியா இருக்காது என்று தான் எதுவும் பேசிக்கல என்றான் சேகர்.

ஓ… என்ற இலக்கியா எதுவும் பேசாமல் வெறுமனே சிரித்தபடி நின்று இருக்க…

என் அண்ணா தமிழை கல்யாணம் பண்ணிக்க போறீங்க… வாழ்த்துக்கள் என்று அவளிடம் மீண்டும் கை குலுக்கினான்.

இலக்கியா தேங்க்ஸ் என்று பதில் அளித்தவள் சரி நான் உள்ளே போறேன் என்று அவனை தாண்டி செல்லப் போக…

ஒரு நிமிஷம் இருங்க ஏன் உள்ளே போறதுக்கு இவ்வளவு அவசரப்படுறீங்க…

இப்பதானே நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர அறிமுகப்படுத்திக்கிட்டோம். எப்படியும் நாளைக்கு நீங்க எனக்கு அண்ணியாக போறீங்க… உங்கள பத்தி நான் தெரிஞ்சுக்கலாம் இல்லையா? என்ன பத்தியும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? என்றான் சேகர்.

இலக்கியா சிரித்தபடியே நான் இங்கே தான் இருக்க போகிறேன் எங்கே போகப் போகிறேன். அதெல்லாம் மெதுவா பேசி பழகிக்கலாமே என்றால் சட்டென அவனை கத்தரிப்பது போல..

ஒரு பேச்சுக்காக கூட சரி என்று அவனுடன் பேச வருவாள் என்று சேகர் எதிர்பார்த்து இருக்க…

ஆனால் இலக்கியாவோ அவனை அங்கேயே துண்டித்து விட அதற்கு மேல் அவளிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் யோசனையில் நின்று இருந்தான் சேகர்.

சரி எதுவும் பேசணுமா எனக்கு நிறைய வேலை இருக்கு நான் உள்ளே போகட்டுமா? என்று கேட்டால் இலக்கியா.

இந்த வீட்ல உங்களுக்கு என்ன வேலை இருக்கு இங்கே தான் வேலை செய்ய இவ்வளவு ஆளுங்க இருக்காங்களே… ஏன் ஏதோ வேலை செய்ற மாதிரி இவ்வளவு அவசரப்படுறீங்க என்று கேட்டான் சேகர்.

என்னோட காலேஜ்ல எனக்கு ஹோம் ஒர்க் கொடுத்திருக்காங்க அதை நான் செய்து பார்க்கணும் அதுக்காக தான் நான் போறேன்னு சொன்னேன் என்றால் இலக்கியா.

ஓ… அப்போ சரி நீங்க கிளம்புங்க நாம இன்னொரு நாள் பேசலாம் என்று விட்டு சேகர் திரும்பி சென்றான்.

இலக்கியாவும் தலையாட்டி விட்டு திரும்பி தன் அறைக்கு சென்றாள்.

சேகரிடம் பேசிவிட்டு தன் அறைக் கதவை திறந்து கொண்டு இலக்கியா உள்ளே வரவும் அவள் போன் அடிக்கவும் சரியாக இருந்தது.

தன் கையில் இருந்த போனை எடுத்து பார்க்க தமிழ் தான் அவளுக்கு அழைத்து இருந்தான்.

வேகமாக அறையை சாற்றி விட்டு உள்ளே வந்த இலக்கியா தமிழின் போன் காலை அட்டென்ட் செய்து காதில் வைத்து ஹலோ என்றால் ஒரு வித உணர்வோடு.

அவள் ஹலோ என்று சொன்ன அடுத்த நொடி யாரை கேட்டுடி அவன் கூட கை குலுக்கி சிரிச்சு பேசிக்கிட்டு இருப்ப என்று போனின் அந்த பக்கம் இருந்து கத்தினான் தமிழ்.

அவன் சொல்வது முதலில் புரியாமல் குழம்பிய இலக்கியா அதன் பிறகு தான் சற்று முன்பு சேகரிடம் ஹாலில் நின்று கை குலுக்கி பேசியது இலக்கியாவிற்கு நினைவிற்கு வர… நான் அவரு கூட பேசினது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டால்.

ஏன் தெரியாது அதுதான் நீ அவன்கிட்ட கை குலுக்கி சிரிச்சு சிரிச்சு பேசினது நான் இங்கே இருந்து பார்த்துகிட்டு தானே இருந்தேன் என்றான் தமிழ்.

இங்கே இருந்து பார்த்துகிட்டு இருந்தீங்களா…. அப்போ நீங்க இங்கதான் இருக்கீங்களா? என்று தமிழை நேரில் பார்க்கும் ஆவலில் இலக்கியா ஆர்வமாக கேட்க..

ஆனால் அதை அறியாத தமிழ் மாம் எங்கே இருந்தா உனக்கு என்னடி… நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு அவன்கிட்ட என்னடி சிரிச்சு பேசிக்கிட்டு இருந்த என்றான் கோபமாக.

தமிழ் இப்படி தன்னிடம் பேசவும் இலக்கியாவிற்கு கடுப்பாக… நான் அவர் கூட என்ன பேசினா உங்களுக்கு என்ன வந்துச்சு என்று திருப்பி பேசினால்.

இலக்கியா தன்னை எதிர்த்து பேசுவாள் என்று எதிர்பார்க்காத தமிழ் என்னடி உனக்கு ரொம்ப குளிர் விட்டு போயிடுச்சா??. உன்னை நான் ஒரு நாள் தான் பாக்கல அதுக்குள்ளேயே நீ பேசினா என்ன எதிர்த்து பேசுறியா.. ஆத்திரமாக தமிழ் கேட்க.

அப்போதுதான் காலை தேவி சொன்னது இலக்கியாவிற்கு நினைவுக்கு வந்தது.

இவர்களை தள்ளி வைத்தால் தன்னிடம் இருந்து விலகிச் சென்று விடுவார்கள் வேறு ஒரு பெண்ணை பார்த்து காதல் ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று தேவி சொன்னது இலக்கியாவிற்கு நினைவில் வர…

அவனை இங்கு வர வைக்க வேண்டும் என்று நினைத்த இலக்கியா நான் யார் கூட பேசினா உனக்கு என்ன… நீ உன் வேலையை மட்டும் பாருடா…. நான் அப்படித்தான் அவன் கூட பேசுவேன் நீ என்ன பண்ணுவ என்றால் வேண்டுமென்றே அவனிடம் வம்பு இழுத்து.

தன்னை உரிமையாக டா போட்டு இலக்கியா கூப்பிடுவது பிடித்து இருந்தாலும் நான் அவள் யாருடன் பேசினால் உனக்கு என்ன என்று அவனை எடுத்து எரிந்து பேசியதை தமிழால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

என்னடி வாய் ரொம்ப நீளுது… ரொம்ப திமிரா பேசுற… உனக்கு என்ன அவ்வளவு தைரியம் ஆயிடுச்சா என்கிட்ட இப்படி பேசறதுக்கு என்றான் தமிழ்.

உன்கிட்ட பேசறதுக்கு நான் எதுக்குடா பயந்துக்கணும். நீ என்ன பேயா…. இல்ல பிசாசா… நான் உன்னை பார்த்து பயந்துக்க…

நான் அப்படித்தான் பேசுவேன் என்னடா பண்ணுவ டா… டால்டா. தலையா….என்றால் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டே போனில் தமிழிடம் சண்டைக்கு சென்றாள்.

என்னடி வாய் ரொம்ப நீளுது என்னடா பண்ணுவன்னு என்ன பார்த்தே கேக்குறியா…. நான் மட்டும் நேரில் வந்தா உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றான் தமிழ் கோபமாக.

வா டா தமிழ்… உன்னை நேரில் வரவழைக்க தானே நான் இப்படி எல்லாம் பேசுனேன். என்று நினைத்தவள்.

அதுதான் என்ன பண்ணுவேன் உனக்கே தெரியாதுன்னு சொல்லிட்டியே அப்புறம் நீ நேர்ல வந்தா என்ன வராட்டி எனக்கென்ன போன வை முதல்ல சும்மா போன் பண்ணி என்ன திட்டுற வேலை வச்சுக்காதே என்று இலக்கியா அவனிடம் சண்டைக்குச் செல்ல…

வாய் ரொம்ப அதிகமா பேசுற டி நீ இன்னைக்கு காலையில வரைக்கும் என்கிட்ட எப்படி பணிந்துக்கிட்டு இருந்த… இப்ப எங்க இருந்துடி உனக்கு இந்த தைரியம் வந்துச்சு.

எல்லாம் அந்த சேகர் கூட பேசின தைரியம் தானா.. அவன் தான் உன்கிட்ட எதுவும் சொல்லிக் கொடுத்தானா இவ்வளவு தைரியமா என்கிட்ட பேசுற என்று தமிழ் மல்லுக்கு நிற்க…

அப்படித் தாண்டா பேசுவேன் நேர்ல வந்தா கிழிச்சிடுவேன்னு சொன்னியே நேரா வாடா பாக்கலாம் நீ என்ன கிழிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன் என்று இலக்கியா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தமிழை வெறுப்பேற்ற…

நான் உன் பின்னாடி தாண்டி நிற்கிறேன் தைரியம் இருந்தா என்ன பாத்து இப்ப சொன்ன வார்த்தைகள் எல்லாம் அப்படியே பேசுடி பார்க்கலாம் என்று சொல்லி அவள் தோலை பிடித்து திருப்ப….

அவ்வளவுதான் இலக்கியாவிற்கு இவ்வளவு நேரம் தைரியமாக பேசியதெல்லாம் அவனை தன் அறையில் பார்த்ததும் மொத்தமாக வடிந்துவிட்டது.

நீ… நா… இங்… நீ… நீ எப்படி என் ரூமுக்குள்ள இன்று அதிர்ச்சியாக அவனைப் பார்த்து இலக்கியா கை நீட்டி கேட்க…

இவ்வளவு நேரம் என்ன வாடா போடான்னு மரியாதை இல்லாம அப்படி பேசிட்டு என்ன நேர்ல பார்த்ததும் வாய் குழருதோ… என்றவன் அவள் இரண்டு தோள்களையும் பிடித்துக் கொண்டு அவள் உயரத்திற்கு திரும்பி.

அவசரப்பட்டு வாய்விட்டு விட்டோமோ இவனே வரவழைக்க தானே நான் இவனிடம் இவ்வளவு நேரம் இப்படி சண்டையிட்டேன்.

ஆனால் இவன் ஏற்கனவே இங்கே வந்திருக்கிறான் என்று தெரிந்திருந்தால் நான் எதுவும் பேசாமல் இருந்திருப்பேனே என்று தன் மனதுக்குள் நினைத்த இலக்கியா தன் தோள் மீது கை வைத்திருந்த தமிழின் கையை சட்டென்று தட்டி விட்டு விட்டு அவனிடமிருந்து தப்பித்து ஓடப் பார்க்க…

எங்கடி போற என்று ஒரே எட்டில் அவள் துப்பட்டாவை பிடித்து இழுக்க….

துப்பட்டாவை பிடித்து தமிழ் இழுத்த வேகத்தில் துப்பட்டாவோடு சேர்ந்து இலக்கியாவும் பின்னால் வந்து அவன் மீது மோதி நின்றாள்.

….

இங்கே வினித் ஆராவை அழைத்துக் கொண்டு காரை கிளப்பி வெளியே செல்ல அவர்கள் இருவரும் செல்வதை பார்த்த சவிதா நேராக காவேரியிடமும் தன் அம்மாவிடமும் வந்தால்.

உள்ளே வரும்போது கையில் இருந்த பேக்கை ஒரு புறமும் செல்போனை சோபாவில் தூக்கி வீசியவள் அவர்களிடம் செல்ல…

அவள் கோபமாக வருவதை பார்த்த ரேவதி சவிதா என்ன ஆச்சு ஏன் உள்ளே வரும்போது இவ்வளவு கோபமாக வர என்று கேட்டார்.

ரேவதியை கண்டுகொள்ளாமல் நேராக காவேரியிடம் வந்தவள் அத்தை நீங்களே சொல்லுங்க நமக்கு இருக்கிற வசதிக்கும் அந்தஸ்துக்கும் நம்ம எப்படி ஆள் பார்த்து பழகணுமா வேண்டாமா..

ஆனா இந்த ஆரா தமிழ் மாமாவோட ஃப்ரெண்ட் அந்த வினித் கூட கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம ஒரே கார்ல ஒண்ணா உக்காந்து சிரிச்சு பேசிக்கிட்டு வெளியே போறா என்றாள்

நமக்கு வசதியில்லை கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாதவங்க கூட எல்லாம் இப்படி நெருங்கி பேசி பழகுறேன்னு நான் கேட்டதுக்கு எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் நீ இங்க வெட்டியா இருக்க தானே வந்த போய் அந்த வேலையை பாருன்னு சொல்லி என்கிட்ட சண்டை போட்டு அனுப்பி வச்சிட்டா என்று காவேரியிடம் நீலி கண்ணீர் வடிக்க..

நானும் அதையெல்லாம் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன் சவிதா என்ன சொல்றது அவ அண்ணன் தான் அவளுக்கு முழுசா சப்போட்டா இருக்கான்.

நான் அவளை எதுவும் கண்டிக்காமல் உடனே தமிழுக்கும் அவ தாத்தாவுக்கும் கோபம் வந்திடுது. என்னால அவளை என் கண்ட்ரோல்ல கொண்டு வரவே முடியல என்று சலித்துக் கொண்டார் காவேரி.

உடனே ரேவதி வயசு பொண்ணு அப்படி எல்லாம் அவ போக்குல விட்டுட்டு இருந்தா நல்லவா இருக்கு அண்ணி என்ன பாருங்க என் இரண்டு பொண்ணுங்களையும் நான் எப்படி என் கைக்குள் போட்டு வச்சிருக்கேன்.

நான் நில்லுன்னா நிப்பாங்க உட்காருன்னா உட்காருவாங்க என்று தன் பிள்ளைகளைப் பற்றி ரேவதி பெருமை பீற்றிக் கொள்ள..

இவளை பத்தி எல்லாமே எனக்கு தெரியும் என்கிட்ட எப்படி நடிக்கிறா பாரு என்பது போல காவேரி ரேவதியை பார்த்துவிட்டு.

எனக்கு என் பொண்ண எப்படி பாத்துக்கணும்னு தெரியும் நீ ஒன்னும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டிய வேலை இல்லை.

நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க அந்த வேலையை மட்டும் பாருங்க நான் சொன்னதெல்லாம் நினைவில் வெச்சுக்கோ…

அந்த இலக்கியாவை எப்படியாவது இந்த வீட்டிலிருந்து தமிழின் வாழ்க்கையில் இருந்தும் துரத்திவிட்டு உன் ரெண்டு பொண்ணுங்களையும் யாரை என் மகன் கட்டிக்கிட்டாலும் எனக்கு சந்தோஷம் தான்.

ஆனால் அந்த இலக்கியா மட்டும் இங்கே இருக்கக்கூடாது. என் பையனை கல்யாணம் பண்ணிக்க கூடாது என்ற காவேரி என் போனை எடுத்து ஆராவிற்கு அளித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

காவேரி தன் கையை விட்டு மறையும் வரை அமைதியாக இருந்த ரேவதி சவிதாவிடம் திரும்பி நீ நல்லா பாத்தியா அந்த ஆரா வினித் கூடத்தான் வெளியே போனாளா என்று கேட்டார்.

ஆமாம் அம்மா நான் ஏன் பொய் சொல்ல போறேன் அவ அந்த வினித் கூட தான் வெளியே போனா என்று சவிதா சொல்ல

தமிழின் அம்மா சொல்லிட்டு போனத நல்லா கேட்ட தானே நீயும் இல்லை உன் அக்காவோ உங்க ரெண்டு பேருத்துல யாராவது ஒருத்தர் அந்த தமிழை மயக்கி மடக்கி உங்க கைக்குள்ள போட்டுக்கோங்க அது மட்டும் நடந்துருச்சுன்னா நம்ம குடும்பமே காலத்துக்கும் கஷ்டம் இல்லாம இருந்துக்கலாம் உனக்கே தெரியும் என் என்னோட அப்பா வீடு எவ்வளவு வசதின்னு சொல்லிட்டு இங்க அண்ணனை கல்யாணம் பண்ணிட்டு வந்தவெல்லாம் சந்தோஷமா இருக்கிறப்போ என்ன மட்டும் இந்த வீட்டை விட்டுவிட்டு ஒதுக்கி வெளியே தள்ளி வச்சிட்டாங்க நான் விட்டுப் போன சொந்தத்தையும் சொத்தையும் என் கைக்குள் கொண்டு வரணும்னா அதுக்கு நீயும் உன் அக்காவும் தான் உதவி செய்யணும் நான் சொல்றத ஞாபகம் வச்சுக்கோங்க என்று சொல்ல.

ஆனா நீ காலையில தானே குமரன் தாத்தா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்த மணி மாமாவோட பையன் சேகர் தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா ஆனா இப்போ இப்படி திடீர்னு தமிழ் மாமாவை எப்படியாவது மடக்கி போட சொல்லி என் கிட்டயும் சொல்றியே என்று சவிதா புரியாமல் கேட்க.

இப்படி காலையில சும்மா எல்லாரும் முன்னாடியும் சமாளிக்கிறதுக்காக அப்படி சொன்னேன். ஆனால் தமிழிடம் தான் வசதி வாய்ப்பு அதிகமா இருக்கு அவன் கிட்ட தான் அதிகாரமும் இருக்கு அதனால நான் சொல்றது மட்டும் நீ செய் சரியா என்றார் ரேவதி.

நீ எதுக்கும் கவலைப்படாதம்மா அக்கா இல்லையென்றால் நான் இரண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தமிழ் மாமாவை எங்க கைக்குள்ள போட்டுக்குவோம் கண்டிப்பா எங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தான் தமிழ் மாமாவை கல்யாணம் பண்ணிக்குவோம் என்றால் சவிதா.சொல்லுடி என் செல்ல குட்டி என்று சவிதாவின் கன்னத்தைப் பற்றிப் பிடித்து கிள்ளிய ரேவதி சரி நான் கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல சவிதா எப்படி தமிழை தன் வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தால்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured