Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா.. காதல்.. 11

அஸ்க்..லஸ்கா.. காதல்.. 11

by Layas Tamil Novel
495 views

இலக்கியாவை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய… அவன் கையில் இருந்த இலக்கியா அவனிடம் இருந்து திமிறி கீழே இறங்கப் போக… தன் கைக்குள் இருக்க விரும்பாமல் இலக்கியா கீழே இறங்குவதைப் பார்த்த தமிழுக்குக் கடுப்பானது.

திமிறியவளை இறங்க விடாமல் மீண்டும் அவளைத் தன் தோளில் மேலே தூக்கிப் போட்டவன். “ஒழுங்கா அமைதியா என்கூட வந்திடு. நான் ஏற்கனவே ரொம்பக் கடுப்பா இருக்கேன். நீ என்னை மறுபடியும் டென்ஷன் பண்ணாத” என்றான் கராராக. அவன் குரலில் இருந்த கோபத்தை உணர்ந்த இலக்கியா அமைதியாக இருந்தாள்.

நேராக அவளைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்குச் சென்று அவளை இறக்கி விட்டவன் திரும்பி தன் அறைக் கதவைத் தாழிட்ட தமிழ், இலக்கியாவை பார்க்க.. அவள் தமிழைப் பார்த்து பயந்தபடி உடல் நடுங்க நின்று இருந்தாள். அவளிடம் வேகமாக நெருங்கி வந்தவன் கோபமாக அவள் முகத்தைப் பார்த்து “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா. நான் போட்ட கண்டிஷனை மீறி வீட்டை விட்டு வெளியே போய் இருப்ப” என்றான் தமிழ்.

தனக்கு மிகவும் அருகில் ஆஜானுபாகுவாக நின்று இருந்த தமிழை நிமிர்ந்து பார்த்தவள். எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

“ஏய் உன்னைத்தான் சொல்லு டி…” என்று தான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நிற்பதைப் பார்த்து தமிழ் கடுப்பாகி அவள் கழுத்தில் கை வைத்து அழுத்த…. அவள் வெண்சங்கு கழுத்தை நெறித்து முகம் முழுவதும் கோபமாக இலக்கியாவையே தமிழ் பார்க்க..

தான் வந்ததிலிருந்து தமிழை இப்போதுதான் இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறாள் இலக்கியா. காலையில் டைனிங் டேபிளில் சாப்பிடும்போது மிகவும் சாந்தமாக இருந்த முகம் இப்போது கோபமாக அவன் முகம் அரக்கன் போல அவளுக்குத் தோன்றியது. ஏற்கனவே அவள் தாய் மாமனிடம் இவ்வளவு வருடம் கஷ்டத்தை அனுபவித்து வந்தவளுக்கு. தமிழின் மிரட்டல் ஒன்றும் அவளுக்குப் புதிதாகத் தெரியவில்லை. இருந்தும் தமிழின் இந்தக் கோப முகத்தைப் பார்த்து இலக்கியாவுக்கு உள்ளுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவள் கழுத்து மேலும் நெருக்கி “சொல்லுடி கேட்கிறேன் இல்ல. நான் கொடுத்த காண்ட்ராக்டரை முழுசா படிச்சு பார்த்து தானே கையெழுத்து போட்ட… அதுல என்ன எழுதி இருந்துச்சு படிச்சிருப்ப தானே. நானா எப்போ உன்னை இந்த வீட்டை விட்டுப் போக சொல்றேனோ அது வரைக்கும் யார் என்ன சொன்னாலும் இந்த வீட்டை விட்டுப் போகக் கூடாதுன்னு காண்ட்ராக்ட்ல எழுதி இருக்கா இல்லையா” என்று கேட்டான்.

இலக்கியாவின் கழுத்து தமிழ் நெறித்ததில் பயங்கரமாக வலித்தது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து தமிழின் கையை நனைக்க அப்போதுதான் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அவனுக்குப் புரிந்தது. இலக்கியாவின் கையில் இருந்த தன் பிடியை லேசாகத் தளர்த்திய தமிழ். அவள் கழுத்தை முழுவதுமாக விடாமல் “சொல்லுடி உன்னைத்தானே கேட்டுட்டு இருக்கேன்” என்று அவளைக் கண்களாலேயே மிரட்ட…

“நான் நான்தான் இந்த வீட்டை விட்டுப் போகலையே… உங்க வீட்டு முன்னாடிதானே இருந்தேன்” என்றால் இலக்கியா முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு. “இந்த வீட்டையும் என்னையும் தவிர வேறு யாரையும் தெரியாது அதனால்தான் இந்த வீட்டை விட்டுப் போகாமல் இங்கேயும் இருக்கேன்” என்று சொன்ன… “உனக்கு என்னைத் தவிர இந்த ஊர்ல வேற யாரையும் தெரிஞ்சா நீ அங்க போய் இருப்ப தானே… போறதுக்கு இடம் இல்லாத வேலைதானே நீ எங்கே இருந்த” என்று கேட்டான் தமிழ்.

இவனிடம் என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று இலக்கியாவுக்குத் தெரியவில்லை. தமிழை மலங்க மலங்க பார்த்தபடி இலக்கியா நின்று இருக்க… “இனிமே நான் சொல்லாம இந்த வீட்டை விட்டு காலை வெளியே எடுத்து வைக்கவே கூடாது. இப்படி மீறி இந்த வீட்டை விட்டுவிட்டு நீ வெளியே போகலாம் என்று நினைச்ச… உன்னை பார்த்த இடத்திலேயே கொன்னு போட்டுடுவேன்” என்று மிரட்டினான்.

இலக்கியா கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக வழிந்தது. தனக்கு இப்படி ஒரு நிலை வர வேண்டுமா என்று தன்னை நொந்து கொண்டு தமிழை வலி நிறைந்த கண்களோடு பார்த்தாள். தான் இனி இந்த வீட்டுக்குள் சிறை கைதி போல் தான் இருக்க வேண்டுமா? இத்தனை நாள் என் தாய் மாமன் பிடியில் தானும் தன் அம்மாவும் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தோம். அவரிடமிருந்து இப்போது இவனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன். நல்லவேளை இவனிடம் என் அம்மாவைப் பற்றி நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் இந்த நேரம் அவரையும் என்னை போலத்தான் வீட்டிலேயே சிறை வைத்து அவரை காரணம் காட்டி என்னை மிரட்டி இருப்பான் என்று இலக்கியா நினைத்துக்கொண்டாள்.

அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த தமிழுக்கு ஏனோ அவளை அதற்கு மேல் மிரட்ட மனம் வரவில்லை. அவள் கழுத்தில் இருந்து தன் கையை எடுத்தவன். “உன்னை சும்மா ஒன்னும் நான் இங்கே விலைக்கு வாங்கி அழைத்து வரவில்லை. என்னைப் பார்த்துக் கொள்ள எனக்கு வேண்டியதை செய்வதற்காகத்தான் உன்னை இங்கே கூட்டி வந்திருக்கிறேன். எனக்கு என்ன வேண்டும் என்றாலும் இனிமேல் நீ தான் செய்ய வேண்டும். நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வது மட்டும்தான் உனக்கு இங்கே வேலை” என்றவன்.

“நான் சொன்னதெல்லாம் உனக்கு புரியும் என்று நினைக்கிறேன். இனிமேலும் தேவை இல்லாம இந்த வீட்டை விட்டுப் போற வேலையை வச்சுக்காத. அதேபோல எனக்கு என்ன தேவையோ அதை பார்த்துச் செய்ய வேண்டியது உன்னோட முழு பொறுப்பு. உனக்கு என்ன தேவையோ அதை நான் பார்த்துக்கொள்வேன்” என்றவன். “உனக்கு சமைக்க தெரியுமா” என்று கேட்டான்.

இலக்கியா இல்லை என்று தலையை எடுபடமாகப் பயந்து கொண்டே ஆட்ட… அவளைக் குமுறும் சுருங்கப் பார்த்தவன் “நிஜமாவே உனக்கு சமையல் செய்ய தெரியாதா?” என்று கேட்டான். “கொஞ்சமா சமையல் செய்யத் தெரியும்” என்றால். “கொஞ்சமா?” என்று மேலும் கீழும் பார்த்தவன் “என்ன செய்ய தெரியும்” என்று கேட்டான். “டீ போடத் தெரியும், நூடுல்ஸ் செய்யத் தெரியும்” என்றால். “இது கொஞ்சமா உனக்கு” என்றான். “நீங்க தானே எனக்கு என்ன செய்ய தெரியும்னு கேட்டீங்க…. எனக்கு என்ன செய்ய தெரியுமோ அதைத்தானே செய்ய முடியும்னு சொல்ல முடியும்” என்றால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

“சரி எனக்கு ரொம்பத் தலை வலிக்குது போய் டீ போட்டுட்டு வா” என்றான். “நானா” என்று இலக்கியா அதிர்ச்சியாக அவனிடம் கேட்க.. “உனக்கு டீ மட்டும் தானே போடத் தெரியும்னு சொன்ன போ அதை போய் போட்டு எடுத்துட்டு வா. நான் கேட்கும் போதெல்லாம் இனிமேல் நீ தான் எனக்கு டீ போட்டு எடுத்துட்டு வரணும்” என்றான். “சரி” என்று நம்பி பார்த்துப் பயந்து தலையாட்டி எப்படி நிற்க.. “என்ன என்னை பாத்துட்டு இருக்க… போ… போய் சீக்கிரம் டீ போட்டு எடுத்துட்டு வா…” என்று அவன் கத்த.

அடுத்த கணம் இலக்கியா அந்த அறையை விட்டு வேகமாக வெளியே ஓடி வந்தவள் டைனிங் ஹாலிற்கு வந்து கிச்சன் எங்கே என்று பார்த்தாள். எப்படியோ டைனிங் ஹாலிற்கு அருகில் கிச்சன் இருக்கும் என்று வந்தவள் அங்கேயே நிற்க… அவளைப் பார்த்ததும் அங்கிருந்த சமையல் ஆள் அவளிடம் வந்து மரியாதையாக “மேடம் என்ன வேணும்” என்று கேட்க. “டீ… டீ… போடணும்” என்றால் இலக்கியா. “ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் இப்போ டீ போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்” என்று அந்த வேலையாள் சமையல் கட்டை நோக்கிச் செல்லப் போக.. “இல்ல இல்ல வேண்டாம் அவர் என்னை டீ போட்டு எடுத்து வரச் சொன்னாரு. நானே போய் போட்டுக்குறேன். எனக்கு பொருள் எல்லாம் எங்கே வச்சிருக்கீங்கன்னு சொன்னா மட்டும் போதும்” என்று இலக்கியா சொல்ல.

அவர் அவளிடம் வேறு எதுவும் மறுத்துப் பேசாமல் சரி என்று விட்டு சமையல் அறையை நோக்கி வேலையாள் செல்ல அவர் பின்னால் இலக்கியா சென்றாள். உள்ளே வந்த அவர் டீ போடுவதற்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்துவிட்டு அங்கேயே நிற்க. “இன்னும் இங்கேயே நிற்குறீங்க அதான் எல்லாம் எடுத்துக் கொடுத்துட்டீங்களே நானே டீ போட்டுக்குறேன் நீங்க போங்க” என்றால். “மேடம் நான் வேணா நீங்க டீ போட உதவி பண்ணட்டுமா” என்று கேட்டார் அந்த வேலையாள். இவறையே நீ கொடுத்த வர சொல்லி நான் போட்டேன்னு கொண்டு போய் நீ கொடுத்துடலாமா என்று நினைத்தாள். பிறகு “வேண்டாம்….வேண்டாம்… அது தெரிஞ்சா அதுக்கும் எதுவும் கத்துவான் நம்மளே போட்டுக் கொண்டு போய் கொடுத்திடுவோம்” என்று நினைத்தவள். “இல்ல நீங்க போங்க நானே போட்டுக்குறேன்” என்று சொல்லி இலக்கியா அவரை வெளியே போகச் சொன்னாள். அவர் சென்றதும் அடுப்பை பற்ற வைத்தவள் அதில் பாலை வைத்து டீ தூள் போட்டு டீ கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கியவள் வடிகட்டி சர்க்கரை போட்டு எடுத்துக் கொண்டு தமிழின் அறை நோக்கிச் சென்றாள்.

இலக்கியா தமிழ் இருந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே வர… தமிழ் இலக்கியா சென்றதும் குளிப்பதற்காக தன் உடையைக் கழட்டி விட்டு வெறும் உள்ளாடையோடு அவளுக்கு முதுகை காட்டிக் கொண்டு நின்று இருந்தான். அவனை இப்படி எதிர்பார்க்காமல் இலக்கியா அவன் அறைக்குள் வந்துவிட… தமிழ் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்தவள் அப்படியே உறைந்து போய் நின்றாள். உடையைக் கழட்டிய தமிழ் தன் உள்ளாடையையும் கழட்டப் போக… அவன் எங்கே அணிந்திருந்த உள்ளாடையையும் கழட்டி விட்டு தன் முன் நிர்வாணமாக நின்று. விடுவானோ என்ற பயத்தில் இலக்கியா பதறி “ஐயோ….” என்று அலறிக் கொண்டே அவனைப் பார்க்காமல் திரும்பிக் கொள்ள…

இலக்கியாவின் சத்தம் கேட்டு தனக்குப் பின்னால் திரும்பி நின்று இருந்தவளைப் பார்த்தவன். “ஒரு டீ போட்டு எடுத்துட்டு வர இவ்ளோ நேரமா” என்று. சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்தான். இலக்கியாவுக்கு அவனை வெறும் உள்ளாடையோடு பார்த்ததில் இருந்து அவள் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. அவள் பதட்டத்துடன் தமிழை திரும்பிப் பார்க்காமல் நின்று இருக்க… அவள் பின்னால் வந்து நின்ற தமிழ் இலக்கியாவின் பின்னால் இருந்து கையை முன்னாள் நீட்டி அவள் கையில் வைத்து இருந்த டீயை எடுத்தவன். “எதுக்காக இப்போ கத்தினே” என்றான்.

இலக்கியா “என்ன இவன் இப்படி கேள்வி கேக்குறான்” என்று நினைத்துக் கொண்டு வழக்கமாக அமைதியாக இருக்க… “எப்பவும் ரெண்டு மூணு தடவை கேள்வி கேட்ட பிறகு தான் உன்கிட்டே இருந்து பதில் வருமா?” என்றவன். “ஒரு தரம் கேட்டதும் கேட்ட கேள்விக்கு. பதில் வரணும்” என்று சொல்லிக் கொண்டே சென்று டீயை மேஜையில் வைத்துவிட்டு அங்கிருந்த டவலை எடுத்து தன் இடுப்பை சுற்றிக் கொண்டு டீயை எடுத்து பெட்டில் அமர்ந்தான்.

இலக்கியா இன்னும் தமிழ் இருக்கும் திரும்பியும் பார்க்காமல் அப்படியே நின்று இருக்க… “ஏய் உன்னைத்தான் இந்த பக்கம் திரும்பு” என்றான். அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள். “ஒரு பொண்ணு முன்னாடி இப்படி வெறும் உள்ளாடையோட நின்னுட்டு என்னை திரும்பி பார்க்க சொல்றானே. இவனுக்குக் கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா?” என்று நினைத்தவள் . “என்ன பார்க்க முடியாது” என்று தலையை இடவலமாக ஆட்டினாள். “ஏன் இந்த பக்கம் திரும்பினா என்ன” என்று கேட்டான். “நீ… நீங்க… வெறும் உள்ளாட மட்டும் தான் போட்டு இருக்கீங்க….வேற எதுவும் போடலயே. அதையும் இப்போ கழட்ட தானே பார்த்தீங்க அதுக்குள்ள தான் நான் சத்தம் போட்டு திரும்பிட்டேனே” என்றால் இலக்கியா.

“அதனால்தான் நீ என்ன பார்த்து சத்தம் போட்டு திரும்பின டா” என்று நினைத்த தமிழ். தான் இடுப்பில் டவலை கட்டி இருப்பதை அவள் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவன். “நான் இப்போ அதுவும் போடல சும்மாதான் இருக்கேன்” வேண்டுமென்றே அவளைச் சீண்டியவன். “இப்போ நீ இந்த பக்கம் திரும்பப் போறியா இல்லையா” என்று கேட்டான்.

அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் கண்களை அகலமாக விரித்த இலக்கியா “என்னது துணியே இல்லாமல் இருக்கானா!!!! உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாம என்ன திரும்பி அவன பாக்க சொல்றானே வெட்கம் கேட்டவன்” என்று தமிழை தன் மனதிற்குள் திட்டிக் கொள்ள. “ஏய்…இலக்கியா உன்னைத்தான் என்ன திரும்பி பாருன்னு சொன்னேன்” என்றான். “அடப்பாவி இவனுக்குத்தான் வெட்கம் இல்லனா எனக்கும் வெட்கம் இல்லன்னு நினைச்சுட்டானா. ஒரு சின்ன பொண்ண இப்படி அழைச்சிட்டு வந்து வச்சு பழி வாங்குறானே…” என்று நினைத்தவள் மீண்டும் தன்னைத் தலையை எடுபடமாக ஆட்டி திரும்ப முடியாது என்று சொன்னாள். “ஓஹோ நான் திரும்ப மாட்டியா” என்றவன். “நீயும், நானும் இனிமேல் இந்த ரூம்ல தான் இருக்க போறோம். நான் இப்படித்தான் அடிக்கடி இருப்பேன். நீ இப்படி திரும்ப மாட்டேன் என்று சொன்னால். எப்படி நீ என் கூட ஒரே ரூம்ல தங்கப் போறேன்” என்று கேட்டேன் தமிழ்.

“என்னது இவன் கூட ஒரே ரூம்ல இருக்கணுமா!!!” என்று அதிர்ந்தவள். “எனக்கு வேற ரூம் குடுத்துடுங்க நான் அங்கேயே இருந்துக்கிறேன் எதுவும் வேணும்னா என்ன கூப்பிடுங்க உங்களுக்கு வேணுங்கறத நான் வந்து செஞ்சு தரேன்” என்றால் இலக்கியா திரும்பாமல். “என் வீடு நான் யாரை எங்க இருக்க சொல்றேனோ அங்கதான் இருக்கணும் நீ என்னோட ரூம்ல தான் இருக்கணும்” என்றேன் தமிழ். அதற்கு எந்தப் பதிலும் பேசாமல் அப்படியே நிற்க “இப்ப நீ திரும்பப் போறியா? இல்ல நான் உன் முன்னாடி வரட்டுமா?” என்று கேட்டான்.

“ஐயோ படுபாவி வந்த அன்னைக்கே என்னை இப்படி பாடா படுத்துற நீ” என்று அவனைத் தன் மனதிற்குள் கண்டபடி சென்சார் வார்த்தைகளால் திட்டியவள். “நான் திரும்ப மாட்டேன் நீங்க முதல்ல டிரஸ் போடுங்க அதுக்கப்புறம் திரும்புறேன்” என்றால் இலக்கியா. “என்னை அதிகாரம் பண்ண உனக்கு என்ன உரிமை இருக்கு. இது என்னோட ரூம் நான் எப்படி வேணா இருப்பேன். என்னை இப்படி இரு… அப்படி இருன்னு சொல்ற வேலையெல்லாம் நீ வச்சுக்காத” என்றவன் கையில் இருந்த டீயை கீழே வைத்து விட்டு எழுந்து அவள் அருகில் வர..

தமிழ் தன் அருகில் வரும் காலடி ஓசை கேட்டதும் “ஐயோ!!! கடவுளே இது என்ன எனக்கு வந்த சோதனை” என்று நினைத்தவள். தமிழ் தனக்கு மிகவும் அருகில் வருகிறான் என்று தெரிந்ததும். இனியும் இவன் சொல்வதைக் கேட்டு இந்த அறைக்குள் நிற்பது சரியாக இருக்காது என்று நினைத்தால் தமிழ் அவள் அருகில் நெருங்கி வரவும். இந்த அறையை விட்டுச் சென்று விட வேண்டும் என்று இலக்கியா வாசலை நோக்கி ஓட… ஆனால் அவள் வாசல் பக்கம் செல்லாமல் தான் இருந்த இடத்திலேயே இருப்பதைப் போல உணர்ந்தவள். கீழே குனிந்து பார்க்க தன் கால் தரையில் இல்லாமல் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. அதைவிட அவள் காலுக்கு மிக அருகில் தமிழின் கால்கள் இருந்தது. இலக்கியா குனிந்து பார்த்ததில் அவன் கால் முட்டி வரை அவளுக்குத் தெரிய… தமிழ் தான் அவள் பின்னால் ஆடை இல்லாமல் நின்றிருக்கிறான் என்று நினைத்தவள். தமிழை திரும்பியும் பார்க்காமல் “என்ன விடுங்க ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.

அவள் எப்படியும் வெளியே ஓடி விடுவாள் என்பதை முன்னரே கணித்த தமிழ் அவள் ஆடையைப் பிடித்து ஒற்றைக் கையால் அப்படியே மேலே தூக்கி இருந்தவன். “இப்போ எதுக்கு என்னோட பெர்மிஷன் இல்லாம என் ரூமில் இருந்து வெளியே ஓட பார்த்தே” என்றான். “இவன் என்ன லூசா??? இப்படி கொஞ்சம் கூட அறிவே இல்லாம என்னை திரும்பு… திரும்புன்னு உயிரை வாங்குறான்” என்று நினைத்தவள். “இப்படி உடம்புல ஒட்டு துணி கூட இல்லாம என்னை திரும்பச் சொல்றிங்களே இது உங்களுக்கே நல்லா இருக்கா” என்றாள் இலக்கியா. “என் ரூமில் என் இஷ்டத்துக்குத் தான் நான் இருப்பேன்.” என்றவன் தன் கையில் தொங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். அந்தரத்தில் காலை ஆட்டிக் கொண்டிருந்தவளைப் பார்ப்பதற்குப் புலியிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள ஓடும் முயலைக் காதைப் பிடித்து மேலே தூக்கினால் எப்படி கையையும் காலையும் ஆட்டி தப்பிக்க ஓடுமோ அது போல இருந்தது.

“உங்க ரூம் உங்க இஷ்டத்துக்கு இருக்கலாம். ஆனா நானும் இப்போ உங்க ரூம்ல தானே இருக்கேன். நீங்க எப்படி வேணும்னாலும் உங்க ரூம்ல இருக்கலாம். ஆனா பாக்குறது என்னோட கண்ணு இல்ல…” என்றால். அவள் பேசியதைக் கேட்டவன் மெல்லச் சிரித்தவன். தன் கைகளைக் கீழே கொண்டு வந்து இலக்கியாவை இறக்கி விட…. அவன் கீழே இறக்கி விட்டதும் சிட்டாகப் பறந்து வெளியே ஓடிவிட்டாள்.

அவள் செல்லும் வேகத்தைப் பார்த்துச் சிரித்தவன் திரும்பி குளிக்கச் செல்ல. போனவன். இலக்கியா போட்டுக்கொண்டு வந்த டீ மேஜையில் இருந்ததைப் பார்த்தவன் அவள் போட்டு வந்த டீ எப்படி இருக்கிறது என்று பார்க்க எடுத்து ஒரு சிப் இலக்கியா போட்டு வந்த டீயைப் பருகினான். அவ்வளவுதான் வேகமாக கையில் இருந்த டீயைக் கொண்டு போய் பாத்ரூமில் இருந்த. வாஷ் பேசினில் ஊற்றியவன். “டீயா போட்டு இருக்கா…. அப்பப்பா…. பாயசம் வெச்சிட்டு வந்திருக்கா? இனிமேல்.இவளை சமையல் அறை பக்கமே அனுப்பக் கூடாது” என்று முடிவு எடுத்தான்.

You may also like

1 comment

Thirunavukkarasu Subramaniyan July 14, 2025 - 3:20 am

சூப்பர் சூப்பர்

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured