EPISODE 19
அனுவைக் காணாமல் வீடு முழுக்கத் தேடிய இலக்கியா, ஹாலுக்கு வந்தாள். அங்கே தனக்காக நீண்ட நேரமாக வேலை செய்வதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்த தமிழைப் கண்டுகொள்ளாமல், அவனைக் கடந்து சென்றாள்.
அதைக் கண்ட தமிழுக்குக் கோபம் வர, “இவளுக்கு என்ன துணிச்சல் இருந்தால் என்னை பார்க்காமல் அலட்சியப்படுத்திவிட்டுப் போவாள்?” என்று அவள்மீது கோபம் வர, இலக்கியாவை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அவள் பின்னாலேயே சென்றான் தமிழ்.
தன் பின்னால் திருட்டுப் பூனையாகப் பால் குடிப்பதற்கு வந்துகொண்டிருப்பதுகூடத் தெரியாமல், அனுவைத் தேடிக்கொண்டு இலக்கியா ஒவ்வொரு அறையாக அனு இருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டு போனாள். அப்படியே சென்றவள், தமிழின் ஸ்டடி ரூம் வர, அவன் அறை முன்பு வந்து தயக்கமாய் நின்றாள். “இங்கே அனு இருக்கிறாளா? இல்லையா? பார்க்கலாமா? வேண்டாமா?”என்று தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தாள்.
அவளுக்குத் தெரியாமல் பின்னால் சென்று கொண்டிருந்த தமிழ், தன் அறை வந்ததும், அவள் உள்ளே செல்லத் தயங்கியபடி நின்றிருப்பதையும் பார்த்தான். அப்படியே அவளுக்குத் தெரியாமல் அங்கே இருந்த நாயக்கர் மஹால் தூண் போல உயர்ந்து இருக்கும் அவன் வீட்டில் இருந்த ஒரு தூணின் பின்னால் மறைந்துகொண்டு, அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
இலக்கியா தமிழின் அறைக் கதவில் கை வைத்து உள்ளே செல்ல முற்படுவதும், “பின் வேண்டாம்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தலையை ஆட்டுவதுமாக நின்றுகொண்டிருந்தாள்.
பின், “காலையிலிருந்துதான் அந்தப் பைத்தியத்தைக் காணோமே, அவன் எங்கே வந்திருக்கப்போகிறான்?” என்றவள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவன் அறைக் கதவை மெல்லத் திறந்து, உள்ளே தலையை மட்டும் நீட்டி, அவன் அறையில் யாரும் இருக்கிறார்களா என்று எட்டிப்பார்த்தாள்.
அவள் உள்ளே தலையை நீட்டவும், தூணுக்குப் பின்னால் மறைந்துகொண்டிருந்த தமிழ், “என்னை பைத்தியக்காரன்னா சொன்னே?” என்று சொல்லிக்கொண்டே அவள் பின்னால் வந்தவன்,
இலக்கியாவின் இடையைப் பிடித்து அப்படியே அவளைத் தன் அறைக்குள் தள்ளிக்கொண்டு போய்க் கதவடைத்தான். அவளை இடையோடு பிடித்து, நிறுத்தி, அவளைச் சுவரோடு சேர்த்து நிறுத்தியவன், அவளைப் பார்த்து, “யாரைப் பார்த்து டி பைத்தியக்காரன்னு சொன்னே?” என்று கண்கள் இரண்டிலும் கோவத்தை நிறைத்துக்கொண்டு கேட்டான்.
அவன் தன்னைத் திடீரென்று தள்ளிக்கொண்டு உள்ளே வந்து இப்படிச் சுவரில் அழுத்தி நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்கவும், “என்ன?” என்று புரியாமல் விழித்தபடி இலக்கியா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பயந்த விழிகளோடு அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் கண்களில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தவன், கோவமான தன் முகம் அவள் கருவிழிகளில் பிரதிபலித்திட,
அவள் கண்களில் தெரிந்த பயத்திற்குக் காரணமான தன் முகத்தைப் பார்த்தவனுக்கு, ‘தான் இவ்வளவு கொடூரமாகவா தெரிகிறோம்?’ என்று நினைத்தவன்,
அவளை இறுகப் பிடித்திருந்த தன் பிடியைத் தளர்த்தினான். “சொல்லுடி, என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு?” என்று கோபம் தணிந்த குரலில் கேட்டான்.
“நான் ஒருத்தன் இருக்குறது தெரியாம, என்னைப் பார்த்தும் பார்க்காமப் போறியா நீ? உனக்கு எவ்வளவு திமிரு இருந்தால் என்னைக் கண்டுகாம போவ?” என்றான் கடுப்பாக.
அவன் சொன்னதைக் கேட்டவள், “அப்போ இவன் இங்கேதான் இருந்தானா? எனக்குத்தான் தெரியலையா? இல்லை நான் கவனிக்கலையா?” என்று யோசித்தபடியே அவனைப் பார்த்து, “நான் ஒன்னும் வேணும்னே உங்களைப் பார்க்காம வரலை… உண்மையாவே நான் உங்களை கவனிக்கல” என்றாள்.
அவள் சொல்வதை நம்பாமல், அவளையே உற்றுப் பார்த்தான் தமிழ். தமிழின் பார்வையைத் தாங்க முடியாமல் இலக்கியா தலையைக் குனிந்துகொள்ள, “ஏய்…” என்று அழைத்தான்.
இலக்கியா தலையைக் குனிந்தபடியே, “என் பேரு ஏய் இல்லை…” என்றாள்.
“ஓஹோ… அப்போ என் பேரும் பைத்தியக்காரன் இல்லை” என்று சொல்லிக்கொண்டே அவளை நெருங்கினான்.
“அது… அது ஏதோ உங்க மேல உள்ள கோபத்துல தெரியாம சொல்லிட்டேன்” என்றாள்.
“என் மேல உள்ள கோபமா?” என்றவன், “அப்படி என்ன மேடம்க்கு என் மேல கோபம்?” என்று கேட்டான் தமிழ்.
“அது… வந்து…” என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள், சட்டென்று தன் தலையைக் குனிந்துகொண்டு “ஒன்னுமில்லை” என்று தலையை இடவலம் ஆட்டினாள்.
“ஒன்னும் இல்லாமதான் என் மேல கோபமா இருக்கியா?”என்றான் தமிழ் தணிந்த குரலில்.
அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த இலக்கியா சற்று நிம்மதி அடைந்தாள். “நீங்க நேத்து என்கிட்டே கோபமா நடந்துகிட்டீங்க… இல்ல?” என்றாள்.
“அப்படியா?! எப்போ நான் உன் மேல கோவப்பட்டேன் எனக்குத் தெரியலையே?” என்றான்.
“அடப்பாவி, நேத்து கடையில என் கிட்டே எப்படி நடந்துகிட்டான். இப்போ எதுவும் தெரியாத மாதிரி பேசுறான் பாரு!” என்று நினைத்தவள், “நேத்து… நீ… நீங்க…. என்னை டிரஸ் ஷாப்ல…” என்று வார்த்தைகளை பாதி பாதியாகப் பேசியபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏன் உனக்கு எப்பவுமே முழுசா பேச வராதா? பாதி வார்த்தைதான் வருது மீதி எங்கே வெச்சிருக்க?” என்றபடி அருகில் வந்தவன், அவள் உதட்டை தன் விரலால் தடவியபடி இலக்கியாவைப் பார்க்க,
அவன் விரல் அவள் உதட்டைத் தீண்டியதும் இலக்கியாவின் உடலுக்குள் மின்சாரம் பாய்ந்ததுபோல உணர்ந்தாள்.
“கேட்டதுக்குப் பதில் சொல்லு, இப்படி அமைதியா இருந்து என்ன டென்ஷன் பண்ணாத, சொல்லு” என்றவன், இலக்கியாவின் கீழ் உதட்டை தன் விரல்களால் பிடித்து நசுக்கியபடி கேட்டான்.
அவன் அவள் உதட்டை அழுத்திப் பிடித்ததும், வலியில் லேசாக முகம் சுருக்கிய இலக்கியா அவனைப் பார்த்து, “நேத்து நீங்க என்கிட்டே கடையில நடந்துகிட்டது எனக்குப் பிடிக்கலை…” என்றாள்.
“உன்கிட்ட நான் எப்படி நடந்துகிட்டேன்?” என்றான் தமிழ்.
“ஏன் நீங்க என்கிட்டே எப்படி நடந்துகிட்டீங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? என்கிட்டே திருப்பிக் கேட்கிறீங்க!” என்றாள் இலக்கியா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
தன்னிடம் பயமில்லாமல் பேசுபவளைப் பார்த்த தமிழ், அவள் உதட்டைப் பிடித்திருந்த கைகளை விட்டு அப்படியே தன் கையை கீழே கொண்டு வந்தவன், இலக்கியாவின் இடையில் கை வைத்து அவளை அப்படியே தூக்க, தன் கண்களை அகல விரித்தபடி அதிர்ச்சியில் இலக்கியா தமிழின் முகத்தைப் பார்க்க, தமிழ் அவளின் கண்கள் இரண்டும் கோலிக்குண்டு போலப் பெரிதாவதை ரசித்துக்கொண்டு, அவளைத் தூக்கிக்கொண்டுபோய் அங்கிருந்த ஸ்டடி டேபிள் மீது அமர வைத்தான்.
அப்போது தமிழின் உயரத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு டேபிளில் அமர வைத்தவன், “உன்கிட்ட எப்படி வேணாலும் நடந்துகிற உரிமை எனக்கு இருக்கு. அது நீ காண்ட்ராக்ட்ல கையெழுத்துப் போட்டதனால் மட்டும் கிடையாது. உனக்கும் எனக்கும் காண்ட்ராக்ட்டே இல்லை என்றாலும், நான் உன்னை விலைக்கு வாங்காமலே இருந்திருந்தாலும், உன்னிடம் நான் நினைத்ததுபோல எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளும் உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு. உன்னை நான் முதன்முதலில் அந்த ஏலத்தில் பார்க்காமல் வேறு எங்கு பார்த்திருந்தாலும், அப்பொழுதே உன்னைக் கடத்திக்கொண்டு வந்து என்னோடு வைத்திருப்பேன்” என்றான் தமிழ்.
அவன் சொன்னதை நம்ப முடியாமல் இலக்கியா அவனையே பார்க்க, “
“என்ன பார்க்குற? எந்த உரிமையில் நான் இப்படி எல்லாம் பேசுறேன் என்றுதானே யோசிக்கிற?” என்றவன், அவள் கழுத்தைப் பிடித்து அவள் முகத்தைத் தன் அருகில் கொண்டு வந்த தமிழ்,
“நீயும் உன் உடம்பும் எனக்கு மட்டும்தான் சொந்தம். என்னைத் தவிர இதைத் தீண்டவோ, துன்புறுத்தவோ வேறு யாருக்குமே கிடையாது. ஏன், உனக்குக்கூட உன்னிடத்தில் உரிமை இல்லை. இது எனக்குச் சொந்தமானது, புரியுதா?” என்றவன், குழப்பமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்த இலக்கியாவின் விழிகளை ரசித்தவாறு, புருவத்தில் இருந்த அந்தச் சிறிய மச்சத்தைத் தன் விரலால் தீண்டியவன், பின் தன் விரலை அவள் புருவத்திலிருந்து அவள் உதட்டை நோக்கி கீழே கொண்டு வந்தவன், “இது எனக்குச் சொந்தமானது” என்று சொல்லிக்கொண்டு குனிந்து அவள் இதழில் முத்தம் வைத்தான்.
“தன்னிடம் ஒரு நேரம் ராட்சசன் போல நடந்துகொள்கிறான். அடுத்த நொடியே மிகவும் நல்லவன் போலத் தன்னை காட்டிக்கொள்கிறான். இவனை எந்த ரகத்தில் சேர்ப்பது?” என்று புரியாமல் இலக்கியா அவனைத் தன்னிடமிருந்து விலக்கவும் முடியாமல், தன்னுடன் சேர்த்துக்கொள்ளவும் முடியாமல், இருதலைக் கொல்லியாக அவன் முத்தத்தில் கரைந்துகொண்டிருந்தாள்.
அவள் கால்களுக்கு இடையில் தன் உடலை நுழைத்துக்கொண்ட தமிழ், அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தபடி தன் மொத்த எடையையும் அவள் மேல் போட்டு, அவள் இதழில் கண்கள் மூடி முத்தம் வைத்துக்கொண்டிருக்க,
இலக்கியா ஒரு புறம் அவன் பாரம் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அவன் இதழ் தந்த முத்தத்தை விளக்க முடியாமல் தடுமாறிக்கொண்டே கண்கள் மூடி அவனிடம் தன் இதழை ஒப்படைத்துவிட்டு அமர்ந்திருந்தவள்,
அப்படியே அவன் முத்தத்தில் கரைந்துபோனாள். தமிழ் என்னதான் அவளிடம் முரட்டுத்தனமாக சில சமயங்களில் நடந்துகொண்டாலும், அவளிடம் நெருங்கும்போதெல்லாம் அவன் மனம் அவளிடம் சரணடைவதை அவனால் உணரத்தான் முடிந்தது.
இருவரும் தங்களை மறந்து முத்தம் கொடுத்துக்கொண்டிருக்க, இப்போது தமிழின் பக்கத்திலிருந்து அவன் மொபைல் சினுங்கியது. அதில் சுயம்பெற்ற இலக்கியா பட்டெனக் கண்கள் திறந்து அவனைத் தன்னிடமிருந்து விலக்கிவிட்டு, அமர்ந்த நிலையிலேயே தன் உடலை பாதியாகப் பின்னால் நகர்த்த,
சட்டென்று தன்னிடமிருந்து விலகிய இலக்கியாவைக் கோபமாகப் பார்த்த தமிழ் மீண்டும் அவள் இடையைப் பிடித்து தன்னோடு சேர்த்து இழுத்தவன், பாதியாக வளைந்திருந்த அவள் உடலை மீண்டும் தன் உடலோடு சேர்த்து இறுக்கிப் பிடித்தவன், “எவ்வளவு தைரியம் இருந்தா நான் முத்தம் கொடுத்துட்டு இருக்கும்போது என்னத் தள்ளி விட்டுட்டு நீ பின்னால் போவ?” என்று அவள் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தை வைத்துக்கொண்டு உஷ்ணக் காற்றை வெளியிட்டவாறே தமிழ் கோபமாக கேட்க,
அவன் முகத்தை மிக அருகில் பார்த்த பயந்தபடியே இலக்கியா, “நான்… நான் ஒன்னும் செய்யலை. உங்க போன்…” என்று இலக்கியா சொல்ல,
அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தவனுக்கு அப்போதுதான் அவன் பாக்கெட்டில் இருந்து போன் அலறிக்கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.
அவளை ஒரு கையால் தன்னோடு சேர்த்து அணைத்துப் பிடித்தபடியே, மறு கையால் போனை எடுத்து வந்திருந்த அழைப்பைப் பார்க்க, அதைப் பார்த்ததும் சட்டென்று திரும்பிப் பார்த்தவன், அவளை விட்டு விலகிப் போனை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.
இவ்வளவு நேரம் அவன் அருகாமையில் இருந்த இலக்கியா, திடீரென அவன் தன்னை விட்டு விலகிச் செல்லவும் அவள் மனம் ஏனோ அவனுடன் செல்ல விரும்பியது. தன்னைத்தானே நொந்துகொண்டு இலக்கியா, “இதெல்லாம் உனக்கு தேவைதானா?” என்று அவளிடம் கேள்வி கேட்டது.
“தேவையா? தேவையில்லையா? என்பது எல்லாம் யோசிக்கும் நிலையில் நான் இப்போது இல்லை. நான் அவனுக்குச் சொந்தமானவள். அவன் என்னை என்ன செய்தாலும் நான் அதற்கு எந்த மறுப்பும் சொல்ல முடியாத நிலையில் இப்போது இருக்கிறேன்” என்று தன் மனதிடம் பதில் கூறினாள் இலக்கியா.
“ஆனால், அவன் விருப்பத்திற்கு உன்னிடம் வருவதுபோலத் தெரியவில்லையே? நீதான் அவனிடம் விரும்பிச் செல்வதுபோல அல்லவா நீ நடந்துகொள்வது இருக்கிறது?” என்றது அவள் மனம்.
“நான் ஒன்றும் அவனைத் தேடிச் செல்லவில்லை. அவன் என் பின்னால் வந்தான்” என்றாள் இலக்கியா.
“அவன் உன் பின்னால் வந்ததைப்பற்றி நான் சொல்லவில்லை. அவன் முத்தம் கொடுக்கும்போது உன்னையும் அறியாமல் நீ அவனுக்கு இசைந்து போகிறாய். அது உனக்குத் தெரிகிறதா? இல்லையா?” என்று அவள் மனம்.
“அவன் முத்தம் கொடுக்கும்போது என்னை அறியாமல் சென்றது நான் இல்லை. நீதான்! நீதான் வெட்கமில்லாமல் இடம் கொடுத்தாய்!” என்றாள் அவள் மனத்து மனதையே குற்றம் சாட்டி.
“என்ன செய்வது? எனக்கு அவனைப் பிடித்திருக்கிறதே! அவன் நெருக்கமும்… அவன் முத்தமும்… அவன் கோபமும்… அவன் அக்கறையும்… இப்படி எல்லாமே எனக்கு அவனிடம் பிடித்திருக்கிறது” என்றது அவள் மனம்.
தன் மனம் சொன்னதை நம்ப முடியாமல் இலக்கியா அதிர்ந்தாள். “நீ என்ன பேசுறன்னு புரிஞ்சுதான் பேசுறியா?” என்றாள்.
“! புரிஞ்சுதான் சொல்றேன். எனக்கு அவனை ரொம்பப் பிடித்திருக்கிறது” என்றது அவள் மனம்.
தன் மனம் சொல்வதை ஏற்க முடியாமல் தவித்தாள். ஏனென்றால் அவள் வேறு, அவள் மனம் வேறு இல்லையே… அவள் நினைப்பதைத் தான் இலக்கியாவின் மனம் சொல்கிறது… இலக்கியாவின் மனம் சொல்வதைத் தான் அவள் நினைக்கிறாள்.
தான் எந்த மனநிலையில் இப்போது இருக்கிறோம் என்ற குழப்பத்திலேயே தமிழின் அறையை விட்டு இலக்கியா வெளியே வர, அப்போ நேரமாக அவளைக் காணாமல் தேடிக்கொண்டு வந்த அனு, தமிழின் அறைக்குள் இருந்து இலக்கியா வெளியே வருவதைப் பார்த்தவள், அவளிடம் வந்தாள்.
“இவ்வளவு நேரம் நீ இங்கதான் இருந்தியா? நான் உன்னை வீடு முழுக்கத் தேடிட்டேன்” என்றவள், “சரி வா… நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றாள் அனு, தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றாள்.
இங்கு வேறு ஒரு அறையில் இந்த போனை அட்டென்ட் செய்த தமிழ் மிகவும் சீரியஸாக, “நானாக அழைக்காமல் நீ எனக்குக் கால் செய்யக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனே, இப்போ எதுக்குக் கால் பண்ணின?” என்று கேட்டான் தமிழ்.
“என்ன டார்லிங் எப்படி கோபப்படுறீங்க? எனக்கு உங்ககிட்ட பேசணும்னு ஆசையா இருந்ததனால் தானே நான் இப்போ உங்களுக்குக் கால் பண்ணினேன்?” என்று போனில் மறுமுனையில் ஒரு பெண் மிகவும் குழைவாக வழிந்துகொண்டு தமிழிடம் பேசினாள்.
அவள் குரலைக் கேட்ட தமிழ் சற்று கோபம் தணிந்தவன், “சொல்லு ஸ்வீட்டி, எதுக்காக இப்போ கால் பண்ணின?”என்றான்.
“என்ன டார்லிங் இப்படி கேட்கிறீங்க? நீங்க மலேசியா போறதுக்கு முன்னாடி என்ன வந்து பார்த்துட்டுப் போனீங்க. அங்கிருந்து வந்ததுக்குப் பிறகு ஒரு போனும் இல்லை, ஆளையும் காணோம். உங்களைப் பார்த்து நான் கிட்டத்தட்ட ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு. சீக்கிரம் வா டார்லிங்! நீ இல்லாம என்னால இங்க தனியா இருக்க முடியல.. என் பெட் நீ இல்லாம ரொம்ப வெறுமையா இருக்கு… ஐ நீட் யூ டார்லிங்….” என்று மிகவும் கிறக்கமான குரலில் அந்தப் பெண் பேச, அவள் பேசியதைக் கேட்டு சற்றுச் சிரித்த தமிழ்.
“டோன்ட் வரி ஸ்வீட்டி.. இன்னும் ஒரு ஹால்ப் அன் ஹவர்ல நான் அங்க இருப்பேன்” என்றான் தமிழ்.
“ரியலி….” அந்தப் பெண் தமிழ் வருகிறான் என்று சொன்னதும் உற்சாகக் குரலில் அவளிடம் கேட்க, “ம்ம்ம்….” என்றவன்,
“ஓகே ஸ்வீட்டி, ரெடியா இரு நான் வந்துடுவேன்” என்றவன் தன் போனை கட் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இங்கு இலக்கியா, அவனை வெறுப்பதுபோல இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தவள், தன் மனமே தன்னிடம் அவனை விரும்புவதை சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல், தமிழின் பக்கம் தன் மனம் முழுவதும் சாய்ந்ததை நினைத்து குழப்பத்திலே இருக்க, ஆனால் அவள் மனதில் இந்த இரண்டு வாரங்களில் இடம் பிடித்ததுகூடத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணைத் தேடிச் சென்றான் தமிழ்..
