Episode-21
அவனுக்கு சளைத்தவள் இல்லை…
மலேசியாவில் தான் சந்தித்த டாக்ஸி டிரைவரின் உதவியுடன் இலக்கியாவின் இருப்பிடத்தை கண்டுபிடித்த கோமதி அந்த டிரைவரின் உதவியுடனே இந்தியா செல்வதற்கு பிளைட் ஏறினார்.
அவர் இந்தியா தரை இறங்கியதும் எங்கு செல்வது எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தார்.
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவர் அங்கே இருந்த ஒரு டாக்ஸி டிரைவரிடம் சென்று தன் கையில் இருந்த அட்ரஸை காட்டி இந்த இடம் எங்கு இருக்கிறது என்று தெரியுமா என்று கேட்டார்.
அவர் கொடுத்த அட்ரஸை வாங்கி பார்த்த அந்த டிரைவர் தன் எதிரே நின்று இருந்த பெண்ணை பார்த்தவர்.
ஏன் மா…உன்னை பார்த்தால் இந்த இடத்துக்கு போறவங்க மாதிரி தெரியலையே என்றார்.
ஏன் அப்படி சொல்றிங்க… அந்த இடத்துக்கு எல்லாம் நான் போக கூடாதா? என்று கேட்டார்.
இந்த இடத்துக்கு எல்லாம் நீங்க நினைச்சாலும் இல்ல நாங்க நினைத்தாலும் போக முடியாது அம்மா என்றால் அந்த டிரைவர்.
ஏன் என்று கோமதி புரியாமல் அந்த டிரைவரிடம் கேட்டார்.
அவரை மேலும் கீழும் பார்த்த அந்த டிரைவர் தன் எதிரே வான் முட்டும் அளவிற்கு மிகவும் உயரிய கட்டிடம் ஒன்று இருக்க பார்த்தவர் பின்புறம் திரும்பி தனக்கு எதிரே இருந்த அந்த கட்டிடத்தை காட்டி.
நீங்க கொடுத்த அட்ரஸ்க்கு சொந்தக்காரரோட கட்டிடம் தான் இது என்றார்.
இப்போ எங்கே போனா நான் தேடி வந்தவரை பார்க்க முடியுமா என்று ஆர்வமாக கோமதி அந்த டிரைவரிடம் கேட்க…
என்னம்மா நீங்க நான் சொல்றத முதல்ல முழுசா கேளுங்க என்றவர் இந்த கட்டிடம் அவங்களோடது தான் சொன்னேன் இது மட்டும் தான் அவங்களுதுன்னு சொன்னேனா?
இந்த மாதிரி இந்த சிட்டி ஃபுல்லா இல்ல… இந்த நாடு முழுக்க அவங்களுக்கு நிறைய இடத்துல பெரிய பெரிய கட்டிடம் இருக்கு அப்போ யோசிச்சுக்கோங்க அவங்க எவ்வளவு வசதியானவங்கன்னு.
இந்த ஒவ்வொரு கட்டிடமும் பல நூறு கோடி மதிப்புடையது. இவங்க எல்லாம் ரொம்ப பணக்காரங்க மா… அவங்க இருக்கிற ஏரியா பக்கம் கூட எங்களை எல்லாம் உள்ளே விட மாட்டாங்க.
அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறவங்களோட அட்ரஸை தம்மா துண்டு பேப்பர்ல எழுதிட்டு வந்து எங்களை அங்க கூட்டிட்டு போய் விட சொல்றீங்களே என்றார் கோமதியை பார்த்து.
அப்போ இவங்களை போய் என்னால பார்க்கவே முடியாதா தம்பி என் பொண்ணு இவங்க வீட்ல தான் இருக்கா தம்பி.
நான் அவளை போய் என் கூட அழைச்சிட்டு வரணும் அதுக்காகத்தான் கேட்கிறேன் எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க எனக்கு இந்த ஊர்ல வேற யாரையுமே தெரியாது என்று கோமதி அந்த டிரைவரிடம் கெஞ்சினார்.
என்னம்மா இப்படி சொல்றீங்க… உங்களுக்கு உதவுற அளவுக்கு எனக்கு யாரையும் தெரியாதே என்று பதில் கூற முடியாமல் நின்றிருந்தார்.
அவர் யோசனையோடு தனக்கு எதிரே இருந்த அந்த கட்டிடத்தை பார்த்துக் கொண்டு இருந்தவர்.
கோமதி இடம் திரும்பி அம்மா எனக்கு தெரிஞ்சு இதுக்கு உள்ளே போகணும்னா கூட உங்களை பார்த்தாலே யாரும் உள்ளே விட மாட்டாங்க என்றார்.
இவர் சொன்னதை கேட்டு கோமதி தன்னை ஒரு நிமிடம் குனிந்து பார்த்தவர்.
பழைய அழுக்கு புடவையும் கிழிந்துபோன பையும் ஊன்றுகோலையும் வைத்துக் கொண்டும் நின்றிருக்கும் தன்னை பார்த்தால் யார் தான் இவ்வளவு பெரிய இடத்திற்குள் விடுவார்கள் என்று அவரும் உணரத்தான் செய்தார்.
அவர் பார்ப்பதற்கு தனக்கே பாவமாகத்தான் இருந்தது இப்படி இருக்கும் தன்னை பார்த்தால். யார் தான் கேட்டதற்கு முன்வந்து உதவி செய்வார்கள் என்று நினைத்தவர்.
இந்த டாக்ஸி டிரைவரிடம் சரி இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை முதலில் ஒரு நல்ல துணிக்கடைக்கு கூட்டிட்டு போங்க என்றார்.
ஒரு சிறிய கடையில் கொண்டு வந்து காரை நிறுத்திய அந்த டிரைவர் உங்களிடம் கடையை காட்ட உள்ளே சென்று தனக்கு தேவையானதை வாங்கிவிட்டு வெளியே வந்தவர் காரில் ஏறி அமர…
டிரைவர் அடுத்து எங்கம்மா போறது என்று கோமதியிடம் கேட்டார்.
இந்த ஊர்ல என்ன போல வயசானவங்க பாதுகாப்பா தங்குவதற்கு ஏதாவது ஒரு நல்ல இடம் இருக்கா என்று கேட்டார்.
சற்று யோசித்த அந்த டிரைவர் இங்கே ஒரு காப்பகம் இருக்குமா ரொம்ப வருஷமா இருக்கு நம்பிக்கையானது என்று கூட சொல்லலாம் அங்கு வந்திருக்கிற உங்களை காசு பணத்திற்காக பார்க்காமல் நல்ல முறையில் தான் நடத்துகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கேன் என்று சொன்னால் அந்த டிரைவர்.
அப்போ சரி அப்போ என்னை அங்கேயே இறக்கி விட்டுடுங்க என்றார் கோமதி.
டாக்ஸி டிரைவர் சிறிது நேரத்தில் கோமதியை தான் சொன்ன காப்பகத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுவிட…
தனக்கென ஒரு குடும்பம் இருந்தும் தான் பெற்ற பிள்ளைகள் இருந்தும் யாருமே இல்லாத ஒரு அனாதை போல எப்படி காப்பகத்தில் வந்து தங்கும்படி தன் நிலைமை ஆகிவிட்டதே என்று நொந்து கொண்டே தயங்கியபடி அந்த காப்பகத்துக்குள் நுழைந்தார் கோமதி.
மிகவும் தயங்கியபடி உள்ளே வந்த கோமதியை பார்த்தவாறே அந்த வழியாக வந்த ஒரு பெண் அணுகி அம்மா உள்ளே வாங்க… ஏன் ரொம்ப தயங்கிட்டு வரீங்க என்று கோமதி இடம் சிரித்த முகமாக வந்து பேச..
தன் முன் சிரித்த முகமாக நின்றிருக்கும் அந்த பெண்ணை பார்த்த கோமதிக்கு தன் மனம் சற்று பாரம் குறைந்தது போல இருந்தது.
நான் இங்கே சேரலாம்னு வந்தேனா யாரை பார்த்து எப்படி பேசணும்னு தெரியல அதான் தயங்கிட்டு உள்ள வந்தேன் என்று சொன்னார் கோமதி.
அப்படியா உள்ளே வாங்கமா என்று அழைத்துக் கொண்டு போன அந்த பெண் அவரை உள்ளே ஒரு சேரில் அமர வைத்து விட்டு அவருக்கு எதிரே இருந்த சேரில் சென்று அமர்ந்த பெண் என் பெயர் யாழினி என்னுடைய அப்பா வெற்றிவேல் அவரும் அவருடைய அப்பாவும் சேர்ந்து தான் இந்த காப்பகத்தையே ஆரம்பிச்சாங்க.
உங்களைப் போல வயதானவர்கள் உடம்பு முடியாதவங்க ஆதரவற்று இருக்கிறவர்களுக்காக தான் இந்த காப்பகத்தை நாங்க நடத்திக்கிட்டு வரோம்.
உங்களுக்கு எந்த பிரச்சனையும் இந்த காப்பகத்தில் இருக்காது நீங்க இங்க எவ்வளவு நாள் தங்கணும்னு நினைக்கிறீர்களோ அவ்வளவு நாள் நிம்மதியா இருக்கலாம் உங்களை யாரும் எதுவும் கேட்க மாட்டோம் எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம் என்றார் அந்த பெண்.
நம்பிக்கையாக பேசும் யாழினியை பார்த்த கோமதிக்கு இந்த இடம்தான் தனக்கு சரியான பாதுகாப்பான இடம் என்று நினைத்துக் கொண்டார்.
சரிமா இங்கே தங்கறதுக்கு நான் ஏதாவது பணம் கட்டணுமா? என்று கேட்டார் கோமதி.
அப்படியெல்லாம் எதுவும் இல்லமா நீங்களா பார்த்து உங்களால எவ்வளவு முடியுதோ அவ்வளவு பணம் கொடுக்கலாம் உங்களால் முடியலைன்னாலும் பரவாயில்லை என்று சொன்னாள் யாழினி.
முதல்ல நீங்க எங்கிருந்து வரீங்க உங்கள பத்தி விபரம் எங்களுக்கு வேணும் அதையெல்லாம் சொல்ல முடியுமா என்று ஒரு நோட்டை எடுத்து அவர் முன்பு வைத்தால் யாழினி.
அந்த நோட்டையும் பேனாவையும் வாங்கிய கோமதி சற்று நேரம் சிந்தித்து விட்டு தான் மலேசியா செல்வதற்கு முன்பாக தங்கி இருந்த கொடைக்கானலில் விலாசத்தை எழுதினார்.
அதை வாங்கிப் பார்த்த யாழினி சரிமா நீங்க இங்கே என்ன விஷயத்துக்காக வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?
இங்கே கொஞ்ச நாள் தங்க வந்து இருக்கீங்களா? இல்ல நிரந்தரமா இங்கேயே இருக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கீங்களா?
நீங்க எப்படி சொல்றீங்களோ அதுக்கு தகுந்த மாதிரி தான் நாங்க மற்ற வேலைகளை செய்ய முடியும் என்று பணிவாக கேட்டால் யாழினி.
இல்லம்மா நான் இங்கே கொஞ்ச நாள்தான் தங்க வந்து இருக்கேன். என்னோட பொண்ண தேடி நான் இந்த ஊருக்கு வந்து இருக்கேன்.
அவளையும் என்னோட பையனையும் தேடி கண்டுபிடித்து கூட அவங்களை அழைச்சிட்டு என்னோட சொந்த ஊருக்கே போலாம்னு இருக்கேன் மா அதுக்காகத்தான் நான் இங்கே வந்து இருக்கேன் என்றார் கோமதி.
கோமதி சொன்னதை கேட்ட யாழினி சரி என்று தலையாட்டியவள் உங்க பொண்ணு எங்கே இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா? இல்லை இனிமேல் தான் தேடி கண்டுபிடிக்க போறீங்களா? என்று கேட்டால்.
யாழினி தன் பெண்ணை பற்றி கேட்டதும் தன் பையில் இருந்த துண்டு சீட்டை எடுத்து அவள் முன் நீட்டி…
இந்த விலாசத்தில் தான் என் பொண்ணு இருக்கா அவளை நான் எப்படியாவது அங்கிருந்து கூட்டிட்டு வரணும். அதுக்காகத்தான் நான் இங்கு வந்து இருக்கேன் என்று சொன்னார் கோமதி.
அவர் நீட்டிய விலாசத்தை வாங்கி பார்த்த யாழினி அதை படித்துப் பார்த்ததும் அவள் முகம் மாறியது.
அவள் முகத்தைப் பார்த்த கோமதி ஏன்மா உன் முகம் ஒரு மாதிரி ஆயிடுச்சு இந்த விலாசத்துல இருக்கிறவங்களை உனக்கு தெரியுமா? என்று கேட்டார் கோமதி ஆர்வமாக.
தனக்குத் தெரியும் என்று தலையாட்டிய யாழினி. உங்க பொண்ணு இங்கே என்ன வேலை செய்றாங்க? என்று கேட்டால்.
இல்லம்மா நானும் என் பொண்ணும் மலேசியாவில் இருந்தோம் என்றவர் அவளை ஏன் இங்கே கூட்டிட்டு வந்தாங்க என்கிற காரணத்த நான் பிறகு பொறுமையா சொல்றேன்.
என்னை எப்படியாவது இந்த இடத்துக்கு நீ அழைச்சிட்டு போறியாமா?
நான் எப்படியாவது என் பொண்ணை இந்த இடத்தில் இருந்து கூட்டிட்டு போகணும் என்று யாழினியின் கையை பிடித்துக் கொண்டு கேட்டார் கோமதி.
அங்கே நான் போக மாட்டேன் அம்மா என் அப்பா வரட்டும் அவர்கிட்ட பேசிட்டு எப்படியாவது உங்களை நான் அங்க அழைச்சிட்டு போக சொல்றேன்.
அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும் நாம நினைச்ச உடனே அவங்க வீட்டுக்கு எல்லாம் யாராலயும் போக முடியாது என்றால் யாழினி.
எனக்கும் தெரியுமா யாழினி நான் ஒரு டாக்ஸி டிரைவர் கிட்ட விசாரிச்சப்ப அவரும் உன்னை மாதிரி தான் சொன்னாரு யாருமே அவ்வளவு சீக்கிரம் அவங்களே நெருங்க முடியாதுன்னு அப்படிப்பட்டவங்க கிட்ட தான் என் பொண்ணு மாட்டி இருக்கா என்று சொன்ன கோமதி.
உன் அப்பா வந்ததும் மறக்காம விஷயத்தை சொல்லி எப்படியாவது என்ன அங்க அழைச்சிட்டு போக உதவி செய் என்று கேட்டார் கோமதி.
கண்டிப்பா செய்றேன் மா…. நீங்க கவலைப்படாதீங்க… சரி வாங்க… நான் உங்கள நீங்க தங்க வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி அவர் கொண்டு வந்த கைப்பையை வாங்கிக் கொண்டு அவரை அழைத்துச் சென்றாள் யாழினி.
ஒரு நிமிஷம் இரும்மா என்று சொன்ன கோமதி அவள் கையில் இருந்த தன் பையை வாங்கி அதிலிருந்து இரண்டு கட்டுகளை எடுத்து அவளிடம் கொடுத்து இதை நான் இங்கே சேருவதற்காக கொடுத்த பணமா நினைச்சு வாங்கிக் கோங்க என்று சொல்லி அவளிடம் நீட்டினார்.
யாழினியும் மறுக்காமல் சரி என்று வாங்கியவள் அதை பீரோவில் வைத்து பூட்டிவிட்டு கோமதியை அழைத்துக் கொண்டு அவர் அறைக்கு சென்றாள்.
போனில் தன்னை இப்போதே பார்க்க வேண்டும் என்ற பெண்ணை தேடி தமிழ் கிளம்பி விட…
அது தெரியாமல் இலக்கியா இங்கே அவனே நினைத்துக் கொண்டு தன் அறையில் இருந்தாள்.
அவள் எதிரில் மிகவும் சந்தோஷமாக அமர்ந்து இருந்தாள் ஆரா.
இலக்கியா குழப்பத்தில் இருப்பதை அவள் கவனிக்கவில்லை.
ஆரா இலக்கியாவின் கைய பிடித்துக் கொண்டு நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா என்றால்.
தன் மனக்குழப்பத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த இலக்கியா ஆரா என்ன சொல்கிறாள் என்று கேட்க ஆரம்பித்தாள்.
சொல்லு ஆரா ஏன் இன்னிக்கி நீ இவ்வளவு சந்தோசமா இருக்க என்று கேட்டால்.
நான் ஏன் சந்தோஷமா இருக்கேன்னு உன்கிட்ட சொல்றேன்.
ஆனா நீ இந்த வீட்ல இருக்குற வேற யாருகிட்டயுமே சொல்லக்கூடாது. குறிப்பா என்னோட அண்ணங்கள் ரெண்டு பேர் கிட்டயும் சொல்லக்கூடாது என்றால் ஆரா.
என்ன டி… யாருக்கும் தெரியாத விஷயத்தையா என்கிட்டே சொல்ல போறே என்று கேட்டாள் இலக்கியா..
ஆமாம் என்று தலையை ஆட்டிய ஆரா ஒருமுறை திரும்பி இலக்கியாவின் அறைக் கதவு சாற்றி இருக்கிறதா என்று பார்த்தவள் திரும்பி இலக்கியாவை பார்த்து நான்… நான்..அது வந்து….என்று வார்த்தைகளை திக்கி திக்கி பேச…
ஏய் ஆரா என்னடி திக்கி திக்கி பேசுற என்ன ஆச்சு என்று கேட்டால் இலக்கியா.
உன் அண்ணா வினித் இருக்கானே… என்றாள் ஆரா.
ஆமா என் அண்ணா வினித் தான் ஏன் என்ன ஆச்சு என்றால் இலக்கியா.
அதுவா இன்னைக்கு உன் அண்ணனை நான் கிஸ் பண்ணிட்டேன் டி… என்று சொல்லி தன் முகத்தை மூடி வெட்கப்பட்டால் ஆரா.
ஆரா சொன்னதை கேட்டு அதிர்ந்த இலக்கியா ஏன் ஆரா என்ன சொல்ற… வினித் அண்ணாவை நீ கிஸ் பண்ணிட்டியா? என்றால் நம்ப முடியாமல்.
தன் முகத்தை மூடி இருந்து கையை விலக்கி இலக்கியாவை பார்த்து ஆமாம் என்று சிரித்தவாறு தலையாட்டிவள் மீண்டும் தன் முகத்தை மூடிக்கொள்ள…
அப்போ நீ என் அண்ணாவும் ஒருத்தர் லவ் பண்றீங்களா என்று கேட்டால் இலக்கியா.
ம்ஹும்… இல்லை என்று தலையாட்டினாள் ஆரா.
என்னடி சொல்ற நீயும் அவரும் லவ் பண்ணலேன்னா அப்புறம் எப்படி கிஸ் எல்லாம் என்று இலக்கியா அவளை பார்த்து கேட்க…
அதுவா நான் மட்டும்தான் உன் அண்ணனை லவ் பண்றேன் ஆனா உன் அண்ணன் என்ன லவ் பண்றேன்னு வாயை திறந்து ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்குற அதனாலதான் இன்னைக்கு என்ன ஆனாலும் சரின்னு அவனை எடுத்து வச்சு முத்தம் கொடுத்துட்டேன் என்றால் ஆரா.
ஆரா சொன்னதை கேட்ட இலக்கியா அண்ணனும் தங்கச்சியும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க போல இருக்கு வேண்டாம்னு சொல்றவங்களத்தான் வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து முத்தம் கொடுக்குறாங்க என்று நினைத்துக் கொண்டாள்.
இலக்கியா அமைதியாக இருக்க ஏய் இலக்கியா ஏன் அமைதியாகியிட்ட என்று கேட்டால்.
ஒன்னும் இல்லடி… உன் அண்ணன் கிட்ட நானும்… உன் கிட்ட என் அண்ணனும் மாட்டிக்கிட்டோமே… அதே நினைத்து தான் கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டேன் என்று சொல்லி இலக்கியா சிரிக்க..
ஏய் பாத்தியா பாத்தியா உடனே எப்படி பேசறது பாத்தியா நீ என்ற ஆரா சரி சரி நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
யாராவது கிட்ட என்னோட சந்தோஷத்தை ஷேர் பண்ணனனும்னு தான் உன்ன தேடிட்டு வந்தேன்.
இந்த விஷயம் உனக்கு எனக்கு மட்டும்தான் தெரியும்.என் வீட்டில் இருக்கிற யாருக்குமே தெரியாது… இனியும் அவங்க யாருக்கும் தெரிய கூடாது புரிஞ்சுதா என்றால் ஆரா.
என்ன சரி என்று தலையாட்டிய இலக்கியா நீயா சொல்ற வரைக்கும் என் வாயால உன்னோட லவ்வ பத்தி யார்கிட்டயும் நான் சத்தியமா சொல்ல மாட்டேன் என்றால் இலக்கியா
தன்னை விட்டுப் பிரிந்து இருக்க முடியவில்லை என்று தமிழிற்கு ஃபோன் பேசி பெண்ணை தேடி சொன்னது போலவே அரை மணி நேரத்தில் அவள் வீட்டை அடைந்திருந்தான் தமிழ்.
தமிழின் கார் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் இருந்து துள்ளிக்குதித்து வாசலுக்கு ஓடி வந்தால் அவனுக்கு போன் செய்த பெண்.
ஹாய் டார்லிங் என்று ஓடிவந்து தமிழின் கழுத்தை அந்தப் பெண் கட்டிக்கொள்ள…
என்ன தீபா இது நான் தான் உன்கிட்ட நானா வரவரைக்கும், நானா உனக்கு போன் பண்ற வரைக்கும் என்ன காண்டாக்ட் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்கேனே….
ஆனா நான் சொன்னதை கொஞ்சம் கூட கேட்காம அதையும் மீறி நீ ஏன் எனக்கு இன்னைக்கு போன் பண்ணின என்று வந்ததும் வராததுமாக தமிழ் அவளிடம் கடிந்து கொண்டான்.
என்ன டார்லிங் இப்படி பேசுற உன்னை பார்த்து நான் ரொம்ப நாள் ஆன மாதிரி ஃபீல் ஆச்சு.
உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் டார்லிங்… அதனால்தான் உன்கிட்ட இன்னைக்கு எப்படியாவது பேசணும்னு கால் பண்ணினேன்.
இதுவரை நீயா எனக்கு கால் பண்ற வரைக்கும் எத்தனை நாள் நான் பொறுமையா இருந்திருக்கேன்.
இந்த முறை தான் என்னவோ தெரியல என்னால உன்னை விட்டு பிரிந்து இருக்கவே முடியல என்று அவனிடம் தன் உடலை ஒட்டி உரசிய படியே வழிந்தால் தீபா.
அப்படியா என்ன அவ்வளவு தூரம் நீ மிஸ் பண்ணுவியா என்று கேட்டவாறு தன் உடலோடு அவளுடலை உரசி கொண்டிருந்தவளை…
அப்படியே இடுப்பை பிடித்து வளைத்து தன் ஒற்றை கையால் தூக்கிய தமிழ் அவள் இதழில் வன்மையாக முத்தம் வைத்தான்.
அவனுக்கு சளைத்தவள் நான் இல்லை என்பது போல அவன் கொடுத்த முத்தத்தையே பதிலுக்கு அவனுக்கு கொடுத்த தீபா அவனிடம் இருந்து பிரிந்து கீழே இறங்கியவள்.
ஏன் டார்லிங் இத்தனை நாளா நீ என்ன வந்து பாக்கல என்று கேட்டால்.
சாரி ஸ்வீட்டி எனக்கு கொஞ்சம் முக்கியமான வொர்க் வந்துருச்சு அதனால்தான் என்னால உன்ன பாக்க வர முடியல என்றான் தமிழ்.
சரி டார்லிங் என்றவள் தமிழின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவள் டார்லிங் நீ ரூம் போ நான் உனக்கு பிடிச்ச food ஆர்டர் பண்ணி இருக்கேன்.அதை எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அவனை தங்கள் எப்போதும் இருக்கும் அறைக்கு அனுப்பிவிட்டு கிச்சனுக்கு சென்றால்.
இங்கே கிச்சனில் அவள் ஆர்டர் செய்திருந்த உணவுகள் எல்லாம் வந்திருக்க அதை வேலையாள் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.
வேலையாளை போகச் சொன்ன தீபா தன் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பாக்கெட்டை எடுத்து அதில் இருந்த உணர்வுகளை தூண்டும் மருந்தை தமிழ் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக கலந்தால் தீபா.
ஏன் தன்னிடம் தானாகவே வரும் தமிழிற்கு உணவில் இப்படிப்பட்ட மருந்தை கலந்து கொடுக்க வேண்டும் அதனால் அவளுக்கு என்ன லாபம் இருக்கும்…
