EPISODE-22
தமிழிற்கும் தீபாவிற்கும் கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகள் பழக்கம் இருக்கிறது.
எதற்குமே படியாதவனை… ஒரு கிளப்பில் வேலை செய்து கொண்டிருந்த தீபா அங்கே கிளையன்டைச் சந்திப்பதற்காக வந்திருந்த தமிழைக் கண்டு அவன் மீது மோகம் கொண்டவள் எப்படியாவது அவனைத் தன் வலைக்குள் விழவைத்து விட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுப் போனாள்.
ஒருமுறை தமிழ் அங்கே தன் நண்பனைப் பார்க்க வந்திருக்க அவன் நண்பனின் மூலமே தீபா முயற்சி செய்து தமிழ் சாப்பிடும் உணவில் போதைப்பொருளை கலந்து கொடுத்து… அவனோடு அன்று இரவு முழுவதும் இருந்தவள் தன் இச்சையை தீர்த்துக்கொண்டாள்.
ஆனால் அது அவளால் ஒரு இரவோடு முடியவில்லை. தமிழுடன் தான் இனிமேல் தன்னுடைய வாழ்க்கை, அவனுடைய பதவி, அந்தஸ்து, அவனுடைய சொத்துக்கள் என அனைத்தையும் தெரிந்துகொண்ட தீபாவினால் அவனை அவளும் சீக்கிரமாக தன்னிடம் இருந்து விட்டு விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்தவள்.
அவனுடன் இருந்த அந்த ஒரு இரவையே காரணம் காட்டி தமிழை வலுக்கட்டாயமாக தன் வலைக்குள் இழுத்தவள்.
ஒவ்வொரு முறையும் தமிழ் இவளைப் பார்க்க வரும்போதெல்லாம் அவனிடம் அவன் சாப்பிடும் உணவில் உணர்வுகளைத் தூண்டும் மருந்தையோ அல்லது போதை மருந்தையோ கலந்து கொடுத்து அவனாகவே அவளிடம் வருவது போல காட்டிக்கொண்டாள் தீபா.
தீபாவுடன் தமிழ் நெருங்கிப் பழகுவது அவனது குடும்பத்திலோ, நட்பு வட்டத்திலோ வேறு யாருக்கும் கூட தெரியாது. அவனை அந்தப் பாருக்கு அழைத்து வந்திருந்த நண்பனைத் தவிர.
“எத்தனை நாளா உன்னை நான் எப்படியோ என் கைக்குள்ள போட்டுட்டு இருந்தேன் தமிழ்.
ஆனால் எப்போ மலேசியாவில் இருந்து வரும்போது ஒரு பொண்ண உன் கூட அழைச்சிட்டு வந்து அவளையே திருமணம் செய்யப்போறதா உன் வீட்டில் சொன்னியோ…
இனியும் நான் உன்ன இப்படியே விட்டு வைக்கிறது சரியில்லை. எப்படியாவது உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னோட சொத்து சுகத்தை எல்லாம் எனக்கு சொந்தமாக்கிக்குவேன். உன்னையும் சேர்த்துதான்” என்று நினைத்தபடியே
மருந்து கலந்த உணவையும், ஒரு மது பாட்டிலையும் எடுத்துக்கொண்டு தமிழ் இருந்த அறைக்குச் சென்றவள் அதைப் பார்க்க அவன் அப்போதுதான் பாத்ரூமில் இருந்து குளித்துவிட்டு தன் கட்டுடலை காட்டியபடி இடுப்பில் ஒற்றைத் துண்டைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தான் தமிழ்.
தமிழோடு அப்படிப் பார்த்ததும் போதை மருந்து சாப்பிடாமலேயே தீபாவிற்கு அவன் மீது மோகம் ஏற்பட்டது.
தன் மோகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவனிடம் வந்தவள் அவனைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் தன் விரலால் கோலமிட்டபடி “வா டார்லிங் சாப்பிடலாம்” என்று அழைத்து வந்தவள்.
தமிழிற்கு தன் கையாலேயே அவள் எடுத்து வந்திருந்த உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஊட்டிவிட ஆரம்பித்தாள்.
“என்ன ஸ்வீட்டி… வழக்கத்தை விட இன்னைக்கு உன்னோட கவனிப்பு ரொம்ப அதிகமா இருக்கு” என்று கேட்டபடியே அவள் ஊட்டிய உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தான் தமிழ்.
“உன்னை ரொம்ப நாளா பாக்கவே இல்ல டார்லிங் அதனாலதான் இன்னைக்கு இவ்வளவு கவனிப்பு உனக்கு” என்று சொல்லி சிரித்தவள் அவனுக்கு உணவை ஊட்டிவிடப் போக…
தமிழின் உணவில் கலந்திருந்த மருந்தின் வீரியம் அவன் ஆண்மையைத் தூண்டிவிட்டிருந்தது.
அவள் கையில் வைத்திருந்த உணவை வாங்கிய தமிழ் “வந்ததிலிருந்து நான் மட்டும் தான் சாப்பிட்டுட்டு இருக்கேன் டார்லிங்…
நீயும் கொஞ்சம் சாப்பிடு” அவள் கையில் இருந்த ஸ்பூனை வாங்கி உணவை எடுத்து தீபாவிற்கும் ஊட்டி விட தமிழ்.
தீபாவும் எங்கே தான் உணவை சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் தன் மீது தமிழிற்கு சந்தேகம் வந்துவிடுமோ என்று நினைத்துப் பயந்தவள்.
தமிழ் உணவை ஊட்டிவிட அதை வேண்டாம் என்று சொல்லாமல் உணவை மொத்தமாக சாப்பிட்டு முடித்தாள் தீபா.
தமிழை விடவும் போதை மருந்து கலந்திருந்த உணவை மிக அதிகமாக தீபா சாப்பிட்டிருக்க…
அவனை விட வேகமாக அந்த மருந்தின் வீரியம் அவள் உடம்பில் பரவ ஆரம்பித்தது.
போதை மருந்தின் வீரியம் அதிகமானதும் தமிழை விட தீபாவின் உடல்தான் இப்போது மிகவும் தமிழிற்காக ஏங்க ஆரம்பித்தது.
தனக்கு ஊட்டிவிட்ட ஸ்பூனை அப்படியே தன் பற்களால் கடித்து அவன் கைகளில் இருந்து இழுத்த தீபா.
அவன் முகத்தை மோகத்தோடு பார்த்தபடியே தன் வாயிலிருந்து ஸ்பூனை மெதுவாக வெளியே தூக்கிப் போட்டுவிட்டு தமிழின் கையில் இருந்த உணவுத் தட்டையும் வாங்கி கீழே வைத்தாள்.
தமிழை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி… “டார்லிங்… ஐ நீட் யூ…” என்று பேசியவள் தமிழை மெத்தையில் தள்ளி அவன் இடுப்பில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்து தூர வீசியவள் தன் ஆடை மொத்தமும் கலைந்து அவன் மீது சரிந்தாள்.
படுக்கையில் தங்கள் நிலையை மறந்து வரும் தங்கள் உடல் தேவையை தீர்த்துக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.
உணர்ச்சி மிகுதியில் தீபா “டார்லிங்” என்று கிறக்கமாக அழைத்தபடி தமிழின் மார்பில் தன் பல் தடங்களைப் பதித்தாள்.
தன் மேல் படர்ந்திருந்தவளை கீழே தள்ளி தனக்கு விருந்து படைக்க காத்திருந்தவளை கட்டியணைத்து அவள் காதில் “தீபா” என்று மோன நிலையில் தமிழ் முனக …
அந்தப் போதையிலும் தமிழை அணைத்தவாறு தீபா முணுமுணுத்துக்கொண்டே இருந்தவள் அப்படியே தன் தலையைத் திருப்பி அவர்கள் படுத்திருந்த இடத்திற்கு மேலாக தமிழிற்குத் தெரியாமல் மாட்டி வைத்திருந்த கேமராவைப் பார்த்தாள்.
அது ஆட்டோமேட்டிக் கேமரா. இந்த அறைக்கு வரும் முன்பே அதை இயக்கி டைம் செட் செய்துவிட்டுதான் வந்திருந்தாள் தீபா.
தமிழ் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டதை அறிந்ததும்.
அவனை எப்படியாவது தன் வழிக்கு கொண்டுவர இந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை என்று முடிவு செய்த தீபா செய்திருந்த ஏற்பாடுதான் இது.
தமிழையும் தீபாவையும் இந்த ஆட்டோமேட்டிக் கேமரா பல கோணங்களில் போட்டோக்களாக எடுத்துக்கொண்டிருந்தது.
அந்த அறையில் மாட்டியிருந்த அது அந்த ஒரு கேமரா மட்டும் இல்லை. அந்த அறையைச் சுற்றி தமிழிற்குத் தெரியாமல் சில இடங்களில் வீடியோ கேமராக்களையும் மாட்டி இருந்தாள்.
அவன் முகம் சரியாக விழாவிட்டால் மற்றொன்றில் எப்படியாவது சரியாகப் பதிந்துவிடும் என்றுதான் இந்த ஏற்பாடு செய்திருந்தாள்.
அவளைப் பற்றி முழுவதுமாகத் தெரியாத தமிழ் அவளிடம் மயங்கியிருந்தவன் கண்கள் மூடி தீபாவுடன் கூட நினைக்கும்போது.
திடீரென இலக்கியாவின் முகம் அவன் மனக்கண் முன்னால் வந்து சென்றது.
இலக்கியாவின் முகம் தோன்றியதும் சட்டென தீபாவின் மேல் படுத்திருந்த தமிழ் அவள் மேலிருந்து விலகியவன் வேகமாக அங்கிருந்து துண்டைத் எடுத்து தன் இடுப்பை சுற்றிக்கொண்டு பாத்ரூம் சென்று கதவடைத்துக்கொண்டான்.
தன் மேல் படுத்திருந்த தமிழ் திடீரென எழுந்து கதவடைத்துக்கொண்டதும் அதில் கடுப்பான தீபா எழுந்து வந்து பாத்ரூம் கதவைத் தட்டி “டார்லிங் உள்ள என்ன பண்ணிட்டு இருக்க. வெளியே வா. எனக்கு நீ வேண்டும்” என்று கிறக்கமாக அவனை அழைக்க…
ஆனால் உள்ளிருந்த தமிழிடம் இருந்து தீபாவிற்கு எந்த பதிலும் வரவில்லை.
தமிழ் எதுவும் பேசாமல் போகவே பாத்ரூம் கதவைத் தட்டிக்கொண்டு அவனை அழைத்தபடி வெளியே நின்றிருந்தாள். தீபா
இங்கே பாத்ரூமில் இருந்த தமிழ் சில்லென்று ஷவரை திறந்துவிட்டு அதன் அடியில் வந்திருந்தவன் எப்போதும் இல்லாத அளவிற்கு தன் உடல் மிகவும் சூடாவதை உணர்ந்த தமிழ் தன் ஆண்மையும் கிளர்ந்தெழுவதை அவனால் உணர முடிந்தது.
ஷவர் முன்பு நீண்ட நேரம் நின்றிருந்த தமிழ் ஒரு வழியாக பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன்.
எதிரே கதவைத் தட்டிக்கொண்டு நின்றிருந்த தீபாவைப் பார்த்தான்.
அவளோ அதே போதையில் தமிழைப் பார்த்து “என்ன டார்லிங் குளிச்சிட்டு வந்தியா? நமக்குள்ள ஒண்ணுமே நடக்கலையே அதுக்குள்ள ஏன் குளிக்கப் போன?” என்று அவன் மேல் வந்து விழுந்தாள்.
தமிழிற்கு ஏனோ இலக்கியாவின் முகம் தன் மனக் கண்ணிற்குள் வந்து போன பிறகு தீபாவைக் காணவே பிடிக்கவில்லை.
தன்மேல் வந்து விழும் தீபாவைப் பார்த்து எரிச்சலடைந்து தமிழ்… தீபாவைப் பிடித்து பாத்ரூமிற்குள் தள்ளி கதவை அடைத்தான்.
அவளைப் பாத்ரூமுக்குள் தள்ளி கதவடைத்ததும் செய்வதென்று புரியாமல் தீபா மீண்டும் பாத்ரூம் கதவைத் தட்ட ஆரம்பித்தாள்.
“டார்லிங்… இப்ப எதுக்கு என்ன உள்ள விட்டு கதவை சாத்தின… கதவைத் திற… எனக்கு நீ வேணும், ஐ நீட் யூ…” என்று என்னென்னவோ சொல்லி உளற…
தீபா பேசியதை எல்லாம் சிறிதும் காதில் வாங்காத தமிழ் வேக வேகமாக தன்னுடைய ஆடையை மாற்றியவன். பாத்ரூம் அடைத்து வைத்திருந்த தீபாவிற்கு முன் வந்து நின்றவன்.
சத்தம் இல்லாமல் பாத்ரூமில் தாழ்ப்பாளை மட்டும் திறந்துவிட்டு வேகமாக அவள் அறையை விட்டு வெளியே வந்தவன் இங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
இவ்வளவு நேரம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த தீபா திடீரென கதவு லேசாக திறப்பதைப் பார்த்தவள்.
பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து தன் அறைக்குள் தமிழைத் தேட அவன் அந்த அறையில் இல்லை கிளம்பிவிட்டிருந்தான்.
“ச்சே…. இப்படி மிஸ் ஆயிட்டானே…” என்று நினைத்தவள்.
தன்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மெத்தையில் விழுந்தவள் என்ன செய்வது என்று மெத்தையில் புரண்டுகொண்டிருந்தாள் தீபா.
தன்னால் முடிந்த வரை தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்று தோற்ற தீபா. வேகமாக படுக்கையை விட்டு எழுந்தவள் ஒரு முடிவோடு தன் அறையை விட்டு தள்ளாடிப்படியே வெளியே வந்தாள்.
மாடியில் நின்று தன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை மாடியில் நின்றவாறே நோட்டமிட்டாள்.
அவள் வீட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் பெண்களாக இருந்தனர். “ச்சே.. இந்த தமிழ் இப்படி என் வீடு முழுக்க பெண்களை மட்டும் சேர்த்து விட்டுவிட்டானே” என்று புலம்பியவள்.
சலித்துக் கொண்டே திரும்பி தன் அறைக்குச் செல்லப் போக…
அப்போது தீபாவைப் பார்க்க அவளுடன் பாரில் வேலை செய்து கொண்டிருந்த நிர்மல் வந்திருப்பதாக ஒரு பணிப்பெண் அவளிடம் வந்து சொல்ல…
“எந்த நிர்மல்?” என்று ஒருமுறை யோசித்தவள் தன்னுடன் பாரில் வேலை செய்த போது தீபாவிடம் எப்போதும் உரசிக்கொண்டும் வழிந்துகொண்டும் அவள் பின்னால் சுற்றியிருந்தவன் தான் அந்த நிர்மல்.
அவன் இங்கே தன்னை எதற்கு காண வந்திருக்கிறான், நான் இங்கு இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும், இப்போது அவன் இங்கே எதற்காக வந்திருக்கிறான் என்று யோசித்தவள்.
“எப்படியோ அவன் இப்போது சரியான சமயத்தில் இங்கு வந்திருக்கான்” என்று நினைத்துக்கொண்டு அவனை தன் அறைக்கு வரச் சொல்லிவிட்டு அனைவரையும் வீட்டிற்கு கிளம்பச் சொன்னாள் தீபா.
தன் இச்சையை தணிக்க ஒருவன் கிடைத்துவிட்டான் என்ற எண்ணத்தில் நிர்மலுக்காக காத்திருந்தாள் தீபா.
வீட்டிற்கு வந்திருந்தவர்களை எப்போதும் ஹாலில் அமர வைத்துதான் பேசுவார்கள். “ஆனால் என்னை ஏன் அறைக்கு வரச் சொல்லி இருக்கா தீபா?” என்று யோசித்தப்படியே அவள் அறைக் கதவைத் தட்டினான் நிர்மல்.
“கம் இன்….” என்று தீபா உள்ளிருந்தவாறே அவனை உள்ளே வரச் சொன்னாள்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே தயக்கத்தோடு வந்த நிர்மல் கட்டிலில் கவர்ச்சியாக உடையை அணிந்து அமர்ந்திருந்த தீபாவை பார்த்து எச்சில் விழுங்கிய நிர்மல் அப்படியே நின்றுவிட்டான்.
தன்னைப் பார்த்து தடுமாறி நின்றவனைப் பார்த்து உள்ளுக்குள் தன் வேலை சுலபமாக முடிந்துவிட்டது என்று நினைத்தவள். அவனை நோக்கி ஓடிச் சென்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
தீபா இப்படி திடீர் என்று தன்னிடம் நெருங்குவதை நம்பமுடியாமல் நிர்மல் அவளையே நம்ப முடியாமல் பார்த்தான்.
“என்ன பாக்குற நிர்மல் உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு முன்னமே தெரியும்.ஆனால் எனக்கு இப்போதுதான் உன்னோட தேவை எனக்கு ரொம்ப முக்கியமா இருக்கு. என்னோட தேவையை உன்னால பூர்த்தி செய்ய முடியுமா?” என்று கேட்டாள்.
தீபா சொல்வதைக் கேட்டு புரியாமல் தன்னை ஒட்டி உரசிக்கொண்டு நின்றிருந்த தீபாவை நிர்மல் பார்க்க…
“நான் சொல்றது உனக்கு புரியலையா நிர்மல்?” என்றவள் அவன் அணிந்திருந்த சட்டை பட்டனை கழட்டப் போக…
அவள் தன்னிடம் எதற்கு இப்படி பேசினாள் என்று நிர்மலிற்கு இப்போதுதான் புரிந்தது.
தானாக வந்து வலையில் விழும் பழத்தை வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா… பழம் நழுவி இப்போது நிர்மலை படுக்கைக்கு அழைக்க…
நிர்மல் தயங்கிய படியே தீபாவைக் கட்டிப் பிடித்தான்.
நிர்மல் கண் முன் வந்ததை நினைத்து சிரித்த தீபா அவனை அழைத்துப்போய் மெத்தையில் அமர வைத்தவள் தமிழிற்காக கொண்டு வந்த மதுவை நிர்மலிற்கு ஊற்றிக் கொடுத்து குடிக்கச் சொன்னாள்.
நிர்மலும் அவள் நீட்டிய மதுவை வாங்கிக் குடித்தவன் அவளுக்கும் குடிக்கக் கொடுக்க…
இருவரும் போதையின் உச்சத்தில் இருந்தனர். அவனோடு சேர்ந்து மீண்டும் அதிகமாகக் குடித்து அந்த மது பாட்டில் முழுவதையும் காலி செய்தனர்.
நிர்மல் போதையுடன் தன்னருகில் மிகவும் கவர்ச்சியாக அமர்ந்திருந்த தீபாவை மோகம் நிறைந்த பார்வையில் பார்க்க…
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்த தீபா “என்ன டார்லிங் அப்படி பார்க்கிற டேக் மீ…” என்று ஆடையை அவிழ்த்து அவன் முகத்தில் வீசினாள்.
தீபாவின் ஆடையை விலக்கிவிட்டு அவளை முழுவதுமாகப் பார்த்த அடுத்த நொடி தீபாவின் மேல் பாய்ந்திருந்தான் நிர்மல்.
இதற்காகத்தானே இவ்வளவு நேரம் காத்திருந்தேன் என்று போல தீபாவும் அவன் விரும்பியபடி எல்லாம் படுக்கையில் அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.
நிர்மல் தீபா தன்னிடம் மட்டும் தான் உறவில் இருக்கிறாள் என்று நினைத்து அவளுடன் இவ்வளவு நாள் இருந்திருக்கிறான்.
ஆனால் நிர்மலைப்போல அவளுடைய இச்சைக்காக பல ஆண்களை தன் வலைக்குள் விழ வைத்து தன் தேவையை அவர்களிடம் தீர்த்துக்கொண்டு இருக்கிறாள்.
தன் உடல் இச்சைக்காக பல ஆண்களுடன் உறவில் தீபா இருப்பது தமிழிற்கு தெரியும்போது தீபாவின் நிலை என்ன ஆகப் போகிறதோ…
தீபாவின் வீட்டில் இருந்து நேராக தன் நண்பனின் ஹாஸ்பிடலுக்குச் சென்றான் தமிழ்.
அவன் சென்றது ஹாஸ்பிடல் பிஸியான நேரத்தில் என்பதால் தமிழை கண்டதும் அங்கு வேலை செய்திருந்த நர்ஸ், “சார் ஒரு முக்கியமான கேசில் இருக்கிறார். கொஞ்ச நேரம் நீங்க வெயிட் பண்ணுங்க” என்று அவனை காத்திருக்கச் சொல்ல…
“நமக்குத்தான் காத்திருந்து பழக்கம் இல்லையே…” இந்த நர்ஸ் சொன்னதைக் காதிலேயே வாங்காத தமிழ்.
என் நண்பன் ஆதித்யா இருக்கும் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
ஒரு பேஷன்டைப் பரிசோதித்துவிட்டு வெளியே வந்த ஆதித்யா உள்ளே தமிழ் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன் சிரித்தபடியே தமிழின் முன் அமர்ந்தான்.
தமிழைப் பற்றித்தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே, பொறுமை இல்லாதவன் என்று… அதனால் தமிழ் இப்படி அனுமதி இல்லாமல் வந்ததைப் பார்த்து ஆதித்யா அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பார்த்துக்கொண்டிருந்த பேஷன்டிற்கு மருந்துகளை எழுதிக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தவன் தமிழிடம் திரும்பி “என்ன இந்த பக்கம்?” என்றான் ஆதித்யா.
“என்னை நீ உடனே செக் பண்ணு” என்றான் தமிழ்.
“என்ன?” என்று புரியாமல் ஆதித்யா தமிழைப் பார்க்க..
“என்னடா பாக்குற… என்னை செக் பண்ணு. எனக்கு என்னென்ன டெஸ்ட் எடுக்கணுமோ எல்லாமே எடு. என்னால முடியலை” என்றால் தமிழ் கோபமாக.
“டேய் என்னடா ஆச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரி குழப்பமா இருக்க? என்ன ஆச்சு?” என்று ஆதித்யா எழுந்து வந்து தமிழின் இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து அவனைப் பரிசோதிக்க ஆரம்பித்தான்.
அவன் இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்ததும் தமிழின் இதயம் வழக்கத்தைவிட மிக வேகமாகத் துடிப்பதைக் கேட்ட ஆதித்யா அதிர்ச்சியாக தமிழைப் பார்த்தவன்.
உடனே தமிழின் முகத்தை உயர்த்தி அவள் கண்களைப் பார்க்க தமிழின் கண்கள் இரண்டும் செக்கச் செவேலென சிவந்து போதையில் இருந்தது.
“என்னடா உன்னோட ஹார்ட் இப்படி ஃபாஸ்ட்டா துடிக்குது? கண்ணெல்லாம் எப்படி சிவந்து இருக்கு? உன்னோட கண்டிஷன் சரியில்லையே. எதுவும் டிரக்ஸ் அல்லது ட்ரிங்ஸ் எதுவும் எடுத்துக்கிட்டியா?” என்று கேட்டான் ஆதித்யா.
தன் நண்பனை முறைத்த தமிழ் “ஆதித்யா நான் எப்போ டிரக்ஸ் எடுத்து நீ பார்த்திருக்க? ட்ரிங்ஸ் வேணும்னா அடிப்பேன். அதுவும் தீபாவை பார்க்க போகும்போதுதான் வழக்கத்தை விட அதிகமாக நான் ட்ரிங்ஸ் குடிப்பேன் என்று உனக்குத் தெரியாதா?” என்றான் தமிழ்.
தமிழைப் புருவம் சுருக்கிப் பார்த்த ஆதித்யா “அப்போ நீ தீபா வீட்டிலிருந்துதான் இப்போ வரியா?” என்றான்.
“ஆமாம்” என்ற தமிழ் “ஆனால் நான் இன்னைக்கு ட்ரிங்ஸ் கூட எதுவும் சாப்பிடலையே” என்றான்.
“நீ சொல்றது நிஜம் தானா? உன் கண்ணெல்லாம் இப்படி இருக்கு” என்ற ஆதித்யா சற்று யோசித்தவன் “வேற எதுவும் அங்கு சாப்பிட்டியா?” என்று கேட்டான்.
தமிழ் சிறிது யோசித்தவன் “எனக்காக சாப்பிட ஃபுட் ஆர்டர் பண்ணியிருக்கேன்னு தான் தீபா சொன்னா. அவ கொடுத்த உணவு மட்டும் தான் சாப்பிட்டேன்” என்றான் தமிழ்.
தமிழ் சொன்னதைக் கேட்ட ஆதித்யா யோசித்தவன் “சரி எதற்கும் நம்ம சில டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்திடலாம்.
வேற எதுவும் உன்னோட உடம்பில் பிரச்சனையானா அந்த டெஸ்ட்ல தெரிஞ்சிடும்” என்றவன் காலிங் பெல்லை அழுத்தி நர்ஸை உள்ளே அழைத்தவன்.
தமிழிற்கு செய்ய வேண்டிய டெஸ்டுகள் எல்லாம் எழுதிக் கொடுத்து தமிழை அழைத்துக் கொண்டு போய் அவனுக்கு உதவும்படி சொல்லி அந்த நர்சுடன் தமிழை அனுப்பி வைத்தான்.
நர்சு சொன்ன அனைத்து டெஸ்டுகளையும் பொறுமையாக எடுத்து முடித்ததும் தமிழ் ஆதித்யாவின் அறைக்கு வர…
சோம்பலாக வந்து அமர்ந்த தமிழைப் பார்த்த ஆதித்யா “சரி இன்னும் ரெண்டு நாள்ல எல்லா டெஸ்ட் ரிசல்ட் வந்துடும். வந்ததும் நான் உனக்கு கால் பண்றேன். அதுவரை நீ ஆபீஸ் எதுக்கும் போக வேண்டாம்.
நீ இந்த ரெண்டு நாள் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வீட்டிலேயே இரு” என்றான்.
“அதுதான் டெஸ்ட் எல்லாமே எடுத்தாச்சு நான் எதுக்கு வீட்ல ரெஸ்ட் எடுக்கணும்?” என்று கேட்டான் தமிழ்.
“உன்னை நீயே ஒருமுறை கண்ணாடியில் பாரு எவ்வளவு கலச்சி போயிருக்கேன்னு.
உடம்புல என்ன பிரச்சனைன்னு சரியா தெரியாது அப்போ கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கிறது தான் நல்லது. இன்னும் ரெண்டு நாளைக்கு நான் சொன்னது போல வீட்டை விட்டு எங்கேயும் போகாம ரிலாக்ஸா ரெஸ்ட் எடு. முக்கியமா நீ எந்த ட்ரிங்ஸ் எடுத்துக்க கூடாது” என்று தமிழை எச்சரித்தவன் தமிழைக் கிளம்பச் சொல்ல…
தமிழ் ஆதித்யாவிடம் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்ப “ஒரு நிமிஷம் தமிழ்” என்று ஆதித்யா அவனை அழைக்க நின்ற இடத்தில் இருந்து “என்ன?” என்று தமிழ் திரும்பி ஆதித்யாவைப் பார்த்தான்.
“ரெண்டு நாளும் ரிலாக்ஸா உன்னோட வீட்டுல இருந்துதான் ரெஸ்ட் எடுக்க சொன்னேன். அந்த தீபா வீட்ல இல்ல. புரியுதா? மறந்தும் நீ அந்த தீபா வீட்டு பக்கம் போயிடாத.”
“சரி இப்போ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றால் ஆதித்யா “என்ன?” என்று கேட்டான் தமிழ்.
“தீபா வீட்ல நீ என்ன உணவெல்லாம் சாப்பிட்டியோ அது எல்லாம் எனக்கு டெஸ்டுக்கு கிடைக்குமா?” என்று கேட்டான்.
சற்று யோசித்த தமிழ் “அது எதுவுமே இருக்காதுன்னு நினைக்கிறேன். என்ன நானும் தான் அதை எல்லாம் முழுசா காலி பண்ணிட்டோமே” என்றான் தமிழ்.
பெருமூச்சு ஒன்றை விட்ட ஆதித்யா “நீ சாப்பிட்ட உணவு கிடைச்சா அதுல எதுவும் கலப்படம் கலந்திருக்கான்னு நான் பரிசோதித்து பார்த்து தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்” என்றான்.
“சரி நான் முயற்சி பண்றேன்” என்று சொல்லிவிட்டு தமிழ் அங்கிருந்து கிளம்பினான்.
தமிழிற்கு சில மாத்திரைகளை கொடுத்து “இதை மறக்காம சாப்பிடு. உன் உடம்புல ரொம்ப அதிகமா மருந்து கலந்திருக்குன்னு நினைக்கிறேன். அதனால தான் நீ இப்படி இருக்க. இதை சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். நிம்மதியா தூங்கு” என்றான் ஆதித்யா.
ஆதித்யா கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொண்டு நேராக தன் தாத்தா வீட்டிற்கு கிளம்பினான் தமிழ்.
அவன் காரில் ஏறியதுமே முதல் வேலையாக தீபாவின் வீட்டு வேலையாளுக்கு அழைத்தான்.
தமிழ் திடீரென தனக்கு அழைக்கவும் அந்தப் பெண்மணி சற்று தயங்கியவாறே காலை அட்டென்ட் செய்து “ஹலோ சார்” என்று பவ்யமாக பேச…
“தீபாவும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாப்பிட்ட உணவுகளை எல்லாம் சுத்தம் செய்து எடுத்து போட்டுட வேண்டாம். அதையெல்லாம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு நான் சொல்கிற அட்ரஸுக்கு அனுப்பி வையுங்க” என்றான்.
அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க “என்ன நான் சொல்றது காதுல விழுதா இல்லையா? இப்படி பதில் பேசாம இருக்க உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று தமிழ் அந்தப் பெண்ணிடம் சீறினான்.
“சார் அது வந்து… அது… மேடம் எங்களை எல்லாம் நீங்க போனதுமே வீட்டுக்கு போகச் சொல்லி அனுப்பி வச்சிட்டாங்க” என்று சொன்னாள்.அந்தப் பெண் சொன்னதைக் கேட்ட தமிழ் புருவம் சுருங்க யோசித்தபடி காரைச் செலுத்தினான்.
