Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல்.. 23

அஸ்க்..லஸ்கா..காதல்.. 23

by Layas Tamil Novel
311 views

Episode-23

தங்களை வீட்டுக்கு போக சொல்லிவிட்டார் தீபா என்று அவள் வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண் தமிழ்-இடம் சொல்ல…

அப்படியா என்று புருவம் சுருக்கிய தமிழ் இப்போ நீ கெஸ்ட் ஹவுஸ்ல தானே இருக்க என்று கேட்டான்.

 ஆமா சார் என்றால் அந்தப் பெண்மணி  நீ போய் நான் சொன்னத மறக்காம எடுத்து நான் சொன்ன ஹாஸ்பிடளுக்கு அனுப்பி வை.

 இப்போ செய்கிற விஷயம் தீபா-வுக்கு கண்டிப்பா தெரியவே கூடாது என்றான் தமிழ்.

 சரி என்று அந்தப் பெண் போனை வைத்தவள் நேராக தான் இருந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து தீபா இருந்த வீட்டிற்கு வந்தால்.

 அவள் தீபா-வின் வீட்டு கதவை திறந்து உள்ளே வந்தவள் அங்கே இருந்த நிலையை பார்த்து அப்படியே அதிர்ந்து போய் வாசலிலேயே நின்றால்.

வாசல் கதவை திறந்து உள்ளே பார்க்கா… வரும்போது நேத்து ஆக உடை உடுத்தி வந்து இருந்த நிர்மல்.

இப்பொது வெளியே வரும்போது சட்டை அணியாமால் அதை தோளில் தூக்கி போட்ட படி எல்லாம் நடந்து வந்தான்.

அந்தப் பணிப்பெண் உள்ளே வரவும் நிர்மல் வீட்டை விட்டு வெளியே செல்லவும் சரியாக இருந்தது.

 அவன் வந்திருந்த போது இந்த பணிப்பெண் தான் தீபா-விடம் அவன் வந்திருப்பதை தெரிவித்து இருந்தால்.

நிர்மல் வீட்டிற்கு உள் வரும் போது மிகவும் பிரசாக வந்தவன் இப்போது வெளியே செல்லும்போது மிகவும் கலைத்து சோர்வு அடைந்தவன் போல கிளம்பி சென்றான் அவனை வித்தியாசமாக பார்த்தாள் அந்த பெண்.

 யோசனை உடனேயே அந்த பெண் சமையல் அறைக்கு வர அங்கே எந்த உணவும் இல்லாமல் போக…

 எப்படியும் மேடம் பாசுக்கு வழக்கமா அவரு ரூம்லதானே சாப்பாடு கொடுப்பாங்க நம்ம வேணா அங்க போய் பார்க்கலாமா என்று யோசிக்க பிறகு ஐயோ  அங்கே போனா அந்த மேடம் இருப்பாங்க எதுவும் சொல்லுவாங்களே…

சார் வேற அவங்களுக்கு தெரியாம அவர் சொன்னது எல்லாம் எடுத்துட்டு வர சொல்லி இருக்காரு.

 அதை எடுக்க நான் போற அப்போ மேடம்  பார்த்துட்டா எதுவும் பிரச்சனை ஆயிடுமே என்று யோசித்தபடி கையை பிசைந்து  கொண்டு சமையல் கட்டில் நின்றிருந்தார்.

இன்னைக்கு என்ன ஆனாலும் சரி சார் சொன்ன வேலையை செஞ்சுடனும் அப்படி இல்லன்னா சார் வந்து எதுவும் சொல்லுவார் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தீபா-வின் ரூமிற்கு சென்றால் அந்த பணிப்பெண்.

 தீபா-வின் ரூமிற்கு வந்து கதவை பார்க்க அது முழுவதுமாக மூடாமல் பாதி திறந்து தான் இருந்தது.

 மெல்ல கதவை திறந்து தன் தலையை மட்டும் உள்ளே நீட்டி அந்த பெண் பார்க்க தீபா உடலில் துணி இல்லாமல் பாதி உடலை போர்த்தியபடி குப்புற படுத்தி தூங்கிக் கொண்டு இருந்தால் கட்டிலில்.

 வெளியே நிர்மல் சென்ற நிலைமையையும் உள்ளே தீபா படுத்திருக்கும் நிலைமையையும் கோர்வையாக யோசித்துப் பார்த்த பெண்ணிற்கு அந்த அறையை சுற்றிலும் பார்க்கவும் ஏதோ புரிந்தது போல தோன்றியது.

பெரிய இடத்து சமாச்சாரம் நமக்கு எதற்கு என்று தன்னைத் தானே சமாதானம் படுத்தியவள்.

தான் வந்த வேலையை பார்ப்போம் என்று வேகமாக தீபா-வை தொந்தரவு செய்யாமல்  அறைக்குள் நுழைந்தால்.

அவர்கள் சாப்பிட்டதில் எதுவும் மிச்சம் இருக்கிறதா என்று பார்க்க… உணவுகள் எல்லாம் மொத்தமாக காலியாக இருந்தது.

இப்பொது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அந்த பணிப்பெண் அங்கே ஒரே ஒரு சாலட் இருந்த பாத்திரம் மட்டும் காலியாகாமல் இருந்தது.

அதை கவனித்த அந்த. பெண் அந்த சேலடை எடுத்து தான் கொண்டு வந்த தப்பாவில் போட்டவள்.

பின் நீ காலியாக இருந்த பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒன்று இரண்டு பருக்கை உணவுகளையும் மொத்தமாக எடுத்து ஒரு டப்பாவில் போட்டவள் வந்த சுவடு தெரியாமல் தீபா-வின் அறையை விட்டு வெளியே வந்தால்.

சமையல் அறைக்கு வந்த அந்த பெண் எடுத்து வந்த உணவுகளை எல்லாம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டவள் வேறு எதுவும் சமையல் அறையில் இருக்கிறதா என்று பார்த்தாள்.

அங்கே தீபா தமிழ்-இற்கு கலந்து இருந்த போதை மருந்து பாக்கெட்டை அப்புற படுத்தாமல் அதை அப்படியே குப்பை தொட்டியில போட்டிருந்தால்.

யதேச்சையாக அந்த பெண் குப்பை திடீயை பார்க்க… அதில் ஒரு மருந்து பாக்கெட் மட்டும் வித்தியாசமாக இருக்க..

அதை குனிந்து எடுத்த அந்த பெண் எதற்கும் இருக்கட்டும் என்று அந்த மருந்து பாக்கெட்டையும் சேர்த்து தான் எடுத்து செல்ல இருந்த பையில் போட்டவள்.

தமிழ் சொன்ன ஹாஸ்பிடலுக்கு கிளம்புவதற்காக சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள் சுற்றிலும் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வெளியே செல்ல போக..

அப்போது ஏய்… நில்லு… என்று தீபா அந்த பெண்ணை அழைக்கும் சத்தம் கேட்டது.

தீபா-விண் குரல் கேட்டதும் அந்த பெண் ஐயோ… இவங்க எப்போ எழுந்து வந்தாங்க… இப்போ என்ன செய்றது என்று யோசித்தபடி கையில் இருந்த பையை தீபா-விற்கு தெரியாமல் தன் பின்னால் மறைத்துக் கொண்டு அவளை திரும்பி பார்க்க…

மாடியில் இருந்தவாறே நான் உங்களுக்கு எல்லாரையும் அப்போவே போக சொன்னேனே… நீ போகாம இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருந்தே.. என்றாள் தீபா.

அது.. அது.. வந்து மேடம் என்று அந்த பெண் தீபா-விடம் என்ன சொவது என்று தெரியாமல் பயந்த படி அவளையே பார்க்க..

என்ன முழிக்குற… சொல்லு நீ இன்னும் போகாம இங்கே என்ன பன்னிட்டு இருக்க என்றாள் தீபா.

மேடம் நீங்க சொன்ன அப்போவே நான் கிளம்பிட்டேன். போற அவசரத்துல என்னோட மொபைலை வெச்சிட்டு போய்ட்டேன் மேடம்.

 இப்போதான் என்னோட மொபைல் காணோம்னு தேடுனப்போ அதை இங்கே வச்சுட்டு போனது ஞாபகம் வந்துச்சு அதுதான் மனம் அதை எடுத்துட்டு போலாம்னு வந்தேன் என்றால் அந்த பெண்.

 ஓ அப்போ நீ இப்பதான் இங்கே வந்தியா என்று கேட்டால் தீபா.

 ஆமா மேடம்… இப்பதான் வந்தேன் வந்ததும் நேரா கிச்சனுக்கு போய் என்னோட மொபைல் எடுத்துட்டு போன அப்பதான் நீங்க என்ன கூப்பிட்டுட்டீங்க என்றால் அந்த பெண்.

 அவள் சொன்னதை கேட்டு அப்படியே நம்பிய தீபா அப்போ இவள் நானும் நிர்மல்-உம் இருக்கும்போது இங்கே வரவில்லை இப்போதுதான் வந்திருக்கிறாள்.

அவன் கிளம்பும்போது கூட வரவில்லை என்று நினைக்கிறேன் அப்படி இருந்திருந்தால் அவள் ஏதாவது சேவை பற்றி சொல்லி இருப்பாளே என்று யோசித்த தீபா சரி உன் போன் எடுத்துட்டு தானே சீக்கிரம் கிளம்பு என்று சொல்ல..

 நீ சரிங்க மேடம் நான் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் திரும்பியும் பார்க்காமல் வீட்டை விட்டு வேகமாக வெளியே வந்து விட்டாள்.

 வெளியே வந்த அந்த பெண் தமிழ் சொன்ன ஹாஸ்பிடலுக்கு தீபா-வின் ரூமில் இருந்து எடுத்த உணவு பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் டெஸ்ட்டிற்க்கு கொடுத்துவிட்டு ஹாஸ்பிடலில் இருந்தபடியே தமிழ்-இற்கு கால் செய்து அவன் சொன்னது போல அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்து விட்டதாக கூற…

  அவளிடம் தீபா-விற்கு அவள் மேல் எதுவும் சந்தேகம் வந்ததா என்று கேட்டான் தமிழ்.

 அவங்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பு இல்ல சார் நான் கிளம்பும்போது அவங்க அப்பத்தான் ரூமில் இருந்து வெளியே வந்தாங்க.

 அவங்க நான் உன்னை போகச் சொல்லி நீ போகாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்ன கேட்டப்போ என்னோட மொபைல் மறந்து போச்சுட்டு போயிட்டேன் அதை எடுக்கத்தான் வந்தேன்னு சொன்னதும் நம்பி என்ன போக சொல்லிட்டாங்க என்றால் அந்த பெண்.

 பரவாயில்லையே நன்றாக சமாளித்து தான் அவளிடம் இருந்து இந்தப் பொருட்களை எடுத்து வந்து ஹாஸ்பிடலில் கொடுத்திருக்கிறாய் என்று அந்தப் பெண்ணை மெச்சிய தமிழ்.

 இனிமேல் நீ அங்கே வேலைக்கு போக வேண்டாம் என்றான்.

 அவன் சொன்னதை கேட்டது அதிர்ச்சியான அந்தப் பெண் சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க…

நீங்க சொன்னதுக்காகத் தானே நான் இந்த வேலையை செய்து கொடுத்தேன்.

 அதுக்காக என்ன வேலையை விட்டு இப்படி தூக்கிட்டீங்களே!!! இது உங்களுக்கு நியாயமா இருக்கா?

 இப்படி திடீர்னு வேலையை விட்டு போக சொன்னா நான் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்வேன் என்று அந்த பெண் பதட்டமாக தமிழ்-இடம் பேச..

 அவள் பேசியதை கேட்ட தமிழ் என்றவன் உன்ன அங்க தான் வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னேன் மொத்தமா வேலையை விட்டு போகச் சொல்லி நான் சொல்லல என்றான்.

 அந்த புரியாமல் சார் எனக்கு புரியல என்ன சொல்றீங்க என்று கேட்டால்.

 நான் சொல்ற அட்ரஸில் தான் நாளையிலிருந்து உனக்கு வேலை. ஏன் எதுக்குன்னு கேட்காம காலைல ஒழுங்கா அங்க வந்து வேலையில ஜாயின் பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்து தமிழ் அந்தப் பெண் வேலைக்கு சொல்ல வேண்டிய இடத்தை அந்தப் பெண்ணின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பிவிட்டு.

 குமரன்-இன் வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்தினான்,

 இதுவரை ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த இலக்கியா-வும் ஆரா-வும் இருந்து உள்ளே செல்ல அனுமதிக்கு சென்று விட்டால் இலக்கியா மற்றும் தனியாக உள்ளே சென்று கொண்டிருப்பதை பார்க்க தமிழ் காரை நிறுத்திவிட்டு அவளை தொடர்ந்து பின்னால் சென்றான்.

ஏற்கனவே மது போதையில் இருந்த தமிழ்…

 ஆதித்யா-ன் அறையை விட்டு வெளியே வந்தவன்.

அங்கேயே இருந்த தண்ணீரை எடுத்து ஆதித்யா கொடுத்த மாதிரியை போட்டுக் கொண்டு தான் வீட்டிற்கு கிளம்பியிருந்தான்.

 அதிலும் மருந்தின் வீரியத்திலும் தள்ளாடிப்படியே தமிழ் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தான்.

 அவன் வந்தது தெரியாமல் இலக்கியா தன் அறைக்குள் செல்ல…

 தமிழ் அவளை பார்த்தபடியே இலக்கியா-வுக்கு தெரியாமல் அவள் பின்னால் சென்றான்.

 தமிழ் அங்கு வந்ததை அவன் வீட்டில் யாருமே கவனிக்கவில்லை.

 இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் இலக்கியா தூங்க தன்னறைக்கு செல்ல…

 தமிழ்-உம் அவளை பின்தொடர்ந்தவாரே அவள் அறைக்கு சென்றவன் இலக்கியா உள்ளே வந்து கதவை சாற்றும் நேரம் தன் காலை உள்ளே வைத்து அவளை கதவை சாத்த விடாமல் செய்தான்.

 அதிர்ந்து போய் இலக்கியா நிமிர்ந்து பார்க்க….

 அவளை தள்ளிக் கொண்டு உள்ளே வந்து தமிழ் இலக்கியா-வின் அரை கதவை தாளிட்டான்.

 தமிழ் இந்த நேரத்தில் அறைக்கு வந்து தன்னை உள்ளே தள்ளி அவனும் உள்ளே வந்து கதவு அடைந்ததும்.

 அவன் செய்த செயலைப் பார்த்த இலக்கியா அதிர்ச்சியானவள் நீங்க நீங்க என்னோட ரூம்ல என்ன பண்றீங்க என்று தமிழ்-ஐ பார்த்து கைநீட்டி கேட்க…

 அவள் நீட்டிய கையைப் பிடித்து இழுத்த தமிழ் அப்படியே இலக்கியா-வின் இடையில் கை கொடுத்து அவளை தூக்கி தன் தோளில் போட்டவன் இலக்கியா-வின் படுக்கையை நோக்கி சென்றான்.

 இந்த நேரத்தில் தன் அறைக்கு வந்ததும் இல்லாமல் இப்படி தன்னை தூக்கிக் கொண்டு செல்லும் தமிழ்-ஐயே அதிர்ச்சியாக அவன் தோளில் இருந்தபடி பார்த்தால் இலக்கியா.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured