EPISODE -26
ஏன் தூங்கி எழுவதற்கு முன்பாகவே எழுந்த இலக்கியா தன் உடைகளை எடுத்துக்கொண்டு ஆராவின் அறைக்குச் சென்று விட்டுவிட்டு ரெடியாகிவிட்டாள். இன்று இலக்கியாவுக்கு காலேஜின் முதல் நாள்.
தான் படிக்க வேண்டும் என்ற கனவு நினைவாகவே நினைத்து சந்தோஷத்துடன் கிளம்பி ஹாலிற்கு வந்த இலக்கியாவும், ஆராவும்.
ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த குமரன்னைப் பார்த்ததும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பி பார்த்து, “உஷ்…” என்று ஆரா, இலக்கியாவை “சத்தம் போடாதே” என்று எச்சரித்தாள்.
மெதுவாக குமரன்னின் பின்னால் சத்தம் இல்லாமல் ஆரா செல்ல, அவள் பின்னால் இலக்கியாவும் சென்றாள்.
பேப்பர் படித்துக் கொண்டிருந்த குமரன்னைப் பின்னால் இருந்து குமரன்னின் கண்ணைப் பொத்தச் சொல்லி, “எனது இடம்” கூறினாள் ஆரா.
“ஐயோ!!! தாத்தா கண்ணு நான் மூடுறதா!!! முடியாது… நான் மாட்டேன்…” என்று இலக்கியா வேகமாக தன் தலையை ஆட்ட…
“ப்ச்… நான் சொல்றதை செய்யல, அதுக்கப்புறம் நான் உன் கூட பேசவே மாட்டேன்” என்ற ஆரா முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள…
தானும் அவன் அண்ணனும் ஒரே மாதிரி பிடிச்சா ஒரே மாதிரி பிடிவாதம் பண்றாங்க என்று நினைத்துக் கொண்டாள் இலக்கியா.
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த ஆராவிடம், “சரி நான் போய் தாத்தா கண்ணை பொத்துறேன்” என்று சொல்ல, ஆரா சந்தோஷமாகி விட்டாள்.
குமரன்னின் அருகில் வந்த இலக்கியா, ஆராவை திரும்பி பார்க்க, “என்ன பார்க்கிற? போ…” என்று ஜாடை செய்ய, வேறு வழியே இல்லாமல் குமரன்னின் கண்களை பின்னால் இருந்து மூடினாள் இலக்கியா.
அவள் அப்படி கண்களை மூடியதும் பேப்பர் படித்துக் கொண்டிருந்த குமரன் சிரித்தவராக தன் கையை, கண்ணைப் பொத்திக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்து,
“ஏய் ஆரா என்ன இது காலையிலேயே உன் வாண்டுத்தனத்தை ஆரம்பிச்சுட்டியா? உனக்கு இன்னைக்கு காலேஜ் ஆரம்பிச்சிடுச்சு இல்ல?
நீ காலேஜ் கிளம்பாம என்கூட விளையாடிட்டு இருக்கிறதை உன் அம்மா மட்டும் பார்த்தா அவ்வளவுதான்” என்று சொல்ல…
ஆரா அவர் முன்னாள் வந்து நின்றவள், “ஐயோ தாத்தா, நான் உங்க முன்னாடிதான் நின்னுகிட்டு இருக்கேன். நான் உங்க கண்ணை மூடல” என்று ஆரா சொல்ல…
“அப்படியா? ஆமா, உன் குரல் எனக்கு முன்னால் இருந்துதானே கேக்குது? அப்போ இவ்ளோ நேரம் என் கண்ணைப் பொத்திக்கிட்டு இருக்கிறது யாரு?” என்று குமரன், ஆராவிடமும் கேட்க.
“அதை நான் சொல்ல மாட்டேன். நீங்கதான் கண்டுபிடிக்கணும். அதுக்காகத்தானே நான் இப்படி செஞ்சேன்” என்று ஆரா அவர் அதையே பார்க்க.
இலக்கியா, ஆராவிடம் “ப்ளீஸ் டி… நான் வேணா கையை எடுத்துரட்டுமா?” என்று அவளிடம் ஜாடை செய்து கெஞ்ச…
“ஷ்…” என்று ஆரா, இலக்கியாவை ஜாடை செய்தவள், “தாத்தா நீங்க கண்டுபிடிங்க. உங்க கண்ணை யாரு பொத்தி மறைச்சிருக்காங்கன்னு சொல்லுங்க” என்றாள் ஆரா.
இந்த வீட்டில என்கிட்ட உரிமையா விளையாடுற நீ மட்டும் தான்.
இந்த பேத்தியை விட்டால் எனக்கு இந்த வீட்ல வேற யாரு இருக்காங்க என்கிட்ட இப்படி உரிமையா விளையாட என்று குமரன் சொன்னவர்.
தன் கண்ணை யார் மூடி இருக்கிறார்கள் என்று யோசித்தவர், “எனக்கு யாருமே ஞாபகத்துக்கு வரலைம்மா. நீயே சொல்லிடு” என்று ஆராவிடமும் குமரன் கூற..
“என்ன தாத்தா இவ்வளவு சீக்கிரம் பின் வாங்கிட்டீங்க? நான் நீங்க சரியா கண்டுபிடிச்சிடுவீங்கன்னு இல்ல நினைச்சேன்” என்ற ஆரா, இலக்கியாவை பார்த்து கையை எடுக்கச் சொல்லி ஜாடை செய்ய, இலக்கியாவும் குமரன்னின் கண்களை மூடி இருந்த தன் கையைப் பிரிக்க, அவள் கையைப் பிடித்த குமரன் தன் முன்னால் இழுத்து நிற்க வைத்தவர்,
இலக்கியாவைப் பார்த்ததும், “நீதான் என் கண்ணை இவ்வளவு நேரம் மூடி இருந்தியா?” என்று முகத்தை இறுக்கமாக வைத்த படி கேட்க…
இலக்கியா, முகத்தை இறுக்கமாக வைத்திருப்பதை பார்த்தவள், குமரன்னுக்கு தன் மீது கோபம் வந்து விட்டது என்று நினைத்து.
அவரைப் பார்த்து சங்கடமாக நெளிந்து படி, “ஆமாம் தாத்தா, நான் எவ்வளவோ சொன்னேன், இதெல்லாம் வேண்டாம் என்று ஆராதான் கேட்காமல் என்னை இப்படி செய்ய சொல்லிட்டா. என்னை எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க, சாரி” என்று அவரிடம் இலக்கியா மன்னிப்பு கேட்டாள்.
“இப்போ எதுக்கு நீ இப்படி தயங்கிட்டு என்கிட்ட பேசுற இலக்கியா? ஆரா எப்படி எனக்கு ஒரு பைத்தியமோ, அதே போலத்தான் நீயும்.
நான் உன்னை அப்படித்தான் நினைக்கிறேன்.
ஆனா நீ என்னை அப்படி நினைச்சா என்கிட்ட மன்னிப்பு கேட்டிருப்பியா? இந்த நேரம் நீ என்கிட்ட சண்டைதானே போட்டிருக்கணும்?” என்றார் குமரன்.
“இல்ல தாத்தா, நான் ஏன் உங்ககிட்ட சண்டை போட போறேன்?” என்றாள் இலக்கியா புரியாமல்.
“என்னம்மா நீ எதுவும் புரியாதவளா இருக்கியே?” என்றவர் ஆராவை தன்னுடன் அழைத்து.
“என்கிட்ட பேசும்போது நான் என்ன சொன்னேன்? இந்த வீட்ல உரிமையா என் கண்ணைப் பொத்தி விளையாடுறவள் நீ மட்டும் தான் வேற யாரும் இல்லைன்னு சொன்னேனா? இல்லையா?” என்றார் குமரன்.
“ஆம்” என்று இலக்கியா தலையாட்ட…
“நான் இப்படி சொன்னதை கேட்டு, ‘ஏன் தாத்தா நானும் உங்களுக்கு ஒரு பேத்திதானே? என்னை ஏன் நீங்க சொல்லலை?’ன்னு கேட்டிருக்கணுமா? இல்லையா? அதை விட்டுட்டு இப்படி மன்னிப்பு கேட்டுட்டு இருக்கியே என்னம்மா நீ?” என்று குமரன் அவளிடம் கூற..
குமரன் தன்னையும் ஆராவைப் போல நினைத்து பேசுவதை பார்த்த இலக்கியாவுக்கு தன்னையும் அவர்களுள் ஒருவராக குமரன் ஏற்றுக்கொண்டு ஏற்றுக் கொண்டதே நினைத்து கண்கள் கலங்கிப் போனாள் இலக்கியா.
அவள் கண்கள் கலங்கியதை கவனித்த ஆரா, “இப்ப எதுக்கு நீ அழுற? என் தாத்தா எவ்வளவு உரிமையா உன்கிட்ட பேசுறாரு? எப்படி அழலாமா நீ?” என்று சொல்லி இலக்கியாவின் அருகில் வந்து அவள் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டி விளையாட…
கண்களில் கண்ணீரோடு நெஞ்சில் நிறைந்த இலக்கியா, ஆரா தன்னிடம் விளையாடியதும் கூச்சத்தில் சிரிப்பு வர…
ஆராவிடம் இருந்து தப்பித்துக் கொள்ள அங்கிருந்து ஓடப் போக… ஆரா, இலக்கியாவை துரத்திக் கொண்டு ஓடினாள்.
ஆராவிடம் மாட்டிக் கொள்ளாமல் அவளிடம் இருந்து தப்பித்து ஓடிய இலக்கியா, அவள் தன்னை பிடித்து விடக்கூடாது என்று திரும்பி ஆராவைப் பார்த்தபடி வாசலை நோக்கிச் சென்றாள். இலக்கியா யாரோ ஒருவர் மீது நன்றாக மோதி நின்றாள்.
அவள் ஓடிய வேகத்தில் தனக்கு எதிரே நின்று இருந்தவரின் நெற்றியில் பலமாக முட்டி விட… அவள் மோதிய வேகத்தில் பலமாக நெற்றியில் அடிபட்டு விட, நெற்றி வலிக்க “ஷ்…” தேய்த்துக் கொண்டே தனக்கு எதிரே நின்றிருந்தவரை நிமிர்ந்து பார்த்தாள் இலக்கியா.
அவள் எதிரே 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கோபமாக மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி இலக்கியாவை முறைத்தபடி தன் தலையை தேய்த்து விட்டுக் கொண்டு நின்று இருந்தார்.
அவர் தன்னை முறைத்துக் கொண்டு நிற்பதை பார்த்த இலக்கியாவுக்கு சற்று பயமாகிவிட, அவரை விட்டு இரண்டு அடி தள்ளி நிற்க…
இலக்கியாவை துரத்திக் கொண்டு ஓடி வந்த ஆரா, இலக்கியாவின் எதிரே நின்றிருந்த தன் அத்தை ரேவதியைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட, ஆராவின் மீது மோதி இலக்கியா அப்படியே நின்றாள்.
இலக்கியாவின் பின்னால் நின்று இருந்த ஆரா, இலக்கியாவின் காதிற்குள், “இப்படி வாண்ட்டடா போய் பிசாசு கிட்ட மாட்டிகிட்டியே? ஐயோ… பாவம் நீ” என்று ஆரா கூற.
“ஏய் ஆரா, என்னடி சொல்ற? யாரு இவங்க? ஏன் இவங்கள போய் பிசாசுன்னு சொல்ற?” என்று இலக்கியா கேட்டாள் ஆராவிடம்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இலக்கியாவையும் ஆராவையும் தேடிக் கொண்டு அவர்கள் பின்னால் வந்த குமரன்.
இலக்கியாவின் எதிரே வாசலில் கோபமாக நின்றிருந்த தன் மகள் ரேவதியைப் பார்த்ததும் இவ்வளவு நேரம் சிரித்த முகமாக வந்தவர், அவரை கண்டதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, “வா ரேவதி, இப்பதான் வந்தியா?” என்று கேட்டபடி அவரிடம் வந்தார்.
அவரைப் பார்த்து முறைத்த ரேவதி, “இப்போதுதான் உங்களுக்கு, உங்க மகளுக்கு தெரியுதா? உங்க பேரன் ஒரு பொண்ண இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கூட்டிட்டு வந்து இருக்கானாமே…
என் பொண்ணுங்க ரெண்டு பேர் இருக்கிறப்போ அவன் எப்படி வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இன்னொருத்தியை இந்த வீட்டுக்கு எப்படி கூட்டிட்டு வருவான்?” என்றார் குமரன்னிடம் கோபமாக.
அவர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த இலக்கியா, அவர் தன்னைத் தான் பேசுகிறார் என்பதை உணர்ந்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கியபடி அங்கிருந்து உள்ளே செல்லலாமா? அங்கேயே நிற்கலாமா? என்று யோசித்துக் கொண்டு நின்று இருக்க.
ஆரா, “ஏய் அந்த பிசாசு வந்ததும் உன்னைத்தான் டார்கெட் பண்ணுது. போ, இன்னைக்கு நீ வசமா மாட்டிக்கிட்ட.
ஏற்கனவே உன்னைத் தேடித்தான் வந்திருக்கு இந்த பிசாசு.
நீ வேற அது தெரியாம அது மேலேயே போய் மோதி நின்னுட்டு இருக்க” என்று ஆரா ஏற்கனவே பயத்தில் இருந்த இலக்கியாவை மேலும் பயமுறுத்த.
இலக்கியா பயந்தபடியே தன் எதிரில் நின்றிருந்த ரேவதியைப் பார்க்க…
அவர் பார்வையை கண்ட இலக்கியாவின் உடல் தானாக நடுங்க ஆரம்பித்தது.
அவளை முறைத்தவரே குமரன்னிடம் திரும்பி, “யார் இவர்? தான் உங்க பேரன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கானா?” என்று கேட்க.
“ஏன் ரேவதி, வந்ததும் வராதம்மா வாசல்லயே நின்னு சண்டை இழுத்துட்டு இருக்க? வா உள்ளே போய் பேசலாம்” என்று குமரன், ரேவதியின் கையைப் பிடித்து உள்ளே அழைக்க.
தன் கையைப் பிடித்திருந்த குமரன்னின் கையை உதறிய ரேவதி, “நான் ஒன்னும் இங்கே உட்கார்ந்து பேச வரல. நியாயம் கேட்டு வந்திருக்கேன். நீங்க இப்படி எதுவும் என்னை பேசி சமாதானம் பண்ணிட கூடாது என்றுதான் கூடவே என்னோட அண்ணனையும் அழைச்சிட்டு வந்திருக்கேன்” என்று சொல்ல…
“போச்சு, பிசாசு மட்டும்தான் வந்திருக்குன்னு நினைச்சா, அது கூடவே ஒரு முதலையும் இல்ல அழைச்சிட்டு வந்திருக்கு..
அது வந்துச்சுன்னா இன்னைக்கு போச்சு. இந்த ரெண்டும் சேர்ந்து வந்தா நம்ம வீட்ல நிம்மதியே இருக்காது.
நம்ம பேசாம கொஞ்ச நேரம் முன்னாடியே காலேஜ் கிளம்பி இருக்கலாம்.
இப்ப வேற இதுங்க கிட்ட மாட்டிக்கிட்டோமே. எப்படி இவங்க ரெண்டு பேர் கிட்ட இருந்து தப்பிச்சு நம்ம காலேஜ் போக போறோமோ தெரியல” என்று ஆரா புலம்ப…
“என்னடி நீ சொல்றதெல்லாம் பார்த்தா, இவங்க ரெண்டு பேரும் ரொம்ப டெரரா இருப்பாங்க போலயே. எனக்கு பயமா இருக்கு” என்று இலக்கியா, ஆராவின் கைகளில் இருக்கப் பிடித்துக் கொள்ள..
அப்போது “சர்” என்று வேகமாக அவர்கள் வீட்டின் முன்பு ஒரு கார் வந்து நிற்க..
கார் ஓட்டுநர் இருக்கையில் இருந்த கதவை திறந்து கொண்டு ஒரு ஆடவன் குமரன்னின் வீட்டிற்குள் நுழைந்தான்.
அவனைப் பார்த்த குமரன், “வா சேகர், எப்படி இருக்க? நல்லா இருக்கியா?” என்று கேட்க…
அவரை முறைத்தபடியே வந்த சேகர், “நான் எப்படி இருந்தா உனக்கு என்ன தாத்தா?
உனக்குத்தான் உன்னோட செல்ல பேரன் தமிழ்ஐ உன் கூடவே வச்சிருக்கியே. அவன் நல்லா இருந்தா மட்டும் போதும் தானே நீ நினைக்க போற?” என்றவன் தன் பின்னால் திரும்பி பார்க்க..
அவன் பின்னால் வரிசையாக ஆராவை விட வயதிற்கு மூத்த இரண்டு பெண்களும் ஒரு வயதானவரும் அவருடன் ஒரு பெண்மணியும் உள்ளே வந்தனர்.
வெளியில் ரேவதி போட்ட சத்தத்தில் உள்ளே இருந்த குருசாமியும் காவேரியும் மற்ற வேலை ஆட்களும் வாசலுக்கு வந்துவிட…
அனைவரும் வந்ததை பார்த்த காவேரி சிரித்த முகமாக, “அடடே வா ரேவதி. ஏன் வாசலிலேயே நின்னுட்டு இருக்க? சேகர், நீ ஏன்பா அங்கேயே நிக்கிற? உள்ளே வா” என்றவர்.
அவன் அருகில் நின்றிருந்த சேகர்ரின் அப்பா மணியைப் பார்த்து, “வாங்க மாமா. ஏன் இங்கேயே நிக்கிறீங்க? அக்கா நீங்களும் வாங்க” என்று அவர் மனைவி ராஜத்தியையும் உள்ளே அழைத்தார் காவேரி.
காவேரி உரிமையாக அனைவரையும் அழைப்பதை பார்த்த இலக்கியாவுக்கு இவர்கள் எல்லாம் தமிழ்ற்கு வேண்டியவர்களாக சொந்தமாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள் செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டு அங்கேயே நின்றிருக்க..
அவர்கள் அனைவரையும் பார்த்த குமரன் திரும்பி ஆராவைப் பார்க்க… ஆராவும் குமரன்னைப் பார்த்து, “தாத்தா, இன்னிக்கு நீ அவ்வளவுதான்” என்று சொல்ல…
ஆராவிடம் இலக்கியாவை கண்களாலேயே ஜாடை செய்து அவளை அழைத்துக் கொண்டு செல்லும்படி குமரன் கூற..
ரேவதி, ஆராவை முறைத்தவள், “என்னடி எங்களையெல்லாம் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? நாங்க எல்லாம் வந்தா உங்களுக்கு எதுவும் பண்ணிடுவோமா என்ன? என் அப்பாகிட்ட இப்படி பேசுற?” என்று அவளிடம் இருந்து விழ…
“ஐயோ அத்தை நான் எதுவும் சொல்லல. நீங்களாச்சு உங்க அப்பாவாச்சு. எனக்கு காலேஜுக்கு நேரமாகுது. நான் கிளம்புறேன்” என்று சொல்லி, “இலக்கியாவே வாடி நம்ம போகலாம்” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே செல்லப் போக…
அவர்கள் இருவரும் தாங்கள் வந்ததை பார்த்து தங்களிடமிருந்து நழுவிக்கொண்டு செல்ல நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்த ரேவதி.
இருவரின் முன்பு வந்து நின்றவர், “இருங்க, அதுக்குள்ள என்ன அவசரம்? பேச வேண்டியது பேசி முடிச்சுட்டு அதுக்கப்புறம் யார் வேணா எங்க வேணாலும் போகலாம்” என்று சொல்லி அவர்களை பிடித்து நிறுத்திக் கொண்டார்.
இலக்கியாவும் வேறு வழி இல்லாமல் ஆராவுடன் நின்றுவிட..
குமரன் திரும்பி ரேவதியையும், தன் மகன் மணியையும் அவர் மனைவி ராஜத்தியையும் பார்த்து, “ஏன் எல்லாரும் இங்கேயே நிக்குறீங்க? உள்ளே வாங்க” என்று அனைவரையும் அழைக்க…
“நாங்க எல்லாரும் இங்க விருந்து சாப்பிடவா வந்து இருக்கோம்?” என்ற ரேவதி தன் அண்ணன் மணியிடம்திரும்பி, “அண்ணா, நீங்களே இந்த நியாயத்தை கேளுங்க” என்றவர்.
தன் அருகில் நின்று இருந்த தன் இரு மகள்களையும் இழுத்து தன் அருகில் நிற்க வைத்தவர்.
“உங்க பெரிய பேரனுக்குக் கட்டிக்கத்தானே நான் என்னோட மூத்த மகள் லலிதாவை தமிழ்க்கும், இளைய மகள் சவிதாவை நம்ம மணிக்கும் கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னுதானே பெத்து வைத்திருக்கேன்?
அதையெல்லாம் விட்டுட்டு நீங்க வேற யாரையோ ஒருத்தியைதானே இங்கே உங்க பேரனுக்கு கல்யாணம் பண்ணிக்க கூட்டிட்டு வந்து வச்சிருக்கீங்க?” என்று அவர் எதிரே நின்றிருந்த இலக்கியாவை முறைத்தவாரே கூற..
“நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு ரேவதி. இது எல்லாம் நாங்க எடுத்த முடிவு கிடையாது.
தமிழ்வே அவனுக்கு பிடிச்ச பொண்ண கூட்டிட்டு வந்து இவளைதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு எங்க கிட்ட சொல்றப்போ அவனே மறுத்து பேச, அவனோட விருப்பத்தை மறுப்பு சொல்ல எங்களுக்கு எப்படி மனசு வரும்?
அதனாலதான் நாங்க அவனுக்கு என்ன விருப்பமோ அது புரிய இருந்துட்டு போகட்டும்னு விட்டுட்டோம்” என்று குமரன் விளக்கம் கூற…
“அது எப்படிப்பா? என் பையன் எதுவும் உங்ககிட்ட பிடிச்சிருக்கு அப்படின்னு வந்து சொன்னா உடனே நீங்க அவன் சொன்னதுக்கு எல்லாம் சரின்னு தலையாட்டிடுவீங்களா? இல்ல தானே?
அதேபோலதானே தமிழ்ம் உங்களுக்கு பேரன். அப்படி இருக்கும்போது அவன் எது சொன்னாலும் ஏன் அவனுக்கு மறுப்பு சொல்ல மாட்டேங்கறீங்க?” என்று தன் பங்கிற்கு குமரன்னிடம் கேள்வி கேட்டார் மணி.
“டேய் மணி, ரேவதிதான் புரியாம பேசுறான்னா, நீயுமா இப்படி பேசுவ? உனக்கே தமிழ் பத்தி நல்லா தெரியும். அவன் ஒரு முடிவை எடுத்துட்டான்னா, அதை யார் சொன்னாலும் யாருக்காகவும் மாத்திக்க மாட்டான்.
அப்படி இருக்கிறப்போ அவன் எடுத்த முடிவை எப்படி நாங்க மறுத்து பேச முடியும்?” என்று குமரன் எடுத்துக் கூற…
“அது என்ன எல்லாமே அவனுடைய இஷ்டத்துக்கு விடுவது?” என்று மணி அவர் அருகில் நின்றிருந்த இலக்கியாவை பார்த்து, “இதோ இங்கு நின்னுட்டு இருக்காளே இவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தானா?” என்று கேட்க…
அவர் எதிரே நின்றிருந்த காவேரி, “ஆமாம் மாமா, நானும் தமிழ் கிட்ட எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன். ஆனா அவன் கேட்கிறதா இல்லை.
இதோ உங்க முன்னாடி நின்னுட்டு இருக்காளே இந்த மேனாமினுக்கி…
இவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு எங்கேயோ கண்காணாத ஊருல இருந்தவளை விலை கொடுத்து வாங்கிட்டு வந்து வச்சிருக்கான்.
இந்த அநியாயம் எந்த வீட்டிலயாவது நடக்குமா? நான் சொன்னா இந்த வீட்ல எல்லாரும் என்ன பேசிய வாயை அடைச்சிடறாங்க” என்று காவேரி இவ்வளவு நாள் தமிழ் உடன் கூட மனம் திறந்து பேசாதவர்.
இன்று இவர்கள் அனைவரும் வந்து தைரியத்தில் குமரன்னின் முன்பு தன் மனதில் இருப்பதை முழுவதுமாக போட்டு உடைக்க…
இந்த வீட்டில் தனக்கு எதிராக அனைவரும் அழைப்பதை பார்த்த இலக்கியா தனக்காக பேசுவதற்கு இங்கே யாருமே இல்லாதது போல உணர…
இவர்களை எல்லாம் பார்த்த பயத்திலும் தன் மனதில் எழுந்த எண்ணத்தினாலும் தளர்ந்து போய் அப்படியே தரையில் விழுந்தாள்.
இலக்கியா விழுந்ததை பார்த்து பதறிய ஆரா, குமரன், குருசாமி அவளிடம் பதறிக் கொண்டு வர…
அவர்கள் மூவரையும் தடுத்த ரேவதி தன் மகள் லலிதாவைப் பார்க்க…
அவள் அம்மாவின் பார்வையை உணர்ந்த லலிதா, இலக்கியாவிடம் வந்தவள் அவளைப் பார்க்க…
இலக்கியா என்னதான் தளர்ந்து போய் சோகமாக இருந்தா
லும் லலிதாவிற்கு இலக்கியாவைப் பார்க்கையில் சற்று பொறாமையாகத்தான் இருந்தது.
பிசாசுவின் மகள் எப்படி இருப்பாள்? அவள் அம்மாவை போலவே லலிதாவும் இலக்கியாவைப் பார்த்த மாத்திரத்திலேயே வெறுத்தவள்.
இலக்கியாவின் அருகில் குனிந்து அவள் கையைப் பிடித்து மேலே தூக்கியவள், “என்னடி நாங்க பேசுறதை எல்லாம் கேட்டு எதுவும் தெரியாதவள் போல நடிக்கிறியா?
நீ இப்படி மயக்கம் போட்டு விழற மாதிரி விழுந்தா உன் மேல பரிதாபப்பட்டுட்டு நாங்க உன்னை இங்கேயே இருக்க விட்டுருவோம்னு நினைச்சியா?” என்றவள்.
இலக்கியாவின் கையைப் பிடித்து அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட இழுத்துக் கொண்டு செல்லப் போக…
அப்போது லலிதா, இலக்கியாவை இழுக்க முடியாமல் அப்படியே நிற்பதை உணர்ந்தவள்.
தன் பின்னால் நின்றிருந்த இலக்கியாவை திரும்பி பார்க்க…
இலக்கியாவின் ஒரு கையை லலிதா பிடித்து இழுத்துக் கொண்டு இருக்க.
.. இலக்கியாவின் மற்றொரு கையை தமிழ் பிடித்து இருந்தவன் லலிதாவை கொலை வெறியுடன் பார்த்து நின்று கொண்டு இருந்தான்.
