EPISODE 27
ரேவதியின் மகள் லலிதா, இலக்கியாவின் கையைப் பிடித்து வீட்டுக்கு வெளியே தள்ள இழுக்க…
இலக்கியாவின் மற்றொரு கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தமிழ், இலக்கியாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த லலிதாவை கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
இலக்கியாவை இழுக்க முடியாமல் போகவே திரும்பிப் பார்த்த லலிதா அவள் எதிரே நின்றிருந்த தமிழ்ஐப் பார்த்ததும் தானாக இலக்கியாவைப் பிடித்திருந்த கைகளை விட்டவள்.
தமிழ்ஐக் கண்டு பயந்து அவள் அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள்.
லலிதாவையும் மற்றவர்களையும் முறைத்துப்படியே இலக்கியாவைப் பிடித்திருந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்து, “உனக்கு காலேஜுக்கு நேரமாகலையா?” என்று கேட்டான்.
இலக்கியா “ஆம்” என்று வேகமாக தலையை ஆட்ட…
“இவ என்னோட பொண்டாட்டி ஆக போறவ. இந்த வீட்ல எனக்கு என்ன மதிப்பு மரியாதையும் இருக்கோ, அத்தனையும் இவளுக்கும் கொடுக்க யாரும் மறந்துடாதீங்க.
இப்படி யாரோ மாதிரி இவளை நடத்த உங்களுக்கு யாரு உரிமையை கொடுத்தது?” என்றவன்.
இலக்கியாவின் கையை விட்டுவிட்டு நேராக ரேவதியிடம் வந்தவன், “உங்க பொண்ணை எனக்குத்தான் கல்யாணம் செய்து கொடுக்கணும்னு நீங்க முடிவு பண்ணினா மட்டும் போதாது” என்றவன்.
அவர் பின்னால் தமிழ்க்கு பயந்து நிற்கும் லலிதாவைப் பார்த்தவன், இலக்கியாவைக் காட்டி, “இவள் என்னோடவள். இவளைக் கஷ்டப்படுத்த நினைச்சா, அடுத்த நொடி உன்னை பரலோகம் அனுப்பிடுவேன்” என்றவன்.
மற்றவர்களிடம் திரும்பி, “இவளை இந்த வீட்டை விட்டு துரத்தனுங்கற நினைப்பு யாருக்காவது இருந்தா, அதை இப்பவே மறந்திருங்க…
அதையும் மீறி எதுவும் செய்யணும்னு நினைச்சா அது யாரா இருந்தாலும் நான் சும்மா விட மாட்டேன்” என்று ஒவ்வொருவரையும் பார்த்து எச்சரித்துவிட்டு.
இலக்கியாவையும், ஆராவையும் பார்த்தவன், “காலேஜுக்கு நேரம் ஆகலையா? இங்கே நின்னு என்ன ரெண்டு பேரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?” என்று அதட்ட…
அடுத்த நொடி இருவரும் விட்டால் போதும் என்று அங்கிருந்து சிட்டாகப் பறந்துவிட்டனர்.
அவர்கள் இருவரும் சென்றதும் தன் போனை எடுத்து வினித்திற்கு அழைத்து பேசியப்படி வீட்டிக்குள் சென்றான் தமிழ்.
அவன் மறையும் வரையும் அங்கிருந்த யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவர்கள்.
தமிழ் உள்ளே சென்றதும் குமரன்னிடம் திரும்பி, “நாங்க இனிமேல் இந்த வீட்டுக்கு வரமாட்டோம். நீங்கள் எல்லாரும் ஒண்ணா நிம்மதியா சந்தோசமா இருங்க” என்று அழுத்தபடி ரேவதி நீலிக் கண்ணீர் வடிக்க…
மணியும் தன் பங்கிற்கு கத்தி விட்டு சேகர்ரையும் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு செல்ல…
“ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று ரேவதியையும், மணியையும் வழி மறித்த காவேரி, “நீங்க எதுக்காக இந்த வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லணும்?
எங்களுக்கு இந்த வீட்டில் எவ்வளவு உரிமை இருக்கோ அதே போல உங்க எல்லாருக்கும் இங்கே உரிமை இருக்கு…” என்றவர்.
குமரன்னிடம் திரும்பி, “மாமா… என்ன அமைதியா இருக்கீங்க.. நியாயமா நீங்கள் தான் நான் பேசினதெல்லாம் இவங்ககிட்டே சொல்லி போக விடாம தடுக்கணும். உங்களுக்கு பதிலா நான் இதை செய்துட்டு இருக்கேன்” என்று காவேரி சொல்ல..
“ம்க்கும்… நீ எதுக்காக இவ்வளவு அக்கறையா என் தங்கச்சியையும், என் தம்பியைய்யும் போக விடாம பிடிச்சு வெச்சிருக்கேன்னு எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.
இப்போ உனக்கு இலக்கியாவை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பனும்னா இவங்க துணை இல்லாம செய்ய முடியாது. அதனாலதான் இவங்களை போக விடாம தடுத்து வெச்சிருக்க…
இல்லையின்னா நீயாவது என் வீட்டு ஆளுங்க கிட்ட அக்கறையா பேசுறதாவது. அவங்க இங்கே வந்தாலே முகத்தை தூக்கி வெச்சிட்டு சுத்துவா” என்று தன் மனைவி காவேரியை பற்றி சரியாக கணித்து வைத்து இருந்தார் குருசாமி.
அவர் பேசியதை கேட்டு அவரை முறைத்த காவேரி, “அவர் கிடைக்கறார் இப்படியே நல்லவர் மாதிரி பேசிட்டு இருக்கட்டும். நீங்க வாங்க ரெண்டு நாள் இங்கே இருந்துட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் காவேரி.
உள்ளே சென்ற அனைவரையும் பார்த்த குமரன் “இன்னும் ரெண்டு நாளில் இந்த வீட்டில் என்ன என்னவெல்லாம் நடக்க போகுதோ” என்று புலம்பியவர் தன் மகனுடன் பேசிக்கொண்டே உள்ளே சென்றார்.
❤️
இங்கே காலேஜிற்கு வந்து சேர்ந்த ஆரா, இலக்கியாவின் டிபார்ட்மெண்ட்டை காட்டி அவளை அங்கே போகச் சொல்லிவிட்டு மாலை இதே இடத்தில் காலேஜ் முடிந்ததும் வந்துவிட சொல்லிவிட்டு தன் கிளாஸ் ரூமிற்கு கிளம்பினாள் ஆரா.
தன் டிபார்ட்மெண்டை நோக்கி தயங்கிய படியே சென்ற இலக்கியா தன் கிளாஸ் ரூமிற்குள் நுழைய…
அவள் உள்ளே வருவதை பார்த்த மற்ற மாணவர்கள் இலக்கியாவைப் பார்த்ததும் “யார் இந்த பெண்? இவ்வளவு அழகாக, அதுவும் கியூட் ஆக இருக்கிறாள்” என்று பார்த்துக் கொண்டு இருக்க..
உள்ளே வந்த இலக்கியா கிளாசில் எங்கு அமரவது என்று சுற்றிலும் பார்க்க…
அப்போது கடைசி பெஞ்சில் அமர்ந்து இருந்த ஒரு பெண் தன் கையை உயர்த்தி “இங்கே வா…” என்று இலக்கியாவை சிரித்த முகமாக அழைக்க…
அவளை பார்த்ததும் சிநேகமாக தன்னை அழைக்கும் அந்த பெண்ணிடம் சென்ற இலக்கியா சிரித்த படி அவளிடம் அமர…
இலக்கியாவிடம் தன் கையை நீட்டி, “ஹலோ என் பேரு தேவி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
அவளிடம் கை நீட்டி “என் பேர் இலக்கியா” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தங்களை அறிமுகம் செய்துகொள்ள…
அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் புகுந்து, “ஐயம் சுனித்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு வந்து நின்றான் இவர்களைப் போல இந்த ஷார்ட் டேர்ம் கேட்டரிங் காலேஜில் சேர்ந்து இருக்கும் சுனித்.
இலக்கியா அவனிடம் தயங்கிய படி தன் கையை நீட்ட…
“அட… நான் என்ன உன் கையை கடிச்சா சாப்பிட போறேன்? இவ்வளவு தயங்குற?” என்று இலக்கியாவின் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு, “உன் பேரு என்ன?” என்றான்.
பார்த்த மறு நொடியே தோழமை உணர்வுடன் பழகும் சுனித்ஐ அதிசயம் போல பார்த்த இலக்கியா தன் பெயரை சொல்லி அறிமுகம் செய்து கொண்டாள்.
“போதும் ரெண்டு பேரும் கை குலுக்கியது” என்று இலக்கியாவின் கையை சுனித்திடமிருந்து பிரித்துவிட்டு, “நாங்களும் இவங்க பக்கத்துலதான் உக்கார்ந்து இருக்கோம். எங்களை எல்லாம் சாருக்கு கண்ணு தெரியலையா?” என்று சுனித்ஐ முறைக்க..
“உன் கிட்டே எனக்கு என்னடி பேச்சு?” என்று தன் முன் கை நீட்டிய தேவியை முறைத்தவன், இலக்கியாவிடம் சிரித்துக் கொண்டே, “கொஞ்சம் தள்ளி உக்காரு” என்று அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.
“ஏன் டா… ராஸ்கல், உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் கையை தட்டி விடுவ? எப்படி இருந்தாலும் நீ என்கிட்டே எதுவும் உதவி கேட்டு வந்துதான் ஆகணும். அப்போ பார்த்துக்குறேன் உன்னை” என்று தேவி, சுனித்திடம் சண்டை இட…
“போடி… இன்னமும் உன்கிட்டே வந்து எதுக்கு எடுத்தாலும் நிப்பேன்னு நினைக்குறியா? அதுதான் இல்லை” என்றான்..
“ஓஹோ… அப்போ இனிமேல் நீ எதுவும் என்கிட்டே கேட்டு வந்து நிக்க மாட்டே அப்படிதானே?” என்றாள் தேவி.
“ம்ம்ஹும்… கண்டிப்பா கேட்க மாட்டேன்” என்றவன். “இனி எனக்கு எதுவும் தேவையின்னா நான் இலக்கியா கிட்டே கேட்டு வாங்கிப்பேன்” என்றவன் இலக்கியாவைப் பார்த்து, “இலக்கியா நான் எதுவும் ஹெல்ப் கேட்டா நீ எனக்கு செய்வேதானே?” என்றான் சுனித்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்த இலக்கியாவுக்கு இவர்களுக்கு ஒருவரை ஒருவர் ஏற்கனவே தெரிந்து இருக்கும் போல, அதனால் தான் இவ்வளவு உரிமையாக சண்டை போடுகிறார்கள் என்று தனக்கு இருபுறமும் அமர்ந்து இருந்த இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்க..
“என்ன அப்படி பாக்குறே இலக்கியா? நீ இருக்க தைரியத்துலதான் நான் இவ கிட்டே எதுவும் கேட்க மாட்டேன்னு சவால் விட்டு இருக்கேன்.
நீ எதுவும் பேசாம அமைதியா இருக்கறதை பார்த்தா என்னை கைவிட்டிருவ போல இருக்கே” என்று சுனித் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு இலக்கியாவைப் பார்க்க..
“டேய் போது டா… ரொம்ப நடிக்காத. அவ உன் நடிப்பை பார்த்து அப்படியே நீ நல்லவன்னு நம்பிராஜா போறா… பாவம் இலக்கியாவைப் பார்த்தாலே ரொம்ப வெகுளியா தெரியுது” என்று தேவி, இலக்கியாவின் கை பிடித்து தன் அருகில் இழுத்து அமர்த்திக் கொள்ள..
“ஏய்… என்னடி அப்படியே நைசா… இலக்கியாவை உன் பாக்கம் இழுக்க பாக்கிறியா?” என்ற சுனித், இலக்கியாவின் கையைப் பிடித்து தன் பக்கம் அவளை இழுக்க…
இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்ட இலக்கியாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு அவர்கள் இழுத்த இழுப்பிற்கு இங்கும் அங்கும் ஆடிக் கொண்டு இருந்தாள்.
அவளை காப்பாற்றுவது போலவே சரியாக பர்ஸ்ட் ஹவர் பெல் அடிக்க சரியாக அவர்கள் கேட்டரிங் டிபார்ட்மென்ட் ஹெச் ஓ டி உள்ளே நுழைந்தார்.
அவரை பார்த்ததும் தான் தேவியும், சுனித்தும் இலக்கியாவின் கையை விட்டவர்கள். இலக்கியாவிடம், “நாங்க பேசுறதை பார்த்து நீ பயந்துறாத… நாங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படித்தான்.
இவன் என் அத்தை பையன் தான். நாங்க எங்க அப்பாவும் இவங்க அம்மாவும் அண்ணன் தங்கை. நாங்க ஒரே வீட்டில் இருந்துதான் வரோம்.
இன்னிக்கு பர்ஸ்ட் டே கிளாஸ்க்கு நான் இவனை விட்டுட்டு முன்னமே வந்துட்டேன். அந்த கோபத்துலதான் இப்படி என்கிட்டே வம்பு பண்ணிட்டு இருக்கான்” என்று தங்களைப் பற்றி சொல்லி முடித்தாள்.
இலக்கியா, தேவி சொன்னதை அமைதியாக சிரித்த படி கேட்டவள். “சரி கிளாசை கவனி. நாம அப்புறம் பொறுமையா பேசலாம்” என்று சொல்லிவிட்டு கிளாசை கவனிக்க ஆரம்பித்தாள்.
அவர்கள் ஹெச்ஓடி தன் முன் அமர்ந்து இருக்கும் வருங்கால இந்தியாவின் எதிர்காலத்தைப் பார்த்து மகிழ்ந்தவர்,
“ஹலோ ஸ்டுடென்ட்ஸ் என் பெயர் கோபிநாதன். உங்களுக்கு ஹெச்ஓடி நான் தான். நீங்கள் படிக்க போற இந்த ஆறு மாசமும் என் முகத்தைத்தான் நீங்கள் தினமும் பார்த்து ஆகணும்” என்று சிரித்தார்.
உடனே கூட்டத்தில் இருந்த ஒரு மாணவன், “சார்… அப்போ ஆறு மாசமும் நாங்க பாவம்னு சொல்லுங்க” என்று சத்தமிட…
“ஆமாம் வேற வழியே இல்லை” என்று சிரித்தவர்.
“சரி ஒவ்வொருத்தரா உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள். நீங்கள் எதுக்காக இந்த துறையை தேர்ந்து எடுத்தீங்கன்னு சொல்லுங்க” என்றார்.
அவர் சொன்னதும் ஒவ்வொரு மாணவறாக எழுந்து தங்கள் பெயரையும்.. தாங்கள் இங்கே சேர்ந்ததிற்கான காரணத்தையும் தங்கள் கனவுகளையும் பற்றி கூறினர்.
அடுத்து எழுந்த தேவி தன்னை அறிமுகம் செய்துகொண்டவள். “சார் நான் மத்தவங்களை மாதிரி எந்த லட்சியமும் வெச்சிட்டு இங்கே வந்து சேரலை” என்றாள்.
அவள் சொன்னதை கேட்டு, “என்னமா சொல்றே? அப்புறம் ஏன் இந்த குரூப்பில் சேர்ந்தங்க?” என்றார்.
இலக்கியாவின் அருகில் அமர்ந்து இருந்த சுனித்ஐக் காட்டி, “இவன் என் அத்தை பையன் தான் சார்.
இவனுக்கு பெரிய செப் ஆகணும்னு ரொம்ப ஆசை. அதனால இங்கே வந்து சேர்ந்துக்கிட்டான். இவன் இங்கே வந்து சேர்ந்ததும் என் வீட்டில் இருப்பவங்களும், ‘உனக்கு ஒழுங்கா சுடுதண்ணி கூட வெக்க தெரியாது.
நாளைக்கு உன்னை கல்யாணமா பண்ணிக்க போறவன் கிட்டே எங்களால பேச்சு வாங்க முடியாதுன்னு இவன் கூடவே என்னையும் இந்த குரூப்ல சேர்த்து விட்டுட்டாங்க” என்றாள்.
அவள் சொன்னதை கேட்டு கோபிநாதன் முதற்கொண்டு அனைவரும் சிரிக்க.. “சரி மா அப்போ நீ இங்கே வந்ததுக்கு காரணம் உன் அத்தை மகன் தான்னு புரிஞ்சுது. நீ உக்காரு” என்று சொல்லிவிட்டு அடுத்து அமர்ந்து இருந்த இலக்கியாவைப் பார்த்து, “நீ உன்னை பத்தி சொல்லுமா” என்றார்.
தயங்கிய படியே எழுந்து நின்ற இலக்கியா தன்னை அறிமுகம் செய்து கொண்டு, “இன்னும் ஆறு மாசத்துல எனக்கு கல்யாணம் நடக்க போகுது சார்.
நான் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காம படிக்கிறேன்னு சொன்னேன். உடனே என் மேல அக்கறை இருக்க என்னோட அண்ணன் வினித் நான் போட்டு கொடுத்த டீயை குடிச்சிட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினவர்.
என்னோட திறமை இப்படியே முடிஞ்சிர்க் கூடாதுன்னு என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டாங்க. இங்கே வந்து இவங்க எல்லாரும் பேசுறதை பார்த்து எனக்கும் நல்லா படிச்சு ஒரு பெரிய ஹோட்டலுக்கு செப் ஆகணும்னு ஆசை வந்திருச்சு” என்றாள்,
இலக்கியாவைப் பார்த்து சிரித்த கோபிநாதன், “உனக்கு பிடிச்ச மாதிரி பெரிய செப் ஆக என்னோட வாழ்த்துக்கள்” என்றவர் அடுத்து இலக்கியாவின் அருகில் அமர்ந்து இருந்த சுனித்ஐப் பார்த்து, “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.
உனக்கும் சேர்த்து உன் மாமன் பொண்ணு பேசிட்டா” என்றவர்.
“இன்னிக்கு முதல் கிளாஸ் நம்ம இலக்கியா கிட்டே இருந்து ஆரம்பிக்கலாம்” என்றவர் இலக்கியாவை தன்னிடம் அழைத்து.
“நீ டீ நல்லா போடுவேன்னு உன் அண்ணா ரொம்ப பெருமையா சொன்னாருன்னு சொன்னியே. அதே மாதிரி டீ இப்போ நீ போட்டு காட்டுற..
நானும் உன்னோட ரெண்டு ஃபிரெண்ட்ஸும் நீ போட்டு கொடுக்கற டீயை குடிச்சி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றோம்” என்றார்.
இலக்கியாவும் முதல் நாள் முதல் வகுப்பில் தன் திறமையை தன் ஹெச்ஓடி இடமும் தனக்கு புதிதாக கிடைத்த நண்பர்களிடமும் காட்ட ஆவலாக “சரி” என்று தலையாட்டியவள்.
அங்கே சேர்ந்து இருக்கும் மாணவர்களின் பயிற்சிக்காக வைத்து இருந்த அடுப்பில் டீ போட தயாரானாள்.
இலக்கியாவின் டீயைப் பற்றிய விபரீதம் தெரியாமலேயே கோபிநாதன், தேவி, சுனித் மூவரும் காத்திருந்தனர்.
