Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல் 28

அஸ்க்..லஸ்கா..காதல் 28

by Layas Tamil Novel
264 views

EPISODE 28

மாலை காலேஜ் முடிந்ததும் ஆரா சொன்ன இடத்தில் இலக்கியா காத்திருந்தாள்.

சொன்னது போலவே தன் கிளாஸ் முடிந்ததும் ஆராவும் இலக்கியா இருந்த இடத்திற்கு வந்தவள்.

“நீ வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா?” என்றாள் ஆரா.

“இல்லை இப்போதான் வந்தேன்” என்று இலக்கியா சோகமாக பதில் அளித்தாள்.

இலக்கியா சோகமாக இருப்பதை பார்த்த ஆரா, முதல் நாள் காலேஜில் அவளை யாரும் ராக்கிங் செய்து விட்டார்களோ என்று நினைத்தவள்.

“ஏய் இலக்கியா, என்ன ஆச்சு… ஏன் ஒரு மாதிரி இருக்க? ஃபர்ஸ்ட் டே காலேஜ்ல உன்னை யாரும் எதுவும் சொல்லிட்டாங்களா? ராக்கிங் எதுவும் பண்ணிட்டாங்களா? அப்படி யாராவது உன்னை எதுவும் சொல்லி இருந்தா இப்பவே சொல்லு. நான் என் அண்ணன் கிட்ட சொல்லி அவங்கள ஒரு வழி பண்ணிடறேன்” என்று ஆரா பதட்டமாக இலக்கியாவிடம் கேட்க..

“அதெல்லாம் ஒன்னும் இல்லடி. நம்ம வீட்டுக்கு போகலாமா? எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு” என்று இலக்கியா மிகவும் டல்லாக பேசவும்.

இலக்கியாவுக்கு ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ஆரா தன் டிரைவரை வரச் சொல்லி முதலில் இலக்கியாவை ஏற்றிக் கொண்டு கிளம்பினாள்.

காரில் ஏறி அமர்ந்ததும் இலக்கியா இருக்கையில் சாய்ந்து அமர்ந்து வர…

அவள் அருகில் இலக்கியாவைப் பார்த்து கவலையாக அமர்ந்து இருந்த ஆரா, “ஹே இலக்கியா, என்ன ஆச்சு? தயவுசெய்து சொல்லு. ஏன் ஒரு மாதிரியா இருக்க? காலேஜ்ல எதுவும் நடந்துச்சா? ஏன் இவ்வளவு டல்லா இருக்கிற?” என்று விடாமல் கேள்வி கேட்க..

ஆராவைப் பார்த்து திரும்பி, “ஏனோ இந்த காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று வினித் அண்ணா சொன்னது ரொம்ப சரியா போயிடுச்சு இல்ல?” என்றாள் இலக்கியா கவலையாக.

இலக்கியா சொல்வதை புரியாமல் பார்த்த ஆரா, “நீ என்ன சொல்ற இலக்கியா? எனக்கு எதுவும் புரியல” என்றாள்.

“ஒரு சின்ன தப்பு பண்ணதுக்கு என்னை 108 தடவை தோப்புக்கரணம் போட வச்சுட்டாங்கடி இந்த காலேஜ்ல. அப்படி நான் என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்?” என்று அழ ஆரம்பித்தாள் இலக்கியா.

“என்னடி சொல்ற? 108 தடவை உன்னை தோப்புக்கரணம் போட வச்சுட்டாங்களா? யார்? எப்படி செஞ்சது? நீ என்ன அப்படி தப்பு பண்ணிட்ட?” என்று கேட்டாள் ஆரா.

“நான் எதுவுமே பண்ணலடி. ஒரு சின்ன தப்பு. அதுவும் எனக்கு தெரியாமத்தான் நான் பண்ணினேன்.

ஆனால் அதை என்னமோ கொலைக்குற்றம் செஞ்ச மாதிரி அதையே பிடிச்சுக்கிட்டு என் ஹெச்ஓடி அந்த கோபிநாதன் இருக்கானே, அவன் என்னை எல்லாரும் முன்னாடியும் 108 தடவை தோப்புக்கரணம் போட வெச்சிட்டான்” என்று கண்களை தேய்த்தபடி வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆராவிடம் கேட்டாள் இலக்கியா.

“அப்போ இருந்து தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன்னு சொல்லிட்டு இருக்க…

அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு சொல்ல மாட்டேங்குறாளே” என்று யோசித்த ஆரா.

“ஏய் இலக்கியா, இங்கே பாரு…” என்று அவளை தன் பக்கம் திருப்பியவள்.

“இங்கே பாரு. உனக்கு தண்டனை கொடுத்த அந்த ஹெச்ஓடி யை என் அண்ணா கிட்டே சொல்லி அவரை இந்த காலேஜில் இருந்து தூக்கிடலாம் சரியா? நீ எதுவும் கவலை படாதே” என்று இலக்கியாவை தேற்றினாள் ஆரா.

“ஏய்… ஆரா, நீ அவசரப்பட்டு உன் அண்ணாகிட்டே போய் எதையும் சொல்லிவைக்காதே.

உன் அண்ணா இன்னிக்கு காலையில கோபமா உங்களுக்கு அத்தை, சித்தப்பா கிட்டே எல்லாம் பேசுனதை பார்த்தாலே எனக்கு இன்னமும் பயமா இருக்கு” என்றாள் இலக்கியா.

“என்ன டி நீ? உன்னை இந்த அளவுக்கு டிரேட் ஆகுற அளவுக்கு உன் சார் தண்டனை கொடுத்து இருக்காரு. நீ என்னடான்னா உங்களுக்கு சாரை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்றே” என்றாள் ஆரா.

“தப்பு எங்க சார் மேல இருந்தா தானே அவரை உன் அண்ணா கிட்டே மாட்டி விட… ஆனா தப்பு பண்ணினது நான் தானே” என்றாள் இலக்கியா.

“அப்படி என்ன டி தப்பு பண்ணின… முதல்ல அதை நீ சொல்லு” என்றால் கடுப்பான ஆரா.

“அது.. அது வந்து…” என்று இலக்கியா தயங்க…

“ஏய் ஒழுங்கா இப்போ சொல்ல போறியா இல்லையா? நீ என் பொறுமையை ரொம்ப சோதிக்குறே” என்ற ஆரா.

“நீ மட்டும் இப்போ சொல்லலை நான் இப்படியே கார் கதவை திறந்து கீழே குதிச்சிடுவேன் டி…” என்று பொறுமை இழந்து ஆரா, இலக்கியாவிடம் சொல்லிக்கொண்டே ஓடிக் கொண்டு இருந்த காரின் கதவை திறக்கப் போக..

“ஏய்… ஆரா, என்ன டி பண்ணுறே…” என்று இலக்கியா, ஆராவின் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தாவள்.

“டென்ஷன் ஆகாத ஆரா, நான் சொல்றேன்” என்ற இலக்கியா. தன் கிளாஸ் ரூமில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

கோபிநாதன்னிடம் சொன்னது போல தேவி, சுனித் மற்றும் கோபிநாதன்னுக்கு டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள் இலக்கியா.

இலக்கியா கொண்டு வந்த டீயை கையில் எடுத்து பார்த்த கோபிநாதன் அதன் நிறத்தை பார்த்து நன்றாக தான் டீ போட்டு இருப்பாள் போல என்று நினைத்தவர் டீயை மூக்கின் அருகில் கொண்டு சென்று அதன் மணம் எப்படி இருக்கிறது என்று முகர்ந்து பார்த்தவர்.

சட்டென நிமிர்ந்து தேவியையும், சுனித்தையும் பார்த்து, “டீயை குடிக்காதீங்க…” என்று சத்தம்மிட…

அவர் இலக்கியா கொடுத்த டீயை குடிக்க வேண்டாம் என்று எச்சரிப்பதற்குள் அவர்கள் இருவரும் இலக்கியா கொடுத்த டீயை குடித்துவிட…

அவர்கள் இலக்கியாவின் டீயை வாயில் வைத்து ஆர்வத்தில் பாதியை குடித்துவிட…

டீ குடித்த அடுத்த நொடி இருவரும் வாயை பொத்திக் கொண்டு கோபிநாதன்னைப் பார்க்க…

“நான் சொல்றதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு?” என்று அவர்களை கடிந்து கொண்டவர் இலக்கியாவைப் பார்த்து முறைக்க..

தேவியும், சுனித்தும் டீ குடித்ததும் வந்துவிட நேராக பாத்ரூமை நோக்கி இருவரும் தலை தெறிக்க ஓடினர்.

“இவங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி தலை தெறிக்க ஓடுறாங்க?” என்று இலக்கியா குழப்பமாக வெளியே ஓடிய தன் நண்பர்களை பார்த்தவள்.

திரும்பி கோபிநாதன்னைப் பார்த்து, “சார், நீங்க நான் போட்ட டீயை குடிக்கலையா?” என்று ஆர்வமாக கேட்டாள்.

தேவியும், சுனித்தும் நின்று இருக்கும் நிலையை பார்த்தும் கூட புரிந்து கொள்ளாமல் தன்னை டீ குடிக்க சொல்லும் இலக்கியாவை முறைத்த கோபிநாதன்.

“ஸ்டுடென்ட்ஸ், நான் சொல்ற வரைக்கும் இலக்கியாவை சமையல் செய்ய இனிமேல் யாரும் ஆளா பண்ண கூடாது” என்றவர்.

“என்ன இலக்கியா, உங்களுக்கு அண்ணா உன் டீயை ஆஹா… ஓஹோன்னு புகழ்ந்து தள்ளினாரும்னு சொன்னனே…

இந்த மாதிரி டீயை தான் நீ உன் அண்ணாவுக்கு போட்டு கொடுத்தியா?” என்றான்.

“ஆமா சார்” என்றவள், “ஏன் சார் என்னை சமைக்க வேண்டாம்னு சொல்றீங்க?” என்றாள் பாவமாக.

இலக்கியாவைப் பார்த்து திட்டுவதா வேண்டாமா என்ற ரீதியில் யோசித்த கோபிநாதன்.

“உன் அண்ணா காரணமா தான் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டு இருக்காரு.

நீ ஒழுங்கா சமையல் கத்துக்கனும்னு தான் உன்னை சரியான இடத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டு இருக்காரு.

நான் சொல்ற வரைக்கும் நீ இங்கே கத்துக்கா வந்த ஸ்டுடென்ட்ஸ்க்கு எடுபிடி வேலை பார்த்தால் போதும்.

சமையல் செய்றது ஒன்னும் அவ்வளவு ஈஸியா இல்லை. நீ நினைச்ச மாதிரி கையில் கிடைக்குறதை எல்லாம் எடுத்து போட்டு எதுவும் செய்து வந்து கொடுக்க…

இது ஒரு தவம் மாதிரி. சமைக்கும்போது நாம எந்த மனநிலையில் சமையல் செய்யுறோமோ, அதே நிலையில் தான் உணவோட ருசியும் இருக்கும்” என்றவர்.

“என்னிக்கு நீ ஒரு அளவுக்கு தெளிவாகுறியோ, அன்னிக்கு நான் உன்னை சமைக்க விடுறேன்” என்று கோபிநாதன் சீரியஸ் ஆக இலக்கியாவுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருக்க…

இலக்கியா “சரி” என்று தலையை ஆட்டியவள், “சார் அந்த டீ ஆறிட போகுது… குடிங்க சார்.

டீ ஆறினா… அப்புறம் டேஸ்ட் மாறிடும் சார்” என்றவள் மீண்டும் கோபிநாதன்னிடம் அவள் செய்த டீயை குடிக்க சொல்ல..

இவ்வளவு நேரம் தான் சொன்னதை எல்லாம் எதுவும் காதிலேயே வாங்காமல் தன்னை டீ குடிக்க சொல்லி நச்சரிக்கும் இலக்கியாவைப் பார்த்து காண்டு ஆன கோபிநாதன்.

தன் கையில் இருந்த டீயை இலக்கியாவிடம் நீட்டி, “நீ போட்ட டீயை நீ ஒரு தரம் ஆச்சும் குடிச்சு பாத்து இருக்கியா?” என்று கேட்டார்.

இலக்கியா “இல்லை” என்று தலையை ஆட்ட..

“அப்போ இன்னிக்கு நீ போட்டுட்டு வந்த டீயை நீ இன்னிக்கு கண்டிப்பா குடிக்கணும்.

அப்போதான் உன் அண்ணா உன்னை இங்கே எதுக்காக சேர்த்துவிட்டார்னு உனக்கு புரியும்” என்ற கோபிநாதன், இலக்கியாவை அவள் போட்டு வந்த டீயை குடிக்க சொல்ல…

“நீங்கள் இவ்வளவு தூரம் சொல்றதுனால நான் போட்ட டீயை நான் முதன் முதலா குடிக்க போறேன் சார்” என்றவள் மிகவும் பவ்யமாக கோபிநாதன் கையில் இருந்த டீ கோப்பையை வாங்கி ஒரு வாய் குடித்து இருப்பாள்.

அவ்வளவு தான் தன் வாயில் கவிழ்த்த மொத்த டீயையும் தன் எதிரில் நின்று இருந்த கோபிநாதன்னின் முகத்திலேயே துப்பி விட்டாள்.

அவள் போட்ட டீயில் இந்த முறை அவ்வளவு உப்பை அள்ளிக் கொண்டு இருந்தாள் இலக்கியா.

தன் கையில் இருந்த டீ கோப்பையை பார்த்து விட்டு… “ச்சே… இது எல்லாம் ஒரு டீயா?” என்று தான் போட்ட டீயை தானே குடிக்க முடியாமல் திட்டிக் கொண்டவள் தன் எதிரே நின்று இருந்த கோபிநாதன்னை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தாள்.

கோபிநாதன் நின்று இருந்த நிலையைப் பார்த்து அப்படியே அதிர்ந்த இலக்கியா, அப்போது தான் தான் போட்ட டீயை வாயில் ஊற்றியதும் அத்தனை குடிக்க முடியாமல் தன் எதிரே நின்று இருந்த கோபிநாதன்னின் முகத்திலேயே துப்பி விட்டாள் என்று உணர்ந்தாள்.

தன் முகத்தில் இலக்கியா துப்பிய டீயை துடைத்த படி இலக்கியாவைப் பார்த்தவர்.

“கிளாஸ்க்கு வெளியே போய் நின்னு எல்லாரும் பாக்குற மாதிரி 108 தடவை தோப்புக்கரணம் போடு” என்றார்.

இலக்கியா “என்னது 108 ஆஹ்?” என்று வாயை பிளந்தவள் கோபிநாதன்னிடம், “சார்… சார்,.. இந்த ஒரு தரம் என்னை மன்னிச்சு விட்ருங்க.. அடுத்த முறை இப்படி நடக்காத பாத்துக்கிறேனே” என்று கோபிநாதன்னை ஐஸ் வைக்க பார்க்க…

“இல்லை இல்லை அதிகம் ஐஸ் வெச்சுட்டே. நீ போய் ஒழுங்கா நான் சொல்றதை செய்” என்று இலக்கியாவை கோபிநாதன் அதட்ட…

அவன் சொன்னது போல 108 தரம் தோப்புக்கரணம் போட ஆரம்பித்தாள் இலக்கியா.

இவ்வளவு நேரம் இலக்கியா சொன்னதை எல்லாம் கேட்டு சிரித்துக் கொண்டு இருந்த ஆரா.

“இங்கே டீ போட்டு எங்களை கஷ்டப்படுத்தியது போதாதுன்னு அங்கே உங்க சாரையும் ஒரு வழி பண்ணிட்டு வந்து இருக்க போல இருக்கே” என்று சிரித்துக் கொண்டே தன் வீடு வந்துவிடவும்.

இலக்கியாவை வர சொல்லிவிட்டு தான் பாட்டுக்கு இறங்கி ஆரா தன் அறைக்கு சென்றுவிட..

“இரு ஆரா என்னை பார்த்து கிண்டல் பண்ணி சிரிச்சுட்டு போறே…

உனக்கு ஒரு நாள் என் காலேஜில் போட்ட மாதிரி டீயை உனக்கு போட்டு தரலை என்ன பேரு இலக்கியா இல்லை” என்று இலக்கியா மார்தட்டிக் கொண்டு வீட்டிற்குள் நுழைய…

இலக்கியா எப்போது வருவாள் அவள் இதழை எப்போது சுவைக்கலாம் என்று காத்திருந்த தமிழ்.

இலக்கியா வீட்டிற்குள் காலை எடுத்து வைக்கும் முன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவள் இதழில் முத்தமிட்ட படி தன் அறை நோக்கி சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured