Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல்.. 29

அஸ்க்..லஸ்கா..காதல்.. 29

by Layas Tamil Novel
215 views

EPISODE-29

தற்போது காலேஜ்ல இருந்து வருவாள் அவளை பார்க்கலாம் என்று நீண்ட நேரமாக அவளுக்காக காத்திருந்தான் தமிழ்.

அவன் டாக்டர் நண்பன் ஆதித்யா இரண்டு நாளைக்கு எந்த வேலையும் செய்யாமல் ரிலாக்ஸாக இருக்கச் சொல்லி இருக்க…

எந்த வேலையும் செய்யாமல் தமிழ்ற்கு அந்த நாள் நகரவில்லை. யாரிடமும் வெட்டி கதை பேசி நேரம் செலவழிக்கும் ரகமும் கிடையாது.

அவன் யாரிடமாவது உதாரணமாக பேசுவது மிகவும் அரிது.

வினித்தோ காலை வந்தவன் ஆபீஸ் விஷயமாகவே பேசிக் கொண்டிருக்க ஏனோ தமிழ்ற்கு அதில் கவனம் செலுத்தும் மனநிலையை வரவில்லை.

ஹாலில் அமர்ந்திருந்த தமிழ் வாசலில் ஆராவின் கார் சத்தம் கேட்கவும் இலக்கியா அவளோடு சேர்ந்து வந்திருப்பாள் என்று எழுந்து வாசலுக்கு சென்றவன் ஆரா முதலில் இறங்கி உள்ளே சென்று விட இலக்கியா காரை விட்டு மெதுவாக இறங்கியவள்.

அவளை 108 தோப்புக்கரணம் போடச் சொல்லி இருந்ததால் கால்கள் இரண்டும் அவளுக்கு கன்னிப் போய் இருந்தது.

அதனால் இலக்கியாவால் சரியாக நடக்க முடியாமல் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் படியேறி வீட்டிற்குள் வந்து கொண்டு இருக்க…

அவள் களைப்பாக வருவதை பார்த்த தமிழ் வேகமாக அவள் அருகில் சென்று சிறிதும் தாமதிக்காமல் இலக்கியாவை தன் கைகளில் ஏந்த…

“ஐயோ தமிழ்… என்ன பண்ணிட்டு இருக்க.. என்னை முதல்ல கீழே இறக்கி விடு” என்று இலக்கியா அவன் கைகளில் இருந்து இறங்கப் போக..

அவளை கீழே இறங்க விடாமல் அவள் இடையை இருக்கிப் பிடித்தவன் அவளைப் பார்க்க…

அவன் தன்னை முறைக்கவும் அமைதியாகி அவன் கைக்குள் அடங்கிக் கொள்ள… அவள் செயலில் லேசாக சிரித்தவன் குனிந்து முத்தமிட ஆரம்பித்தான்.

இதை எதிர்பாராத இலக்கியா அவனை தடுக்க முடியாமல் தடுமாறினாள்.

அவளை முத்தமிட்டபடியே தன்னறை நோக்கி சென்ற தமிழ் காலால் கதவை உதைத்து திறந்தவன் அறைக்குள் இலக்கியாவுடன் செல்ல அது ஆட்டோமேட்டிக் கதவு என்பதால் இவர்கள் இருவரும் அவன் அறைக்குள் வந்ததும் கதவு தானாக சாட்றிக் கொண்டது.

அவளை தூக்கிக் கொண்டு வந்து தன் மெத்தையில் போட்டவன் அவள் மேல் படர்ந்தபடி முத்தத்தை தீவிர படுத்தினான் தமிழ்.

முதலில் அவனை தடுக்க நினைத்த இலக்கியா அவன் முத்தத்தில் தன் சுயம் இழந்து அவனோடு முத்தத்தில் கரைந்து போனாள்.

மிகவும் தீவிரமாக முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் இதழ்களை தன் வாய்க்குள் போட்டு மென்று தின்னாத குறையாகத்தான் அவள் இதழை வாட்டி வதைத்துக் கொண்டு இருந்தான்.

அவன் கீழே படுத்திருந்த இலக்கியாவுக்கு மூச்சு முட்ட… இலக்கியா மூச்சு வாங்க சிரமப்படுவதை உணர்ந்ததும் மெல்ல முத்தம் கொடுப்பதை நிறுத்தியவன் தன் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை பார்க்க…

இலக்கியா கண்கள் மூடி மெய் மறந்து மெத்தையில் படுத்து இருந்தால்.

அவளைப் பார்த்து சிரித்தவன் அவள் அருகில் மெத்தையில் சரிய…

சட்டென முத்தம் நின்றதும் தன்னருகில் தமிழ் படுத்ததையும் உணர்ந்தவள் திரும்பி தமிழ்ஐப் பார்க்க…

அவளை பார்த்தவாறு தலைக்கு கை கொடுத்து படுத்து இருந்த தமிழ், “என்ன? முத்தம் நல்லா இருந்துச்சா? கண்ண மூடி ரசிச்சிட்டு இருந்த?” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும் இலக்கியாவின் முகம் எல்லாம் சிவந்துவிட சட்டென மெத்தையில் படுத்து இருந்தவள் எழுந்து செல்லப் போக…

“எங்க போற? இங்க வா” என்று சொல்லி இழுத்து மீண்டும் அவளை கட்டிலில் தன்னருகில் படுக்க வைத்துக் கொண்டான்.

“சொல்லு, நான் கொடுத்த முத்தம் எப்படி இருந்துச்சு?” என்று கேட்டான்.

“இவனுக்கு என்ன? அறிவுங்குறது கொஞ்சம் கூட கிடையாதா… இவன் தாம் வெட்கமில்லாமல் எனக்கு முத்தம் கொடுக்கிறான்னா, அந்த முத்தத்தையும் கொடுத்துட்டு நல்லா இருக்கான்னு என்கிட்ட கேட்கிறான்” என்று அவனைப் பார்க்க..

“என்ன டி அப்படி பாக்குற? இன்னும் முத்தம் வேணுமா?” என்றான் தமிழ்.

“ம்ஹும்…” வேகமாக தலையாட்டி, “நான் ரூமுக்கு போறேன்” என்றாள்.

“ஏன்? இதுவும் உன்னோட ரூம் தானே?” என்றான் தமிழ்.

“என்ன!!!” அதிர்ச்சியாக அவனைப் பார்க்க…

“என்ன? கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் என்னோட ரூமும் உன்னோட ரூம் தானே…

எப்படியும் நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க போறோம். இப்போ இருந்தே என் கூடவே இருந்து பழகிக்கோ…” என்றான் தமிழ்.

மெத்தையில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து அவனைப் பார்த்து, “அப்படி எல்லாம் செய்யக் கூடாது… அது தப்பு…” என்றால் இலக்கியா.

“ஏன் தப்பு? இப்போ எத்தனையோ பேரு கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரே வீட்ல வாழ்றது இல்லையா? அது மாதிரியா நான் உன்னை என் கூட இருக்க சொல்றேன்.

நம்ம ரெண்டு பேரும் ஒரே அறையில் தான் இருக்க போறோம். வேற எதுவும் செய்யப் போறது இல்ல. புரியுதா?” என்றான் தமிழ்.

“அப்படி நம்ம ரெண்டு பேரும் ஒரே வீட்ல ஒரே அறையில் இருக்க கூடாதுன்னு சொல்லித் தானே தாத்தா என்னை இங்கே கூட்டிட்டு வந்து வச்சிருக்காரு.

இங்கே வந்தும் நீங்க அதே மாதிரி பேசுறீங்க” என்றால் இலக்கியா.

“எங்கே இருந்தாலும் நான் இப்படித்தான் பேசுவேன்” என்றான் தமிழ்.

“என் தாத்தாவை விடு. நீ என்ன நினைக்கிறேன்னு சொல்லு” என்றான் தமிழ், இலக்கியாவிடம்.

“நான் என்ன நினைக்கிறேன்னா?? எனக்கு புரியல” என்றால் இலக்கியா.

“நம்ம ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணா இருக்குறத பத்தி நீ என்ன நினைக்கிறன்னு கேட்டேன்” என்றான் தமிழ்.

“நாம ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி ஒண்ணா இருக்கணும்?” என்று அவனிடம் எதிர் கேள்வி கேட்டாள் இலக்கியா.

“நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க போறோம். இதுக்கு மேல என்ன வேணும்?” என்றான் தமிழ்.

“இல்ல நான் நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். கல்யாணத்துக்கு முன்னாடியே பையனும் பொண்ணும் நல்லா பேசி பழகி கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு மாதிரி பழக்கம்” என்றாள்.

“எங்க அம்மா சொல்லி இருக்காங்க. அவங்களோட தாத்தா பாட்டி எல்லாம் அந்த காலத்துல தாலி கட்டுற வரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க மாட்டாங்களாம்.

பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு மட்டும் தான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்பாங்களாம். அதுக்கப்புறம் தாலி கட்டின பிறகு தான் ஒருத்தர் வந்து ஒருத்தர் பார்த்துப்பார்களாம். அதுவும் அவங்க தாத்தா தான் பாட்டி முகத்தை பார்த்தாராம்.

பாட்டி அவர் முகத்தை பார்க்கவே ரொம்ப வெட்கப்படுவாங்கன்னு எங்க அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்” என்றால் இலக்கியா.

“அதனால இப்ப நீ என்ன சொல்ல வர?” என்று புருவம் உயர்த்தி தமிழ், இலக்கியாவிடம் கேட்க…

“அது வந்து… அது வந்து…” என்று கைகளை பிசைந்து கொண்டே இலக்கியா சொல்வதற்கு தயங்க…

அவள் கைகளுக்கு இடையில் தன் கையை பொருத்திய தமிழ், இலக்கியாவைப் பார்த்து, “ம்ம்ம்… சொல்லு. எப்படியும் என்கிட்ட சொல்லணும்னு முடிவு பண்ணிட்ட. சொல்லிடு” என்றான் தமிழ்.

“எங்க அம்மாவோட தாத்தா பாட்டி மாதிரி நீங்களும் நானும் என் கல்யாணம் முடியற வரைக்கும் ஒருத்தர ஒருத்தர பாத்துக்காம இருக்கணும்” என்றால் இலக்கியா.

“அப்படி இருக்கிறதுனால என்ன யூஸ்?” என்றான் தமிழ்.

“ஆறு மாசத்துக்கு பிறகு நமக்கு கல்யாணம் ஆகுற அன்று முதன் முதலா ரெண்டு பேரும்

பார்க்கும் போது ஒரு தனி விதமான உணர்வு நமக்குள்ளே உருவாகும் என்று எனக்கு தோணுது” என்றவள்.

“இப்போ நீங்க நடந்து கொள்வதெல்லாம் என்னை காசு கொடுத்து வாங்கிட்டேன் உரிமையில் தான் நடந்துக்கிறீங்கன்னு எனக்கு தோணுது.

உண்மையான அன்பும் காதலும் எப்படி இருக்குன்னு நான் அனுபவிக்கணும்னு நினைக்கிறேன்.

ஆறு மாசத்துல நமக்குள்ள என்ன வேணா நடக்கலாம்.

எந்த நேரமும் என்னை பார்க்கும் போதெல்லாம் கட்டிப்பிடிக்கணும் முத்தம் கொடுக்கணும்னு தோணுது உங்களுக்கு. ஆறு மாசம் கழிச்சு என்னை பிடிக்காமல் போகலாம்.

உங்ககிட்ட நெருங்கி வர தயக்கமா இருக்குற எனக்கு ஆறு மாசத்துக்கு உங்க கூடவே இருக்கணும்னு கூட எனக்கு தோணலாம்” என்றால் இலக்கியா.

“ஆறு மாசத்துக்கு பார்க்காம இருக்கிறதா? முடியவே முடியாது. என்னால் சுத்தமா முடியாது” என்றான் தமிழ்.

“நானா ஒன்னும் உங்ககிட்ட எதுவும் சொல்லலையே. நீங்களா தானே இப்போ என்கிட்ட கேட்டீங்க…

நீங்களே ஒத்துக்க மாட்டேன்னு சொன்னா என்ன பண்றது.

ஆறு மாசத்துக்கு ஒருத்தர் ஒருத்தர் பாத்துக்காம இருந்துதான் பார்ப்போமே. அப்போதாவது உங்களுக்கும் எனக்கும் இடையில ஒரு நெருக்கம் வருமானு பார்க்கலாம்” என்றால் இலக்கியா.

“ஏன் இப்போ இருக்கிற நெருக்கம் உனக்கு போதவில்லையா?” என்று அவள் கைக்குள் இருந்த தன் கையை விளக்கி அவள் இடையில் கை கொடுத்து தூக்கி தன் மடி மேல் அமர வைத்து கேட்டான் தமிழ்.

“நான் இந்த மாதிரி நெருக்கத்தை சொல்லல” என்று தன் இடையில் இருந்த அவன் கையை நாசுக்காக எடுத்து விட்டவள் அவன் மடியில் இருந்து இறங்கி கீழே நின்றவள்.

“நான் சொன்னது உங்க மனசும் என் மனசும் ஒருத்தரை ஒருத்தர் பத்தி தெரிஞ்சுக்கிட்டு புரிஞ்சுகிட்டு நெருங்கி வருவது… அதை பத்தி சொன்னேன்” என்றால் இலக்கியா.

“அப்போ நிஜமாகவே நீயும் நானும் இந்த ஆறு மாசம் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க கூடாதா?” என்றான் தமிழ்.

“இப்படித்தான் இருக்கணும்னு நான் உங்க கிட்ட சொல்லல…

இப்படியும் இருந்து பார்க்கலாம்னு தான் சொல்றேன். உங்க விருப்பம் என்னவோ அதுபடியே நான் இருந்துக்கிறேன்” என்றால் இலக்கியா.

அதன் பிறகு தமிழ் எதுவுமே பேசவில்லை. கட்டிலிற்க்கு கீழே நின்றிருந்தவளை எட்டிப்பிடித்து மீண்டும் மெத்தையில் படுக்க வைத்தவன் அவனும் அவள் அருகே படுத்துக் கொண்டான்.

அவள் என்ன என்பது போல தமிழ்இன் முகத்தை பார்க்க…

“எனக்கு தூக்கம் வருது. உன்னை எதுவும் நான் செய்யப் போறது இல்ல. நீயும் பேசாம படுத்து தூங்கு” என்றான் தமிழ்.

“இந்த நேரத்திலேயா? தூங்குறதா?” என்றவள், “எனக்கு உங்களுக்கு தூக்கம் வந்தா நீங்க தூங்குங்க. நான் என்னோட ரூமுக்கு போய் தூங்குகிறேன்” என்றால் இலக்கியா.

“ஏன் அங்க போய் தூங்குற? அவளுக்கு இங்க படுத்த தூக்கம் வராதா? பேசாம படு” என்றான் காட்டமாக..

தமிழ் கோபமாக சொல்லவும் வேறு எதுவும் பேச முடியாமல் அமைதியாக படுத்துக் கொண்டாள்.

அதன் பிறகு இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. அந்த அறையே மிகவும் அமைதியாக இருக்க…

“இந்த ஆறு மாசமும் நான் உன்னை பார்க்க வரலைன்னா நீ என்னை பத்தி கொஞ்சமாவது யோசிப்பியா? இல்லை தொல்லை விட்டது என்று இந்த ஆறு மாசமும் நிம்மதியா இருப்பியா?” என்று கேட்டான் தமிழ்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த இலக்கியா “எனக்கு தெரியல” என்றால்.

அதற்கு மேல் அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல் கண் மூடி படுத்துக் கொண்டான் தமிழ்.

சிறிது நேரத்தில் தமிழ்இடம் இருந்து சீரான மூச்சுக்காற்று வர… அவன் உறங்கி விட்டான் என்பதை உணர்ந்து இலக்கியா தன் மேல் போட்டிருந்த அவன் கையை விலக்க விட்டு எழுந்து கொள்ள முயற்சிக்க அவளை நகர விடாமல் இறுக்கமாக பிடித்த படியே தூங்கி இருந்தான் தமிழ்.

இரண்டு, மூன்று முறை முயற்சி செய்தவள் தோற்றுப் போய் அமைதியாக அவன் அருகில் படுத்து இருந்தால்.

தன் அருகில் தூங்கிக் கொண்டிருக்கும் தமிழ்இன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த இலக்கியா களைப்பில் அவளும் உறங்கிப் போனாள்.


இந்த தமிழ்க்கு பெரிய இவன்னு நினைப்பு…. மதியத்தில் இருந்து அந்த இலக்கியா காலேஜ் விட்டு எப்போ வருவா? அவ கூட தனியா பேசலாம்னு காத்திருந்தா காலேஜ் விட்டு அவ விடியவே வரவே இல்ல.

அவளை என்னவோ பொக்கிஷம் மாதிரி பாத்துக்குறான். அவன் தங்கச்சி கூடையே காலேஜ் அனுப்பிவிட்டு திரும்பவும் அவர் தங்கச்சி கூடையே கூட்டிட்டு போயிட்டான்.

அந்த இலக்கியாவை தனியா விடவே மாட்டேங்குறான் என்று நினைத்த தாஸ், “இப்படி எல்லாம் இவளுக்காக காலேஜுக்கு வெளியே காத்து இருக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல.

காலேஜுக்கு உள்ள போய் அவளை மீட் பண்ணி ஆகணும். அதுக்கு எதுவும் வழி இருக்கான்னு முதல்ல யோசிக்கணும்” என்று நினைத்தான் தாஸ்.

இலக்கியாவுக்காக பல நாட்களாக காலேஜிற்கு வெளியே காத்திருந்து சலித்தவன் போல தாஸ் புலம்பிக் கொண்டான்.

அவள் காலேஜ் சென்றது இன்று ஒரு நாள் தான். அந்த ஒரு நாள் கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மணி நேரம் காத்திருந்திருப்பான். அதற்கு இப்படி சலித்துக் கொள்கிறான்.

தாஸ்இன் பிஏ அவன் அறை கதவை தட்டிக் கொண்டு உள்ளே வர…

இலக்கியாவை தனியாக எங்கேயும் விடாமல் பொக்கிஷம் போல பாதுகாப்பதை நினைத்து கடுப்பாக அமர்ந்திருந்தவன் அவன் பிஏ உள்ளே வரவும், “என்ன?” என்றான் கடுப்பாக.

“உங்க போன்” என்ற வேகமாக தாஸ்இன் போனை அவன் முன் மேஜையில் வைத்த பிஏ, “நீங்க உங்க போன காரிலேயே விட்டுட்டு வந்ததா டிரைவர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாரு” என்றான்.

“இதுக்குத்தான் உள்ளே வந்தானா?” என்று நினைத்த தாஸ் “சரி நீ போ” என்று அவனை அனுப்பி விட்டு தன் போனை என் கையில் எடுக்க…

அது சரியாக தாஸ்இன் போனிற்கு தமிழ்இன் சித்தப்பா மகன் சேகர் அழைத்திருந்தான்.

அவன் அழைத்துப் பார்த்ததும் “இவன் எதுக்கு எனக்கு கால் பண்றான்?” என்று போல யோசித்தவன் காலை அட்டென்ட் செய்து “ஹலோ” என்றான் தாஸ்.

“உனக்கு என் மேல கோபம் தீரலையா? உன் குரல்லையே அத்தன கடுப்பு தெரியுது.”

“ஆமா கடுப்பா தான் இருக்கேன். இப்போ அதுக்கு என்ன?

முதல்ல நீ எதுக்கு எனக்கு போன் பண்ண? அதுதான் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அன்னைக்கே உன் கிட்டே நான் சொன்னேன்…. மறுபடியும் எதுக்கு நீ எனக்கு கால் பண்ற?” என்றான் தாஸ்.

“சும்மா கோச்சுக்காத பார்ட்னர். கேம் விளையாடி ஜெயிச்சுட்டேன். அது ஒரு குத்தமா? அந்த கடுப்புல என் கூட பேசவே மாட்டேன்னா என்ன அர்த்தம்? நீயும் நானும் என்ன அப்படியா பழகிட்டு இருக்கோம்?

இந்த ஒரு சின்ன விஷயத்துக்கு கூடவா நீ இப்படி கோபப்படுவ?” என்றான் சேகர்.

“என்னது சின்ன விஷயமா!!! என்கிட்ட சீட்டு ஆட்டத்துல விளையாடி ஒன்றரை கோடி வரைக்கும் ஆட்டைய போட்டவன் இல்லை நீ….உனக்கு அது சின்ன விஷயமாத்தான் தோணும்.

எனக்கு அந்த ஒன்றரை கோடி போனதுல கூட கவலை இல்லை. உன்கிட்ட போய் தோத்துட்டேன் பாரு அது தான் எனக்கு கடுப்பா இருக்கு. தாஸ், இப்ப எதுக்கு நீ தேவை இல்லாம எனக்கு போன் பண்ணி இருக்க…

முதல்ல எதுக்கு போன் பண்ணியோ அந்த விஷயத்தை சொல்லிட்டு சீக்கிரமா போனை வை… எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றான் தாஸ்.

“ஓகே தாஸ், ரொம்ப டென்ஷனாகாத. விடு, பாஸ்ட் இஸ் பாஸ்ட். அதை மறந்துடுவோம். நான் உனக்கு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கால் பண்ணினேன்” என்றால் சேகர்.

“அப்படி என்ன முக்கியமான விஷயம்?” என்றான் தாஸ்.

“நான் இப்போ என்னோட தாத்தா வீட்ல தான் இருக்கேன். எங்க குடும்பம் மொத்தமும் இங்கதான் இருக்கு. தமிழ் கூட இங்கதான் இருக்கான்” என்றான் சேகர்.

தமிழ் அவன் தாத்தா வீட்டில் இருக்கிறான் என்பதை கேள்விப்பட்டதும் தமிழ் அங்கு இருந்தால் கண்டிப்பாக அவனுடன் இலக்கியாவும் இருப்பாள் என்று யோசித்தவன்.

அதை சேகர்இடம் கேட்காமல், “நீ உன் தாத்தா வீட்டில் இருக்கிறதுதான் முக்கியமான விஷயமா? இதை சொல்லத்தான் எனக்கு கால் பண்ணியா? ஒழுங்கா போனை வை” என்று தாஸ் சொல்ல…

“என்ன பாஸ் சும்மா எதுக்கு எடுத்தாலும் இப்படி டென்ஷன் ஆயிட்டு இருக்க? முதல்ல பொறுமையா நான் சொல்றதை கேளு” என்ற சேகர்.

“நாங்க எல்லாம் எங்க தாத்தா வீட்ல இருக்கோம்னு சொன்னேனே. சும்மா இங்கே வந்திருக்கோம் என்று நினைத்தாயா? இதுதான் இல்ல. மலேசியா போயிருந்த தமிழ் அங்கே ஒரு பொண்ணை ஏலத்துல விலைக்கு வாங்கிட்டு இங்கே கூட்டிட்டு வந்து இருக்கான்.

அவளை இங்கே கூட்டிட்டு வந்தது மட்டும் இல்லாம இங்க இருக்கிற எல்லார்கிட்டயும் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லி தன்னோடவே வச்சிருக்கான்.

அந்த பொண்ணு அவன் கல்யாணம் பண்ண கூடாதுன்னு ஏன் அத்தை ரேவதி பிரச்சனை பண்ணிட்டு இங்க வந்து இருக்காங்க.

அவங்க கூட சப்போர்ட் பண்ற மாதிரி நானும் என் அப்பாவும் இங்கே வந்திருக்கேன்” என்றவன்.

“இதைவிட ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, அவன் கூட ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தான்னு சொன்னேனே, அந்த பொண்ணு சும்மா எப்படி இருக்கா தெரியுமா? தங்கத்துல செய்து வைத்த சிலை எப்படி தகதகன்னு மின்னுமோ, அந்த மாதிரி தகதகன்னு மின்னுறா அந்த தமிழ் பக்கத்துல நிக்கும் போது.

அந்தப் பொண்ண எப்படியாவது கரெக்ட் பண்ணி உன் கிட்ட கூட்டிட்டு வரலாம்னு ஐடியா பண்ணிதான் உனக்கு இப்போ கால் பண்ணினேன்.

எப்போ எந்த பெண் கூட இருந்தாலும் உன்னை விட்டுட்டு இருந்திருக்கேன்.

அவளை பார்த்ததுமே அப்பவே அவளை தூக்கிட்டு போகணும்னு தோணுச்சு எனக்கு. ஆனா அந்த தமிழ் அவள் கூடவே ஒட்டிக்கிட்டு திரிகிறான். அவளை தனியாக விட மாட்டேங்குறான்.

இன்னிக்கு கூட பாரு. அவ காலேஜ்ல இருந்து வந்து வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்கல. அவளை அப்படியே கையில தூக்கிட்டு அவன் ரூமுக்கு போயிட்டான்.

அவங்க ரெண்டு பேரும் ரூமுக்குள்ள போய் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுது இன்னும் வெளியே வரவே இல்ல” என்றவன்.

“இப்போ சொல்லு. நீ இன்னமும் என் மேல கோபத்தோடுதான் இருக்கப் போறியா இல்ல… என் கூட சமாதானம் ஆகிட்டு அந்த இலக்கியாவை என் கூட சேர்ந்து அனுபவிக்க போறியா?” என்றான் சேகர்.

“ஆஹா இவனை மறந்துட்டோமே. இவன் கூட காண்டாக்ட் வச்சுக்கிட்டு எப்படி அந்த இலக்கியாவை இவன் மூலமா சந்திக்கலாம்னு யோசிக்காம விட்டுட்டேன்” என்று நினைத்துக் கொண்ட தாஸ்.

“இப்படி ஒரு சூப்பரான ட்ரீட் எனக்கு நீ கொடுக்க போற. அப்போ உன்கிட்ட ஒன்றரை கோடி இல்லை இன்னும் 10 கோடி விட்டுக் கொடுத்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை” என்றவன்.

“அந்த தமிழ் தான் அந்த பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கான்னு சொல்ற… அப்புறம் எப்படி அவன்கிட்ட இருந்து அந்த பொண்ணு பிரிச்சு கூட்டிட்டு வருவ?” என்றான்.

“இது என்ன அவ்வளவு பெரிய கஷ்டமான விஷயமா? அவளே அவன் கொடுத்த காசுக்காக தான் அவன் கூட வந்து இருக்கா. அதை விட அதிகமா காசு நாம அவகிட்ட கொடுத்தா அவன்கிட்ட இருந்து நம்மகிட்ட வந்துட போறா…” என்றவன்.

“நீ கொஞ்சம் பொறு. நான் இன்னும் ரெண்டு நாள் இங்கே தான் இருக்க போறேன். அதுக்குள்ள முதல்ல அந்த இலக்கியா கிட்ட பேசி அவள எப்படியாவது என் வழிக்கு கொண்டு வந்துடறேன். மத்தத அப்புறம் பாத்துக்கலாம்” என்றான் சேகர்.

“சரி எது செய்தாலும் சீக்கிரமா செய். நீ வேற அந்த பொண்ணு தங்க சிலை மாதிரி தகதகன்னு சொல்லிட்ட. எனக்கு இப்பவே அவளை பார்க்கணும் போல இருக்கு” என்றான் தாஸ்.

“எனக்கு தெரியும் தாஸ் எங்க அடிச்சா நீ எங்க விழுவேன்னு… பொண்ணுன்னு சொன்னதும் எப்படி இறங்கி வந்து வெட்கமில்லாமல் பேசுற பாத்தியா?” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்ட சேகர்.

“உன்னை வச்சுத்தான் நான் தமிழ்கிட்டே இப்போ இருக்கிற அந்தஸ்து, அதிகாரம் இதை எல்லாமே எனக்கு சாதகமா மாத்திக்க முடியும்.

அவன் உன்னைத்தான் எதிரியா நினைச்சுட்டு இருக்கான். ஆனா உன் மூலமா தான் நான் அவனோட பிசினஸ் மொத்தத்தையும் என் கைக்கு கொண்டு வரப் போறேன். அது கூடிய சீக்கிரமே நடக்கத்தான் போகுது” என்ற நினைத்த படி, “சரி தாஸ், அப்போ நான் போன வச்சுட்றேன். சீக்கிரமாவே நான் உனக்கு நல்ல செய்தியோட கால் பண்றேன்” என்று சேகர் ஃபோனை வைத்தான்.

சேகர் காலை கட் செய்ததும். தன் போனை மேஜையில் விட்டெறிந்த தாஸ்.

“இன்னும் கொஞ்ச நாள் உன்னை எனக்கு சாதகமா யூஸ் பண்ணிக்க போறேன் சேகர்.

உன் மூலமா அந்த தமிழ்இன் பிசினஸையும் இப்போ அவன் கூடவே வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்குற அந்த பொண்ணையும் என் கைக்குள்ள கொண்டு வரப் போறேன்.

அதுக்கப்புறம் உன்னோட உதவி எதுவுமே எனக்கு தேவையில்லை” என்று நினைத்துக் கொண்டான் தாஸ்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured