EPISODE-33
தமிழை வம்பிற்கு இழுத்து விட்டு இப்போது அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டாள் இலக்கியா.
அவள் துப்பட்டாவைப் பிடித்து தன் அருகில் தமிழ் இழுக்க, துப்பட்டாவோடு சேர்ந்து இலக்கியாவும் அவன் மீது மோதி நின்றாள்.
பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்ட தமிழ், “என்ன வாடா போடான்னு எப்படி வம்பு இழுத்துப் பேசுற? உனக்கு அவ்வளவு தைரியம் ஆயிடுச்சா என்கிட்ட பேசுறதுக்கு?” என்றான்.
“இல்ல… அது வந்து… நான் உங்கள…” என்று இலக்கியா ஏதோ பேச வர…
“என்னடி… இவ்வளவு நேரம் என்கிட்டே போனில் எவ்வளவு வாய் பேசின… இப்போ நான் நேரில் வந்ததும் எதுவும் பேசாம அமைதியா இருக்க?” என்றான் அவள் தோளில் தன் இதழால் முத்தம் வைத்தபடி தமிழ் கேட்க..
அதில் கூச்சம் வர நெளிந்துகொண்டே, “அது… அது வந்து… உங்ககிட்டே அப்படிப் பேசினால் நீங்க இங்கே வருவீங்கன்னுதான் நான் வேண்டும் என்றே அந்த மாதிரி பேசினேன்,” என்றாள் இலக்கியா தலையைக் குனிந்துகொண்டே.
“என்ன…” என்று நம்பமுடியாமல் அவள் தோளைப் பிடித்துத் தன்னை பார்க்கும்படி திருப்பி, அவள் முகத்தை நிமிர்த்தி, “என்னை இங்கே வரவைக்கத்தான் அப்படிப் பேசினியா?” என்றான் தமிழ்.
“ஆமாம்,” என்று அவன் கண்களை நேராகப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டு இலக்கியா தலையை ஆட்ட…
“ஏன்? நீதானே நாம ஆறு மாசத்துக்கு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க வேண்டாம்னு சொன்னே… அப்புறம் நீயே என்னை வரவழைக்கப் பிளான் போடுற?” என்றான் தமிழ்.
“அது….. தெரியாம நான் அப்படி சொல்லிட்டேன்… அதுக்காக நீங்களும் நான் சொன்னதை பிடிச்சுகிட்டு அதே போல இருக்கணும்னு உடனே கிளம்பிப் போயிடுவீங்களா?” என்றாள் இலக்கியா.
பார்ரா, உனக்கு இப்படி எல்லாம் பேச வருமா என்பது போல அவளைப் பார்த்தான் தமிழ்.
அவள் இடையில் கை கொடுத்துத் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன், அவள் படபடக்கும் விழிகள் இரண்டையும் பார்த்தவன், “என்னவோ தெரியல, நீ சொன்னா அதுக்கு மறுத்துப் பேச மனம் எனக்கு வர மாட்டேங்குது,” என்றான் தமிழ்.
தான் சொல்வதைக் கேட்பவனா இவன்? கண்டிப்பாக இருக்காது, இவனாகத்தான் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டு அவனைப் பார்த்த இலக்கியா, அவன் மார்பில் கை வைத்து அவனைத் தள்ளி அவனிடமிருந்து விலகப் போக…
“எங்கடி போற?” என்று சொல்லி மீண்டும் அவளைத் தன்னோடு இழுத்து நிறுத்திக் கொண்டவன், “ஆமா, அந்த சேகர் கூட எதுக்கு சிரிச்சுப் பேசிகிட்டு இருந்த?” என்றான் கோபமாக.
“நான் ஒன்னும் வேணும்னு அவர்கிட்ட போய் பேசல. அவராத்தான் வந்து என்கிட்ட அவரை அறிமுகப்படுத்திக்கிட்டாரு. அதுவும் இல்லாம, அவர் உங்களோட சித்தப்பா மகன் என்று தெரிந்த பிறகு நான் எப்படி அவர்கிட்ட பேசாம வர முடியும்? அதனால்தான் நான் பேசினேன்,” என்றாள் இலக்கியா.
“இனிமேல் அவன்கிட்ட பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாகவே பேசிப் பழகு. அவன் ரொம்ப மோசமானவன்,” என்றான் தமிழ்.
“உங்களை விடவா அவன் மோசமானவன்?” என்று இலக்கியா தன் வாய்க்குள்ளேயே முனங்க…
அவள் சொல்வது அப்பட்டமாக தமிழின் காதில் விழுந்து விட்டது.
“என்னடி சொன்ன? நான் அவனை விட மோசமானவனா? அப்படி நான் என்னடி பண்ணிட்டேன்? மோசமானவன்னு நீ கண்டுபிடிச்சிட்ட?” என்று அவள் கழுத்தை நெருக்கிக் கொண்டு கேட்டான் தமிழ்.
“இதோ, இப்படி எதற்கெடுத்தாலும் காரணமே இல்லாம என்கிட்ட முரட்டுத்தனமா நடந்துக்கிறீங்களே, இது மோசமான செயல் இல்லையா?” என்றாள் இலக்கியா.
அப்படிச் சொன்னதும் சட்டென அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்த தமிழ், “அவனும் நானும் ஒண்ணு கிடையாது, புரிஞ்சுதா? என்னை அவன்கூட சேர்த்துப் பேசாதே,” என்று கோபப்பட்டான்.
அவன் பிடி தளர்ந்ததும் இலக்கியாவின் முகம் வலியில் சுருங்க, உடனே அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன், “சாரி சிட்டு… கோபம் வந்துட்டா நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது,” என்று அவளிடம் இறங்கி வர…
அதற்கு மேல் அவனிடம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள இலக்கியாவிற்கு விருப்பம் இல்லாமல் அவனைப் பார்த்து லேசாகச் சிரிக்க…
“சரி, போய் சீக்கிரமா கிளம்பி வா. நாம ரெண்டு பேரும் வெளியே போகலாம்,” என்றான்.
“வெளியே போறோமா!!! எங்கே போறோம்?” என்றாள்.
“ஏன் மேடம், எங்கையாவது போறோம் என்று சொன்னால்தான் என் கூட வருவீங்களா?” என்றான் அவளை முறைத்துக் கொண்டு.
நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்படி முறைக்கிறான் என்பது போல அவனைப் பார்த்தவள், “நீங்க என்னை விட்டால்தான் நான் போய் ரெடியாகி வர முடியும்,” என்றாள் இலக்கியா.
“ஏன், நான் இப்படி இருந்தா நீ ரெடியாகக் கஷ்டமா இருக்கா என்ன? வா… நானே உன்னை ரெடி பண்றேன்,” என்று அவள் கை பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல…
அவன் கையைத் தட்டி விட்டவள், “நீங்க போங்க, நானே ரெடியா வரேன்,” என்று அவனை விட்டுத் தள்ளி நின்றாள்.
இப்படி எதற்கெடுத்தாலும் தன்னை விட்டு விலகிச் செல்பவளைப் பார்த்தால், அவளிடம் கோபம் வராமல் அவளை நெருங்கத்தான் அவன் மனம் ஏங்கியது.
அவளை முறைத்தவன், “பெட் மேல நீ போட்டுட்டு வர டிரஸ்ஸை வாங்கி வச்சிருக்கேன், அந்த டிரஸ்ஸைப் போட்டுட்டு வா,” என்றான் தமிழ்.
அவன் சொன்னதும் அவள் தன்னிச்சையாக பெட்டைத் திரும்பிப் பார்க்க, அங்கே ஒரு உயர்ந்த பிராண்டின் பை இருந்தது. பையைப் பார்த்ததுமே அவளுடைய ஆடை கண்டிப்பாக விலை உயர்ந்ததாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள், அவனைப் பார்த்து, “ஏன் இவ்வளவு காஸ்ட்லியாக டிரஸ் வாங்குறீங்க? எனக்கு சாதாரணமா வாங்கிக் கொடுக்கலாமே,” என்றாள்.
“உனக்கு சாதாரணமா உடை வாங்கிக் கொடுக்க, நான் ஒன்னும் இல்லாதவன் கிடையாது. நீ கல்யாணம் பண்ணிக்கப் போறது ஆர்க்கிடெக்ட் சாம்ராஜ்யத்திலேயே நம்பர் ஒன்னா இருக்கிற தமிழ. அப்போ, என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவளும் என்னோட அந்தஸ்துக்கு, அதிகாரத்துக்குத் தகுந்த மாதிரி டிரஸ் பண்ணிக்க வேண்டாமா?” என்றான் அவளைப் பார்த்து.
அவள் எதுவும் பேசாமல், “சரி, நான் இதையே போட்டுக்கிறேன்,” என்று சொல்லி பெட்டில் இருந்த அந்தப் பையை எடுத்துக்கொண்டு பாத்ரூம் நோக்கிச் செல்லப் போக…
அவள் கையைப் பிடித்து, “ஏய்…” என அழைத்தான்.
“என்ன?” என்றாள் திரும்பி…
“நான் வேணா நீ குளிக்க ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றான் தமிழ்.
“ம்ஹூம்… நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது எனக்குக் குளிப்பாட்டி விட. எனக்கே ரெடியாகிக்கத் தெரியும். நீங்க வெளியே இருங்க, நான் சீக்கிரம் ரெடியாகி வரேன்,” என்று அவன் கையை உதறியவள் பாத்ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொள்ள…
பாத்ரூம் கதவையே வெறித்தவன், பின் சிரித்துவிட்டு அவள் அறையை விட்டு வெளியே வந்தான்.
❤️
வினித், ஆராவை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு காபி ஷாப்பிற்கு அழைத்து வந்தான்.
காரை பார்க் செய்துவிட்டு இருவரும் தயக்கமும் கூச்சமுமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு காபி ஷாப்பிற்குள் நுழைந்தவர்கள், அங்கே ஓரமாக இருந்த ஒரு டேபிளில் எதிரெதிரே சென்று அமர்ந்தனர்.
சர்வர் வரவும், வினித் ஆராவிற்குப் பிடித்த உணவுகளாக ஆர்டர் செய்துவிட்டு அவனை அனுப்பி விட…
எனக்குப் பிடித்த உணவுகளை எல்லாம் ஆர்டர் செய்தவனைப் பார்த்தவள், “எனக்கு இதுதான் பிடிக்கும் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் வினித்திடம்.
“எவ்வளவு வருஷமா உன்னைப் பார்த்துட்டு இருக்கேன், உனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு கூட எனக்குத் தெரியாதா?” என்றான் வினித்.
“ஓ! அப்போ எனக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு உனக்கு எல்லாமே தெரியுமா?” என்றாள் ஆரா.
“ஓ யெஸ், தெரியுமே…” என்றான் வினித்.
“எங்கே, எனக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்லு,” என்று ஆரா காபி டேபிளில் கை வைத்து கன்னத்தை ஊன்றியபடி அவனைப் பார்த்தாள்.
அவளைப் போலவே காபி டேபிளில் தன் கையை வைத்துக் கன்னத்தை ஊன்றிய வினித், ஆராவின் கண்களைப் பார்த்தவன்,
“உனக்கு உன் தாத்தாவும் தமிழம்தான் உயிர்.
ராஜுவையும் பிடிக்கும், ஆனால் தமிழைப் பிடிக்கிற அளவுக்கு ராஜு கிட்ட நீ க்ளோஸா இல்ல.
உனக்கு ரெட் கலர்னா ரொம்பப் பிடிக்கும்.
கொரியன் நாடகம் நீ ரொம்பப் பார்ப்ப.
கொரியன் நாடகத்தில் வர்ற உணவுகளை எல்லாம் சாப்பிட்டு ட்ரை பண்ணி இருக்க, அதுல உனக்கு ரொம்பப் பிடிச்சது கிம்ச்சி.
எல்லாத்தையும் விட, சென்னையில உன் காலேஜ் விட்டு இரண்டு தெரு தள்ளி இருக்கிற தள்ளுவண்டிக் கடையில சாப்பிடறதுன்னா உனக்கு ரொம்பப் பிடிக்கும்.
உன்னால அங்கே சென்று அடிக்கடி சாப்பிட முடியாதுங்கறதுனால, வீட்ல வேலை செய்றவங்ககிட்ட சொல்லிவிட்டு அந்தக் கடையில வாங்கிட்டு வந்து சாப்பிடுவது உன்னோட வழக்கம்.
உனக்கு மாடர்ன் டிரஸ் ரொம்பப் பிடிக்கும், சேலை கட்டிக்க ஆசை ஆனா வெட்கம்.
ஹை ஹீல்ஸ் போட்டுத் திமிராக நடக்க உனக்கு பிடிக்கும், அதே போல கோவில்களுக்குப் போறதும், நம்ம ஊருப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிச்சு வர்றதும் உனக்கு பிடிக்கும்.
நல்லா சந்தோஷமா வாய் அடிப்ப, சீக்கிரமா எல்லார் கூடவும் நட்பாப் பழகிடுவ.
நீ சவுத் கொரியா நாடகம் பார்த்துட்டு, உனக்குக் கல்யாணம் ஆன பிறகு ஹனிமூன் சவுத் கொரியா போகணும்னு ரொம்ப ஆசைப்படுற.
உனக்கு ஐஸ் ஸ்கேட்டிங் பண்ண ரொம்பப் பிடிக்கும்.
அதே போல கோல்ட் காபியும் ரொம்பப் பிடிக்கும்.”
அடுத்தடுத்து அவளுக்குப் பிடித்ததை லிஸ்ட் போட வினித் ஆரம்பிக்க…
அவன் சொல்வதையெல்லாம் வாயைத் திறந்து கேட்டுக்கொண்டிருந்த ஆரா, “என்னை பத்தி நிஜமாகவே உனக்கு இவ்வளவு விஷயம் தெரியுமா?” என்றாள் நம்ப முடியாமல்.
“நான் சொன்னது எல்லாமே உன்னைப் பத்திதானே? அதை வைத்து உன்னைப் பற்றி எவ்வளவு தெரியும் என்று உனக்குப் புரியலையா?” என்று கேட்டான்.
“நீ சொன்னதுல எதுவுமே தப்பு இல்ல, எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயமாகத்தான் நீ சொல்லி இருக்க,” என்றாள் ஆரா. “ஆனா, இன்னொரு விஷயத்தை நீ மறந்துட்ட,” என்றாள்.
வினித் யோசித்தவாறே, “இல்லையே, நான் எதுவும் மறக்கல, சரியாத்தானே சொன்னேன்,” என்று அவளைப் பார்க்க…
“எல்லாத்தையும் விட எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும், அதை நீ மறந்துட்ட,” என்று சொல்லி ஆரா சிரிக்க…
அவள் கன்னத்தில் வைத்திருந்த கையைப் பிடித்துத் தன் கைக்குள் வைத்துக்கொண்ட வினித், “அதுதான் ஆச்சரியமா இருக்கு, என்னை எப்படி உனக்குப் பிடிச்சது? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்னு உனக்கு என்னைப் பிடிக்கும்?” என்று கேட்டான்.
“எதுவும் செய்தால்தான் உன்னைப் பிடிக்கணும்னு எதுவும் சட்டம் இருக்கா என்ன? நீ என் அண்ணன் கூட எப்போ ஃப்ரெண்டானியோ, அப்போலிருந்தே எனக்கு உன்னைப் பிடிக்கும். உன்னைப் பார்த்ததுமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. அதுவும் நீ என் அண்ணன் கூடப் பேசிப் பழகும்போது, என் கூட சகஜமாகப் பேசிப் பழகும்போது இன்னும் எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு,” என்றாள் ஆரா.
“அவ்வளவுதானா? நான் கூட ஏதோ பெருசா ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லி, அதனாலதான் என்னைப் பிடிச்சதுன்னு சொல்லுவியோன்னு நினைச்சேன்,” என்றான் சிரித்தபடி.
அவனைப் பார்த்துச் சிரித்தவள், “ஒரு முத்தம் கொடுத்ததும் நீ என்னைக் காதலிக்க ஆரம்பித்துவிடுவேன்னு எனக்குத் தெரிந்திருந்தால், உன்னைப் பார்த்த கொஞ்ச நாளிலேயே நான் உனக்கு முத்தம் கொடுத்திருப்பேன். வீணா இவ்வளவு வருஷம் உன் பின்னாடி கெஞ்சிக்கிட்டுச் சுத்தி என்னோட நேரத்தையே வேஸ்ட் பண்ணிட்டேன்,” என்றாள் ஆரா சிரித்தபடி.
“நீ முத்தம் கொடுத்ததுக்காக ஒன்னும் நான் உன்னைக் காதலிக்கல,” என்றான் வினித் அவளை முறைத்துக் கொண்டு.
“அப்போ ஏன் இத்தனை வருஷமா நான் உன்கிட்ட என்னோட காதலை வந்து சொல்லும் போதெல்லாம் வேண்டாம் என்று என்னை உன் பக்கம் வரவிடாமல் துரத்திக்கிட்டே இருந்த?” என்று கேட்டாள் ஆரா.
“அதுக்குக் காரணம் உனக்கே தெரியும். என்னோட நண்பனோட தங்கச்சியை நான் லவ் பண்றது அவனுக்கு நான் செய்கிற மிகப்பெரிய துரோகம் இல்லையா? அதை நான் எப்படிச் செய்ய முடியும்?” என்றான் வினித்.
“அப்போ இப்ப மட்டும் நீ உன் ஃப்ரெண்டுக்குத் துரோகம் பண்ணலையா? இப்பவும் என் அண்ணனுக்குத் தெரியாம தானே நீ என்னை காபி ஷாப்புக்கு கூட்டிட்டு வந்திருக்க?” என்றாள் ஆரா.
“உன் அண்ணனுக்குத் தெரியாதுன்னு யார் சொன்னது?” என்றான் வினித்.
“என்ன!!!” அதிர்ச்சியாக ஆரா வினித்தைப் பார்க்க…
அவள் அதிர்ச்சியாவதைப் பார்த்துச் சிரித்தவன், “உங்க அண்ணனுக்கு நீ என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கிறது என்னைக்கோ தெரியும். நான் எதுவும் ரியாக்ட் பண்ணாம இருந்ததாலதான் அவனும் எதுவும் தெரிஞ்சுக்காத மாதிரி இத்தனை நாள் இருந்திருக்கான். நீ அன்னைக்கு வராண்டாவில் வைத்து எனக்குக் கிஸ் பண்ணின அப்போதான் அவனுக்கு என்கிட்ட கேட்கணும்னு தோனியிருக்கு,” என்றான்.
“என்னது? நான் உனக்குக் கிஸ் பண்ணதும் என் அண்ணனுக்குத் தெரியுமா? என்னது? உன்னைக் கூப்பிட்டுச் சத்தம் போட்டானா? எதுவும் அடிச்சானா? திட்டினானா?” என்று கவலையாக ஆரா கேட்க…
“அது எப்படி, அவன் தங்கச்சிக்குப் பிடிச்சவனை உன் அண்ணன் அடிப்பான், மிரட்டுவான்? அதுவும் இல்லாம அவன் தங்கச்சி காதலிக்கிறது அவனோட க்ளோஸ் ஃப்ரெண்டை ஆச்சே,” என்று தன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள…
“என் அண்ணன் உன்னை எதுவுமே சொல்லலையா?” என்று கேட்டாள் ஆரா.
“அப்படிச் சொல்லாம இருப்பானா?” என்றவன், “என்னை நேர்ல ஆபீஸுக்கு வரச் சொல்லி, கூப்பிட்டு வச்சு, ‘என் தங்கச்சிக்கு எதுவும் கஷ்டம் கொடுக்கிறேன்னு தெரிஞ்சுச்சுன்னா உன்னை அப்பவே கொன்னு தொலைச்சிடுவேன்’னு மிரட்டித்தான் என்னை அனுப்பி வைத்திருக்கிறான்,” என்றான் சிரித்துக்கொண்டே.
“அப்போ என் அண்ணன் மிரட்டுனதுக்காகவும், என் அண்ணனுக்குத் தெரிஞ்சிருச்சுங்கறதுக்காகவும்தான் நீ என்னை லவ் பண்ற? உனக்கா என்னைப் பிடிக்கல அப்படித்தானே?” என்று ஆரா கோபமாக அங்கிருந்து எழுந்து செல்லப் போக…
“ஏய் ஆரா, எங்க போற, நில்லு,” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தவன், அவளை மீண்டும் சேரில் அமர வைத்தவன், “உன் அண்ணன் சொன்னதுக்காகத்தான் உன்னை லவ் பண்றேன்னு நீ நினைக்கிறியா? உன்னைப் பிடிச்சதனாலதானே உனக்குப் பிடிச்ச விஷயம், பிடிக்காததுன்னு எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கேன், அது உனக்குப் புரியலையா?” என்றான் வினித்.
“நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது,” என்று கோபமாக ஆரா அவனை முறைக்க…
“உன்கிட்ட நான் சரண்டர் ஆனதுக்கு முக்கிய காரணம், நீ எனக்குக் கொடுத்த முத்தம்தான்,” என்றான் வினித்.
அவனைத் திரும்பிப் பார்த்த ஆரா அமைதியாக இருக்க…
“என்ன பார்க்கிற? என்னோட முதல் முத்தம் என்னோட மனைவிக்குத்தான்னு நான் பத்திரமா இத்தனை வருஷமா எத்தனை பேர் கிட்ட இருந்து காப்பாத்தி வச்சிருக்கேன் தெரியுமா? ஆனா நீ வந்து சட்டுன்னு அந்த முதல் முத்தத்தை வாங்கிட்ட என்கிட்ட இருந்து. ம்ஹூம்… லிட்ரலி நீ என்கிட்ட இருந்து வாங்கல, எடுத்துக்கிட்ட,” என்றான் சிரித்தபடி.
அவன் சொன்னதைக் கேட்டு ஆரா வெட்கப்பட…
“என்னோட முதல் முத்தத்தை என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட நீதானே என்னோட மனைவியா வர முடியும். அதனால்தான் உன்னை நான் லவ் பண்ண சம்மதித்தேன்,” என்றான் வினித்.
“அப்போ நான் உனக்கு முத்தம் கொடுக்காம இருந்திருந்தா, நீ என்கிட்ட உன்னோட லவ்வ சொல்லி இருக்கவே மாட்ட, அப்படித்தானே?” என்றாள் ஆரா.
“இப்பவும் நான் உன்கிட்ட என்னோட லவ்வ சொல்லலையே,” என்றான் வினித்.
“நீ ‘லவ் யூ’ என்று சொன்னால்தான் என்னைக் காதலிக்கிறேன்னு எந்த ஒரு அர்த்தமும் இல்லை. நீ என்கிட்ட பேசுறதை வைத்து, உனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்,” என்று சொல்லி வெட்கப் புன்னகை செய்தாள் ஆரா.
அவனும் அதை ஆமோதிப்பது போல அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான்.
இருவரும் ஆர்டர் செய்த உணவு வந்துவிட, அதைச் சாப்பிட்டுக்கொண்டே இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
சட்டென ஆராவிற்கு ஏதோ நினைவிற்கு வர…
“ஆமா, நீ இப்போ கொஞ்சம் முன்னாடி என்ன சொன்ன? ‘உன்னோட முதல் முத்தத்தை எத்தனை பேர் கிட்ட இருந்து காப்பாற்றி வச்சிருக்கேன் தெரியுமா?’ன்னு கேட்டியே… அப்படி எத்தனை பேர் உனக்கு என்னைப் மாதிரி முத்தம் கொடுக்க வந்தாங்க?” என்றாள் கோபமாக.
ஆஹா, ஏதோ ஒரு ஃப்ளோவில் சொன்ன வார்த்தையைக் கரெக்டா பிடிச்சுக்கிட்டு இப்படிக் கேள்வி கேட்கிறாளே பாரு… தமிழோட தங்கச்சி ஆச்சே, இவளுக்கு இதெல்லாம் சொல்லியா கொடுக்கணும் என்று நினைத்து அவளைப் பாவமாகப் பார்த்தான் வினித்.
“என்ன பார்க்கிற? பதில் சொல்லு, எத்தனை பேரு உனக்கு முத்தம் கொடுக்க லைன்ல நின்னாங்க?” என்றாள் ஆரா.
“ஏய் ஆராகுட்டி, அதெல்லாம் ஒன்னும் இல்ல, நான் சும்மா ஒரு ஃப்ளோல அப்படி சொல்லிட்டேன்,” என்று வினித் சொல்ல…
“ஆராகுட்டி” என்று சொன்னதுமே கோபமாக இருந்தவள், அப்படியே தலையில் ஐஸ் கட்டி தூக்கி வைத்தது போலக் குளிர்ந்து போனாள்.
“ம்ம்ம்… அதானே பார்த்தேன், உனக்கு என்னைத்தவிர வேற யாரு வந்து ப்ரொபோஸ் பண்ணி இருக்கப் போறாங்க, முத்தம் கொடுத்திருக்கப் போறாங்க,” என்றாள்.
“நீ என்ன, என்னை அவ்வளவு மொக்கைப் பீஸுன்னு நினைச்சிட்டியா? என் கூட ஒரு நாள் அவுட்டிங் வந்து பாரு, எத்தனை பொண்ணுங்க என்னைப் பார்த்துட்டு என் பின்னாடி வர்றாங்கன்னு,” என்றான் வினித்.
அவனை முறைத்த ஆரா, “உன்னை எத்தனை பொண்ணுங்க பார்க்கிறாங்கன்னு பார்க்கிறதுக்கு எல்லாம் என்னால உன்னோட வெளியே வர முடியாது,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து வெளியே செல்ல…
அவளைப் பார்த்துச் சிரித்தவாறு பில்லை செட்டில் செய்துவிட்டு, கார் சாவியை எடுத்துக்கொண்டு அவள் பின்னால் ஓடினான் வினித்.
“அப்போ என் கூட என்னோட காதலியா வெளியே வரலாம் இல்லையா?” என்றான்.
கோபமாக நடந்து கொண்டிருந்த ஆரா அப்படியே நின்று அவனைப் பார்க்க…
பாக்கெட்டுக்குள் கைவிட்டு நின்றபடி அவளைப் பார்த்துப் புருவம் உயர்த்தி, “என்ன, என் கூட டேட்டிங் வர உனக்குச் சம்மதமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
“டேய் வினித், என்னடா இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்க? என்னால இதை நம்பவே முடியல, நீதான் இப்படி எல்லாம் பேசுறியா?” என்றாள் ஆரா அதிர்ச்சியாக.
“இத்தனை நாளா நீ பார்த்துட்டு இருந்த வினித் வேற. ஆனா இனிமேல் நீ பார்க்கப்போற வினித் வேற,” என்றவன் அவள் அருகில் வந்து அவள் கைபிடித்துக் காருக்கு அழைத்துச் செல்ல…
அவனை நம்ப முடியாமல் பார்த்தவாறு சென்றாள் ஆரா.
