Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல் 35

அஸ்க்..லஸ்கா..காதல் 35

by Layas Tamil Novel
269 views

EPISODE 35

பார்ட்டிக்கு வந்திருந்த இலக்கியா கார்டனில் தனியாக மரத்தின் அடியில் அமர்ந்து இருக்க, இங்கே அவளைச் சந்திப்பதற்காகவே தமிழுக்குத் தெரியாமல் வந்திருந்தால் தீபா.

தீபா இலக்கியாவைத் தனியே சந்திப்பதற்காகக் காத்திருக்க, அதற்கு ஏற்றார் போல இலக்கியாவும் கார்டனில் வந்து தமிழ் இல்லாமல் தனியே அமர்ந்தபடி அங்கு இருக்கும் அழகைத் தன் மொபைலில் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் முன்பு தீபா வந்து நிற்க, அவளை நிமிர்ந்து பார்த்த இலக்கியாவைப் பார்த்துச் சிரித்த தீபா, “நான் இங்கே உட்காரலாமா?” என்று இலக்கியா அமர்ந்திருந்த மேஜையைக் காட்டிக் கேட்க…

இலக்கியாவும் சிரித்தபடியே சற்று தள்ளி அமர்ந்து அவளை அமரச் சொன்னாள்.

இலக்கியாவின் அருகில் அமர்ந்த தீபா, “நீங்க இங்க பார்ட்டிக்கு வந்து இருக்கீங்களா?” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்று இலக்கியா தலையை ஆட்ட…

“ஓஹோ யார் கூட வந்திருக்கீங்க?” என்றால் தீபா.

இலக்கியா சிரித்தபடியே, “என்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவர் கூட வந்து இருக்கேன்” என்றால்.

“ஓ உங்களுக்குக் கல்யாணம் ஆகப் போகுதா? வாழ்த்துக்கள்” என்று தன் கையை நீட்டி தீபா எதுவுமே தெரியாதவள் போல நடித்து இலக்கியாவிடம் வாழ்த்து சொல்ல…

இலக்கியாவும் தீபாவிடம் கையை நீட்டி “தேங்க்ஸ்” என்றால்.

தீபாவிடம் “தேங்க்ஸ்” சொல்லிவிட்டுத் தன் கையை விளக்கப் போக, தீபா இலக்கியாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

தன் கையைப் பிடித்துக் கொண்ட தீபாவைப் புரியாமல் இலக்கியா பார்க்க…

இலக்கியாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த தீபா தன் கைப்பையில் இருந்து ஒரு கவரை எடுத்து அவள் கைக்குள் திணித்து, “உங்க கல்யாணத்துக்காக என்னோட கிஃப்ட்” என்று சொல்ல …

“இந்த பெண்ணை இப்போதுதான் பார்க்கும், எதற்காக எங்கள் திருமணத்திற்குப் பரிசளிக்க வேண்டும்?” என்று யோசித்த இலக்கியா, “இல்லை, நான் தெரியாதவங்க கிட்ட இருந்து எந்தப் பரிசும் வாங்குவதில்லை” என்று மீண்டும் அவள் கொடுத்த கவரை தீபாவின் கையிலேயே திணித்தாள் இலக்கியா.

“எனக்கு வேண்டாம். என்னை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு உங்களைப் நல்லா தெரியும். அதைவிட, நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறவரை இன்னும் நல்லா தெரியும்” என்றால்.

அவளைப் புருவம் சுருங்கப் பார்த்த இலக்கியா, “உங்களுக்கு தமிழ்மை தெரியுமா? நீங்க அவரோட ஃப்ரெண்டா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் இலக்கியா.

“நான் அவரோட ஃப்ரெண்ட் இல்ல, அதுக்கும் மேல” என்றால் தீபா.

அவளைப் புரியாமல் இலக்கியா பார்க்க, தன் கையில் இருந்த கவரை இலக்கியாவிடம் நீட்டி, “இந்த கவர்ல இருக்கிறதப் பார்த்தாலே நானும் தமிழும் எவ்வளவு க்ளோஸ்னு உங்களுக்கு நல்லா புரியும்” என்றால்.

தீபா கொடுத்த கவரை அவசரமாக வாங்கிய இலக்கியா அந்த கவரைத் திறந்து பார்க்க, அதில் சில போட்டோக்கள் இருந்தது.

அதில் தமிழ் சட்டை இல்லாமலும், தீபா அரைகுறை ஆடையோடும் அவன் மேல் இருப்பது போல சில புகைப்படங்கள் இருந்தது.

தமிழை அன்று தன் வீட்டில் அவனுக்குத் தெரியாமல் அவனோடு ஒன்றாக இருப்பது போல தீபா படம்பிடித்து இருக்க, அதை டெவலப் செய்யக் கொடுத்திருந்தவள். அந்த போட்டோக்கள் எல்லாம் வந்து இருக்க… இலக்கியாவிடம் காட்டப்பதற்காக அதில் இருந்த சில புகைப்படங்களைக் கொண்டு வந்திருந்தாள்.

அந்தப் புகைப்படம் தான் இப்போது இலக்கியாவின் கையில் இருந்தது.

தமிழ் தன் எதிரே அமர்ந்திருந்த பெண்ணோடு மிகவும் நெருக்கமாகக் கட்டிலில் இருப்பதை புகைப்படத்தில் பார்த்த இலக்கியாவுக்குப் பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.

அதே அதிர்ச்சியோடு தன் முன் அமர்ந்திருந்த தீபாவை நிமிர்ந்து பார்த்தாள் இலக்கியா.

“இப்போ தெரியுதா நானும் தமிழும் எவ்வளவு க்ளோஸ்னு?” என்று சொல்லிச் சிரித்த தீபா அவள் கையில் இருந்த அந்தப் புகைப்படத்தை வாங்கித் தன் கைப்பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

இலக்கியா எதுவும் பேசாமல் அதிர்ச்சியாக தீபாவையே பார்த்துக் கொண்டு இருக்க…

தீபா தனக்கும் தமிழுக்கும் எத்தனை வருடம் உறவு இருக்கிறது, தாங்கள் இருவரும் எவ்வளவு நெருக்கமானவர்கள், தங்களுக்குள் என்ன எல்லாம் நடந்திருக்கிறது என்று ஒன்றுகூட விடாமல் வெட்கமில்லாமல் இலக்கியாவிடம் கூறினாள்.

தீபா சொல்வது எல்லாம் நம்ப முடியாமல் அதிர்ச்சியோடு அவள் முன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த இலக்கியாவை, தூரத்தில் ஆதித்யாவுடன் பேசிக்கொண்டு வந்த தமிழ் பார்த்தான்.

இலக்கியாவும் தீபாவும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதையும், இலக்கியாவின் முகம் கலவரமாக இருப்பதையும் பார்த்தபடியே அவள் அருகில் நெருங்கி வந்தான்.

தன் ஃபோனை கட் செய்த தமிழ். இலக்கியாவைப் பார்த்து, “நான் கார்ட்ஸ வரச் சொல்றேன், நீ அவங்க கூட வீட்டுக்குப் போயிடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொல்லி தீபாவின் கையைப் பிடித்து இழுத்து, “வா போகலாம்” என்று அவளை அழைக்க…

“ஒரு நிமிஷம் தமிழ்” என்று அவனிடம் இருந்து இலக்கியாவின் அருகில் வந்து அவளிடம்.

“நான் உன்கிட்ட சொன்னது எல்லாம் இதுவரை நீ நம்பாமல் இருந்திருக்கலாம். ஆனா தமிழ் என்னைப் பார்த்ததும் எவ்வளவு உரிமையா வந்து என்னை அவன் கூடக் கூட்டிட்டு போறான்னு பார்த்தியா?

இதிலிருந்து நீ தெரிஞ்சுக்க வேண்டாம், நானும் அவனும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம்” என்று சொல்லிச் சிரித்தவள்.

தமிழிடம் திரும்பி, “வா டார்லிங், போகலாம்” என்று தமிழின் கையைப் பற்றிக்கொண்டு அவனோடு சேர்ந்து சென்றாள்.

அவள் தமிழைப் பற்றி, அவனோடு தனக்கு இருக்கும் நெருக்கம் பற்றித் தன் முன்னால் நின்று இருக்கும் பெண் கூறுவதைக் கேட்டு, அதை மறுப்பாகச் சொல்லி தமிழ் தன்னிடம் எதுவும் விளக்கம் சொல்வான் என்று எதிர்பார்த்த இலக்கியாவுக்கு.

அவள் அவனை அழைத்துக் கொண்டு செல்லவும், எதுவும் பேசாமல் தன்னைத் திரும்பியும் பார்க்காமல் தமிழ் செல்வதைப் பார்த்தவளுக்கு மனம் உடைந்து போனது.

தமிழ் ஆதித்யா கூறியதில் குழப்பமாக இருந்ததில், இலக்கியாவைச் சரியாகக் கவனிக்காமல் தீபா இலக்கியாவிடம் சொல்வதையும் கேட்காமல் அவளுடன் செல்ல…

அவன் செல்வதையே அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த இலக்கியா அங்கிருந்த மேஜையில் சோர்வாக அமர்ந்தாள்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த யாழினியின் அப்பா, “அந்தப் பெண் ஏதோ பிரச்சினை போல இருக்கிறது.

அதனால்தான் இப்படி மனம் உடைந்து சோர்வாக அமர்ந்திருக்கிறாள். இந்த நேரத்தில் போய் நாம் எதுவும் கேட்டு அவளுக்கு மேலும் கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம்.

எப்படியும் அவளைச் சந்திக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும், அப்போது சந்தித்துக் கொள்ளலாம்” என்று நினைத்தவர், “எதற்கும் இருக்கட்டும்” என்று இலக்கியாவைத் தூரத்தில் இருந்து ஒரு புகைப்படம் எடுத்தவர், அதை ஆரம்பித்திருக்கும் போதவே காட்டி, “அவர் பெண்தான் இந்தப் பெண்ணா?” என்று உறுதி செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர் அங்கிருந்து அவர் சென்றுவிட…

மற்றொரு ஓரத்தில் இருந்து இலக்கியா, தீபா, தமிழ் மூவரும் ஏதோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, இலக்கியா மட்டும் இப்போது தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து அவள் அருகில் நெருங்கி வந்தான் தாஸ்.

இலக்கியா மிகவும் மனமுடைந்து, “தன் வாழ்க்கை இப்படியா இருக்க வேண்டும்? இத்தனை வருடமாக தன் தாய் மாமனிடம் கஷ்டப்பட்டவள்.

ஏலத்தில் எடுத்து வந்த தமிழ் தன்னிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளவும், அவன் தன் மீது உண்மையாகவே அன்பும் பாசமும் வைத்திருக்கிறான் என்று நம்பி அவனை காதலித்ததும் இப்போது வீணாகிப் போய்விட்டதே.

இந்த உலகத்தில் தனக்கென்று யாருமே இல்லையா? தன் மீது உண்மையான அக்கறையோ பாசமோ வைக்க ஒருவருமே இல்லையா?” என்று தனக்குள்ளேயே அழுது புலம்பியவள் அமர்ந்து இருக்க, அப்போது அவள் முன்னே ஒரு நிழல் ஆடவும், “யார்?” என்று நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் முன்னால் பாக்கெட்டில் கைவிட்டபடி அவளைப் பாவமாகப் பார்த்தபடி நின்று இருந்தான் தாஸ்.

அவனை யார் என்று தெரியாமல் இலக்கியா பார்க்க, “ஹலோ மிஸ் இலக்கியா… ஐ அம் தாஸ்…” என்று சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“இவனுக்கு எப்படித் தன் பெயர் தெரியும்?” என்று குழப்பத்தில் அவனைப் பார்த்த இலக்கியா, “உங்களுக்கு எப்படி…” என்று கேட்க வர.

“எனக்கு எப்படி உங்க பேர் தெரியும் தானே கேக்குறீங்க? எனக்கு உங்க பேர் மட்டும் இல்ல, உங்க ஜாதகமே தெரியும்” என்று சொல்லி அவள் அருகில் அமர்ந்தான்.

மிகவும் சாதாரணமாக வந்து தன் அருகில் அமரவும், அவன் செயல் பிடிக்காமல், இலக்கியா அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.

அதைப்பார்த்து நக்கலாகச் சிரித்த தாஸ். “பயப்படாதீங்க மிஸ் இலக்கியா. தமிழின் பாதுகாப்பை மீறி நான் உங்களை இங்கிருந்து கடத்திட்டு எல்லாம் எதுவும் போயிட மாட்டேன்.

நான் உங்களை எதுவும் செய்திட மாட்டேன். அதனால தைரியமா நீங்க என்கிட்ட பேசலாம்” என்றான்.

“உங்களுக்கு எப்படி என்னைப் பற்றித் தெரியும்?” என்று கேட்டாள் இலக்கியா.

“எனக்கு உங்களை மட்டும் இல்ல, உங்க குடும்பம், உங்க குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாரும் பத்தியும் நல்லாவே தெரியும்” என்றான்.

“என் குடும்பத்தைப் பத்தி தெரியுமா? அப்படி என்ன உங்களுக்குத் தெரியும்?” என்றால் இலக்கியா.

இலக்கியாவின் அம்மா கொடைக்கானலில் இருந்து அவர் கணவருடன் மலேசியா சென்றதிலிருந்து. தமிழ் அவளை ஏலத்தில் எடுத்தது வரை, அவளை இந்தியா அழைத்து வந்ததிலிருந்து அவள் இப்போது காலேஜ் சென்று கொண்டிருப்பது வரை என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொன்னான் தாஸ்.

தான் தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்லும் தாசைப் பார்த்து அறிந்த இலக்கியா, அவனிடம் பேசுவது சரியாக இருக்காது, இவன் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தவள் சட்டென அங்கிருந்து எழுந்து செல்லப் போக…

“என்ன பேசுறது? நான் உங்களை பத்தி பாதி விஷயம்தான் சொன்னேன். இதுக்கு அதிர்ச்சியாகி எழுந்து போகப் பார்க்குறீங்க? அப்போ உங்களுக்கு எத்தனை வருஷமா கஷ்டப்படுத்தினது….

உங்க அம்மாவையும், அப்பாவையும் இந்தியாவை விட்டுத் துரத்தி அடிச்சவங்களைப் பற்றி எல்லாம் சொன்னா, நீங்க இந்த ஊரை விட்டே ஓடிப் போயிடுவீங்க போல இருக்கே” என்று சொல்லிப் பலமாகச் சிரித்தான்.

அவன் சொல்வதை எல்லாம் நம்ப முடியாமல் கேட்ட இலக்கியா, “என்ன சொல்றீங்க? என் அம்மாவா? அப்பாவையா? இந்த ஊரை விட்டுத் துரத்தி அடிச்சாங்களா? யார் அப்படி செஞ்சது?” என்று கோபமாக இலக்கியா கேட்க…

அதற்குள் தமிழின் கார்ட்ஸ்கள் இலக்கியாவிடம் வந்து, “மேடம், போகலாமா?” என்று அவளை அழைத்துச் செல்ல வந்திருக்க…

இலக்கியாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தன் அருகில் அமர்ந்திருந்த தாசைப் பார்க்க…

“ஒன்னும் அவசரம் இல்லை மிஸ் இலக்கியா. நீங்க பொறுமையா என்னை எப்ப வேணாலும் வந்து மீட் பண்ணலாம்” என்று சொல்லி தன் பாக்கெட்டில் இருந்த தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து அவள் முன் நீட்டினான்.குழப்பமான முகத்தோடு தாஸ் கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்ட இலக்கியா தமிழின் கார்ட்ஸ்களுடன் கிளம்பிச் சென்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured