EPISODE-37
இலக்கியாவுடன் பார்ட்டிக்குச் சென்ற தமிழ் வீட்டிற்குத் திரும்புகையில், தமிழின் கார்ட்ஸ்களுடன் தனியாக வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் உள்ளே வரும்போது சோகமாக வருவதைப் பார்த்து, ஹாலில் அமர்ந்து ஃபோனை நோண்டிக் கொண்டு இருந்த சேகர் எழுந்து அவள் அருகில் சென்றான்.
சேகர் தன் எதிரே வருவதைக் கூடத் தெரியாமல் இலக்கியா அவள் பாட்டுக்கு அவனைத் தாண்டிச் செல்ல…
“என்னடா இவ கிட்டே பேசத்தானே நான் வந்தேன், ஆனா அதெல்லாம் எதையும் கண்டுகொள்ளாமல் இவள் நம்மைத் தாண்டி செல்கிறாள்” என்று யோசித்தவன்.
அவள் பேசாவிட்டால் என்ன என்பது போலத் திரும்பி இலக்கியாவின் வழியை மறைத்துக் கொண்டு அவள் எதிரே சென்று அவள் வழியை மறைத்து நின்றான்.
“என்ன இலக்கியா என்னை பார்த்தும் பேசாமல் போறீங்க… என் அண்ணா தமிழ் உங்களை எதுவும் என் கூடப் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டானா என்ன?” என்றான் சேகர்.
தீபாவுடன் தமிழ் சென்றதைப் பார்த்ததிலிருந்து, எப்படி வீடு வந்தேன் என்று கூடத் தெரியாத அளவுக்குக் குழப்பத்திலேயே வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
அப்படி இருக்க சேகர் தன்னிடம் பேசியதும், இப்போது தன்னை வழிமறித்துப் பேசியதும் புரியாமல் நின்றவள்.
“என்ன சேகர் சொல்றீங்க…” என்றாள் இலக்கியா அவனைப் பார்த்து.
அவளைப் புரியாமல் பார்த்த சேகர், இலக்கியாவிடம், “என்னைத் தாண்டி நான் கேட்டாத்துக்குப் பதில் சொல்லாமல் நீங்கள் பாட்டுக்குப் போறீங்களே, என் அண்ணா எதுவும் என் கிட்டே பேசக்கூடாதுனு சொல்லிட்டான்னானு கேட்டேன்.
ஆனா நீங்கள் நான் இருக்கிறதையே கவனிக்காமல் போறதை இப்போதான் நான் கவனிச்சேன்” என்றான்.
“சாரி, நீங்கள் என்னிடம் பேசினதையே நான் கவனிக்கவில்லை” என்றாள் இலக்கியா.
“உங்க எதிர்ல வரவங்களைக் கூட கவனிக்காமல் ஏதோ தீவிரமாக யோசனையில் இருப்பீங்க போல” என்றான் சேகர்.
அவன் சொன்னதைக் கேட்டு அவனைப் பார்த்து மெல்லிதாகச் சிரித்த இலக்கியா, “அப்படி எல்லாம் எதுவும் இல்லை சேகர்” என்றாள்.
“சரி இலக்கியா” என்றவன், “நான் உங்களை பேர் சொல்லி கூப்பிடலாமா?” என்றான் கேள்வியுடன்.
இலக்கியாவும் சிரித்தபடி “சரி” என்று தலையை ஆட்டினாள்.
“அப்புறம் இலக்கியா, பார்ட்டி எல்லாம் நல்லா இருந்துச்சு, நல்லா என்ஜாய் பண்ணீங்களா?” என்றான்.
சேகர் பார்ட்டி என்று சொன்னதும் மீண்டும் இலக்கியாவுக்கு பார்ட்டியில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வரவும், அங்கே பார்ட்டியில் தாசை சந்தித்ததும் நினைவுக்கு வந்தது.
தாசின் நினைவு வந்ததும் தன் பர்ஸில் இருந்து தாஸ் கொடுத்த விசிட்டிங் கார்டை எடுத்து சேகரிடம் நீட்டி, “இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் இலக்கியா.
இலக்கியா கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்த சேகருக்கு அது தாசினுடையது என்று தெரிந்து கொண்டான்.
“இலக்கியாவை நானே அவன் கிட்டே, அவனை மீட் பண்ணக் கூட்டிட்டு வரேன்னு சொன்னா, என்னை நம்பாமல் இவன் தனியா இலக்கியாவை மீட் பண்ண முயற்சி பண்ணி இருக்கான்” என்று நினைத்தவன்.
“நான் நினைத்தது மட்டும் நடந்து முடியட்டும் தாஸ், அதுக்கு அப்பறம் உனக்கு இருக்கு” என்று மனதிற்குள் கருவிக் கொண்டவன்.
இலக்கியாவைப் பார்த்து, “இவன் தாஸ் என்னோட ஃப்ரெண்ட் தான் இலக்கியா” என்றான் சேகர்.
பார்ட்டியில் தன்னை வந்து சந்தித்த தாசைப் பார்த்ததிலிருந்து… அவன் சொன்னதைக் கேட்டதிலிருந்து குழப்பத்தில் இருந்த இலக்கியா.
தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் தாஸ் கூறிய விஷயங்களை எல்லாம் நம்புவதா வேண்டாமா என்று இருந்தவளுக்கு.
தாஸ் சேகரின் ஃப்ரெண்ட் தான் என்று தெரிந்ததும் சற்று நிம்மதி அடைந்தவளாக.
“அப்படியா!” என்று ஆச்சர்யமான இலக்கியா, “என்னை இவர் மீட் பண்ணக் கூட்டிட்டு போக முடியுமா?” என்றாள் இலக்கியா.
“ஓ… ஒன்னும் பிரச்சனை இல்ல இலக்கியா. நான் இப்போ அவனுக்கு ஒரு ஃபோன் பண்ணினா கூட இங்கேயே வந்திடுவான்” என்றான் சேகர்.
தாசை இங்கேயே வரச் சொல்கிறேன் என்று தன் ஃபோனை எடுத்து தாசிற்கு சேகர் அழைக்கப் போக..
அவனை அவசரமாகத் தடுத்த இலக்கியா, “வேணாம் வேணாம் சேகர், நான் அவரை இங்கே சந்திக்க விரும்பல, வெளியே எங்கேயும் நான் அவரை தனியாகப் பார்த்து பேசணும்” என்றாள் இலக்கியா.
தாசைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று இலக்கியா சொன்னதும் சிறிது யோசித்தவன், “ஓகே இலக்கியா, அவன் என்னோட ஃப்ரெண்ட் தான், எனக்கு அவனைப் பற்றி நல்லா தெரியும்.
நாம இப்போவே தாசைப் போய் பார்க்கலாம்” என்று சேகர் மீண்டும் அவளை அவசரப்படுத்தவும்.
“இல்லை இல்லை இப்ப வேணாம், ஏற்கனவே மணி 9 ஆச்சு. நாளைக்கு எனக்கு காலேஜ் லீவு தான்.
நான் எப்படியாவது எதையாவது சொல்லி வெளியே வந்துடறேன்.
என்னை யாருக்கும் தெரியாமல் தாசைப் பார்க்கக் கூட்டிட்டுப் போக முடியுமா?” என்றாள்.
“யாருக்கும் தெரியாமலா?” என்று நினைத்த சேகர் இலக்கியாவைப் பார்த்து, “போகிறது, அப்போ நாளைக்கு மார்னிங் ஒரு 11:00 கிளாக் தாசைப் பார்க்கப் போலாம்” என்றான்.
“சரி சரி” என்று தலையாட்டிய இலக்கியா, “நான் உள்ளே போறேன், எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல…
அதை உள்ளே சென்று மறையும் வரை இலக்கியாவையே பார்த்துக் கொண்டிருந்த சேகர் அவள் சென்று விட்டதை உறுதி செய்த பிறகு தன் மொபைலை எடுத்து தாசிற்கு அழைத்தான்.
அவன் அழைத்த அடுத்த நொடி காலை அட்டென்ட் செய்த தாஸ், “என்ன சேகர், இந்த நேரத்துக்குக் கால் பண்ணி இருக்க? இதுவும் முக்கியமான விஷயமா?” என்றான்.
“உனக்குத் தெரியாதா தாஸ், நான் எதுக்குக் கால் பண்ணி இருக்கேன்னு?” என்றான் சேகர்.
தாஸ் சிரித்துக் கொண்டே, “இலக்கியா என்னை மீட் பண்ணணும்னு உன்கிட்ட ஹெல்ப் கேட்டாளா?” என்றான்.
“அதுதான், அவளை விசிட்டிங் கார்டு கொடுத்து எதையும் சொல்லி பயமுறுத்தி வெச்சிருக்கியோ, அவ பேய் அறைந்த மாதிரியே போறா” என்று சேகர் சொல்ல…
சத்தமாகச் சிரித்த தாஸ், “நான் ஒன்னும் பொய் சொல்லவில்லை, உண்மையைத்தானே சொன்னேன்” என்றான்.
“சரி சரி, நீ உண்மையத்தான் சொல்றேன்னு நானும் நம்புறேன். நாளைக்கு காலையில 11:00 மணிக்கு இலக்கியாவை உன்னைப் பார்க்க அழைச்சிட்டு வரேன். எங்கே அழைச்சுட்டு வரதுன்னு சொல்லு” என்றான் சேகர்.
“நான் உனக்குக் காலையில எங்க வரணும்னு டெக்ஸ்ட் பண்றேன்” என்ற தாஸ் போனை வைத்தான்.
தீபாவுக்கு தன் கையாலேயே தானே சமைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு வந்த தீபா.
தன் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களை வைத்து செய்யச் சொல்லி அவர்கள் சமைத்த உணவுகளை எல்லாம் தமிழ் சாப்பிடுவதற்காக தனியாக ஒரு பிளேட்டில் சமைத்து உணவுகளை எடுத்து வைத்தாள்.
நேராக சிங்க் பக்கம் சென்று பைப்பை திருகி தண்ணீரைப் பிடித்து தன் முகம், கழுத்து, உடல் என தெளித்துக் கொண்டாள்.
அவளது வேலையாட்கள் அனைவரும் தீபா செய்வதைப் பார்த்துப் புரியாமல் நின்று இருக்க…
பைப்பை நிறுத்திவிட்டுத் திரும்பிய தீபா அவள் வீட்டு வேலையாட்கள் எல்லாம் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், “இங்கே என்ன வேடிக்கை வேண்டி இருக்கு? போங்க, ரத்த வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல? போய் எல்லாரும் அவங்கவங்க வேலையை பாருங்க” என்று கிச்சனிலிருந்து அவர்களை வெளியே துரத்தினாள்.
வேலை ஆட்கள் எல்லாம் வெளியே சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட தீபா தன்னைச் சுற்றிலும் யாரேனும் இருக்கிறார்களா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு.
தன் மேல் சட்டைக்குள் கைவிட்டு உணவில் கலப்பதற்காக வெளியே எடுத்தாள்.
அதை பொடி செய்து தமிழுக்காக செய்து வைத்திருந்த அனைத்து உணவுகளிலும் கலந்தவள், எடுத்துக்கொண்டு தமிழின் அறைக்குச் சென்று கதவடித்தவள், உணவை மேஜையில் வைத்துவிட்டு வழக்கம் போல தமிழிடம் வழிந்து பேசுவது போல அவனிடம் வந்து, “டார்லிங்…. வா சாப்பிடலாம், உனக்குப் பசிக்குதுன்னு சொன்ன” என்றாள் குழைந்துகொண்டே.
தமிழுக்கு தீபா இன்று நடந்து கொள்வதைப் பார்த்ததும் ஏனோ உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது.
தீபா தமிழின் அருகில் நெருங்கி வந்து அவன் மீது உரசி கொண்டே அருகில் அமர்ந்தாள்.
தமிழுக்காக செய்த உணவை எடுத்து அவன் முன் காட்டி, “இங்கே பாரு தமிழ், உனக்காக நானே கஷ்டப்பட்டு சாப்பாடு செய்து வந்தேன்” என்றவள். “இங்கே பாரு, என் உடம்பெல்லாம் எப்படி வியர்த்து இருக்குன்னு” என்று தமிழ் முன் குழாய் தண்ணீரை எடுத்து தன் முகம், உடலில் தெளித்துக் கொண்டதைக் காட்டி அவனிடம் கூறினாள்.
தமிழ்வும் தீபா சொல்வதைக் கேட்டு அவள் நிஜமாகவே தனக்காகத்தான் உணவு சமைத்து கொண்டு வந்திருக்கிறாள் என்று எண்ணியவன், “எதற்காக நீ இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்ல தீபா. இங்கே தான் இவ்வளவு வேலைக்காரங்க இருக்காங்கல்ல” என்றான் மிக அக்கறையாக.
“என்னோட தமிழுக்காக நான் இது கூட செய்ய மாட்டேனா?” என்றவள் தமிழுக்காக செய்து வந்த உணவை ஸ்பூனில் எடுத்து ஊட்டி விட ஆரம்பித்தாள்.
தமிழும் மறுப்பு எதுவும் சொல்லாமல் தீபா கொடுத்ததை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தான்.
அவள் போதை மருந்து கலந்த உணவை தமிழுக்கு ஊட்டி விட… அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழின் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர ஆரம்பித்தான்.
அதை உணர்ந்த அடுத்த நொடி தீபாவின் கையில் இருந்து உணவை வாங்கி அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.
முதலில் அதிர்ந்த தீபா பின் எந்த மறுப்பும் சொல்லாமல் தமிழ் ஊட்டி விடும் உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு முடித்ததும் அவன் கையில் இருந்து தட்டை வாங்கி வைத்தவள், வழக்கம் போல அவனை நெருங்கி வந்தாள்.
அவள் இப்படி நெருங்கி வரவும் தமிழ்வும் தீபாவிடம் நெருக்கம் காட்டினான்..
தீபா உள்ளுக்குள் “இவனை எப்பவும் இதே மாதிரி என் கைக்குள்ள போட்டு வச்சுக்கணும். அப்போதான் நான் சொல்றபடி எல்லாம் தமிழை ஆட்டி வைக்க முடியும். இந்த ஒரு மாத்திரை போதும் இவனை நான் என் கைக்குள்ள வச்சுக்கிறதுக்கு” என்று நெருக்கம் காட்டியபடி அவனுடன் ஏதோ பேச வர…
சரியாக அப்போது தமிழின் ஃபோன் அலறியது.
தமிழின் ஃபோன் அடிக்கவும் தன்னுடன் நெருங்கி இருந்த தீபாவை தன்னிடமிருந்து விலகியவன் ஃபோனை அட்டென்ட் செய்தான்.
அவனுடைய நண்பன் டாக்டர் ஆதித்யாதான் தமிழுக்கு அழைத்திருந்தான்.
தமிழ் ஒரு எமர்ஜென்சி, “நீ உடனே கிளம்பி உன்னோட தனிப்பங்கள வீட்டிற்கு வா..” என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்தான்.
ஏற்கனவே மாத்திரையின் வீரியத்தில் தமிழின் உடல் மோசமாகிக் கொண்டு இருக்க, தீபாவின் நிலையும் அப்படித்தான் இருந்தது.
ஃபோனை வைத்துவிட்டு தமிழ் தீபாவைப் திரும்பிப் பார்க்க… அவள் மேலே அணிந்திருந்த நைட்டியை கழட்டி வீசிவிட்டு வெறும் உள்ளாடையோடு அவன் முன்பு கவர்ச்சியாக நின்று இருந்தாள்.
அவளை இந்த நிலையில் பார்த்த தமிழின் மனம் சற்று தடுமாறச் செய்தது. மீண்டும் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட தமிழ் தன் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு தீபாவிடம் வந்தவன், “என்னோட ஃப்ரெண்டுதான் கால் பண்ணினான். நான் அவசரமாகப் போய் ஆகணும்” என்றான்.
“என்ன டார்லிங், நீ வந்து ரெண்டு நாள் முழுக்க என் கூட தானே இருக்கேன்னு சொன்ன, ஆனா இப்ப பாரு வந்ததும் சாப்பிட்டதும் ஃபோன் வந்துச்சு, உடனே கிளம்பிட்ட…” என்று தீபா ஒரு மார்க்கமாக தமிழை நெருங்கி வந்தபடி பேச..
“சாரி டார்லிங், என்னை தப்பா எடுத்துக்காத. நான் இன்னொரு நாள் வந்து உன் கூட ஸ்டே பண்றேன். இப்ப நான் கிளம்புறேன்.
அவன் ரொம்ப அர்ஜென்டுன்னு சொல்லிட்டான். இப்போ போகலைன்னா நல்லா இருக்காது” என்று சொல்லிக் கொண்டு தன் கோட்டை எடுத்து மாட்டியபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
போலவே இன்றும் தன்னுடன் இருக்காமல் கிளம்பிச் சென்ற தமிழின் மீது கோபம் கோபமாக தீபாவுக்கு வந்தது.
தமிழ் தீபாவின் வீட்டை விட்டு வெளியே வந்தவன் தீபாவின் வீட்டில் தலைமை வேலை செய்யும் பெண்ணிற்கு அழைத்து அவளிடத்தில் வீடியோவை “எனக்கு அனுப்பி வைத்துவிட்டு தான் சாப்பிட்ட உணவுகள் அத்தனையும் சாம்பிள் எடுத்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கச் சொல்லும்படி” போனை வைத்தான்.
அந்தப் பெண் சற்று முன்பு சமையலறையில் வீடியோ எடுத்திருந்தது தமிழுக்கு அனுப்பி வைத்தவள், அவள் அறையில் இருந்து எப்படி உணவை எடுப்பது என்ற யோசனையில் திணறியபடி நின்று இருக்க…
அப்போது தீபாவே அந்தப் பெண்ணை அழைத்தாள்.
ஃபோனை அட்டென்ட் செய்த அந்தப் பெண் “ஹலோ மேடம்” என்று பவ்யமாகப் பேச…
“எவ்வளவு நேரம் உனக்கு ஃபோன் ட்ரை பண்றது? இவ்வளவு நேரம் யார் கூட ஃபோன் பேசிக்கிட்டு இருந்த?” என்றாள் தீபா கோபமாக..
எங்கேதான் தமிழுடன் பேசியது தீபாவுக்குத் தெரிந்து விடுமோ என்று அந்தப் பெண் பயத்தில் அமைதியாக இருக்க…
“வேற நேரத்துல ஃபோன் பேச கூடாதுன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? அப்படி என்னதான் ஃபோன் பேசிக்கிட்டு இருக்கேன்னு தெரியல” என்று திட்டியவள், “சரி சீக்கிரம் நீ ரூமுக்கு வந்து இங்கே சாப்பிட்டு போட்டது எல்லாம் அப்படி அப்படியே இருக்கு, அதை எடுத்துட்டு கீழே போ” என்று கட்டளை இட…
“அப்பாடி, தனது அடுத்த வேலையை தீபாவே சுலபமாக்கி விட்டாள்” என்று அந்தப் பணிப்பெண் போனை வைத்துவிட்டு வேகமாக தீபாவின் அறைக்குச் சென்றாள்.
அறை கதவைத் தட்டிவிட்டு அந்தப் பெண்ணைக் கதவுக்கு வெளியே நின்று இருக்க, அவளை உள்ளே வரச் சொல்லி தீபா உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
அந்தப் பெண் வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர… யாருடனும் ஃபோன் பேசிக் கொண்டிருந்த தீபா, “ஆமா நிர்மல் ஏதும் சீக்கிரமா வா…
நீ இல்லாம என்னால நிம்மதியா இருக்க முடியல.. எனக்கு இப்பவே என் வீட்ல நீ வேணும்… என் படுக்கையில் என் பக்கத்துல நீ வேணும்.. சீக்கிரமா வா.. நிர்மல்…” என்று குழைந்து ஃபோன் பேசிக்கொண்டு இருந்தாள்.
தீபா பேசியதைக் கேட்டேன் அந்தப் பணிப்பெண். “தமிழுடன் இருந்து கொண்டு வேறொரு ஆணுடன் தொடர்பில் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட அந்தப் பெண், ‘ஐயா இந்த அம்மாவுக்காக எத்தனை வசதி இந்த வீட்ல செஞ்சு கொடுத்திருக்காரு.
ஆனா இந்த அம்மா என்னடான்னா வேறு யார்கிட்டயும் ஃபோன்ல தொலைந்து கொழஞ்சு பேசிக்கிட்டு இருக்கு, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம’ என்று நினைத்துக் கொண்டு அந்தப் பெண், ‘நமக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம்? வந்து சொன்ன வேலையை செஞ்சு பண்ணு பேசாம போய்க்கொண்டே இருக்கிற மாதிரி தான் நமக்கு நல்லது’ என்று நினைத்துக் கொண்டே அவள் அருகில் சாப்பிட வைத்திருந்த உணவுகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல…
“ஏய் ஒரு நிமிஷம் நில்லு” என்றால் தீபா..
அந்தப் பணிப்பெண் திடுக்கிட்டு அப்படியே நிற்க… “நீ போயிட்டு எனக்கு நான் ரெகுலரா சாப்பிடுற ட்ரிங்க்ஸ் மட்டும் மேல அனுப்பி வை, மத்தவங்களை எல்லாத்தையும் போகச் சொல்லிடு” என்றால் தீபா நின்ற இடத்திலேயே. தீபாவைப் திரும்பிப் பார்த்து, “சரிங்க மேடம்” என்று சொல்லிவிட்டு அவள் அறையை விட்டு ஒரே ஓட்டமாக அந்தப் பெண் சென்று விட்டாள்.
