Home Uncategorizedஅஸ்க.. லஸ்கா..காதல் 1

அஸ்க.. லஸ்கா..காதல் 1

by Layas Tamil Novel
682 views

பாகம் 1

என்ன டி அப்படியே நிக்குறே… நான் சொல்றது உன் காதில் விழலையா… ஒழுங்கா நான் சொல்றதை செய்யலையின்னா உன்னோட அம்மாவை குழி தோண்டி புதைச்சிருவேன் என்று தன் முன்னாள் அழுது வடிந்த படி நின்று இருந்த தன் அக்காவின் மகள் இலக்கியாவை அதட்டிக் கொண்டு இருந்தான் அவள் தாய் மாமன் ராமலிங்கம்.

மாமா தயவு செய்து என்னையும் என் அம்மாவையும் விட்ருங்க. நாங்க ரெண்டு பேரும் கண் காணாத இடத்துக்கு போய்டுறோம் என்று அவன் காலில் விழுந்து கெஞ்சினால்.

தன் காலில் விழுந்தவளை உதைத்து ஒழுங்கா நான் சொன்னது மாதிரி என் கூட நீ இப்போ கிளம்பி வர..இல்ல உன் அம்மாவை நீ பாக்குறது இன்னியோட கடைசி நாளா இருக்கும் என்று மிரட்டினான்.

தன் மகள் படும் பட்டை எல்லாம் பார்த்துவிட்டு இலா அம்மா கோமதி..

“இலா… அவன் சொல்றதை கேட்டு நீ எந்த முடிவும் எடுத்துறாத மா…எனக்கு என்ன ஆனாலும் சரி நீ இவன் பேச்சை நம்பி எங்கயும் போகாதே..” என்று அவள் அம்மா கோமதி இலாவை இங்கே இருந்து காப்பாற்றி விட வேண்டும் என்று அவளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார்.

“என் சொந்த தம்பியை நம்பி பதினோரு வருசத்துக்கு முன்னாடி நானும்  உன் அப்பாவும் நீ ஆறு வயசா இருக்கும்போது  மலேசியாவுக்கு உன்னை எங்களோட அழைச்சுட்டு வந்தோம்.

என்னிக்கு நாங்க மலேசியா வந்தோமோ அந்த அன்னிக்கு எங்க நிம்மதி சந்தோசம் எல்லாம் காத்தோட கலந்து போய்டுச்சு.

உனக்கு அப்பறோம் வந்த உன் தம்பியையும் இப்படித்தான் ஏதோ சொல்லி வெளியே அழைச்சிட்டு போனவன் திரும்பி வரும்போது வெறும் கையா தான் வந்தான் என்றார் இலாவின் அம்மா.

உன் தம்பி இன்று வரை எங்கே இருக்கான் என்ன ஆனான் என்று எனக்கு தெரியாது.

உன் அப்பவும் இவனிடம் மாட்டிக்கொண்டு நோய் வாய் பட்டு மருந்துக்கு கூட காசு இல்லாம இறந்து போய்ட்டாரு.

இனியும் என்னால இவன்  செய்றதையெல்லாம் பார்த்துட்டு சும்மா  இருக்க முடியாது நீ இங்கே இருந்து எங்கயாவது போய்ட்டு இலா.

நான் இவனை பார்த்துக்கறேன் என்று சொன்னவர் ராமலிங்கத்தின் காலை இருக்க கட்டிக் கொண்டு அவனை அந்த இடத்தை விட்டு நகர விடாமல் பிடித்துக்கொண்டு இலா சீக்ரயம் இங்கே இருந்து போ…

நான் சொல்றதை கேளு என்னை பத்தி கவலை படாத இந்த கால் இல்லாத கிழவியை பற்றி எதுவும் கவலை படாத சீக்கிரம் போ… என்று தான் மகளை அங்கிருந்து தப்பி போக சொல்ல..

தன் தாயை இந்த ஒரு நிலைமையில் விட்டு விட்டு செல்ல மனமில்லாமல் அங்கேயே அழுத்துக்கொண்டு இலக்கியா நின்று இருக்க…

ராமலிங்கம் தன் காலை பிடித்துக்கொண்டு கொண்டு இருந்த கோமதியை உதைத்து அவரை தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சிக்க…

கொமதியோ அத்தை எல்லாம் எதுவும் கருட்டில் கொள்ளாமல் தன் மகளை இந்த கொடியவனிடம் இருந்து காப்பாற்ற ராமலிங்கத்தின் காலை இருக்க பற்றிய படி தன் மகளை அங்கிருந்து போக சொல்லி கெஞ்சினார்.

தானக்காக இத்தனை வருடம் தன் தாய் மாமனிடம் இருந்து கஷ்டப்படுக் கொண்டு இருக்கும் தன் அம்மாவை விட்டு செல்ல மனமில்லாமலும், இங்கே இருந்தாள் எங்கே தன்னையும் தன் தம்பியை போல எங்காவது கொண்டு சென்று விட்டுவிடுவானோ என்ற பயத்தில் வேறு வழியில்லாமல் ராமலிங்கத்திடம் இருந்து தப்பித்து கால் போன போக்கில் ஓடினால் இலா.

கால் போன போக்கில் அழுது வழிந்த படி தப்பித்தால் போதும் என்று இலக்கியா ராமலிங்கத்திடம் சீக்கிக் கொள்ளாமல் ஓடினால்

அதற்குள்  ராம லிங்கம் கோமதியை அடித்து கீழே தலைவிட்டு இலக்கியாவை தேடி அவள் சென்ற திசையை நோக்கி ஓடினான்.

தன் முகம்  கை கால் எல்லாம் ராமலிங்கம் அடித்ததில் காயங்கள் ஏற்பட்டு அழுதபடி வீல் சேரில் பாதி உடலும்  தரையில் பாதி உடலும் என தரையில் விழுந்து கிடந்தவரை தூக்கிவிட இப்பொது தன் மகளும் இல்லை என்று வறுத்த பட்ட கோமதி.

தான் இனி எப்படி போனால் என்ன அந்த கொடுமைகாரனிடம் இருந்து தன் மகள் எப்படியாவது தப்பித்தால் போதும் என்று கடவுளிடம் மன்றதிக் கொண்டு இருந்தார் கோமதி.

டேய் தமிழ் எங்கே இருக்க என்று தமிழின் நெருங்கிய நண்பன் வினித் பதட்டமாக தன் நண்பனுக்கு அழைக்க…

டேய் இடியட் நான் எங்கே இருக்க போறேன் கிளியண்ட்ஸை மீட் பண்ணிட்டு ரூமுக்கு போய்ட்டு இருக்கேன் என்றான் தமிழ்.

டேய் நீ ரூமுக்கு எல்லாம் போக வேண்டாம் உடனே நீ கிளம்பி நான் சொல்ற இடத்துக்கு வா என்று தமிழை அழைத்தான் அவன் நண்பன் வினித்.

எங்கே டா என்னை இந்த நேரத்துக்கு வர சொல்ற.. மணியை பாரு இப்பவே பத்துக்கு மேல  ஆகிருச்சு என்றான் நாம நாயகன் தமிழ்.

டேய் இப்போ டைம்மா டா முக்கியம் உடனே எந்த கேள்வியும் கேட்காமல் நான் உனக்கு இப்போ வாட்சப்பிற்கு அனுப்புற லொகேஷனுக்கு கிளம்பி வா என்றவன் போனை கட் செய்துவிட்டான்.

டேய்.. எங்கே டா வரணும்… என்று தமிழ் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே வினித் போனை வைத்துவிட.. டென்ஷன் ஆன தமிழ் இடியட் எப்போ  பாரு  என்ன எதுன்னு சொல்லாம என்னை இங்கே வா… அங்கே வான்னு கடுப்பாடிச்சுட்டே இருக்கான் என்று புலம்பியப்படி தன் போனை காதில் இருந்து எடுக்க…

அப்போது சரியாக அவன் போனிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அது வேறு யாரும் இல்லை நம்ம வினித் தான் தமிழுக்கு சொன்னது போல வாட்ஸாப்பில் லைவ் லொகேஷன் அனுப்பி இருந்தான்.

அவன் அனுப்பிய  லொகேஷனை ஓபன் செய்து பார்த்த தமிழ் தன் டிரைவரிடம் அந்த இடத்தின் பெயரைய் சொல்லி அங்கே செலும்பாடி காரை திருப்ப சொன்னான்.

ட்ரிவரும்  தமிழ் சொன்ன இடத்திற்கு செல்வதற்காக காரை திருப்ப…

அப்போது திடீர் என்று அவன்  செடற காரின் மீது ஒரு பெண் வேகமாக ஓடி வந்து விழுந்தால்.

அவசரமாக  காரை நிறுத்திய தமிழின் டிரைவர் வேகமாக எழுந்து வந்து காரில் மீது விழுந்த பெண்ணை கை பிடித்து மேலே தூக்க…

காரின் மீது மோதியா வேகத்தில் இடுப்பில் அடிப்பட்டு விட.. அந்த வலியில் முகம் சுழித்தவாரு அழுத்துகொண்டே நிமிர்ந்து டிரைவரை பார்த்தால் இலக்கியா.

என்ன மா இப்பட்டி வேகமா ஓடி வந்து எங்க கார் மேல விழுறயே உனக்கு விழுந்து சாக வேற எந்த காரும் கிடைக்கலையா… வீனா வந்து என் காரில் விழுந்து வச்சிட்டே இப்போ என் முதலாளி என்னை என்ன செய்ய போகிறாரோ என்றாப்படி இலாவை திட்ட…

ஏற்கனவெ வினித் மீது கடுப்பில் இருந்த தமிழ்.. டிரைவர் என்று  காருக்குள் இருந்து அழைத்தவன் அங்கே என்ன பிரச்சனை சீக்கிரம் சால்வ் பண்ணி அனுப்புங்க என்று காருகுறிச்சி வெளியே இடுப்பை பிடித்துக்கொண்டு  நின்று இருந்த பெண்னை பார்த்தாவறு கேட்க..

சார் நான் எதுவும்  செயலை அந்த பொண்ணு தான் ஓடி வது நம்ம கார் மேல மோடிருச்சு என்று தமிழ் தன்னை என்ன சொல்ல போகிறானோ என்றப்படி பயந்து போய் நின்று இருக்க..

காருக்குள் இருந்து வெளியே நின்று இருந்த இலாவை குனிந்து தமிழ் பார்க்க…

வெளியே இருட்டாக தெரு விளக்கின் வெளிச்சத்தில்  சோகமாக முகத்தை வைத்துக்கொள் கொண்டு அழுது வடிந்த படி ஒரு பெண் நின்ற இருக்க..

இலாவின் முகம் அந்த வெளிச்சத்திலும் அழுது கொண்டு இருந்த அவள் முகமும் அவள் விழிகளும்  காருக்குள் இருந்த தமிழின் மனதை ஏதோ செய்தது காரில் இருந்து அவளை பார்த்தவாரே இறங்கினான்.

தன் டிரைவரிடம் பர்ஸில் இருந்து ஒரு கற்றை நோட்டை எடுத்து அவரிடம் நீட்டி அந்த பொண்ணு கிட்டே கொடுத்து பைசல் பண்ணி அனுப்புங்க… எனக்கு நேரம் ஆகுது என்றவன் தன் போன்ல  மெசேஜ் மேல்  மெசேஜாக அனுப்பிக் கொண்டு இருந்த வினித்தை கொள்ளும்  ஆத்திரத்துடன் காரினுள்  அமர்ந்து இருந்தான் தமிழ்.

அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு போய் இலாவின் முன்பு நீட்டி இந்தா மா.. இந்த எங்க அய்யா பெரிய மனசு பண்ணி உன்னை மன்னிச்சு விட்டுட்டாரு.

இந்த பணத்துக்காக தானே நீ எங்க வண்டிக்குள்ள வந்து விழுந்த… இதை வாங்கிட்டு முதல்ல  இடத்தை காலி பண்ணு என்றார் தமிழின் டிரைவர்.

தன் முன்னாள் பணத்தைக் காட்டி நின்று இஇருண்டஹ் மனிதரை பார்த்து  கோவப்படுக் கொண்ட இலக்கியா அவர் கன்னத்தில் ஓங்கி அரைந்து என்னை பார்த்தால் உங்கலை போன்ற பணக்காரர்களுக்கு எல்லாம் எப்படித்தெரிகிறது என்று அவரை வாய்க்கு வந்த படி திட்டியவள் .

தன் கையில் திணித்து இருந்த பணத்தை தூக்கி டிரைவர் முகத்திலேயே விட்டு எரிந்தவள் அங்கிருந்து இடுப்பில் இருந்த வலியோடு த இடுப்பை பிடித்துக்கொண்டு கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

வெளியே இருந்த பெண் தன் டிரைவரை  ஏதோ எடுத்து எரிந்து பேசி தான் கொடுத்த பணத்தை மதிக்காமல் அதை  தன் டிரைவரின் முகத்தில் விட்டு  எரிந்தவளை  பார்த்து தம்ழிற்கு ஆத்திரம் வந்தது.

இவளை என்ன செய்கிறேன் பார் என்றவறு காருக்குள் இருந்து தமிழ் இறங்கி வர.. அதற்குள் அவள் தாங்கள் இருந்த சாலையை நடக்க முடியாமல் லேசாக சாய்ந்தவாரு  செல்ல…

அப்போது சரியாக இலாவை தேடிக்கொண்டு அவள் சென்ற இடம் வழியாக தேடிக் கொண்டு வந்த அவள் தாய் மாமன் அங்கு வந்து விட…

தன் எதிரில் நின்று இருந்த  ராமலிங்கத்தை பார்த்து பயந்த படி இலா அதிர்ந்து போய் எங்கேயே நிற்க..
  அவளைய் பார்த்து விளங்கமாக சிரித்த ராமலிங்கம்.

அவ்வளவு சீசீக்கிரமா நீயே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது இலா என்றவர் அவள்  கையை பிடித்து தன்னுடன் இழுத்து  கொண்டு செல்ல போக..

தான் மறுபடியும் ராமலிங்கத்தின் கையில் சீக்கினால்  தன் வாழ்க்கை சின்ன பின்னம் ஆகிவும் என்று பயந்தஇலா. யாராவது என்னை காப்பாற்றுங்கள் என்று தன்னால் முடிந்த மட்டும் அழுது யாரும் அவளுக்கு உதவி செய்ய வருகிறார்களா என்று  அந்தவழியில் சென்ற காரை  எல்லாம் நிப்பாட்டி இலா உதவி கேட்டுக்கோ கொண்டு இருக்க…

அப்போது இலா ஓடி சென்று விழுந்த காரில் இருந்து யாரோ நின்று அவளை பார்ப்பதை கவனித்தால் ஆனால் அவளால் அந்த இருட்டில்  நின்று இருந்தவனின் முகத்தை பார்க்க முடியவில்லை.

அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கும் பொறுமை தமிழிற்கு இல்லை. வினித் வேறு அதற்குள் தன்னை வர சொல்லி கால் செய்து கொண்டே இருக்க..

காரை  அட்டென்ட் செய்த தமிழ் என்ன டா.. என்று எரிச்சலாக வினித் இடம் பேசிக் கொண்டே தூரத்தில் இருட்டில் நின்று இருந்த இலாவை பார்த்தவன் திரும்பி தன் டிரைவரிடம் அது அவங்க குடும்ப விவகாரம் போல இருக்கு நாம போகாலம்  நேரம் ஆச்சு என்று சொல்லி  அவரை காரை எடுக்க சொல்ல…

டிரைவரும்  சரி என்று தலையாட்டி விட்டு  இலாவையே பாவமாக பார்த்த படி காய் எடுத்துக்க கொண்டு தமிழ் சொன்ன இடத்திற்கு காரை கிளப்பினார்.

தனக்கு இருந்த ஒரு சிறு நம்பிக்கையும் தன் கான் முன்னாள் நார்ந்து தூரத்தில் ஒரு புள்ளியை போல் புகழ் வேகத்தில் மறைந்த காரையே பார்த்துக்கோ கொண்டு நின்று இருந்தால்.

 தமிழை இருட்டில் பார்த்தவளுக்கு  அவன் முகம் தெரியவில்லை.

தன்னை பிள்ளை போல பாதுகாக்க வேண்டிய தாய் மாமனே  தன்னை கொடுமை படுத்திக்  கொண்டு இருக்க…

வழியில் வந்தவன் தனக்கு உதவுவான் என்று நான் எப்படி எதிர்பார்க்கலாம் என்று உணர்ந்தவள் தன்னை நொந்து கொண்டு ராமலிங்கத்தின் கையில் சீக்கிக் கொண்டவள் அவன்  சொன்ன இடத்திற்கு அவனோடு கிளம்பினாள் இலக்கியா.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured