Home Uncategorizedஅஸ்க..லஸ்கா.. காதல் 15

அஸ்க..லஸ்கா.. காதல் 15

by Layas Tamil Novel
333 views

EPISODE 16

இலக்கியாவிற்காகத் தான் தேர்ந்தெடுத்திருந்த ஆடையைக் கொடுத்து, அந்தக் கடையில் இருந்த உடை மாற்றும் அறைக்குச் சென்று மாற்றி வரச் சொல்லிவிட்டு, அனு கடையில் வேறு பக்கம் சென்று உடைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

தூரத்தில் இவர்களுடன் கடைக்கு வந்திருந்த வினித், கடையில் இருந்த ஒரு சோபாவில் அமர்ந்துகொண்டு தன் மொபைலை நோண்டிக்கொண்டிருக்க, உள்ளே துணிகளைப் பார்த்துக்கொண்டிருந்த அனு அவனை உள்ளிருந்து பார்த்தாள். நேராக அவனிடம் வந்தவள், அவன் அருகில் நெருங்கி சோபாவில் அமர்ந்தாள். 

அனு இப்படித் திடீரென்று வந்து தன் அருகில் தன்னை உரசிக் கொண்டு அமர்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடையாத வினித், அவளை விட்டுச் சற்று தள்ளி அமர்ந்தவன், “ஏய் அனு, ஏன் இப்படி பண்ற? உன்னை இந்த மாதிரி எல்லாம் செய்யாதேன்னு எவ்வளவு முறை சொல்லியிருக்கேன்? உனக்குக் கொஞ்சம் கூட அறிவு இல்லையா?” என்று அவளைத் திட்டினான். 

“ஏன், நான் உன் பக்கத்துல வந்து உட்கார்ந்தா உனக்கு என்ன பிரச்சனை?” என்றாள் அனு. “நீ என் பக்கத்துல வந்து உட்கார்ந்தா எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை மேடம். உனக்குத்தான் பிரச்சனை. நீ என்னோட இப்படி உரசிகிட்டு உக்காந்திருக்கிறதை உன் அண்ணன்களோ அல்லது உன் குடும்பத்துக்குத் தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா நம்மள பத்தி தப்பா நினைக்க மாட்டாங்களா? உன் அண்ணன்கிட்ட இல்ல உன் தாத்தா கிட்டே போய் தப்பா சொல்லிக்கொடுத்தா அப்புறம் அவ்வளவுதான். உன் அண்ணன் கோபம் உனக்கு நல்லாவே தெரியும். நம்ம ரெண்டு பேரையும் பத்தி ஏதாவது தப்பா அவனுக்குத் தோணுச்சுன்னா அடுத்த நிமிஷம் உன்னையும் என்னையும் பார்த்து இடத்திலேயே சுட்டுக் கொன்னுடுவான்” என்றான் வினித்.

 “என் அண்ணா அப்படி எல்லாம் எதுவும் பண்ண மாட்டான். அவனுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சுச்சுன்னா என்னோட விருப்பம் என்னவோ அதுக்குத்தான் சம்மதம் சொல்வான். அவன் கோபமெல்லாம் பட மாட்டான்” என்றாள் அனு.

“ஏய், நானும் அப்போதிலிருந்து சொல்லிட்டு இருக்கேன், நமக்குள்ள ஒண்ணும் இல்லைன்னு. நீ என்னவோ நீயும் நானும் லவ் பண்ற மாதிரி பேசிக்கிட்டு இருக்க” என்றான் வினித். “என்ன வினித் இப்படிச் சொல்லிட்ட… அப்போ நாம லவ் பண்ணலையா?” என்று கேட்டாள் அனு.

 “கண்டிப்பா இல்லை” என்று சொன்னவன் சோபாவில் இருந்து எழுந்து செல்ல, 

அனுவும் வேகமாக எழுந்து அவன் பின்னால் சென்றாள். 

“இங்க பாரு வினித், நீ எவ்வளவு முறை என்னோட லவ் வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ணினாலும் பரவாயில்லை. நான் மறுபடியும் மறுபடியும் வந்து என்னோட லவ்வ நீ ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் உன்னைத் தொல்லை பண்ணிக்கிட்டுதான் இருக்கப் போறேன்” என்றாள் அனு. 

“நீ எப்படி வந்து என்கிட்ட லவ் சொன்னாலும், என்ன பண்ணினாலும் நான் இந்த லவ்வ ஏத்துக்க மாட்டேன். அது முதலில் நீ புரிந்துகொள்” என்றான்.

“ஏன் என்னோட லவ்வ ஏற்றுக்கொள்ள மாட்டேங்குற? நானும் ஒரு வருஷமா உன் பின்னாடி என்னை லவ் பண்ணச் சொல்லி சுத்திக்கிட்டு இருக்கேன். நீ என்னை வேண்டாம் என்று சொல்வதற்கு சரியான ஒரு காரணத்தைச் சொல்லு. அது சரியா இருந்துச்சுன்னா நான் கண்டிப்பா உன் பின்னாடி இனிமேல் வர மாட்டேன்” என்றாள் அனு.

 “காரணம் தானே? சொல்றேன் நல்லா கேட்டுக்கோ…” என்ற வினித், “நீ என்னோட நண்பனுடைய தங்கச்சி. அது என் நண்பனுக்கு துரோகம் செய்துவிட்டு உன்னை லவ் பண்ண மாட்டேன்” என்றான்.

 அவன் சொன்னதைக் கேட்டதும் சிரித்த அனு, “நீ என்னை லவ் பண்றதுனால எப்படி என் அண்ணனுக்கு துரோகம் செய்கிறதாக ஆகும்?” என்று கேட்டாள். 

“ஏய் அண்ணா, நீ என்ன முட்டாளா? உன்னை என்ன நம்பி உங்க குடும்பத்துக்குள்ள இவ்வளவு உரிமையா பழக விட்டிருக்காங்க. அதற்குக் காரணம் அவன் என் மேல வச்சிருக்க நம்பிக்கை. அப்படிப்பட்ட நம்பிக்கையை நான் ஒருபோதும் உடைக்க விரும்பல. உன்ன நான் லவ் பண்ணினா என் நண்பன் என்ன நினைப்பான்? இவனை நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு என் தங்கச்சிக்கு எனக்குத் தெரியாமல் லவ் பண்ணிட்டான்னு என்ன தப்பா நினைக்க மாட்டானா?” என்றான் வினித்.

“உன்னை யாரு என் அண்ணனுக்குத் தெரியாம என்ன லவ் பண்ண சொன்னது?” என்றாள் அனு. 

அவள் சொல்வதைக் கேட்டு வினித் புரியாமல் அனுவை பார்க்க, “என்ன நான் சொல்றது உனக்குப் புரியலையா?” என்று கேட்டாள் அனு.

 “ஆமாம்” என்று வினித் தலையாட்ட,

 “அதானே பார்த்தேன். நான் சொன்ன இந்த சின்ன விஷயத்தை நீ புரிந்திருந்தால் என்றைக்குமே நீ என்னை லவ் பண்ண ஆரம்பித்திருப்ப” என்று நினைத்தாள் அனு. 

“என் அண்ணனுக்குத் தெரியாம யாரு உன்ன லவ் பண்ண சொன்னது? நீ என் அண்ணன்கிட்ட நீ லவ் பண்றேன்னு சொல்லிட்டு லவ் பண்ணலாமே!” என்றாள் அனு. 

அனு சொன்னதைக் கேட்டு கடுப்பான வினித், “நீ என்ன லூசாடி… என்னால எல்லாம் உன் அண்ணன்கிட்ட நான் உன்னை லவ் பண்றேன்னு போய்ச் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது” என்றான் வினித். 

“என் அண்ணன்கிட்ட சொல்ல வேண்டாம், அப்போ என்கிட்ட சொல்லலாமே!” என்றாள் அனு.

‘இவளை என்ன செய்வது’ என்பது போல வினித் அனுவைப் பார்க்க, “என்னடா அப்படி பார்க்குற… இங்க முன்னாடி நீ என்ன சொன்னேன்னு கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாரு” என்றாள் அனு. “நான் என்ன சொன்னேன்?” என்றான் வினித். 

“நீ என்னை லவ் பண்றதை என்னோட அண்ணன்கிட்ட போய்ச் சொல்ல முடியாது என்று இப்போதானே சொன்னே?” என்றாள் அனு. 

“ஆமாம் சொன்னேன். அதுக்கு என்ன இப்போ?” என்றான் வினித். 

“உன் கடவுளே, இவனை வச்சுக்கிட்டு நான் எப்படித்தான் என்னோட லவ்வுல ஜெயிக்கப் போறேன்னு தெரியல” என்று தன் தலையில் அடித்துக்கொண்டவள், 

“அட மக்கு மக்கு வினித்… உன்னை எல்லாம் எப்படி என் அண்ணன் ஃபிரண்டா வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கான்னு தெரியல. நீ என்னை லவ் பண்றதை என் அண்ணன்கிட்ட சொல்ல மாட்டேன்னு தானே சொன்ன…” என்று அவன் சொன்னதை மீண்டும் வினித்திடமே சொல்லிக் காட்டி கேட்டாள். 

அவள் இப்போது சொன்ன வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் அழுத்தம் கூட்டச் சொல்ல, இப்போதுதான் வினித்திற்கு தான் என்ன சொன்னோம் என்று புரிந்தது.

“ஐயோ…. அவசரப்பட்டு இவளிடம் வார்த்தையே விட்டு விட்டோமே. இனி இதைப் பிடித்துக்கொண்டு என் பின்னாலே சுற்றுவாளே” என்று வினித் நினைத்தவன், 

“நா…. நான் அப்படி எல்லாம் எதுவும் சொல்லல… ஏதோ ஒரு ஃப்ளோவில் அப்படி உளறிட்டேன். நீ சும்மா அதையே நினைச்சிட்டு என்கிட்ட பேசாத” என்றவன், “நீ போய் இலக்கியா என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாரு… டைம் ஆகுது” என்று சொல்லி அவளைத் தன்னிடம் இருந்து அனுப்புவதில் குறியாக இருந்தான் வினித். 

அவனை முறைத்துக்கொண்டே “நீ எதுக்காக என்னை இப்போ எங்கேயோ தள்ளி அனுப்பப் பார்த்தாய் என்று எனக்குப் புரியாது என்று நினைத்துவிட்டாயா? நீ என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டடா” என்று நினைத்தவாறே இலக்கியாவைக் காண ட்ரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்றாள் அனு.

அனு கொடுத்த ஆடையைப் போட்டுப் பார்ப்பதற்காக அறைக்குள் நுழைந்த இலக்கியா, தான் அணிந்திருந்த ஆடையில் இருந்த ஜிப் முழுவதையும் வைத்தவள், கண்ணாடியில் அவள் முதுகு முழுவதும் தெரிந்ததைப் பார்த்து நாணம் கொண்டாள். 

கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்க வெட்கப்பட்டவாறு தன் உடையை மாற்ற, அவள் அணிந்திருந்த ஆடையைக் கழற்றப் போக, சரியாக அருகில் இருந்த மற்றொரு கதவு வழியாக உள்ளே நுழைந்த தமிழ், நொடியும் தாமதிக்காமல் இலக்கியாவின் இடையில் கை கொடுத்து தன்னோடு சேர்த்து அவளை இழுத்து நிறுத்தியவன், குனிந்து அவள் பஞ்சு போன்ற இதழைத் தன் தடித்த இதழுக்குள் சிறை செய்திருந்தான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத இலக்கியா, என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் தனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த தமிழைப் பார்க்க, அவன் கண்கள் மூடி இலக்கியாவிற்கு மெய்மறந்து முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

தான் பிறந்து வளர்ந்த இத்தனை வருடங்களில் எந்த ஒரு ஆணின் நெருக்கத்தையும் இவ்வளவு அருகில் கண்டிராதவள், இன்று முதன் முதலாக தமிழின் கை வளைவிற்குள் தன்னை அணைத்தபடி தனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருக்க, அவன் ஆண்மை நிறைந்த ஸ்பரிசம் அவள் இடையில் அவன் கை தழுவி இருக்க, இலக்கியாவிற்கு கூச்சமும் வெட்கமும் ஒரு சேர வந்துவிட, படபடக்கும் விழிகளோடு தமிழைப் பார்த்துக்கொண்டிருந்தவள், வெட்கம் தாளாமல் அவன் கொடுத்த முத்தத்தில் இணங்கிக் கண்களை மூடி அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினாள். 

“நீ முத்தம் கொடுக்க வேண்டாம்” என்று தன்னிடமிருந்து பிரிக்க ஏனோ இலக்கியாவிற்கு எண்ணமே வரவில்லை. தான் இவனைத் திருமணம் செய்யப் போகிறோம் என்று நினைத்துவிட்டாலோ என்னவோ… அதனால்தான் அவன் இப்படித் திடீரென்று தன்னிடம் முத்தம் கொடுத்தும் அவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவனுடன் இணங்கி நின்றிருந்தாள்.

தமிழ் கொடுத்த முத்தத்தில் கண்கள் மூடி மயங்கி நின்றிருந்த இலக்கியாவை முத்தம் கொடுத்தவாறே தன் கண்களைத் திறந்து அவள் முகத்தைப் பார்த்தான் தமிழ். தமிழின் முத்தத்தை அவள் கண்கள் மூடி ஏற்றிருக்க, தான் முத்தம் கொடுக்கும் போது அவள் எப்படி நடந்துகொள்வாள் என்று யோசனையில் இருந்தவனுக்கு, இப்போது அவள் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருக்கவே அவனுக்கு இன்னும் வசதியாய் போய்விட்டது. அவள் இடையோடு சேர்த்திருந்த தன் கையை அவள் இடுப்பைப் தழுவியவாறே தன்னோடு மேலும் இறுக்கி அணைத்துக்கொண்டான். தன் பிஞ்சு இடை வலிக்கும் அளவிற்கு தன்னை இறுக்கி அணைத்து பிடித்திருந்தவனைத் தன்னிடம் இருந்து பிரிக்கும் எண்ணமே இல்லாமல் கண் மூடி இலக்கியா நின்றிருக்க, இலக்கியாவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த தமிழ் அவள் இதழிலிருந்து தன் இதழை மெல்லப் பிரித்துக்கொண்டவன், கண்கள் மூடி நின்றிருந்த அவள் முகத்தைப் பார்த்தான்.

சாந்தமான குட்டி முகம், முத்தம் கொடுத்ததில் அவள் கன்னங்கள் இரண்டும் கோவைப்பழம் போல் சிவந்திருக்க, அவள் இதழ்கள் லேசாகச் சிவந்து தடித்து வீங்கி இருந்தது. அவள் புருவத்திற்கு மேலே இருந்த சிறிய மச்சத்தைப் பார்த்த தமிழ், தன் கட்டை விரலால் அவள் வில் போன்ற வளைந்திருந்த புருவத்தை நீவிவிட்டவன், அந்த மச்சத்தின் மேலே தன் இதழைப் பதித்தான். 

இவ்வளவு நேரம் கண்கள் மூடி அமைதியாக நின்றிருந்த இலக்கியா தன் புருவத்திற்கு மேலே முத்தம் வைக்கவும், மூடியிருந்த தன் கண்களை மெதுவாகத் திறந்து தன் முகத்திற்கு மிக அருகே இருந்த தமிழின் முகத்தைப் பார்த்தாள். தமிழும் அவள் கண்களைத்தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“நான் திடீர்னு வந்து உனக்கு முத்தம் கொடுத்ததும் உனக்கு என் மேல கோபம் வரலையா?” என்று கேட்டான் தமிழ். 

“கோபமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? நீங்கள் விலைக்கு வாங்கி வந்தவள் நான். உங்களிடம் என் கோபத்தைக் காட்டும் உரிமையோ…. அல்லது எனக்கு முத்தம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லும் உரிமையோ எனக்கு இல்லையே” என்றாள் இலக்கியா. 

அவள் இப்படிப் பேசியதும் நெருங்கி நின்றிருந்தவளைச் சட்டென விலக்கி தன்னிடம் இருந்து தள்ளி நிற்க வைத்த தமிழ், “நான் கரெக்ட். நீ சரியாத்தான் சொல்லியிருக்க… பரவாயில்லை கடைசி வரைக்கும் நான் உன்னை விலைக்கு வாங்கிட்டு வந்தேன் என்ற நினைப்பு உனக்கு இருந்தால் நல்லது” என்றான் தமிழ்.

 “அந்த நினைப்பு என்றும் மாறாது. என்னை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி வந்து இருக்கீங்களே, நான் எப்படி அதை மறப்பேன்?” என்றாள்.

‘இவளுக்கு எவ்வளவு திமிர்? நான் பேசியதற்கு எல்லாம் பதில் பேச்சு பேசுகிறாளே…. அதுவும் துளியும் என்னிடம் பயமில்லாமல்’ என்று அவளை முறைத்த தமிழ் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்துகொண்டான். 

சோபாவில் அமர்ந்தவனைப் புருவம் சுருங்க இலக்கியா பார்க்க, எதிரில் கைகளில் உடையை வைத்துக்கொண்டு நின்றிருந்த இலக்கியாவைப் பார்த்தவன், அப்படியே அவளுக்குப் பின்னால் இருந்த கண்ணாடி வழியாக அவள் ஆடையைத் தாண்டி கவர்ச்சியாகத் தெரிந்த வெற்று முதுகைக் கவனித்தான். 

பெண்களுக்கே உண்டான வளைவுகளோடு அவள் முதுகும் இடையும் அமைந்திருந்தது. தமிழின் பார்வை தன்னைத் தாண்டி தன் பின்னால் செல்வதைக் கவனித்த இலக்கியா, அவன் என்ன பார்க்கிறான் என்று திரும்பி அவன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவள், அங்கே கண்ணாடியில் தன் பின்புறம் முழுவதும் தெரிவதைக் கவனித்தவள், சட்டென்று தன் கையில் இருந்த ஆடையைக் கொண்டு தன் முதுகை மறைக்க தன் கைகளைப் பின்னால் கொண்டு சென்றாள்.

ஆனால் அவளால் பாதிதான் மறைக்க முடிந்ததே ஒழிய தமிழின் பார்வையில் இருந்து முழுவதுமாக தன் முதுகை மறைக்க முடியவில்லை. தன்னால் அவன் பார்வையில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்று இயலாமையோடு இலக்கியா தமிழைப் பார்க்க, 

“என்ன அப்படி பார்க்குற? நான் தான் உன்னை விலைக்கு வாங்கிட்டேனே, உன்னை எப்படி வேண்டுமானாலும் பார்க்கும் உரிமை எனக்கு உண்டு” என்றான் தமிழ். 

அவன் சொன்னதைக் கேட்டு தமிழின் மீது கோபம் கொண்ட இலக்கியா, “என்னை விலைக்கு வாங்கி விட்டால் என்னை எப்படி வேண்டுமானாலும் பார்க்கும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது?” என்றாள் இலக்கியா கோபமாக.

கோபத்தில் அவள் முகம் சிவந்து விட அதை ரசித்த தமிழ், அவளை ரசித்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவள் சொன்னதைக் கேட்டு பலமாகச் சிரித்த தமிழ், 

“நான் விலைக்கு வாங்கி இருக்கிறேன். உன் மீது எல்லா உரிமையும் எனக்கு மட்டும்தான் இருக்கிறது. அதை நீ மறந்து விட்டாயா? நான் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் நீ அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டு இருக்கிறாயே, ஞாபகம் இல்லையா?” என்று கேட்டான் தமிழ். 

அவன் காண்ட்ராக்ட் என்று சொன்னதும் இலக்கியா காண்ட்ராக்டில் என்ன இருக்கிறது என்று நினைவுபடுத்திப் பார்க்க, “நீ எனக்கு உரிமையானவள். நான் மட்டுமே உன்னிடம் உரிமை கொண்டாட முடியும்” என்று காண்ட்ராக்ட்டில் போட்டிருப்பதை நினைவிற்கு வர,

 ‘எதற்கு எல்லாம் காண்ட்ராக்டை கொண்டு வந்து முன் வைக்கிறான் பார்’ என்று தமிழை இலக்கியா முறைக்க, 

“இப்போ சொல்லு, உன்னை எப்படி வேண்டுமானாலும் பார்க்கும் உரிமை எனக்கு இருக்கிறது” என்றவன், சோபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்தவன், கால் மேல் கால் போட்டபடி அவளைப் பார்த்து “நான் என்ன சொன்னாலும் நீ செய்துதான் ஆக வேண்டும்” என்றவன். அவளைத் திமிராகப் பார்க்க, 

அவன் சொல்வதை செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலைமைக்குத் தான் தள்ளப்பட்டு இருப்பதை நினைத்து நின்றுகொண்ட இலக்கியா வலி நிறைந்த பார்வையோடு தமிழைப் பார்த்தாள்.

ஆனால் தமிழோ அதை எல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை. “என்னை விலைக்கு வாங்கி விட்டால் எப்படி வேண்டுமானாலும் பார்க்கும் உரிமை உங்களுக்கு இல்லை” என்று இலக்கியா சொன்னது அவன் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. 

சட்டெனத் தன் மூளைக்குள் ஏதோ தோன்ற அவன் முகத்தில் மின்னல் வெட்டியது. அதைக் காட்டிக்கொள்ளாத தமிழ் இலக்கியாவைப் பார்த்து, “ம்ம்ம்…. சீக்கிரம் உன் உடைகளை கழற்று” என்றான். 

தமிழ் எப்படிப்பட்டவன், அப்பட்டமாக தன்னுடைய ஆடையைக் கழற்றச் சொல்வான் என்று இலக்கியா சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் தமிழைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் இலக்கியா.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured