EPISODE 5
மண்டபத்தில் இருந்து நேராக ராகவ் வீட்டிற்கு செல்லாமல் வண்டியை தன் வீட்டிற்கு விட சொன்னாள் ஓவியா.
மண்டப வாசலில் மாலையும் கழுத்துமாக நின்று இருந்த ராகவ்விற்கு ஓவியாவின் செயல் கோபத்தை வரவழைத்தாலும். அவள் இடத்தில் இருந்து பார்த்தால் ஓவியாவின் கோபம் நியாயமானதாக தான் அவனுக்கு தோன்றியது.
“என்ன டா ராகவா உன் நிலைமை இப்படி ஆகிருச்சு. கட்டின பொண்டாட்டி இப்படி அம்போன்னு உன்னை நடுரோட்டுல விட்டுட்டு போய்ட்டாளே .. ” என்று முந்தானையை வாயில் வைத்து மூடி அழுவது போல பாவனை செய்தார் ராஜம் .
அவரை முறைத்தவன் “போதும் அத்தை நீ நடிக்குறது அப்படியே அப்பட்டமா பொய்யின்னு தெரியுது” என்றவன். “என் பொண்டாட்டியை போய் கன்வின்ஸ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூப்டு வரலாமா?” என்றான்.
“என்ன டா கேட்டுட்டு இருக்க முதல்ல என்ன தங்கத்தை போய் கூப்டு வருவோம் டா ராகவ்” என்றார் சோபனா.
அவருக்கு ஓவியா தன் வீட்டிற்கு மருமகளாக வந்தது நினைத்து அவ்வளவு சந்தோசம். அந்த சந்தோசம் முழுமையடைய வேண்டும் என்றால் ஓவியா தன் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர் எண்ணம் அதனால் தான் அவளை இப்போதே சென்று அழைத்து வர வேண்டும் என்பது அவர் எண்ணம்.
அனைவரையும் கிளப்பிக்கொண்டு வந்து நின்றது ஓவியாவின் வீட்டின் முன்பு தான். அவர்கள் எப்படியும் வருவார்கள் என்று ராகியும், ரதியும் எதிர்பார்த்தது தான்.
வாசல் வரை சென்று அவர்களை வரவேற்றவன் அவர்கள் பின்னால் நின்று இருந்த ராகவ்வை பார்த்தவன். “ஏன் ராகவ் அங்கையே நிக்குற உள்ள வா.. ” என்று முதல் முறையாக அவனை பெயர் சொல்லி அழைத்து மட்டும் அல்லாமல் , நல்ல முறையில் பேசவும் செய்தான்.
அது ராக்வ்வுக்கும் ஆச்சர்யமே அவ்வளவு ஏதோ ஒரு காரணத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் கழுவி ஊற்றி இருக்க இப்போ அதை மறந்து ராக்கி பேசியதும். ராகவ்வும் அடுத்த நிமிடமே அனைத்தையும் மறந்தவனாக முன்னே வந்தவன்.
“உங்க வீட்டுக்குள்ள நான் முறையா வரணும்னா என் பொண்டாட்டியை என்கூட சேர்ந்து நிக்க வெச்சு ஆரத்தி எடுத்து கூப்பிடுங்க அப்போ தான் நான் உள்ள வருவேன்” என்றவன் நிறுத்தி ராக்கியை பார்த்து “மச்சான்” என்றான்.
அந்த அழைப்பு ஏற்கனவே இறங்கி வந்திருந்த ராக்கியின் மனதை மேலும் குளிர வைத்து இருந்தது. “கொஞ்சம் பொறு ராகவ் நான் ஓவியாவை அழைச்சிட்டு வரேன்” என்று ராக்கி உள்ளே செல்லப்போக.
“நீ இரு ராக்கி நான் போய் ஓவியாவை அழைச்சிட்டு வரேன் ” என்று அவள் உள்ளே செல்ல..
“நானும் வரேன் அக்கா! ” என்று மாளவிகா உள்ளே செல்ல.. பெண்கள் அனைவரும் ஓவியாவை சமாதானம் செய்து அழைத்து வர சென்றனர்.
ஆண்கள் எல்லோரும் வெளியே ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு நின்று இருக்க…
“எல்லாரும் எவ்ளோ நேரம் இப்படியே நிக்குறது. எப்படியும் எங்க ஓவியை அவ்ளோ சீக்கிரம் சமாதானம் செய்ய முடியாது. வரதுக்கு நேரம் ஆகும்.இப்படி வந்து எல்லாரும் உக்காருங்க” என்று ராக்கியின் வீட்டு போர்டிகோவில் சேர்களை கொண்டு வந்து போட்டான் மாரீஸ்.
அனைவரும் வந்து அங்கே அமர்ந்து இருக்க.. “ஓவி எவ்ளோ கோபமா இருந்தாலும் வீட்டுக்கு வந்தவர்களை நல்ல முறையில கவனிச்சுப்பா..” என்றவன்
“ஓவி! நம்ம வீட்டுக்கு எல்லாரும் வந்திருக்காங்க, நீ இப்போ கோவிச்சுட்டு உள்ளே இருந்தா சரியா வருமா ? வந்தவங்களுக்கு காபி , டீ ஏதாவது எடுத்துட்டு வந்து கொடு” என்று ராக்கி குரல் கொடுத்தான்.
அவன் குரல் காற்றில் கரைந்தது மட்டும் தான் மிச்சம் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. ராக்கியை அனைவரும் ஒரு சேர பார்க்க..
“சரி சரி அவ ரொம்ப கோபத்துல இருக்கான்னு நல்லாவே தெரியுது, ” என்றவன். “மாரீஸ்! நீ போய் கடைத்தெருவுள எல்லாருக்கும் டீ பார்சல் வாங்கிட்டு வா.. அப்படியே டீ காப்பும் சேர்த்து வாங்கிட்டு வந்திரு” என்றான்.
“அதெல்லாம் எதுவும் வேணாம். வீட்டுக்கு வந்தவர்களுக்கு கடையில் வாங்கி கொடுக்குற அளவுக்கு யாரும் இங்க முடியாம இருக்கல. நானே எல்லாருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்” என்று இன்னமும் மணமகள் கோலம் கலையாமல் கழுத்தில் மாலையுடன் அங்கு வந்தாள் ஓவியா.
முகுர்த்த பட்டுடுத்தி அவளுக்கு செய்த மேக் அப் கலையாமல் கழுத்தில் மஞ்சள் தாலி மின்ன.. சேலையை தூக்கி இடுப்பில் செருகிய படி கையில் டீ ட்ரேயுடன் வந்தாள்.
அவளை பார்த்ததும் எல்லோருக்கும் ஓவியா சமாதானம் ஆகிவிட்டாள் என்று நினைத்து சந்தோசப்பட.. ராக்வவும் அதே நினைப்பில் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவளோ படியில் இறங்கியபடியே வந்தவள் வெளியே அமர்ந்து இருந்த ஆண்களுக்கு டீயை கொடுத்தாள் . சரியாக ராக்கி , மூர்த்தி, வெங்கடாச்சலம், ராஜு, என்று ஆரம்பித்து மாரீஸ் வரை டீயை கொடுத்தாள். அடுத்து ராகவ்வுக்கு டீயை கொடுப்பாள் என்று நினைத்து இருந்தவர்கள் ட்ரேயில் டீ இல்லாதது கண்டு “என்ன ஓவி! எல்லாருக்கும் கொடுத்துட்டே மாப்பிள்ளைக்கு கொடுக்கலையா? இல்ல அவருக்கு கொண்டு வந்ததை எனக்கு கொடுத்துட்டியா?”என்று தன் கையில் இருந்த டீயை ராகவ்விடம் நீட்டி “இந்தாங்க மாப்பிள்ளை குடிங்க” என்றான் மாரீஸ்.
“மாரீஸ்! அந்த டீ நான் உனக்கு மட்டும் தான் போட்டேன். அது உனக்கு மட்டும் தான். வேற யாருக்கும் கிடையாது” என்றாள்.
ராகவ்வுக்கோ “ரொம்ப தான் பண்ணிட்டு இருக்கா இவ ” என்று அவளை முறைத்தவன் “எனக்கு வேணாம் மாரீஸ்! அது உனக்காக போட்டது நீயே குடி. என்மேல இருக்க கோபம் குறைஞ்சதும் எனக்கு டீ தானா வரும்” என்றான் அவனும் வீம்பாக.
ராகவ் அப்படி பேசியதும் “அப்போ காலத்துக்கும் டீ இல்ல பச்சை தண்ணி கூட கிடையாதுன்னு சொல்லு மாரீஸ்” என்றவள் உள்ளே சென்றுவிட…
இதையெல்லாம் வாசலில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள…
“அக்கா! இப்ப இருந்தே உன் மருமகளை தாஜா பண்ணி வெச்சு பழகிக்க. உன் பையனுக்கே இந்த கதின்னா நீயெல்லாம்.. ம்ஹும்.. நாமெல்லாம் எம்மாத்திரம்” என்றவர், “நான் வேற இந்த் ராஜுவுக்கு இங்க வேலை கிடைச்சதும் ஊரை காலி பண்ணிட்டு உங்க கூடவே இருக்கலாம்னு வந்துட்டேன். உன் மருமக வந்து எங்களை வீட்டை விட்டு தொரத்துறதுக்கு முன்னாடி ஒரு நல்ல வீடா பார்த்து குடி போகணும்” என்றார் ராஜம்.
“ஏய்! ராஜம்! சும்மா இரு டி , என் மருமக அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டா.. அவ தங்கமான பொண்ணு” என்று சோபனா ஓவியாவுக்கு பரிந்து பேசினார்.
“நீங்க சொல்றது சரி தான் அத்தை நான் உங்க யாரையும் எதுவும் சொல்ல மாட்டேன் . ஆனா உங்க புள்ளைக்கு யாரெல்லாம் புரிஞ்சு பேசிட்டு வரிங்களோ அவங்களை மட்டும் ஒதுக்கி வெச்சிருவேன்” என்று படியேறிக்கொண்டே சொன்னவளை அதிர்ந்து பார்த்தனர் அனைவரும்.
அதை கேட்டதும் இவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த பொறுமையை காற்றோடு பறக்க விட்டவன் “ஏய்! என்ன டி ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க.. நான் தான் மண்டபத்துலையே உன்கிட்டே சாரி கேட்டுட்டேன்ல டி. இன்னும் என்ன செய்யணும் சொல்லு டி. உன் கையை பிடிச்சிட்டு ஓவியா என்னை மன்னிச்சிருன்னு கெஞ்சணுமா? இல்ல உன் கால்ல விழணுமா? போனா போகட்டும்னு ஏதோ என் மேல தப்பு இருக்குன்னு நான் பொறுமையா போனா நீ என்னவோ வந்ததில் இருந்து என்னை திரும்பி கூட பார்க்க மாட்டேங்குற. இவங்களையும் என்கூட பேசக்கூடாதுன்னு சொல்ற. உன் மனசுல என்ன தான் டி நினைச்சிட்டு இருக்க.. இப்போ ஒழுங்கா கிளம்பி என்கூட நம்ம வீட்டுக்கு வரப்போறியா? இல்லையா?” என்று துப்பாக்கியில் இருந்து அடுத்தடுத்து வரும் தொட்டாவை போல பட் .. பட்.. என்று வார்த்தைகளை ஓவியாவிடம் கேட்டான் ராகவ்.
அவன் பேசும் வரை அபப்டியே நின்று கெட்டவள் திரும்பி கண்கள் குளமாக அவனை பார்த்தாள்.
ஓவியாவின் கண்ணீரை பார்த்ததும் அனைவருக்குமே ஒரு மாதிரியாகிவிட்டது.
ராகவ்வும் வார்த்தைகளை யோசிக்காமல் எதுவும் பேசிவிட்டோமோ என்று ஓவியாவை பதற்றமாக பார்த்தவன் வேகமாக அவளிடம் ஓடி வந்தவன் “ஹேய்! திருட்டு கழுத்தை ஐயம் சாரி டி! ப்ளீஸ் என்கூட நம்ம வீட்டுக்கு வந்திடு. கல்யாணம் ஆனதும் நீ இங்கே வரது சரியா இருக்குமா?” என்றான்.
தன் கண்ணீரை துடைத்தவள் “எப்படி மிஸ்டர் ராகவ் உங்களால இந்த விஷயத்தை சாதாரணமா கடந்து வர முடிஞ்சது. திகழும் , நானும் ஆள்மாறாட்டம் பண்ணாம இருந்திருந்தா இந்த நேரம் நான் வேற ஒருத்தருக்கு மனைவியாகிருப்பேன் அதை பத்தி கொஞ்சமாவது யோசிச்சிருப்பீங்களா? நான் எவ்ளோ துடிச்சு போனேன்னு தெரியுமா உங்களுக்கு . தாலி கட்டுற கடைசி நேரம் வரை இந்த் கல்யாணத்தை நீ நிறுத்திய மாட்டியான்னு எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா? ஆனா நீ கல்யாணத்தை நிறுத்தாம திகழ்ன்னு நினைச்சு என் கழுத்துல தாலியை கட்டிட்டே இல்ல.. ” என்றவள் திரும்பி விறு விறுவென உள்ளே நடக்க..
ராக்வவோ அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விக்கித்துப் போய் நின்று இருந்தான்.
பின் சுதாரித்துக்கொண்டு வீட்டிற்குள் செல்லப்போக..
“என்ன ராகவ்! ஓவியா வந்ததும் ஆரத்தி எடுத்து தான் உள்ளே போவேன்னு சொன்ன.. இப்போ என்ன ஆச்சு ” என்று கைகளை கட்டிக்கொண்டு நக்கலாக கேட்டான் ராக்கி.
அவனை திரும்பி பார்த்தவன் “உன் தங்கச்சி எப்படி மச்சான் இருக்கும் , ரதியை நீ டிவேர்ஸ் பண்ணுறேன்னு நின்ன அப்போ உன்னை சமாதானம் செய்ய ரதி எவ்ளோ கஷ்டப்பட்டாளோ .. அதே அளவுக்கு இப்போ நான் கஷ்டப்படணும் போல இருக்கு. இந்த ஆரத்தியை எப்போ வேணா எடுத்துக்கலாம் . ஆனா என் பொண்டாட்டியை சமாதானம் செய்றது மட்டும் தான் எனக்கு இப்போ இருக்க ஒரே வேலை” என்று ராக்கிக்கும், ரதிக்கும் இடையில் இவ்வளவு நாள் நடந்த விஷயத்தை மொத்த குடும்பத்தின் முன் போட்டு உடைத்தவன்.
தன் குடும்பத்தின் அதிர்ச்சி முகத்தை பார்த்து திருப்தி பட்டவனாக. “இப்போ நீ அனுபவி மச்சான், நான் என் பொண்டாட்டியை சமாதானம் செய்றேன்” என்று உள்ளே சென்றுவிட்டான்.
“அடப்பாவி ராகவா! இப்படி எங்க ரெண்டு பேரையும் கோர்த்து விட்டுட்டியே டா.. ” என்று ராக்கி சுற்றி இருந்தவர்களை பார்க்க…
அனைவரும் ரதியையும், ராக்கியையும் மாறி மாறி பார்த்தவர்கள் “என்ன ரதி இதெல்லாம் ” என்று பெண்கள் ரதியிடம் ஆரம்பிக்க..
“மாப்பிள்ளை என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்குள்ளேயும்” என்று கேட்டுக்கொண்டே மூர்த்தி ராக்கியை கேட்க ஆரம்பித்தார்.
அடுத்து என்ன?
சமாதானம் ஆகிடுவாளா ஓவியா?
ராக்கியும், ரதியும் என்ன பதில் சொல்ல போறாங்க?
நாளை பார்க்கலாம் .
