EPISODE 6
முதலமைச்சர் சிவாஜிராஜனின் பிரச்சாரம் அனல் பறக்க 15 நாட்கள் மேலாக நடந்து கொண்டிருக்க தன்னுடன் வந்தவர்களுக்கு ஓய்வு தேவை என்று மூன்று நாள் அவர்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்தவர் அன்று இரவு அவர்கள் தங்கிய ஹோட்டலில் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்.
அன்று இரவு பார்த்தையும் நன்றாகத்தான் நடந்து முடிந்தது.
ஹோட்டலில் இருந்து மூன்று நாட்களுமே ராக்கி அவ்வளவாக ரதியிடம் பேசவில்லை. ஓய்வெடுக்கும் நேரம் மட்டும் அறைக்கு வருவான் பின்பு சிவராத்திரி நாளைக்கு சென்று விடுவான்.
அதையும் பாதி நேரம் கமலையின் அறையில் தான் இருந்தாள் கூடவே ராஜவும் சேர்ந்து கொள்ள மூவரும் அரட்டை அடிப்பதும் ஏதாவது பேசி சிரிப்பது மாதிரி இருந்தனர்.
அடுத்த நாள் பிரச்சாரத்திற்கு கிளம்புவதற்கு முன்பு ஹோட்டலில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அனைவரும் அங்கு ஒன்று கூடியிருந்தனர்.
அன்று அவர்களோடு சந்தோஷும் முகுந்தும் சேர்ந்து கொண்டனர் ரதியின் அருகில் ஒரு இருக்கை காலியாக இருக்க அங்கே வந்து அமர்ந்த சந்தோஷ் ரதியை அவளுக்கு தெரியாமல் ரசித்தபடி உணவு அருந்திக் கொண்டிருந்தான்.
அவளை அணு அணுவாக ரசிப்பதும் அவளோடு பேசி சிரிப்பதும் உணவை அருந்துவதுமாக இருந்த சந்தோசை பார்த்து விட்டான் ராக்கி.
அவனுக்கு சில தினங்களாக சந்தோஷ் மீது ஒரு சந்தேகம் இருந்தது அது இப்போது ஊர்ஜிதம் ஆகிவிட்டது.
சந்தோஷ் பற்றி அறியாமல் அவனிடம் சகஜமாக பேசிக்கொண்டு அவள் தோளில் அடிப்பதும் ஏதாவது கிண்டல் செய்வதுமாக இருக்க அது மேலும் ராக்கிக்கு ஆத்திரத்தை மூட்டியது.
ஆனால் ராக்கி எதையும் மாட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தவன் ஒண்ணுமே அரைக்க சென்றுவிட நீண்ட நேரம் கழித்து தான் ரதி வந்தால் காரிடரில் அவள் நடந்து வரும்போது சந்தோஷ் உடன் சிரித்து பேசும் சத்தம் கேட்டது அதைக் கேட்க அவனுக்கு மேலும் ஆத்திரமாக வந்தது ஆனால் ரதி வருவதற்கு முன்பாகவே போர்வை போட்டி உறங்குவது போல படுத்துக்கொள்ள உள்ளே வந்த ரதியும் ராக்கி உண்மையாகவே உறங்கி விட்டான் என்று அவளும் அவன் அருகில் படுத்து உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் பிரச்சாரம் வழக்கம் போல ஆரம்பமானது அன்று சீக்கிரமே பிரச்சாரத்தை முடித்து இருக்க.. கேரவனில் இருந்து இறங்கியதுமே ராக்கி ரதியிடம் லக்கேஜ் எடுத்துட்டு சீக்கிரமா ரூமுக்கு வா என்றான்.
எப்போதும் கேரனையும் விட்டு இறங்கியதும் சிவராஜனே அவர் அருகில் விட்டு எல்லாம் சரியாக இருக்கத்தான் என்று பார்த்து பின்பு தான் இவர்களுக்காக ஏற்பாடு செய்த அறிக்கை வருவான். இன்று வந்ததும் வராததுமாக அவளை அழைக்கவும் சந்தோஷமாக இருந்தது அவனாகவே தன்னிடம் பேச அழைக்கிறான் என்றதுமே தன் மீது இருந்த கோபம் குறைந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டு அவள் சந்தோசமாக அவர்களுக்காக ஏற்பாடு செய்து ரூமுக்கு கிளம்பினாள்.
லக்கேஜுகளுடன் ராக்கியின் அறைக்கு வந்த ரதி சந்தோச முகத்தோடு லக்கேஜ்களை ஓரம் வைத்தவள் பால்கனியில் நின்றிருந்தவனிடம் வேகமாக வந்து அவனை பின்னிருந்து அனைத்துவள் ரொம்ப தேங்க்ஸ் ராக்கி இவ்வளவு சீக்கிரம் நீ மனசு மாதிரி வருவேன் என்று நான் நினைக்கவே இல்ல என்றால் அவன் முதுகில் முகம் புதைத்து.
ஹே ச்சீ… கையை எடு என்று தன் மார்பை சுற்றி இருந்த அவள் கைகளை வேகமாக பிரித்து விட்டவன் திரும்பி அவளை வெறுக்கும் பார்வை பார்த்தார்.
ராக்கி இப்படி பேசவும் ரதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
ஏன்டா ஏன்டா இப்படி பேசுற… நீ தானே என்னை உன் ரூமுக்கு வர சொன்ன.. என்றாள்.
ஆமா வர சொன்னேன். அதுக்கு வந்ததும் இப்படித்தான் கட்டிப்பிடிப்பியா. எப்போடான்னு அலைய வேண்டியது. நான் சரின்னு சொன்னாதும் அவுத்து போட்டுட்டு வந்திருவ.. ” என்றான் எங்கோ பார்த்து.
அதை கேட்டதும் கோபம் தலைக்கு ஏறியது ரதிக்கு. என்ன டா விட்டா ஓவரா பேசிட்டு இருக்க… என்னை பார்த்தா உனக்கு அலையுற மாதிரி தெரியுதா? கேவலம் செஸ்க்காக நான் உன் பின்னாடி அலையுறேன்னு சொல்றியா? என்றாள் அவன் சட்டையை பிடித்து.
“ஆமா, அதுக்கு தானே என் பின்னாடி அலையுற.. என் கூட படுத்தா தானே உனக்கு அடங்கும். அப்போதானே நீ எழுதுற கதையில என்னை பத்தி நீயும் நானும் செஞ்சதெல்லாம் ஒண்ணுவிடாம அப்படியே எழுத முடியும்” என்றான் ஆத்திரமாக.
அதே ஆத்திரதோடு அவன் சட்டையை பிடித்து மேலும் இருக்கியவள். என்ன சொன்ன என்ன சொன்ன… நான் அலையுறேனா? நான் உன்கூட உடல் சுகத்துக்காக படுக்கறேனா? அப்படி உடம்பு சுகம் தான் வேணும்னா நான் ஏன் என்னை வேண்டாம்னு போன உன்கிட்டே வரணும் என்று அவள் வார்த்தையை முடித்திருக்க..
” என்ன டி சொன்ன… என்கிட்டே வரலேன்னா… என்ன டி பண்ணுவ..” என்றான் கோபம் தாலாமல்.
“ஏன் அதை என் வாயால சொல்லி வேற நீ கேட்கணுமா?” என்றாள் திமிராக.
“எங்க சொல்லி தான் பாரேன். உன் வாயை கிழிச்சிருவேன்” என்று கையை ஓங்கினான்.
அவன் அடிக்க வருவதை நம்பமமுடியாமல் பார்த்தவள்.
“என்னை கை நீட்டி அடிக்குற அளவுக்கு என் மேல உனக்கு வெறுப்பு வந்திருச்சு இல்ல… என்னை வேணாம்னு சொல்லிட்ட அப்பறோம் நான் என்ன பண்ணினா உனக்கு என் டா… ” என்றாள்.
ஆமா டி நீ பண்ணினது எனக்கு பிடிக்கல.. உன்னை பார்த்தாலே எரிச்சலா இருக்கு. அருவருப்பா இருக்கு.. எப்படி இந்த மாதிரி கூச்சமே இல்லாம கதை எழுதுற.. அதெல்லாம் கூட பரவாயில்லை ஏன் உன் கதையில விறுவிறுப்பு கம்மியாயிடுச்சுன்னு புதுசா ஒரு கேரக்டர் உள்ள சேர்த்துக்கிட்டியா அதுவும் உனக்கு பாய் பிரண்டா என்றான்.
ரதி புரியாமல் அவனைப் பார்க்க
என்னடி பாக்குற அதான் அந்த சந்தோஷ் இருக்கானே அவன் பார்வையும், பேச்சும், நடவடிக்கையும் எதுவுமே சரி இல்ல அது எல்லாம் தெரிந்திருந்து அவங்கிட்ட இலி lச்சு பேசிகிட்டு இருக்கm தொட்டு தொட்டு பேசற எல்லாம் தெரிஞ்சு தானே அவங்க கிட்ட பழகுற என்றான்
சந்தோசஷா அவன் எப்ப அந்த மாதிரி நடந்துக்கிட்டா நீ நினைக்கிற மாதிரி அவன் கிடையாது. தேவையில்லாம அவன பத்தி தப்பா பேசாத, உனக்கு என் மேல கோபம் இருந்தா என்ன பத்தி மட்டும் பேசு அவன பத்தி தேவையில்லாம பேசி என்ன டென்ஷன் பண்ணாத ராக்கி என்றால் ரதி விவரம் தெரியாமல்.
ஓஹோ அவன பத்தி பேசினா மேடம் கோபம் வருதோ அப்போ என்னோட அவன் முக்கியமானவனா ஆயிட்டானா உனக்கு என்றவன் அதனாலதான் நான் வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டா என்கிட்ட எதுக்கு வரணும்னு கேட்டியா நீ என்றான்.
ஐயோ! போதும் டா சாமி. உன்னை பத்தி நான் கதை எழுதினதும் போதும். உன்னை நான் காதலிச்சதும் போதும். தலைக்கு மேல் கை எடுத்துக் கும்பிட்டு வலி நிறைந்த பார்வையோடு ராக்கியை பார்த்தவள்.
உன்னால என்னை எவ்ளோ அசிங்க படுத்த முடியுமோ படுத்திட்டே… கேவல படுத்த முடியுமோ படுத்திட்டே… இப்படியெல்லாம் நாக்குல நரம்பில்லாம என்னை பத்தி நம்ம வாழ்ந்த வாழ்க்கையை பத்தி யோசிக்காம என்னை அசிங்க படுத்தின நீ எனக்கு வேணாம். இனிமேல் நீயே என் கூட சேர்ந்து வாழ்றேன்னு சொன்னாலும் உன் கூட வாழ நான் தயாராக இல்லை.
நீ கூப்பிட்டதுனால தான் நான் இங்கே வந்தேன் அப்படி ஒன்னும் எனக்கு உடம்பு சுகம் தேவையில்லை நீ இல்லாம வாழனும்னு முடிவெடுத்த பிறகு எனக்கு எதுவுமே வேண்டாம் என்று முடிவு எடுக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் என் மனசு ஓரத்துல ஒரு துளி நம்பிக்கை இருந்துச்சு. இப்போ நீ கோபத்தில் இருக்க கொஞ்ச நாள் போகும்போது உன் கோபம் குறையும் கண்டிப்பா நீ என்ன ஏத்துக்குவ என்ன தேடி வருவ நீ என்னை புரிஞ்சுக்குவேனு மனசுல தப்பு கணக்கு போட்டுட்டேன் என்று ஏமாற்றம் நிறைந்த குரலில் சொன்னவள்.
ஆனா இப்போ நீ பேசுன பேச்சுல இருந்தே தெரிஞ்சிருச்சு சுத்தமா நீ என்ன ஒதுக்கி வைத்துவிட்டு உனக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்லை. இனிமேல் தயவு செய்து என்ன பத்தியோ என்கூட இருக்கிறவங்களை பற்றியோ தேவையில்லாம பேசாத அந்த ரைட்ஸ் உனக்கு கிடையாது சீக்கிரமே நீ கேட்டு டைவர்ஸ் உனக்கு கிடைக்கும் என்று கோபம் பொங்க பேசியவள் கொண்டு வந்து லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு அவன் அறையை விட்டு செல்வதற்காக வந்து வாசல் கதவை திறக்க அங்கே செல்வி நின்றிருந்தார்.
கண்கள் இரண்டும் குலமாக அவரைப் பார்த்த ரதி அவரைத் தாண்டி சூட்கேசை எடுத்துக் கொண்டு செல்ல அவரோ அவளை தடுக்கவில்லை.
இவர்கள் இருவரும் பேசுவதை அறைக்கு வெளிய நின்று இவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டுதான் நின்றிருந்தார் செல்வி.
ரதி கமலியின் அறைக்கதவை தட்டி உள்ளே செல்லும் வரை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர் திரும்பி ராக்கி எரிக்கும் பார்வை பார்த்தார்.
அவரின் கோபத்தை கண்டு ராக்கிக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வாக இருந்தது. அவர் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி செல்ல அம்மா ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு போங்க இப்படி கோபமா போகாதீங்க என்று அவர் பின்னால் சென்றான் ராக்கி.
அவன் பேசுவதை சட்டையே செய்யாமல் செல்ல அவர் பின்னால் வந்த ராக்கி அம்மா ஒரு நிமிஷம் நில்லுங்க தயவு செய்து என் பக்கத்துல இருக்குற நியாயத்தை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க என்று அவர் கைபிடித்து நிப்பாட்டினான்.
அடுத்த நாள் மீட்டிங் செட்யூல் குறித்து பேசிக் கொண்டிருந்த சிவராஜனும் வேலுவும் செல்வி கோபமாக அறை கதவை திறந்து வருவதும் அவர் பின்னே கெஞ்சிக் கொண்டு வந்த ராக்கியையும் புரியாமல் பார்த்தனர்.
என்னடா உன் பக்கத்து நியாயத்த புரிஞ்சுக்கணும் அப்படி என்ன பண்ணிட்டா ரதி உன்ன பத்தி கதைதானே எழுதினா அதுவும் நல்ல விதமாக தானே எழுதி இருக்கா என்னமோ அவ்வளவு ரொம்ப கேவலப்படுத்தி பேசுற என்னெல்லாம் பேசிட்டு நீ கொஞ்ச நேரத்துல வெளியில நின்னு கேட்டுட்டு இருந்த எனக்கே நீ சொன்ன வார்த்தைகளை தாங்கிக்க முடியல ஆசையா நீ கூப்டுங்கறதுக்காக வந்தவளுக்கு நீ சொன்ன வார்த்தை எல்லாம் எவ்வளவு வலிச்சிருக்கும். அதை பத்தி கொஞ்சமாவது நீ யோசிச்சியா ஏண்டா இப்படி முட்டாள் மாதிரி நடந்துக்கிற அது சரி இவர் உன்னை அடித்தடிக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கும் அனுப்பி வைக்கிறார் அப்புறம் உன் புத்தியும் மனசு எப்படி இருக்கும் அடுத்தவங்க மனசு புரிஞ்சுக்கிற பக்குவம் இருந்திருந்தால் ரதியோட பக்கத்துல இருக்குற நியாயத்தை நீ கேட்டிருப்பானே உன்கிட்ட பேசி என்ன பிரயோஜனம் இனி என் மூஞ்சிலேயே முழிக்காத என்று அவர் கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல போக….
செல்வி என்ன ஆச்சு ஏன் இப்படி அவனை திட்டுற ஏன் இவ்வளவு கோபமா இருக்க என்ற சிவராஜன் வேணும் ராஜியின் பரிதவிப்பான முகத்தை பார்த்தவனுக்கு அவனைக் கண்டு கஷ்டமாக இருக்க எழுந்து வந்து என்ன ராக்கி ஆச்சு என்றான் அவனிடம்.
ஏங்க நான் இவன்கிட்ட என்ன சொன்ன அந்த பொண்ண கூட்டிட்டு வந்து கூட தங்க வேண்டும் மட்டும்தானே சொன்ன அதுக்குள்ள 1008 பிரச்சனை இருக்கும் நான் சொல்ல சொல்லுக்காக இவன் அவனை கூட்டிட்டு வந்தான் வந்தது என்ன பண்ணி இருக்கணும் கோபமாக இருந்தாலும் எதுவும் பேசாம அமைதியா இருந்திருக்கலாமா இல்லையா? ஆனால் ரதிய இவன் என்ன பேச்சு பேசினான்னு தெரியுமா என்று அறைக்குள் ரதிக்கும் ராக்கிக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை ஒன்று விடாமல் கூற சிவராஜன் திரும்பி கோபமாக ராக்கி பார்த்தவர் அவனிடம் வந்தவர் செல்வி சொன்ன மாதிரி தான் நீ ரதி கிட்ட பேசினியா என்றார் கோபமாக.
ஐயா அது வந்து நான் அவ மேல இருந்த கோபத்துல ஏதோ தெரியாம வார்த்தையை என்று அவன் முடிக்கவில்லை சிவராஜனின் கை ராக்கின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
ராக்கி அதிர்ந்து சிவந்த விழிகளோடு சிவராஜனை பார்க்க என்னடா நான் அடிச்சதுக்கு உனக்கு என் மேலயும் கோபம் வருதா என்றவர்.
ஒரு பொண்ண பேசக்கூட பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசி அவளை கஷ்டப்படுத்திட்ட பாவம்டா அவ. ஏன்டா அப்படி ஒரு வார்த்தையே சொன்ன நீ தானே அவ புருஷன் உன்கிட்ட அவளுக்கு இல்லாத உரிமையா என்னதான் கோவமா இருந்தாலும் இந்த மாதிரியா வார்த்தைகள அவ மனசு நோகும்படி பேசுற அதுவும் இன்னொருத்தன் கூட சேர்த்து பேசி இருக்கேன் இது நல்லாவா இருக்கு. அவ மனசு எவ்வளவு காயப்பட்டு இருக்கும் அது கொஞ்சம் மாதிரி யோசிச்சு பாத்தியா நீ ஏன்டா இப்படி முட்டாள் தனமா நடந்துக்குற உன்ன எத்தனை வருஷமா வளத்தவனுக்கு செய்ற கை மாதிரி இதுதானா அவங்க எல்லாம் என்ன பத்தி என்ன நினைப்பாங்க என் வளர்ப்பு சரியில்லை என்று தானே நினைப்பாங்க என்றால் கோபமாக.
ஐயா இல்ல அப்படி இல்ல என்று ராக்கி தயங்கியபடி பேச…
கொஞ்சமாவது பொறுமையா உக்காந்து யோசி அப்படியே நீ வெறுத்து அந்த மாதிரி வார்த்தைகளை சொல்லி பேசுற அளவுக்கு என்ன பெரிய குத்தம் பண்ணிட்டார் ரவி ஏன்டா இப்படி இருக்க நீ உண்மையாவே உனக்கு மனசாட்சி ஒன்னு இருந்தா கண்டிப்பா உனக்கு இதெல்லாம் புரியும் நீ தான் பொறுமைக்கும் உனக்கும்தான் சம்பந்தமே இல்லையே போ உன்ன பாக்கவே எனக்கு பிடிக்கல என்று அவர் முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே செல்ல அவர் பின்னால் செல்வியும் சென்று விட்டார்.
வேலுவிற்கு ராக்கிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவன் கோபத்தில் யோசிக்காமல் வார்த்தைகளை விட்டு விட்டான் என்று ராக்கிய புரிந்து பேசும்போது அவனிடம் இனி தான் பேசி என்ன செய்யப் போகிறோம் என்று அமைதியாக ராக்கிடம் வந்தவன் கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாம் ராக்கி பாவம் அவங்க என்றவன் உள்ளே சென்றுவிட அங்கே நிற்காமல் விறுவிறுவன தன் அறிக்கை வந்து கதவை தாழிட்டவன் குறுக்கும் எடுக்கும் நடந்தால் பொறுமையே இல்லையா? ராக்கிக்கு ஏன் என் பக்கத்துல இருக்குற நியாயத்தை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க எல்லாருமே அவளுக்கே சப்போர்ட் பண்ணி பேசுறாங்க இன்று புலம்பினான் அவ பக்கத்துல நியாயம் இருக்கிறதுனால தான் எல்லாரும் ரதிக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாங்க உன்னோட கோபம் சரிதான் அதுக்காக தேவையில்லாத வார்த்தைகளை நீ பேசி இருக்கக் கூடாது என்று அவன் மனசாட்சி அவனுக்கு உண்மையை எடுத்துக் கூறியது.
அவ பண்ணினது சரியா என்னமோ நான் இப்ப குற்றவாளி மாதிரி நிற்கிறேன் என்று இன்னொரு மனம் கேட்டது ரதி பண்ணது தப்புதான் இல்லைன்னு சொல்லல ஆனா நீ இவ்வளவு தூரம் கோபப்பட்டு வெறுத்து பேசுற அளவுக்கு ஒன்னும் பெரிய தப்பு கிடையாது அதை முதல்ல புரிஞ்சுக்கோ என்றது இன்னொரு மனம் உள்ளதை எடுத்துக் கூறி.
தளர்ந்து போய் கட்டில் வந்து படுத்தவன் மனதிற்குள் எழுந்த ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் குழம்பினான். ஏன் தான் இப்படி ஒரு வார்த்தையை பிரதியிடம் பேசினோம் என்று அவனுக்கே விளங்கவில்லை என்கிட்ட உரிமை இருக்கு அதனால தானே அவை என்ன வந்து கட்டி பிடிச்சா ஆனா நாயே இப்படி பேசிட்டேன் என்று முதல்முறையாக தன் தவறை நினைத்து வருந்தினான் ரதி இடம் பேசியதும் அவள் தன்னிடம் வெறுத்து பேசியதும் என அனைத்தும் அவன் மனதில் ஓடிக்கொண்டிருக்க அதே யோசனையோடு உறங்கியும் போனான்
