“என்ன அப்படி பாக்குற இதுக்கு முன்ன பொண்ணுங்களை நீ பார்த்ததே இல்லையா?”என்றாள் திகழினி ஸ்லீவ்ல்ஸ் பனியனும் , ட்ராயரும் அணிந்து சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி.
அவளை அப்படி பார்த்ததுமே வேலுவிற்கு சிவராஜன் தான் நினைவிற்கு வந்தார். ராக்கி , ஓவியாவை காட்டிலும் இவளுக்கு ஆளுமை குணமும், தோற்றமும் இயற்கையாகவே இருப்பதை உணர்ந்தவன் நின்று இருக்க..
“ஹே! பிஏ! என்ன நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பதில் சொல்லாம என்னை அப்படி பாத்துட்டு இருக்க..” என்றாள் கடுப்பாக,
அவள் குரலில் நிமிர்ந்து திகழினியை பார்த்தான்.
“ம்ம்.. சொல்லு , நீ தான் புதுசா என் அப்பாவுக்கு பிஏ வா இருக்கியா?” என்றாள்.
“ஆமா ” என்றான் ஒற்றை பதிலில்.
“உனக்கு வந்த வாழ்வை பார்த்தியா என்னை கல்யாணம் பண்ணி இருக்க..” என்று நக்கலாக சிரித்தவள் . எழுந்து அவன் அருகில் வந்தாள்.
அவள் அப்படி பேசியதும் வேலுவின் முகம் மாறி இருந்தது. அவன் கோப முகத்தை பார்த்தவள் “என்ன கோபம் வருதா? நான் சொன்னதுல எந்த தப்பும் இல்லையே . அஃப்டர் ஆல் நீ ஒரு சாதாரண பிஏ , உனக்கு CM பொண்ணு கேட்குதா?” என்றாள்.
“நான் சாதாரண பிஏ தான். ஆனா நானா ஒன்னும் நீ தான் வேணும்னு வந்து உனக்கு தாலி கட்டல, நீ தான் போர்ஜெரி பண்ணி என்னை ஏமாத்தி இந்த கல்யாணத்தை நடத்தி இருக்க… அதை மறந்துராத” என்றான் வேலு.
“வாட்! நான் போர்ஜெரி பண்ணினேனா.. யூ.. யூ… உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னை போர்ஜெரின்னு சொல்லுவ, என் அப்பா யாருன்னு தெரிஞ்சும் என்கிட்டே உனக்கு இப்படி பேச எப்படி தைரியம் வந்துச்சு” என்று கோபமாக அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கேட்டாள்.
“நியாயத்தை பேச, உள்ளதை சொல்ல எனக்கு எந்த பயமும் இல்லை” என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு.
“ஹே! பிஏ நீ ரொம்ப பேசுற டா..” என்று குதித்தாள்.
“நீ தான் என்னை பேச வெக்குற.. ” என்றான் கூலாக.
“என்னை பத்தி உனக்கு தெரியாது இடியட் , நான்.. நான்.. ” என்று வார்த்தைகள் வராமல் திகழ் திணற..
“உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நீ காதலிச்சு கல்யாணம் செய்தவன் உன்கூட வாழ பிடிக்காம அமெரிக்காவுல உன்னை தனியா விட்டுட்டு ஓடிபோய்ட்டான். அவனை தேடி கண்டு பிடிச்சு அவன்கிட்டே நீ டைவேர்ஸ் வாங்கவே உனக்கு 2 வருஷம் ஆகிடுச்சு. ஆனா உன்வீட்ல என்ன காரணம்னு கேட்டா உனக்கும், அவனுக்கும் ஒத்து வரலையின்னு சப்ப காரணம் சொல்லி இருக்க.. இப்படி ராங்கி மாதிரி பிஹேவ் பண்ணினா யாரு உன்கூட குடும்பம் நடத்துவா..” என்று அவளை ஏறெடுத்தவன்.
“மணமேடையில் என் பக்கத்துல இருந்தது ஓவியா இல்ல.. நீ தான்னு தெரிஞ்சிருந்தா அப்போவே இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன். எனக்கு தெரியாம போய்டுச்சு” என்றான்.
அதை கேட்டதும் “என்ன டா… ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன டா உனக்கு பிரச்சனை. நானும் ஓவியாவும் ஒரே மாதிரி தான் இருக்கோம், எனக்கு அழகு இல்லையா? அந்தஸ்து இல்லையா? ” என்றாள் கோபம் குறையாமல்.
“நீ அழகா தான் இருக்க அதுவும் ஓவியாவை அப்படியே உரிச்சு வெச்ச மாதிரி இருக்க. ஆனா…” என்று அவளை என்ற இறங்க பார்த்தான் வேலு.
“என்ன டா.. என்ன ஆனா ” சொல்லு என்று அவன் முன் கை நீட்டி கேட்டாள்.
நீட்டிய அவள் விரலை பிடித்தவன் “இங்க பாரு நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. எனக்கு ஓவியாவை பிடிக்கும். அவளை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா நீ என் ஆசையில மண்ணள்ளிப்போட்டுட்டே. நீ எவ்ளோ அழகா இருந்தாலும் . எவ்ளோ வசதியா விருந்தாலும் . ஏன் எவ்ளோ நல்லவளாவே இருந்தாலும். ஓவியாவுக்கு முன்ன நீ ஒண்ணுமே இல்ல.. ஓவியாவும், நீயும் வேணா ஒரே மாதிரி இருக்கலாம். ஆனா நீ ஓவியா ஆகிட முடியாது ” என்று அவள் விரலை விட்டவன் அவளை தாண்டி சென்று கட்டிலில் படுத்துகொண்டான்.
அவன் பேசியது கேட்டு திகழினியால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அவனை சீண்டுவதற்க்காக விளையாட்டாக அவள் பேசி இருக்க.. அது தெரியாமல் வேலு தன் மனதில் ஓவியாவை எந்த அளவுக்கு வைத்திருக்கிறேன் என்று அவன் கட்டிய மனைவியிடமே சொன்னது அவளுக்கு மேலும் ஆத்திரத்தை வரவழைத்தது.
அதே ஆத்திரத்தோடு அவனை நெருங்கியவள் “டேய் பிஏ! நீ என் கழுத்துல தாலி கட்டிட்டு என்கிட்டேயே ஓவியாவை பத்தி பேசுறியே உனக்கு வெட்கமா இல்ல?”என்றாள்.
“இல்ல… நானா விரும்பி உன் கழுத்துல தாலி கட்டளையே, நீ தானே போர்ஜெரி பண்ணி இந்த கல்யாணத்தை நடத்தின.. ” என்றான்.
“என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டு என் பெட்ல வெட்கமே இல்லாம படுத்திருக்க.. முதல்ல என் பெட்ல இருந்து எழுந்திரு டா.. ” என்றாள்.
“உன்னை பிடிக்கல தான் ஆனா நீ இப்போ என் பொண்டாட்டி ஆகிட்டியே. உனக்கு உரிமையானது எல்லாம் எனக்கும் உரிமையானது , அப்போ நான் இங்க படுக்கலாம் தானே..” என்றான்.
“ஹே! பிஏ! ஓவியா தான் பிடிக்கும்னு சொல்ற இதே வாயால என்னை உன் பொண்டாட்டின்னு சொல்ற. நீ எல்லாம் என்ன டா டிசைன், முதல்ல என் பெட்ல இருந்து எழுந்திருடா” என்றாள்.
“முடியாது டி போர்ஜெரி! என்ன டி பண்ணுவ” என்றான் தலைக்கு கை கொடுத்து வசதியாக படுத்தவன் அவளை பார்த்து.
“டேய்! என்னை போர்ஜெரின்னு கூப்பிடாத எனக்கு அந்த பேரே பிடிக்கல டா ” என்றாள்.
“நான் உன் புருஷன்னு நினைப்பே இல்லாம நீ என்னை மரியாதை இல்லாம வாடா போடான்னு சொல்லுவ, பியேன்னு கூப்பிடுவ அதை கேட்டுட்டு நான் அமைதியா போகல.. அதே மாதிரி நீயும் நான் உன்னை என்ன சொல்லி கூப்பிட்டாலும் அமைதியா போய்ட்டு” என்றான்.
“யூ! யூ!… ” என்று அவன் கழுத்தை நெறிப்பது போல பாவனை செய்து அவன் முன்னே திகழினி குனிய.. அவள் குனிந்த வேகத்தில் கால் இடறி அவன் மீதே விழுந்து இருந்தாள் .
அவள் கைகள் இரண்டும் அவன் கழுத்தை அழுத்தி இருக்க.. அவள் உடலும் அவனை மொத்தமாக அழுத்திக்கொண்டு இருந்தது.
“ஏய்! என்ன பண்ற.. முதல்ல என் மேல இருந்து எழுந்திரு. ஓவியா இருக்க இடத்துல நீ இருக்கேன்னு நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன் இதுல இப்படி மேல வந்து விழுந்து என்னை டென்ஷன் பண்ணாத டி.. ” என்று அவளை தன் மீதிருந்து கட்டிலில் தள்ளிவிடப்போக..
அவன் கழுத்தில் வைத்திருந்த கையை எடுக்காமல் முரண்டு பிடித்தவள் அவன் மேல் இருந்து எழாமல் வாகாக படுத்துக்கொண்டவள். “என்ன டா சொன்ன.. ஓவியா இருக்க இடத்துல நான் இருக்கேனா? அவ அந்த ராகவ் இடியட்டை லவ் பண்ரா அது உனக்கு தெரியும் தானே… தெரிஞ்சும் என்கிட்டேயே அவளை பிடிக்கும்னு சொல்ற… நான் தான் போனா போகுது நீ ஆள் கொஞ்சம் நல்லவன் , பொறுப்பானவன்னு அந்த ரதி சொன்னதை கேட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன், ஆனா நீ … ” என்று அவன் கழுத்தை மேலும் நெறிக்க துவங்கினாள்.
“ஏய்! ஹேய்! போர்ஜெரி! விடு டி.. ” என்று அவள் கழுத்தை நெறிக்கவும் மூச்சடைக்க தன் மேல் அமர்ந்து இருந்தவளை பார்த்தான்.
“முடியாது டா! ” என்று மீண்டும் அவன் கழுத்தை நெறித்தாள்.
திகழினியை தன் மேல் இருந்து கீழே தள்ளியவன், அப்போதும் அவன் கழுத்தை விடாமல் பிடித்துக்கொண்டவள் கையை பிரித்தவன் இருமிக்கொண்டே… அவளை பார்த்தான்.
மூச்சு வாங்க கோபமாக அவனை பார்த்தாள்.
“ஹேய்! லூசு மெண்டல் ஏண்டி உனக்கு அறிவே இல்லையா?” என்று அவளை பார்த்தான்.
“ஆமா டா , எனக்கு அறிவு இல்லை தான் . அந்த ரதி சொன்னான்னு உன்னை போய் கல்யாணம் பண்ணினேன் பாரு . என்னை சொல்லணும் ” என்று அவன் கைக்குள் சிக்கிய தன் கையை விளக்க முயல…
அவள் அசைந்ததில் அங்கங்கள் குலுங்க அமர்ந்து இருந்தவளை ஏறிட்டவன். பிடித்திருந்தவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் மேல் பொத்தென்று விழுந்தவள் இடையை இறுக்கி பிடித்தவன்.
“என்னை பிடிச்சு தானே கல்யாணம் பண்ணி இருக்க.. அப்பறோம் எதுக்கு டி ஏதோ உனக்கு என்னை பிடிக்காத மாதிரியும், நான் உன் வசதிக்காக உன்னை கல்யாணம் பண்ணின மாதிரியும் பேசுற..” என்றான்.
அவன் சொன்னதும் தான் அவசரப்பட்டு ரதி சொன்ன பின் தான் இவனை திருமணம் செய்துகொள்ள சம்மதித்த விஷயத்தை சொல்லிவிட்டோமே என்று தோன்றியது திகழினிக்கு.
அவனை ஏறிட்டவளை பார்த்தவன் புன்னகைத்துக்கொண்டே ” எனக்கு உன்னை பத்தி முழுசா தெரியாலையின்னாலும் ஓரளவுக்கு புரிஞ்சுக்க முடியும். அவ்ளோ லேசுல நீ என்னை கல்யாணம் செய்திருக்க வாய்ப்பே இல்ல. அதனால தான் வேணும்னே நான் ஓவியாவை இதுக்குள்ள இழுத்தேன்” என்றவன் .
அவள் மேல் இருந்து எழுந்து தன் சட்டையை சரி செய்து கொண்டே “இனி என்கிட்டே பொய் சொல்றதுக்கு முன்ன நல்லா யோசிச்சு பேசு சரியா” என்றவன் திரும்பி நடக்க..
“டேய்! பிஏ! எனக்கு உன்னை பிடிச்சிருக்குனு நான் சொன்னேனா டா.. ஓவியா, ராகவ் கல்யாணம் செய்துக்கணும்னு தான் இந்த பிளானையே நான் போட்டேன்” என்றாள்.
“நீ என்ன பிளான் போட்டியோ எனக்கு தெரியாது, ஆனா உன்னால அவங்க ரெண்டு பேரும் சேர்ந்ததுல எனக்கு சந்தோசம்” என்று அவள் அறைக்கதவை திறந்தவன் நின்று அவளை திரும்பி பார்த்து “கால் மீ வேலு, வஜ்ரவேலு ” என்றவன் “சும்மா சொல்ல கூடாது இந்த ட்ரஸ்ல நீ கும்முனு இருக்க டி.. ” என்று சிரித்துவிட்டு அவளை பார்த்தவன் வெளியே செல்ல…
குனிந்து அவன் பார்வை சென்ற இடத்தை எரித்தவள் அவனுடன் சண்டையிட்டதில் தன் உடை அலங்கோலமாக அவள் வனப்புகள் லேசாக வெளிப்பட்டு இருக்க.. “யூ… ” என்று கோபத்தில் தலையணையை தூக்கி அவன் மீது எறிந்தாள். அதற்குள் அவன் கதவை அடைத்துவிட அந்த தலையணை கதவில் மோதி தரையில் விழுந்திருந்தது ,
