EPISODE 14-1
அவனை போலவே கை இல்லாத பனியனும், த்ரீ போர்த் ட்ராயரும் அணிந்து இருந்தாள்.
“ஏய்! 250 பீடா… நீயும் நானும் ஒரே மாதிரி ட்ரஸ் போட்டிருக்கோம் கவனிச்சியா ! ” என்றான் ஆச்சர்யமாக.
அப்போது தான் போனை வைத்துவிட்டு சென்றதை நினைத்து தன்னையே நொந்து கொண்டவள்.
“உனக்கு அறிவே இல்ல டி.. இப்படியா வீடியோ காலை அட்டென்ட் பண்ணி தொலைச்சே.. இவன் வேற உன்னை நைட் ட்ரேஸ்ல வேற பாத்து தொலைச்சிட்டான் ” என்று ராக்கிக்கு கேட்கும்படியாக புலம்பினாள்.
“பரவால்ல நான் தானே பார்த்தேன், நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் கவல படாத சரியா ” என்றான் ரதியை ரசித்துக்கொண்டே .
“நீதான் பாத்துட்டியே அதான் என்னோட கவலையே ” என்றவள் ” சாரியும் சொல்லவேணாம் எதுவும் சொல்ல வேணாம் போனை வை ஏற்கனவே எனக்கு வேர்த்து கொட்டி ஒட்டி ஒரே கடுப்பா இருக்கு.. இதுல நீ வேற.. என்னை இன்னும் கடுப்பேத்தாத… ” என்றாள்.
“ஆஹா! நம்ம கொடுத்த நண்டு வேலை செய்திருச்சு போல… அதான் இப்படி உடம்பு சூடுள்ள பீடாவுக்கு வேர்க்கும் போல இருக்கு ” என்று நினைத்தவன் .
“உனக்கு ரொம்ப ஸ்வெட்டிங்கா இருக்கா… ” என்றான்.
“பார்ரா ! துரை இங்கிலிஷ் பேசுது… ” என்றாள் உடலை நெளித்துக்கொண்டே…
அவள் நெளிவதை வைத்தே அவளுக்கு நண்டு அதிகமாக வேலை செய்வதாக தோன்றியது ராக்கிக்கு.
“இப்போ அது ரொம்ப முக்கியமா நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு.. ரொம்ப வேர்க்குதா உனக்கு ” என்றான்.
“ம்ம்.. ஆமா .. ரொம்ப வேர்க்குது ” என்றாள் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே…
“சரி அப்போ ஒன்னு பண்ணு நீ முதல்ல போய் பச்சை தண்ணியில கொஞ்ச நேரம் நின்னுட்டு வா… கொஞ்சம் உடம்பு சூடு குறையும்” என்றான்.
“ஏன் பச்சை தண்ணியில் நிக்கணும் ” என்றாள் சேரில் சற்று உடலை வளைத்து சாய்ந்து அமர்ந்த படி..
அதில் அவள் மார்புக்கூடு வளைந்து முன்னே வர…
அதை பார்த்து பெருமூச்சு விட்டவன் ” இவளுக்கு நான் கொஞ்ச மா தானே நண்டை குடுத்தேன் ஆனா… இவ செய்யுறத பார்த்தா அதிகமா சூட்டை கிளம்பிடுச்சு போல இருக்கே.. ” என்று நினைத்தவன் .
இன்று ஹோட்டலில் ரதிக்கு தான் ஊட்டி விட்ட நண்டின் விபரம் சொன்னவன் “நான் குடுத்த நண்டை சாப்பிட்டதுனால தான் உனக்கு இப்படி வேற்குதுன்னு நினைக்கிறேன். அதான் போய் கொஞ்ச நேரம் பச்சை தண்ணில உடம்பை நினைச்சிட்டு வா.. சரியாகிடும்” என்றான்.
“யூ .. யூ … ” என்று போனில் அவன் கழுத்தை நெறிக்க வந்தவள் .
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா… நீ குடுத்த நண்டெல்லாம் கல்யாணம் ஆனவங்க சாப்பிட வேண்டியது , அதை ஏண்டா எனக்கு குடுத்த… நீ மட்டும் இப்போ என் கைல கிடைச்சேன்னு வை… உன்னை என்ன செய்வேன் தெரியுமா… ” என்று ரதி கோபத்தில் கத்தினாள்.
“நான் பக்கத்துல இருந்தா கல்யாணம் ஆனவங்க செய்றதை என்கூட சேர்ந்து செய்வியா நீ…” என்று ஆர்வமாக கேட்டான் ராக்கி அவளிடம்.
“டேய் ரவுடி பயலே… ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணுகிட்ட இப்படியா டா கேள்வி கேப்பா… ” என்று எரிந்து விழுந்தவள். “உனக்கு அந்த மாதிரி நினைப்பு வேற இருக்கா .. அப்படி ஒரு நினைப்பு இருந்தா இப்போவே அழிச்சிறு.. நானெல்லாம் உன்னை அந்த மாதிரி நினைச்சு கூட பார்க்க மாட்டேன்” என்றவள்.
“முதல்ல போனை வை டா… இனிமேல் தப்பி தவறி என் முன்னாடி வந்துராத எனக்கு இருக்க ஆத்திரத்துக்கு நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ” என்றாள்.
“ஐயோ ! என்ன இவ்ளோ கோவப்பட்றா பேசாம போனை வெச்சிர வேண்டியது தான் ” என்று நினைத்தவன் ரதி அவனை வசை பாட துவங்கி இருக்க ராக்கி அதை எல்லாம் கேட்க முடியாமல் போனை கட் செய்து இருந்தான்.
“என்னை ரௌடியின்னே முடிவு பண்ணிட்டாளா … நான் என்ன பார்க்க ரவுடி மாதிரியா இருக்கேன், இவ என்னை மாதிரி டிரஸ் பங்கிட்டு குட்டி ரவுடி மாதிரி இருக்கா… ” என்று ரதி அணிந்து இருந்த உடையை வீடியோ காலில் பார்த்திருந்தவனுக்கு அந்த நினைப்பாகவே இருந்தது .
ரதியை பற்றி நினைத்துக்கொண்டே சோபாவில் படுத்து உறங்கி இருந்தான் ராக்கி .
ராக்கி தூங்க ஆரம்பித்து அரை மணி நேரம் சென்றிருக்கும் . அவன் போன் திடீர் என்று அலற துவங்கியது.
திடுக்கிட்டு கண் விழித்தவன் தன் மார்பில் இருந்த போனை எடுத்து இந்த நேரத்தில் தனக்கு யார் அழைத்திருப்பார்கள் என்று பார்த்தவனுக்கு ஆச்சர்யமா .. அதிர்ச்சியா என்றே தெரியவில்லை.
ரதி அவனுக்கு வீடியோ கால் செய்து இருந்தாள்.
அவசரமாக காலை அட்டென்ட் செய்தவனுக்கு காத்திருந்தது மேலும் ஒரு அதிர்ச்சி..
ரதி தலையெல்லாம் நீர் சொட்ட.. சொட்ட… ஈர உடலோடு அதே போட்டிருந்த உடையோடு அவனுக்கு காட்சி அளித்தாள்.
“டேய்… ரவுடி ராஸ்கல்.. நீ எனக்கு சாப்பிட நண்டு மட்டும் தான் குடுத்தியா… இல்ல வேற எதுவும் கலந்து குடுத்தியா… எனக்கு உடம்பெல்லாம் என்னவோ மாதிரி இருக்கு டா… தலை எல்லாம் சுத்துற மாதிரி இருக்கு.. ” என்று நா குளறியபடி பேசிக்கொண்டு இருந்தாள் ரதி.
“ஒய் ரௌடிக்குட்டி… என்ன கோலம் இது… இப்படியேவா குளிச்ச நீ.. . என்றான் முழுவதும் நனைத்து இருந்தவள் தலையை கூட துவட்டாமல் நின்று இருந்தவளை பார்த்து..
“ம்ம்… ஆமா… இப்படியே தான் குளிச்சேன். பாத்ரூம் போனேனா.. ரொம்ப சூடா இருந்துச்சா… அதான் டிரஸ் கழட்டமா அபப்டியே குளிச்சுட்டேன் ” என்றாள் சிறுபிள்ளை போல .
“சரி குளிச்சுட்டு வந்தியே.. அபப்டியே ட்ரெஸ்ஸை மாத்தி இருக்க வேண்டியது தானே.. பாரு எப்படி நனைஞ்சிருக்கேன்னு.. உடம்புக்கு முடியாம போய்டா போகுது ” என்றான்.
“ஆமா இல்ல… நான் அதை மறந்தே போய்ட்டேன் . இரு டிரஸ் மாத்திக்கிறேன் ” என்று சட்டென தன் பனியனை இடையை தாண்டி மேலே தூக்கி இருக்க…
ரதியின் ஒட்டிய வயிறு அவன் கண்களுக்கு விருந்தானது… அவள் மெல்லிடையை ரசித்தாலும். ரதி அடுத்து என்ன செய்வாளோ என்ற பதற்றத்தில் “ஏய்.. ஏய்.. பீடா என்ன பண்ற… ” என்று பதறினான் ராக்கி
“பாத்தா தெரியல.. டிரஸ் மாத்துறேன் . நீதானே என்னை டிரஸ் மாத்தா சொன்ன… ” என்றாள் .
“ஆமா நான் தான் சொன்னேன். அதுக்குன்னு என்னை வெச்சுட்டே டிரஸ் மாத்தலாமா நீ.. “என்றவன் .
அவன் பேசுவதை கேதகும் நிலையில் இல்லாமல் தன்னிலை மறந்து ஆடையை கழட்ட முற்பட்டவளை பார்த்ததும் அடுத்த நொடி போனை கட் செய்து இருந்தான் ராக்கி .
“என்ன ஆச்சு இவளுக்கு. .நான் குடுத்த நண்டு இந்த அளவுக்கு வேலையை காட்டிருக்குமா… நானும் தானே அவளோட சேர்ந்து நண்டை சாப்பிட்டேன் . ஆனா எனக்கு எதுவும் ஆகளையே… ” என்று யோசித்தவன் ரதிக்கு ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்தவன் அடுத்த நிமிடம் மாரீஸுக்கு கால் செய்து ஓவியா வீட்டில் தனியாக இருக்கிறாள் அவளுக்கு துணையாக இருக்க சொல்லிவிட்டு கிளம்பி இருந்தான் ரதியின் வீட்டிற்கு.
தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு ரதியின் வீடு இருந்த ஏரியா வரை வந்துவிட்டான். ஆனால் ரதியின் வீட்டிற்குள் எப்படி போவது அவளை எப்படி பார்ப்பது என்று குழப்பமாக இருந்தது ராக்கிக்கு.
அப்போது திடீர் என்று அவனை தாண்டி சீறிப்பாய்ந்த வண்டியை பார்த்தான் ராக்கி . அது ராகவன் தான். தன் நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான்.
ராகவ் பின்னால் அமர்ந்து இருக்க அவனை வீட்டில் ட்ரோப் செய்த அவன் நண்பன் கார்த்தி “டேய் உள்ள போய்டுவ தான.. இல்ல நான் வந்து உன்னை உள்ள விட்டுட்டு போகட்டுமா ” என்றான்.
“டேய் கார்த்தி என்னை வீட்டுக்குள்ள விட்றேன்னு உள்ள நீ வந்தா நான் குடிச்சிட்டு வந்திருக்குறது என் வீட்ல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சிடும். நீ கிளம்பு நான் மெதுவா சத்தம் இல்லாம போய்க்கிறேன்” என்று கார்த்தியை அனுப்பிவிட்டு வீட்டின் கேட்டை மெல்ல திறந்து ஷூவை வாசலில் கலட்டிக்கொண்டு இருந்தான்.
அதை எல்லாம் ரதியின் வீட்டிற்கு சற்று தள்ளி நின்று பார்த்துக்கொண்டு இருந்த ராக்கி கவனித்தவன் ” என்ன என் மச்சான் ஒரு மாதிரியா நடந்து போறான் ” என்று வண்டியை இருந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி சத்தம் இல்லாமல் ரதி வீட்டருகில் வந்தவன் அப்போதுதான் ராகவ் குடித்திருப்பதை கவனித்தான்.
“ஓஹோ.. இது தான் விஷயமா… இங்க இவன் குடிச்சிட்டு ஆடுறான். அங்க உள்ள என் ரவுடிகுட்டி கொஞ்சூண்டு நண்டை சாப்பிட்டுட்டு பெரிய ஆட்டம் போட்டுட்டு இருக்கா.. ” என்று நினைத்தவன் ராகவ்வை போலவே வாசல் கதவை சத்தமில்லாமல் திறந்து உள்ளே வந்தவன் கதவை திரும்ப மூட போக…
வீட்டிற்குள் செல்ல இருந்த ராகவ் வாசலை திரும்பி பார்த்தான்.
“என்ன இப்போதானே கேட்டை சாத்தினேன் ஆனா இப்போ திறந்திருக்கு.. ” என்று சுற்றிலும் பார்க்க.. அங்கே யாரும் இல்லை,
“நான் தான் கதவை சாத்த மறந்துட்டேனா….” என்று நினைத்தவன் படியில் இறங்கி சென்று கேட்டை சாற்றை போனான்.
அந்த நேரம் அவர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காருக்கு பின்னால் ஒளிந்து இருந்த ராக்கி சத்தமில்லாமல் வீடு மெயின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் வேகமாக அங்கிருந்த சோபாவின் பின்னால் போய் ஒளிந்து கொண்டான்.
கேட்டை பூட்டிவிட்டு வந்த ராகவ் வீட்டிற்குள் நுழைந்தவன் அவன் வீடு ஆட்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டவன். அங்கே யாரும் இல்லாதது கண்டு நிம்மதி அடைந்தவன் தள்ளாடியபடியே அமைதியாக சென்று அவன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுவிட்டான்.
ராகவ் செல்லும் வரை ஒளிந்து இருந்த ராக்கி சோபாவின் பின்னால் இருந்து எழுந்து வந்தவன் . ரதியின் அறை எங்கே இருக்கிறது என்று சுற்றிலும் பார்த்தான். கீழே இரண்டு அறைகள் இருந்தது . அதில் ஒரு அறையில் ராகவ் சென்று கதவை சாற்றிக்கொள்ள.. மற்றொரு அரை நோக்கி மெதுவாக சென்றவன் அதன் அறை கதவை மெல்ல திறந்தான் .
உள்ளே மூர்த்தியம், சோபனாவும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள் . அவர்களை பார்த்தவன் சத்தமில்லாமல் கதவை சுற்றிவிட்டு திரும்ப…
தனக்கு எதிரே இருந்தவரை பார்த்து அதிர்ந்து போனான்.
“டேய் ரவுடி ராஸ்கல் நீ என் வீட்ல என்ன பண்ற… ” என்று உடலை முறுக்கிக்கொண்டு ரதி அவன் முன் நின்று இருக்க..
இப்பொது மிகவும் லேசான துணியால் ஆனா ஒரு நைட் கௌனை முட்டிக்கு கொஞ்சம் மேலே வரை அணிந்தவாறு அவன் முன்னாள் நின்று இருந்தாள் .
ரதியை அந்த உடையில் பார்த்தவனுக்கு பேச்சே எழவில்லை. அவளை வாயை பிளந்து பார்த்தவனை கழுத்தில் கையை போட்டு “ஷ்!… சத்தம் போடாத அம்மா முழிச்சுக்க போறாங்க… நீ வா.. ரூமுக்கு போகலாம் ” என்று காதலனை ரகசியமாக சந்திக்கும் காதலி போல அவனை சத்தமில்லாமல் தன் அறைக்கு கூட்டி சென்றாள் என்று சொல்வதை விட.. அவனை தள்ளிக்கொண்டு சென்றாள் என்பதே உண்மை .
ராக்கியை அறைக்குள் அழைத்து சென்று ரதி என்ன செய்ய போகிறாளோ பார்க்கலாம் …
