EPISODE 29
“டேய் ரவுடி பையா!.. “
“ம்ம்… சொல்லு டி ரவுடி குட்டி..”
“எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது டா ..”
“ஏன்”
“ம்ம்ம்… எல்லாம் உன்னால தான் “
“என்னாலையா! ஏன்? நான் என்ன பண்ணுனேன்”
“ம்ம்ம்… நீ எதுமே பண்ணலையா “
“ஏய் இப்படி ராத்திரி நேரத்துல ஒரு மாதிரி ஹஸ்கி வாய்சில பேசி என் மூடை கிலாபத்தை.. நீ முதல்ல போனை வை . நான் உனக்கு மெசேஜ் அனுப்பறேன். யாராவது வந்துட்டா அப்பறோம் நல்லா இருக்காது”
“டேய் எதுக்கு டா இப்படி பயந்து நடுங்குற.. நீயெல்லாம் ரௌடியா இருந்து என்ன பிரயோஜனம். இப்படி தொடை நடுங்கியா இருக்கியே”
“ஏய் யாரை டி தொடை நடுங்கின்னு சொல்ற.. எனக்கு பயமெல்லாம் கிடையாது. நாளைக்கு காலையில கல்யாணத்தை வெச்சுட்டு இப்படி 2 மணிக்கு எனக்கு கால் பண்ணி தூக்கம் வரலன்னு பேசின… இப்போ மணியை பாரு 4 ஆச்சு.. இப்படி குலைஞ்சு பேசினா மனுசனுக்கு எக்கச்சக்கமா பிபி ஏறாதா”
“அச்சோ நான் அப்டி எல்லாம் உன்கிட்டே எதுமே பேசலையே டா ரவுடி பேபி…”
“நீ தானே பேசல பேசலன்னு.. இப்படி குலைஞ்சு குலைஞ்சு பேசி என்னை ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்க.. இப்படியே போச்சுன்னு வெச்சுக்கோ பஸ்ட் நைட் கல்யாணத்துக்கு முன்னாடியே நடத்திடுவேன் பாத்துக்கோ..”
“அப்படி தான் டா பேசுவேன். வேணும்னா நீ சொன்னதை செஞ்சு காட்டு டா பாக்கலாம்”
“ஏய் ஒழுங்கா போனை வெச்சிரு “
“முடியாது என்ன டா பண்ணுவ,..”
“நீ வெக்க வேணாம். நான் வெச்சுடறேன்” என்று இவளவு நேரம் ரதியின் சிணுங்கல்களை கேட்டு தன் உணர்வுகளை சமாளிக்க முடியாமல் தவித்த ராக்கி ஒரு வழியாக போனை வைத்தான்.
அவன் வைத்த அடுத்த நொடி ராக்கிக்கு வீடியோ கால் செய்திருந்தாள் ரதி.
அதை பார்த்தவன் “ஐயோ ! இவ இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டா போலையே.. ” என்று புலம்பிக்கொண்டே போனை அட்டென்ட் செய்தவன் .
“ஏய் ரவுடி ராட்சசி உன்னால இன்னிக்கு ஒரு நைட் பொறுமையா…. !!! ” என்று பேசிக்கொண்டே வீடியோவில் தெரிந்த ரதியை பார்க்க..
அவளோ பாவாடையும் , பிளவுசும் மட்டும் அணிந்து கொண்டு மேலே ஒரு மெல்லிய துப்பட்டாவை போர்த்தியபடி நின்று இருந்தாள்.
அவளை இப்படி பார்த்தவனுக்கு அடுத்து பேச வார்த்தைகள் எழவில்லை .
“என்ன டா பொருக்கி இப்படி வாயை பிளந்துட்டு பாக்குற என்ன…” என்று தலையை துவட்டிக்கொண்டே பேசினாள் ரதி .
“ம்ம்.. என்ன… என்ன சொன்ன நீ.. ” என்று அவள் பேசியது சரியாக கேட்காமல் ராக்கி அவளிடம் பேச..
“ஏன் டா இப்படி வாயை பிளந்துட்டு இருக்கன்னு கேட்டேன்” என்றாள் .
“ஏன் டி .. என்னை ஏன் டி இப்படி கொடுமை படுத்துற.. நான் பாவம் இல்லையா இப்படி அறையும் குறையுமா ட்ரெஸ்ஸை போட்டுட்டு வந்து எனக்கு கால் பண்றியே இது உனக்கே நியாயமா இல்லையா… என்கிட்டே தான நைட் பேச ஆரம்பிச்ச.. அப்பறோம் எப்போ டி குளிச்ச.. எப்போ ரெடி ஆன … எனக்கு குளிக்குற சத்தமே கேக்கலையே… ” என்று ராக்கி அவளை சந்தேகமாக பார்த்தவன்.
“ஒய் ரவுடி குட்டி இன்னிக்கு நமக்கு கல்யாணம் டி.. இனியாவது குளிச்சியா? இல்லையா?..” என்றான் .
“கொழுப்பா டா உனக்கு … உன்கிட்டே பேசிட்டே தான் டா குளிச்சேன். நீ தான் என்கிட்டே போன் பேசினத்துல சரியா கவனிக்கல ” என்றாள் .
“ஏன் டி இப்போ போய் எனக்கு வீடியோ கால் பண்ணி இருக்க.. நீ குளிக்க போன அப்போ வீடியோ கால் பண்ணிருக்கலாம்ல… ” என்று ஏக்கமாக கேட்டான் ராக்கி
“ம்ம்ம்.. பண்ணுவாங்க பண்ணுறவங்க.. நினைப்பு தான் டா உனக்கு… ” என்று ஹேர் ட்ரையரை ஆன் செய்து அவள் தலைமுடியை காய வைத்தாள்.
“இப்படி தலையை காய வெச்சா எப்படி காயும். நான் சொல்ற மாதிரி செய் சசீக்கிரம் ஈரம் எல்லாம் காய்ஞ்சிடும் ” என்றான்.
“எப்படி டா… ” என்றாள் .
“உன் தலை முடியை மொத்தமா சேர்த்து பிடிச்சுக்க.. ” என்றான்
ரதியும் அவன் சொன்னது போல அவள் ஈரத்தலை முடியை ஒன்றாக சேர்த்து ஒற்றை கையால் பிடித்துக்கொண்டவள் “ம்ம்.. அப்பறோம்.. ” என்றாள் .
“அப்டியே மொத்தமா முடியை உன் தலைக்கு மேல தூக்கு ” என்றான்.
அவளும் ராக்கி சொன்னது போலவே தலை முடியை மிதமாக சேர்த்து பிடித்து தலைக்கு மேலே தூக்கினாள் .
“இப்போ ட்ரையரை எடுத்து உன் முடியோட நுனியில் வெச்சு ஆன் பண்ணு ” என்றான் .
“அவளும் ட்ரையரை ஆன் செய்தாள்.
“ட்ரையரை இன்னும் மேல தூக்கி அதை உன் முடியோட சென்டர்ல வை ” என்றான்,
அவன் சொன்னது போல ரதியும் தன் கையை மேலே உயர்த்தியவள் ஓகேவா என்றாள் .
“இல்ல டி.. இன்னும் கொஞ்சம் … இன்னும் கொஞ்சமா மேல தூக்கு.. ” என்று ராக்கி கூற…
“இதுக்கு மேல எப்படி டா நான் கையை மேல தூக்குறது ” என்று பேசிக்கொண்டே வீடியோவில் தெரிந்தவனை பார்த்தாள் .
ராக்கி வீடியோ காலில் ரதியுடன் பேசினாலும் அவன் கவனம் மொத்தமும் ரதியின் அந்த சிறுத்த இடையில் தான் இருந்தது.
“இதுக்கு தான் கையை மேல தூக்கு.. மேல தூக்குன்னு என்னை டார்ச்சர் படுத்துனியா டா… “என்று துப்பட்டாவை நன்றாக கீழே இறக்கிவிட்டவள் .
“டேய் என்ன டா அவசரம் உனக்கு.. அதுக்குள்ள இப்படி திருட்டு தனமா என்னை சைட் அடிக்குறியா ” என்று அவனை செல்லமாக முறைத்தாள்.
அவள் துப்பட்டாவை இறக்கிவிட்டதும் ஏமாற்றத்தோடு ரதியை ஏறிட்டவன் “ச்சே .. ஜஸ்ட் மிஸ் ஆகிருச்சு ” என்று முஷ்டியை குத்திக்கொண்டான்.
“எதுவும் மிஸ் ஆகல.. இன்னிக்கு நைட் மொத்தமா பாத்துக்கோ.. இப்படி கொஞ்சம் கொஞ்சமா பாக்க வேண்டிய அவசியம் இல்ல.. ” என்றாள்.
“இருந்தாலும் இப்படி அங்க கொன்ஜம் இங்க கொஞ்சம்னு பாக்குறதுலையும் ஒரு தனி கிக் இருக்கு டி… அது உனக்கெல்லாம் சொன்னா புரியாது ” என்றான் .
“கிக் தானே.. நான் நேர்ல வந்து உன் வயித்துல ஒரு கிக் விடறேன் வெச்சுக்கோ..” என்றவள் ரதியின் அறைக்கதவை யாரோ தட்டவும் .
“ஓகே… ஓகே.. மேக்அப் பண்றவங்க வந்திருப்பாங்கனு நினைக்குறேன். நான் போனை சுடரேன் செல்லம் ” என்று திரையில் தெரிந்தவனுக்கு ஒரு பறக்கும் முத்ததை அனுப்பிவிட்டு காலை கட் செய்தாள் .
ராக்கியும் சிரித்தவாறே போனை வைத்தவன் தன் திருமணத்திற்க்கு ரெடியாக கிளம்பிவிட்டான்.
இங்கே காதல் செய்த்து இல்லற வாழ்க்கையில் நுழைய காத்திருக்க… அவர்களை போலவே அடுத்து தங்கள் திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் காதல் ஜோடிகள் இரண்டு மெசேஜ் மூலம் தங்கள் காதலை வளர்த்துக்கொண்டு இருந்தனர்.
“ஒய் திருட்டு கழுதை ரெடி ஆகிடியா டி.. “
“ம்ம்.. எவ்ளோ வாட்டி சொல்றது என்ன அப்படி கூப்பிடாதேன்னு… “
“ஏன்? அப்படி தான் கூப்பிடுவேன். எப்போ நான் உன்னை பார்த்தேனே அப்போவே நீ என் மனசை திருடிக்கிட்டே… இந்த IPS ஆஃபீசிரோட மனசையே நீ திருடி இருக்கேன்னா அப்போ நீ பெரிய திருட்டு கழுத்தை தானே… ” என்றான் ராகவ்.
“ஆமா ஆமா நீ மட்டும் என்னவா.. என்னை பார்த்த பஸ்ட் டைமே என் உதட்டை கடிச்சு வெச்சவன் தானே…”என்று செல்லக்கோபம் கொண்டாள் ஓவியா.
“என்ன டி கடிச்சு வெச்சேன்னு சொல்ற… ப்பா.. அன்னிக்கு அந்த கிஸ் எப்படி இருந்துச்சு தெரியுமா?” என்று அன்று நடந்ததை நினைத்து உள்ளுக்குள் அசைபோட்டான் .
“போதும் போதும்.. விட்டா பேசிட்டே இருப்பிங்க நீங்க . டைம் ஆச்சு நான் போய் ரெடி ஆகுறேன் நேரம் ஆச்சு “என்று அனுப்பினாள்.
“சரி சீக்கிரம் போய் ரெடி ஆகிட்டு வா.. ஆனா நீ வந்ததும் முதல்ல எனக்கு தான் நீ டிரஸ் பண்ணினதை காட்டணும் ” என்றான்.
“ம்ஹும்.. அதெல்லாம் முடியாது ஏற்கனவே நேரம் ஆகிருச்சு . அண்ணா இன்னேரம் ரெடி அங்கிருக்கும். நீங்க கோவிலுக்கு வாங்க அங்க வந்து என்னை பாத்துக்கோங்க… ” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு ஆப்லைன் போய்விட்டாள்.
“ஒய்… ஒய்… ” என்று போனை பார்த்தவன் அவள் ஆப்லைன் போய்விட்டதை பார்த்தவன் .
“நீ மட்டும் ரெடி ஆகிட்டு எனக்கு வீடியோ கால் பண்ணல அப்பறோம் இருக்கு உனக்கு ” என்று போனை அனைத்தவன் எழுந்து கிளம்பி வெளியே வந்தான்.
சோபனாவும், மூர்த்தியும் பம்பரமாக வேலை செய்து கொண்டு இருந்தனர்.
“மாலு.. அந்த பையை எல்லாம் எடுத்து வெளிய வை டி.. கிளம்புற அவசரத்துல எதையாவது மறந்திற போறோம் ” என்றார்.
திருமணத்திற்கு முந்தின நாளே வந்திருந்த மூர்த்தியின் தம்பி கந்தவேலுவும், அவர் மனைவி ராஜமும் தங்கள் மகனிடம் வந்தவர்கள் . “என்ன டா சும்மா உக்காந்து போனை நோண்டிகிட்டு இருக்க… பெரியம்மாவும், பெரியப்பாவும் பரபரன்னு வேலை பாத்துட்டு இருகாங்க இல்ல போ மாலுக்கிட்டே கேட்டு என்ன வேலை செய்யணும்னு நீயும் சேர்ந்து செய் ” என்று ராஜூவை விரட்டினார்கள்
“அம்மா! இரு ஒரு மேட்ச் மட்டும் விளையாடிட்டு போறேன் ” என்று ராஜு அவரிடம் பேசிக்கொண்டே தன் மொபைலில் பிரீ பையர் கேம்மாய் மிக தீவிரமாக விளையாடிக்கொண்டு இருக்க..
“அம்மா சொல்லிட்டே இருக்காங்க இந்த நேரத்துல உனக்கு என்ன டா விளையாட்டு வேண்டி இருக்கு… முதல்ல உன்னை ஒரு வேளைக்கு சேர்த்து விடணும் ” என்று புலம்பிக்கொண்டே அவனிடம் வந்தவர் ராஜு கையில் இருந்த போனை பிடுங்கிவிட்டு அவன் தலையில் தட்டி அனுப்பி வைத்தார்.
“அப்பா! போனை குடுங்க… ” என்று வாங்க போனவன் சட்டையை பிடித்து இழுத்த ராகவ்.
“டேய் முதல்ல போய் அதை எல்லாம் எடுத்து வை கேம் தானே அப்பறோம் விளையாடிக்கலாம்” என்று அவனை அனுப்பி வைக்க ராஜுவும் வேறு வழி இல்லாமல் மாளவிகாவுக்கு உதவ சென்றான்.
அனைவரும் கோவிலுக்கு கிளம்ப ஆயத்தமாக “மாலு உன் அக்காவுக்கு இன்னுமா மேக் அப் போட்டுட்டு இருக்காங்க . நீ போய் கொஞ்சம் என்னனு பாரு முகுர்த்த நேரரதுக்குள்ள நாம கோவில்ல இருக்கணும்ல.. ” என்று அவளை அனுப்பினார்.
மாளவிகா ரதியின் அறைக்கு செல்ல .. அதற்குள் வேலையை முடித்துக்கொண்டு மேக் அப் ஆர்ட்டிஸ்ட் வெளியே வர.. அவர் பின்னால் ரதியும் வந்தாள் .
மஞ்சள் நிறத்தில் அரக்கு நிற பார்டர் வைத்து சேலை முழுவதும் தங்க ஜரிகையால் ஆன மயில் நிறைந்திருக்க… வண்ண மயிலை ராக்கி அவளுக்காக பார்த்து பார்த்து எடுத்து கொடுத்த பட்டு சேலையில் ஜொலித்தாள் ரதி
“அடேயப்பா! ரதி நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா .. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு… ” என்று ராஜம் ரதியை திருஷ்டி எடுத்தார்.
“ஆமா ரதி நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க.. ” என்று சோபனாவும் தன் மகளை கட்டி அணைத்தவர் ரதியின் நெற்றியில் முத்தம் வைத்தார்.
“போதும் போதும் என் மகளை கொஞ்சினது. கல்யாண பொண்ணே லேட்டா போனா எப்படி. ஓவியா வீட்ல இருந்து கோவிலுக்கு கிளம்பிட்டேனு இப்போதான் எனக்கு போன் பண்ணினா. சீக்கிரம் வாங்க ” என்று அவர்கள் அவசர படுத்தியவர் முன்னே செல்ல…
மற்றவர்களும் கிளம்பி இருந்தனர்.
