Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-6

இராக்கதனின் ரதி அவள் part-1-6

by Layas Tamil Novel
255 views

EPISODE 6

“250.. 250… ஓய்  250 பீடா … என்ன பகல்லையே கனவு காண்ட்ரியா நீ… இந்தா  பிடி ” என்று அவள் கையில் தண்ணீர் பாட்டிலை திணித்துவிட்டு திரும்பி உள்ளே நடந்தான் ராக்கி .

அவன் அழைத்ததும் தான் நிகழ் உலகிற்கு வந்த ரதி “ச்சே.. என்ன என் மூளை இந்த மாதிரி எல்லாம் கற்பனை செய்ய ஆரம்பிச்சிருச்சு.. என்னோட கதையை படிக்கருங் வாசகர்கள் எவ்ளோ முறை ஒரு ரொமான்ஸ் ஸ்டோரி எழுத சொல்லி கேட்டிருக்காக.. அட அட்லீஸ்ட் நான் எழுதுற கதையில் அப்போ அப்போ கொஞ்சம் ரொமான்ஸ் வைய்யுங்கன்னு எவ்ளோ கேட்டிருப்பாங்க.. அப்போ எல்லாம் எழுத வராத ரொமான்ஸ் இப்போ வந்திருக்கு.. போயும்.. போயும் இவனோடவா எனக்கு ரொமான்ஸ் பண்ற மாதிரி கனவு வரணும் ” என்று நினைத்துக்கொண்டே ராக்கியை பார்த்தாள்.

அவனோ தான் போட்டிருந்த சட்டையை கழட்டிவிட்டு கை  இல்லாத பனியனோடு அவளை நெருங்கினான்.

ராகியின் கட்டுமஸ்தான உடலை பார்த்து “என்ன பாடியை இப்படி வெச்சிருக்கான். ” என்று யோசித்தவள் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவனை பார்த்த படி வாயில் ஊற்ற… 

அது அவள் வாயை விழாமல் ரதியின் முகத்தில் கொட்டி முகத்தில் இருந்து வழிந்து அவள் அணிந்திருந்த மஞ்சள் நிற சட்டையை நனைத்து இருந்தது. அவள் சட்டை லேசான துணியால் இருக்க.. ஈரம் பட்டதும் அது ரதி உள்ளே அணிந்து இருந்த சந்தன நிற ப்ராவை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது .

இதை பார்த்துக்கொண்டே அவளை நோக்கி நடந்து வந்த ராக்கி ரதியின் ஈரம் படிந்த  சட்டையையும் அதை தாண்டி தெரிந்த உள்ளாடையையும் பார்த்துவிட்டு அப்படியே  ஸ்தம்பித்து நின்றுவிட்டான் .

அவள் உள்ளாடையை தாண்டி மூச்சு விட முடியாத அளவுக்கு தெறித்து நின்ற  அவள் வனப்பில் ஈரம்  படிந்த மஞ்சள் சட்டை ஒட்டிக்கொண்டு அவள் வனப்பை மேலும் அழகாக்கி காட்டி இருந்தது.

ராக்கியின் பார்வையை அவளிடம் இருந்து இம்மியும் நகர்த்த முடியவில்லை.

தண்ணீர் முழுவதும் அவள் ஆடையை நனைந்து இருக்க.. ரதி அவசரமாக பாட்டிலை அருகில் வைத்தவள். 

தன் சட்டையில் இருந்த தண்ணீரை தட்டிவிட்டுக்கொண்டே நிமிர்ந்தவள். அவளையே   கண் இமைக்கும் பார்த்துக்கொண்டு இருந்த ராக்கியை பார்த்தாள் .

அவன் பார்வை சென்ற இடத்தை குனிந்து பார்த்தவளுக்கு அவள் உள்ளாடை தான் அணிந்து இருந்த சட்டையை தண்டி வெளியே தெரிகிறது என்பதையே உணர்ந்தாள். அடுத்த நொடி தன் கைகளைக்  கொண்டு ஈரம் படிந்த சட்டையை , மறைத்தவள் திரும்பி நின்று கொண்டாள் .

அவள் திரும்பியதும் தான் இவ்வ்ளவு நேரம் தான் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்ற எண்ணமே ராக்கிக்கு தோன்றியது.

வம்பு வழக்கு என்று திரிபவன் தான் ராக்கி . ஆனால் பெண்களை அவன் ஒரு போதும் தவறான நோக்கத்தோடு பார்த்ததில்லை. இன்று அவனையும் அறியாமல் ரதியை இப்படி பார்த்துவிட்டது ராக்கிக்கே ஏனோ போல இருந்தது.

“சார் இப்படி தான் ஒரூ பொண்ணை பாப்பீங்களா … நான் இப்படி ஈரத்துண்டியோட நிக்கும்போது நீங்க திரும்பி இருக்கனும் இல்ல உங்க பார்வையை பாத்தி இருக்கனும் . இப்படி முழுங்குற மாதிரி பாத்துட்டு இருக்கீங்க.. ” என்று திரும்பி நின்ற  படியே தன் கோபத்தை காட்டினாள்.

“இங்க பாரு நான் வேணும்னு ஒன்னும் அங்க பார்க்கல … உன் டிரஸ் ஈரம் ஆகிருச்சு நான் அதை எதேச்சையா பார்த்தேன். ஆனா உன்னை அப்படிப்  பார்த்ததும் வேற பக்கம் திரும்பிக்கனும்னு தான் நான் நினைச்சேன். ஆனா… ஆனா… ” என்று அவள் திரண்டிருந்த வனப்புகள்  அவன் நினைவில் வந்து ராக்கியை பேசவிடாமல் தடுத்திருக்க…

“என்ன சார் ஆனா.. என்னன்னு சொல்லுங்க. நான் யாருன்னு தெரியுமா? நான்  எங்க வேலை பாக்குறேன்னு உனக்கு தெரியுமா …” என்று  கோபமாக திரும்பிய ரதி ராக்கியை  கை  நீட்டி கேள்வி கேட்க..

மீண்டும் அவள் வனப்புகள் அவன் பார்வையில் அதை கண்டு கைகளை அவள் மறைத்தவள் . ராக்கியிடம் தான் வேலை செய்யும் இடம் பற்றி சொல்லி அவனை எச்சரிக்கை செய்ய நினைக்க..

அப்போது அவள் பின்னால்  இருந்து “என்ன பெருசு… ரொம்ப துள்ளுற … உனக்கு எவ்ளோ  தைரியம் இருந்தா CM  ஐயா வீட்டுக்கு வந்து அங்க நடக்குறதை யாருக்கும் தெரியாம வேவு பாக்குற…  உன்னை எல்லாம் பாத்த இடத்துலயே கழுத்தை அறுத்திருக்கணும். ஆனா ராக்கி சொன்ன ஒரே காரணத்துக்காக தான் உன்னை தூக்கி கார் டிக்கியில் போட்டு இங்க கூட்டிட்டு  வந்திருக்கேன் ” என்று மாரீஸ் ரதியை அழைத்து வந்த காரில் இருந்து ஒருவரை தரதரவென இழுத்துக்கொண்டு அவர்களை நோக்கி நடந்து வந்தான்.

அவர்கள் தன்னை இந்த நிலையில் பார்த்தாள்  என்ன ஆகும் என்று நினைத்தவள் வேகமாக ஓடிச் சென்று ராக்கியின் பின்னால் சென்றவள் அவனை ஒட்டிக்கொண்டு  தன்னை மறைத்து நின்றாள் .

அவள் செயலில் மெல்ல சிரித்தவன் “என்ன 250 பீடா இப்ப தான் உன்னை நான் ஈரத்துணியோட பார்த்ததுக்கு வானத்துக்கும் .. பூமிக்கும் குதிச்சி… ஆனா இப்போ நீயே வந்து என்மேல ஒரசிட்டு நிக்குற…  என்ன சங்கதி ” என்று நக்கலாக சிரித்தான்.

ராக்கி  சொன்னதும் அவனை விட்டு சற்று விலகி நின்றவள் . “நீ பார்த்ததை ஊரே பாக்கணுமா.. அதான் என்ன செய்றதுன்னு தெரியாம உன் பின்னாடி வந்து நின்னேன்” என்று அவனிடம் சிடு சிடுத்தாள் .

ரதி தான் பார்த்ததை வேறு யாரையும் பார்க்கக்கூடாது என்று பேசியதும் நம்ம ராக்கிக்கு  மனதிற்குள்

ஹெய் எண்ணமே ஏன் உன்னால

உள்ள புகுந்தது தன்னால

கண்ணமே என் கண்ணால

வேந்து செவந்து புண்ணாக

என்று பாட்டை ஹம் .. செய்தது.  அதை மேலும் தொடர விடாமல் வந்தான் மாரீஸ் நந்தி..

“என்ன ராக்கி அந்த புள்ள.. உன் பின்னாடி போய்  ஒளிஞ்சுட்டா.. இவனை போடுற போட்டுள்ள அவ உண்மையை எல்லாம் கக்க  போறா பாரு ” என்று தான் இழுத்து வந்தவனை அடிக்க துவங்கினான்.

“ஐயோ !! அம்மாஆ!!! வலிக்குது சார் .. என்னை எதுவும் பண்ணிராதீங்க… நான் பண்ணினது தப்பு தான். ஏதோ ஒரு நியூஸ் கிடைக்கும்னு யாருக்கும் தெஇர்யாம மரிஅஞ்சு நின்னு போட்டோ எடுத்தது தப்பு தான் ” என்று   வந்தவன் கெஞ்சிக்கொண்டு இருக்க…

ராக்கியின் பின்னால் நின்று இருந்த ரதிக்கு இந்த குரலை எங்கோ கேட்டது போல இருக்க… தலையை நீட்டி எட்டி பார்த்தவளுக்கு அதிர்ச்சியானது.

“பெருசு!! நீயா!! ” என்று கேட்டுக்கொண்டு முன்னே வந்தவள்  தோள்களில்  கை  வைத்து நிப்பாட்டிய ராக்கி  “இப்படியேவா போகப்போற… ஒரு நிமிஷம் இரு…” என்று அவளை தாண்டி கையை நீட்டியவன் பின்னால் தான் கழட்டி போட்ட சட்டையை எடுத்து ரதிக்கு போர்த்திவிட்டு அவள் ஈர உடலை மறைத்தவன் .

“ஆமா  அந்த கிழவனை உனக்கு தெரியுமா? நீயும் அவனும் ஒன்னா  வேலை பாக்குறீங்களா.. அப்போ இந்த கிழவனை தேடி தான் நீ வந்தியா.. ” என்றான் அவளை சந்தேகப்படும்படி பார்த்து  .

ஆமா … இல்ல… ” என்று உளறி ரதி .

“அது… அந்த பெருசு… ச்சே .. அவரு.. அவர் என் அப்பா .. அப்பாவோட பிரெண்டு…” என்றாள்  மாரீஸிடம் அடிவாங்கி முகம் வீங்கி இருந்த குணவானை பார்த்து .

குணவானும் ரதியை அங்கு எதிர்பார்க்கவில்லை.. “ரதி! நீயா! ” என்று அவர் அதிர..

“ஆமா  அங்கிள் நானே தான் . நான் என் பிரெண்ட்ஸை மீட் பண்றதுக்காக என் ஸ்கூட்டியில் போய்ட்டு  இருந்தேன். அப்போ வழியில உங்களை பார்த்துட்டு பாலோ பண்ணிட்டு வந்தேன். திடீர்னு வழி  மாறி நான் போய்ட்டேன். சரி திரும்ப போகலாம்னு நான் வந்த அப்போ தூரத்துல உங்க வண்டி நிக்குறதை பார்த்தேன் . சரி இவ்ளோ தூரம் வந்தோமே உங்களை பார்க்கலாம்னு நான் வந்தேன்.” என்றாள் .

” சரி  அப்போ இவரை தேடி வந்த நீ இந்த கிழவனை நாங்க கார்ல  அடைச்சு வெச்சதை பார்த்தது தானே எங்க கார் பின்னாடி மறைஞ்சிருந்து அவரை காப்பாத்த ட்ரை பண்ணின.. ” என்றான் மாரீஸ்.

“இங்க பாக்கிப்பயலை மூக்குலையே குத்தணும். எங்க எடிட்டரை நீ புடிச்சு வெச்சிரிந்தேனு தெரிஞ்சிருந்தா நான் ஏன் டா அங்க தனியா வரணும். பொலிசையோ.. இல்ல எங்க ஆபீஸ்ல இருந்து யாரையாவது நான் துணைக்கு கூப்பிட்டிருப்பேனே … ” என்று நினைத்தவள்.

“நான் தான் சொன்னேனே இந்த அங்கிள் வண்டியை பார்த்துட்டு அவரை தேடி வந்தேன்னு. அபப்டியே நீங்க சொல்ற மாதிரி இவர் கார் டிக்கியில் இருக்காருன்னு தெரிஞ்சிருந்தா… யாருக்கும் தெரியாம இவரை நான் காப்பாத்தி கூட்டிட்டு போயிருக்க மாட்டேன்னா.. என்ன நீங்க லூசு மாதிரி பேசுறீங்க… ” என்று ரதி மாரீஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மிகவும் சிரமாட்டாள்  அதை மறைக்க இந்த சிரிப்பு வேறு..

“டேய் அதான் அந்த பொண்ணு  உண்மையை சொல்லிட்டாளே.. அப்ரோம் என்ன டா கேள்வி கேட்டுட்டு” என்ற ராக்கி .

“சரி நீ கிளம்பு… உன்னை விசாரிச்சாச்சு ” என்று அவளை அங்கிருந்து போக சொல்ல…

“அப்போ இவரு.. ” என்று குணவானை கை காட்டினாள்.

“அவரை விசாரிச்சு அனுப்பனும் ” என்று தன் கையை முறுக்கிக்கொண்டு சொன்னான் மாரீஸ்.

“டேய் சும்மா இரு.. அந்த கிழவனை விசாரிச்சது போதும் . அதான் அடிச்சு மூஞ்சியை வீங்க வெச்சுட்டியே.. அப்பறோம் என்ன..” என்று மாரீஷை அதட்டிய ராக்கி .

“இங்க பாரு 250 உன் அங்கிள் கிட்டே சொல்லி அவர் எடுத்த போட்டோவை இங்கையே என் கண்ணு முன்னாடியே டெலீட் பண்ணிட்டு நீயும் கிளம்பலாம்” என்றான் ராக்கி.

அதை கேட்ட குணவான் அமைதியாக நிற்க…

“என்ன கிழவா  நீ அமைதியா இருக்கறதை பார்த்தா டெலீட்  பண்ண மாட்டேன்னு சொல்வ போல இருக்கு ” என்று மாரீஸ் அவரை நோக்கி வர..

“பெருசு அந்த போட்டோசை எல்லாம் டெலீட் பண்ணிடு . இப்போதைக்கு நாம இங்க இருந்து உயிரோர்டா போகணும் அதை புரிஞ்சுக்கோ.. ” என்பர் ரதி அவர் காதை  கடிக்க …

குணவானும் வேறு வழி  இல்லாமல் CM  வீட்டில் ஆர் எடுதத போட்டோக்களை டெலீட்  செய்துவிட்டு ரதியோடி அங்கிருந்து கிளம்பினார்.

அவரை கைத்தாங்கலாக ரதி அங்கிருந்து அழைத்து செல்ல.. அப்போது ஏதோ நினைவு வந்தவனாக “ஏய்! 250! ஒரு நிமிஷம் நில்லு… ” என்று அவளை நிறுத்தினான்.

“போச்சு … இப்போ எதுக்கு என்னை நிக்க சொல்றான். அவனை நான் பாலோ செஞ்ச விஷயம் எதுவும் தெரிஞ்சிருச்சா அவனுக்கு ” என்று பயந்தபடியே ரதி திரும்பி அவனை பார்த்தாள் .

“இங்க வா… ” என்று அவளை கை  நீட்டி தன் பக்கம் அழைத்தான் ராக்கி.

“பெருசு ஒரு நிமிஷம் இரு வரேன்… இவன் ஏதாவது பிரச்சனைன்னு ஸ்டார்ட் ஆகிடுச்சுனா நீ இங்க இருந்த்து தப்பிச்சு போய்  யாரையாவது என்னை காப்பாத்த  கூப்டு வந்திரு ” என்று தயங்கிய படி ராக்கிற்கு நோக்கி நடந்தாள் .

“அட என்ன இவ்ளோ மெதுவா வர… வேகமா மா 250.. ” என்று எட்டி அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் அவள் தோளில்  மாட்டி இருந்த தந்து பேக்கை  வாங்கியவன் அதை திறக்க..

“அய்யய்யோ அதுல தான் என்னோட ID  கார்டு நான் வேலை பாக்குற விபரம் எல்லாமே இருக்கே.. ” என்று  ரதி பதற..

ராக்கி அவள் பேக்கை சல்லடை போடத் துவங்கினான்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured