EPISODE 7
ராக்கி ரதியின் ஹாண்ட் பேக்கை வாங்கியவன் அதில் கையை விட்டு எதையோ தேடிக்கொண்டு இருந்தான். அதை பார்த்தவள் “அய்யய்யோ! இப்போ எதுக்கு என் பேக்குக்குள்ள கையை விட்டு எதையோ தேடிட்டு இருக்கான் .” என்று யோசித்தவள் வேகமாக அவனிடம் வந்து தன் பேக்கை பிடுங்க போனாள் .
ரதி தன் அருகில் வந்ததும் சட்டென்று அவள் கையில் பேக் சிக்காமல் மேலே தூக்கி பிடித்தவன் “என்ன வேணும் உனக்கு ” என்றான் சாதாரணமான குரலில் ரதியிடம் .
தன்னைப் பார்த்ததில் இருந்து சிடு சிடுவென்று பேசியவனின் குரலில் இப்பொது இறுக்கத்தை காணாமல் ஆச்சர்யப்பட்டாள்.
அதை கண்டுகொள்ளாதவள் “இப்போ எதுக்கு என் பேக்கை எடுத்து வெச்சிருக்கீங்க.. முதல்ல என் பேக்கை குடுங்க ” என்று கைகளை உயர்த்தி அவனிடம் இருந்து தன் பேக்கை பறிக்க முயன்றாள் .
ராக்கியின் உயரத்திற்கு ரதி சற்று உயரம் குறைவு அவன் வேறு இப்பொது கையை மேலே தூக்கி பிடித்திருக்க.. அவள் கைகளுக்கு அந்த பேக் எட்டவில்லை..
“இங்க பாருங்க… ஒரு பொண்ணோட பேக்கை வாங்கி இப்படி பாக்குறீங்க.. இது சரி இல்ல.. ” என்றாள் ரதி.
“ஏன் சரி இல்ல… எனக்கு நீ யாரு , உன் வீடு எங்க இருக்கு.. உன் பேர் என்ன இது எதுவும் தெரியாதே.. அதை தெரிஞ்சுக்க தான் உன் பேக்ல ஏதாவது ID கார்டு இருக்கான்னு பார்த்தேன்” என்றான்.
“என்னை பத்தி தெரிஞ்சுக்கனும்னா என்கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியது தானே.. ஏன் என் பேக்கை துழாவுரிங்க.. நீங்க தேடறது என் பேக்கில் கிடைக்காது… முதல்ல என் பேக்கை குடுங்க.. ” என்று ரதி மீண்டும் அவன் கையில் இருந்த பையை பிடுங்க போக…
“ரதி… அந்த பேக்குக்கு நீ ஏன் இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணுற.. அதே மாதிரி இந்த அங்கிள் உனக்கு 100 பேக் வாங்கி தரேன். நீ முதல்ல என்னோட கிளம்பி வா.. நாம இங்க இருக்குறது சரி இல்லை… ” என்று அவளிடம் வந்த குணவான் ரதியை தன்னோடு அழைத்து செல்ல அவள் கையை பிடித்து அழைக்க…
அதை பார்த்ததும் ராக்கிக்கு கோபம் வந்து விட்டது. ரதி என்ற அவள் பெயர் உண்மை தான் என்று குணவான் அவளை உரிமையாக அழைத்ததிலேயே தெரிந்து கொண்டான். அவருக்கு இருந்த பதட்டத்தில் கண்டிப்பாக பொய்ங்க ஒரு பெயரை சொல்லி அவளை அழைக்க முடியாது என்று அவன் கணிப்பு.
“இல்ல பெருசு எனக்கு என் பேக் வேணும் அதுல என்னோட திங்ஸ் எல்லாம் இருக்கு ..” என்று அவருடன் செல்ல மறுத்தாள் ரதி.
“அதெல்லாம் பிறகு பாத்துக்கலாம் நீ வா முதல்ல… ” என்று குணவான் அவளை விடாமல் இழுக்க…
“ஏய் பெருசு அவளை விடு ” என்று ரதியின் கையை பிடித்து இழுத்த ராக்கி ரதியை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து நிறுத்தியவன் .
“டேய் மாரீஸ் இந்த பெருசை மொதல்ல இங்க இருந்து வெளியே கூட்டிட்டு போ.. இது பண்ணின வேளைக்கு எதுவும் பண்ணாம விடறதே பெருசு.. இதுல ஓவரா பேசுது ” என்று ராக்கி கடுப்பானான் .
குணவான் ரதியை தன்னிடம் நெருங்க விடாமல் அவளை அவரோடு அழைத்ததற்கு இந்த கோபம் அவனுக்கு.
“பெருசு நீ முதல்ல வா என்னோட.. ராக்கி உன் பிரெண்ட் பொண்ணை ஏதும் செய்யது சரியா.. ” என்று அவரை வம்பாக வெளியே இழுத்தது சென்றான்.
“பேசாம நான் பெருசு கூப்பிட்டதும் கிளம்பி போயிருக்கனும் . இப்போ இவன்கிட்டே தனியா மாட்டிகிட்டேனே.. ” என்று நினைத்தவள் திரும்பி ராக்கியை பார்க்க..
“என்ன 250 .. அப்படி முளிக்குற… என்னை பார்த்தா பயமா இருக்கா உனக்கு .. ” என்றவன் அவளை விட்டுவிட்டு மீண்டும் ரதி பேக்கை துளாவினான்.
“இங்க பாருங்க உங்களுக்கு இப்போ என்ன தெரிஞ்சுக்கணும் நான் என்ன செய்றேன் . வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கணும் அதானே.. வேணும்னா என் கூடவே வந்து என் வீடு எங்க இருக்கு நான் என்ன செய்றேன்னு நீங்க நேரா வந்து தெரிஞ்சுக்கோங்க… ” என்று அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டாள் .
“பைத்தியக்காரி .. இப்படியா உளறி வெப்ப.. ” என்று தன்னையே திட்டிக்கொள்ள…
“அப்டியா அப்போ கிளம்பி வா உன் வீட்டுக்கு போகலாம் ” என்றான்.
ரதிக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை… இப்பொது என்ன செய்வது என்று அவள் கைகளை பிசைந்து கொண்டு நின்று இருக்க…
“என்ன நீ தானே என்னை உன் வீட்டுக்கு வர சொன்ன.. இப்போ என்ன யோசிக்கிற.. ” என்றவன்
மீண்டும் ரதியின் பேக்கை நோண்ட ஆரம்பிக்க… அதில் அவன் கையில் முதல்ல பட்டது வந்தது அவளுடைய வண்டி சாவி தான். அதை அவன் எடுத்ததும் அவனிடம் இருந்து சாவியை பிடுங்கியவள் “பாருங்க மரியாதையா என் பேக்கை கொடுத்திருங்க.. இல்லேன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ” என்று அவனையே மிரட்டினாள் ரதி.
“ஓஹோ… அந்த அளவுக்கு உனக்கு தைரியம் இருக்க… அப்போ குடுக்க முடியாது என்ன செய்வ நீ ” என்றான் அவனும் விடாமல் ரதியிடம் வம்பு செய்து.
அவன் அப்படி சொன்னதும் வேகமாக அவனை நெருங்கிய ரதி ராக்கி கையில் இருந்த பேக்கை பிடித்து தன் பக்கம் இழுக்க… அதை பார்த்து சிரித்தவன் தன் ஒற்றைக்கையால் அவள் பேக்கையும் அவளையும் சேர்த்து தன் பக்கம் இழுக்க….
அவன் இழுத்த வேகத்தில் போய் ரதி அவன் மீது மோதி நின்றாள்.
“என்ன என்னவோ என்னை செய்வேன்னு சொன்ன.. ஆனா எதையும் செய்யக்காணோமே.. ” என்று தன் சட்டையை அணிந்து இருந்தவளை ஆசையாக பார்த்தான் ராக்கி .
தன் சட்டையை அவள் அணிந்திருப்பதை கண்டவனுக்கு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு.. அவள் அங்கங்களை தொட்டு … உணர.. அவன் சட்டைக்கு கொடுத்து வைத்திருக்கிறதே என்று அவனுக்கு சற்று பொறுமையாகவும் இருந்தது.
அவன் கைக்குள் இருந்து தன்னை விடுவிக்க ரதி முயற்சிக்க… அவளை விடாமல் பிடித்துக்கொண்டவன் மேலும் தன்னோடு இறுக்கி அணைத்து ரதியின் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு சென்றவன் . அவள் பிங்க் நிற இதழை பார்த்து ஏக்கமாக…
“உன் பேக் இப்போ வேணுமா?” என்றான் .
“ம்ம்ம்… வேணும் ” என்றாள் .
“அப்போ எனக்கு ஒன்னு வேணும் ” என்றான்.
“என்ன ?” என்றாள் .
“நீ போட்டிருக்க லிப்ஸ்டிக் எனக்கு வேணும் ” என்றான்.
“லிப்ஸ்டிக்கா!.. அது.. அது உங்களுக்கு எதுக்கு ” என்றாள் புரியாமல்.
“ம்ம்ம்.. நான் போட்டுக்க தான் கேட்டேன் “என்றான் நக்கலாக.
அவன் அப்படி சொன்னதும் ராக்கியை ஒரு மார்க்கமாக பார்த்தவள் . “அது.. என் வீட்ல இருக்கு… ” என்றாள் .
“அது உன்கிட்டேயே இருந்தாலும் எனக்கு அந்த லிப்ஸ்டிக் வேணாம். உன்னோட லிப்ஸ்ல இருக்க லிப்ஸ்டிக் தான் வேணும் ” என்றான்.
“என்ன!! ” என்று அவனை ரதி அதிர்ந்து பார்க்க…
“ம்ம்… ஆமா ” என்றான் சாதாரணமாக …
“அது.. அதெல்லாம் முடியாது. எனக்கு என் பேக் வேணாம் நீங்களே வெச்சுக்கோங்க… ” என்றவள் அவன் கையை கஷ்டப்பட்டு பிரித்துவிட்டு அங்கிருந்து அவள் செல்லப்போக…
அப்போது அவள் குறுக்கே ஒரு பாம்பு சர்க்கென்ன்று அவளை கடந்து செல்ல…
“ஐயோ ! பாம்பு… ” என்று அதிர்ந்து பின்னால் வேகமாக ஓடிச்சென்று ராக்கியின் மீது துள்ளிக்குதித்து அவனை குரங்கு போல தொற்றி கட்டிக்கொண்டாள்.
அதை அவன் எதிர்பாக்கவில்லை.. அந்த பாம்பிற்கு ஒரு நன்றியை செலுத்தியவன் . அவளை இறங்க விடாமல் கட்டிக்கொண்டு.. “ஏய் ! என்ன என் மேல ஏறி உக்காந்திருக்க.. ஒழுங்கா கீழ இறங்கு..” என்றான்.
“ம்ஹும்.. நான் மாட்டேன். கீழ பாம்பு… ” என்றாள் அவன் இடை மேலே அமர்ந்து கொண்டு..
“ஆமா கீழ பாம்பு தான்.. அதுக்கு என்ன இப்போ ” என்றான்.
“அது இன்னும் அங்கையே தான் இருக்கா.. ” என்றாள் திரும்பியும் பார்க்காமல் அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டு.
அவள் கூந்தல் மனம்.. ரதியின் உடலில் இருந்து அவன் நாசியை நிரப்பிய பிரத்யேக வாசனை அவனை கிளர்ந்தெழ செய்ய… கண்கள் மூடி அவள் வாசனையை உள்ளுக்குள் நிரப்பிக்கொண்டவன் .
“அது எப்பவும் அங்கையே தான் இருக்கும்.. என்னைவிட்டு எங்கையும் போகாது ” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “என்ன சொல்றிங்க..!! நீங்க பாம்பெல்லாம் வளர்க்குறீங்களா!.. அது உங்க கூட தான் எப்பவும் இருக்குமா! “என்றாள் ராக்கி சொன்னதை புரிந்தது கொள்ளாமல்.
“ம்ம்.. ஆமா .. “என்றான்.
“என்னை எப்படியாவது இங்க இருந்து கூட்டிட்டு போங்க ப்ளீஸ் எனக்கு பாம்பை பார்த்தாலே பயமா இருக்கு… ” என்றாள் .
“ம்ஹும் உன்னை இங்க இருந்து எல்லாம் என்னால முடியாது… ” என்றான் வேண்டுமென்றே…
“ப்ளீஸ் சொன்னா கேளுங்க… எனக்கு பயமா இருக்கு… “என்று ரதி கூற…
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும் . நீ முதல்ல என் மேல இருந்து இறங்கு.. இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் என் மேல உக்காந்திருந்தா.. அப்பறோம் அந்த பாம்பை என்னால அடக்க முடியாது ” என்று அவளை கீழே இறக்கிவிட்டான் ராக்கி .
அவன் இறக்கி விட்ட மாரு நொடி மீண்டும் அவன் மீது தாவிக்கொண்டவள் . “சார் ப்ளீஸ்.. தயவு செய்து என்னை அந்த பாம்புக்கிட்டே இருந்து காப்பாத்துங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. நீங்க என்ன கேட்டாலும் நான் செய்றேன் ” என்றாள் .
“அப்படி வா டி வழிக்கு … ” என்று நினைத்துக்கொண்டவான் .
“இன்னிக்கு நான் யார் முகத்துல முழிச்சேன் ” என்று யோசித்தவனுக்கு ஓவியாவின் நினைவு வர…
“என் தங்கச்சி எப்பவும் எனக்கு லக்கி தான் . அவ முகத்துல முழிச்சதுனால தான் இன்னிக்கு இவளை பார்த்திருக்கேன் . இப்போ என் மேல ஏறி இவளே உக்காந்துட்டு நான் என்ன கேட்டாலும் தரேன்னு வேற சொல்றா… ” என்று நினைத்துக் கொண்டு இருக்க…
“சார் ப்ளீஸ் !! என்னை எப்படியாவது இங்கே இருந்து கூப்டு போங்க… “என்று அவனிடம் கெஞ்சினாள் .
“அப்போ எனக்கு ஒரு முத்தம் கொடு நான் உன்னை இங்கே இருந்து கூப்டு போறேன் ” என்றான்.
“என்ன ! முத்தமா!! ” என்று அவன் இடையில் இருந்து அவசரமாக இறங்கிய ரதி..
“அதெல்லாம் என்னால முடியாது.. என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. அதெல்லாம் முடியாது.. அந்த பாம்பை காணோம் நானே போய்க்கிறேன் ” என்று அந்த பாம்பு அங்கே எங்காவது இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே ரதி நடக்க…
அவள் பார்வையில் அந்த பாம்பு எங்கும் சிக்கவில்லை அப்பாடா என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டவள் அங்கிருந்து செல்லப்போக…
“ஓஹோ… அதெப்படி நான் கேட்டதை கொடுக்காம என்னோட இடத்துல இருந்து நீ வெளியே போவ… “என்று யோசித்த ராக்கி .
“அய்யய்யோ!! பாம்பு… “என்று கத்தினான்.
அவன் கத்திய அடுத்த நொடி வாசல் வரை சென்ற ரதி ஓடி வந்து அவன் மேல் தாவி அவன் இடையில் தன் கால்களை கொக்கிபோல போட்டும் , அவன் கழுத்தை தன் கைகளால் இருக்க கட்டிக்கொண்டு அவன் மீது ஏறி அமர்ந்தவள் அவனை பார்த்து “இன்னும் அந்த பாம்பு போகலையா ” என்றாள் பயந்து நடுங்கிக்கொண்டே…
“அம்மா போகல.. அது நான் சொல்ற வரைக்கும் இங்க இருந்து போகாது ” என்றான்.
“சார் ஏன் இப்படி பண்றீங்க.. தயவு செய்து அந்த பாம்பை இங்கே இருந்து போக சொல்லுங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் சார் ப்ளீஸ் ” என்று அவனை இருக்க கட்டிக்கொண்டு ரதி கெஞ்ச.
“அந்தப் பாம்பை இங்கிருந்து விரட்டணும்னா .. நான் சொன்னதை நீ கேட்கணும். நான் கேட்டது எனக்கு எப்போ கிடைக்குமோ… அப்பதான் நான் அந்த பாம்பை போக சொல்லுவேன்” என்றான்.
“நீங்க கேட்டதை நான் கொடுத்துட்டா அந்த பாம்பை போக சொல்லிடுவீங்களா.. ” என்றாள் ரதி.
“கண்டிப்பா போக சொல்லிரு … ” என்று ராகியை முழுதாக முடிக்கும் முன் அவன் இதழில் தன் இதழை பொருத்தி இருந்தாள் ரதி .
அவள் முத்தம் கொடுத்த அடுத்த நொடி ராக்கி கண்கள் மூடி அவள் மென்மையான உதடு தன் தடித்த உதடுகளை கவ்விய விதத்தை ஆழ்ந்து அனுபவித்தவன் . தன் மூச்சை தக்க வைத்துகொண்டு அவளை தன் உடலோடு இறுக்கி அணைத்தான்.
ரதி அவனை முத்தமிட்டவள் “இப்போவாவது அந்த பாம்பை போக சொல்லுங்க.. PLEASE!! ” என்று அவள் கெஞ்சிக்கொண்டு இருக்கும்போதே.. ராக்கியின் காலில் ஏதோ ஊறுவது போல இருக்க…
முதலில் அவள் முத்தத்தில் அதை உணராதவன் இப்போதுதான் தன் காலில் ஊறுவது பாம்பு என்று உணர்ந்தவன் குனிந்து தன் காலை பார்க்க…
ரதியும் அவனோடு குனிந்து கீழே பார்த்தவளுக்கு அந்த பாம்பு அவன் காலில் இருந்து மெல்ல ஊர்ந்து அவளை நோக்கி வந்தது.
அதை கண்டதும் “ஆ …!” என்று அலறியவள்.
“சார்! சார்.. ப்ளீஸ் அந்த பாம்பை போக சொல்லுங்க… நான் தான் நீங்க கேட்டதை கொடுத்துட்டேனே “‘ என்று அவனை கெட்டிக்கொண்டு கெஞ்சினாள்.
“நீ முத்தத்தை பாதியில நிறுத்தியதும் அது இங்க இருந்து போக மாட்டேங்குது . அந்த பாம்பு இங்க இருந்து போற வரைக்கும் எனக்கு முத்தம் கொடு அது போய்டும் ” என்றான் அந்த நேரத்திலும் தன் காரியத்தில் குறியாக.
அவனுக்கும் அந்த பாம்பை பார்த்ததும் சற்று பயம் தான். ஆனால் அதை சமாளித்துக்கொள்ளும் அளவுக்கு அவனுக்கு தைர்யம் இருக்கிறது.. ஆனால் ரதிதான் அதிகம் பயந்து கொண்ட்னு இருக்கிறாள்.அதை அவனுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள ராக்கி சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் .
“அப்போ நீங்க சொன்ன மாதிரி செய்தா அந்த பாம்பு நிஜமாவே இங்க இருந்து போய்டுமா!” என்றாள் தன் பார்வையை கீழே இருந்த பாம்பின் மீது பதித்துக்கொண்டே…
“ம்ம்… ஆமா … “என்றவன் “அங்க என்ன பார்வை என்னை பாரு .. உனக்கு பயம் போய்டும் ” என்று அவள் கன்னத்தை பிடித்து தன் பக்கம் திருப்பி தன்னை பார்க்க செய்தான் ராக்கி.
அவன் கண்களையே பார்த்தவள் “நீங்க சொன்ன மாதிரியே நான் முத்தம் கொடுக்கிறேன் உங்களுக்கு.. அந்த பாம்பு போனதும் எனக்கு சொல்லுங்க… ” என்று அவன் இதழை தன் இதழுக்குள் இழுத்திருந்தாள் .
அய்யய்யயோ ஆனந்தமே…
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே…
நூறு கோடி வானவில்…
மாறி மாறி சேருதே…
காதல் போடும் தூறலில்…
தேகம் மூழ்கி போகுதே…
ஏனோ ஒரு ஆசை…
வா வா கதை பேச… அய்யய்யோ…
அய்யய்யய்யோ…
அய்யய்யய்யோ…
என்று அவன் மனதிற்குள் ரதியின் முத்தம் அவனை சந்தோசத்தின் உச்சிக்கு கொண்டு சென்று இருந்தது .
அவள் இடையை ஒரு கையால் அணைத்து பிடித்திருந்தவன் தன் முட்டியை தாண்டி மேல் நோக்கி வந்திருந்த காட்டுவீரியனை கையில் பிடித்து அபப்டியே ரதியை விட்டு தள்ளி தன் கையை நீட்டிக்கொண்டு நின்று இருக்க…
அவனுக்கு முத்தமிட்டுக்கொண்டு இருந்த ரதி அவன் கையில் இருந்த பாம்பை பார்த்து மேலும் பயந்து அவன் இதழை தீவிரமாக முத்தம் வைத்தாள்.
