Home Uncategorizedஉணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி முன்னோட்டம்

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி முன்னோட்டம்

by Sinamika Writes
12 views

 ஹலோ பிரண்ட்ஸ்! வெல்கம் டு Sinamika’s Love Tales. காதலில் விழுந்தவர்களுக்கும், காதலிக்கக் காத்திருப்பவர்களுக்கும் இது ஒரு ஸ்பெஷல் இடம். சின்னச் சின்ன ஊடல்கள், தீராத தேடல்கள், அப்புறம் நெஞ்சை அள்ளும் ரொமான்ஸ் – இது எல்லாத்தையும் கதைகளா கேட்க நீங்க ரெடியா? கொஞ்சம் அடாவடியான, ஆளுமையான ஹீரோ அதே அடாவடித் தனத்தாளயே ரொமான்ஸ் பண்ணினா எப்படி இருக்கும் அதான் இந்த கதை.

நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க, காதலின் அழகிய பக்கங்களை ஒண்ணா சேர்ந்து ரசிக்கலாம்!”

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி!

மேலதாளம் முழங்கவில்லை, அட்சதை தூவவில்லை… ஆசி வழங்க யாரும் இல்லை.

கோடீஸ்வரனான ராவணின் திருமணம் மிகவும் சிம்பிளாக அதுவும் அவன் பாட்டி வேதாவின் முன் ஹாஸ்பிடளில் வைத்து அவன் திருமணம் அரங்கேறியது.

பேருக்கு ஏத்த போல கம்பீரமான தோற்றம் அவனோடது. ஆறடி ஆண் மகன் அவன் பெயருக்கு ஏற்ற கம்பீரத் தோன்றம். கண்களில் ஆளுமை. வாட்ட சட்டமான ஆள் என்று சொல்வார்களே அதே போல தோற்றம் அவனுக்கு.

நிறம் சுண்டிவிட்டாள் சிவந்துவிடும் சிவப்பு தான். ஆனால் அடுத்தவர் உடலில் தான் அந்த ரத்த சிவப்பை… அவர்கள் உடலில் வழியும் ரத்தத்தை பார்த்து தான் அவனுக்குப் பழக்கம். 

அவனை சுண்டிவிட அல்ல.. சுண்டு விரலால் தீண்டக் கூட யாராலும் முடியாது இந்த ராவணை.

என்னடா பேரு வித்தியாசமா இருக்குன்னு தானே நினைக்குறிங்க. 

அவனுடைய உண்மையான பேரு ஐராவதன்.

இந்த ரெண்டு பேருக்கும் பொருத்தமானவன் தான் நம்ம ஐராவதன்.

கட்டு மஸ்தான தேகம் புஜங்கள் எல்லாம் அவன் இறுகிய முகத்தை போலவே தான் இறுகி இருக்கும். இடது கழுத்தில் இருந்து மணிக்கட்டு வரை ஒரு யானையின் படத்தை டாட்டூவால் வரைந்து இருப்பான். தன் பெயரில் இருக்கும் அதே ஐராவதம் தான் அந்த டாட்டூவிலும் இருக்கும்.

சிவந்த அவன் மேனியில் சட்டையை கலட்டிப் பார்த்தாள் அந்த ஐராவதம் அவன் முதுகிலும் படர்ந்து இருப்பது அவனை அப்படி பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவ்வளவு கம்பீர தோற்றம் உடையவனை அவன் பார்க்கும் தொழில் மிகவும் கறாராக, இரக்கம் அற்றவனாக இருப்பதை கண்டு அனைவரும் அவனை இராவணன் என்று அழைக்க.. அவனோ ராவண் என்று அதை சுருக்கி இந்த பெயரை தொழில் வட்டத்தில் வைத்துக்கொண்டான்.

ரியல் எஸ்டேட்டின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி அதை தன் கைக்குள் வைத்து இருப்பவன் தான் இந்த ராவண். பெரிய நிறுவனங்களுக்கு தொழிலில் முதலீடு செய்ய பணம் தேவைப்படுபவர்களுக்கு பைனான்ஸ் என்று தன் தொழில் வட்டத்தை ரியல் எஸ்டேட்டில் இருந்து அப்படியே பெருக்கி இருந்தான்.

அப்படிப்பட்ட அதிகாரம் நிறைந்த இந்த ராவணை மனமுடித்த அந்த பாவப்பட்ட பெண் இளங்கிளி 

அவள் அப்பா வாங்கிய கடனை அடைக்க முடியாமல். ராவணின் அவசர கல்யாணத்திற்கு தன் பெண்ணையே கடன் அடைக்க கட்டி வைத்துவிட்டார்.

வேறு வழி வாங்கிய பணத்திற்கு தன்னையே  அவனிடம் அடமானம் இல்லை இல்லை.. அவளை கொடுத்த காசிற்காக பறிமுதல் செய்து தானதாக்கிக் கொண்டான் இந்த ராவண்.

இளங்கிளி புறதானப் பெயர் போல தான் இருக்கிறது அவள் பெயர். 

அவளும் அந்த காலத்துப் பெண் போல பயந்தவள் தான். 

முரட்டுத்தனமும், மூர்க்க குணமும் கொண்டவனுக்கு, வேகமாக மூச்சு விட்டாளே அதிர்ந்து பார்ப்பவள் தான் இப்போ மனைவியாகி இருக்கிறாள்.

ம்ஹும்… ஆக்கப்பட்டு இருக்கிறாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured