மூர்க்கன் 5
இளங்கிளியின் அறைக்குள் நுழைந்தவன் சுற்றிலும் நோட்டம் விட்டபடி அங்கே இருந்த கட்டிலில் போய் அமர்ந்தான்.
அவன் பின்னே வந்தவள் தயக்கத்தோடு வாசலில் நின்று இருக்க..
வா இங்க என்றான் அதிகாரத் தோரணையில்.
அவளும் பயந்து கொண்டே உள்ளே வந்தவள் அவனை விட்டு சில அடி தள்ளி நின்றாள்.
இங்க வாடி என்று அவன் அருகில் கட்டிலை கட்டி காட்டினான்
ஹ!.. என்று அவள் அதிர்ந்து பார்க்க
வான்னு சொன்னேன் என்றான் அழுத்தமாக.
அவளோ பயத்திலும், நடுக்கத்திலும் பூனை நடை போட்டு மெல்ல அவனிடம் வந்தாள். அவள் நடந்து வருகையில் அவளையே உற்று நோக்கினான் தலை முதல் பாதம் வரை அவளை பார்வையாலே அளந்தான் ராவண்.
காலையில் கட்டிய அதே சிவப்பு நிற காட்டன் சேலை அணிந்து இருந்தாள். தலை களைந்து மௌனம் சோர்வாக இருந்தது. கண்கள் வேறு சிவந்திருக்க.. அதை கண்டவன் “அழுதியா?” என்றான்.
“ஹ..” என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் ” ஹும்.. ம்ஹும்… ” என்று வேகமாக தலையை ஆட்டினாள்.
“அப்பறோம் ஏன் உன் கண்ணு இவ்ளோ ரெட்டிஷா இருக்கு” என்றான்.
“ஹா.. அது.. காலையில நேரமே எழுந்தேன் . அதான் தூக்கம் இல்லாம.. ” என்றாள் காற்றுக்கும் கேட்காத வண்ணம்.
“இனிக்கும் நைட் தூங்க முடியாதே என்ன பண்ணுவ?” என்றான் சாதாரணமாக.
அவள் விழிகள் விரிந்துகொள்ள அவனைப் பார்த்தாள் . “ஹாஸ்பிடல்ல இருந்து வந்த பிறகு என்ன பண்ணிட்டு இருந்த. இன்னிக்கு நமக்கு பஸ்ட் நைட் இருக்குன்னு தெரியும் இல்ல அப்பறோம் வந்ததும் தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே.. ” என்றான்.
அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகள் மேலும் அதிர்ந்து விரிய..
“சும்மா எதுக்கு அந்த பூனைக் கண்ணை இப்படி விரிச்சு பாக்குற.. ” என்று அவன் அருகில் நின்றவளை இழுத்து தன் அருகே மிக நெருக்கத்தில் நிறுத்தினான்.
இளங்கிளிக்கு இதயம் தட் ..தட்.. என்று அடித்துக்கொண்டது. ராவணின் நெருக்கம் அவள் இதயத்துடிப்பை ராக்கெட் வேகத்திற்கு உயர்த்தி இருக்க.. அவளுக்கு காதுகள் அடைத்து தலை சுற்றுவது போல இருந்தது. அவள் இதயத் துடிப்பு அவளுக்கே நன்றாக கேட்டது. அவளை தன்னோடு இழுத்து நிறுத்தி இருந்தவனுக்கு அவள் இதயத்துடிப்பை உணர முடிந்து இருக்க..
“ஏன் உன் ஹார்ட் இவ்ளோ வேகமா துடிக்குது ” என்றவன் அடுத்த நொடி செய்த செயலில் இளங்கிளிக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்துது.
அவனை மிரட்சியுடன் பார்த்துவிட்டு கீழே குனிந்து தன் இடப்பக்க மார்பில் இருந்த அவன் கையை பார்த்தாள்.
அவனோ அவள் அதிர்ச்சியை கண்டுகொள்ளாதவனாக அவள் மார்பில் கையை வைத்து அவள் இதயத்துடிப்பை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தான்.
ஒரு நொடி , அந்த ஒரு நொடி பெண்ணவள் நிலையை அவளால் விவரிக்கவே முடியாது, அவன் நெருக்கம் அவன் ஆளுமை இவை எல்லாம் தாண்டி இப்பொது அவள் மீது வைத்திருக்கும் கை அவளை அப்படியே உலகத்தின் அடி ஆழத்தில் தன்னை சுருட்டிக்கொண்டு மறைந்து விட வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
அது வெட்கமா? பயமா? எது என்று தெரியாத உணர்வு. ஆனால் அவனின் இந்த நெருக்கம் அவள் ரத்தக் கொதிப்பை மேலும் எகிற வைத்துக்கொண்டிருந்தது. மேலும் அதிகமாகா அவளுக்கு மூச்சு வாங்கியது. அவள் நெஞ்சுக்கூடு அவள் விட்ட மூச்சில் மேலும் , கீழும் வேகமாக சென்று வர..
அவள் நிலையை உணர்ந்தவன் மெல்ல அவள் மார்பில் இருந்து தன் கையை அப்படியே மேலே கொண்டு சென்றான்.
இளங்கிளிக்கு உடல் நடுங்கியது, முகமெல்லாம் பயத்தில் வியர்த்து விட..
மேலேறி அவன் கைகள் அவள் கழுத்து வளைவில் வந்து நின்றது. மற்றொரு கையால் அவள் இடையில் கை கொடுத்து தன் கால்களுக்கு இடையில் அருகே இழுத்து நிறுத்தியவன் இடையில் இருந்த கையை மேலே உயர்த்தி அவள் கீழ் இதழில் இருந்த மச்சத்தை தன் கட்டை விரலால் வருடினான்,
அவளுக்கு அவன் செயல்கள் ஒவ்வொன்றும் உள்ளுக்குள் ஒரு பெரிய பூகம்பத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது . ஒரு ஆணின் இத்தனை நெருக்கத்தை பெண் அவள் உணரும் முதல் தருணம் அல்லவா இது. அதை எப்படி எதிர்கொள்ளவது என்று தெரியாமல் பெண்ணவள் விழிக்க…
அவள் மருண்ட விழிகளை பார்த்தவாறே அவள் அவள் கன்னங்களை இரு கைகளாலும் பற்றி தன் பக்கம் இழுத்தவன் “உனக்கு இந்த மச்சம் ரொம்ப அழகா இருக்கு டி குட்டிப் பூனை.. ” என்றவன் அவள் மச்சத்தில் தன் முதல் முத்தத்தை பதித்து இருந்தான்.
அவ்வளவு தான் அவள் கால்கள் வலுவிழந்தது போல ஒரு உணர்வு.. உடலில் உள்ள எலும்புகள் எல்லாம் உருகி தொலைந்தது போன்ற ஒரு உணர்வு. அவளால் தன்னை நிலையாக நிறுத்திக்கொள்ள முடியாதபடி அவனின் இந்த மச்சமுத்தம் அவளை சுயநினைவு இழக்கும் அளவுக்கு கொண்டு சென்றது.
கண்களை இருக்க மூடிக்கொண்டாள். அவள் கைகள் இரண்டும் தன் சேலையை இருக்க பற்றிக்கொண்டது. அவள் உஷ்ணமான மூச்சுக்காற்று முன்பை விட வேகமெடுத்திருக்க…
“கிளி!.. இங்க வாம்மா” என்று விசாலத்தின் குரலில் விழுக்கென்று விழித்தவள் வேகமாக அவனை விட்டு விலகி நின்று அவனைப் பார்க்காமலேயே “ஹ.. ஹம்மா.. எ.. அம்மா கூப்பிட்றாங்க… ” என்றாள்.
“போகக்கூடாது” என்றான் வேண்டுமென்றே அவளை அதிகாரம் செய்து.
“ஏ புள்ள கிளி!.. ” என்று அவர் மீண்டும் அழைக்க..
“அ..அம்மா மறுபடி கூப் .. கூப்பிட்றாங்க.. ” என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் இப்பொது கண்ணீர்.
இதற்கு மேலும் அவளை இம்சிக்க விரும்பாதவன் லேசாக சிரித்துக்கொண்டே “சரி போ.. “என்று முடித்திருக்கவில்லை வேகமாக வெளியே ஓடிவிட்டாள்.
அவள ஓடிச்சென்றதும் வாய்விட்டே சிரித்துவிட்டான் ராவண். சிரித்தவன் அடுத்த நொடி புருவம் சுருக்கியவாறு முகத்தை மீண்டும் உம்மென்று வைத்துக்கொண்டு எழுந்தவன் அந்த சிறிய அறையை நோட்டம் விடத் துவங்கினான்.
ஒரு சிறிய மரத்தாலான பீரோ இருந்தது. பழைய காலத்து வீடு அது. ஒவ்வொரு இடத்திலும் மரத்தாலான பொருட்கள் வேலைப்பாடுகள் அதிகம் இருந்தது.
இவர்களின் வறுமை காரணமாக அந்த வீடு சரியாக பராமரிக்க படாமல் இருந்து.
அவள் அறையை விட்டு வெளியே வந்தவன் அந்த வீட்டை சுற்றிலும் நோட்டம்விட்டான். அப்போது கிச்சனில் இருந்து குனிந்த தலை நிமிராமல் கையில் காபியுடன் வந்த இளங்கிளி அவன் பெட் ரூமில் இல்லாமல் ஹாலில் இருக்க.. அதை கண்டு சற்று நிம்மதி அடைந்தவள் அவன் அவளை பார்ப்பது தெரிந்தும் சட்டென்று மீண்டும் தலையை குனிந்து கொண்டவள் “காபி.. ” என்று அவன் முன் சில்வர் டம்பளரை நீட்டினாள்.
அதை பார்த்தவன் அவளை பார்த்துக்கொண்டே டம்பளரை வாங்கி காபியைப் பருகியவன் “அத்தை எங்க?” என்றான்.
“அத்தையா!? ” என்று நினைத்தவள் அவனைப் பார்க்க..
“உன்னோட அம்மா எனக்கு அத்தை தானே.. ” என்றான் .
“ம்ம்.. உள்ள.. உள்ள இருக்காங்க..” என்றாள்.
“கூப்பிடு டி .. ” என்றான் .
“டி… யா.. “என்று அதிர்ந்தவள் திரும்பி கிச்சன் நோக்கி நடக்க.. அதற்குள் விசாலாட்சியே அங்கு வந்துவிட்டார்.
“சொல்லுங்க மாப்பிள்ளை ” என்றார்.
“நீங்களும் கிளம்பி எங்களோட வந்திருங்க” என்றான்.
“உங்க வீட்டுக்கா ” என்றார் அவர் புரியாமல்.
“ஆமா ஏன்?” என்றான் காபியை பருகியபடியே.
“நா எப்படி.. ” என்றார் தயக்கமாக.
“ஏன் நீங்க அங்க வந்து இருக்கலாமே” என்றான் நடந்துகொண்டே ..
“இல்ல நான் வரல மாப்பிளை. இங்கையே இருக்கேன்” என்றார்.
நின்றவன் திரும்பி அவரை கேள்வியாகப் பார்க்க..
அவன் பார்வையை புரிந்து கொண்டவர் “பொண்ணை கட்டிக்கொடுத்த வீட்ல வந்து இருக்குறது நல்லா இருக்காது. அதுவுமில்லாம என் புருஷன் உங்க கிட்டே கை நீட்டி காசு வாங்கிட்டார். கடன் வாங்குன வீட்ல இருக்க எனக்கு இஷ்டம் இல்ல.. ” என்று மனதில் இருந்தது வெளிப்படையாக அவனிடம் சொல்லிவிட..
அவரை அழுத்தமாக பார்த்தவன் “சரி அப்போ நாங்க கிளம்பறோம் ” என்று காபி கப்பை அங்கே இருந்த ஸ்டூலில் வைத்தான்.
இளங்கிளிக்கு திக்கென்று இருந்தது தன் அம்மாவும் இல்லாமல் இவனுடன் தான் தனியாக சொல்லவேண்டுமா என்று இருந்தது அவளுக்கு. போதாத குறைக்கு அவளை இழுத்து மச்சத்தில் முத்தம் வேறு வைத்து அவளை மிரளவல்லவா வைத்திருக்கிறான் இந்த ராவண்.
அவள் பார்வையை கண்டு மெல்ல சிரித்தவன் “போலாமா?” என்றான்.
“ஹா! இன்னும்.. இன்னும் டிரஸ் எடுத்து வைக்கல.. ” என்றாள் அவசரமாக.
“இங்க வரும்போது போட்டுக்க வேணும் இல்ல , அதெல்லாம் இங்கையே இருக்கட்டும் ” என்றவன் “அப்போ நாங்க கிளம்புறோம் ” என்று முன்னே நடக்க..
அவளோ தன் தாயை தவிப்போடு பார்த்தாள் . அவருக்கோ எதுவும் பேச முடையாத நிலை . மகளை அணைத்துக்கொண்டு விடுவித்தவர் . ” இனி இது தான் உன் வாழ்க்கை வாழப்பழகிக்கோ” என்று அவளுக்கு தைரியம் சொல்ல நினைத்து தோற்றுப்போனவர் வாசல் வரை வந்தார் இருவரையும் வழி அனுப்பி வைக்க.
அவனது டிரைவர் வந்து ராவணுக்கு கார் கதவை திறந்து விட..
அதில் ஏறப்போனவன் “நாளைக்கு இந்த வீட்டை கவனிச்சுக்க ஆட்கள் வருவாங்க. நிரைய வேலை இருக்கு இந்த வீட்ல ” என்றான்
இருவரும் அவனை புரியாமல் பார்க்க..
“உங்க பொண்ணும் , இந்த வீடும் எனக்கு சொந்தம் மறந்திருச்சா” என்றான்.
விசாலாட்சி பேச்சற்று இருக்க..
“நாளையில் இருந்து நீங்க வேளைக்கு எதுவும் போக வேணாம். இங்க வரவங்களை கவனிச்சிட்டு அவங்களை வேலை வாங்கிட்டு இருந்தா போதும் ” என்று காரில் ஏறிக்கொள்ள..
சுற்றி இருந்த ஆட்கள் எல்லாம் இவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தனர். இளங்கிளியோ தன் தாயை கண்ணீரோடு அணைத்து விடுத்தவள் காரில் வந்து ஏறிக்கொள்ள.. அடுத்த நிமிடம் அங்கிருந்து கார் சிட்டாக பறந்து சென்றது.
கார் கதவில் பல்லி போல அவள் ஒட்டிக்கொண்டு அமர்ந்து இருக்க.. மறுபக்கம் அமர்ந்து இருந்தவன் . அவள் இடையில் கை கொடுத்து தன் அருகில் இழுத்து நெருக்கமாக அமர்த்திக்கொண்டான்.
இளங்கிளி அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவள் காதருகே மெல்ல குனிந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “இனி எப்பவும் இப்படி தான் என் பக்கத்துல உக்காரனும் சரியா.. ” என்றான் .
அவளோ அதிர்ந்தாலும் இனி எல்லாம் அவன் சொல் படி தானே நடக்க வேண்டும் என்று நினைத்தவள் “சரி” என்றுமட்டும் தலையை ஆட்டினாள்.
“தட்ஸ் குட் குட்டிபூன…” என்று அவள் இடையை கட்டிக்கொண்ட படியே அமர்ந்து விட.. அவளும் வேறு வழியே இல்லாமல் அவன் ஸ்பரிசத்தால் எழுந்த உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் நெருக்கத்தில் அமர்ந்து இருந்தாள்
