Home Uncategorizedஏன் இப்படி ராட்சசன் மாதிரி நடந்துக்கிறீங்க மூர்க்கன் 3

ஏன் இப்படி ராட்சசன் மாதிரி நடந்துக்கிறீங்க மூர்க்கன் 3

by Layas Tamil Novel
291 views

மூர்க்கன் 3

 வீட்டிற்கு வந்ததிலிருந்து  விசாலாட்சிக்கும்  இளங்கிலிக்கும் எந்த வேலையும் ஓடவில்லை ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து எங்கோ வெறித்தபடி இருந்தனர்.

  இளங்கிளியின்  கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.  அவள் கண் முன் இராவண் உருவம் தான் வந்து சென்றது அவனை நேரில்  பார்த்தவளுக்கு அவனுடைய தோற்றமும் அதிகாரமும் ஆளுமையும் கண்டு பயத்தில் இருக்க..

 இப்போது அவனே தன் கணவனாக வரப்போகிறான் என்று நினைக்க நினைக்க பயத்தில் அவளுக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது.

அப்படியே தன் அம்மாவை பார்த்தால் அவரும் அழுது கொண்டிருக்க மனது கேட்காமல் எழுந்து அவர் முன்பு வந்து அவர் கையை பிடித்துக் கொண்டாள் .

மாணிக்கத்தின் பொறுப்பற்ற தன்மையால் இன்று தன் மகளின் வாழ்க்கையையே சீரழிக்கும் நிலைக்க அல்லவா தள்ளி இருக்கிறார் இப்படிப்பட்ட ஒருவரையா தான் கல்யாணம் செய்த இத்தனை வருடம் குடும்பம் நடத்தினோம் என்று இருந்தது அவருக்கு.

 கண்களை துடைத்தபடி தன் மகளைப் பார்த்தார் உன் வாழ்க்கையை காப்பாத்த வேற வழியே இல்லையா டி என்று கனத்த இதயத்தோடு கேட்டார் 

 தெரியலமா என்று அழுதால் 

நீயும் தான் என்ன பண்ணுவ..  நீயும் நல்லா  படிச்சிருந்தா  விவரமா எதுவும் யோசிச்சு இருப்ப. நீயே 8வதோட நின்னுட்ட.. அதுக்கும் உங்கப்பனுக்கு உன்னை படிக்க வைக்க அனுப்ப மனசில்லை.. இல்லன்னா ஒரு நல்ல வேலையிலயாவது இருந்திருப்ப.. இப்படி எனக்கு பொண்ணா பொறந்துட்டு நீ தான் கஷ்டப்படுற.  அவன் கேட்ட பணத்தை நம்மால் கொடுக்க முடியாது உங்க அப்பன் அவ்வளவு காசை வாங்கி வச்சிட்டு போயிருக்கான் எனும்போதே அவர் இதயம் வலிப்பது போல இருந்தது.

இருவரும் அமைதியாக அப்படியே அமர்ந்து இருந்தனர்.

கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்த விசாலாட்சி காலையில இருந்து நீ எதுமே சாப்பிடல இரு ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வரேன் என்று எழுந்து கிட்சனுக்குள் சென்றார்.

இளங்கிளியோ அப்படியே அமர்ந்து இருந்தாள்.

சற்று நேரத்தில் வீட்டில் இருந்ததை வைத்து கோதுமை ரொட்டியும், அதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி ஊறுகாயும் கொண்டு வந்து கொடுத்தார்.

நீயும் உக்காரும்மா ரெண்டு பேரும் சாப்பிடுவோம் என்று கையை பிடித்து தன் பக்கம் அமர வைத்தாள்.

இன்னைக்கு தான் நீயும், நானும் ஒன்னா  சாப்பிட போறோன் ஏண்டி…  நாளைல இருந்து அவன் வீட்டுக்கு போயிடுவியா நீ. என்று பெருமூச்சு விட்டவர்.  அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்கப் போறேன்னு நினைக்கும் போதே நெஞ்சு பகீருன்னு வருது டி..  இதுக்கு ஒரு வழியே இல்லையான்னு இருக்குடி எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்றார்.

அம்மா நான் வேணா அவர்கிட்ட ஒரு வார்த்தை பேசி பார்க்கட்டுமா  வேற வழி எதுவும் இருக்கான்னு என்றாள்.

அவன் நாம சொல்றதெல்லாம் கேப்பான்னு நீ நினைக்கிறியா? அவன்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இருக்காது புள்ள என்றார்.

 இருந்தாலும் ஒரு வாட்டி நான் பேசி தான் பார்க்கிறேன் அம்மா என்றாள்.

எப்படி பேசுவ  நீ. அவன் வீடு எங்க இருக்குன்னு கூட  சரியா தெரியாது. அவனை எங்கேனு போய் இந்த நேரத்துல பார்த்து பேசுவ நீ. விடிஞ்சா கல்யாணம்னு வேற சொல்லி இருக்கான் என்றார்.

நாம போக வேணாம் மா அதான் அவன்கிட்டே வேலை பாக்குற ஆளுங்க நம்ம வீட்டை சுத்தி காவலுக்கு நிக்கிறானுங்களே அவனுங்க கிட்டே பேசுவோம் என்றவள் நீ சாப்பிடு மத்தத்தை அப்பறோம் பேசிக்கலாம் என்றவள் அவரோடு சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

பின் வெளியே சென்றவள் அவர்களை கண்காணிப்பதற்காக வீட்டு வாசலில் நின்றிருந்தவனிடம் வந்தாள் 

 அவனோ திரும்பி இளங்கிளியை புரியாமல் பார்த்தான்.

 சார் உங்க பாஸ்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் தயங்கி தயங்கி. அவர்கள் எல்லாம் ராவணன் அப்படித்தானே  அழைக்கிறார்கள். அதையே சொல்லி அவனிடம் கேட்டாள்.

ஒரு நிமிஷம் என்று தன் போனை எடுத்துக் கொண்டு அவளை விட்டு சற்று தள்ளிச் சென்றவன் ராவனுக்கு அழைத்து விஷயத்தை சொன்னான்.

 சரி கொடு என்றான்.

 பாஸ் லைன்ல இருக்காரு என்று அவளிடம் போனை நீக்கி விட்டு அவன் நகர்ந்து சென்றான்.

 அதை வாங்கி காதில் வைத்தவள் ஹ… ஹலோ என்றாள்.

ம்ம்ம்… என்றான்.

 இந்த வீட்ட வித்து வேற ஏதாவது வேலை பண்ணியாச்சு உங்க காசு மொத்தத்தையும் கொடுத்துடுறோம். இந்த கல்யாணம் வேண்டாமே என்றால் தழுதழுத்து குரலில்.

 உன் வீட்டை இன்னைக்கு தேதிக்கு வித்தா ஒரு 40, 50 லட்சத்துக்குள்ள வரும்.  மீதி இருக்கிற ஒரு கோடிய எப்படி கொடுப்ப உன் அம்மா சொன்ன மாதிரி வேலை செஞ்சு வார வாரம் 2000 இல்ல மாசம் 5000 கொடுக்க போறியா என்றான் நக்கலாக.

அவள் பேசாமல் போனை காதில் வைத்து படி நின்றிருக்க..

 இத சொல்லு தான் என்கிட்ட பேசணும்னு சொன்னியா வேற எதுவும் இல்லையா என்றான்.

 எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்றால் அழுதபடி.

ஓஹோ… என்றவன். ஒரு நிமிஷம் போனை வை நான் உனக்கு வீடியோ கால் பண்றேன் நீ அழுறத நான் பார்க்கணும் என்று அவள் பதிலுக்கு காத்திராமல் போனை கட் செய்து விட்டு உடனே வீடியோ கால் செய்தான்.

இளங்கிளிக்கு அந்த வீடியோ காலை  எப்படி அட்டென்ட் செய்வது என்று தெரியவில்லை. அவள் கையில் இருந்த ஃபோனையே வெறித்தபடி அப்படியே நின்று இருக்க

போன் விடாமல் அடிக்கவும் தூரத்தில் நின்றிருந்தவன் வேகமாக அவளிடம் ஓடி வந்து  போனை வாங்கி பார்த்தான். ராவண் வீடியோ கால் என்று வரவும் அவசரமாக அவன் அதை அட்டென்ட் செய்ய…

 நீயேன் போன எடுக்குற அவ எங்க? என்றான் அதட்டலாக.

“பாஸ் அவங்க போன கையில் வெச்சிட்டு பார்த்துட்டு இருந்தாங்க. எப்படி அட்டென்ட் செய்யறதுன்னு தெரியல போல” என்றவன் ஒன் மினிட் பஸ் என்று இளங்கிளியின்  கையில் ஃபோனை   திணித்துவிட்டு சென்றான்.    

வீடியோ காலில் ராவணின் முகம் தோன்றியது. ஒரு கையில் போனைப் பிடித்துக்கொண்டு, மறு கையால் தன் அருகில் அமர்ந்திருந்த கம்பீரமான மைலோவை நிதானமாக வருடிக்கொடுத்தான். 

அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் அவனது கண்கள் வேட்டையாடும் மிருகத்தைப் போலக் கூர்மையாக இளங்கிளியைத் துளைத்தன. அவளோ அவனை போனில் பார்த்தக்கே நடுங்கிவிட்டாள்.

“என்ன… போனைத் தொடக்கூடப் பயமா? இன்னும் நீ அழுதுட்டு தான் இருக்கப் போல!” என்றான் ராவண், அவளது பயத்தை ஒருவித  ரசனையோடு பார்த்தபடி.

“சார்… தயவு செய்து … என்னை விட்டுடுங்க. எங்க அப்பா செஞ்ச தப்புக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்கணும்? இந்த வீட்டை வித்துட்டு நாங்க எங்கயாவது வேலைக்குப் போய் உங்க காச மொத்தத்தையும் தந்துடுறோம்” என்று தழுதழுத்த குரலில் கெஞ்சினாள் இளங்கிளி.

ராவண் ஒரு மெல்லிய ஏளனச் சிரிப்பை உதிர்த்தான். “வேலைக்கா? எட்டாம் கிளாஸ் படிச்ச உனக்கு யாரு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவா? உன் அம்மாவோட கணக்குப்படி பார்த்தா, இன்னும் நூறு வருஷம் ஆனாலும் இந்தக் கடனை உன்னால அடைக்க முடியாது. அதனால தான் உன்னை நான் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டேன். நீ இப்போ எனக்கு சொந்தமானவ… உன் அப்பன் என்கிட்டே வாங்கின பணத்துக்குப் பதிலா என்கிட்ட அடகு வைக்கப்பட்ட ஒரு ‘பொருள்’! நீ..” என்று கறாராகச் சொன்னான்.

அவளால் எதுவுமே செய்ய முடியாத நிலை, இனி தன் வாழ்க்கை அவ்வளவு தான் என்று நினைக்கையில் ஒருவித வெறுமை தான் தோன்றியது அவளுக்கு. 

கண்ணீர் இன்னமும் நிர்க்காமல் வழிய.. அவளை அப்படியே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் ராவண்.

“நீ ஏன் அழுது ரெண்டு பேரோட டைமையும் வேஸ்ட் பண்ற.. நாளைக்கு கல்யாணம் உறுதி ஆகிடுச்சு. போய் படுத்து தூங்கு” என்றான் கொஞ்சமும் இரக்கம் காட்டாமல்.

அவன் பேசப்பேச, அவனது பார்வையின் தீவிரம் இளங்கிளியைச் சுட்டது. அவளது பளபளப்பான கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரும், பயத்தில் துடித்த அவளது உதட்டு ஓரத்து மச்சமும் அவனுக்குள் ஏதோ ஒரு பிடிவாதத்தை அதிகப்படுத்தியது. அவளது அழுகை அவனுக்குள் எந்த இரக்கத்தையும் வரவழைக்கவில்லை, மாறாக அவளைத் தன் வசப்படுத்தும் வெறியையே கூட்டியது.

அவன் மேல் இருந்த பயத்தை ஓரம் கட்டிவிட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள் எச்சிலைக் கூட்டி விழுங்கயபடி 

“யார் நீங்க? ஏன் இப்படி ஒரு ராட்சசன் மாதிரி நடந்துக்கிறீங்க? உங்களுக்கு இரக்கமே இல்லையா? ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க உங்களுக்கு எப்படி மனசு வருது” என்று ஆத்திரமும் அழுகையுமாக இளங்கிளி கேட்க, ராவணின் முகம் சட்டெனக் இருக்கிப்போனது.

“இரக்கமா? அதெல்லாம் என் அகராதியிலேயே கிடையாது டி. நான் நினைச்சதை அடையாம விடமாட்டேன். நீ இப்போ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாலும், நாளைக்குக் காலைல நீ என் பொண்டாட்டி தான்! உனக்கும் எனக்கு கல்யாணம் நடக்கணுமா? வேணாமான்னு நீயே இதை பாத்துட்டு முடிவு பண்ணிக்கோ” என்றவன், சட்டெனக் கேமராவைத் திருப்பினான்.

அங்கே அவனுக்கு எதிரே , கைகள் கட்டப்பட்ட நிலையில் அவளது தந்தை மாணிக்கம் ரத்தக் காயங்களோடு பயத்தில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்த இளங்கிளிக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“அ.. அப்பா! நீங்க எப்படி அங்க? உங்க உடம்பெல்லாம் எப்படி இவ்ளோ காயம் ஆகிருக்கு” பதறினாள்.

போனை தன் பக்கம் திருப்பி அவள் பதறிய முகத்தைப் பார்த்தவன்.

“தோ பாரு … உன் அப்பா இங்க தான் இருக்காரு. இப்போ என்கிட்ட ரெண்டு ஆப்ஷன் இருக்கு. ஒன்னு, விடிஞ்சதும் நீ என் பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு வரணும். இல்லையா, உன் அப்பாவோட உடம்பு உன் வீட்டுக்கு வரும். அவரோட உயிர்க்கு நநான் கேரண்டி இல்ல! அது நீ சொல்லப்போற பதில்ல தான் இருக்கு. எது வேணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்று கர்ஜித்தான் ராவண்.

ராவண் பேசியதில் இளங்கிளி அதிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் வார்த்தையில் ஒரு வித உறுதி இருந்தது. சொன்னதை செய்துவிடுவான் என்ற உறுதி அது. அதை அவளும் உணர்ந்தாள்.

“உங்கள கெஞ்சி கேக்குறேன் … அப்பாவை ஒன்னும் செஞ்சிடாதீங்க…” என்று அவள் கதற, ராவண் அதிகாரத் தோரணையில் இடைமறித்தான். “என் முன்னாடி அழாத டி … உன் கண்ணீருக்கு என்கிட்ட மதிப்பில்லை. நாளைக்குக் காலைல எட்டு மணிக்குக் கார் உன் வீட்டு வாசல்ல நிக்கும். மறுபேச்சு பேசாம ஏறி வந்திடணும், புரிஞ்சுதா? மீறி ஏதாவது பண்ணனும்னு நினைச்சா, உன் அப்பாவோட சடலத்தை உன் வீட்டு வாசல்ல இறக்கிடுவேன்” என்று எச்சரித்துவிட்டு, அவளது பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான்.

இளங்கிளி சிலையாக உறைந்து நின்றாள். அவளது அமைதியான வாழ்க்கையில் அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளத் தெரியாத ஒரு மூர்க்கனின் புயல் வீசத் தொடங்கிவிட்டது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured