News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தனியா போய் பூவா பறிக்கப் போறேன்..நீயும் வா.. மூர்க்கன் 4

by Layas Tamil Novel
510 views
A+A-
Reset

மூர்க்கன் 4

விடியற்காலைப் பொழுது இளங்கிளிக்கு விடிவைத் தருவதற்குப் பதிலாக, ஒரு புரியாத இருளைத்தான் சுமந்து வந்தது. 

இரவு முழுவதும் தூக்கமில்லாமல் சிவந்திருந்த கண்களைத் துடைத்துக்கொண்டே மெல்ல எழுந்தாள் அவள். சமையலறையில் விசாலாட்சி மௌனமாக எதையோ செய்துகொண்டிருக்க, அந்தச் சிறிய வீடே ஒரு மயான அமைதியில் மூழ்கியிருந்தது. 

இனி தன் வாழ்க்கையில் நடக்கப் போகும் அனைத்தும் ராவண் நினைத்தது போல தான் நடக்கும் என்று நினைக்கையில் விரக்தியாகத் தோன்றியது அவளுக்கு.

தன் தந்தையின் உயிருக்குப் பயந்து, தன் வாழ்க்கையையே ஒரு மூர்க்கனிடம் அடகு வைக்கப் போகிறோம் என்ற எண்ணம் அவளை உள்ளுக்குள் ஆட்டிப்படைத்தது   .  தன் அப்பா இந்த கொடூரனிடம் இருந்து வந்தாள் போதும் என்று நினைவு மட்டுமே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது  

ராவண் சொன்னது போலவே, சரியாக எட்டு மணிக்கு ஒரு கருப்பு நிற சொகுசு கார் அவர்கள் வீட்டின் முன் வந்து நின்றது. 

அதன் பிரம்மாண்டமான தோற்றமே அந்தத் தெருவிற்கு ஒரு மிரட்டலைத் தந்தது. வெளியில் இருந்த ஆட்கள் அந்த கார் இளங்கிளியின் வீட்டில் வந்து நிற்பதை பார்த்து தங்களுக்குள் தெரியாமல் பேசிக்கொண்டனர் 

ஜன்னல் வழியே அதைப் பார்த்த இளங்கிளிக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. தப்பித்துப் போக வழியில்லை, தன் தந்தையின் உயிர் அந்த ராவணின் கையில் இருக்கிறது என்பதை நினைத்தபோது அவளுக்கு உடல் நடுங்கியது. குளித்து முடித்து, தன்னிடம் இருந்த ஒரு சாதாரணப் பருத்திப் புடவையை உடுத்திக்கொண்டாள்.

 எந்த அலங்காரமும் இல்லாத அந்த முகத்தில் தெரிந்த பயமும் தவிப்பும் அவளுக்கு எரிந்து கொண்டிருந்தது. விசாலாட்சியின் கையைப் பிடித்துக்கொண்டு கனத்த இதயத்தோடு காரில் ஏறினாள்.

சற்று நேரத்தில் கார் ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனையின் முன் நின்றது. விசாலாட்சியும் இளங்கிளியும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டனர்.

“ இன்னைக்கு கல்யாணம்னு தானே சொன்னாரு இப்ப ஏன் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க. ஒருவேளை அப்பாவுக்கு எதுவும் ஆயிடுச்சோ” என்று இளங்கிளி உள்ளுக்குள் பதறினால். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை விசாலாட்சிக்கு மாணிக்கம் ராவனிடம் இருப்பது தெரியாது அது தெரிந்தால் அவர் பயந்து விடுவார் என்று  மறைத்து இருந்தால்.

ராவணின் ஆட்கள் அவர்களை வழிநடத்தி விஐபி வார்டிற்கு அழைத்துச் சென்றனர். அந்த அறையின் முன்னே ராவணின் தந்தை, தாய் மற்றும் தம்பி ராஜ் நின்றிருந்தனர். 

அவர்களைப் பார்த்த இளங்கிளிக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை என்றாலும், அவர்களின் தோற்றமே அவர்கள் பெரிய இடத்து மனிதர்கள் என்பதைச் சொல்லாமல் சொன்னது. இளங்கிளியைக் கண்டதும் ராஜ் மெல்லப் புன்னகைத்து, “உள்ள வாங்க…” என்று கனிவோடு அழைத்துச் சென்றான்.

உள்ளே, படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த பாட்டி வேதாவின் கரங்களைப் பற்றியபடி அமர்ந்திருந்தான் ராவண். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். உள்ளே நுழைந்த இளங்கிளியை அவனது கண்கள் மேலிருந்து கீழ் வரை  அளவெடுத்தன. 

அவளது அந்தச் சாதாரணத் தோற்றத்திலும் தெரிந்த ஒரு பளிங்கு போன்ற அழகும், முகத்தில் தேங்கி நின்ற தவிப்பும் அவனை என்னவோ செய்தது.

அவளோ அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை; அவன் மீது கோபமும், வெறுப்பும், அவமானமும் அவள் மனதில் எரிமலை எனத் தகித்துக்கொண்டிருந்தது.

அதை ராவணும் உணர்ந்தான். ஆனால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவளிடம் பேசக் கூட இல்லை.

அவன் பாட்டி வேதா இளங்கிளியை பார்த்தவர். “பரவாயில்லையே… எனக்கு முடியல கல்யாணத்தை பார்க்கணும்னு சொன்னதும் உடனேயே என் பேரன் கல்யாணத்துக்குச் சம்மதிச்சுட்டானே… அதான் சொல்லுவேன்னு நினைச்சேன். காலையில வந்து கல்யாணம்னு நின்னதும் ஏதோ பேருக்கு ஒருத்தியைக் கூட்டிட்டு வருவான்னு நினைச்சேன், ஆனா பரவால்லையே பொண்ணு லட்சணமாத்தான் இருக்கா,” என்று அவளது முக அமைப்பைக் கண்டு வியந்தார்.

ராவண் மெல்ல எழுந்து நின்றான். அவனது அந்த ஆறடி உயரமும், இறுக்கமான முகமும் அந்த அறையையே ஆக்கிரமித்தது. “ ராஜ் அவர வர சொல்லு” என்றான்.

அதிகாரத் தோரணையில். 

அவனது குரல் கேட்டதுமே இளங்கிளிக்குத் முதுகுத் தாண்டில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.  அங்கிருந்த பதிவாளர் முன்னிலையில், வேதா பாட்டியின் சாட்சியாகச் சடங்குகள் தொடங்கின. 

மந்திரங்கள் முழங்கவில்லை, மேளதாளங்கள் இல்லை. ராவண் நீட்டிய தாலியை இளங்கிளி குனிந்த தலை நிமிராமல் ஏற்றுக்கொண்டாள். 

அவன் தாலி கட்டும்போது அவனது விரல்கள் அவள் கழுத்தில் பட்டதுமே, மின்சாரம் தாக்கியது போலச் சிலிர்த்துக்கொண்டாள். அவனோ அவள் முகத்தை பார்த்த படியே மூன்று முடிச்சுகளையும் போட்டான்.

மாலை மாற்றிக்கொண்டு, பதிவேட்டில் கையெழுத்திட்ட அந்த நிமிடம் முதல், இளங்கிளி அந்த மூர்க்கனின் சட்டப்பூர்வமான மனைவியானாள்.

தாலி கட்டி முடிந்த கையோடு பாட்டியைப் பார்த்த ராவண், “இப்போ உனக்கு ஓகேவா? சந்தோஷப்படு… நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்,” என்றான் ஒருவித அலட்சியத்துடன்.

“கல்யாணம் பண்ணிக்கிட்டா போதுமாடா? அவகூடச் சந்தோஷமா சேர்ந்து வாழணும். எனக்குப் பேரன் பேத்திகளை நீ நிறையப் பெற்றுக்கொடுக்கணும். சும்மா நான் சொன்னேங்கிறதுக்காகக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, மறுபடி உன் வேலையே கதினு சுத்தக்கூடாது. உன்னை நம்பி அவ வந்து இருக்கா, அவளைப் பத்திரமா பார்த்துக்கணும்,” என்றார் வேதா.

அவரது அத்தனை கேள்விகளுக்கும் “ம்…” என்று மட்டும் ஒற்றை பதிலை அளித்தவன், “சரி… நான் கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான்.

“எங்கடா போற? இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு!” என்று வேதா அதட்டலாகக் கேட்க, “எனக்கு முக்கியமான வேலை இருக்கு,” என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட்டு, இளங்கிளியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினான். ராஜும் அவனோடு கிளம்பிச் சென்றான். 

அறைக்குள் நின்றிருந்த இளங்கிளிக்கு மட்டும் புரிந்தது, இது ஒரு வாழ்க்கையின் தொடக்கம் அல்ல; ஒரு வேட்டையின் ஆரம்பம் என்று.

பதிவாளர் முன்னிலையில் தாலி கட்டி முடித்த கையோடு, ராவண் ஒருவித இறுக்கத்துடனேயே அங்கிருந்து வெளியேறினான். 

அவன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த இளங்கிளியின் தோள் மீது ஒரு கனிவான கை படிந்தது. அது ராவணின் தாய் பரிமளா.

இளங்கிளியையும் விசாலாட்சியையும் ஒரு ஓரமாக அழைத்துச் சென்ற பரிமளா, இளங்கிளியின் கைகளைப் பற்றிக்கொண்டார். 

படுக்கையில் இருந்த பாட்டி வேதாவும் அவர்களை அருகில் வருமாறு சைகை காட்டினார்.

பாட்டி வேதா மெல்லப் பேசத் தொடங்கினார், “இங்க பாருமா … என் பேரன் பாக்குறதுக்கு வேணா முரடன் மாதிரி தெரியலாம். ஆனா அவன் கெட்டவன் கிடையாது. அவன் சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். அவனுக்கு எல்லாமே நேர்மையா இருக்கணும், நியாயமா இருக்கணும்னு நினைப்பான். மத்தவங்க பண்ற தப்பை அவனால ஏத்துக்க முடியாது, அதான் இந்த வேகம் எல்லாம்.” 

பரிமளா தொடர்ந்தார், “ஆமா இளங்கிளி… ராவண் காசு விஷயத்துல ரொம்ப கராரானவன் தான், இல்லைன்னு சொல்லல. ஆனா அவன் யாருடைய காசையும் அநியாயமா பறிக்க மாட்டான். கொடுத்த காசு கணக்குல தப்பு இருந்தா மட்டும் அவனுக்குக் கோபம் தலைக்கேறிடும். நீ பயப்படுற மாதிரி அவன் ஒரு ராட்சசன் இல்லை. நெருங்கிப் பார்த்தா தான் தெரியும், அவன் மனசுக்குள்ளயும் ஒரு ஈரம் இருக்குன்னு.” என்று ராவண் பற்றி அவர்களுக்கு புரிய வைக்க முயன்றார்.

பாட்டி இளங்கிளியின் முகத்தை வருடி, “உங்க அப்பன் செஞ்ச தப்புக்கு உன்னை இங்க கூட்டிட்டு வந்தது அவனோட பிடிவாதம் தான். ஆனா அந்தப் பிடிவாதத்துக்குப் பின்னாடி உன்னைச் சொந்தமாக்கிக்கணும்ங்கிற ஒரு எண்ணமும் அவனுக்குள்ள இருக்குறதா நான் நினைக்கிறேன். இன்னைக்கு உன்னை உங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கான். 

முறைப்படி அவன் வீட்டுக்கு நீ வரணும். பயப்படாதே… என் பேரன் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டான்,” என்று ஆறுதல் கூறினார்.

ராவணின் ஆளுமையைப் பற்றி அவர்கள் இவ்வளவு உயர்வாகப் பேசியது இளங்கிளிக்கு ஆச்சரியமாக இருந்தது. 

‘எல்லோரிடமும் இவ்வளவு அன்பாக இருக்கும் ஒருவன், தன்னிடம் மட்டும் ஏன் இவ்வளவு மூர்க்கமாக இருக்கிறான்?’ என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது.

விசாலாட்சி தன் மகளின் வாழ்க்கையில் அவள் விருப்பப்படி இதுவரை எதுவும் நடந்ததில்லை அவள் திருமணம் உட்பட இனி வாழப் போகும் வாழ்க்கையாவது அவள் வாழ்க்கையில் நிம்மதி தர வேண்டும் என்று  நினைத்துக் கொண்டார் 

சிறிது நேரத்தில், ராவண் அனுப்பிய அதே சொகுசு கார் இளங்கிளியையும் விசாலாட்சியையும் மீண்டும் அவர்கள் வீட்டிற்கே கொண்டு வந்து விட்டது. 

கழுத்தில் ஏறிய அந்தத் தாலியின் பாரம், அவளது எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை இன்னும் அதிகமாக்கியது. தன் வீட்டு வாசலில் இறங்கிய இளங்கிளி, இனி தன் வாழ்க்கை அந்த ‘ஐராவதனின்’ நிழலில்தான் என்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டாள்.

 மாலை போல இலங்கையின் வீட்டிற்கு இராவண் கார் வந்தது.

வந்ததிலிருந்து தன் அறையில் படுத்து இருந்தவள் வெளியே கார் சத்தம் கேட்கவும் மெல்ல எழுந்து வெளியே வந்தால். 

அந்த காரைப் பார்க்க அவள் வீதியின் நாட்கள் கூடியிருக்க வெளியே வந்தவள் காரில் இருந்து இறங்கிய ராவணை பார்த்து அதிர்ந்து போனாள். அவள் பின்னே வந்த விசாலாட்சியும் ராவண் அங்கே வந்ததும் அவருக்கு வியர்த்து விட்டது.

இருவரும் அதிர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் முன் வந்து நின்றவன் “ வீட்டுக்கு வந்து இருக்கேன் உள்ள வான்னு கூப்பிட தெரியாதா” என்றான்.

விசாலாட்சி தான் அவன் குரலில் அவசரமாக “வாங்க..உள்ள வாங்க” என்றார்.

“கூப்பிட வேண்டியவ இன்னும் அப்படியே தானே நிக்கிறா” என்றான் இளங்கிளியை அழுத்தமாக பார்த்து.

 தன் மகளிடம் நெருங்கி வந்தவர் “ஏய் எல்லாரும் இங்கே பாத்துட்டு இருக்காளுங்க டி அவளுக வாயில பல்ல போட்டு பேசுறதுக்கு முன்னாடி உள்ள கூப்பிடு” என்று அகற்றினார்.

“வாங்க” என்றாள் அவனைப் பார்க்காமலேயே..

ம்ம்ம் என்றவன் அவளை தாண்டி உள்ளே செல்ல அவன் பின்னால் விசாலாட்சியும் இளங்கிளியும் சென்றனர்.

உள்ளே வந்தவன் அவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்தான். இந்த வீடு கட்டி எத்தனை வருஷம் இருக்கும் என்றான்.

“ 70, 80 வருஷம் இருக்கும் என் வீட்டுக்காரரோட தாத்தா பாட்டி வீடு இது” என்றார் விசாலாட்சி.

“ம்ம்ம்… இத இப்ப வித்தாலும் ஒரு 200 கோடிக்கு மேல போகும் தானே” என்றான்.

அவன் சொன்னது கேட்டு இருவரும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள..

“ வீட்டுக்கு வந்தவனை இப்படியா நிக்க வச்சு பேசுவீங்க. குடிக்க எதுவும் கொடுக்கணும்னு என்று தெரியாதா?”  என்று அதட்டினான்.

“உ.. உக்காருங்க” என்றார் விசாலாட்சி.

“என்ன வெரும் மரியாதை மட்டும்தான் வருது. உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணி இருக்கேன் அப்ப நான் உங்களுக்கு என்ன முறை வேணும். அதை சொல்லி கூப்பிட தெரியாதா” என்று மீண்டும் அதற்கான குரலில் அவன் கேட்க.

“இ.. இல்ல உக்காருங்க மாப்ள” என்றார் அவன் அதட்டளில் பயந்து.

ம்ம்ம்  என்று தலையாட்டியவன் விசாலாட்சியின் அருகில் கையை பிசைந்த படி நின்றிருந்த இளங்கிளியைப் பார்த்து “உன்னோட பெட்ரூம் எங்க இருக்கு?” என்றான்.

அவன் கேட்டதும் விறுட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் 

“உன்ன தான் கேட்கிறேன். பெட்ரூம் எங்க?” என்றான்.

“நீ மாப்பிள்ளைக்கு உன்னோட ரூமை காட்டு மா நான் போய் குடிக்க எடுத்துட்டு வரேன்” என்றவர் கிச்சனுக்கு செல்ல..

இளங்களியோ தயக்கத்தோடு அவனை பார்த்தபடி “அங்க  இருக்கு“ என்று கையை நீட்டி அவள் அறையை காட்டினாள்.

“ நான் மட்டும் உள்ள போய் என்ன பூவா பறிக்க போறேன். நீ வா” என்று அவன் முன்னே நடக்க..

அவளோ அவன் பேச்சில் அரண்டு போய் அவனையே பார்த்தவள். சென்றவன் திரும்பி அவளை முறைக்கவும் இனி தப்பிக்க வேறு வழியே இல்லை என்று புரிந்து கொண்டு அவள் அறையை நோக்கி நடந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.