News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

நம்ம குடும்பத்துக்கு தகுதியானவ இல்ல. தப்பு 25

by Sinamika Writes
552 views
A+A-
Reset

தப்பு 25

“டேட்! டேட்! எனக்கு கால் குணமாகிருச்சு.. பாருங்க என்னால நடக்க முடியுது. பூவிழி!.. பூவிழி!.. எங்க போனா அவ ” என்று ராஜேந்திரன் முன்பு சிரித்தமுகமாக நடித்தபடி வந்து நின்றான் யுகேந்திரன்.

பூவிழி தான் அனுப்பிய ஆட்களுடன் செல்லவில்லை என்ற குழப்பத்தில் திரும்பிய ராஜேந்திரனுக்கோ.. இன்ப அதிர்ச்சியாக இருந்தது .

அவன் பூவிழியைக் காணும் ஆர்வத்தில் பேசுவது அவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவளும், காவேரியும்  எங்கே சென்றிருக்கிறார்கள் என்று பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர் “யுகேன்!.. உனக்கு கால் குணமாகிடுச்சா? உன்னால நடக்க முடியுதா?” என்று சந்தோசமாக அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு வந்து கேட்டார்.

“யுகேன் கண்ணா.. ராஜா என் கண்ணையே என்னால நம்ப முடியல டா.. நீ இவ்ளோ சீக்கிரம் குணம் ஆனது எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா?” என்று பர்வதம் வந்து அவனைக் கட்டிக்கொண்டு குரல் தழுதழுக்க பேசினார்.

“அத்தை இதுக்கு எல்லாம் காரணம் பூவிழி தான், அவளால தான் நான் இந்த அளவுக்கு சீக்கிரம் குணமாகிருக்கேன். அவகிட்டே தான் நான் நடக்குறதைக் காட்டணும்னு பாக்குறேன் , நான் எழுந்ததில் இருந்து அவளை கண்ணுளையே காணோமே.. எங்க போனா அவ “என்ற  வீட்டை சுற்றிலும் பார்வையை செலுத்தி பூவிழியைத் தேடுவது போல நடித்தவன் ஓரக்கண்ணால் ராஜேந்திரனைப் பார்த்தான்.

“ஆமா யுகேன், காலைல இருந்து நானும் அவளைத் தான் தேடிட்டு இருக்கேன். வளைகாப்புக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு . ஆரா மெஹந்தி போட ஆளுங்களை வர சொல்றதுக்காக கேட்டிருந்தா. நான் தான் ரொம்ப நேரம் உக்காருமே மருதாணி போட , எதுக்கும் பூவிழிக்கு ஓகேவான்னு கேட்டுட்டு பண்ணிக்கலாம்னு அவளை தான் தேடிட்டு இருந்தேன் ” என்றவர் “கஸ்தூரி.. ஏய் கஸ்தூரி.. “என்று கிட்சேன் நோக்கி குரல் கொடுக்க.

கிச்சனில் இருந்து வேகமாக வெளியே வந்த கஸ்தூரி “சொல்லுங்க அம்மா ” என்றாள்.

“பூவிழி எங்க கிச்சேன்ல இருக்காளா? சொல்ல சொல்லக் கேக்காம மருமடியும் சமைக்க வந்துட்டாளா?” என்றார்.

“ஐயோ! இல்லேங்கலே.. அவ அங்க வரவே இல்ல. காலைல இருந்து நானும் பூவிழியை பாக்கலைங்க ” என்றாள் கஸ்தூரி.

“அங்கையும் இல்லையா?” என்ற பர்வதம் குழப்பமானவர் “எங்க போயிருப்பா?” என்று யோசித்தவர் “ஏண்டி ஆரா நீ எதுவும் அவளைப் பார்த்தியா?” என்றார்.

“இல்லையே ம்மா, நான் இப்போதான் குளிச்சிட்டு வெளிய வந்தேன்.” என்று அவளும் அங்கு வர..

எல்லோருக்கும் அவளைக் காணாது பதட்டம் தொற்றிக்கொண்டது. இருவரைத் தவிர..

பூவிழியை பத்திரப்படுத்தி இருக்கும் யுகேந்திரனும், அவள் எப்படியோ இந்த வீட்டை விட்டு ஒழிந்து விட்டாள் என்ற சந்தோசத்தில் ராஜேந்திரனும் தான்.

“யுகேன்! உனக்கு கால் நடக்க முடியுதா? உன்னால யார் துணையும் இல்லாம நிற்க முடியுதா?” என்று அவன் உடல் குணமான சந்தோசத்தில் வந்த கார்த்த்திகேயன் அனைவரும் ஒருவித இருக்கத்தோடு நின்றிருப்பதைப் பார்த்தவர் “என்ன ஆச்சு ?”என்று ஆராவிடம் கேட்டார்.

“அப்பா பூவிழியை எங்க தேடியும் காணோம். அவ வீட்ல இல்ல ” என்றாள்.

அதைக் கேட்டு அதிர்ந்தவர் “என்ன சொல்றிங்க பூவிழியை காணோமா?” என்றார்.

“ஆமா மாமா, அவ எங்கன்னே தெரியல “என்று கவலையாக இருப்பது போல யுகேந்திரன் நடித்தவன் பதற்றமாக இருப்பது போல காட்டிக்கொண்டான்,

அவன் பதட்டத்தை பார்த்த ராஜேந்திரன் “அவளுக்காக இவன் இந்த அளவுக்கு துடிக்கணுமா என்ன ? சனியன் போகட்டும்னு நிம்மதியா இருக்க வேண்டியது தானே ” என்று நினைத்துக் கொண்டார்.

“ஐயா!  “என்று அப்போது வாசலில் வாட்ச்மென் வந்து நிற்க..

“ஏன் ஆறுமுகம், பூவிழியை நீ எதுவும் பார்த்தியா? அவ காலைல எதுவும் கிளம்பி வெளியே போனாளா?” என்று அவரிடம் விசாரித்தார் பர்வதம்.

“ஆமாம்மா, அவங்க ஒரு ரெண்டு , ரெண்டரை இருக்கும் பின் வாசல் வழியா ஒரு கார்ல ஏறிப்போனாங்க. நான் பாத்ரூம் போறதுக்காக பின்னாடி போன அப்போ தான் பூவிழி அம்மாவைப் பார்த்தேன், அவங்க இதை யுகேன் சார்கிட்ட கொடுக்க சொல்லிட்டு கிளம்பினாங்க ” என்று யுகேனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கையில் இருந்த கவரைக் கொண்டு வந்து யூகேனிடம் கொடுத்தார்.

“கார்ல கிளம்பிப் போனாளா? அதுவும் அந்த நேரத்துக்கு ஏன் கிளம்பிப் போகணும்” என்று சொன்ன பர்வதம் “நீ ஏன் அவளை போக விட்ட.. எங்க யாரையும் கூப்பிட்டிருக்கலாமே” என்றார்.

“இல்லம்மா உங்க எல்லாருக்கும் அவங்க கிளம்பி போறது தெரியும்னு தான் நான் நினைச்சேன்.”என்றார் அவர்.

“எங்களுக்கு.. என்ன டா தெரியும்”என்றவர் யுகேனைப் பார்க்க..

அவனோ ஆறுமுகம் கொடுத்த கவரில் இருந்த பேப்பரை பிரித்து படித்தவன் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தான்,

“யுகேன் என்னப்பா ? என்ன லெட்டெர்ப்பா அது ?” என்று அவனிடம் வந்த கார்த்திகேயன் அவன் தோளைப் பற்றி கேட்க.

“ம.. மாமா.. நீங்களே இதைப் படிச்சுப் பாருங்க. இதை நான் கொஞ்சமும் எதிர்பாக்கல.. ” என்று அப்படியே சோபாவில் பொத்தென அமர்ந்தான்.

அவன் நீட்டிய கடிதத்தை வாங்கிய கார்த்திகேயன் அதில் இருந்ததை சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார்.

“அன்புள்ள மாமாவுக்கு என்னை மன்னிச்சிருங்க . உங்ககிட்டே சொல்லாம இந்த ஊரைவிட்டே நான் போறேன். இனியும் இந்த வீட்ல என்னால நிம்மதியா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டார் உங்க அப்பா ” என்று எழுதி இருந்தது, அதை எழுதியது என்னவோ யுகேந்திரன் தான் , பூவிழி எழுதி இருப்பது போல இதை எழுதி செட்டப் செய்திருந்தான்.

அந்த வார்த்தையை கடிதத்தில் தன்னை பற்றி பூவிழி பேசி இருப்பதை கேட்டதும் ராஜேந்திரனுக்கு பக்கென்றானது. அவர் பதற்றமாக பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவர் அனைவரையும் பார்க்க..

அவர்கள் பார்வை எல்லாம் இவர் மீது தான் படிந்திருந்தது. கார்த்திகேயன் அதற்கு மேல் படிக்கத் தயங்க..

“ஏன் மாமா நிறுத்திட்டீங்க.. சத்தமா படிங்க . அப்போதான் இவர் என் வாழ்க்கையிலும், பூவிழி வாழ்க்கையிலும் எப்படி எல்லாம் விளையாடி இருக்காருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்” என்றான் யுகேந்திரன்.

அவரோ மேலும் அந்த கடிதத்தை படிக்கத் தயங்க..

அதை அவ்ரிடம் இருந்து பறித்த பரவதம் அவரே தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள் “உங்க வீட்டுக்கு.. உங்களுக்கு ஒரு வாரிசு வேணும்ங்குறதுக்காக தான் என்னை உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தார். அதுவும் உங்க வீட்ல வேலை பாக்குற காவேரியோட பெண்ணான என்னைக் கல்யாணம் செய்து வைத்தார், அதுக்கு காரணம் முதல்ல எனக்குப் புரியல.. என் அம்மாவைக் கடத்தி வெச்சு அவங்களை கொன்னுருவேன்னு என்னை மிரட்டி தான்  இந்த கல்யாணத்துக்கு என்னை சம்மதிக்க வெச்சார். அதுவும் ஒரு கண்டிஷனோட.. உங்க குழந்தையை பெத்தெடுக்குற வரைக்கும் தான் நான் இந்த வீட்ல உங்க மனைவியா இருக்க முடியும். குழந்தை பிறந்ததும் எனக்கும், நம்ம குழந்தைக்கும் எந்த சம்மந்தமும் இருக்கக்கூடாதுனு சொல்லி தான் இந்த கல்யாணத்தையே நடத்தி வெச்சார் ” என்று படித்த ஆரா நிமிர்ந்து ராஜேந்திரனைப் பார்த்தாள்.

அவருக்கோ அவள் பார்வையை எதிர் கொள்ளவே முடியவில்லை.

“ம்ம்.. படி ஆரா.. ” என்றான் யுகேந்திரன் தன் அப்பாவை முறைத்துக்கொண்டே.

“டேய் அவ பொய் சொல்லி இருக்கா யுகேன் . உனக்கு நல்லது பண்ண நினைச்சு தான் நான் அவளை உனக்கு கல்யாணம் செய்து வெச்சேன். அவ எதுக்காக இப்படி எல்லாம் எழுதிருக்கான்னும் தெரியல. ” என்று தன் மேல் இருந்த தப்பை மறைக்க முயன்றார் ராஜேந்திரன்

“அப்பா எனக்கு மட்டும் இல்ல. இந்த வீட்ல இருக்க எல்லாருக்கும் தெரியும், பூவிழி ஒரு அப்பாவின்னு, அவளுக்கு சுட்டு போட்டாலும் பொய் பேச வராதுன்னும் தெரியும் ” என்றவன் “படி ஆரா.” என்று கட்டளையாக சொன்னான்.

சரி என்று தலையாட்டிவிட்டு அந்த கொடுத்ததை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள் பூவிழி எழுதியாக சொல்லி ராஜேந்திரன் அவளிடம் எப்படி நடந்து கொண்டார் தன்னை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கிறார் என்று ஒன்று விடாமல் அந்த கடிதத்தில் எழுதி இருந்தது. இது எல்லாம் பூவிழி மறைக்க முடியாமல் யுகேந்திரனின் அதட்டலில் அவனிடம் சொன்ன விஷயங்கள் தான், ஆனால் நேற்று அவளை மிரட்டியது , அவளை இந்த வீட்டை விட்டு போக சொன்னது எதுவும் பூவிழி யுகேனிடம் சொல்லவில்லை.

அவள் தான் சொல்லவில்லை. ஆனால் இவர்கள் தோட்டத்தில் இருந்து பேசியதை கேட்டிருந்தான் யுகேன் . சரி அவளாகவே வந்து தன்னிடம் விஷயத்தை சொல்கிறாளா? இல்லை இந்த வீட்டை விட்டு, தன்னை விட்டு போக முடிவு செய்கிறாளா என்று பார்க்க தான் எதுவும் தெரியாதவன் போல இருந்துவிட்டான்.

ராஜேந்திரன் அனுப்புவதாக பொய்யாக ஒரு மெசேஜை அவள் செல்லுக்கு அனுப்பி அதிகாலை மூன்று மணியை அரைமணி நேரம் முன்பாக அவன் தான் மாற்றி இருந்தான். அவளை அழைத்து செல்ல.. தன் பியேவும், நண்பனுமான பாஸ்கரை வைத்து பூவிழி தங்க இரவோடு இரவாக அனைத்து வேலைகளையும் செய்து அவளை பாதுகாப்பாக அனுப்பி வைத்திருந்தான்,

அதே பாஸ்கரின் உதவியுடன் பூவிழியின் அம்மா காவிரியையும் கண்டுபிடித்து தன் அப்பா அடைத்து வைத்திருந்த இடத்தை ஏற்கனவே கண்டுபிடித்திருந்தவன் தக்க நேரத்தில் அவரை அங்கிருந்து அழைத்து வந்துவிட வேண்டும் என்று காத்திருந்தான், முன்னமே அவரை அழைத்து வந்துவிட்டால் ராஜேந்திரன் உசார் ஆகிவிடுவார் என்று அவனுக்கு தெரியும்,

ஆரா கடிதம் முழுவதையும் படித்துவிட்டு ராஜேந்திரனை வெறுக்கும் பார்வை பார்த்தாள்.

“அண்ணா! இந்த லெட்டர்ல எழுதிருக்குறது எல்லாம் உண்மையா? நீங்க பூவிழியை அந்த அளவுக்கு கஷ்டப்படுத்திருக்கிங்களா? ஏன் அண்ணா இப்படிப் பண்ணுணிங்க. பூவிழி நல்ல பொண்ணு தானே.. நம்ம யுகேனை ஆரம்பத்துல இருந்து அவ எப்படி கவனிச்சுக்கிட்டா.. அவளைப் போய் எப்படி உங்களால .. ” என்று வார்த்தைகள் வராமல் தொண்டையில் சிக்கிக்கொள்ள..

“மச்சான் நீங்க பூவிழிக்கிட்டே நடந்துக்கிட்டதை பார்க்குற அப்போ நீங்க ஸ்ட்ரிக்ட்டான ஆளுன்னு தான் நினைச்சேன். ஆனா இந்த அளவுக்கு நீங்க போயிருக்குறதை என்னாலையே நம்ப முடியல..” என்று கார்த்திகேயனும் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

“ஐயோ! அவ ரொம்ப சின்னப்பொண்ணு,.. நம்ம ஆராவை விடவும் சின்னவ.. அவ இவ்ளோ கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டு இருக்கானு தெரியாம நான் வேற அவளை நோகும்படி எவ்ளோ பேசியிருக்கேன். இந்த சின்ன வயசுல இத்தனையும் மனசுல போட்டுட்டு அவ எப்படி இருந்திருப்பா.. எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா” என்று தான் செய்ததையும் நினைத்து உடைந்து அழத் துவங்கினர் பர்வதம்.

அவரைப் பார்க்கவே அனைவர்க்கும் பரிதாபமாக இருந்தது, பூவிழியின் மீது இந்த சில நாட்களில் அவர் காட்டிய அக்கறையிலேயே அவர் முற்றிலுமாக மாறி இருக்க … அவளின் இந்த பிரிவை உண்மையாகவே பர்வாதத்தாள் ஜீரணிக்க முடியவில்லை.

எல்லோரும் ராஜேந்திரனை கேள்விகளால் துளைத்துக்கொண்டிருக்க..

யுகேந்திரன் மட்டும் எதுவும் பேசாமல் அழுத்தமாக அவரை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தான்,

கைகளை ஊன்றி எழுந்தவன் ராஜேந்திரன் முன் வந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவன் “சொல்லுங்க எதுக்காக இப்படிப் பண்ணுணிங்க. அவள் எதுக்காக என்கிட்டே இருந்து பிரிக்கணும்னு நினைக்குறிங்க.. பூவிழி மேல அப்படி என்ன கோபம் உங்களுக்கு” என்று கேட்டான்.

அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தவர் “அவ நம்ம குடும்பத்துக்கு தகுதியானவ இல்ல. ” என்றார்

“அப்பறோம் ஏன் எனக்கு கல்யாணம் செய்து வெச்சீங்க,, அவ தகுதி இல்லாதவன்னு தெரிஞ்சும் அவ வயித்துல என்னோட வாரிசை வளர எப்படி சம்மதிச்சிங்க? அப்போ எல்லாம் அவ நம்ம குடும்பத்துக்கு தகுதி இல்லாதவன்னு உங்களுக்குத் தெரியலையா?” என்றான்.

அவன் கேள்விகளில் இருந்த காரணம் சரியானதே, ஆனால் அதை விளக்கி சொல்ல ராஜேந்திரனுக்கு விருப்பம் இல்லை.

அவர் வாயை திறக்காமல் அழுத்தமாக அவனையே பார்க்க..

‘நீங்க சொல்ற காரணம் பொய் . பூவிலியையும், அவ அம்மாவையும் வெறுக்க வேற ஏதோ விஷயம் இருக்கு. அது என்னனு சொல்லுங்க ?” என்று  அவர் தோள்களைப் பற்றி உலுக்கினான்.

அவன் கையை தட்டி விட்டவர் “எனக்கு அவளைப் பிடிக்கல.. அவ நம்ம குடும்பத்துக்கு தகுதி ஆனவ இல்ல.. அதான் அவளை இங்க இருந்து அனுப்பணும்னு நினைச்சேன் . இவ்ளோ தான் காரணம் போதுமா? இதுக்கு மேல யாரும் என்கிட்டே எதுவும் கேட்காதீங்க.’ என்றவர் அங்கிருந்து தன் அறைக்கு சென்று கதவை அடைத்துவிட்டான்.

“இவரை இப்படியே விடக்கூடாது. கூடிய  சீக்கிரத்துலையே இவர் வாயலையே உண்மையை சொல்ல வைக்கணும் ” என்று நினைத்தவன் பூவிழியின் பூர்விகம், காவேரி பற்றிய விபரங்களை சேகரிக்க முடிவு செய்தான்,

“ஆரா.. இன்னிக்கு இருந்து நீ மாமா கூட ஆபீஸ்க்கு போ.. பாஸ்கர் உனக்கு ஒர்க் எல்லாம் சொல்லிக்கொடுப்பான். எனக்கு நிறைய விஷயம் தெரிய வேண்டி இருக்கு. அதை எல்லாம் கண்டு பிடிச்சிட்டு தான் நான் ஆபீஸ் வரதா இருக்கேன் “என்றவன்.

“மாமா நீங்களும், ஆராவும் ஆஃபீஸை பார்த்துக்கோங்க, அப்பா இனிமேல் ஆபீஸ் பக்கம் போகக் கூடாது ” என்றான்.

“டேய் அது உன் அப்பாவோட ஆபிஸ் டா.. அவரையே வேணாம்னு சொல்றது சரி இல்ல.. ” என்றார் பர்வதம்.

“அத்தை நீங்க மறந்துட்டீங்களா? இது எல்லாமே என் அம்மாவோட சொத்து. இந்த சொத்துக்கள் எல்லாம் என் பேர்ல தான் அவங்க எழுதி வெச்சுட்டு இறந்து போய்ட்டாங்க. இந்த சொத்துக்கு அவர் கார்டியன் மட்டும் தான் ” என்றான்.

அதற்கு மேல் அவனிடம் யாரும் எதுவும் பேசவில்லை .

யுகேந்திரன் சொன்னது போல ஆராவும் கிளம்பி ஆபீஸ் போயிருக்க..

“யுகேன் பூவிழியை சீக்கிரம் கண்டு பிடிச்சு வீட்டுக்கு கூட்டி வந்திரு டா. அவகிட்டே நான் மன்னிப்புக் கேக்கணும், அவளை நான் நல்லபடியா பாத்துக்கணும். வாயும் , வயிறுமா வேற இருக்கா. எங்க போனாளோ ..  “என்று அவர் அக்கறையோடு சொல்ல..

“சரி அத்தை ” என்று மட்டும் பதில் சொன்னவன் ராஜேந்திரனை எப்படி தன் வழிக்குக் கொண்டு வருவது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.

அவன் தேடிய கேள்விகளுக்கு எல்லாம் அவனையுமறியாமல் சீக்கிரமே அதற்க்கான விடை அவனைத் தேடி வரப்போகிறது என்று அறிந்திருக்கவில்லை யுகேந்திரன்.

விஷயம் தெரிய வரும்போது மொத்த குடும்பமும் என்ன செய்யப் போகிறது பார்க்கலாம்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.