Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 106

உன் ரகசிய ரசிகை நான் 106

by Layas Tamil Novel
288 views

EPISODE 106

அஜய்யுடன் ஷிவுவிற்கு நடந்த அந்த மறக்க முடியாத சம்பவத்திற்குப் பிறகு ரூபேஷ் ஷிவுவிடம் முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. அவள் இருக்கும் இடம் கூட அவன் வருவதே இல்லை. ரூபேஷின் இந்த பாராமுகம் ஷிவுவிற்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. இருந்தும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இருவரும் எப்போதும் போல ஆஃபீஸ் வந்து போய்க் கொண்டு தான் இருந்தார்கள்.

இந்த நிகழ்விற்குப் பிறகு ஷிவு அஜய் இடம் சுத்தமாகப் பேசுவதை நிறுத்திவிட்டால். அவன் எவ்வளவோ முறை ஷிவுவிடம் வந்து மன்னிப்புக் கேட்டும். “நீ செய்த விஷயம் என் வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் உனக்குத் தெரியுமா?” என்று அவனைத் திட்டிவிட்டு அவனிடம் பேசுவதை அறவே தவிர்த்து விட்டால் ஷிவு.

ராதாவிற்குத் திருமணம் நிச்சயமாகியதால் ஷிவுவிடமும் பத்திரிக்கையைக் கொடுத்து அவளுடைய நண்பர்களுக்கும் கொடுத்து ராதாவின் திருமணத்திற்கு அழைக்கச் சொல்லி அவள் அப்பா பத்திரிக்கையைக் கொடுத்திருந்தார். தன் நண்பர்களிடம் ஆஃபீஸில் தனித்தனியாகச் சென்று பத்திரிக்கையைக் கொடுத்துத் தன் தங்கை திருமணத்திற்கு கண்டிப்பாக வரும்படி சொல்லி அனைவருக்கும் பத்திரிகை கொடுத்துக் கொண்டிருந்தாள். ஆஃபீஸில் அஜய்க்கு மட்டுமே அவள் பத்திரிக்கை கொடுக்கவில்லை.

அதேபோல ரூபேஷுக்குப் பத்திரிகை கொடுக்கலாமா? வேண்டாமா? என்று நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சரி அவனிடம் பத்திரிகை கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று சொல்லி ரூபேஷைத் தேட…. அவன் இப்போதுதான் கேண்டினுக்குச் சென்றான் என்று அவள் தோழி சொல்லவும், சரி என்று கேண்டினுக்குச் சென்று அவனிடம் பத்திரிகை கொடுக்கலாம் என்று ரூபேஷைத் தேடி கேண்டினுக்குச் சென்றால் ஷிவு.

கேண்டினுக்கு வந்த ஷிவு ரூபேஷைத் தேட, அவன் ஒரு டேபிளில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தான். நீ பார்த்ததும் நேராக அவன் டேபிளுக்குச் சென்றாள் ஷிவு. ஷிவு தன் முன்னே வந்து நின்றதும் அவளை நிமிர்ந்து பார்த்த ரூபேஷ் ஷிவுவை கேள்வியாகப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்பிக் கொண்டான்.

தான் அவனைத் தான் பார்க்க வந்திருக்கிறோம் என்று தெரிந்தும் தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாமல் திரும்பிக்கொண்ட ரூபேஷைப் பார்த்து ஷிவுவிற்கு கோபம் வந்தது. இருந்தும் அவன் தனக்குச் செய்த உதவியை நினைத்துத் தனக்கு வந்த கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்ட ஷிவு அவன் எதிரிலிருந்த சேரில் அமர்ந்தவள், “ஏன் ரூபேஷ்? என்ன பார்த்தா பேசவே மாட்டேங்குற…. நான் அவ்வளவு பெரிய தப்பு என்ன பண்ணினேன்?” என்று கேட்டால் ஷிவு.

“நீ என்ன தப்பு பண்ணினேன்னு உனக்குத் தெரியாதா ஷிவு?” என்றான் ரூபேஷ். அவன் எதைச் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட ஷிவு. “அது நான் வேணும்னே பண்ணினது கிடையாது ரூபேஷ். நான் சுயநினைவிலேயே இல்லாத போது நடந்த தப்புக்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும் ரூபேஷ்? நான் அன்னைக்கே உன்கிட்டத் தெளிவா சொல்லிட்டேனே அந்தக் விஷயத்தை அப்படியே மறந்துடலாம்னு. நீ இன்னும் அதையே மனசுல வச்சுட்டு இப்படி நடந்துகிட்டா நான் என்ன பண்ண முடியும்?” என்றால் ஷிவு.

“உனக்கு வேணா அது பெரிய விஷயமா தெரியாமல் இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி கிடையாது. இன்னமும் உன்னை நான் மறக்க முடியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கேன். அதனால தான் நீ இருக்கிற பக்கமே நான் தல வச்சு கூடப் படுக்கிறது கிடையாது. இனியும் நான் இருக்கிற இடத்திற்கு எல்லாம் வந்து என்னைத் தொந்தரவு செய்யாமல் இருக்கிறது தான் உனக்கு நல்லது,” என்று சொன்னான் ரூபேஷ்.

“இன்னமும் நீ என்னை உன் மனசுல நினைச்சுட்டு இருக்கிறது தேவையில்லாத வேலை ரூபேஷ். நான் இன்னும் கொஞ்ச நாள்ல என் ஆதி மாமாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நீ வீணா என்னைப் பற்றித் தேவையில்லாத ஆசைகளை உன் மனசுல நினைச்சுகிட்டு உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காத… உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன்,” என்று சொன்னால் ஷிவு.

“உன் ஆதி மாமாவை கட்டிப்பியோ…. இல்லை வேற யாரைவேணா கட்டிக்கோ…. எனக்கு அதுப் பிரச்சினையே கிடையாது. இப்போ எதுக்கு நீ இங்க வந்த…. உன் முகத்திலேயே முழிக்க கூடாதுன்னு சொல்லித்தான் நான் நீ இருக்கிற பக்கமே வராமல் தள்ளி தள்ளிப் போறேன். நீயா எதுக்கு வீணா இப்போ என்கிட்ட வந்து தேவையில்லாமப் பேசிட்டு இருக்க…”

“ச்சே…. நிம்மதியா வந்து ஒரு காபி கூடக் குடிக்க முடியல…. எங்க போனாலும் வந்து இம்சை பண்றா….” என்று சொல்லிவிட்டு அவன் டேபிளில் இருந்து எழுந்து வேகமாகச் செல்ல… ரூபேஷ் தன்னை உதாசீனப்படுத்திவிட்டு செல்வதை ஷிவுவால் தாங்க முடியவில்லை. “நான் எதுக்கு வந்திருக்கிறேன் என்று கூடக் கேட்காமல் அவன் பாட்டுக்கு வாயில வரதையெல்லாம் சொல்லி என்னைத் திட்டிட்டுப் போறான்,” என்று கோபமாக ஷிவுவும் எழுந்து ரூபேஷின் பின்னால் சென்றாள்.

வேகமாக ரூபேஷின் பின்னால் சென்றவள் அவன் முன்னே சென்று அவனை வழிமறித்து நின்ற ஷிவு. “டேய் ரூபேஷ்…. உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க? நானும் போனால் போகுது. அந்த அஜய்யிடம் இருந்து என்னைக் காப்பாத்தி நீ எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்கேன்னு உன்கிட்ட நன்றி சொல்லலாம்னு உன்கிட்ட பேச வந்தா நீ எப்பப் பாரு என்னப் பார்த்து அவாய்ட் பண்ணிட்டுப் போயிட்டே இருக்க…”

“என்ன அவாய்ட் பண்ணினாலும் பரவாயில்லைன்னு ஆஃபீஸில் இருக்கிற எல்லாருக்கும் என் தங்கச்சியோட கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுத்தேன். அப்படியே உன்னையும் கூப்பிடலாம்னு உன்னைத் தேடி இங்கே வந்தேன் பாத்தியா என்ன சொல்லணும்…” என்று அவனிடம் கோவப்பட்டவள் தன் கையில் இருந்த பத்திரிகையை அவன் கையில் திணித்துவிட்டு அங்கிருந்து செல்லப் போனவளின் கையைப் பிடித்து இழுத்தவன்.

அவளை நெஞ்சோடு சேர்த்து இழுத்து நிறுத்தியவன் அவள் கன்னத்தைப் பிடித்து நிமிர்த்தியவன். அவள் கண்களைப் பார்த்தவன் குனிந்து அவள் இதழில் அழுந்த முத்தம் தந்தவன். “இன்னொரு முறை என் முன்னாடி உன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன…. இப்படித்தான் நடக்கும்,” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டவன் அவளை விட்டு வேகமாகச் சென்றான் ரூபேஷ்.

அவன் முத்தம் தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் நின்றிருந்த ஷிவு. கடைசியில் அவன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளைக் கேட்டவள். “என் மாமாவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு என்னடா வந்துச்சு, ஓவர் பொஸசிவ்வா இருக்காத ரூபேஷ். இது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது இல்ல… நீ என்னதான் என்ன லவ் பண்றேன்னு என்கிட்ட எப்படிச் சொன்னாலும். நான் என் மாமாவை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்பதில் உறுதியாக இருக்கேன்,” என்று நினைத்துக் கொண்டால் ஷிவு.


மதுவும் பவனும் முன்பு போல அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதில்லை இப்போது எல்லாம். தினமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் நேரத்தில் சிநேகமாக ஒரு புன்னகை. ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் வேலையில் உதவுவது என்று இருவரும் இப்போது எல்லாம் இருக்கும் தளர்ந்து இருவரும் சற்று நன்றாகத் தான் பழக செய்தனர்.

கதிர் ஒரு முக்கியமான ஃபைலைக் காணவில்லை என்று பவனைக் கத்திக்கொண்டு இருந்தான். “ஏண்டா லூசு… உன்கிட்ட எத்தனை முறை சொன்னேன். அந்த ஃபைல் ரொம்ப முக்கியமானது. இதை வச்சுதான் அந்தக் கிளைன்ட் கிட்ட நம்மளோட அடுத்த ப்ராஜெக்ட் பத்தி எக்ஸ்பிளைன் பண்ணணும். அதை ரொம்பப் பத்திரமாக் வச்சிருன்னு உன்கிட்ட எவ்வளவு முறை சொல்லி இருந்தேன். அந்த ஃபைலை போய்ப் இப்படி மிஸ் பண்ணிட்டு வந்து நிக்கிறியேடா அறிவு கெட்டவனே… உனக்கு ஈவினிங் வரைக்கும் டைம் கொடுக்கிறேன். அதுக்குள்ள அந்த ஃபைலை நீ கண்டுபிடித்துக் கொண்டு வரல. உன்னை இன்னைக்கு வேலையை விட்டுத் தூக்கிடுவேன் இடியட்…,” என்று திட்டிவிட்டு கதிர் தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு கேபினை விட்டு வெளியே சென்றான்.

கதிர் பவனைத் திட்டியதெல்லாம் வெளியில் இருந்தவர்களுக்கு நன்றாகவே கேட்டது. பவன் கதிர் உன்னைத் திட்டிவிட்டுச் சென்ற பிறகு கதிரின் அறையை விட்டு வெளியே வர….. அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முன்பும் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிடத் தன் தலையைத் தொங்க போட்டுக் கொண்டே வேறு எங்காவது ஃபைலை வைத்து விட்டோமா என்று தேடச் சென்றான். பவன் முகத்தைத் தொங்க போட்டுச் சோகமாகச் செல்வதைப் பார்த்த மது உனக்கு உதவலாம் என்று அவன் பின்னாலயே சென்றாள்.

அங்கிருந்த முக்கியமான ஃபைல்கள் எல்லாம் வைக்கும் அறைக்குச் சென்ற பவன் அங்கிருந்து ஒவ்வொரு ரேக்காகத் தான் வைத்திருந்த ஃபைல் ஏதும் இங்கே கலந்திருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்க, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தால் மது. ஃபைலைத் தேடிக் கொண்டிருந்த பவன் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்க்க மது உள்ளே வருவதைப் பார்த்தவன் அப்ப நீ எதுவும் பேசாமல் திரும்பிப் ஃபைல்களைத் தேட ஆரம்பித்தான்.

அவனிடம் தயங்கிக் கொண்டே வந்த மது, “பவன்,” என்று அழைக்க…. மது தன்னை அழைக்கவும் அவளைத் திரும்பிப் பார்த்த பவன், “சொல்லுங்க மது,” என்று கேட்டான். “நீங்க தேடிட்டு இருக்கிறது எந்தப் ப்ராஜெக்ட்டோட ஃபைல்னு சொன்னீங்கன்னா நானும் உங்களுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவேன். அதுக்காகத் தான் கேட்கிறேன்,” என்றால் மது. “**சௌபா கம்பெனியுடைய ப்ராஜெக்ட் ஃபைல் தான் மது. அது சிவப்பு நிற ஃபைல்,” என்றவன், “உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையா…. எனக்குத் தேடிக் கொடுப்பதில்?” என்று கேட்டான் பவன். “அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல பவன். எனக்கு ரொம்பப் பெரிய வேலை எல்லாம் இன்னைக்கு இல்ல…” என்று சொன்ன மது. “சரி நீங்க அங்க பாருங்க நான் இந்த ரேங்க்ல எதுவும் இருக்கான்னு செக் பண்றேன்,” என்று சொல்லிவிட்டு அவள் வேறு பக்கம் சென்று அங்கிருந்து ரேக்கில் அவன் சொன்ன ஃபைலைத் தேட ஆரம்பித்தாள் மது.

இருவரும் மிகவும் தீவிரமாகக் காணாமல் போன ஃபைலைத் தேடிக் கொண்டிருக்க… ஸ்டூல் போட்டு ஏறி ரேக்கின் மேல் இருந்த ஃபைல்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் மது. அடுத்த ஃபைலை எடுக்கப் போக அது எட்டாமல் போகவே காலை உயர்த்தி மது ஃபைலை எடுக்க முயற்சி செய்ய…. அவள் காலை உயர்த்தியதும் ஸ்டூல் அவள் அழுத்தம் கொடுத்ததில் ஆட ஆரம்பிக்க… ஸ்டூல் ஆடவும் மதுவும் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழப் போக….

அவள் விழுவதைப் பார்த்த பவன் வேகமாகக் கையில் இருந்த ஃபைலை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து கீழே விழ இருந்த மதுவை அப்படியேத் தன் கைகளால் தாங்கிப் பிடித்துக் கொண்டான். எப்படியும் அத்தனை உயரத்தில் இருந்து கீழே விழப் போகிறோம் அவ்வளவுதான் என்று நினைத்த மது கண்ணை மூடிக்கொண்டு விழுந்தவள் திடீரென்று காற்றில் மிதப்பது போல உணர… கண்களைத் திறந்து பார்க்க அவள் முகத்திற்கு மிக அருகில் பவனின் முகம் இருக்க அப்போதுதான் உணர்ந்தால் அவன் கைகளில் தான் இருக்கிறோம் என்று. கீழே விழாமல் அவன் தான் பிடித்து இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. இருவரும் முகமும் மிக நெருக்கத்தில் இருக்க… இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

மதுவின் மூச்சுக்காற்று பவனின் முகத்தில் சூடாகப் பட…. அவனுக்கு என்னவோ போல இருந்தது… இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்கள் இருவரின் முகத்தை மிகவும் அருகில் கொண்டு செல்ல…. இருவரின் மூக்கும் உரசி கொண்டது. இருபது மூச்சுக்காற்று ஒருவர் முகத்தில் ஒருவருக்குச் சூடாகப் படர இருவருமே தங்கள் நிலை மறந்தனர்.

மதுவை கையில் ஏந்திய படியே அவள் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்த பவன் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூடப் புரியாமல் அப்படியே நிற்க… அப்போது மதுவையும் பவனையும் நீண்ட நேரமாகக் காணவில்லை என்று நினைத்த ரியா எதற்கும் ஃபைல் ரூமில் பார்க்கலாம் என்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர இவர்கள் இருவரும் நின்ற கோலத்தைப் பார்த்தவள் அப்படியே அதிர்ச்சியாக நின்று விட்டால் ரியா.


துர்கா அலறிய படியே வேகமாகத் தரையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்க…. அவளைச் சுற்றி இருந்தவர்கள் துர்காவை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் அதிர்ச்சியில் துர்காவையே பார்த்துக் கொண்டிருக்க….. அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கயிறு அறுபட்டு துர்கா தரையை நோக்கி வேகமாக வந்தவளை அனைவரும் அதிர்ந்து போய் செய்வதறியாமல் இருக்க …. அவளைக் காப்பாற்றுவதற்காகச் சுற்றி அவர்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று ஆளுக்கு ஒரு புறம் எதுவும் கிடைக்குமா… என்று தேட…

விக்கி தூரத்திலிருந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் தங்கள் ஃபைட் சீனுக்கு உபயோகப்படுத்திய வலையை வைத்து இருக்க…. அதை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தவன் அருகில் இருப்பவர்களை அழைத்து துர்கா விழும் இடத்தில் வலையைப் பிடித்துக் கொண்டு நிற்க வைத்தான். துர்கா தூங்கிக் கொண்டிருந்த கம்பி மெல்ல மெல்ல அறுந்து இங்கும் அங்கும் ஊசிலாடிக் கொண்டு மொத்தமாக அறுந்து விட…. துர்கா வேகமாகத் தரையை நோக்கி வரவும் அவள் வந்து கொண்டிருந்த திசையை நோக்கி அனைவரும் வலையைப் பிடித்து இருக்க…. இந்த வேகத்தில் இடையில் இருந்த பொருட்களின் மீது இடித்து என் கை கால்கள் தலை என எல்லாப் பக்கமும் அடியுடனே கீழே விழுந்தால் துர்கா.

தரையை நோக்கி வேகமாக வந்த துர்கா அடி பட்ட காயங்களோடு சரியாக அந்த வளைக்குள் விழ…. அந்த வலையைச் சுற்றிப் பிடித்திருந்தவர்களுக்கு துர்காவைக் காப்பாற்றி விட்டோம் என்று நிம்மதியாக இருக்க…. ஆனால் வலைக்குள் விழுந்த துர்கா சிறிதும் அசையாமல் அப்படியே விழுந்த மாதிரியே படுத்து இருக்க…. வலையைத் தாண்டி அவள் உடலில் இருந்து ரத்தம் கீழே தரையில் சொட்டியது. அதைப் பார்த்தவர்கள் பதறிப் போய் “துர்காவுக்கு ரத்தம் நிறையப் போகுது. அவ மயக்கம் போட்டுட்டா போல இருக்கு….. அவளுக்கு என்ன ஆச்சு?” என்று பதட்டம் அடைய அவளைப் பிடித்திருந்த வலையை மெதுவாகத் தரையில் விரித்துத் தரையோடு துர்காவையும் படுக்க வைக்க விக்கி வேகமாக வந்து வலைக்குள் குப்புற விழுந்து கிடந்த துர்காவைப் பார்க்க…. துர்கா அசை முடியாமல் அரை மயக்கத்தில் இருந்தால்.

அவளைத் திருப்பிப் படுக்க வைத்த விக்கி துர்காவின் முகத்தைப் பார்க்க…. துர்காவின் தலை, கை கால்கள் எல்லாம் ரத்தமாக இருந்தது. வேகமாகத் துர்காவைத் தூக்கிய விக்கி விவேக்கிடம் காரை எடுத்துச் சொல்லி துர்காவை காரின் பின் சீட்டில் படுக்க வைத்து ஹாஸ்பிடலுக்கு விரைந்தான் விக்கி. துர்காவுடன் ஹாஸ்பிடல் செல்வதற்கு முன் விக்கி லதாவை அழைத்து இந்த விபத்து எப்படி நடந்தது என்று தீவிரமாக விசாரிக்கச் சொல்லி கட்டளை இட்டுவிட்டு, “நான் வரும் வரைக்கும் இந்தச் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து யாருமே வெளியே செல்லக்கூடாது. அதுவரைக்கும் அனைவரையும் உள்ளேயே வைத்து லாக் செய்து விடச் சொல்லி கட்டளை இட்டுவிட்டு,” விவேக் உடன் ஹாஸ்பிடலுக்கு விரைந்தான் விக்கி.

டென்மார்க்கிலேயே மிகப்பெரிய பிரபலமான மருத்துவமனையில் துர்காவைக் கொண்டு வந்து எமர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்தான் விக்கி. அவனுடன் விவேக்கும் இருக்க அவளுக்குச் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் எமர்ஜென்சி வார்டுக்கு விரைந்தனர். விக்கி தன் மொபைலில் முதலில் ஆதிக்கும், போதிக்கும் இன்பார்ம் செய்தவன். பிறகு கதிரிடம் சொல்லி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லச் சொல்லிவிட்டுப் போனை வைத்து துர்காவிற்கு ட்ரீட்மென்ட் செய்த டாக்டருக்காக வெயிட் செய்து கொண்டிருந்தான்.

துர்காவோட அவசரமாக வெளியே வந்த டாக்டர், “அவர் தலையில் பயங்கரமாக அடிபட்டு இருக்கிறது. காயம் நல்ல ஆழமாக இருக்க ரத்தம் நிறைய வெளியேறி இருக்கிறது. அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்யறதுக்கான ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் சீக்கிரமா முடிச்சிடுங்க,” என்று சொல்லிவிட்டு அவளை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். விவேக்கை அங்கேயே இருக்க வைத்துவிட்டு துர்காவிற்கு ஆபரேஷன் செய்வதற்கான ஃபார்மாலிட்டீஸ்கள் என்னென்ன என்று பார்ப்பதற்காக விக்கி சென்று விட்டான். விவேக் அங்கே ஆபரேஷன் தியேட்டர் முன்பு காத்துக் கொண்டிருந்தான். ஃபார்மலிட்டீஸ்கள் எல்லாம் முடித்துக் கொண்டு வெளியே வந்த விக்கி அவனிடம் வந்து, “என்னாச்சு விவேக்? டாக்டர் எதுவும் சொன்னாங்களா?” என்று கேட்டான் விவேக்கிடம்.

“ஆமா விக்கி. துர்காவிற்கு விபத்து நடந்ததுல நிறைய ரத்தம் போயிட்டதுனால அவளுக்கு உடனடியா ரத்தம் தேவைப்படுதுன்னு சொல்லி பிளட் பேங்குக்கு இன்பார்ம் பண்ணி இருக்கிறதா சொன்னாங்க. நமக்கும் இங்கே யாராவது தெரிஞ்சவங்க இருந்தாங்கன்னா அவங்க மூலமா துர்காவிற்கு ரத்தம் கொடுப்பதற்காக நம்மை முயற்சி பண்ணச் சொன்னாரு விக்கி… ஆனா எனக்கு இங்கே யாரைத் தெரியும்? அதனால் தான் நீ வந்த பிறகு சொல்லிக்கலாம்னு வெயிட் பன்னிட்டு இருந்தேன்,” என்றான் விவேக். “பிளட் வந்தாள் தான் துர்காவிற்கு ஆபரேஷனே பண்ண முடியும். டிலே பண்ணப் பண்ண அவ உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டுப் போறாரு விக்கி,” என்று விவேக் பதட்டமாகச் சொன்னான்.

“சரி நான் ஆதிக்குக் கால் செய்றேன்,” என்று சொல்லிவிட்டு துர்காவின் பிளட் குரூப் இங்கே வேறு எங்கும் கிடைக்குமா என்று பார்க்கலாம் என்று விக்கி முயற்சித்துக் கொண்டு இருக்க… துர்காவின் பிளட் குரூப் AB-. இது ரொம்ப ரொம்ப ரேர் பிளட் என்று விக்கிக்கு ஏற்கனவே தெரியும். ஆதியிடம் விபரத்தைச் சொல்லிவிட்டு அவன் சொன்ன இடங்களுக்கு எல்லாம் கால் செய்து AB- பிளட் குரூப் கிடைக்கிறதா என்று விக்கி முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

அதற்குள் இந்தியாவில் எல்லோருக்கும் விபரம் தெரிந்திவிட… ஆளுக்கு ஒருவராக மாற்றி மாற்றி விக்கிக்கும், ஆதிக்கும் கால் செய்து துர்காவின் நிலை குறித்து விசாரித்துக் கொண்டு இருந்தனர். விசாலாட்சியால் துர்காவிற்கு அடிபட்டு சீரியஸ் ஆக ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து பதட்டம் தாங்க முடியவில்லை. அதிர்ச்சியில் அவர் இடிந்து போய் விட்டார். “என் மகனுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனதில் இருந்து யாருக்காவது எதுவும் ஆகிட்டே இருக்கு….. ராதாவிற்கு காலில் காயம் ஏற்பட்டு இப்போதான் அவ கொஞ்சம் கொஞ்சமாக் குணம் ஆகிட்டு வாரா… இப்போ துர்காவிற்கு இப்படி ஆகிடுச்சு… கடவுளே நாங்க யாருக்கு என்னக் கெடுதல் பண்ணினோம். எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது…. அவ பிளட் குரூப் வேற கிடைக்காமல் அங்கே ரொம்ப ஆபரேஷன் பண்ணாமல் இருக்காங்களே…,” என்று புலம்பித்தீர்த்தார். அவரைச் சமாதானம் செய்ய முடியாமல் அங்கு இருந்த அனைவரும் திணறினார்.

துர்காவின் பிளட் குரூப் கிடைக்காமல் ஆபரேஷன் டிலே ஆகிறது என்று செண்பகம் கேள்விப்பட்டதும் அவள் பிளட் குரூப் என்ன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டவர். உடனே ஆதிக்கு அழைத்தார் செண்பகம். துர்காவிற்கு ஆக்சிடென்ட் ஆன விஷயம் தெரிந்ததும் ஜெர்மனில் இருந்து உடனே ஆதி கிளம்பி விட்டதால் அவன் பிளைட்டில் இருந்ததால் அவன் போன் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது. பெர்லினில் (ஜெர்மனில் உள்ள ஒரு சிட்டியின் பெயர்) இருந்து டென்மார்க் கிளம்பிய ஆதி அடுத்த ஐம்பதுஐந்து நிமிடத்தில் டென்மார்க் ஏர்போர்ட் வந்தவன் அங்கு ஏற்கனவே அவனுக்காகக் காத்திருந்த அவனது டிரைவர் ஆதியைக் கூட்டிக் கொண்டு துர்கா இருந்த ஹாஸ்பிடலுக்குச் சென்றான்.

விக்கியும் விவேக்கும் எவ்வளவோ முயற்சி செய்தும் மெயின் ஆபரேஷனுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் மிகவும் திண்டாடினர். துர்காவிற்கு ஆபரேஷன் செய்யத் தேவையான அளவு பிளட் கிடைக்காதது அதற்கு காரணமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் எந்த பிளட் பேங்கில் துர்காவுடைய ஏ பி நெகடிவ் ஒத்துப்போவது போல அவளுக்குக் கிடைக்கவே இல்லை.

ஆதி ஹாஸ்பிடல் வரும் பொழுதே தன்னுடன் ஒரு நபரை அழைத்து வந்திருந்தான். விக்கி ஆதியைப் பார்த்ததும், “ஆதி வந்துட்டியா? நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம். எங்கனால ப்ளட் அரேஞ்ச் பண்ண முடியல ஆதி. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. துர்காவிற்கு எதுவும் ஆயிடுக் கூடாதுடா. ஏதாவது பண்ணு,” என்று சொல்லிக் கொண்டிருக்க…. “நீ கவலைப்படாத விக்கி,” தன் அருகில் இருந்த நபரை காட்டி, “திஸ் இஸ் மிஸ்டர் ஸ்டீபன். துர்காவுடைய பிளட் குரூப் தான்,” என்று சொல்ல… ஆதி ரத்தம் கொடுக்கத் தன்னுடன் ஒரு ஆளை அழைத்து வந்திருந்ததைப் பார்த்து விக்கி மிகவும் சந்தோஷப்பட்டான். ஸ்டீபனிடம் வந்து, “தேங்க்ஸ் மிஸ்டர் ஸ்டீபன் வாங்க,” என்று சொல்லி அழைத்துக் கொண்டு போய்த் துர்காவிற்குப் ப்ளட் கொடுக்க விக்கி உள்ளே அழைத்துச் சென்றான்.

ஸ்டீபனை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வந்த விக்கி துர்காவிற்கு ஆபரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்க… ஆதியும் பதட்டமாக ஆபரேஷன் தியேட்டர் முன்பு இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான். கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆப்ரேஷன் நடந்து முடிந்த பிறகு டாக்டர் வெளியே வந்தார். டாக்டரைப் பார்த்ததும் பதட்டமாக ஆதி அவரிடம் சென்று, “டாக்டர்!!! இப்போ துர்கா எப்படி இருக்கா?” என்று பதட்டமாக ஆதி கேட்க…. “நீங்க?” என்று அவர் ஆதியைப் பார்த்துக் கேட்டார்.

“நான் துர்காவோட ஹஸ்பண்ட் ஆதி,” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான் டாக்டரிடம். “ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சிருச்சு மிஸ்டர் ஆதி. அவங்க கண் விழிக்க எப்படியும் 12 மணி நேரத்துக்கு மேல் ஆகும். மயக்க மருந்து வீரியமெல்லாம் குறைந்த பிறகு அவங்களாக ரெகவர் ஆகிக் கண் விழிக்கணும். அதுதான் அவங்களுக்கு நல்லது. அவங்க சீக்கிரமாக் கண்விழிக்கணும்னு நீங்க கடவுள்கிட்டப் பிரார்த்தனை செஞ்சிக்கோங்க…,” சொல்லிவிட்டு, “இன்னும் ஒரு மணி நேரத்தில் அவங்களோட ரூமுக்கு துர்காவைக் கூட்டிக்கிட்டு வந்துருவாங்க,” என்று சொல்லிவிட்டு அவர் சென்றார் டாக்டர்.

ஒரு வழியாக துர்கா ஆபத்துக் கட்டத்தில் இருந்து தாண்டிவிட்டால் என்ற நிம்மதி ஒரு புறம் அனைவருக்கும் இருந்தாலும் அவள் நல்லபடியாகச் சீக்கிரம் கண் விழிக்க வேண்டும் என்ற பதட்டமும் இருக்கத்தான் செய்தது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured