Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 113

உன் ரகசிய ரசிகை நான் 113

by Layas Tamil Novel
228 views

EPISODE 113

பவன் மதுவைத் திட்டி விட்டதிலிருந்து மது அவன் இருக்கும் இடமே வருவதில்லை. அவனைக் கண்டாலும் சரியாகப் பேசாமல் விலகிச் சென்று விடுகிறாள். மது இப்படிப் பாராமுகம் காட்டிச் செல்வது தன்னால் தான் என்று பவனுக்கு நன்றாகவே புரிந்தது. இருந்தும் மது இப்படிப் பேசாமல் இருப்பது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மது செல்லும் இடமெல்லாம் அவளுக்குத் தெரியாமல் அவளைப் ஃபாலோ செய்து கொண்டு தூரத்திலிருந்து அவளைச் சைட் அடித்துக் கொண்டிருந்தான் பவன். அவன் தன்னையே சுற்றி வருவது தெரியாமல் மது அவனைக் காணாமல் தேடிக் கொண்டிருந்தாள். அவனிடம் பேசவில்லை என்றாலும் அவனின் நிலையில் தான் இருந்தால். அதுவும் அவனைக் கண்ணாலாவது பார்த்து விடலாம் என்று நினைத்த மது அவன் எங்கே எல்லாம் இருப்பானோ அங்கெல்லாம் அவனைத் தேடிச் செல்ல, ஆனால் பவன் தேடிச் சென்ற இடங்களில் இல்லாமல் போகவே மதுவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

ஆனால் அவனுக்கு மது தன்னைத் தான் தேடிச் செல்கிறாள் என்பது தெரியாது. அவள் ஆஃபீஸிற்குள் ஏதோ வேலையாக இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தான் பவன். இருவருமே இப்படி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஒருவரை ஒருவர் தேடித் தவித்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.

மது பவனைத் தேடி அலைவதும், பவன் மதுவிற்குப் பின்னால் அவளுக்குத் தெரியாமல் பின்னே சுற்றிக் கொண்டு இருப்பதையும் தன் கேபினிலிருந்து இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தால் ரியா.

“இந்த ரெண்டு பேரும் என்ன லூசா…. இவனுக்கு அவளைப் பிடிச்சிருக்கு…. அவளுக்கு இவனைப் பிடிச்சிருக்கு… அப்புறம் என்ன? மனசுல இருக்குறதைச் சொல்லி ரெண்டு பேரும் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ண வேண்டியது தானே. அதை விட்டுட்டு இப்படி வெளியே சொல்லாமல் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் திட்டிக்கிட்டு, சண்டை போட்டுக்கிட்டு இருந்தா பாக்குற நமக்கு காண்டாகுது. படிக்கிற ரீடர்ஸ்க்கு எவ்வளவு காண்ட் ஆகும்,” என்று சொன்னால் ரியா. ❤️ என்ன ரீடர்ஸ் கரெக்டா படிக்கிற உங்களுக்கும் கடுப்பாகுது தானே…. ❤

இவர்கள் இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்த ரியா, ‘இவங்க ரெண்டு பேரையும் இப்படியே விட்டா சரி வராது. இதுக்கு நம்ம தான் ஏதாவது செஞ்சாகணும்,’ என்று நினைத்தவள் நேராக பவன் இருக்கும் இடம் சென்று அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் மதுவின் முன்னால் நிற்க வைத்தால்.

ஏன் இப்படித் தன்னை இழுத்துக் கொண்டு போய் மதுவின் முன் நிற்க வைப்பாள் என்று பவன் துளியும் எதிர்பார்க்கவில்லை. திடீர் என்று மதுவின் முன்னால் வந்து நிற்கவும் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ரியாவைப் பார்த்து, “ஏய் ரியா! இப்ப எதுக்கு என்னைப் புடிச்சி இங்க இழுத்துட்டு வந்த? உனக்குத்தான் எந்த வேலையும் இல்லை. அதுக்காக வேலை பார்த்துட்டு இருக்கிற என்னைப் புடிச்சு இங்க எதுக்கு இழுத்துக் கொண்டு வந்து இங்கே நிக்க வச்சு இருக்க,” என்று கேட்டான் பவன்.

“இவ்வளவு நேரம் நீ எந்த வேலையும் அப்படி முக்கியமாப் பார்த்துட்டு இருந்தேன்னு எனக்கு நல்லாவே தெரியும் நீ கொஞ்சம்,” என்று சொல்லித் தன் வாயில் கையை வைத்து மூடி அவனுக்குச் சைகை காட்டினால் ரியா. அவள் அப்படிச் செய்ததும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டான் பவன்.

மதுவிடம் திரும்பி ரியா, “மது! ஏன் இன்னைக்கு இங்கேயும் அங்கேயும் சுத்திக்கிட்டே இருக்கே… உன்னோட கேபின்ல உட்கார்ந்து வேலை பார்க்காம,” என்று கேட்டால் ரியா. ரியா இப்படித் திடீரென்று மதுவிடம் கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்த மது, “அதுவா.. அது…. ஒன்னும் இல்லைடி. நான் ஒரு பைலைத் தொலைச்சிட்டேன். அந்த பைலைக் காணோம்னு தான் இங்க எங்காவது இருக்குமான்னு நான் தேடிக்கிட்டு இருக்கேன்,” என்று சொன்னாள் மது.

“ஓஹோ… அப்போ நீ இவ்வளவு நேரம் பைலைத் தான் தேடிட்டு இருந்த அப்படித் தானே,” என்று கேட்டால் ரியா. “ஆமாடி. நான் பைல் தான் தேடினேன். வேற என்ன தேடப் போறேன்,” என்று சொன்னால் மது. “நீ தொலைந்ததாகச் சொன்னியே அந்தப் பைல். அந்தப் பைலை நான் உனக்குத் தேடித் தரட்டுமா,” என்று சொன்னால் ரியா.

அப்படித் திடீரென்று தான் தேடிக் கொண்டிருக்கும் பைலை ரியா தேடித் தருவதாகச் சொன்னதும் மதுவிற்கு ‘அய்யோ’ என்று ஆகி விட்டது. ‘இவ கிட்ட பைலைக் காணோம்னு பொய் சொன்னோம் என்று தெரிஞ்சுதுனா அவ்வளவுதான். இப்ப நான் எந்த பைலை காணோம் என்று சொல்லி அவளைத் தேட சொல்லுவேன். இவ வேற சும்மா இருக்க மாட்டாமல் இப்படி வந்து பவனோடச் சேர்த்து வந்து நிற்கிறாளே….‘ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்ட மது ரியாவிடம், “அது எல்லாம் ஒன்னும் வேணாம் நானே தேடிக்கிறேன். நீ போ! உனக்கு ஏதும் வேலை இருந்துச்சுன்னா பாரு,” என்று சொன்னால் மது.

“எனக்கு இப்போ எந்த வேலையும் இல்ல. இப்போ என்னோட முக்கியமான வேலை…. காணாமல் போன உன்னோடப் பைலைத் தேடி கண்டுபிடிச்சு உன்கிட்ட கொடுக்கிறது தான்,” என்று சொல்லிவிட்டுப் பவனிடம் திரும்பி, “அன்னைக்கு நீ பைலைக் காணோம்னு சொன்னது மது உனக்கு ஹெல்ப் பண்ணா இல்ல….. அது போல நீ இன்னிக்கு அவளுக்கு ஹெல்ப் பண்ணு வா….,” என்று அவன் கையைப் பிடித்து இழுத்து மதுவின் முன் தள்ளினால் ரியா.

மது சங்கடத்தோடு பவனைப் பார்க்க, அவனும் அவளை அதே போலப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். “ஏன் மது பேசாமல் இருக்கே.. என்ன பைலைக் காணோம்னு பவன்கிட்ட சொல்லு அப்பதானே அவன் உனக்குத் தேடி கொடுக்க ஹெல்ப் பண்ணுவான்,” என்றவள். பவனின் தோளில் இடித்து, “டேய்! நீ ஏன்டா சும்மா நிக்கிற? வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே…. உன் வாயைத் தொறந்து மது கிட்ட கேளு எந்தப் பைலைக் காணோம்னு கேளு,” என்று சொன்னால் ரியா.

பவன் மதுவைப் பார்த்துத் தயங்கியவாரே… “ம…. மது! நீங்க எந்தப் பைலை காணும்னு தேடிட்டு இருக்கீங்கன்னு சொன்னா நான் உங்களுக்கு எதுவும் ஹெல்ப் பண்ணுவேன்,” என்று சொன்னான் பவன்.

இந்த இரண்டு மூன்று நாட்களாக பவன் அவளிடம் சரியாகப் பேசாமல் இப்போது வந்து பேசவும், இவ்வளவு நேரம் அவனைத் தான் காணோம் என்று தேடிக் கொண்டிருந்தாலும், அவனாக வந்து அவளிடம் பேசவும் மதுவிற்கு கோபம் வர…. “எனக்கு உங்க உதவி எல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீங்க போய் உங்க வேலையப் பாருங்க,” என்று சொன்ன மது ரியாவிடம் திரும்பி, “ஏய்! உனக்கு வேற எந்த வேலையும் இல்லையாடி… யார் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு பார்க்கிறது உன் வேலையா? போ…. போய்ப் உன் வேலையை பாரு,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக நகர்ந்தாள் மது.

மது தன்னிடம் கோபித்துச் சென்றதும் அதை பார்த்த பவன் ரியாவிடம் திரும்பி, “**இப்போ உனக்குச் சந்தோசமா…. நான் பாட்டுக்குச் சிவனேனு என் வேலையப் பாத்துட்டு இருந்தேன். சும்மா இருந்த என்னைக் கூட்டிட்டு வந்து மது முன்னாடி நிக்க வச்சு அவகிட்ட என்னைத் திட்டு வாங்க வச்சிட்ட இல்ல…. இனிமே நான் உன் கூடப் பேச மாட்டேன். உன் கூட டூ… போ…,” என்று சிறு பிள்ளை போல சொல்லி விட்டு பவன் அங்கிருந்து செல்லப் போக….

அவன் கையைப் பிடித்து நிறுத்திய ரியா, “ஒரு நிமிஷம் இரு. எங்க போற… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா,” என்று சொல்லி அவனை அங்கிருந்து அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் மறுபடியும் மதுவின் முன்பு நிற்க வைத்தவள். “ரெண்டு பேரும் முதல்ல நான் சொல்றதக் கேட்டுட்டு அப்புறம் அவங்க அவங்க வேலையை கண்டினியூ பண்ணுங்க. சும்மா தைய் தக்கண்ணு நீங்க ரெண்டு பேரும் குதிச்சு எந்தப் பிரயோஜனமும் கிடையாது.”

“இங்க பாரு மது! இவ்வளவு நேரம் நீ ஏதோ பைலைத் தொலைச்சிட்டேன்னு சொல்லி காணோம்ன்னு தேடிட்டு இருந்தியே அந்தப் பைல் என்கிட்ட தான் இருக்கு,” என்று சொன்னால் ரியா. திடீரென்று ரியா மது பொய்யாகச் சொன்ன பைல் அவளிடம் இருக்கிறது என்று சொல்லவும் மது ரியாவைப் பார்த்துத் திரு திரு என முழித்தாள்.

“என்ன முழிக்கிற? நீ இவ்வளவு நேரம் தேடிட்டு இருந்த பைல் இவன் தானே…,” என்று தன் அருகில் இருந்த பவனைக் காட்டி கேட்டால் ரியா. அவள் இப்படிச் சட்டென்று கேட்கவும் மது அதிர்ச்சியாகி பவனையும் ரியாவையும் மாறி மாறிப் பார்த்தவள். வார்த்தைகள் தடுமாறிக் கொண்டே, “ஏய் ரியா … என்னடி உளர.. உன்னால சும்மாவே இருக்க முடியாதா? இப்போ தானே உனக்கு எதுவும் வேலை இருந்தா போய்ப் பாருன்னு சொன்னேன். இப்ப எதுக்கு என்ன இவரோடச் சேர்த்து வச்சுப் பேசிகிட்டு இருக்க… உனக்கு வேற வேலையே இல்லையா? நகரு.. நான் போறேன்,” என்று சொல்லிவிட்டு மது அங்கிருந்து செல்லப் போக…

அவள் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய ரியா, “பொய் பேசாதடி… இவ்வளவு நேரம் நீ பவனைத் தான் காணோம்னு தேடிகிட்டு இருந்த…. அதே மாதிரி பவன் உனக்குத் தெரியாம நீ அவனைத் தான் தேடிகிட்டு இருந்தேன்னு தெரியாம உன் பின்னாடி உன்னைப் ஃபாலோ பண்ணி சுத்திக்கிட்டு இருந்தான்,” என்று சொல்லி இருவரையும் ஒருவரிடம் ஒருவர் மாட்டிக் கொடுத்து விட்டாள்.

மதுவும் பவனும் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டிருக்க… “என்ன ரெண்டு பேரும் மாத்தி மாத்தி இப்படி முழிச்சாச் சரியாப் போயிடுச்சா என்ன…. உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தரப் பிடிச்சிருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னை விட உங்க ரெண்டு பேருக்குமே நல்லா தெரியும். ஆனா நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு நாளைக்கு ஒருத்தருக்குத் தெரியாம ஒருத்தர் சைட் அடிச்சுக்கிட்டு இந்த ஆஃபீஸ்ல இருக்குற எல்லாரையும் இம்சை பண்ணிட்டுச் சுத்திட்டு இருப்பீங்க….,” என்று கடுப்பாகக் கத்தினால்…

ரியா பேசியதைக் கேட்டதும் இருவருமே ஒரு சேர, “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணுமே கிடையாது,” சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். ‘இவங்க ரெண்டு பேரும் என்ன லூசா…. ம்ம்ஹும்…. இவங்க ரெண்டு பேரையும் இப்படியே விட்டா சரி வராது. இன்னைக்கு இந்த ஆஃபீஸ் விட்டு ரெண்டு பேரும் வெளியே போகும்போது லவ்வர்ஸாத்தான் போகப் போறீங்க. அதுக்கு இந்த ரியா கேரண்டி,’ என்று சொல்லிவிட்டு அவர்கள் பின்னே சென்றால்.

ரியாவிடம் பேசிவிட்டுத் தனித்தனியாகச் சென்று இருவரும் அவரவர் கேபினிற்குச் சென்று அமர்ந்தனர். அதன் பிறகு மாலை ஆஃபீஸ் முடிந்து வீட்டிற்குச் செல்லத் தயாராகும் வரை இருவரும் தங்கள் கேபினை விட்டு வெளியே வரவே இல்லை. இருவரும் வேலையில் தீவிரமாக இருந்ததால் ஆஃபீஸ் முடிந்து அனைவரும் சென்றது கூடத் தெரியாமல் பவனும் மதுவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரியா மதுவின் கேபினுக்கு வந்தவள். “மது! போலாமா? லேட் ஆயிடுச்சு. என்ன இன்னும் கிளம்பாமல் வேலை பார்த்துட்டு இருக்கே? சீக்கிரம் வா,” என்று மதுவின் முன் இருந்த பைலை மூடி வைத்தாள். வேலை பார்த்துக் கொண்டிருந்த மது ரியாவை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு என்னடி ஆச்சு இன்னைக்கு? ஏன் என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருக்க,” என்றாள் கோபமாக.

“உன்கிட்ட நான் வம்பு பண்ணாமல் வேற யாரு செல்லம் வம்பு பண்ணுவாங்க? சரி சரி டைம் ஆச்சு சீக்கிரமா வா. நான் போய்க் லிஃப்ட் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்,” என்று சொல்லிவிட்டு அவள் கேபினில் இருந்து சென்றாள். ரியா கிளம்பியது மதுவும் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வீட்டிற்குச் செல்லத் தயாரானாள்.

மது கிளம்பி லிஃப்டிற்கு வர சரியாக பவனும் அங்கே வந்தான் வீட்டிற்குக் கிளம்புவதற்காக. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எதுவும் பேசிக் கொள்ளாமல் லிஃப்ட் வருவதற்காகக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் லிஃப்ட் வந்து விடவே முதலில் பவன் உள்ளே செல்ல மது தயங்கிய வாரே வெளியே நின்று இருந்தாள். லிஃப்ட்டிற்குள் சென்று நின்று கொண்ட பவன் மதுவைப் பார்க்க …. அவள் உள்ளே வரத் தயங்கிவாறே நின்று இருந்தால்.

“நீங்க வரிங்களா இல்ல நான் போகட்டுமா,” என்று கேட்டான் பவன். “இல்ல நீங்க போங்க. ரியா வரேன்னு சொல்லி இருக்கா. நான் அவளுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்,” என்று சொன்னாள் மது. சரியாகப் பவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே மதுவிற்கு ஃபோன் வர…. “ஒரு நிமிஷம்,” என்று பவனைப் பார்த்துவிட்டுத் தன் போனை எடுத்துப் பார்க்க ரியாதான் அழைத்து இருந்தால்.

போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவள், “ஏய் ரியா! எங்க இருக்கே? என்னை லிஃப்ட் முன்னாடி தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ எங்க இன்னும் காணோம்,” என்று கேட்டால் மது. “ஏய்! நீ வருவேன்னு நான் லிஃப்ட் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருக்குறப்போ பிரியா வந்தாளா…. நான் அவள் கூடச் சேர்ந்து கீழ வந்துட்டேன். அவளுக்கு ஏதோ வாங்கணுமா… அவளை கடைக்கு வரச் சொல்லி கூப்பிட்டா. அதனால நான் பிரியா கூடப் போறேன். நீ கிளம்பு வீட்டுக்கு. சாரி மது,” என்று சொல்லிவிட்டுப் போனைக் கட் செய்தால் மது.

லிஃப்டை நிறுத்தி வைத்திருந்த பவன் மது, “இப்போ வரிங்களா இல்லை நான் கிளம்பட்டுமா,” என்று கேட்டான் திரும்பவும். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், “நீங்க கிளம்புங்க பவன்,” என்று சொல்லிவிட்டு மது அங்கேயே நின்றாள். “சரி,” என்று சொல்லிவிட்டு பவனும் கதவை மூடப் போக…. அதுவரை அங்கே நின்றிருந்த மது தன்னைச் சுற்றிலும் பார்க்க அந்த ஃப்ளோரில் யாருமே இல்லாமல் தான் மட்டும் தனியாக நின்றது பயமாக இருக்க…. அவள் வேலை பார்க்கும் தளம் 16 வது மாடி…. பவன் கீழே சென்ற பிறகு திரும்பவும் லிஃப்ட் மேலே வர எப்படியும் பத்து நிமிடங்களாவது ஆகிவிடும். அதுவரை இங்கே எப்படி இங்கே தனியாக நிற்பது என்று பயந்தவள் சட்டென்று லிஃப்ட் மூடப் போகும் நேரம் உள்ளே நுழைந்து விட்டாள்.

மது உள்ளே நுழையவும் லிஃப்ட் கதவு மூடவும் சரியாக இருந்தது. அவள் இப்படி அவசரமாக உள்ளே வருவதைப் பார்த்து பவன், “ஏன் மது இவ்வளவு அவசரமா உள்ள வரீங்க…. என்கிட்ட சொல்லி இருந்தா நான் லிஃப்ட் நிறுத்தி வைத்திருப்பேன் இல்ல,” என்றான். மது பவன் முகத்தைப் பார்த்து, “இல்லை பரவாயில்லை நான் தான் உள்ளே வந்துட்டேனே….,” என்று மது சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் முகம் திடீரென்று அதிர்ச்சியில் உறைந்தது. மது எதையோ பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறாள் என்று தெரிந்த பவன் மது, “என்ன ஆச்சு? ஏன்? உன் முகம் இப்படி இருக்கு…,” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

திடீரென்று மது தன் காதுகளைப் பொத்திக் கொண்டு ஆ….. என அலறிய வாரே பவனைப் பார்க்க…. பவனும் மதுவை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்று இருந்தான்.


வடிவு வாசலில் நின்றிருந்த செண்பகம், கனகா, துரை மூவரையும் பார்த்துவிட்டு, “நீங்களும் வாங்க….. நான் சொல்ல வர விஷயத்தை எல்லாரும் என்னன்னு பொறுமையாக் கேளுங்க. நான் சொன்னதைக் கேட்ட பிறகு நீங்க என்ன சொல்றீங்களோ நான் அதற்குக் கட்டுப்பாடு படுகிறேன்,” என்று வடிவு அழுது கொண்டே சொன்னார்….

வடிவு பேசியதைப் புரியாமல் பார்த்த மூவரும் அப்படியே நிற்க.. வடிவு வாசலை பார்த்து யாருடனோ பேசுவதைப் பார்த்த துர்கா வடிவைத் தாண்டி யார் நிற்கிறார்கள் என்று பார்க்க… அங்கே வாசலில் நின்று இருந்தவர்களைப் பார்த்த துர்காவின் முகம் பிரகாசம் ஆனது… அவள் வாசலைப் பார்த்து அம்மா…. என்று சத்தமாக அழைக்க… அவள் யாரை அம்மா என்று அழைக்கிறாள் என்று துர்கா அழைத்தத் திசையில் அனைவரும் திரும்பி வாசலைப் பார்த்தவர்கள் துர்காவைப் பார்த்து, “யாரை அம்மான்னு கூப்பிடுற…,” என்று கேட்க…

துர்கா தன் கையை நீட்டி வாசலை நோக்கி காட்ட…. அங்கே செண்பகம் நின்று இருந்தார். அதைப் பார்த்தவர்கள் திரும்பி துர்காவைப் பார்க்க….

ஆதி துர்கா அருகில் வந்து அவள் கைகாட்டிய திசையைப் பார்க்க அங்கு செண்பகம் நின்றிருப்பதைப் பார்த்தவன் புருவம் சுருக்கிவாறு, “அவங்க தான் உன் அம்மாவா…,” என்று கேட்டான் துர்காவிடம். “ம்ம்ஹும்…. அவங்க என் அம்மா இல்ல. அவங்க பக்கத்துல நிக்கிறாங்களே அவங்க தான் என் அம்மா,” என்று தன் கைகளை கனகாவை நோக்கி நீட்டினாள் துர்கா.

முதலில் துர்கா தன்னைக் காட்டி அம்மா என்று அழைத்ததும். செண்பகத்திற்கு ஒரு நிமிடம் தான் ட்ரெயினில் தொலைத்த தன் மகள் தான் துர்காவோ… என்று நினைத்துச் சந்தோசப்பட்டார். ஆனால் துர்கா தன்னைத் தாண்டித் தன் அருகில் நின்றிருந்த கனகாவைக் காட்டி அவர் தான் தன் அம்மா என்று சொன்னதும் செண்பகத்தின் முகம் அப்படியே வாடி விட்டது.

துர்கா ஆதியிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டு கனகாவின் பின்னிருந்து வந்த துரை துர்கா யாரை அம்மா என்று சொல்கிறாள் என்று அவள் இருந்த இடத்தை எட்டிப் பார்க்க…. கனகாவைத் தாண்டி துரையின் முகம் துர்காவிற்குத் தெரியவும். துரையைப் பார்த்ததும், “ஐ!!! அப்பா….,” என்று தன் கைகளைத் தட்டிக் கொண்டே ஆதியைப் பார்த்து…. “ஆதி…. நான் சொன்ன இல்ல எனக்கு அம்மா அப்பா இருக்காங்கன்னு. அதோ அவங்க தான் என் அம்மா, அவர் தான் என் அப்பா,” என்று சொல்லிவிட்டுத் திரும்பி கனகாவையும் துரையையும் பார்த்து விட்டு…

“அம்மா.. அப்பா… இங்க வாங்க…,” என்று ஆசையாக அவர்கள் இருவரையும் நோக்கித் தன் கைகளை அகல விரித்து அவர்களை அழைத்தாள் துர்கா. கனகாவும் துரையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு என்ன என்று புரியாமல் வாசல் அருகிலேயே நிற்க.

“அப்பா ஏன் அங்கேயே நிக்கிறீங்க என்கிட்ட வாங்க….. இதோ இவ இருக்காளே என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா,” என்று தன் அருகில் நின்றிருந்த கீர்த்திகாவைக் காட்டித் துரையிடம். “நீ என்ன சொன்ன? அம்மா வயித்துல ஒரு குட்டிப் பாப்பா இருக்குன்னு சொன்ன தானே…. பாப்பா அந்தப் பாப்பா தான் எனக்குத் தங்கச்சி.”

“ஆனா இவ சொல்றா இவ தான் எனக்குத் தங்கச்சியாமா…. நீயே வந்து இவ கிட்டேச் சொல்லுப்பா…. ‘அம்மா வயித்துல இருக்குற குட்டிப் பாப்பா தான் என் தங்கச்சி….. நீ இல்லைன்னு’ சொல்லுப்பா,” என்று முகத்தைக் குழந்தை போல வைத்துக் கொண்டு சிறுபிள்ளை போலத் துரையைப் பார்த்து கீர்த்திகாவைப் பற்றி முறையிட்டுக் கொண்டிருந்தாள் துர்கா.

தன் அருகில் நின்றிருந்த கீர்த்திகா துர்கா தன்னை யாரோ போல நினைத்துப் பேசுவதைப் பார்த்தவள் மனம் வெடித்து ஓ…. என கதறிய படியே, “அக்கா….. நான் தான் உன் தங்கச்சி…. வேற யாரும் உன் தங்கச்சி கிடையாது,” என்று அழுதாள் கீர்த்திகா. கீர்த்திகா சொல்வதைக் கேட்ட துர்கா, “போ…. நீ பொய் சொல்ற. நீ என் தங்கச்சி கிடையாது…,” என்று சொன்ன துர்கா திரும்பி கனகாவைப் பார்த்து…

“அம்மா! நீ இங்க வாம்மா….. இங்க வந்து இவ கிட்டே சொல்லு இவ என் தங்கச்சி இல்லன்னு. உன் வயித்துல இருக்குற குட்டிப் பாப்பா தான் என் தங்கச்சின்னு இவ கிட்டே சொல்லுமா,” என்று அழுதாள் துர்கா.

துர்கா பேசியதை எல்லாம் கேட்ட கனகாவிற்குச் சிந்தனைகள் எங்கெங்கோ செல்ல…. அவள் தன்னை அம்மா என்று அழைத்ததும் கனகாவின் கால்கள் சட்டென்று ஓடி வந்து துர்காவைக் கட்டிக் கொண்டு, “அம்மாடீ ஸாரிகா…. உனக்கு இந்த அம்மாவைத் தேடி வர இவ்வளவு நாள் ஆகிருச்சா….,” என்று சொல்லி அழுதார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured