துர்காவை வீல் சேரில் வைத்து லிஃப்ட் வழியாகக் கீழே அழைத்து வந்த ஆதி, தன் அருகில் டைனிங் டேபிளில் அவளை அமர்த்திக் கொண்டான்.
விருந்திற்கு விக்கி, நிலானி, சந்தோஷ், ராதா ஆகிய இரண்டு ஜோடிகளுடன், முத்து, கமலா, ஸ்ரீ, சிவகாமி என அனைவரும் ஆதியின் வீட்டிற்கு விருந்துக்கு வந்திருந்தனர்.
அனைவருக்கும் தடபுடலாகச் சைவம், அசைவம் என இரண்டிலுமே இருக்கும் எல்லா வகையையும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் விசாலாட்சி. அவருடன் சேர்ந்து கனகாவும், செண்பகமும் அவருக்கு உதவி செய்திருந்தனர்.
வாழை இலை போட்டு விருந்திற்குச் செய்திருந்த உணவுகளை எல்லாம் ஒன்று விடாமல் இலையில் பரிமாறி இருக்க. அதையெல்லாம் பார்த்து விக்கி, “இது என்ன கல்யாண விருந்து மாதிரி இத்தனை சாப்பாடு செஞ்சு வச்சிருக்கீங்க? இது எல்லாம் சாப்பிட்டா நான் என்ன ஆகிறது?” என்று கேட்டான்.
“ஒரு நாள் சாப்பிடறதுனால நீ ஒண்ணும் குண்டாயிட மாட்ட. பேசாம சாப்பிடுடா” என்றான் அவன் எதிரில் அமர்ந்திருந்த கதிர்.
“என்ன? ஒரே நாள்ல இவ்வளவு சாப்பாடு! ஏன், சிக்ஸ் பேக் எல்லாம் என்ன ஆகிறது?” என்றான் விக்கி.
விக்கி தன் சிக்ஸ் பேக் பற்றி பேசியதும், அவன் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலானி சிரித்து விட… அவளைப் பார்த்த விக்கி, “எதுக்கு சிரிக்கிற?” என்றான். அவள் வாயில் உணவை வைத்துக் கொண்டு “ம்ம்ஹும்…” என்று தலையை ‘ஒன்றும் இல்லை’ என்பது போல ஆட்ட…
“நீ எதுக்கு சிரிக்கிறன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டியா?” என்றான் விக்கி.
அவன் சொன்னதன் அர்த்தம் விக்கிக்கும் நிலானிக்கும் புரிந்திருக்க, அவள் வெட்கப்பட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.
கதிரின் அருகில் இருந்த கீர்த்திகாவுக்குத் தன் தட்டில் இருந்த மட்டன் துண்டுகளை எடுத்து அவள் தட்டில் வைத்துவிட்டு. கீர்த்திகாவுக்கு மட்டும் கேட்கும்படி, “நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்திக்கோ. அப்பதான் நைட்டு நான் டயர்டாகாமல் இருப்பேன்” என்றான்.
“ச்சி… போடா” என்று கீர்த்திகா கதிர் சொன்னதைக் கேட்டு வெட்கப்பட…
இந்த இரு ஜோடிகளும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த சந்தோஷுக்கு ஏக்கமாக இருந்தது.
இங்கு ராதாவோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு, இலையிலிருந்த ஐட்டங்களை எல்லாம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள்.
ராதா சாப்பிடுவதைப் பார்த்த சந்தோஷுக்கு ஆசையாகத்தான் இருந்தது அவளைப் போலச் சாப்பிட… ‘பாக்குறதுக்கு இவ்வளவு ஒல்லியா இருக்கா குட்டச்சி. ஆனா சாப்பிடுறது பாரு, பெரிய ஆளுங்க ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவதை இவ ஒருத்தியே சாப்பிடுவா போல’ என்று நினைத்துக் கொண்டவன்.
தன் இலையில் இருந்த ஒரு லெக் பீஸை எடுத்து ராதாவின் இலையில் வைத்து, “இந்தா, இதையும் சாப்பிடு” என்றான்.
ராதா சிரித்துக் கொண்டே ‘சரி’ என்று தலையாட்டி, அவன் கொடுத்த லெக் பீஸை எடுத்து இரண்டே கடியில் முழுவதும் சாப்பிட்டு முடித்து வெறும் எலும்பை மட்டும் இலையில் வைத்தாள்.
அவள் சாப்பிடுவதைப் பார்த்ததற்கே சந்தோஷுக்கு வயிற்றில் பசி எடுத்தது போல ஆகிவிட்டது. ‘அவள் சாப்பிடுவதைப் பார்த்தால், நான் சம்பாதிக்கிற எல்லா பணமும் உனக்குச் சாப்பாடு வாங்கி கொடுத்தே சரியா போயிடும் போல இருக்கு’ என்று நினைத்துக் கொண்டான் சந்தோஷ்.
அனைவருக்கும் போதும் போதும் என்னும் அளவிற்கு விசாலாட்சியும் கனகாவும் பார்த்துப் பார்த்துப் பரிமாற… அதையெல்லாம் பார்த்துச் செண்பகம் சந்தோஷப்பட்டார். ‘இந்த நேரம் தன் பெண்ணும் தன்னுடன் இருந்திருந்தால், அவளுக்கும் இது போலவே ஒரு திருமணம் நடந்து அவள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து இருப்பாள் இல்லையா?’ என்று செண்பகத்திற்கும் தோன்றியது.
செண்பகத்தின் முகம் வாடிப் போயிருந்ததை கவனித்த ஆதி, சீக்கிரமே காணாமல் போன செண்பகத்தின் மகளைக் கண்டுபிடிக்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
ஆதி யோசித்தவாறு அமர்ந்திருக்க…. அவன் அருகில் அமர்ந்திருந்த துர்கா தன் இலையில் இருந்த ஸ்வீட்டை எடுத்து ஆதிக்கு வைத்தாள்.
அதைப் பார்த்த ஆதி ஆச்சரியமாக துர்காவைப் பார்த்தவன். “ஏன் துர்கா, நீ ஸ்வீட் சாப்பிடலையா? எனக்கு வச்சுட்ட” என்று கேட்டான்.
“இல்ல… நான் ஏற்கனவே ஒண்ணு சாப்பிட்டேன். நீ சாப்பிடாம ஏதோ யோசனைல இருந்தியா… நான் கூட, கதிர் கீர்த்திகாவுக்குச் சாப்பாடு எடுத்து அவ இலையில் வச்சுட்டு சாப்பிட சொன்னதை நீ பார்த்துட்டு, உனக்கு யாரும் வைக்கலையேன்னு சோகமா இருக்கேன்னு நினைச்சிட்டேன். அதனாலதான் என்னோட ஸ்வீட் எடுத்து உனக்குக் கொடுத்தேன்” என்றால் துர்கா.
துர்கா இதைச் சற்றுச் சத்தமாகவே சொல்லிவிட, கதிரிற்கும் கீர்த்திகாவுக்கும் வெட்கமாகப் போய்விட்டது. இருவரும் எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொள்ள….
ஷிவு துர்காவிடம், “துர்கா… நீ கதிர் மாமா கீர்த்திகாவுக்குச் சாப்பாடு வைத்துத் தானே பார்த்த… ஆனா ராதாவுக்குச் சந்தோஷ் அவர் சாப்பிடாம அவரோட லெக் பீஸ் எடுத்து அவளுக்குக் கொடுத்ததை நீ பாக்கலையா?” என்றால் ராதாவையும் சந்தோஷையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே.
தங்களைச் ஷிவு கவனித்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் சந்தோஷும் ராதாவும் உணர்ந்தனர். அவர்கள் இருவரும் ஷிவாவைப் பார்த்துச் சங்கடமாக நெளிய…
துர்கா திரும்பி ராதாவைப் பார்த்து, “ராதா, ஷிவு சொல்றது நிஜமா?” என்றால்.
ராதா அசடு வழிய சிரித்துக் கொண்டே ஆம் என்று தலையாட்டியவள். சந்தோஷ் இடம் திரும்பி, “இப்போ உனக்குச் சந்தோஷமா? எல்லாரும் முன்னாடியும் என் மானத்தை வாங்கிட்டியாடா வாத்தி?” என்று பல்லை கடித்துக் கொண்டே கேட்க…
“நான் உனக்குக் கொடுத்ததை நீயும் வெட்கமில்லாம வாங்கிச் சாப்பிட்டுத் தானடி? அதுக்கப்புறம் என்ன, தேவையில்லாம என்னைப் பேசுற? ஒழுங்கா வேலையைப் பார்த்து சாப்பிடு” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.
இவர்கள் இருவரும் ஏதோ பேசுவதைப் பார்த்து துர்கா, “அம்மா, நீங்க ரெண்டு பேரும் என்ன பேசுகிறீர்கள்?” என்று கேட்டால்.
உடனே சந்தோஷ் துர்காவைப் பார்த்து, “அது ஒண்ணும் இல்லைங்க துர்கா. ராதாவுக்கு இன்னொரு லெக் பீஸ் வேணுமாம். அதான் என்கிட்டச் சொல்லிட்டு இருந்தா. அவளுக்குக் கேட்கவா கூச்சமா இருக்குன்னு சொல்லி” என்று சந்தோஷ் ராதாவை வார….
ராதா திரும்பிச் சந்தோஷை உரைக்க, துர்கா தன் இலையில் இருந்த லெக் பீஸை எடுத்து ராதாவுக்கு வைத்து, “இந்தா, நீ சாப்பிடு. எனக்கு வேண்டாம்” என்றால்.
“ஐயோ… அக்கா, நீ சாப்பிடு. எனக்குப் போதும். நான் ஏற்கனவே நிறையச் சாப்பிட்டு விட்டேன். நீ தான் ஒண்ணுமே சாப்பிடாம அப்படியே உக்காந்திருக்க பாரு. உன் இலையில எல்லாம் அப்படியே இருக்கு” என்று ராதா லெக் பீஸைத் திரும்ப துர்கா இலையில் வைக்க…
துர்காவின் இலையில் ராதா உணவை வைத்ததும், அதைப் பார்த்த கீர்த்திகாவும், ஷிவ்வும், “என்னடி, நீ மட்டும் எங்க அக்காவுக்குச் சாப்பாடு வைக்கிற? நாங்களும் தான் வைப்போம்” என்று சொல்லிக்கொண்டே தங்கள் இலையில் இருந்த உணவை எடுத்து துர்காவின் இலையில் வைக்க…
அவர்கள் துர்கா இலையில் மாற்றி மாற்றி உணவை வைக்க துர்கா ‘வேண்டாம்’ என்று இரண்டு கையையும் ஆட்டினாள்.
துர்கா ‘வேண்டாம்’ என்று சொல்லவும், அதைப் பார்த்த ஆதி, “துர்காவின் இலையில் நீங்க யாரும் சாப்பாடு வைக்க வேண்டாம்” என்று ஆதி கடுமையாகப் பேச….
துர்கா இலையில் உணவு வைத்துக் கொண்டிருந்த மூவரும் ஆதி சொன்னதைக் கேட்டு அமைதியாகிவிட…
“என் துர்காவுக்கு நான் தான் சாப்பாடு வைப்பேன்” என்று சொல்லி ஆதி தன் இலையில் இருந்து லெக் பீஸை எடுத்து துர்காவுக்கு வைக்க…
துர்காவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
இவர்களை அனைவரும் ஒருவரை ஒருவர் பேசி, சிரித்து, கிண்டல் செய்து கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து ரசித்த பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் மனது நிறைந்தது இருந்தது. இவர்கள் அனைவரும் இதே போல நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டனர்.
அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க… அப்போது வெங்கடாசலம் விசாலாட்சியைப் பார்த்து ஏதோ ஜாடை செய்ய, அவர் ‘சரி’ என்று தலையாட்டிவிட்டுச் சென்றவர், தன் அறைக்குச் சென்றவர் கைகளில் சில காகிதங்களுடன் வெளியே வந்தார்.
அதை நேராகக் கொண்டு வந்து வெங்கடாசலத்தின் கையில் கொடுக்க, அதை வாங்கிய வெங்கடாசலம் துரையிடம் கொடுத்து, “இதை நீ ராதாவிடம் கொடு” என்று சொன்னார்.
அவரைப் புரியாமல் பார்த்த துரை, “இதில் என்ன மாமா இருக்கு?” என்று கேட்க…
“நீ முதல்ல இதை அவங்க கைல குடு, பிறகு சொல்றேன்” என்று வெங்கடாசலம் சொல்ல, ‘சரி’ என்று தலையாட்டிய துரை ராதாவையும் சந்தோஷையும் அழைத்து அவர்கள் இருவருக்கும் தன் கையில் இருந்த பத்திரத்தைக் கொடுத்தார்.
பிறகு வெங்கடாசலம் திரும்பி, கதிரிற்கும் விக்கிக்கும் இதேபோல இரண்டு பத்திரங்களை அவர்கள் இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து கொடுக்க, அதை வாங்கிய மூவரும் அதில் என்ன இருக்கிறது என்று பிரித்துப் படித்தவர்களுக்கு அப்படியே அதிர்ச்சியாகிப் போனது.
மூவரும் ஒரு சேர நிமிர்ந்து வெங்கடாசலத்தைப் பார்க்க… அவர்கள் எதற்காக இப்படி அதிர்ச்சியாக இருக்கிறார்கள் என்று முத்துவின் குடும்பத்திற்கும், சிவகாமிக்கும், துரைக்குமே புரியவில்லை.
முத்து சந்தோஷிடம், “அப்படி என்னப்பா இருக்கு அதுல? ஏன் எல்லாரும் ஒரே மாதிரி அதிர்ச்சியா இருக்கீங்க?” என்று கேட்டார்.
தன் கையில் இருந்த பத்திரத்தைச் சந்தோஷ் முத்திடம் காட்டி, “அப்பா, இதுல சிட்டிலயே மிக முக்கியமான இடத்தில என் பெயரிலும் ராதா பெயர்லயும் ஒரு பெரிய பங்களாவை ரெஜிஸ்டர் பண்ணி இருக்காங்க” என்று சொல்ல….
கதிர் வெங்கடாசலத்தைப் பார்த்து, “அப்பா, நீங்க விக்கிக்கும் சந்தோஷிற்கும் கொடுத்தது சரிதான். ஆனால் எனக்கும் ஏன் அதே மாதிரி ஒரு பத்திரத்தைக் கொடுத்தீங்க?” என்று புரியாமல் கேட்டான் கதிர்.
“கதிர், எனக்கு நீயும் விக்கியும் ஒண்ணுதான். இப்ப அதேபோல ராதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டதால, சந்தோஷ் என் மகன்தான். துரை, அவன் பொண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை தான். நான் அவனுக்குப் பதிலா செஞ்சிருக்கேன். துரை செஞ்சா என்ன, நான் செஞ்சா என்ன?” என்ற வெங்கடாசலம், “நீங்க எல்லாருமே வளர்ந்து பெரிய ஆளா ஆகிட்டீங்க. இன்னும் நீங்க எங்களுடன் நிழல்ல இருக்கணும்னு அவசியம் இல்ல. உங்களுக்காக ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரு தொழில்னு நீங்க அமைச்சுக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன்.. என்னுடைய சொத்துக்களையோ, என்னோட உழைப்பையோ நீங்க வளர்ந்து இருக்கீங்கன்னு யாரும் உங்களைச் சொல்லிடக் கூடாது. அதுக்காகத்தான் முதல் ஏற்பாடாக இந்த வீடு… இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கான பிசினஸை நீங்களே தேர்ந்தெடுத்து செய்வதற்கான எல்லா உதவியையும் நான் செய்வேன்” என்றார் வெங்கடாசலம்.
உடனே ஆதி, “அப்போ என்னை மட்டும் ஏன் பா உங்களோட பிசினஸ் பார்க்கச் சொன்னீங்க?” என்று கேட்டான்.
“டேய் ஆதி, இது நானா உன்னை இந்தத் தொழிலைச் செய்யச் சொல்லி கூப்பிடல… நீயா விருப்பப்பட்டுத் தான் இந்தத் தொழிலை எடுத்து செஞ்சிருக்க… அதனாலதான் உனக்குப் பிடித்த தொழிலையே உனக்கு நான் விட்டுட்டேன்” என்றார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முத்து… “அது எல்லாம் வாஸ்தவம் தான். நீங்க விக்கிக்கும் கதிருக்கும் செய்வது வாஸ்தவம் தான். ஆனால் என் பையனுக்கு…” என்று சொன்னவர்.
துரையைப் பார்த்த முத்து, “என்ன துரை இது? என் பையனுக்கு வரதட்சணை கொடுக்கிறீர்களா?” என்றார் சற்று கோபமாக.
“ஐயோ… முத்து, நீ அவசரப்பட்டு எதுவும் கோவப்பட்டுடாத. எனக்கு இப்போதான் இந்த விஷயம் தெரியும். நானே இதை எதிர்பார்க்கல.. உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அப்படி இருக்க நான் இந்த மாதிரி எல்லாம் செய்வேனா… இது என் மாமா பிரியப்பட்டு செய்கிறார். அதை நான் எப்படித் தடுத்தது ஆகிடும்?” என்று கேட்டார் துரை.
முத்து சொல்ல நினைத்ததையே தான் சந்தோஷும் சொல்ல நினைத்தான். அவன் தன் கையில் இருந்த பத்திரத்தை எடுத்துக்கொண்டு நேராக வெங்கடாசலம் இடம் சென்றவன், “அங்கிள், நீங்க உங்க வீட்டுப் பொண்ணுக்காகச் செய்ய நினைக்கிறது சந்தோஷம்தான். ஆனால் எனக்கு இது வேண்டாம். இது சரி இல்ல” என்று சொல்லி அவர் கையில் பத்திரத்தைக் கொடுக்க…
அவர் அதை வாங்க மறுத்து விட்டு, ராதாவை அழைத்துச் சந்தோஷிடம் நிறுத்தியவர். அவர்கள் இருவரின் கையைப் பிடித்து…. “நான் என்னோட பிள்ளைகளுக்காக அன்பாக் குடுக்குற பரிசு. தயவு செய்து வரதட்சணை என்று பெயரைச் சொல்லி அசிங்கப்படுத்திட வேண்டாம். என் மேல உங்களுக்கு உண்மையாவே அன்பும் மரியாதையும் இருந்தா, இதை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கணும்” என்று சொல்ல…
அவர் அப்படிச் சொன்னதும் சந்தோஷும் ராதாவும் திரும்பி முத்துவைப் பார்க்க….
வெங்கடாசலம் இருக்கும் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தன் குடும்பத்திடம் வந்து இப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அப்படியே கேட்டுவிட்டு, தங்கள் சம்மதத்திற்காக நின்றிருக்கும் அவரைப் பார்த்து ‘வேண்டாம்’ என்றும் மறுக்க முத்துவால் முடியவில்லை. ‘சரி’ என்று சந்தோஷையும் ராதாவையும் பார்த்துத் தலையாட்ட, உடனே ராதா, “மாமா, நீ கொடுத்ததை நான் வேண்டாம் என்று சொல்வேனா? குடு” என்று சொல்லிச் சந்தோஷின் கையில் இருந்த பத்திரத்தை வாங்கி வைத்துக்கொள்ள…
‘இவளை என்ன சொல்வது’ என்று நினைத்த சந்தோஷ் வெங்கடாசலத்தைப் பார்த்து, “அங்கிள், நான் எதுவும் உங்களை கஷ்டப்படுத்துற மாதிரி பேசி இருந்தா, என்னை மன்னிச்சிடுங்க” என்று சொன்னான்.
“இதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்புக் கேக்குற சந்தோஷ்” என்று சொல்லி அவன் தோளைத் தட்டிக் கொடுத்தார் வெங்கடாசலம்.
இதையெல்லாம் பார்த்த விக்கி வெங்கடாசலத்திடம் வந்தவன், “அப்பா, எப்படியும் இவங்க ரெண்டு பேரையும் சமாளிச்ச மாதிரி என்னையும் சமாளிச்சுக்குவீங்க” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட வெங்கடாசலம். “புரிஞ்சா சரி” என்று சொல்லிச் சிரித்தார்.
“ஆனா அப்பா, எனக்கு ஒரே ஒரு கேள்வி” என்றான் விக்கி.
“சொல்லு விக்கி” என்றார் வெங்கடாசலம்.
“ஏற்கனவே அவ்வளவு பெரிய அப்பார்ட்மெண்ட்டை எனக்கு எழுதி கொடுத்திருந்தீங்க. இப்போ எதுக்கு இந்த வீடு? நான் அங்கேயே இருப்பேனே” என்றான்.
“அந்தக் கிஃப்ட் நான் உனக்குக் கொடுத்தது, ஆதியுடன் சேர்ந்து நீ தொழிலை இவ்வளவு தூரம் உயர்த்தி கொடுத்ததற்கு…. ஆனா இது உன்னோட கல்யாணத்துக்காக இந்த அப்பாவும், அம்மாவும் கொடுக்கிற ஆசையான அன்பான பரிசுடா” என்றார் வெங்கடாசலம்.
“அப்பா, நீங்க சொன்ன பதிலை கேட்டு நான் அப்படியே ஃப்ளாட் ஆயிட்டேன். நீங்களே இந்த பங்களாவைத் திருப்பிக் கேட்டாலும் இனிமேல் நான் கொடுப்பதா இல்ல” என்று சொல்லி தன் கையில் இருந்த பத்திரத்தை மார்போடு சேர்த்து விக்கி அணைத்துக் கொள்ள…
இதையெல்லாம் பார்த்த சிவகாமிக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
அவர் அழுவதைப் பார்த்த விசாலாட்சி, சிவகாமியைச் சமாதானம் செய்தவர், “நீ எதுக்காக அழுகுறேன்னு எனக்குப் புரியுது சிவகாமி. உன் பையனை உன் வீட்டில் கூட்டிட்டுப் போய் வச்சு ஆசையா அவனப் பக்கத்துல இருந்து பார்க்கணும்னு நினைச்ச… ஆனா உன் வீட்டுக்கு அவனக் கூட்டிட்டுப் போன மறுநாளே சங்கவியும் உன் புருஷனும் சேர்ந்து உங்க எல்லாரையும் வெளியே அனுப்புனது ரொம்பக் கஷ்டமா தான் நீ இருக்கும். உனக்கு உன்னோட வீட்ல வச்சு அழகு பார்க்க வேண்டிய உன் பையனுக்கு நாங்க செய்கிறோம் என்று ஒரு பக்கம் சந்தோஷமும், இன்னொரு பக்கம் வருத்தமும் உனக்கு இருக்குன்னு எனக்குப் புரியுது” என்று சொன்னார் விசாலாட்சி.
“ஆமா விசாலம், என் புருஷனும், பொண்ணும் இப்படி நடந்துக்குவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல. சங்கவியை கூட ஒரு வகையில விட்டுரலாம். அவ எப்பவுமே அப்படித்தான். ஆனால் என் புருஷனை நினைச்சு பாரேன். ரொம்ப வருஷம் கழிச்சு காணாமல் தேடிட்டு இருந்த என் மகன் நம்ம கண்ணு முன்னாடி வந்து நிக்கிறப்போ, அவன் கிட்ட கொஞ்சம் கூடக் கரிசனம் காட்டாம இப்பவும் அவர் பொண்ணு பக்கமே நிற்கிறப்போ எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு!” என்று சொன்னார்.
“சரி விடு சிவகாமி. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிவிடும்” என்ற செண்பகம், “உன்னோட பையன் கிடைச்சுட்டானு நீ முதலில் சந்தோஷப்படு. அவனுக்காக நீ எவ்வளவு விரதம் இருந்து கோயில் கோயிலா சுத்துனன்னு உனக்கே தெரியும்” என்று அவருக்கு ஆறுதல் சொன்னார் செண்பகம்.
“சரி போதும். ஏன் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல இதையெல்லாம் பேசிச் சங்கடப்படுறீங்க? விடுங்க” என்றார் வெங்கடாசலம்.
அப்போது ஆதி தன் கையில் இருந்த கவரை மூன்று ஜோடிகளிடமும் நீட்ட…
அதைப் பார்த்த மூவரும், “இப்பத்தான் ஒரு விஷயம் செட்டில் ஆச்சு… அதுக்குள்ள நீயும் ஒரு கவர் கொண்டு வந்து நீட்றியே… எனக்கு எதுவும் வேண்டாம். ஏற்கனவே கொடுத்ததே போதும்” என்று விக்கி சொல்ல.
ஆதியிடமிருந்து வாங்கிய கவரைப் பிரித்துப் பார்த்த சந்தோஷும் கதிரும் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டு நின்றிருக்க…
இருவரையும் பார்த்த விக்கி, “ஏன் என்னப்பா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்க? அப்போ உங்களுக்கு இதுல சம்மதமா?” என்று கேட்க…
“எங்களுக்கு முழு சம்மதம்” என்று கதிரும் சந்தோஷும் ஒரு சேர சொல்ல…
“அப்படி என்னடா அந்தக் கவர்ல இருக்கு?” என்று சொல்லி விக்கி அந்தக் கவரைப் பிரித்துப் பார்க்க…. அவன் முகம் ஆதி கொடுத்த கவரில் இருந்த ஹனிமூன் டிக்கெட்ஸை (Honeymoon Tickets) பார்த்ததும் முகம் பிரகாசமானது.
உடனே நிமிர்ந்து ஆதியைப் பார்க்க…
“என்னடா விக்கி, இப்போதான் நான் கொடுத்த கிஃப்ட் வேண்டாம்னு சொன்ன. இப்போ அந்தக் கவரைப் பிரிச்சு பார்த்ததும் சண்முகம் பிரகாசமாகிடுச்சு” என்று சிரித்துக் கொண்டே ஆதி கேட்க…
“ஏண்டா, ஹனிமூன் டிக்கெட்ஸ் தான் கொடுக்கிறேன்னு முதலிலேயே சொல்லி இருந்தா நான் எதுக்கு வேண்டாம் என்று சொல்லப் போறேன்?” என்றான் விக்கி.
“சரி. இன்னும் ரெண்டு நாள்ல நீங்க எல்லாம் ஹனிமூன் போகத் தயாராகிடுங்க… எல்லாச் செலவும் என்னுடையது தான். இதுதான் என்னோட கல்யாண பரிசு” என்றான் ஆதி.
மூவருக்கும் மாலத்தீவில் (Maldives) ஹனிமூனிற்கு புக் செய்து இருந்தான் ஆதி.
அவர்கள் அனைவருக்கும் கிஃப்ட் கொடுத்ததைப் பார்த்த துர்கா. ஆதியைப் பார்த்து, “ஏன், நீ எனக்குக் கொடுத்த மாதிரி கிஃப்ட்டை இவங்களுக்கு எல்லாம் கொடுக்காம ஏதோ கவர கொடுக்குற?” என்று கேட்டால் துர்கா.
அவள் அப்படிச் சொன்னதும் ஆதி அதிர்ச்சியாக, அவன் அருகில் நின்றிருந்த கீர்த்திகா துர்காவுக்கு ஆதி என்ன கிஃப்ட் கொடுத்தார் என்று தெரிந்ததால் கீர்த்திகா சிரித்து விட…
ஆதி வேகமாக துர்காவின் வீல் சேர் அருகில் வந்தவன், அவள் வாயில் கைவைத்து பொத்தியவன், தன் விரலை அவன் வாய் மேல் வைத்து, “ஷ்…. இதெல்லாம் வெளியே சொல்லக் கூடாது. அமைதியா இரு” என்று அவளைக் கண்களை உருட்டி மிரட்ட…
அதைப் பார்த்த விக்கி, “டேய் ஆதி… ரகுவரன் ‘முதல்வன்’ படத்துல அர்ஜுன் அவரைப் பார்த்து இன்டர்வியூ எடுக்கும் போது அவர மடக்குற மாதிரி கேள்வி கேட்கிறப்போ… ‘பேசாத, அமைதியா இரு’ன்னு வாயில விரலை வைத்து சொல்ற மாதிரி, ஏன்டா கண்ணு உருட்டி துர்காவை அவ்வளவு பக்கத்துல பார்த்து பயமுறுத்துற? இப்போ நீ அவளுக்கு என்ன கிஃப்ட் கொடுத்த? எனக்கு அது தெரிஞ்சு ஆகணும்” என்றான் விக்கி.
“டேய், நீ வேற சும்மா இருடா. துர்கா எதுவும் நீ கேட்டதுக்குப் பதில் சொல்றேன்னு எதுவும் உளறி வைக்கப் போறா போற” என்று ஆதி விக்கியை அதட்ட….
“அப்படின்னா எனக்கு இது கண்டிப்பா தெரிஞ்சே ஆகணும்” என்று விக்கி விடாமல் கேட்க…
அதைப் பார்த்த கீர்த்திகா, “விக்கி அண்ணா, ஆதி மாமா அக்காவுக்கு என்ன கிஃப்ட் கொடுத்தார் என்று எனக்குத் தெரியும். நான் சொல்லட்டுமா?” என்று கேட்டால்.
கீர்த்திகா பேசியதைக் கேட்டதும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்த ஆதி, பின்பு அவளைப் பார்த்து, “அப்போ கதிர் உனக்கு என்ன கிஃப்ட் கொடுத்தான்னு நானும் விக்கி கிட்ட சொல்லட்டுமா?” என்று கேட்க….
தான் வசமாக இப்போது ஆதியிடம் மாட்டிக் கொண்டதை நினைத்த கீர்த்திகா அசடு வழியச் சிரிக்க….
அவள் அருகில் நின்றிருந்த கதிர், “ஏய், நான் உனக்குக் கொடுத்த கிஃப்ட் எப்படி அண்ணாவுக்குத் தெரியும்?” என்று கேட்க…. “டேய், கொஞ்ச நேரம் சும்மா இருடா. அப்புறம் சொல்றேன் உனக்கு எல்லாமே” என்று கீர்த்திகா கதிரின் வாயை அடைக்க.
“என்னங்கடா, ஆளாளுக்கு அவனவன் பொண்டாட்டிக்கு ஏதேதோ கிஃப்ட் கொடுத்து இருக்கிங்க போல இருக்கே. ஆனா நான் என் நிலா குட்டிக்கு இப்போ வர எந்த கிஃப்ட்டும் கொடுக்கலையே” என்று விக்கி சொல்ல….
உடனே கதிர், “டேய், நீ நல்லா யோசிச்சுப் பாரு” என்றவன் விக்கியின் அருகில் வந்து, “ரெண்டு நாளா உன் பொண்டாட்டிக்கு ரூமுக்குள்ள வச்சு நீ எந்த கிஃப்ட்டும் கொடுக்கலையா?” என்று கேட்க…
விக்கி கதிர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக… திரும்பி அவனைப் பார்த்துவிட்டு, ஆதியைப் பார்த்து, “அப்படியா?” என்று தலையே ஆட்டி கேட்க…
ஆதியும் தன் கண்ணை மூடி திறந்து ‘ஆமாம்’ என்று சொன்னான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராதா உடனே சந்தோஷ் இடம் திரும்பி, “இதெல்லாம் நல்லா பாத்துக்கோ…. நீயும் தான் இருக்கியே. கல்யாணமாய் முழுசா ரெண்டு நாளாச்சு. உன் பொண்டாட்டிக்கு நீ உருப்படியா ஏதாவது கிஃப்ட் கொடுக்கணும்னு உனக்குத் தோணுச்சா?” என்று கேட்டவள், முத்துவிடம் திரும்பி, “என்ன முத்து மாமா, உன் பையனை வளத்துன லட்சணம் இது தானா? உன் பையனுக்கு இதெல்லாம் நீ சொல்லிக் கொடுக்க மாட்டியா?” என்று அவரிடம் ராதா உரிமையாக கேட்க…
ராதா சொன்னதைக் கேட்டு முத்துவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க…
ராதாவின் அருகில் வந்த கீர்த்திகா அவள் கையைப் பிடித்து இழுத்து அவள் காதிற்குள் தனக்குக் கதிர் ரூமில் என்ன கிஃப்ட் கொடுத்தார் என்பதைச் சொல்லி, “இதை போய் உன் மாமா கிட்ட கேட்டு சண்டை போடுறியா டி….” என்று அவளைக் கடிந்து கொள்ள…
ராதா திரும்பிச் சந்தோஷை பார்க்க….
அவன் ‘என்ன’ என்று தலையை ஆட்டி ராதாவிடம் கேட்க…
“ம்ஹும்… ஒன்றுமில்லை” என்று ராதா தலையாட்டினாள்.
இளசுகள் எல்லாம் ஏதோ அவர்களுக்கு மட்டும் புரிந்த விஷயத்தைப் பேசுவதைப் பார்த்த பெரியவர்கள் அதற்கு மேலும் அதைப் பற்றி இவர்களிடமும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.
