Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 155

உன் ரகசிய ரசிகை நான் 155

by Layas Tamil Novel
201 views

EPISODE 155

முத்துத் தாத்தாவுக்குத் தெரியாமல் காரின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டதை முடித்துவிட்டு, அவர் உள்ளே சென்றதும், துர்காவுக்குத் தெரியாமல், ஆதி மெதுவாக எட்டு வைத்து அவள் பின்னால் சென்றான்.

ஒரு கையில் நடக்க உதவும் கருவியை (Walker) பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில் ரோஜாக்களைப் பிடித்துக் கொண்டு, அங்கிருந்த தோட்டத்தை (Garden) ஆசையாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.

மெதுமெதுவாக எட்டு வைத்து, தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் சென்று துர்கா அமர முயற்சிக்க…

செடியின் மறைவில் இருந்து துர்காவைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, துர்கா ஊஞ்சலில் அமர முயற்சித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தவன், அவளுக்கு உதவலாம் என்று செல்லப் போனான். பின், அவளாகவே முயற்சித்து அமரட்டும் என்று பொறுமையாகத் துர்காவைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

கையில் இருந்த ரோஜா கொத்துக்களை ஊஞ்சலின் ஓரம் வைத்தவள், ஒரு கையால் ஊஞ்சலைத் தன் புறம் இழுத்து, மற்றொரு கையால் ஊஞ்சலின் மற்றொரு புறச் சங்கிலியைப் பிடித்தவள், நடக்க உதவும் கருவியைப் விட்டுவிட்டு, ஊஞ்சலில் ஒருவாறு அமர்ந்துவிட்டாள்.

தூரத்தில் இருந்து துர்கா ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் அழகை ரசித்தபடி, அவள் பின்னால் மெதுவாக வந்தான் ஆதி.

அருகில் வந்ததும் தான் துர்காவின் பின்னழகைப் பார்த்து அப்படியே சொக்கிப் போய் நின்றான்.

அழகாகப் பூனம் புடவை கட்டி, விரித்துவிட்ட கூந்தலில் இருபுறமும் சிறு முடிக்கட்டுகளை எடுத்து, அதில் அழகாகக் கிளிப் குத்தி… அதன் இருபுறமும் சரமாகத் தொங்கிய மல்லிகைப்பூ மனம் அவன் நாசியை எட்டியது.

இடை வரை இருந்த கூந்தலை எடுத்துத் துர்கா முன்னே போட்டுக்கொள்ள… அவள் அணிந்திருந்த ரவிக்கையால் (Blouse) மறைத்தது போக, பாதி தெரிந்த அவள் முதுகும், மொத்தமாகத் தெரிந்த அவள் உடலும் அவன் கண்ணையும் கையையும் கட்டிப்போட்டு, தொடத் துடிக்கும் தன் கையை அடக்க முடியாமல் ஆட்டிப் படைத்தது.

சிவந்த அவள் தேகத்தைக் கருப்பு நிற ரவிக்கை மேலும் எடுப்பாகக் காட்டிட, இடுப்பு சுற்றி இருந்த சிவப்பு நிறப் புடவை அவள் இடுப்பின் வளைவுகளை அப்பட்டமாக வெளியே காட்டிவிட…

அவற்றை எல்லாம் ரசித்தவாறு மெதுவாகத் துர்காவின் பின்னால் வந்த ஆதி, வெறுமனே ஊஞ்சலில் அமர்ந்து ஆடாமல் அமைதியாக அமர்ந்திருந்த துர்காவின் இடையில் கை கொடுத்து, அவளைத் தன்னோடு சேர்த்து இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.

தன் பின்னால் இருந்து திடீரென்று யாரோ கட்டி அணைக்கவும், முதலில் அதிர்ந்த துர்கா அவன் ஸ்பரிசம் பெற்றதும், அது ஆதிதான் என்று உணர்ந்தவள். ஊஞ்சலைப் பிடித்திருந்த தன் இரு கைகளையும், தன் எடையோடு ஒட்டி இருந்த அவன் கைகளுக்குள் தன் கையை நுழைத்துப் பிடித்துக்கொண்டவள்.

தன் இடது தோள் மீது முகம் புதைத்திருந்த ஆதியைத் திரும்பிப் பார்த்து, “நீ எப்போ வந்த ஆதி?” என்று கேட்டாள்.

“என் பொண்டாட்டி தோட்டத்தில் இருந்த பூக்களையெல்லாம் ரசித்தபடியே வந்து உனக்கு வரும்போது பார்த்துவிட்டேன்,” என்றான்.

ஆதியின் மீசை முடி தன் தோள்களில் பட்டு குறுகுறுக்க… நெளிந்து கொண்டே, “ஆதி, கூச்சமா இருக்கு,” என்று சிறுபிள்ளை போலச் சிரித்தாள் துர்கா.

சில சமயங்களில் வளர்ந்த பெண் போல அவன் அருகில் வரும்போது நடந்துகொள்கிறாள். சில சமயங்களில் சிறுபிள்ளை போல என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாள். அவள் எப்படி இருந்தாலும், அவள் அழகில் ஆதியைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தாள்.

“அப்படியா! உனக்குக் கூச்சமா இருக்கா?” என்று சொல்லிக் கொண்டே, தன் மீசை முடியால் அவள் முதுகில் கோலம் போட…

அமர்ந்திருந்த துர்கா அவன் செய்யும் சேட்டையைத் தாங்க முடியாமல் கூச்சத்தில் நெளிய, ஊஞ்சலிலிருந்து நழுவி கீழே விழப்போனாள்.

கீழே விழப் போகிறோம் என்று பயந்த துர்கா கண்களை இருக்க மூடியவள், பயத்தில் தன் இடையைச் சுற்றி இருந்த ஆதியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள…

ஊஞ்சலிலிருந்து நழுவி விழப் போனவளை, அப்படியே அவள் இடையோடு சேர்த்து வளைத்துத் தூக்கிய ஆதி. தன்னோடு சேர்த்துத் துர்காவைத் தூக்கியவன், ஊஞ்சலைச் சுற்றி வந்து அதில் அமர்ந்து, தன் மடியில் துர்காவை அமர வைத்துக் கொண்டான்.

கீழே விழாமல் ஆதியின் மடியில் அமர்வதை உணர்ந்து துர்கா கண்களைத் திறந்து, திரும்பி ஆதியைப் பார்த்து, “நல்லவேளை நீ என்னப் பிடிச்சுக்கிட்டியா? நான் கூடக் கீழே விழுந்துடுவேன்னு பயந்துட்டேன் ஆதி,” என்றால்.

“நான் இருக்கும் போது உன்னை அப்படியே கீழ விழ விடுவேனா துர்கு?” என்றான் ஆதி.

அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்துக் கொண்ட துர்கா, “என்ன ஆதி, நேரத்துல வீட்டுக்கு வந்து இருக்கே… என்னைப் பார்க்கத்தான் வந்தியா?” என்று கேட்டாள்.

“இல்லை துர்கா, ஒரு கோப்பை (File) வீட்டில் மறந்து வச்சிட்டு போயிட்டேன். அதை எடுக்கத்தான் வந்தேன். உள்ளே வரப்ப நீ தோட்டத்துல நின்னு முத்துத் தாத்தாகிட்டப் பேசிட்டு இருக்கிறதைப் பார்த்ததும், உன்னைப் பார்க்க வந்துட்டேன்,” என்று ஆதி சொல்ல…

“ஓஹோ! அப்போ நீ என்னைப் பார்க்க வரலை, கோப்பை எடுக்கத்தான் வந்தேன் அப்படித்தானே ஆதி?” என்று சொல்லி, தன்னைப் பிடித்திருந்த ஆதியின் கையைத் தட்டி விட்டு, அவன் மடியிலிருந்து இறங்கியவள், அருகில் இருந்த நடக்க உதவும் கருவியைப் பிடித்து, மெது மெதுவாக அங்கிருந்து செல்லப் போனாள்.

‘என்ன ஆச்சு துர்காவுக்கு, திடீரென்று கோபமாக இறங்கிச் செல்கிறாள்?’ என்று யோசித்த ஆதிக்குப் அப்போதுதான் அவன் சொன்னது புரிந்தது. ‘அவளைப் பார்க்க வரவில்லை, கோப்பை எடுக்கத்தான் வந்தேன்’ என்று சொன்னதால்தான் துர்கா தன்மீது கோபமாகச் செல்கிறாள் என்பதை உணர்ந்த ஆதி.

உடனே எழுந்து சென்ற ஆதி, வேகமாகத் துர்காவின் அருகில் சென்று, பின்னாலிருந்து அவளைக் கட்டிக்கொண்டு… “ஹே துர்கா, என்மேல கோபமா?” என்று கேட்டான்.

“ம்ஹும்… இல்லையே,” என்று தலையை இடவலமாகத் துர்கா ஆட்ட…

“ஏன் என் மடியில் இருந்து எழுந்து போன?” என்று கேட்டான்.

“ம்ம்ம்ம்… சும்மா…” என்று சொல்லி, தன்னைக் கட்டிக் கொண்டிருந்த ஆதியின் கையைத் தட்டி விட்டு, “பின்னாடி போகும். என் பக்கத்துல வராதே,” என்றால்.

“என்மேல கோபம் இல்லைன்னு சொன்ன, ஆனா இப்படி கோபப்படுறியே துர்கு,” என்றான் ஆதி.

“நீதான் என்னப் பார்க்க வரலைன்னு சொல்லிட்டியே. அப்புறம் என் பின்னாடி வர? போய் ஏதோ கோப்பை எடுக்கணும்னு சொன்னியே, அந்தக் கோப்பையை எடுத்துட்டு முதல்ல இங்கிருந்து கிளம்பு,” என்று துர்கா சீரியஸாக அவனிடம் பேச…

தன்மீது உரிமையாகக் கோபப்படும் துர்காவைப் பார்த்து, உள்ளுக்குள் சந்தோஷப்பட்ட ஆதி, “சரி, நீதான் சொல்லிட்டியே… உன் பேச்சை மீறுவேனா?” என்று சொல்லிவிட்டு, துர்காவைத் தாண்டி, ‘கோப்பையை எடுப்பதாக’ச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் செல்ல…

‘நான் போகச் சொன்னா உடனே போயிடுவானா?’ என்று கோபமான துர்கா, “வரட்டும். இனிமே நான் உன் கூடப் பேசப் போறது இல்ல,” என்று வாய்விட்டுப் புலம்ப…

ஆதி வீட்டிற்குள் சென்றுவிட்டான் என்று நினைத்துத் துர்கா புலம்பியதை, கதவோரம் தெரியாமல் மறைந்து நின்றிருந்த ஆதி, அவள் பேசியதைக் கேட்டுச் சிரித்தவன், வெளியே வந்து துர்காவைத் தன் கையில் ஏந்திச் சுற்றியவன்.

அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, கீழே இறக்கியவன், “துர்கா, எனக்கு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ பல சமயங்களில் என்னிடம் இவ்வளவு உரிமையா சண்டை போட்டு இருப்பியான்னு எனக்குத் தெரியல. ஆனா, இந்தத் துர்கா எனக்கு ரொம்பப் புதுசா இருக்கா. நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்,” என்று சொல்லி, மீண்டும் அவள் நெற்றியில் முத்தம் வைக்க…

அவன் சொல்வதைக் கேட்டுத் துர்காவுக்குப் புரிந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என் கூடப் பேசாதே. நான் உன்மேல கோபமா இருக்கேன்,” என்று சொல்ல…

“என் பொண்டாட்டி என்மேல கோபமா இருக்கீங்களா?” என்றான் ஆதி.

“ம்ம்ம்… கோவமா இருக்கேன்,” என்று துர்கா சொல்ல…

“நான் என் பொண்டாட்டி கோபத்தைத் தணிச்சுடட்டுமா?” என்றான் ஆதி.

அவனைப் பார்க்காமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு துர்கா திரும்பிக் கொள்ள…

அவள் முன்பு வந்து நின்றவன், துர்காவின் முகத்தைப் பிடித்து, சட்டென்று அவள் இதழில் முத்தம் வைத்தவன். பின் நிமிர்ந்து துர்காவின் கண்களைப் பார்த்து, “இப்போ என் பொண்டாட்டிக்கு என்மேல இருக்கிற கோபம் போயிடுச்சா?” என்று குறும்பாகக் கேட்டான் ஆதி.

அவன் முத்தம் தந்த அதிர்ச்சியில் இருந்த துர்கா, ‘எல்லாம் நீ என்மேல கோபப்படுறதே இல்ல. என்னைத் தான் கோவப்படுத்திப் பார்க்கிற… கீர்த்திகா சொல்லிக் கொடுத்த மாதிரி என்ன முத்தம் கொடுத்துச் சமாதானப்படுத்தணும்னு நினைக்கிறியா?’ என்று நினைத்தவள், “எனக்கு இன்னும் உன்மேல கோபம் குறையல,” என்று சொல்ல…

“ஓ…. அப்படியா? உனக்குக் கோபம் குறையலைன்னா, அந்தக் கோபம் குறையுற வரைக்கும் நான் என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்துக்கிட்டே இருப்பேன்,” என்று சொன்னவன், நொடியும் தாமதிக்காமல் துர்காவின் இதழைக் கவ்வினான்.

தனக்கு அவன் மீது கோபம் இருப்பது தெரிந்தும், வேண்டுமென்று ஆதி தன்னைப் முத்தமிட, அதில் மேலும் கோபம் கொண்ட துர்கா அவன் மார்பில் தன் இரண்டு கைகளாலும் அடிக்க… அவள் அடிப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து அவளுக்கு முத்தம் கொடுத்தவன், நீண்ட நேரம் கழித்து அவள் இதழை விடுவித்தான்.

அவளுக்கு முத்தமிட்ட பின் அவளை விடுவித்துத் துர்காவைப் பார்க்க… அதுவரை அவனிடம் சண்டையிட்டு இருந்தவள், அவன் முத்தத்தில் கரைந்து அவனோடு இணங்கிப் போயிருந்தாள்.

கண்கள் மூடி, இன்னமும் அவன் தந்த முத்தத்தை மனதால் அனுபவித்துக் கொண்டிருந்த துர்காவின் முகத்தை ஆதி பார்க்க… அவள் கன்னங்கள் இரண்டும் ரோஜா பூ நிறத்தில் சிவந்திருக்க, அவள் இதழ் அவன் முத்தம் கொடுத்ததில் லேசாகக் கன்றிப் போய், ஏற்கனவே சிவந்திருந்த உதடு மேலும் சிவந்திருக்க, அதைப் பார்த்துச் சிரித்தவன்.

தன் விரல்களால் அவள் இதழை வருடியவன், அவள் இதழைப் பிடித்து இழுத்துத் துர்காவைப் பார்க்க… அப்போதும் அவள் கண்கள் மூடி அப்படியே நின்று இருந்தால்.

அவள் கீழ் உதட்டை இழுத்தவன், ஏற்கனவே கன்றிப் போய்ச் சிவந்திருந்த துர்காவின் உதட்டைத் தன் பற்களால் லேசாகக் கடிக்க… அப்போதுதான் ஆதி செய்வதை உணர்ந்த துர்கா, அவன் கடித்ததில் வலிக்க… “ஷ்…” என்று வலியில் சத்தமிட்டவள், கண்ணைத் திறந்து அவனைப் பார்க்க…

அவன் வேண்டுமென்று தன்னைச் சீண்டிப் பார்க்கிறான் என்பதை உணர்ந்து, தன்னிடம் இருந்து அவனை விலக்கிவிட்டு, நடக்க உதவும் கருவியின் உதவியோடு வேக வேகமாக வீட்டுக்குள் நுழைந்துகொண்டாள்.

துர்காவைத் துரத்திக் கொண்டு வந்த ஆதிக்கு, அவள் வேகமாக கூடத்திற்குள் (Hall) வந்து செண்பகத்தின் அருகில் சென்று அமர்ந்ததும், ஆதி எதுவும் பேசாமல் உள்ளே வர…

செண்பகம் அவனைப் பார்த்து, “வாப்பா.. என்ன இந்த நேரத்துல வந்து இருக்க?” என்று கேட்டார்.

“ஒண்ணும் இல்லை அத்தை, ஒரு கோப்பையை மறந்து விட்டுட்டுப் போய்ட்டேன். அதை எடுக்கத்தான் வந்தேன்,” என்று சொல்லிவிட்டு, நேராகத் தன் அறைக்குச் சென்று கோப்பையை எடுத்தவன், கீழே வந்து செண்பகத்திடம் சொல்லிவிட்டுத் துர்காவைப் பார்க்க… அவள் முறைத்துக் கொண்டு ஆதியைப் பார்த்தாள்.

அவளைப் பார்த்துச் சிரித்த ஆதி, தன்னைச் செண்பகம் பார்க்கிறாரா என்று கவனித்தவன், அவர் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த பின், துர்காவைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, காற்றில் அவளுக்கு ஒரு முத்தத்தையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

ஆதியைப் பார்த்துத் துர்கா முறைப்பதும், அவளைச் சமாதானம் செய்ய ஆதி காற்றிலேயே அவளுக்கு முத்தத்தைப் பறக்க விடுவதையும் கண்டும் காணாதவர் போலச் செண்பகம் இருந்துவிட்டார்.


தோட்டத்தில் துர்காவுடன் கழித்த நேரத்தை நினைத்து, தன் மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டே, சந்தோஷமாகச் சிரித்த முகத்தோடு அலுவலகத்திற்குள் வந்த ஆதியை, அனைத்து ஊழியர்களும் அதிசயம் போலப் பார்த்தனர்.

ஆதி முன்பெல்லாம் எப்போதும் முகத்தை உம்மென்று வைத்து, கடுகடுவென்று தான் அலுவலகத்துக்கு வருவான். அப்போதெல்லாம் அவனைப் பார்த்தாலோ அல்லது அவரிடம் சென்று பேச வேண்டும் என்றாலோ அனைவருக்கும் பயமாகத்தான் இருக்கும். முகமூடியால் தன் முகத்தை மூடிக்கொண்டு வரும் ஆதியின் கண்களைப் பார்த்தாலே மிரண்டு ஓடியவர்கள் நிறையப் பேர்.

ஆனால் இப்போது, அதே முகமூடி அணிந்த ஆதி, அவன் கண்களாலேயே அனைவரையும் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்திருந்தான். அவனுடைய மனதில் இருந்த சந்தோஷம் அவன் கண்ணில் அப்படியே அப்பட்டமாகப் பிரதிபலித்தது.

ஆதி சிரித்தவாறு தன் கையில் இருந்த கோப்பையைத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடிக் கொண்டு தன் தனி அறைக்குள் வர…

இவ்வளவு நேரம் மின்தூக்கியில் இருந்து தன் அறைக்குள் வரும் வழியில் செய்து கொண்டு வந்த அட்டகாசங்களை எல்லாம், ஆதியின் அறைக்குள் இருந்த மானிட்டரில் சிசிடிவி கேமரா மூலமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கதிரும் விக்கியும், ஆதி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரவும், அவனை அதிசயம் போலப் பார்த்தனர்.

இவ்வளவு நேரம் சந்தோஷமாக வந்த ஆதி, இவர்கள் இருவரையும் பார்த்ததும், முகத்தை அப்படியே உம்மென்று மாற்றிக் கொண்டான்.

எதுவும் தெரியாதவன் போல ஆதி தன் இருக்கையில் வந்து அமர…

“ஏன் கதிர், இங்கே ஆதி என்று ஒரு ஹிட்லர் இருந்தானே? அவனை நீ பார்த்தியா?” என்று கேட்டான் விக்கி.

“இல்லையே விக்கி, இப்போ இருக்கிறது ஹிட்லர் ஆதி இல்லை, ரொமான்டிக் ஹீரோ ஆதி,” என்றான் கதிர்.

இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்ட ஆதி, “என்னடா ரெண்டு பேருக்கும் வர வர வாய் கொழுப்பு ரொம்ப அதிகமாகிட்டே போகுது,” என்று கேட்டான் ஆதி.

“எங்களுக்கு வாய் கொழுப்பு தான் அதிகமாகுது. ஆனா, நீ கையைக் கால வச்சுக்கிட்டுச் சும்மா இருக்காமல், ரொம்ப ஓவரா துர்காவை பாடா படுத்துறியாமே?” என்றான் விக்கி.

“என்னடா சொல்ற?” என்று ஆதி விக்கியைக் கேட்க…

“சும்மா இருக்கிற துர்காவை, போகும்போதும் வரும்போதும், அவளை உன் கை கால் வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாமல், எதுவும் செஞ்சு அம்மாவா ஆக்க ட்ரை பண்றியாமே, உண்மையா?” என்று விக்கி ஆதியிடம் கேட்க…

ஆதி எதுவும் பேசாமல், விக்கியையும் கதிரையும் பார்த்து ஒரு மார்க்கமாக விழிக்க…

“என்னடா? யாருக்கும் தெரியாமல் பால் குடிச்சிட்டு முழிக்கிற திருட்டுப் பூனை மாதிரியே எங்க ரெண்டு பேரையும் பார்க்கிற?” என்றான் விக்கி.

“டேய் இடியட்! இப்படித்தான் வந்து என்கிட்டப் பேசுவியா? நீ எல்லாம் உன் பொண்டாட்டியை கொஞ்சுவதே இல்லையா? என்னமோ நான் மட்டும்தான் உலக அதிசயமா என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ற மாதிரி பேசுற…. இப்போ எதுக்கு நீங்க என்னோட அறைல ரெண்டு பேரும் இருக்கீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டான் ஆதி.

“அப்போ உனக்கு விஷயமே தெரியாதா?” என்றான் கதிர்.

“என்ன விஷயம் என்றால்? என்ன சொல்ல வரீங்க? சொல்லுங்க. எனக்குப் புரியல,” என்றான் ஆதி.

“அப்போ உனக்கு விஷயம் தெரியலன்னு எங்களுக்கு நல்லா புரிஞ்சு போச்சு,” என்ற விக்கி, “ஒரு நிமிஷம் இரு,” என்று சொல்லி, முன்னிருந்த கணினியில் சிசிடிவி-ஐ ஆன் செய்தவன், அதில் ஒரு கேமராவை மட்டும் ஓபன் செய்து காட்ட…

அந்தக் கேமராவில் தெரிந்த வீடியோவைப் பார்த்த ஆதி, விக்கியிடம் திரும்பி, “இதுக்கு என்ன இப்போ?” என்று கேட்டான்.

“என்னடா, காலையிலேயே நீ கிளம்பினதுமே சங்கவி அலுவலகத்துக்கு வந்துட்டா. நீ பார்த்தா ஷாக்காகுவேன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு கூலாக இருக்கியே?” என்றான் விக்கி.

“சங்கவி எப்படியும் அலுவலகம் வருவாள் என்று நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான்,” என்றான் ஆதி.

“என்னடா சொல்ற? அவ அலுவலகம் வருவாள் என்று உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்றால் விக்கி.

“ஏற்கனவே தெரியாதுடா. ஆனா, வருவான்னு நான் எதிர்பார்த்தேன்,” என்ற ஆதி, “சரி, உன் தங்கச்சி அலுவலகத்துக்கு வந்து இருக்கா. நீ அவளைப் போய் கவனிக்காமல், என் அறைல இருந்து என்ன பண்ற?” என்று விக்கியைப் பார்த்து நக்கலாக ஆதி கேட்க…

“என்ன? நான் உன்னை இவ்வளவு நேரம் கிண்டல் பண்ணிப் பேசினேன். அதுக்கு இப்போ நீ ஆரம்பிக்கிறியா? நீ…” என்றவன், “அதெல்லாம் என்கிட்ட நடக்காது,” என்று சொல்லிவிட்டு, “டேய் கதிர், வாடா.. நம்ம அறைக்குப் போலாம். ‘தங்கச்சியாம்ல தங்கச்சி…’ இப்படி எல்லாம் பேசினா நாங்க உடனே பாச மழை பொழிஞ்சிருவோமா என்ன… போடா…” என்று ஆதியைப் பார்த்துப் பேசிவிட்டு வெளியே சென்றான்.

விக்கியைப் பார்த்துச் சிரித்த ஆதி, திரையில் தெரிந்த சங்கவியைப் பார்த்து, “இப்போது என்ன திட்டம் (Plan) செய்து வந்திருக்கிறார்?” என்று யோசனையில் மூழ்கினான் ஆதி.


நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் அலுவலகத்திற்கு வந்திருந்தான் போதி. அவன் வந்ததால் மித்ரனுக்குத் தான் மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. தன்னுடைய வேலையில் பாதி வேலை போதி வந்தாலே குறைந்து விடும் என்ற சந்தோஷம் அவனுக்கு.

போதியைப் பார்ப்பதற்காகச் சந்தோஷமாக அவனது தனி அறைக்குள் வந்த மித்ரன், உள்ளே வந்தவன், போதிக்கு எதிரே முதுகு காட்டி கொண்டு ஒரு பெண் அமர்ந்து இருப்பதைப் பார்த்தவன், யோசனையுடன் உள்ளே வர…

மித்ரன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவதைப் பார்த்த போதி, “வா மித்ரா. நானே உன்னைக் கூப்பிடலாம் என்று நினைத்திருந்தேன்,” என்று சொல்லி அவனை அழைக்க…

போதியின் அருகில் வந்து நின்ற மித்ரன், அவன் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணைத் திரும்பிப் பார்க்க, அங்கே ரதி சிரித்த முகமாக அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும் மித்ரன் புரியாமல் திரும்பிப் போதியைப் பார்க்க…

“அட, அப்படிப் பார்க்கிறே? ரதி ஏன் இங்கே வந்து இருக்கான்னு யோசிக்கிறியா?” என்று கேட்டான் போதி.

மித்ரன் தன் தலையை நாலா பக்கமும் ஆட்ட, அதைப் பார்த்துச் சிரித்த ரதி, “ஹலோ மித்ரன்… போதி மாமா என்ன உங்களுக்கு உதவியாளராக (Assistant) சேர்ந்து, அலுவலகத்துக்கு வேலைக்கு வர சொன்னாரு. அதான் நான் இப்ப இங்க வந்து இருக்கேன்,” என்று சொன்னாள் ரதி.

“என்னது? நீ எனக்கு உதவியாளராகவா!!!” என்று அதிர்ச்சியாக மித்ரன் ரதியைப் பார்த்துக் கேட்க…

அவன் கேட்ட விதமே ரதிக்கு, மித்ரன் தன் மீது வைத்திருக்கும் அபிப்பிராயம் என்னவென்று ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது.

“ஆமாம் மித்ரா. நீ தானே சொன்ன? ‘அலுவலகத்துல தனியா வேலை செய்ய முடியல. வேலைப்பளு ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு’ சொல்லி. அதனாலதான் உனக்கு ஒரு உதவியாளரைத் தயார் பண்ணணும்னு யோசிச்சேன். அந்த நேரம் பார்த்து ரதி காலியாக (Free) இருக்கிறது எனக்கு ஞாபகம் வந்துச்சு. அதனால வேற யாரையும் புதுசா உதவியாளராகப் போடுவதற்குப் பேசாமல், ரதியே உனக்கு உதவியாளராகக் கொண்டு வரலாம்னு நான்தான் அவளை வரச் சொன்னேன்,” என்றான் போதி.

“ரதியைத்தான் எனக்கு உதவியாளராகக் கொண்டு வரணும்னு நீ முடிவே பண்ணிட்டியா?” என்றான் மித்ரன்.

“ஆமாம். ஏன் மித்ரா?” என்றான் போதி.

“ஒண்ணும் இல்லை,” என்று ரதியைப் பார்த்த மித்ரன், போதியிடம் திரும்பி, “அப்போ நீ இனிமேல் அலுவலகம் வரவே போறதில்லையா?” என்று கேட்டான்.

“அப்படி எப்படிடா வராம இருப்பேன்? அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போறேன். நீ நல்லா கவனிச்சுக்கோ. எதுவும் முக்கியமான விஷயம் இருந்தா எனக்குச் சொல்லு,” என்று சொல்லிவிட்டுப் போதி அங்கிருந்து கிளம்பினான்.

ரதியிடமும் சொல்லிக் கொண்டு போதி கிளம்ப… தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து ரதி மித்ரனின் அருகில் வந்தவள். “நான் என்ன வேலை செய்யணும்னு சொன்னீங்கன்னா, நான் இப்பவே என்னோட வேலையை நான் ஆரம்பிக்கிறேன்,” என்று ரதி வேலை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருக்க.

“சும்மாவே உனக்கு இந்த வேலைக்கு வரச் சம்மதம் தானா?” என்று கேட்டான் மித்ரன்.

“ஆமாம். எனக்குப் பிடிச்சுத் தான் இந்த வேலைக்கு நான் வந்து இருக்கேன் மித்ரன்,” என்று கேட்டாள் ரதி.

“நீ என்கிட்ட வேலை பார்க்கிறப்போ, நான் உன்னைப் போதியோட அத்தை பொண்ணு, அவனுக்குச் சொந்தம் அப்படின்னு எல்லாம் பார்க்க மாட்டேன். ஏதாவது தப்பு செஞ்சா, அதுக்கான தண்டனையை நான் கொடுப்பேன். அப்புறம் ‘நான் இப்படி வேலை வாங்கினேன், அப்படி வேலை வாங்கினேன்னு’ சொல்லி, போதிகிட்ட என்னப் போட்டுக் கொடுக்கக் கூடாது,” என்றான் மித்ரன்.

“நான் கண்டிப்பா போதி மாமாகிட்ட உங்களைப் பத்தி சொல்லிக் கொடுக்க மாட்டேன். கவலையே படாதீங்க. எனக்கு எந்த வேலை கொடுத்தாலும், என்னால முடிஞ்ச அளவுக்கு அது சரியா நான் செஞ்சிடுவேன்,” என்று ரதி மிகவும் உறுதியாகப் பேசினாள்.

“சரி,” என்று விட்டு, அவளை அழைத்துக்கொண்டு தன் தனி அறைக்குச் சென்றான் மித்ரன்.

ஸ்டோரி படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க ப்பா . ஸ்டோரியை போஸ்ட் பண்ண ஒரு மோட்டிவேஷனும் இல்ல

You may also like

2 comments

S.joshna November 28, 2025 - 1:34 pm

Inaki episode super akka 💐💕🌹

Reply
Layas Tamil Novel November 29, 2025 - 12:50 pm

Thanm u❤️😍

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured