EPISODE 158
தன் தனி அறைக்குள் இருந்த போதி, சிசிடிவியில் தெரிந்த மாதவியைப் பார்க்க, அவள் ஒரு இருக்கையில் அமர்ந்து தன் உடலை நெட்டி முறித்துக் கொண்டு இருக்க…
மாதவி இப்படியும் அப்படியும் நெளிந்து கொண்டு இருக்க, திடீரென்று பெருத்த சத்தத்தோடு இடி ஒன்று இடிக்க… பயந்து போன மாதவி அப்படியே தன் உடலைக் குறுக்கி, காலைத் தூக்கி இருக்கையில் வைத்து, தன் இரண்டு கைகளாலும் காலைப் பிடித்துக்கொண்டு, பயந்து உடல் நடுங்க…
அவள் நடுங்குவதைப் பார்த்துப் பதறிய போதி, மாதவியிடம் செல்லலாமா? வேண்டாமா? என்று பதறி, அவளைப் பார்த்துக் கொண்டிருக்க… அப்போது மறுபடியும் ஒரு பெருத்த இடி இடிக்கவும், திடீரென விளக்குகள் எல்லாம் அணைந்து அந்த அறையே இருட்டானது.
இடி இடித்து அறை இருட்டாகவும், பயந்து போன மாதவி பலமாகக் கத்திவிட…
விளக்குகள் அணைக்கப்பட்டதால், மாதவி அங்குத் தனியாக இருக்கிறாள் என்று நினைத்த போதி, தன் தனி அறையிலிருந்து வெளியே செல்லப் போக, மாதவி பயந்து கத்தியதால், வேகமாக அவளைப் பார்ப்பதற்காக வெளியே வந்தவன், இருட்டில் தடுமாறி மாதவியை அந்த அறைக்குள் தேட…
இடியோடு சேர்த்து மின்னலும் அடிக்கவே, அந்த அறை முழுவதும் மின்னல் ஒளி பிரகாசமாக அடிக்க… அதில் தெரிந்த மாதவியைப் பார்த்த போதி, அவள் காலைக் குறுக்கிக்கொண்டு, இருக்கையில் உடல் நடுங்க அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், வேகமாக அவள் அருகில் செல்ல…
மாதவி, “அர்ஜுனா…. அர்ஜுனா…” என்று சொல்லிக்கொண்டு உடல் நடுங்க இருக்கையில் அமர்ந்திருக்க… அவள் அருகில் வந்து போதி, “மாதவி,” என்று அழைக்க…
இருக்கையில் நடுங்கியபடி அமர்ந்திருந்த மாதவி, தன் அருகில் வந்து போதி தன்னை அழைத்ததும், அடுத்த நிமிடம் அவன் இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டு, கண்களை இருக்க மூடி அவனை இடுப்போடு இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் மாதவி.
மாதவி இடித்ததின் சத்தத்தினால் தான் இப்படி நடுங்குகிறாள் என்று போதிக்கு நன்றாகவே புரிந்தது. தன்னைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் மாதவியைப் பார்த்த போதிக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தது. அந்த இடிக்கு நன்றி சொன்னவன். எதுவும் பேசாமல் அவள் கட்டி அணைத்திருக்க, அப்படியே அதை ரசித்தவாறு நின்று இருந்தான்.
அப்படியே இடி இடிக்க, அவளுடைய பிடி மேலும் இருக்கமானது. இப்போது போதியின் நிலைதான் மிகவும் மோசமாகப் போய்விட்டது. அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன்னைச் சுதாரித்துக் கொண்டு, மாதவியின் கையைத் தன் இடுப்பிலிருந்து பிரித்து விட்டவன்.
“மாதவி, இது ஒண்ணும் இல்ல. சாதாரண இடிதான். இதுக்கு ஏன் நீங்க இப்படிப் பயந்து நடுங்குறீங்க? என் கூட உள்ள வாங்க,” என்றான் போதி.
மாதவியை உள்ளே வரச் சொல்லிவிட்டு, போதி திரும்பி நடக்கப் போக… அவனை நகர விடாமல், அவன் சட்டையை இறுக்கிப் பிடித்திருந்தால் மாதவி. பிஞ்சு விரல்களால் போதியின் சட்டையை மாதவி பிடித்து இருக்க… அதைத் திரும்பிப் பார்த்துப் போதி ‘என்ன?’ என்று கேட்க, “சார், நானும் உங்க கூட வரேன். தனியா போகாதீங்க,” என்றால்.
உள்ளுக்குள் அவள் பயந்து தன்னிடம் ஒட்டிக் கொள்வதை நினைத்துச் சந்தோஷப்பட்டவன், “சரி வாங்க. நாம் தனியா போகல. உங்களைக் கூட்டிட்டுப் போறேன்,” என்று சொல்ல… இருக்கையிலிருந்து எழுந்து, அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு மாதவி அவன் பின்னால் செல்ல…
மறுபடியும் இடி பலமாக இடிக்கவும், மாதவி வேகமாகப் பின்னாலிருந்து போதியை வந்து இறுக்கி அணைத்துக் கொண்டாள். இதைச் சற்றும் எதிர்பாராத போதி அப்படியே உறைந்து போய் நின்றான். அப்படியே தலைகுனிந்து கீழே பார்க்க, தன் வயிற்றை இறுக்கக் கட்டிக்கொண்டு இருந்த மாதவியின் கையோடு தன் கையைச் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான் போதி.
மீண்டும் மீண்டும் இடி விடாமல் பலமாக இடித்துக் கொண்டிருக்க… அவள் பிடி மேலும் இருக்கமானது. அவள் கைகளைப் பிடித்திருந்த போதி, அவள் கையை ஆதரவாகத் தடவிக் கொடுத்தவன், “மாதவி, ரொம்பப் பயப்படாதீங்க. நான் தான் கூட இருக்கேனே. ஏன் உங்க உடம்பு இப்படி நடுங்குது? அமைதியா இருங்க. கண்ணை மூடி ஆசுவாசப்படுத்திக்கோங்க (Relax),” என்று போதி சொல்ல…
அவன் பின்னால் கட்டிக் கொண்டிருந்த மாதவி, “எனக்கு ரொம்பப் பயமா இருக்கு சார். இந்த இடமே ரொம்பப் பயமா இருக்கு. நம்ம உள்ளே போயிடலாமா? எனக்கு இங்கே தனியா இருக்க ஏதோ போல இருக்கு…” என்று மாதவி பயந்தவாறு போதியிடம் சொல்ல…
“சரி, உள்ளே போலாம். அதுக்கு நீங்க என்ன விட்டால் தானே உள்ளே போக முடியும்,” என்று போதி சொல்ல…
அப்போதுதான் மாதவிக்கு உரைத்தது, அவள் போதியைக் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்று. உணர்ந்த மறுநிமிடமே அவனை விட்டு விலகி நின்ற மாதவி, “சாரி சார். எனக்கு இடி என்றால் பயம். அதுதான் பயத்துல வந்து உங்களை…” என்று தயங்கி நிற்க.
அவள் இப்படி விலகுவாள் என்று தெரிந்திருந்தால், போதி அவளிடம் எதுவும் சொல்லி இருக்க மாட்டான். இரண்டு நிமிடமே மாதவி தன்னோடு நெருங்கி இருந்தாலும், அது அவனுக்குப் போதுமானதாகத் தோன்றியது. இருந்தும் அவள் இப்படி விலகி விட்டாளே என்று சற்று வருத்தமாகவும் இருந்தது போதிக்கு.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “சரி, பரவாயில்லை. வாங்க உள்ளே போகலாம்,” என்று போதி முன்னே தன் தனி அறைக்குள் நடக்க… அவன் பின்னாலேயே பயந்தவாரே நடந்து வந்தால் மாதவி.
அங்கிருந்த இருக்கைத் துணியைக் காட்டி, “இதுல உட்கார்ந்து ஆசுவாசமாக இருங்க. நான் இங்க தான் இருக்கேன். எங்கேயும் போகல,” என்று போதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே… மீண்டும் இடைவிடாமல் இடி இடிக்க, வேகமாக ஓடிவந்த மாதவி போதியின் மீது இடி போல வேகமாக வந்து அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள…
திடீரென்று இப்படி ஓடிவந்து தன்னைக் கட்டிக் கொள்ளவும், நிலை தடுமாறி இருக்கைத் துணியின் மேல் போதி விழ, அவன் மீது அவனோடு சேர்ந்து மாதவியும் விழுந்தாள்.
இடியும்.. மின்னலும்…. காற்றும்… மழையும்.. என மிகவும் கோரமாக வெளியில் மழை பெய்து கொண்டிருக்க….
இங்கே அதே நிலையில் போதியின் மனதிற்குள் உணர்ச்சிகளை எல்லாம் கட்டுப்படுத்த மிகவும் போராடிக் கொண்டு, இருக்கைத் துணியின் மேல் படுத்திருந்த போதி, மாதவியைக் கட்டிக்கொண்டு தன் உணர்ச்சிகளோடு போராடிக் கொண்டிருந்தான்.
இந்த முறை போதி மாதவியைத் தன் மீது இருந்து எழுந்திருக்கச் சொல்லவில்லை. அவன் எதுவும் பேசாமல் அமைதியாகப் படுத்துவிட, மாதவியும் இடியின் சத்தத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், போதியை இறுக்கி அணைத்தபடியே அவன் மீது படுத்திருந்தாள்.
தன் பயத்தில் மாதவி போதியை இறுக்கி அணைத்ததை விட, போதி அவள் மீது இருந்த காதலில் அவளை இறுக்கி அணைத்தபடி, இருக்கைத் துணியில் கண்மூடி அதை ரசித்தபடி படுத்திருந்தான்.
தனக்கு இருந்த பயத்தில் மாதவியால் இதையெல்லாம் உணர முடியவில்லை. அவள் கண்களை இருக்க மூடி, கடவுளை வேண்டிக் கொண்டு, போதியின் மேல் கண்கள் மூடிப் படுத்து இருந்தால்.
நீண்ட நேரம் இடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருக்க… அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருக்க… போதியும் மாதவியும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு இருக்கைத் துணியில் படுத்து இருந்தனர்.
பவன், தன் வீட்டில் தன் தங்கை பவித்ராவிற்கு நல்ல வரன் வந்திருப்பதாகச் சொல்லி, அவளுக்குத் திருமணம் செய்து வைக்க அவன் அம்மாவிடம் சம்மதம் கேட்க… அவனுக்குத் திருமணம் செய்த பிறகுதான் உன் தங்கைக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் பவனின் அம்மா மகேஸ்வரி.
பவனுடன் வேலை பார்க்கும் ரியாவின் அண்ணன் தான் தன் தங்கை பவித்ராவிற்கு வந்திருக்கும் வரன் என்று சொல்ல… அவன் ஏற்கனவே ரியாவை இரண்டு மூன்று முறை தன் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான். அதனால் அவர்களுக்கு ரியாவைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். அவளைப் போலவே அவள் வீட்டில் இருப்பவர்களும் ஒரு நல்ல குணம் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் அம்மாவும் ஒரு வழியாக பவனின் வற்புறுத்தலுக்குச் சம்மதித்து, முதலில் அவன் தங்கைக்குத் திருமணம் செய்து வைக்க சம்மதம் சொன்னார்.
பவனின் அம்மா பவித்ராவின் திருமணத்திற்குச் சம்மதம் சொன்ன அடுத்த நிமிடமே, ரியாவிடம் தொலைபேசி செய்த பவன், தன் அம்மா பவித்ராவிற்கு ரியாவின் அண்ணன் கௌதமைத் திருமணம் செய்து வைக்கச் சம்மதம் சொல்லிவிட்டதாகக் கூற… தன் வீட்டில் இதைப் பற்றிப் பேசி, அண்ணன் கௌதமிற்குப் பவனின் தங்கை பவித்ராவைத் திருமணம் செய்து வைக்கச் சம்மதம் வாங்குவதாக ரியா கூறினாள்.
எப்படியோ தன் தங்கைக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணமாகப் போகிறது என்ற நிம்மதி ஒரு பக்கம் பவனுக்கு இருந்தாலும், அவள் திருமணத்திற்குப் பிறகுதான் மதுவுடன் வாழும் உறவுமுறையில் (Living Relationship) வாழ்ந்து வருவதை எப்படித் தன் அம்மாவிடம் சொல்லி சம்மதம் வாங்குவது என்று ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது பவனுக்கு.
ரியாவின் வீட்டில் அனைவரும் குடும்பமாகக் கூடிச் சாப்பிட்டுக் கொண்டிருக்க…. தொலைபேசி பேசி முடித்து வைத்ததும் ரியா, அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கௌதமிடம், “அண்ணா, பவனோட அம்மா உனக்கும் பவித்ராவுக்கும் கல்யாணம் பண்ண ஓகே சொல்லிட்டாங்க,” என்று சந்தோசமாகச் சொல்ல…
“ஏய் என்னடி சொல்ற? நிஜமாத்தான் சொல்றியா? பவித்ராவோட அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக் கிட்டங்களா?” என்று கௌதம் கேட்டான்.
“ஆமாம். நான் பவித்ராவை, பொண்ணு பார்க்க வரச் சொல்லிச் சம்மதம் சொல்லிட்டாங்கன்னு பவன் இப்பதான் எனக்கு போன் பண்ணினா,” என்று ரியா சந்தோசமாகச் சொல்ல.
இது எல்லாம் கேட்டு அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த ரியாவின் பெற்றோர் அவர்கள் இருவரையும் கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஏன், அப்பா அம்மாவைப் பார்த்து, இப்ப எதுக்கு ரெண்டு பேரும் முறைக்கிறீங்க? நான் ஏற்கனவே சொன்னதுதான். அண்ணனுக்கு யாரைப் பிடித்திருக்கோ, அவங்களையே கல்யாணம் பண்ணிக்கட்டும். இப்படி இந்தக் காலத்துல போயி காதல் பண்ணக் கூடாது. காதல் திருமணம் பண்ணக் கூடாதுன்னு எல்லாம் அண்ணனைப் போட்டுக் கஷ்டப்படுத்தாதீங்க,” என்றால் ரியா.
“உனக்கு இந்த வீட்ல பெரியவங்க பேச்சுக்கு மரியாதையே இல்லாம போயிடுச்சு. உன் அண்ணனை விட உனக்கு எவ்வளவு வயசு கம்மி. நீ உன் அண்ணனுக்குச் சம்பந்தம் பேசுறியா? இது எல்லாம் நாங்க ஒத்துக்குவோம்னு நீ நினைச்சிட்டு இருக்கியா?” என்று கேட்டார் ரியாவின் அப்பா.
“அப்பா, நான் உங்களை விட வயசுல சின்னவ தான். ஆனா அண்ணன் பாவம் இல்லையா? அவனும் எவ்வளவு நாள் இப்படி நீங்க சம்மதிப்பீங்கன்னு பொறுமையாவே இருப்பான். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா அண்ணா உங்ககிட்ட ரியாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் கேட்டுட்டு இருக்கான். ஆனா நீங்க அதுக்கு ஒத்து வரவே மாட்டேங்கிறீங்க. அதனாலதான் நான் ஒரு முடிவு பண்ணி, திட்டம் (Plan) பண்ணி இதை இவ்வளவு தூரம் கொண்டு வந்து இருக்கேன். தயவுசெய்து அதைக் கெடுத்துடாதீங்க,” என்றால் ரியா.
“என்னடி திட்டம் பண்ணின?” என்ற ரியாவின் அம்மா கேட்டார்.
“ஒண்ணும் இல்லம்மா. நானும் பவித்ராவும் **நெருங்கிய நண்பர்கள் (Close Friends)**ன்னு இப்போ வரைக்கும் பவனுக்குத் தெரியாது. என் கூட வீட்டுக்கு வரும்போது தான், அவ அண்ணன் கூடப் பழக்கம் ஆகி, அண்ணனைக் காதல் பண்ணலாம் என்கிற விஷயமும் அவனுக்குத் தெரியாது. வீட்ல வேற நீங்களும் அண்ணாவுக்குக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களா? சரி, ஏதாவது திட்டம் பண்ணி, முதல்ல நான் வீட்ல அவள் கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்க வைக்கணும்னு நினைத்தேன்.
ஒரு நாள் பவன் கூடப் பேசிட்டு இருக்கும்போது, ‘உன் கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு? அவங்க என்ன பண்றாங்க?’ன்னு சும்மா அவங்க குடும்பத்தைப் பற்றி நம்ம பவன்கிட்ட பேசிட்டு இருந்தேன். அப்போ அவன், ‘அவனுக்கு ஒரு தங்கச்சி தான் இருக்கிறதா’ சொன்னான். ‘என்ன பண்ணிட்டு இருக்காங்க உன் தங்கச்சி?’ என்று கேட்டேன். ‘அவ கல்லூரி இறுதியாண்டு (Final Year) படிச்சிட்டு இருக்கான்னு’ சொன்னான். ‘முடிச்சதும் அடுத்து என்ன? கல்யாணமா?’ அப்படின்னு கேட்டதுக்கு, ‘அவளுக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ற ஐடியா இல்ல. என் அம்மா எனக்குக் கல்யாணம் பண்ணின பிறகு தான் என் தங்கைக்குக் கல்யாணம் பண்ணனும்னு உறுதியாகச் (Straight) சொல்லிட்டாங்க,’ என்றான் பவன்.
‘இது என்னடா நமக்கு வந்த சோதனை’னு நான் அப்போதான் நினைச்சேன். ‘முதல்ல பவன் கல்யாணம் பண்ணனும். அதுக்கு அப்புறம் தான் அண்ணன் கல்யாணம் பண்ண முடியும்னு’ யோசிச்சேன். நான் ‘சரி, அதுக்கு ஏதாவது வழி கிடைக்காதா?’ என்று இருந்தேன். அப்போதான், நாங்க வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச நாளிலேயே மது அந்த அலுவலகத்துக்கு வேலைக்குச் சேர்ந்தா…
அவ அலுவலகத்துக்கு வந்த முதல் நாளே பவனோட சண்டை போட்டுட்டா… அப்புறம் ரெண்டு பேரும் எப்பப் பார்த்தாலும் எலியும் பூனை மாதிரி சண்டை போட்டுட்டு தான் இருந்தாங்க. ஒரு நாள் ஒரு கோப்பு அறைக்குள் (File Room) போனப்போ, மது கீழே விழப் போகும்போது, பவன் அவளைக் கீழே விழாமல் பிடிச்சுக்க, அவளைத் தாங்கிப் பிடிச்சிட்டு நின்னுட்டு இருந்தான். அப்போ நான் சரியா உள்ளே போனேன். அப்போ அவங்க ரெண்டு பேரும் கண்ணையும் பார்த்தப்போ, ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் காதல் இருந்தது எனக்குப் புரிஞ்சுது,” என்றால் ரியா.
“யாரு? உனக்குப் புரிஞ்சுதா?” என்று கேட்டார் அவள் அம்மா.
“ம்ம்ம்… ஆமாம்,” என்ற ரியா. “அப்பாதான் எனக்கு ஒரு யோசனை (Idea) கிளிக் ஆச்சு. எப்படியாவது இவங்க ரெண்டு பேரையும் பேசிப் பழக வெச்சு, காதல் பண்ண வச்சிட்டா, சீக்கிரமா அவனுக்குக் கல்யாணம் ஆயிடும். அதுக்குப் பிறகு நம்ம அண்ணாவோட கல்யாணத்தை எப்படியும் நடத்திடலாம்னு நினைச்சேன். நானும் என்னென்னமோ பண்ணிப் பார்த்து எப்படியோ ஒரு வழியா ரெண்டு பேரையும் காதல் பண்ண வச்சுட்டேன். ஆனா, அதுலயும் ஒரு சிக்கல் வந்துருச்சு,” என்றால் ரியா.
“என்னடி சிக்கல்?” என்ற ரியாவின் அம்மா கேட்க…
(மது பவனிடம் வாழும் உறவுமுறையில் இருக்க மட்டுமே சம்மதித்தாள் என்று அவள் அம்மாவிடம் ரியா சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் தன் தோழி மதுவைப் பற்றித் தவறாக எண்ணக் கூடும். அதைச் சொல்லாமல்,)
“அந்தப் பிரச்சனையெல்லாம் தீர்ந்து (Solve) ஆயிடுச்சும்மா. அதை விடு. எப்படியோ வீட்ல பேசி, பவன் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே பவித்ராவுக்குக் கல்யாணம் பண்ணனும்னு சம்மதம் வாங்கச் சொல்லி இருந்தேன். அவனும் அவங்க அம்மா சமாளிச்சிட்டதாத் தான் இப்போ எனக்குப் போன் பண்ணிச் சொன்னான். இனி முடிவு உங்க ரெண்டு பேர் கையில தான் இருக்கு,” என்றால் ரியா.
ரியாவின் அப்பா அவளை முறைத்தவர், “அதுதான் எல்லா வேலையும் நீயே செஞ்சிட்டியே. அப்படியே உன் அண்ணனுக்கும் நீயே கல்யாணம் பண்ணி வச்சிடு. எங்களுக்கு வேலை மிச்சமாகும்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.
அவர் அப்படிச் சொன்னதும் கோபமாக அவர் பின்னாடி எழுந்து சென்ற ரியா, அவர் அப்பாவின் கையைப் பிடித்து நிறுத்தியவள், “அப்பா, இப்ப என்னதான் சொல்ல வரீங்க? உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமா? இல்லையா? அதை வெளிப்படையா சொல்லுங்க,” என்று ரியா கேட்க…
“இதுதான் சொன்னேனே. நீயே உன் அண்ணன் கல்யாணத்த நடத்தி வைத்து விடு,” என்றார் அவள் அப்பா.
“அப்போ உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமா?” என்று கேட்டாள் ரியா.
“வேற வழி? சம்மதிச்சுத் தானே ஆகணும். நான் வேண்டான்னு சொன்னாலும், நீங்க என்ன விடவா போறீங்க? எப்படியும் உன் அண்ணனுக்கு அந்தப் பொண்ணு தானே கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்க… அவனுக்குப் பிடிச்ச பொண்ணு அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போகட்டும்,” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல, ரியாவிற்கு மிகவும் சந்தோஷமாகிப் போனது.
“டேய் அண்ணா, நாம நினைச்ச மாதிரியே எல்லாமே நல்லபடியா நடந்துருச்சுடா. இந்தக் கல்யாணம் முடியறவரைக்கும் பவனுக்கு நான் போட்டத் திட்டம் மட்டும் தெரியாமல் இருக்கணும். அப்படித் தெரிஞ்சா, அவன் என்னைச் சுத்தமா வெறுத்துவிடுவான். அவன் தங்கச்சியை உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டான். அதனால, நீ என்ன பண்ற, அதுவரைக்கும் பவித்ராவை அங்கே இங்கே பார்த்து, கூட்டிட்டுச் சுத்துற வேலையை வச்சுக்காத. சரியா?” என்று சொல்லிவிட்டு ரியா சென்றாள்.
நர்மதா, ரூபேஷின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது என்று சொன்னதிலிருந்து, ஷிவுவிற்கு வேலையே ஓடவில்லை. அதன் பிறகும், கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் ரூபேஷ் அலுவலகத்துக்கு வராமல் போகவே, அவன் அம்மாவுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். அதனால் தான் அவன் அலுவலகத்துக்கு வரவில்லை என்று புரிந்தது ஷிவுவிற்கு.
அந்த யோசனையிலேயே உணவு மேஜையில் அமர்ந்து ஷிவு அனைவருடனும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை, விசாலாட்சி, “ஏன் ஷிவு? நானும் கொஞ்ச நாளா கவனிச்சுட்டுத் தான் வரேன் உன்னை. நீ சரியாவே சாப்பிட மாட்டேங்குற. உடம்பெல்லாம் எப்படி இளைச்சுப் போயிடுச்சு பாரு. என்ன ஆச்சு உனக்கு? உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று கேட்டார்.
ஷிவு கர்ப்பமாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்தச் சமயத்தில் எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை. அதனால் சரியாகச் சாப்பிடாமல் போகவே, உடலும் சற்று இளைத்துப் போய் இருந்தால் ஷிவு.
விசாலாட்சி சொல்வதைக் கேட்டுக்கொண்டு, அப்போதுதான் வீட்டிற்கு வந்த ஆதி (கார்த்திக்), “அம்மா, அது ஒண்ணும் இல்ல. அவளுக்கு அலுவலகத்தில் வேலைப் பளு (Workload) கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இரவு பகல்னு பார்க்காம வேலை பார்த்துட்டு இருக்கிறனால தான் சரியா சாப்பிடறது இல்லைன்னு நினைக்கிறேன். அவ கொஞ்சம் ஓய்வு (Rest) எடுத்தாலே சரியாப் போயிடும்,” என்றான் ஆதி.
“அப்புறம் ஏன்ப்பா, நீ அவளுக்கு இவ்வளவு கஷ்டமான வேலையை கொடுக்குற? நம்ம பொண்ணு, நம்ம தானே பார்த்துக்கணும்?” என்று விசாலாட்சி கூற… உடனே கனகா, “நீங்க எப்பவுமே உங்க மருமகளுக்கு ஆதரவு (Support) பண்ணிட்டு இருக்காதீங்க அண்ணி. அவர் இந்த வேலையெல்லாம் கத்துக்கிறது இல்ல அவளுக்குத் தானே நல்லது. ஆதி அவளுக்கு நல்லது தானே செஞ்சு கொடுத்திருக்கான்,” என்றார் கனகா.
“நீ எப்பவுமே உன் மருமகனுக்குத் தானே ஆதரவு பண்ற?” என்று விசாலாட்சி கனகாவை பேசினார்.
“வா மருமகனே, சாப்பிடுறியா?” என்று கேட்டார் கனகா.
“இல்ல அத்தை, நான் இப்போதுதான் சாப்பிட்டு வந்தேன். ஷிவுவைப் பார்க்கிறதுக்காகத்தான் நான் வந்தேன்,” என்றான் ஆதி.
தன்னைப் பார்க்கத்தான் ஆதி வந்திருப்பதாகச் சொன்னதும், சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷிவு, “என்ன மாமா சொல்லுங்க,” என்று இருக்கையிலிருந்து எழுந்திருக்கப் போனவள், திடீரென்று அவள் தலை கிறுகிறுக்க… அப்படியே மயக்கம் போட்டுக் தரையில் விழுந்தாள்.
ஷிவு திடீரென மயக்கம் போட்டுத் தரையில் விழுந்ததும், பதறி அடித்துக்கொண்டு அவள் அருகில் வந்த கனகா, “ஏய் ஷிவு, என்ன ஆச்சுடி உனக்கு?” என்று பதறி, அவளைத் தூக்கி மடியில் படுக்க வைத்து அவள் கன்னத்தைத் தட்ட… ஷிவு கண்விழிக்கவில்லை.
விசாலாட்சி தண்ணீரை எடுத்து வந்து ஷிவுவின் முகத்தில் தெளிக்க…. அப்போதும் ஷிவு கண்விழிக்காமல் போகவே, அங்கிருந்த அனைவருக்கும் பதட்டமாகிவிட்டது.
துரை உடனே, “ஆதி, நம்ம உடனே ஷிவுவை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போலாம்,” என்று சொல்ல… “சரி மாமா,” என்ற ஆதி, கீழே விழுந்த ஷிவுவைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கிச் செல்ல… விசாலாட்சியிடம் சொல்லிக் கொண்டு கனகா ஆதியின் பின்னே அவர்களுடன் செல்ல, நால்வரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவமனை விரைந்த நால்வரும், காரிலிருந்து அவசரச் சிகிச்சை வார்டுக்கு (Emergency Ward) ஷிவுவைத் தூக்கிக் கொண்டு சென்றான் ஆதி.
ஷிவுவுடன் கனகாவையும் துரையையும் இருக்கச் சொல்லிவிட்டு, மருத்துவரைப் பார்க்க ஆதி சென்றான். மருத்துவரிடம் ஷிவு கர்ப்பமாக இருப்பதாகவும், அவள் ஏற்கனவே சோர்வாக இருந்ததாகவும் சொன்ன ஆதி, இந்த விஷயம் அவள் பெற்றோருக்குத் தெரியாது. அதனால் இந்த விஷயத்தை அவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று ஆதி மருத்துவரிடம் சொன்னான்.
துர்காவைச் (லட்சுமி/லக்ஷு) சோதனைகளுக்காக (Checkup) அழைத்து வரும் மருத்துவமனைக்குத்தான் ஷிவுவை அழைத்து வந்திருந்தான் ஆதி.
ஆதி சொன்னதற்குச் சம்மதிக்க மறுத்த மருத்துவர், பிறகு ஆதியின் வற்புறுத்தலினால், ஷிவுவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, அவள் திருமணமானதற்கு முன்பே தாயாகிவிட்டால் என்ற விஷயத்தைச் சொல்லி, அவள் பெற்றோருக்கு அந்த விஷயம் இன்னும் தெரியாது என்றும். அது தெரிந்தால் இருவரும் அவளிடம் பேசுவதையே நிறுத்திவிடுவார்கள் என்றும் அவரிடம் சூழ்நிலையை எடுத்துக் கூறி சம்மதிக்க வைத்தான் ஆதி.

1 comment
Inaki episode super very nice akka💝💗💐