EPISODE 169
சரளாம்மா கொடுத்த பரிசுப் பெட்டியை கொண்டு வந்து போதியின் அறையில் வைத்து விட்டு, அவனிடம் மாட்டிக் கொள்ளாமல் வெளியே செல்லலாம் என்று மாதவி கதவின் அருகில் செல்ல… தன்னிடம் இருந்து தப்பித்து வெளியே போகப் பார்க்கும் அதுவே பார்த்து உள்ளுக்குள் சிரித்த போதி, மாதவியின் கையைப் பிடித்து இழுத்து, அவளோடு சேர்ந்து நெருங்கி நின்றவுடன், அவள் முகத்தைப் பிடித்து சட்டென அவள் இதழில் முத்தமிட்டான்.
இதைச் சற்றும் எதிர்பாராத மாதவி, பயத்தில் தன் கண்கள் இரண்டையும் அகல விரித்தவள், தன் பாதங்களைத் தரையில் அழுந்த ஊன்றி, தன் கைகள் இரண்டையும் தன் உடையை இறுக்கிப் பிடித்து இருக்க… அப்படியே அதிர்ந்து போய் அவனிடம் தன் உதட்டைக் கொடுத்துவிட்டு நின்றிருந்தால் மாதவி.
மாதவிக்கு முத்தம் கொடுத்தால் அவள் மறுத்துத் தன்னிடம் போராடுவாள் என்று போதி நினைத்திருக்க… அதற்கு நேர்மாறாக அதிர்ச்சியில் உறைந்து போய், போதியின் முத்தத்திற்கு மயங்கி நின்றிருந்தால் மாதவி. மாதவியின் இந்த நிலையைப் பார்த்து ரசித்தவன், தன் முத்தத்தின் ஆழத்தை அதிகரிக்க… மாதவியால் போதியின் முத்தத்தை தாக்குப் பிடிக்கவே முடியவில்லை. சிறிது நேரத்தில் அவன் முத்தத்தைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டவள். தரையில் ஊன்றி இருந்த தன் பாதங்களை மெல்ல உயர்த்தி, அவன் உயரத்திற்குத் தன் உயரத்தைக் கொண்டு வந்த மாதவி.
அவன் முகத்தைத் தன் இரு கைகளாலும் பிடித்தவள், அவன் கொடுத்த முத்தத்தை அழுந்த அவனுக்குத் திருப்பிக் கொடுத்து, அவன் முகத்தைத் தன்னிடம் இருந்து பிரித்தவள். அவனிடமிருந்து இரண்டு அடி விலகி நிற்க… தன் பின்னால் இருந்த அலமாரியில் (Cupboard) மோதி நின்றால் மாதவி.
அவளே தனக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னைப் பிரிந்து பின்னால் சென்று நிற்பதைப் பார்த்த போதிக்குத் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமமாக இருந்தது. மாதவி ஏற இறங்க மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, அவள் மூச்சு வாங்கியதில் அவள் மார்பு லேசாக அசைய, அதைப் பார்த்தவன் சட்டென்று அவளைப் பார்ப்பதை விட்டு திரும்பி நின்று கொண்டான்.
தன் உணர்வுகள் தன்னை மீறி வெளிப்படுவதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருந்தும் மிகவும் கடினமாக முயற்சி செய்து தன்னை கட்டுப்படுத்தி நின்றிருந்த போதி, தன் தலையை அழுந்தக் கோதி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவன் தன் உணர்வுகளுடன் போராடி, அதைச் சமாளிக்கத் தான் மாதவியைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு திரும்பி நின்று இருக்க… போதி திரும்பி நின்றதைப் பார்த்த மாதவி, தான் அவனை விட்டு விலகி வந்ததால் போதி தன் மீது கோபம் ஆகிவிட்டோமோ, தன்னிடம் அந்தக் கோபத்தைக் காட்டி விடக்கூடாது என்று நினைத்து திரும்பி நின்று கொண்டானோ என்று தவறாகப் புரிந்து கொண்டாள்.
மாதவி மெல்ல, “போதி,” என்று அழைக்க… அவன் மாதவியின் முகத்தைப் பார்க்காமலேயே, “ம்ம்ம்…” என்றான்.
அவன் குரலை வைத்து மாதவியால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. போதி இப்போது எந்த மனநிலையில் இருக்கிறான் என்று தெரியாத மாதவி, அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்று யோசித்தாள்.
தன்னை பெயர் சொல்லி அழைத்துவிட்டு, அதன் பிறகு மாதவி எதுவும் பேசாமல் இருக்க…. ஒருவேளை அவளுக்குத் திடீரெனத் தான் முத்தம் கொடுத்ததால் மிகவும் வருந்துகிறாளோ, அதைச் சொல்லத்தான் தன்னைக் கூப்பிட்டாலோ என்று நினைத்த போதி, அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேகமாக மாதவியைப் பார்க்கத் திரும்ப…
கோபத்தில் இருக்கும் போதியைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்த மாதவி, அவனைப் பின்னாலிருந்து கட்டிக்கொள்ள வேகமாக வர, அப்போது சரியாகப் போதி திரும்பவும், அவன் மீது மோதி, அவனைக் கட்டிக்கொண்டாள்.
இதைச் சற்று எதிர்பாராத போதி, அவளாகவே வந்து தன்னைக் கட்டிக் கொண்டாள் என்ற சந்தோஷத்தில், தன்னோடு சேர்த்து மாதவியை இறுக்கி அணைத்தவன், மீண்டும் அவள் இதழில் உணர்ச்சிகளோடு முத்தமிட்டான்.
தங்கள் காதலைத் தெரிவித்துக் கொண்ட மறுநாளே இவ்வளவு தூரம் தாங்கள் நெருங்கியதை இருவராலும் நம்பவே முடியவில்லை. இருவருமே உணர்ச்சிகளின் பிடியில் இருக்க… அவர்களின் முத்தம் நீண்டு கொண்டே சென்றது.
வீட்டைச் சுற்றிக் காட்டுகிறேன் என்று மாதவியை அழைத்துச் சென்று போதி நீண்ட நேரம் ஆகியும் கீழே வராமல் போகவே, அவன் தங்கை தீபாவை அனுப்பி அவர்கள் இருவரையும் அழைத்து வரச் சொன்னார் போதியின் அம்மா.
அவர்களைத் தேடி முதலில் சரளாம்மாவின் அறைக்குச் சென்ற தீபா, அவர்கள் அங்கு இல்லாமல் போகவே, ‘சரி எதற்கும் அண்ணனின் அறைக்குச் சென்று பார்க்கலாம்,’ என்று போதியின் அறைக்கு வந்தவள். போதியின் அறைக்கதவு சாத்தி இருக்க… ‘நான் கதவைத் தட்டலாமா வேண்டாமா?’ என்று தயங்கியபடியே நின்றிருந்தால் தீபா.
அவள் யோசித்தபடி நின்று இருக்க… அப்போது சரியாகப் போதியின் அறைக்கதவைத் திறந்து கொண்டு சிரித்தபடியே வெளியே ஓடிவந்த மாதவி, நேராகத் தீபாவின் மேல் போய் மோதி நின்றாள்.
(முந்தைய பத்தியில் விடுபட்ட காட்சித் தொடர்ச்சி): போதி மாதவிக்கு முத்தம் கொடுக்க… மாதவி உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவள், இப்போதைக்கு முத்தம் கொடுத்து உன்னிடமிருந்து தன் முகத்தைப் பிரித்து அவன் கண்களைப் பார்த்தவள், “லவ் யூ அத்தான்,” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவன் முகம் நோக்கிக் குனிய… அவள் தனக்கு முத்தம் கொடுக்க வருகிறாள் என்று நினைத்த போதி அவள் முத்தத்தை அனுபவிக்கத் தன் கண்களை மூடிக் கொள்ள… மாதவி அவன் கண்களை மூடியதும், ‘அத்தானுக்கு என் முத்தம் அவ்வளவு பிடிக்கும் போல,’ என்று சொல்லிவிட்டு அவன் உதட்டில் முத்தம் வைத்தவள், அவன் அவள் முத்தத்தில் கரைந்து கொண்டு இருக்க… அவன் உதட்டில் முத்தம் வைத்துக் கொண்டிருந்த மாதவி, போதி சற்றும் எதிர்பாராத நேரம் பார்த்து அவன் உதட்டைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தவள், அவனை மெத்தையில் தள்ளிவிட்டு, படுக்கை அறை கதவைத் திறந்து கொண்டு மாதவி வெளியே ஓடி வந்துதான் தீபாவின் மேல் இடித்தாள்.
தன் உதட்டை இப்படி கடித்துவிட்டுச் சென்ற மாதவியைத் துரத்திப் பிடிக்க, மெத்தையின் மேலிருந்து எழுந்த போதி அவளைத் துரத்திக் கொண்டு பின்னால் வர, தீபாவிடம் இருவரும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.
மாதவி இடித்ததில் தீபாவின் தலை வலிக்க, அதைத் தேய்த்து விட்டுக் கொண்டே நிமிர்ந்து மாதவியைப் பார்க்க, அவள் பின்னால் துரத்திக் கொண்டு வந்த போதியையும் பார்த்தவள், இருவரும் ஏதோ ஒரு வேலையைச் செய்து விட்டுத்தான் இப்படி ஓடி வருகிறார்கள் என்று புரிந்தவள், அவர்கள் இருவரையும் பார்த்து இடுப்பில் கைவைத்து நின்ற தீபா.
“வீட்டில ஒரு வயசுப் பொண்ணு இருக்குதுங்கிறத ரெண்டு பேரும் ஞாபகம் வச்சுக்கோங்க. இப்படி என் முன்னாடி நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆவதற்கு முன்னாடியே ரொமான்ஸ் பண்ணிட்டு சுத்திகிட்டு இருந்தா, இந்தச் சின்னப் பொண்ணு மனசு கஷ்டப்படுமா இல்லையா?” என்று தீபா பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க…
அவன் அருகில் வந்த போதி, “ஹேய் தீபா! இதைப் போய் வீட்டில் யார்கிட்டயும் சொல்லிடாதடி. அப்புறம் நான் அவ்வளவுதான்,” என்ற போதி, “இனிமேல் இப்படி எல்லாம் நடக்காமல் நான் பார்த்துக்குறேன்,” என்று தீபாவிடம் சொல்ல…
“ஆஹா! அண்ணா! இவ்வளவு நேரம் எனக்கு இந்த ஐடியா தோணாமல் போயிடுச்சு. நான் இப்பவே போய் வீட்டில் இருக்கிறவங்க கிட்ட சொல்றேன்,” என்று சொல்லிவிட்டு தீபா அங்கிருந்து ஓடப் போக, அவள் கையைப் கெட்டியாகப் பிடித்து இழுத்துத் தன்னருகில் நிறுத்தி வைத்த மாதவி.
“நீ மட்டும் என்னையும் உங்க அண்ணாவையும் பத்தி கீழே போய் சொன்னா, கல்யாணம் ஆன பிறகு இந்த வீட்டுக்கு வந்து நான் உன்ன அண்ணியா இருந்து உன்னை நான் இந்த வீட்டு வேலை எல்லாம் செய்யச் சொல்லி கொடுமைப் படுத்துவேன். உனக்கு ஒரு லூசைப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணி வச்சு, உன்னை இங்கிருந்து துரத்தி விட்டுடுவேன்,” என்று மாதவி தீபாவை மிரட்ட….
மாதவியைப் பாவமாகப் பார்த்த தீபா, தன் அண்ணனிடம் திரும்பி, “அண்ணா! உனக்கு இந்த அண்ணி வேணுமா?” என்று கேட்டால்.
“கண்டிப்பா வேணும்,” என்று போதி சொல்ல…
அவள் கையை உதறிய தீபா, “போங்க. இவங்க என்ன ரொம்ப மிரட்டுறாங்க. நான் உங்க ரெண்டு பேர் கூடப் பேச மாட்டேன்,” என்று சொல்லி முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள…
மாதவி தீபாவைக் கட்டிக்கொண்டு, “நாங்க எங்களைப் பத்தி நீ கீழ சொல்லாத வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் உன்னை எதுக்காகவும் மிரட்டவே மாட்டேன். அதையெல்லாம் மீறி அப்படி எதுவும் உங்க ரெண்டு பேரைப் பத்தியும் உங்க வீட்ல சொன்னா, நான் இப்போ சொன்னது எல்லாம் செஞ்சிடுவேன்,” என்று மாதவி சொல்ல…
“நான் சும்மா விளையாட்டுக்கு தான் அண்ணே கீழே போய்ச் சொல்றேன்னு சொன்னேன். சத்தியமா நான் கீழ போய்ச் சொல்ல மாட்டேன்,” என்று தன் கழுத்தில் கை வைத்துக் சொன்னால் தீபா.
மாதவி தீபாவின் கன்னத்தில் முத்தம் வைத்தவர், “சரி வா நம்ம கீழே போகலாம்,” என்று அவளை அழைத்துக்கொண்டு கீழே செல்ல, வந்த கொஞ்ச நேரத்தில் தன் தங்கையைக் கொஞ்சியும் மிரட்டியும் அவளுக்கு சாதகமாகப் பேச வைத்து விட்டாளே என்று மாதவியை நினைத்து ஆச்சரியமாக அவள் பின்னாலேயே சென்றான் போதி.
கீழே வந்த மூவரும் சிறிது நேரம் அனைவரிடமும் பேசிக் கொண்டு இருந்தனர். பின் போதி மாதவிக்கு நேரம் ஆகிவிட்டதால் அவளை அழைத்துக் கொண்டு போய் விட வேண்டும் என்று மாதவியை அழைத்து வந்தவன், மாதவியின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி கொண்டு வந்து அவளை இறக்கிவிட…
தன் வீட்டின் பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டு இருந்த சங்கவி, மாதவி யாருடனோ வந்து காரில் இறங்கியதைப் பார்த்தவள். அவள் யாருடன் வந்து இறங்குகிறாள் என்று பார்க்க… அவளுக்குப் போதி காருக்குள் இருந்தது தெரியவில்லை. காரில் இருந்து இறங்கிய மாதவி ஓட்டுநர் இருக்கை (Driver Seat) அருகில் வந்து குனிந்து யாருடனோ வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்துப் பேசியவள் கிளம்பப் போக… அதையெல்லாம் மாடியில் இருந்து சங்கவி பார்த்துக் கொண்டு இருக்க… அப்போது மாதவியின் சுடிதார் துப்பட்டாவைப் பிடித்துக் காரில் இருந்தவர் பிடித்து இழுக்கவும். மாதவி தன் துப்பட்டாவை அவர் கையில் இருந்து எடுத்துக் கொண்டு என்னவோ சிரித்துப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்ப… மாதவி வீட்டின் கதவைத் தாண்டி வரும் வரை அந்தக் காரைத் திரும்பிப் பார்த்தபடி உள்ளே வந்தாள். அவள் வீட்டிற்குள் வந்த பிறகுதான் அந்தக் கார் அங்கிருந்து சென்றது.
இதையெல்லாம் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த சங்கவி, ‘அந்த காரை இதற்கு முன்பு எங்கோ பார்த்து இருக்கிறோமே,’ என்று யோசனையுடன் கீழே இறங்கி வர… மாதவி வெட்கப்பட்டுக் கொண்டே வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்தால். அவளைப் பார்த்துக் கொண்டே சங்கவி அவள் எதிரே வந்து நிற்க…
போதியைப் பற்றிய நினைப்போடு வந்து கொண்டு இருந்த மாதவி, தன் எதிரே சங்கவி வந்து நின்றது கூடத் தெரியாமல் அவள் மீது மோதிவிட்டால். இடித்த வேகத்தில் எதிரில் நின்று இருந்த சங்கவியைப் பார்த்து, “அக்கா! நீங்க என்ன இந்த நேரத்துல வீட்டுல இருக்கீங்க? இன்னிக்கு ஆபீஸ் போகலையா?” என்று கேட்டாள்.
“இல்லை. தலை வலிக்குதுன்னு வந்துட்டேன்,” என்றாள் சங்கவி.
“நான் வேணும்னா உங்களுக்கு காபி போட்டு தரட்டுமா?” என்று மாதவி கேட்டாள்.
“வேண்டாம். நான் இப்போ தான் குடிச்சேன்,” என்ற சங்கவி, “ஆமா, நீ ஏன் இவ்வளவு லேட்டா ஆகுறே?” என்று கேட்டாள் மாதவியிடம்.
சங்கவி தான் லேட்டாக வந்ததைக் கவனித்து விட்டாள் என்று தெரிந்ததுமே மாதவிக்குப் பயம் ஆகிவிட்டது. “அ…அது ….அது வந்து அக்கா, நான் வர வழியில பேருந்து பழுது (Bus Breakdown) ஆகிருச்சு அக்கா. அதான் லேட்டா,” என்றால் மாதவி.
தன்னிடம் மாதவி பொய் சொல்கிறாள் என்றதும் சங்கவிக்குக் கோபம் தான் வந்தது. இருந்தும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “**சரி, நீ போய் ஓய்வு எடு (Rest),” என்று சொல்லி மாதவியை உள்ளே அனுப்பினால்.
‘அப்பாடா…. தப்பித்தோம்,’ என்று நினைத்த மாதவி உள்ளே செல்ல… மாதவியைக் கொண்டு வந்து யார் இறக்கி விட்டு இருப்பார்கள் என்று யோசனையிலேயே வெளியே சென்றால் சங்கவி.
கௌதம்மிற்கும் பவித்ராவிற்கும் திருமணத் தேதி முடிவு செய்துவிட்டு, அவர்களுக்குத் திருமணத்திற்குத் தேவையான பொருட்களை எல்லாம் ஒரே நாளில் வாங்கி முடித்து, பத்திரிகை அடிக்கச் சொல்லிவிட்டு, எல்லா வேலையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான் பவன். அவன் அம்மாவிற்கு உடம்பு முடியாமல் போகவே, அவரே வெளியில் அழைத்துச் செல்லாமல், வீட்டில் இருக்கும் ஜெயாவை விட்டுவிட்டு, பவன் மட்டும் பவித்ராவை அழைத்துக்கொண்டு சென்றிருந்தான்.
களைப்போடு பவனும் பவித்ராவும் வீட்டிற்கு வர… வீட்டிற்கு அருகில் வரும் பொழுதே அவன் அம்மாவின் சிரிப்பு சத்தம் பலமாகக் கேட்டது. தன்னுடைய அம்மா இவ்வளவு சத்தமாகச் சிரித்துக் கேட்டுப் பவனுக்கு வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவன் அம்மாவின் சிரிப்பு சத்தம் கேட்ட பவன், பவித்ராவைப் பார்த்து, “என்ன பவி? அம்மா இவ்வளவு சத்தமா சந்தோஷமா சிரிச்சு யார் கூடப் பேசிட்டு இருக்காங்க?” என்று கேட்க…
“தெரியலையே அண்ணா. எனக்கும் அதுதான் ஆச்சரியமா இருக்கு. நம்ம அம்மாவா இவ்வளவு சந்தோசமா பேசுறது! உள்ளே வா அண்ணா. யார் வந்து இருக்காங்கன்னு போய் பார்ப்போம்,” என்று சொல்லிவிட்டு பவித்ரா ஆர்வமாக உள்ளே செல்ல.. பவனும் பவித்ராவின் பின்னால் தன் வீட்டிற்குள் சென்றான்.
பவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர், பவித்ராவும் பவனும் வீட்டிற்குள் வருவதைப் பார்த்தவர், “இதோ வந்துட்டான் என் பையன்,” என்று தன் எதிரே அமர்ந்து இருந்தவரிடம் சொல்ல… யார் என்று பவன் திரும்பிப் பார்க்க, அங்கே மது அமர்ந்திருந்தால்.
அவளைப் பார்த்ததும் பவனுக்கு இன்ப அதிர்ச்சி ஆகிப் போனது. ஏனென்றால் தன் தங்கையின் திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து அவனால் மதுவிடம் சரியாகப் பேச முடியவில்லை. அவளுடன் நேரம் செலவழிக்கவும் முடியவில்லை. அவளைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று தன் வீட்டிற்கு மது வந்திருப்பதை கண்டவனுக்கு அதிசயமாக இருந்தது.
மதுவைப் பார்த்துச் சிரித்தவன், சிரித்தபடி வந்து அவன் அம்மாவின் அருகில் அமர்ந்தவன், “வாங்க மது…எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று புதிதாக வந்தவரிடம் பேசுவது போல பவன் பேச… அவனைப் பார்த்துச் சிரித்தவள், தலையாட்டிவிட்டு, “நன்றாக இருக்கிறேன்,” என்று மதுவும் அவனைப் போலவே பேசினால்.
மதுவும் பவனும் காதலிக்கும் விஷயம் பவித்ராவிற்குத் தெரியும். ஆனால் அவளுக்கு இந்த விஷயம் தெரியும் என்று பவனுக்குத் தெரியாது. அவள் இவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்து, ‘ரெண்டு பேரும் நல்லா நடிக்கிறாங்க,’ என்று மனதிற்குள் நினைத்தவள், மதுவிடம் வந்து அமர்ந்து அவளுடன் சினேகம் பாராட்டினாள்.
“மது அக்கா! எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இங்கிருந்து போனதுக்கு அப்புறம் எங்களை எல்லாம் மறந்துட்டீங்க அப்படித்தானே? எங்க கூட எல்லாம் நீங்க பேசுவீங்களா?” பவித்ரா கேட்க..
“என்ன பவித்ரா இப்படி கேட்கிற? அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. அப்படி இல்லாமலா நான் உங்களை எல்லாம் பார்க்க இவ்வளவு தூரம் வந்து இருக்கேன்,” என்று மது கேட்டால்.
‘நீங்க எங்களை எல்லாமா பார்க்க வந்திருக்கீங்க… எங்க அண்ணனைப் பார்க்கிறதுக்காகத் தானே இங்க வந்து இருக்கீங்க… எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டீங்களா…’ என்று மனதில் நினைத்துக் கொண்டு பவித்ரா மதுவைப் பார்த்துச் சிரித்தாள்.
பின் பொதுவாக அனைவரும் பேசிக் கொண்டு இருக்க, இரவாகி விட மது கிளம்புவதாகக் கூறவும். அவளைச் சாப்பிட்டு விட்டுச் செல்லும்படி பவனின் அம்மா வற்புறுத்த, வேறு வழியில்லாமல் மது சாப்பிடுவதாக ஒப்புக்கொண்டவள், “இன்னைக்கு நானே சமைக்கிறேன்,” என்று சொல்லி அவள் சமையல் அறையில் புகுந்து சமையல் செய்ய ஆரம்பித்தாள். அவளுடன் சேர்ந்து ஜெயாவும் பவித்ராவும் பேசிக்கொண்டே மதுவுக்கு உதவி செய்ய, மூன்று பெண்களும் சமையல் அறையில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் வரவேற்பறையில் இருக்கும் பவனின் அம்மாவிற்கும் பவனுக்கும் நன்றாகக் கேட்டது.
மது வந்ததும் வீடே கலகலவென மாறிவிட… அவளைப் பார்த்து, “அந்தப் பொண்ணு எவ்வளவு நல்ல பொண்ணு! இப்படிப்பட்ட ஒரு பொண்ண வெச்சு அவ புருஷனுக்கு வாழத் தெரியலையே,” என்று பவனிடம் புலம்பினார்.
மதுவின் கணவரைப் பற்றிப் பேசியதும் பவனின் முகம் மாறிவிட்டது. அவனிடம் அதற்கு மேல் எதுவும் பேசாத பவன், எழுந்து தன்னறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டான். ‘என்னாச்சு இவனுக்கு? ஏன் எழுந்துச்சு உள்ளே போயிட்டான்?’ என்று யோசிப்படியே பவனின் அம்மா அமர்ந்திருக்க… சமையல் அறையில் சமையலை முடித்துவிட்டு வெளியே வந்த மது, “ஆன்ட்டி! சாப்பாடு ரெடி. சாப்பிடலாமா?” என்று கேட்டால்.
“சரிமா சாப்பிடலாம்,” என்று சொல்லி அவர் உணவு மேஜைக்கு (Dining Table) வர, பவித்ரா, மது, பவனின் அம்மா மூவரும் அமர்ந்திருக்க ஜெயா அனைவருக்கும் பரிமாறினால்.
மது பவன் தான் செய்த உணவைச் சாப்பிடுவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்க… அவன் தன் படுக்கை அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அவனை ‘எங்கே?’ என்று கேட்கவும் மதுவுக்குத் தயக்கமாக இருக்க, அப்போது மதுவின் தவிப்பை உணர்ந்த பவித்ரா அவள் அம்மாவிடம், “அம்மா! அண்ணன் சாப்பிட வரலையா?” என்று கேட்டால்.
“எனக்குத் தெரியலடி. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம். திடீர்னு கோவம் வந்தவனா ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திக்கிட்டான்,” என்று அவர் சொல்ல… “நீ தான் போய் உன் அண்ணனைக் கூட்டிட்டு வாயேன்,” என்று சொன்னார் பவித்ராவின் அம்மா.
“அண்ணா வேற கோபமா இருக்காருன்னு சொல்ற. கோவமா இருக்குறப்ப அண்ணன போய்க் கூப்பிட போனா அண்ணா என்கிட்டயும் சண்டைக்கு வரும். நான் போய் அண்ணனைக் கூப்பிட மாட்டேன் போ,” என்று பவித்ரா செல்ல மாட்டேன் என்று இடம் பிடித்தால்.
அவர்கள் பேசியதைப் பார்த்த மது, “ஆன்ட்டி! நான் வேணா போய்ப் அவரைச் சாப்பிட அழைச்சிட்டு வரட்டுமா?” என்று கேட்டால் மது.
“சரிமா. நீயே போய்க் கூப்பிடு. அவன் கோபமா இருக்கான்னு கொஞ்சம் பார்த்துப் பேசுமா…” என்று சொல்லி அவளை அனுப்பி வைக்க…
‘சரி’ என்று தலையாட்டிவள் எழுந்து சென்று பவனின் அறைக்கு வந்தவள், அவன் அறைக்கதவைத் தட்டி விட்டு மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே தன் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்க்க… அவள் அவன் அறையை எட்டிப் பார்த்ததும்தான் தாமதம், பவன் அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்துக் கதவைச் சாற்றிக்கொண்டான்.
திடீரென்று பவன் செய்த செய்கையில் தடுமாறிய மது, அவன் மேலேயேபோய் விழ.. அவளை விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்ட பவன், நொடியும் தாமதிக்காமல் அவள் இதழை சிறை செய்தான். இதைச் சற்றும் எதிர்பாராத மது அவன் தோளில் அடிக்க.. பவன் அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன் போலத் தன் வேலையில் மும்முரமாக இருந்தான்.
கை வலிக்கும் வரை அவனை அடித்தவள் அவன் முத்தத்திற்கு இணங்கிச் செல்ல… அவள் இடையோடு கைகொடுத்துத் தன் உடலோடு சேர்த்து மதுவைக் கட்டி அணைத்தவன், அவளுக்கு முத்தம் வைத்துவிட்டு, “மிஸ் யூ டி..” என்றான்.
“நானும் தான்,” என்ற மது, “நீ தோ கோவமா இருக்கேன்னு ஆன்ட்டி சொன்னாங்க… ஆனா நீ பண்றதை எல்லாம் பார்த்தா அப்படித் தெரியலையே,” என்று மது கேட்க…
“கோபமாத் தான் இருந்தேன். ஆனா உன்னைப் பார்த்ததும் என் கோபம் எல்லாம் காணாமல் போயிடுச்சு,” என்றான்.
“சரி அப்போ வா போகலாம். அங்கே நமக்காக எல்லாரும் சாப்பிடாமலே இருக்காங்க,” என்று மது சொல்ல..
“சரி,” என்று அவளை இழுத்து மீண்டும் ஒரு முத்தத்தை அவள் உதட்டில் அழுத்தமாக வைத்து விட்டு வெளியே செல்லப் போக.. அப்போது மது அவன் அறையில் ஒரு தலையணைக்கு மட்டும் சட்டை போட்டு இருந்தது கவனிக்க… ‘இந்த சட்டையை இதுக்கு முன்ன நான் பார்த்திருக்கேன்,’ என்று யோசித்தவளுக்கு, அன்று ஒருநாள் அலுவலகத்தில் (Lab) தன் புடவை மாட்டிக் கொள்ள… அப்போது தனக்குப் போட்டுக்கச் சொல்லி பவன் அன்று தனக்குக் கொடுத்த சட்டை (Shirt) இது என்று தெரிந்து கொண்டவள், அவனைத் திரும்பிப் பார்த்து, “என்ன இது?” என்றால்.
அவளுக்குத் தெரிந்து விட்டதே என்று பவன் மதுவை நெளிந்து கொண்டே பார்க்க… “என்னடா இது? நான் அன்னிக்குப் போட்ட சட்டையை இந்தத் தலையணைக்குப் போட்டு விட்டு இருக்கே?” என்று கேட்டால்.
“அதுவா? அது நீ என் பக்கத்துல இல்லாதப்போ, அதை நீயா நினைச்சுக் கட்டிப் பிடிச்சுட்டுத் தான் தூங்குவேன்,” என்றான்.
“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ செல்லம். அப்பறம் இந்தத் தலையணைக்கு பதிலா நீ என்னை அணைச்சிட்டுத் தூங்கலாம்,” என்றவள் அவன் கையைப் பிடித்து அவன் அறையை விட்டு வெளியே வந்தவள் சாப்பிட அழைத்துச் செல்ல..
அனைவரும் பவன் வந்ததும் சாப்பிட்டு முடிக்க… மதுவிற்கு வீட்டிற்கு நேரம் ஆகிவிட்டது என்று அங்கிருந்து கிளம்பினாள்.
