Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 173

உன் ரகசிய ரசிகை நான் 173

by Layas Tamil Novel
164 views

EPISODE 173

பார் ஒன்றுக்கு ஆதியை வரச் சொல்லியிருந்த சங்கவி, ரவி தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மறைமுகமாகச் சொல்ல…

ஆதி அதற்கு மறுத்துவிட்டான்.

சங்கவி அவன் மனதில் தான் இருப்பதாக அடித்துக் கூற…

துர்காவைத் தவிர என் மனதில் வேறு யாருமே இல்லை என்று உறுதியாகச் சொன்னான் ஆதி.

“ஆதி, நீ பொய் சொல்ற. உன் மனசுல கண்டிப்பா நான் இருக்கேன். வீம்புக்காகவே நீ உன் மனசுல நான் இல்லைன்னு என்கிட்ட சொல்ற” என்றாள் சங்கவி.

“நான் சொல்றதை நீ நம்பணும் என்கிற அவசியம் எனக்குக் கிடையாது. நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன், அவ்வளவுதான். என் மனசுல நீ இல்லை. முதல்ல என்கிட்ட இருந்து தள்ளி உட்காரு” என்று அவள் பிடித்திருந்த தன் கையை விலக்கியவன், அவளிடமிருந்து தன் இருக்கையை நகர்த்திப் போட்டு அமர்ந்தான்.

“அப்போ உண்மையாவே நான் உன் மனசுல இல்லை, அப்படித்தானே ஆதி?” என்று கேட்டாள் சங்கவி.

“நீ எத்தனை முறை, எப்படி கேட்டாலும் என்னோட பதில் ஒன்றுதான். என் மனசுல துர்கா மட்டும்தான் இருக்கா” என்றான் ஆதி.

“உன் மனசுல நான் இல்லைங்கிறதை இப்பவே, இங்கேயே, என் கண் முன்னாடியே நிரூபிச்சுக் காட்டு” என்றாள் சங்கவி.

“உன்கிட்ட நிரூபிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை” என்றான் ஆதி.

“என்கிட்ட நிரூபிச்சாதானே எனக்குத் தெரியும், நான் உன் மனசுல இருக்கேனா இல்லையான்னு?” என்றாள் சங்கவி.

“சரி, சொல்லு. நான் என்ன செய்து நிரூபித்தால், என் மனதில் நீ இல்லை என்பதை ஒத்துக் கொள்வாய்?” என்று கேட்டான்.

அவனைப் பார்த்து வில்லங்கமாகச் சிரித்த சங்கவி, அங்கிருந்த பணியாளரை அழைத்தாள்.

அவள் அழைத்ததும் அந்தப் பணியாளர் இவர்கள் மேசை முன்பு வந்து பணிவாக நின்று, “யெஸ் மேடம், ஆர்டர்” என்று கேட்க…

“உங்க பாரிலேயே உள்ளதிலேயே விலை அதிகமான மது, அதைக் குடித்தால் அதிகம் போதை ஆகிற மது இருக்கிறதா?” என்று கேட்டாள்.

அவன் சற்று யோசித்தவனாக, “போதை அதிகமாக இருக்கிற மது வேணுமா மேடம்? அந்த மாதிரி மது இருக்கு மேடம். அது ஒரு கிளாஸ் குடிச்சாலே போதும், நம்ம அப்படியே தரையிலேயே இருக்க மாட்டோம். அப்படியே காத்துல மிதக்கிற மாதிரி இருக்கும் அந்த மது” என்று அவன் சொல்ல…

“ஹா! அதேதான்! அந்த மதுவை அப்படியே ஒரு ஃபுல் பாட்டில் இங்கே எடுத்துட்டு வா” என்றாள் சங்கவி.

“மேடம், ஃபுல் பாட்டிலா? ஃபுல் பாட்டில் எதுக்கு மேடம்? அது ஒரு கிளாஸ் குடிச்சாலே போதும். சுத்தி என்ன நடக்குதுங்கிற நினைப்பே இல்லாம, அந்த அளவுக்குப் போதை உங்க கண்ணை மறைத்துவிடும். இதுவரைக்கும் அந்த பாட்டிலை யாருமே முழுசா குடித்ததில்லை. எல்லாருமே ஒரு ரவுண்டு, இல்லை என்றால் இரண்டாவது ரவுண்டு – அவ்வளவுதான். அதுக்கு மேல யாருமே தாங்கியது இல்லை மேடம்” என்று அந்தப் பணியாளர் சொல்ல…

“நான் உன்கிட்ட என்ன சொன்னேனோ அதை மட்டும் செய். தேவையில்லாம பேசுற வேலை எல்லாம் வேண்டாம்” என்று சங்கவி அந்தப் பணியாளரைத் திட்ட…

அந்தப் பணியாளர் அதற்கு மேல் சங்கவியிடம் எதுவும் பேசத் துணியாமல், அவள் சொன்னது போலவே சென்று விலை உயர்ந்த, குடித்தால் போதை அதிகம் ஏறக்கூடிய மதுவை எடுத்து வந்து சங்கவியின் மேசையில் வைத்தான். கூடவே இரண்டு மது குடிக்கும் கிளாஸ்களையும் வைத்தான்.

அதில் இருந்த ஒரு கிளாஸை எடுத்து அவனிடம் நீட்டிய சங்கவி, “இது தேவையில்லை. ஒரு கிளாஸ் இருந்தா போதும்” என்றாள்.

சங்கவியை ஒரு மாதிரியாகப் பார்த்த அந்தப் பணியாளர் அவள் கையில் இருந்த கிளாஸை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.


அவன் சென்றதும், அந்த கிளாஸையும் மதுப் பாட்டிலையும் ஆதியின் முன்பு நகர்த்தி வைத்த சங்கவி, “அவன் சொன்னது நீ கேட்டுட்டுத்தானே இருந்த? இந்த மது ரொம்பப் போதை அதிகமாக இருக்கிறது. ஒரு டம்ளர் குடிச்சாலே போதை அதிகமாகிடும் என்று சொல்கிறான். நீ இந்த மதுப் பாட்டிலில் இருக்கிற எல்லா மதுவையும் மொத்தமா குடிக்கணும். பாட்டிலில் இருக்கிற மொத்த மதுவையும், ஒரு துளி மிச்சம் வைக்காமல், நீ குடிச்சிட்டேனா… உன் மனசுல நான் இல்லை, அந்த துர்காதான் இருக்கிறாள் என்று நான் நம்புறேன்” என்றாள்.

‘இவளுக்கு என்ன பைத்தியமா? இந்த மதுப் பாட்டில் முழுவதையும் நான் குடித்துவிட்டால் தான் என் மனதில் அவள் இல்லை என்பதை நம்புவாளா?’ என்று ஆதி அவளைப் புரியாமல் பார்த்தான்.

அப்போது சங்கவி கொடுத்த கிளாஸை கொண்டுபோய் வைத்த அந்தப் பணியாளர், அங்கிருந்த நபரிடம், “அந்த அம்மா அவங்க டேபிளில் இருக்கிற அந்த ஆளை எதுலையோ மாட்டிவிடப் போறாங்க போல இருக்கு” என்றான்.

அந்த நபர், “ஏன் அப்படி சொல்ற?” என்று அந்தப் பணியாளரிடம் கேட்க, “அந்த மேசையில் இருக்கும் அந்த மதுப் பாட்டிலில் இருக்கிறதை இதுவரைக்கும் யாருமே ஒன்று, இரண்டு கிளாஸுக்கு மேல குடித்ததில்லை. ஆனா அந்த அம்மா அந்த மொத்த பாட்டிலையும் வாங்கி, அதில் இருக்கிற மதுவை அந்த அம்மாவுக்கு எதிரில் இருக்கிற அந்த ஆளுகிட்ட கொடுத்து, இதை முழுசா குடிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கு” என்றான்.

அவன் சொன்ன செய்தி சற்று நேரத்தில் அந்த பார் முழுவதும் வெகு விரைவில் பரவியது. அங்கு குடித்துக்கொண்டிருந்த ஆட்கள் அனைவரும் ஆதியின் மேசையையே பார்க்க…

அதை கவனித்த சங்கவி தான் அமர்ந்திருந்த மேசையிலிருந்து எழுந்து நின்றவள், கைதட்டி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினாள். அங்கிருந்தவர்களை ஒரு முறை நோட்டம் விட்டவள், பின்பு “இதோ இங்கே இருக்கே, இந்த பாட்டிலில் இருக்கிற மது மிகவும் போதை நிறைந்ததுன்னு இந்தப் பணியாளர் இப்போதான் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனாரு. உங்க எல்லோர் டேபிளுக்கும் இதேபோல பாட்டில் நான் என்னோட செலவிலேயே கொடுக்கச் சொல்றேன். என் முன்னாடி இருக்காரு, இவர் உங்களை எல்லோரையும்விட தன்னால இந்த மதுவை அதிகமாகக் குடிக்க முடியும் என்று என்கிட்ட சவால் விட்டு இருக்காரு. இங்க இருக்கிறவங்க யாராவது ஒருத்தர், ஒரு குடிக்கிற மதுவோட அளவைவிட ஒரே ஒரு கிளாஸ் அதிகமா குடிச்சா போதும், அவங்களுக்கு நான் ஒரு லட்சம் இங்கேயே பரிசு தரப் போகிறேன்” என்று சொல்லி, தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து அவள் இருந்த மேசை மீது வைத்துச் சொன்னாள்.

அவள் போட்டி என்று அறிவித்ததுமே அங்கிருந்தவர்களுக்கு ஆர்வம் அதிகமானது.

“இந்த போட்டியில யார் கலந்துக்கிறீங்களோ, அவங்க எல்லாம் அங்கு இருக்கிற டேபிளில் வந்து உட்காருங்க. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாட்டில் நான் கொண்டு வந்து கொடுக்கச் சொல்றேன்” என்று சங்கவி சொல்ல…

அந்தப் பாருக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த ஆண்கள், பெண்கள் என தங்களுக்குள் பேசிக்கொண்டு, எழுந்து சென்று அவள் சொன்ன மேசைகளில், அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அமர்ந்தனர். அதில் சில பெண்கள்கூட அமர்ந்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் வந்து உட்கார்ந்ததைப் பார்த்த சங்கவி, பணியாளரிடம் சொல்லி, அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் இதேபோல மதுப் பாட்டில்களை கொண்டு வந்து அவர்களிடம் கொடுக்கச் சொன்னாள்.

“போட்டியை ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று சங்கவி கேட்க, அருகில் இருந்த மேசைகளில் அமர்ந்திருந்தவர்கள் ‘ஓகே’ என்று தங்கள் கட்டைவிரலை தூக்கி கட்டைவிரலை உயர்த்தி சமிக்ஞை காட்ட…

சங்கவி ஆதியிடம் திரும்பி, “அந்த டேபிளில் இருக்கிறவங்க உன்னைவிட அதிகமா குடிக்கக்கூடாது. அப்படின்னா என்ன அர்த்தம்? அவங்க குடிக்கிறதைவிட நீ அதிகமா குடிச்சுக் காட்டு. அப்போதான் உன் மனசுல நான் இல்ல, அந்த துர்கா மட்டும்தான் இருக்கா என்று நான் நம்புவேன்” என்றாள்.

“இவ்வளவு கேவலமான புத்தி உன்கிட்ட இருக்குன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை, சங்கவி. கேவலம், இந்த மதுவை வைத்து என்னை நீ எடை போடுற. பரவாயில்லை! இந்தப் போட்டிக்கு நான் தயார். அந்த டேபிளில் இருக்கிறவங்கள்ள யாரு அதிகமா குடிக்கிறாங்களோ, அவங்களைவிட நான் ஒரு கிளாஸ் அதிகமா குடிச்சுக் காட்டுறேன்” என்றான் ஆதி.

“நான் செய்யறதுக்கு காரணம், நீ என் மனசுல இருக்கேன்னு நிரூபித்துக் காட்டுவதற்காக இல்ல. என் துர்கா மட்டும்தான் என் மனசுல இருக்கா. அவளுக்காகத்தான் நான் இந்தப் போட்டியையே ஒத்துக்கிறேன். மனசுல என் துர்காவுக்குத் தூங்குற யாருமே கிடையாதுன்னு உனக்கு நான் ப்ரூஃப் பண்ணி காட்டுறேன்” என்ற ஆதி, “நான் தயார்” என்றான்.

அவன் சொன்னதை “பார்த்துக்கலாம்” என்று சிரித்த சங்கவி, “ஓகே, போட்டியை ஸ்டார்ட் செய்யலாம்” என்று மணியைப் பார்த்துவிட்டு தன் கைகளைத் தட்ட…

அவள் கைதட்டியதும் அவர்கள் மேசைக்கு அருகில் போட்டியில் கலந்து கொள்ள அமர்ந்திருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்கள் எதிரில் இருந்த பாட்டில்களில் இருந்த மதுவை ஒவ்வொரு கிளாஸாக ஊற்றி குடிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் ஆதி மட்டும் குடிக்காமல், அவர்கள் குடிப்பதையே உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருந்தான்.

அதில் கலந்துகொண்ட இரண்டு, மூன்று பெண்கள் முதல் கிளாஸிலேயே போதை அதிகமாகிவிட, அதற்கு மேல் குடிக்க முடியாமல் திணறினர்.

அவர்களையே பார்த்த சங்கவி, “பார்த்தியா? அந்த மது எவ்வளவு போதையை கொடுத்திருக்குன்னு” என்றால்.

அவள் பேசுவதைக் காதிலேயே வாங்காமல் அமர்ந்திருந்த ஆதி, அந்த மேசைகளில் குடிக்கும் மற்றவர்கள் மீது தன் கவனத்தைச் செலுத்தினான். ஒரு சிலர் மூன்றாவது கிளாஸிலேயே மயக்கம் ஆகிவிட, மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மதுவைக் குடிக்கத் திணறிக் கொண்டு இருப்பதை கவனித்தான்.

ஒவ்வொருவராக மது குடிக்கக் குடிக்க, பாதியிலேயே அதற்கு மேல் குடிக்க முடியாமல் மயங்கி, தாங்கள் அமர்ந்திருந்த மேசையிலேயே படுத்துவிட… அனைவரும் பாதி பாட்டில்கூட குடிக்க முடியாமல் அப்படியே மது போதை அதிகமானதில் மயங்கிவிட…

போட்டியில் கலந்துகொண்டவர்கள் மயங்கி விழுந்ததைப் பார்த்த சங்கவி, “என்ன ஆதி, நீ இன்னும் குடிக்காம அவங்களே பார்த்துட்டு இருக்க? உன்னால அதுக்கு மேல குடிக்க முடியாதா? அதனால்தான் இன்னமும் குடிக்காம இருக்கியா?” என்றால் சங்கவி.

அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ஆதி, முன்னாள் இருந்த மதுப் பாட்டிலைக் கையில் எடுக்க…

அவன் அருகில் கிளாஸை சங்கவி தள்ளி வைக்க, அந்த கிளாஸில் பக்கத்தில் இருந்த ஜூஸை எடுத்து அதை நிரப்பியவன், அதை அவளிடம் கொடுத்துவிட்டு, அந்தப் பாட்டில் மூடியைத் திறந்தவன், அப்படியே தன் வாயில் அந்த முழு பாட்டிலையும் கவிழ்த்தான் ஆதி.

அவன் ஒவ்வொரு கிளாஸாக ஊற்றிக் குடிப்பான். அவர்கள் குடித்ததைவிட பாதியிலேயே ஆதியால் குடிக்க முடியாமல் நிறுத்திவிடுவான் என்று நினைத்திருந்த சங்கவிக்கு, இப்படி பாட்டிலை பாட்டில் மொத்தத்தையும் அப்படியே தன் வாயில் கவிழ்ப்பான் என்று சங்கவி மட்டுமல்ல, அங்கு இருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.

பாதி பாட்டில்கூட குடிக்க முடியாமல் மயங்கிக் கிடந்தவர்களைப் பார்த்த சங்கவி, ஆதியும் அவர்களைப் போலவே சிறிது நேரத்தில் குடிக்க முடியாமல் மயங்கி விழுந்துவிடுவான், அவன் அவனிடம் போட்டியில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்து இருக்க…

அவள் கண் முன்னாலேயே தன் வாயில் கவிழ்த்திய பாட்டில் மொத்தத்தையும் மூச்சுவிடாமல் குடித்து முடித்த பிறகு, தன் வாயிலிருந்து பாட்டிலை எடுத்தவன், சங்கவியின் எதிரில் மேசையின் மீது வைத்தான். ஆதியைப் பார்த்து சங்கவி அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தாள்.

முழு பாட்டிலையும் குடித்து முடித்த ஆதிக்குக் கண்கள் சற்று மயங்கிக் கொண்டு வரத்தான் செய்தது.

அந்த மயக்கத்தோடு சங்கவியைப் பார்த்தவன், “இப்போ புரிஞ்சுக்கோ. என் மனசுல என் துர்கா மட்டும்தான் முழுசா நிறைஞ்சு இருக்கா. இந்த பாட்டிலில் இருக்கிற அது மதுவும் இல்ல, விஷமா இருந்தாலும், அவளுக்காக மொத்த பாட்டிலையும் குடிக்க நான் தயாராத்தான் இருக்கேன்” என்று சொன்னவன், “பணியாளர்!” என்று அழைத்தான்.

ஆதி முழு பாட்டிலையும் குடித்ததைப் வாய் திறந்து பார்த்துக்கொண்டு இருந்த அந்தப் பணியாளர், ஆதி சத்தமாக அழைத்ததும் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடி வந்து அவன் முன்பு நிற்க…

அவனிடம், “இந்த பார்ல இருக்க மொத்த பேரும் இன்னைக்கு எவ்வளவு வேணுமானாலும் குடிக்கட்டும். அந்த மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொன்னவன், “பில்லை என்னோட ஆபிஸ்க்கு நாளைக்கு கொடுத்துவிடு” என்று சொல்லி தன் விசிட்டிங் கார்டை எடுத்து அவன் முன் போட்டான்.

அந்தக் கார்டை எடுத்துப் பார்த்த அந்தப் பணியாளருக்கு அப்போதுதான் ஆதி யார் என்று தெரிந்தது.


பிறகு அங்கிருந்து எழுந்து ஆதி வந்து பாரை விட்டு வெளியே சென்றான். தட்டுத்தடுமாறி, தள்ளாடியபடியே வந்த ஆதி, தன் கார் கதவைத் திறக்க முயற்சிக்க… அவன் இருந்த போதைக்கு கார் சாவியைக்கூட சரியாகக் காரில் மாட்டி கதவைத் திறக்க முடியவில்லை.

அவன் பின்னாலேயே வந்த சங்கவி, அவன் தடுமாறி நின்று இருப்பதைப் பார்த்தவள், ‘எவ்வளவு நெஞ்சுரத்துக்காரன் இருக்கான்’ என்று நினைத்துக்கொண்டாள்.

அவன் அருகில் வந்து, “சரி வா. நானே உன்னை கொண்டுபோய் உன் வீட்டில் ட்ராப் பண்றேன்” என்றாள் சங்கவி.

“என் வீட்டிற்குப் போக எனக்கு வழி தெரியும். நீ ஒன்றும் என்னைக் கொண்டுபோய் விடத் தேவையில்லை” என்று சொன்னவன், எப்படியோ கார் சாவியை வைத்துக் கார் கதவை எப்படியோ திறந்தவன், காரில் ஏறி அமர்ந்து காரை ஓட்ட ஆரம்பித்தான் ஆதி.

எப்படியும் ஆதியால் இவ்வளவு போதையில் காரைச் சரியாக ஓட்ட முடியாது என்று கணித்த சங்கவி, அவன் பின்னாலயே பின்தொடர்ந்து வந்தாள்.

ஒரு கட்டத்தில் ஆதி காரை ஓட்ட முடியாமல், சாலையில் ஒரு ஓரமாக இருந்த தடுப்புச் சுவர் மீது இடித்துக்கொண்டு நிறுத்த… அவனைப் பின்தொடர்ந்து வந்த சங்கவி, அவன் காருக்கு அருகில் தன் காரை வந்து நிறுத்தியவள். ஆதியின் காரில் இருந்து அவனை கைத்தாங்களாகத் தூக்கி தன் காரில் அமர வைத்து ஆதியின் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

பாரில் ஆதி, துர்காவுக்காக ஒரு முழு மதுப் பாட்டிலையும், அதுவும் போதை நிறைந்த மதுப் பாட்டிலையும் குடித்துவிட்டதைச் சொன்னவள், சுய நினைவே இல்லாமல் இருந்த ஆதியைப் பார்த்து துர்காவிடம் நக்கலாக, “இவனை இப்படியே நான் இன்று இரவு என்னோடு அழைத்துச் சென்று தங்க வைத்திருக்க முடியும். காரில் ஏறியதிலிருந்து அவன் ‘துர்கா… துர்கா…’ என்று உன் பெயரைத்தான் பிதற்றிக் கொண்டு வந்தான். இப்படி இருப்பவனிடம் நான் எப்படி அவனோடு இரவைச் சந்தோஷமாகக் கழிக்க முடியும்? அதனால்தான் அவனைக் கொண்டு வந்து இங்கே போட்டேன்” என்றாள் சங்கவி.

அவள் சொல்வதைக் கேட்டு துர்கா, சங்கவியின் கெட்ட புத்தியை நினைத்து அவளைப் பார்த்து, “சீ… நீ எல்லாம் ஒரு பெண்ணா…” என்றால்.

அவளைப் பார்த்து லேசாகப் புன்னகைத்த சங்கவி, “நான் பெண்ணா இல்லையான்னு கூடிய சீக்கிரமே ஆதியின் வாயாலயே உன்னை வேண்டாம் என்று சொல்லி இந்த வீட்டை விட்டுத் துரத்த வச்சிட்டு, அவன் கையால நான் தாலி கட்டி அவனோட குடும்பம் நடத்திக் காட்றேன். அப்போ தெரிஞ்சுக்கோ” என்று சங்கவி சொல்ல…

“அப்படி ஒரு பகல் கனவு நீ கற்பனை செய்திருந்தால், அதை இப்பவே குழி தோண்டிப் புதைத்து விடு. நீ மட்டுமல்ல, இந்த உலகத்தில் இருந்து எந்த சக்தியாலும் என்னையும், என் ஆதியையும் பிரிக்க முடியாது. உன் கண் முன்னாலேயே நானும் என் ஆதியும் சந்தோஷமாக வாழ்ந்து காட்டுகிறோமா… இல்லையா… என்று பார்” என்றால் துர்கா தீவிரமாக.

“அதையும் தான் பார்ப்போம்” என்ற சங்கவி, துர்காவின் வீட்டிலிருந்து சென்றுவிட…

அவள் சென்று மறுநொடி, வேகமாகத் தன் கைத்தடியை ஊன்றிக்கொண்டே ஆதியின் அருகில் வந்த துர்கா, அவன் தலையைப் பாசத்தோடு வருடி கொடுக்க… துர்காவின் கை அவன் தலையில் பட்டதும் அவள் கையைப் பிடித்துக்கொண்ட ஆதி, போதையிலேயே நிமிர்ந்து துர்காவின் முகத்தைப் பார்த்து, “துர்கா… என்னால் முடியவில்லை” என்று புலம்பினான்.

அவனை இந்த நிலையில் ஆளாக்கிய அந்த சங்கவியைச் சும்மா விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள் துர்கா.

அங்கிருந்த வேலையாட்களின் உதவியோடு ஆதியை அவள் அறைக்குக் கொண்டு வந்து படுக்க வைக்கச் சொல்லிவிட்டு, அவர்கள் அனைவரையும் கிளம்பி வீட்டிற்குச் செல்லச் சொன்னவள், தன் அறை நோக்கிச் சென்றாள்.


ஷிவுவின் வயிற்றைத் தடவி, அவள் உடல் நலமாக இருக்கிறதா என்று கனகா, அவள் கர்ப்பமாக இருப்பது தனக்குத் தெரியும் என்று ஷிவுவுக்கு உணர்த்த…

ஷிவு எதுவும் கூறாமல் நிமிர்ந்து அவள் அம்மாவைப் பார்க்க… கனகா உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்தோடு ஷிவுவைப் பார்த்துக்கொண்டு நின்று இருந்தார்.

ஷிவு, கனகாவின் கண்களைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்து அவர் முன் குற்றவாளியாக நிற்க…

அவள் தாடையைப் பிடித்து உயர்த்தியவர், ஷிவுவின் கண்களைப் பார்த்து, “தலை குனிய வேண்டியது நீ இல்லை ஷிவு. உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த ரூபேஷ்தான்” என்றார்.

அடுத்த அதிர்ச்சியாக, ரூபேஷ்சைப் பற்றி கனகா கேட்கவும், ஷிவுவுக்குத் தலை சுற்றிக் கொண்டு வந்தது. அவள் காலுக்குக் கீழ் பூமி உள்ளே போவது போல இருந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் ஷிவு கண்களில் கண்ணீரோடு கனகாவைப் பார்த்துக் கொண்டு நின்று இருக்க…

அவள் நிலைமை புரிந்து ஷிவுவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று மெத்தையில் அமர வைத்தவர், அவள் கைகளை மென்மையாகப் பிடித்து தடவிக்கொடுத்தவர்.

“நீ வீட்டில் மயக்கம் போட்டு விழுந்து, உன்னைத் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் போகும் வழியில், உன் கையைப் பிடித்து இருந்த எனக்கு, அதில் இரட்டைத் துடிப்பு தெரிந்தது” என்றார்.

“அம்மா…” என்று இயலாமையுடன் ஷிவு கனகாவை அழைக்க…

“நான் நம்ம ஊரில் எத்தனை பேருக்குப் பிரசவம் பார்த்திருக்கிறேன். எனக்கு உன் நாடியைப் பிடித்துப் பார்த்து விஷயம் தெரிந்துகொள்ள சில நிமிடம் போதும் ஷிவு” என்றார்.

ஷிவு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… கனகாவே தொடர்ந்தார்.

“நீ கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் என் உயிரே போய்விட்டது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. உன் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால், விஷயம் கேள்விப்பட்ட அடுத்த நொடியே உயிரை விட்டு விடுவார்.”

“உன்னை அழைத்துக் கொண்டு எங்களைவிடப் பதட்டமாகக் ஆதிதான் ஹாஸ்பிடலில் டாக்டரைப் பார்க்கவும், உன்னைக் கவனிக்கவும் என்று அலைந்து கொண்டு இருந்தான். நான் உன் அப்பா இல்லாத நேரம் பார்த்து, மயக்கத்தில் இருந்த உன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கவனித்து, ஆதி என்னிடம் வந்து ‘அத்தை’ என்று அழைத்தான்.”

“‘க… கா… ஆதி… ஷிவு…’ என்று உன்னைப் பற்றிச் சொல்லலாமா? வேண்டாமா? என்று ஆதியைப் பார்க்க…”

“‘அதை நீங்க கண்டு பிடிச்சிட்டீங்களா?’ என்றான் ஆதி.”

“‘அப்போ உனக்கு முதல்லயே ஷிவு கர்ப்பமா இருப்பது தெரியும் ஆதி?’ என்றார் கனகா.”

“‘ஆமாம் அத்தை’ என்றான்.”

“‘ஆதி, என் பொண்ணு இப்படி… அவள்… அவள்… என் குடும்பத்து மனதையே வாங்கி விட்டாளே… உன் மாமாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால், அவர் அப்போதே உயிரை விட்டுவிடுவார் ஆதி’ என்று சொல்லி ஆதியின் கையைப் பிடித்துக் கொண்டு கதறினார் கனகா.

“‘அத்தை, கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை முழுவதும் கேளுங்கள். இப்படி விஷயம் தெரியாமல் அழாதீங்க அத்தை’ என்றவன், நடந்த அணைத்து விஷயங்களையும் கனகாவிடம் ஒன்று விடாமல் கூறினான்.”

“நடந்த தப்புக்கு நீ காரணம் இல்லை. அந்தக் ரூபேஷ்ஷும், அவனை இப்படிச் செய்யச் சொல்லி தூண்டிவிட்ட அந்த சங்கவியும்தான் என்று எனக்குப் பிறகு தெரிய வந்தது” என்றவர்.

ஷிவுவின் கண்ணீரைத் துடைத்து விட்டு, “நீ எதையும் நினைத்துக் கவலைப்படாதே ஷிவு. ஆதி எல்லா விஷயத்தையும் பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கான். கண்டிப்பா எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று ஷிவுவுக்குத் தைரியம் சொல்லியவர், அவளைப் பாலைச் சாப்பிட வைத்துவிட்டு, தூங்கச் சொல்லிவிட்டு, அவள் அறையில் இருந்து வெளியே சென்றவர், தன் மகளின் வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும் என்று தன் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured