EPISODE 180
இங்கே பவனும் மதுவும் ஜோடி போட்டுக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதைத் தங்கள் கேபினில் இருந்து பார்த்தவாறே ரியாவும், ஸ்ரீயும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர்.
ஸ்ரீ, பவன் மதுவை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதைப் பார்த்தவன். “ம்ஹும்… இந்த நேரம் நானும் ரியாவும் காதலித்து (லவ் பண்ணி) இருந்தால் இவங்களைப் மாதிரியே ஜோடியாகப் பார்க்கப் போச்சுன்னு டெய்லியும் சுத்திட்டு ஜாலியாகக் கதை பேசிட்டு இருக்கலாம்.”
“நான் இந்த விக்கி மாமா பேச்சைக் கேட்டு ரியா இருக்கிற பக்கமே போகாமல் இருக்கேன். அவளும் ‘எனக்கென்ன?’ என்பது போல என்னை திரும்பி கூடப் பார்க்க மாட்டேங்குறா…” என்று புலம்பியவாறு தன் கேபினை விட்டு வெளியே வர… ரியாவும் அவள் கேபினை விட்டு வெளியே வரச் சரியாக இருந்தது.
வெளியே வந்த இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள… ஒரு நிமிடம் இருக்கும் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவர், பின்பு தங்கள் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டு கிளம்பினர்.
இருவரும் வந்து மின்தூக்கிக்கு (லிப்ட்) காத்து இருக்க… சிறிது நேரம் கழித்து லிஃப்ட் வந்தது. சக வேலை ஆட்களுடன் ரியா லிஃப்ட்ற்குள் நுழைய… அவளைப் பார்த்தவாறே ஸ்ரீயும் லிஃப்ட்டில் ஏறினான்.
தன் கூட வேலை செய்யும் ஆட்களுடன் அவள் ஏறியவள் அவர்களுடன் சகஜமாகப் பேசிக் கொண்டு வந்தாள். அவள் மற்றவர்களிடம் எல்லாம் சகஜமாகப் பேசுவதை ஏக்கமாய்ப் பார்த்த ஸ்ரீ. ‘என்னுடன் இந்த மாதிரி கூட அவள் பேசுவது இல்லையே. ஒருவேளை என்னைக் கண்டால் அவளுக்கு நிஜமாகவே பிடிக்கவில்லையோ?’ என்ற யோசனையோடு ஸ்ரீ நின்று கொண்டு இருந்தான்.
பதினாறாவது மாடியில் ஸ்ரீயும் ரியாவும் லிஃப்ட் ஏற, அவர்களுடன் ஏறிய மற்றவர்கள் ஒவ்வொருத்தனமாக தங்கள் வேலையின் காரணமாக இறங்கிக் கொள்ள… 10வது மாடியில் இப்போது உள்ளே ரியாவும் ஸ்ரீயும் மட்டும் நின்றிருந்தனர்.
ரியா தன் கையில் இருந்து போனை நோண்டுவது போல பாவனை செய்து கொண்டு நின்றிருக்க… லிஃப்ட்டில் இருந்த கண்ணாடிக் கதவு வழியாகத் தெரிந்த ரியாவை அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
போன் நோண்டிக்கொண்டிருந்த ரியா, இதுவரை ஸ்ரீ தன்னிடம் எதுவும் பேசாமல் இருக்க, அவன் என்ன செய்கிறான் என்று யோசனையோடு எதார்த்தமாகப் பார்ப்பது போல நிமிர்ந்து ஸ்ரீயைப் பார்க்க… அவன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். அவள் பார்த்தது கூடத் தெரியாமல் ஸ்ரீ கண்ணாடியில் ரியாவை ரசித்துக் கொண்டு இருக்க…
திடீரென்று போன் நோண்டிக் கொண்டு இருந்த ரியா நிமிர்ந்து தன்னைப் பார்ப்பதை கண்ணாடி வழியாக உணர்ந்து ஸ்ரீ தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான். இரண்டு மூன்று முறை ஸ்ரீ இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தாலும், அவனும் அவளைக் கண்டுகொள்ளாதவன் போல வேறு பக்கம் பார்த்து நின்று கொண்டு இருந்தான்.
அவன் செய்வதைப் பார்த்து ரியாவிற்கு கடுப்பாகி விட… ஏற்கனவே அவன் சங்கவியிடம், “நான் இவங்கள லவ் பண்றேன்னு உன்கிட்ட சொன்னேனா?” என்று தன் முன்னாலேயே சங்கவியிடம் பேசி இருக்க, அதில் கோபமாக இருந்த ரியா இப்போது லிஃப்ட்டுக்குள் தன்னை யாரோ போல நடத்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவனைப் பார்த்து ரியா கோபமாக நின்று இருக்க… கோபத்தில் அவள் மூச்சு விடும் சத்தம் லிஃப்ட்டுக்குள் கேட்கவும், “ஏதோ சத்தம் வித்தியாசமாக இருக்கிறது” என்று திரும்பி ஸ்ரீயைப் பார்க்க, அவள் அவனை முறைத்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு கோபமாக நின்று இருந்தால்.
அவள் திடீரென்று தன்னைக் கோபமாகப் பார்ப்பதைக் கவனித்த ஸ்ரீ, அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடி நின்று இருந்தவன். விக்கி, ரியா இருக்கும் பக்கமே போகக்கூடாது… அவளிடம் பேசக்கூடாது… என்று சொல்லி இருக்க… அவள் கோபப்படுவதைக் கண்டுகொள்ளாதவன் போல ஸ்ரீ திரும்பிக் கொண்டான்.
தன் கோபமாக இருப்பதைப் பார்த்தும், தன்னிடம் என்ன காரணம் என்று கூடக் கேட்காமல் திரும்பிக் கொண்ட ஸ்ரீயைப் பார்த்த ரியாவிற்கு மேலும் கோபம் அதிகமானது. சென்று கொண்டிருந்த லிஃப்ட்டில் இருந்த நிறுத்தும் (ஸ்டாப்) பட்டனை அழுத்தி லிஃப்ட் பாதியிலேயே நிறுத்திய ரியா, அதே கோபத்தோடு வந்து ஸ்ரீயின் முன்பு நின்றவள்.
“உன் மனசுல என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க? என்னப் பார்த்தும் பார்க்காத மாதிரியே நின்னுட்டு இருக்க… என்ன உனக்குக் கொழுப்பா?” என்று கேட்டால் ரியா.
உடனே ஸ்ரீ, அவள் தன்னிடம் பேசுகிறாள் என்று தெரிந்தும், “யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க?… என்கிட்ட தான் பேசிட்டு இருக்கீங்களா ரியா? நீங்க என்னைத் தவிர வேறு யாருமே இல்லையே” என்று தன் பின்னால் யாராவது நிற்கிறார்களா என்பது போலத் திரும்பிச் சுற்றி மட்டும் பார்த்தான்.
அவன் சைகையில் கடுப்பான ரியா. “டேய் ஸ்ரீ! உன்னைத் தான்டா… உன்கிட்ட தான்டா பேசிக்கிட்டு இருக்கேன். உனக்குத் தெரியலையா?” என்று அவன் முகத்தின் முன்பு தன் வெண்டைக்காய் விரலை நீட்டிப் பேசினால்.
தன் முகத்திற்கும் நேராக நீட்டிய ரியாவின் விரலைத் தன் கையில் இருந்த சாவியைக் கொண்டு கீழே இறக்கியவன், “சொல்லுங்க ரியா! என்ன வேணும்? என்கிட்ட என்ன பேச வேண்டி இருக்கு உங்களுக்கு?” என்று கேட்டான்.
“என்னடா, எதுவும் தெரியாதவன் போல என்னவோ என்கிட்ட புதுசா பேசுற மாதிரி பேசுற…. நான் வர வரைக்கும் என் பின்னாடியே சுய ரியால சுத்திக்கிட்டு… நான் எங்க போனாலும் என் கூடவே வந்துகிட்டு இருந்த…”
“அது மட்டுமா? என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி ஆபீஸ் முழுக்க என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்த… அதுக்குள்ள உனக்கு என்னடா ஆச்சு? ஏன் இந்த ஒரு வாரமா என்கிட்ட பேசல… நான் இருக்கிற பக்கமே வரல.”
“இப்ப கூட லிஃப்டுக்குள்ள நீயும் நானும் மட்டும் தானே இருக்கோம்? நீ என் பின்னாடி சுத்துற மாதிரி பேசாட்டியும் பரவாயில்லை. உன் கூட வேலை பார்க்கிறவங்கள்ள ஒருத்தியா நினைச்சு கூட ஏன் என்கூடப் பேச மாட்டேங்குற?” என்று கேட்டாள் ரியா.
அவள் புலம்புவதை உள்ளுக்குள் ரசித்த ஸ்ரீ, ‘அப்படி வாடி வழிக்கு என் செல்லக்குட்டி! இத்தனை நாளா எவ்வளவு நாளா கெஞ்சி இருப்பேன் உன் பின்னாடி வந்து. அப்போ எல்லாம் என் அருமை தெரியாத இருந்த உனக்கு இப்பதான் என்னோட அருமை புரிஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் காரணம் என்னோட விக்கி மாமா தான்’ என்று விக்கியை மனதிற்குள் வேண்டிக்கொண்டவன்.
ரியாவிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல், “இத்தனை நாளா நான் உங்க பின்னாடி சுத்துனது தப்புன்னு எனக்கு எப்போ புரிஞ்சுச்சோ, அப்போ இருந்து நான் உங்க பின்னாடி சுத்துறதையே நிறுத்திட்டேன் மிஸ் ரியா” என்றான்.
“என் பின்னாடி சுத்துனது தப்புன்னு எப்படி சொல்ற?” என்று கேட்டாள் ரியா.
“அதுதான் நீங்க என்னை நடத்துன விதத்திலேயே நான் தெரிஞ்சுகிட்டேனே. உங்க பின்னாடி நான் லோ லோன்னு அலைஞ்சு திரிஞ்சதால என்ன நீங்க ரொம்பத் தப்பா நினைச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்.”
“ஒரு ஆறுதலுக்காகப் பார்த்து என்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு ‘இப்படிப் பின்னாடி சுத்தாதீங்க, எனக்குப் பிடிக்கல’ அப்படின்னு ஏதாவது சொல்லி இருக்கலாம்.”
“ஆனா அதை விட்டுட்டு உங்க பின்னாடி நான் வரும்போது எல்லாம் என்ன நீங்க ரொம்பத் திட்டினீங்க… என்னைப் பார்த்தா அருவருப்பாய் இருக்கிற மாதிரி உங்க முகத்தை வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தா, நான் எப்படி உங்க பின்னாடி அதுக்கப்புறம் வருவேன்?” என்று கேட்டான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்ட ரியா. “டேய்… லூசு! உனக்கு அறிவு என்கிறது சுத்தமாவே கிடையாதா?” என்று அவனைத் திட்டினாள்.
“என்ன பொசுக்குன்னு லூசுன்னு சொல்லிட்ட?” என்று கேட்டான்.
“பின்ன ஒரு பொண்ணு எதுக்காக அப்படி நடந்துகிறான்னு எதுவும் தெரியாம நீயே உன் மனசுல கண்டதைக் கற்பனை பண்ணிக்கிட்டு பேசினா, உன்னை லூசுன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது?” என்றால் ரியா.
“எனக்குப் புரியல. நீங்க சொல்ல வருவது, என்கிட்டே ஏன் நீ அப்படி நடந்துகிட்டே?” என்றான் ஸ்ரீ.
ரியா பேச வருவதற்குள் லிஃப்ட் ஓப்பன் ஆனது. ‘இவன்கிட்ட இப்பவே சொல்லக் கூடாது. நாளைக்கு வரைக்கும் அலைய விடுவோம்’ என்று நினைத்தவள்.
“உனக்கு ஒவ்வொன்றையும் விபரமா சொல்லிக்கிட்டு இருப்பாங்களா… நீயே என்னன்னு யோசிச்சுக்க. எனக்கு வீட்டுக்குப் நேரமாச்சு, நான் போகணும்” என்று சொல்லிவிட்டு ரியா வேகமாக லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தவள், வாசலில் அவள் அண்ணன் கௌதம் காத்திருக்க அவனுடன் பைக்கில் ஏறிச் சென்றாள்.
‘இவள் ஏன் இப்படி சொல்லிட்டுப் போறா? அவ என்ன நெனச்சுக்கிட்டு என்கிட்ட அப்படி நடந்துகிட்டன்னு எனக்கு எப்படித் தெரியும்? என்னப் போயி லூசுன்னு சொல்லிட்டுப் போறாளே’ என்று தலையைப் பிடித்துக் கொண்ட ஸ்ரீ. அதே யோசனையோடு தன் வாகனத்தை (பைக்) எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான்.
💥 துர்கா – ரூபேஷ்: அறையில் நடந்த அதிரடி
ரூபேஷும் ஷிவுவும் உள்ளே தனியாக அழைத்துச் சென்ற துர்கா. இருவரும் உள்ளே வந்ததும் கதவைப் பூட்டி விட்டு வந்து நேராக ரூபேஷின் முன்பு நின்றாள்.
தன் முன்னாள் வந்து நின்ற துர்காவை ரூபேஷ் அலட்சியப் பார்வை பார்க்க… அவன் முன்பு சாந்தமாக நின்றிருந்த துர்கா திடீரென்று காளியாக மாறி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
துர்கா ரூபேஷ்ஷை அறைந்ததை ஷிவு துளியும் எதிர்பார்க்கவில்லை. அதே அதிர்ச்சியோடு ரூபேஷ்ம் தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு துர்காவைப் பார்த்தான்.
அவன் முன்பு கோபமாக நின்றிருந்த துர்கா, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கையைக் கெடுத்து அவள் வயிற்றில் ஒரு குழந்தையைக் கொடுத்துட்டு, அவளைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி அவ மனச நோகடிச்சிருப்ப… என் தங்கையை ஏமாத்தின என்பதற்காக நான் உன்னை அடிக்கல. இதுவே நீ வேற எந்தப் பொண்ணுக்கும் செய்திருந்தாலும் இதே மாதிரி தான் உன்ன அடிச்சிருப்பேன்.”
“பொண்ணுங்க வாழ்க்கைன்னா உனக்கு என்ன கிள்ளுக்கீரையா போயிடுச்சா? அவங்க வாழ்க்கையில் விளையாட உனக்கு யார் உரிமை கொடுத்தது? அந்தச் சங்கவி உன்கிட்ட பணத்தைக் கொடுத்து என் தங்கையை இப்படிப் பண்ண சொன்னா உனக்கு அறிவு எங்க போச்சு? உன்னையும் ஒரு தாய் தானே பெத்து வளர்த்து இருக்காங்க? உன் அப்பா இல்லாமல் உன்னோட அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தி இருப்பாங்க? அதை நீ கொஞ்சமாவது யோசிச்சிருந்தா கண்டிப்பா நீ ஷிவுவுக்கு இந்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்து இருக்க மாட்ட.”
“அதையெல்லாம் மறந்து ஷிவு உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சா, நீ இப்பவும் காசு, பணம், சீர்வரிசைன்னு அவளைக் கஷ்டப்படுத்துறியா? என் தங்கையை இதுக்கு மேலும் கஷ்டப்படுத்துவதைப் பார்த்துவிட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.”
“ஏற்கனவே ஆதி உன் அம்மா கிட்டே பேசினபடி, ஷிவு கழுத்துல நீ தாலி கட்டினதும் உன் கணக்கில் (அக்கவுண்ட்ல) 5 கோடி ரூபாய் பணம் வந்து சேரும். அதுக்கு மேல அது வேணும், இது வேணும்னு அவளை எதுவும் தொல்லை (டார்ச்சர்) பண்ணினேன்னு எனக்குத் தெரிஞ்சது. உன்னை அதுக்கப்புறம் நான் பார்க்கிறதா உன்னோட கடைசி நாளா இருக்கும்.”
“ஒழுங்கா மரியாதையா வெளியே போய் இந்தக் கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் நடத்தச் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்தச் சம்மதிக்கிறேன்னு சொல்லு. மறுபடியும் சீர் வேணும், அது வேணும்னு ஏதாவது வம்புப் பேசினா உன் கழுத்தை நெரிச்சு அங்கேயே கொன்னுடுவேன்” என்று துர்கா ஆத்திரமாக ரூபேஷின் முன்பு நின்று பேசிக் கொண்டிருக்க…
அவள் அடித்ததிலிருந்து அதிர்ச்சியாகவே துர்காவைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் மிரட்டிய மிரட்டில் திருப்பி அவளிடம் சண்டையிட தோன்றிய தன் மனதைத் தோண்டிப் புதைத்தவன், துர்கா சொன்னதற்கெல்லாம் ‘சரி’ என்று தலையை ஆட்டினான்.
“இப்ப சொல்றேன், நல்லா கேட்டுக்கோ. கல்யாணம் ஆன பிறகு என் தங்கச்சியை எதுவும் கஷ்டப்படுத்தினேன்னு எனக்குத் தெரிய வந்துச்சு. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று சொன்னவள். அவனைப் பார்த்து, “என்ன, நான் சொன்னது புரியுதா உனக்கு?” என்று கேட்டாள்.
துர்கா அடித்த கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே “புரிகிறது” என்று ரூபேஷ் பயந்து கொண்டே தலையாட்ட…
ஷிவுவிடம் திரும்பி வந்த துர்கா அவளை அழைத்துக்கொண்டு வந்து ரூபேஷின் முன்பு நிறுத்தியவள். ரூபேஷின் முன்பு வந்து நின்றதும் அவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொள்ள… அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்திய துர்கா.
“நீ எதுக்கு ஷிவு தலை குனியுற… அவனை நம்பி காதலித்து, உன்னையே அவனிடம் பறிகொடுத்த. உன்னை நம்ப வைத்து ஏமாற்றிய இவன்தான் உன் முன்னே தலைகுனிந்து நிற்க வேண்டும்.”
“பெண்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆண்களே பெண்களைப் பாதுகாக்கத் தவறுவது அவர்களுடைய குற்றமே தவிர உன்னுடையது அல்ல… தவறு செய்தது ஆணாகவே இருந்தாலும், அவன் செய்ததற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பெண்ணாகப் பிறந்த நாம் தலைகுனிந்து செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஏமாற்றிய அவனே தலை நிமிர்ந்து இருக்கும் போது, ஏமார்ந்த நீ தலை குனிந்து செல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை” என்றவள், “தலை நிமிர்ந்து வா” என்று சொல்லி ஷிவுவைக் கையைப் பிடித்து அந்த அறையை விட்டு வெளியே அழைத்து வந்தால் துர்கா.
‘நான் இவ்வளவு நேரம் தன்னை உள்ளே அழைத்து வந்து அடித்து மிரட்டிவிட்டு, நிமிர்ந்த நடையோடு ஷிவுவின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு செல்லும் துர்காவை ஆச்சரியமாகப் பார்த்தான் ரூபேஷ்.’
துர்காவும் ஷிவுவும் வந்து கனகாவின் அருகில் நின்று கொள்ள… அவர்கள் பின்னால் உள்ளே அடி வாங்கியதை காட்டிக் கொள்ளாமல் வெளியே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்த ரூபேஷ்ஷைப் பார்த்ததும் ஷிவுவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது.
அவனை அப்படிப் பார்த்ததும் ஷிவு சிரித்து விட, அவள் கையைப் பிடித்து அடக்கிய துர்கா. “ஏய் சும்மா இருடி… உள்ள நடந்ததை நீயே சிரிச்சு காட்டிக் கொடுத்துடுவ போல இருக்கு” என்று ஷிவுவை அடக்கி அமைதியாக நிற்க வைத்தாள் துர்கா.
தன்னைப் பார்த்துச் சிரித்த ஷிவுவை முறைத்த ரூபேஷ் நேராக வந்து அவன் அம்மாவின் அருகில் அமர்ந்தவன் அவரிடம் ஏதோ கூற… அங்கிருந்தவர்கள் எல்லாம் உள்ளே என்ன நடந்தது? ரூபேஷ் வந்து தன் அம்மாவின் காதில் என்ன சொல்கிறான்? என்று அவர்களையே கவனித்தனர்.
அவன் பேசியதைக் கேட்டதும் ரூபேஷின் அம்மாவின் முகம் மலர…. அதைக் கவனித்த ஆதி, துர்கா எதையோ சொல்லித்தான் அவனைச் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்க வைத்து இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டான்.
ரூபேஷிடம் பேசிவிட்டு துரையைப் பார்த்து ரூபேஷின் அம்மா, “அடுத்த வாரமே ஒரு நல்ல முகூர்த்தம் பார்த்து சீக்கிரமே திருமணத்திற்குத் தேதி குறியுங்கள். என் பையன் சீர்வரிசை எல்லாம் எதுவும் வேண்டாம் என்று சொல்லிட்டான். ஷிவுவைச் சீக்கிரமா கல்யாணம் செய்து எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகணும் என்று மட்டும் சொன்னான்” என்றார் ரூபேஷின் அம்மா.
அவர்கள் பேசியதைக் கேட்டு ஒரு பக்கம் துரைக்குச் சந்தோசமாக இருந்தாலும், இருந்தும் தன் மகளுக்கு எதுவும் செய்யாமல் எப்படி அனுப்புவது என்று அவர் தயங்க… அவர் தயக்கத்தைப் புரிந்து கொண்ட துர்கா, “என்னப்பா யோசிக்கிறீங்க? ராதாவுக்கு செய்தது போலச் சீர்வரிசை எதுவும் செய்யாமல் இவ்வளவு சீக்கிரம் ஷிவுவுக்குக் கல்யாணம் பண்ணச் செய்கிறோம் என்று யோசிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
துரை “ஆமாம்” என்று சங்கடத்துடன் தலையை ஆட்ட….
“நீங்க கவலைப்படாதீங்க அப்பா. கல்யாணம் செய்து ஷிவு அவ வீட்டுக்குப் போகும்போது அவளுக்குத் தேவையான எல்லாச் சீர் வரிசையும் அவளோட அக்கா ஸ்தானத்திலிருந்து நானே செய்து விடுவேன்” என்று துர்கா சொல்ல…
“உனக்கு எதுக்கு துர்கா சிரமம்? ஊரில் இருக்கிற நம்முடைய நிலத்தை விற்றாலே பல கோடி தேறும். அதை வைத்துத்தான் உனக்கும் ஷிவுவுக்கும் நான் சீர்வரிசை செய்யலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் இவ்வளவு சீக்கிரமாக திருமண ஏற்பாடுகள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் துரை.
“அப்பா, எனக்குச் சீர்வரிசை செய்யணும்னு எந்த அவசியமும் இல்லை. கல்யாணமான எனக்கு எதுக்குப்பா சீர்வரிசை? நம்ம ஷிவுவுக்குச் செய்துக்கலாம்” என்றவள். “அந்த இடத்தை அப்படியே பிரிச்சு ராதா பெயர்லயும் ஷிவு பெயர்லயும் எழுதி வச்சிருங்க… எனக்காக நீங்க எதுவும் செய்யணும்னு யோசிக்க வேண்டாம்” என்றால் துர்கா.
துர்கா சொல்வது தான் சரி. “நீங்கள் சீர்வரிசையை இது ராதாவிற்கும் ஷிவுவிற்கும் சமமாகப் பிரித்துச் செய்து விடுங்கள். துர்காவுக்கு வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவரை வற்புறுத்தி ஷிவுவின் திருமணத்தை சீக்கிரமே முடிக்கச் சம்மதம் வாங்கினான் ஆதி.
பிறகு ஷிவுவிற்கும், ரூபேஷிற்கும் திருமண தேதி குறித்தவர்கள், அவர்களுக்குத் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு அனைத்தையும் பேசிவிட்டு ரூபேஷ்ம் அவன் அம்மாவும் கிளம்பிச் செல்ல… இங்கே அனைவரும் நடந்தது நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.
🎁 விக்கி – நிலானி: நிலா குட்டிக்கு என்ன பரிசு?
சங்கவி விக்கியின் கேபினை விட்டுச் சென்ற பிறகு சிவகாமியி, விக்கியைக் கட்டிக்கொண்டு அவனுக்கு நன்றி சொன்னார்.
“அம்மா, இதற்கெல்லாம் எதற்கு எனக்கு நன்றி சொல்றீங்க? அப்படிச் சொல்வதாக இருந்தால் நீங்கள் நிலானிக்குத்தான் நன்றி சொல்லணும்.”
“என்கிட்ட நீங்க சங்கவி பிறந்தநாளுக்கு (பர்த்டே) அவளைப் பார்க்க முடியலையேன்னு வருத்தத்துல இருக்கிறதா சொன்னா… அதனாலதான் நானும் அவளும் ஐடியா பண்ணி உங்களைக் ஆதிக்கு பாயசம் கொடுக்கிறேன்னு பொய் சொல்லி கூட்டிட்டுப் போனேன்” என்று சொன்னான் விக்கி.
அதன் பிறகு இருவரும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, விக்கியின் அலுவலகத்திலேயே இருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வர, நிலானியும் கல்லூரியில் (காலேஜிலிருந்து) இருந்து வந்து இருந்தால்.
சிவகாமியி சங்கவியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் மகிழ்ச்சியைப் பார்த்த நிலானிக்கும் விக்கிக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நிலானியைப் பார்த்து, “நீ மட்டும் ‘அம்மா சோகமா ஏன் இருக்காங்க’ன்னு காரணத்தைச் சொல்லாமல் இருந்தா, இன்னைக்கு அம்மா நினைச்ச மாதிரி சங்கவியைப் பார்த்திருக்கவே முடியாது. அவங்க இவ்வளவு சந்தோஷமா இருக்கிறது பார்த்தால் எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு நிலாக் குட்டி” என்றான்.
நிலானி சிரித்துக் கொண்டே தன் இல்லாத காலரைத் தூக்கி விட்டு, “எப்படி….” என்றால்.
“சூப்பர்” என்று சொன்ன விக்கி, “என் நிலா குட்டிக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டுமே” என்றான்.
அவன் பரிசு என்று சொன்னதும் நிலானி ஆர்வமாகி, “என்ன பரிசு?” என்று கேட்டால்.
அவள் விக்கியிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மது அவர்கள் வீட்டிற்குள் நுழைய…. “வா அக்கா! ஆபீஸ் முடிந்ததா?” என்று கேட்டால்.
“முடிஞ்சுடுச்சு நிலா” என்ற மது அவர்கள் அருகில் வந்து அமர்ந்தவள், “ஆமா, விக்கி எதுவும் உனக்குப் பரிசு தரேன்னு சொன்னாரு. என்ன பரிசு?” என்று கேட்டால்.
“தெரியல அக்கா, அதைத்தான் நானும் கேட்டுட்டு இருந்தேன்” என்றால் நிலானி.
மது திரும்பி விக்கியைப் பார்த்து, “என் தங்கைக்கு என்ன பரிசு தரப் போறீங்க விக்கி?” என்று கேட்டால்.
“அதை நான் உங்ககிட்ட சொல்ல மாட்டேன். என் குட்டிக்கு நான் ஏற்கனவே பரிசு (கிப்ட்) வாங்கி வச்சுட்டேன். நான் போய் எங்க ரூம்ல வச்சு அவளுக்கு அந்தப் பரிசு கொடுத்துக்கிறேன்” என்றான் விக்கி.
மது நிலானியைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தவள். “உன் புருஷன் உனக்கு ஏதோ தனிப்பட்ட (பர்சனல்) பரிசு வாங்கி வைத்திருப்பார் போல” என்ற மது. “சரி சரி, உங்க புருஷன் பொண்டாட்டிகுள்ள ஆயிரம் விஷயம் இருக்கும். இதுக்குள்ள நான் வரலப்பா” என்று சொல்லிவிட்டு சமையலறையில் (கிச்சனிலிருந்து) சிவகாமியியைப் பார்க்கச் சென்று விட்டாள்.
உணவு மேஜையில் (டைனிங் டேபிளில்) அமர்ந்து விக்கியும் நிலானியும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, மது உள்ளே சென்றதும் நிலானி விக்கியிடம், “சொல்லுங்க! எனக்கு இப்பவே அது என்னன்னு தெரிஞ்சுக்கணும் போல ஆர்வமா இருக்கு” என்றால்.
“நான் அதை இப்போ சொல்ல மாட்டேன். நீ நடைமுறைக்கு (பிராக்டிக்கலுக்கு) ஏதோ படிக்கணும்னு சொன்னியே, அதை எல்லாம் படிச்சு முடிச்சுட்டுப் பொறுமையா ரூமுக்கு வா. அப்ப சொல்றேன்” என்றான்.
அவனை, என்ன பரிசுப் பொருள் வாங்கி வந்திருக்கிறான் என்று நிலானி கேட்க, ஆனால் விக்கி அவள் படித்து முடித்துவிட்டு அறைக்கு வந்த பிறகுதான் சொல்வேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டுச் சாப்பிட்டு முடித்தவன், கைகழுவி விட்டு அறைக்குச் சென்று விட்டான்.
விக்கியை மனதிற்குள் திட்டிக்கொண்டே இருந்து படிப்பதற்காக நிலானி படிக்கும் அறைக்கு (ஸ்டடி ரூமிற்கு) சென்றாள்.
அப்படி என்ன பரிசு நிலானிக்குக் கொடுக்க விக்கி வாங்கி வந்து இருப்பான்? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க ஃபிரண்ட்ஸ்.
ஸ்டோரி படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க பிரெண்ட்ஸ்

2 comments
Super akka innum intrest a irukku akka next episode seekkiram podunga 🥰❤️❤️❤️❤️❤️🫰🫰🫶🫶🫶😊😊🥺🤩👍👍👍 i am waiting akka
Akka next episode 😍😘🫂 please akka