Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 184 

உன் ரகசிய ரசிகை நான் 184 

by Layas Tamil Novel
194 views

Episode 184

துர்காவும் ஷிவுவும் ஷிவுவின் திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு அப்போதுதான் வீட்டிற்கு வந்தனர்.

வந்ததும் இருவரும் களைப்பாக சோபாவில் அமர…

அவர்களைப் பார்த்துவிட்டு செண்பகம் இருவருக்கும் பழச்சாறு (ஜூஸ்) எடுத்துக் கொண்டு வந்தார்.

“எதுக்காக ரெண்டு பேரும் இப்படி இந்த வெயில்ல வெளியே போய்ட்டு வர்றீங்க? ஆதியிடம் சொல்லியிருந்தால் கடையையே வீட்டுக்குக் கொண்டு வந்திருப்பானே,” என்றார்.

“அம்மா, வீட்ல விசேஷம் வச்சிருக்கோம். அப்போ வெளியே போய் இப்படி அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டு வந்து, அதை வீட்டில் இருப்பவங்ககிட்டே காட்டிக் சந்தோஷப்படுறதே ஒரு தனி சுகம் தான்,” என்றாள் துர்கா.

“அது எல்லாம் சரிதான். உனக்கே இப்போதான் கால் நல்லா ஆகியிருக்கு… அதுக்குள்ள இப்படி வெளியே அலையணுமா?” என்றார் விசாலாட்சி.

“அது எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை அத்தை, எனக்கு நல்லாத்தான் இருக்கு, பாருங்க,” என்று சொல்லித் தன் கால்களை லேசாக மேலே தூக்கிக் குழந்தை போல ஆட்டிக் காட்டினாள்.

அவளைப் பார்த்துச் சிரித்தபடி வந்த கனகா, “எல்லாம் வாங்கியாச்சா?” என்றவர். ஷிவுவின் அருகில் வந்து, “இந்த மாதிரி நேரத்துல கொஞ்சம் ஜாக்கிரதையாக வெளியே போய் வரணும் சரியா?” என்றார் மெதுவாக.

“சரி,” என்று தலையசைத்த ஷிவு, தானும் துர்காவும் வாங்கிவந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் காட்டி மகிழ்ந்தனர்.

அப்போது, இவர்கள் வாங்கி வந்த பொருட்களில் குழந்தைகள் அணியும் ஆடைகளும், அவர்களுக்குப் பயன்படுத்தும் பொருட்களும் இருக்க…

அதைப் பார்த்த விசாலாட்சி, “என்ன துர்கா… இது குழந்தைகளை யூஸ் பண்ற பொருளா வாங்கி இருக்கீங்க? ஷிவுவுக்குக் கல்யாணம் தானே நடக்கப் போகுது? வளைகாப்பு இல்லையே,” என்று அவர் சிரித்துக் கொண்டே கேட்க…

அவர் கேட்ட கேள்வியில் துர்கா, ஹேமா, ஷிவு மூவரும் அதிர்ச்சியாகி விசாலாட்சியைப் பார்க்க…

“என்ன, மூணு பேரும் என்ன அப்படிப் பார்க்கிறீங்க?” என்று விசாலாட்சி சாதாரணமாகக் கேட்க, அவர் எதார்த்தமாகத்தான் கிண்டலாகப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட துர்கா.

“அது ஒன்னும் இல்ல அத்தை, அந்த டிரஸ் எல்லாம் பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு. அதனாலதான் எதுக்கும் இருக்கட்டுமேன்னு வாங்கி வச்சேன்,” என்று துர்கா சொல்ல…

“அப்போ கூடிய சீக்கிரமே இந்த வீட்டில் ஒரு பேரனும் பேத்தியையும் நீ எங்களுக்குப் பெற்றுக் கொடுக்கப் போற, அப்படித்தானே?” என்று துர்காவின் முகத்தைப் பார்த்து ஆர்வமாக விசாலாட்சி கேட்க.

துர்கா வெட்கப் புன்னகையோடு, “நான் போங்க அத்தை,” என்று சிணுங்க…

“உங்களுக்குத் தெரியாமல் என்னோட ரூம்ல கொண்டு போய வைக்கணும்னுதான் நினைச்சேன். அதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்க. இனி இதைச் சொல்லியே எப்போ எனக்குப் பேரன் பேத்தி பெற்றுக் கொடுக்கப் போறேன்னு என்னைக் கேட்டுக்கிட்டே இருப்பீங்க,” என்று சொன்ன துர்கா, “இருங்க, நான் இதைக் கொண்டு போய்ப் முதல்ல என்னோட ரூம்ல வச்சிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு எழுந்தவள்.

ஷிவுவிடம், “நான் இதை அறையில் வைத்துவிட்டு அப்படியே புத்துணர்ச்சி (ஃப்ஃப்ரெஷ்) ஆகிட்டு வரேன். நீயும் போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடு,” என்று சொல்லிவிட்டு அவளிடம் கண்ணைக் காட்டியவள், அந்தப் பொருட்களை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

கனகா ஷிவுவுக்குச் சாப்பிடச் செய்தவர், அவளுடைய அறைக்குச் சென்று ஓய்வு எடுக்கச் சொன்னார். திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், அவளை நன்றாகத் தூங்கி ஓய்வு எடுக்கச் சொன்னார் கனகா.

ஷிவுவும் சிறிது நேரம் அனைவரிடமும் பேசிவிட்டு, மிகவும் களைப்பாக உணரவே, தன் அறைக்குச் சென்று தூங்கச் சென்றுவிட்டாள்.

நேரம் ஆகிவிட்டதால் துர்காவைச் சாப்பிட அழைக்க… தான் வெளியிலேயே அதிகமாகச் சாப்பிட்டுவிட்டதால் இரவு உணவு தனக்கு வேண்டாம் என்று சொல்லி, தன் அறையிலேயே இருந்து கொண்டாள் துர்கா.

அனைவரும் சாப்பிட்டு உறங்கிய பிறகுதான் ஆதி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தான்.

ஆதிக்காக நீண்ட நேரம் காத்திருந்த துர்கா, அவன் வருவதற்குத் தாமதமாகவே, அப்படியே சோபாவில் அமர்ந்திருந்தவள் உறங்கி விட்டிருந்தாள்.

நேராகத் துர்காவைக் காணும் ஆவலில் தன் அறைக்கு ஆதி வர… அவள் சோபாவில் அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டு இருந்தால்.

கையில் ஏதோ ஆல்பம் போல வைத்துக்கொண்டு, அதை நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி துர்கா உறங்கிக்கொண்டு இருந்தாள்.

மெதுவாக, அவள் தூக்கம் கலையாதவாறு அவள் அருகில் வந்த ஆதி, அவள் நெஞ்சோரம் பிடித்திருந்த ஆல்பத்தை, மெல்ல மெல்ல அவள் கைகளுக்குள் இருந்து பிரித்து எடுக்க முயற்சித்தான்.

ஆனால், அந்த ஆல்பத்தை ஆதி முழுவதுமாக எடுக்கும் முன்பு துர்கா கண் விழித்துவிட்டாள்.

அவள் விழித்து எழவும், ஆல்பம் ஆதியின் கையில் இருக்கவும் சரியாக இருந்தது.

அதைப் பார்த்ததும் வேகமாக எழுந்த துர்கா, அவன் கையில் ஆல்பத்தைப் பார்த்ததும், அதை எப்படியாவது அவனிடம் இருந்து பிரித்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவள், அவன் கையில் இருந்த ஆல்பத்தைப் பிடுங்கப் போனாள்.

அவள் தன் கையில் இருக்கும் ஆல்பத்தை வாங்க வரும்போதுதான் அவனுக்குப் புரிந்தது. தன்னுடைய ஆல்பத்தைத்தான் அவள் தன்னிடமிருந்து பிடுங்கி வைத்திருக்க வேண்டும்.

‘ஆனால் இதை வைத்து என்ன பண்ணிட்டு இருந்தா?’ என்று யோசித்தவன், அவள் கையில் அதை எடுக்கத் திட்டம் தீட்டுகிறாள் என்று மட்டும் ஆதிக்குப் புரிந்தது.

அதை அவள் கையில் சிக்காமல் ஆல்பத்தை மேலே உயர்த்திப் பிடிக்க… துர்கா ஆதியிடம், “ஆதி, தாங்க ஆல்பத்தை,” என்று சொல்லிக்கொண்டு, அவன் கையில் இருந்து அதைப் பறிக்க முயற்சித்தால்.

“போ துர்கா… ஏன் அவசரப்படுற? அப்படி நீ என்ன போட்டோ அதுல பார்த்துட்டு நெஞ்சோடு கட்டி பிடிச்சுட்டு தூங்கினேன்னு நான் பார்க்க வேண்டாமா?” என்று ஆதி, அவள் கையில் சிக்காமல் இங்கும் அங்குமாக நடந்தவாறே சொன்னான்.

“ஆதி ப்ளீஸ், கொடுத்துவிடு. அது வேற எதுவும் இல்ல, சும்மா சும்மா போட்டோஸ் தான் பார்த்துட்டு இருந்தேன்,” என்றால் துர்கா.

“அப்படியா? அப்போ அதே போட்டோவை நான் பார்க்க வேண்டாமா?” என்றான் ஆதி.

“விளையாடாத ஆதி, அதை என் கையில் கொடு,” என்று சொல்லி, அவன் முன்பு தலைக்கு மேலே தூக்கிப் பிடித்திருந்த ஆல்பத்தைப் குதித்துக் குதித்து அவன் கையில் இருந்து பிடுங்க முயற்சித்தால் துர்கா.

அவள் குதித்து அவன் கையில் இருந்து ஆல்பத்தை எடுக்க முயற்சி செய்ய…

ஆதி அவள் குதிக்கும்போது அவள் உடல் அசைவதைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தான்.

அவள் மென்மைகள் இரண்டும் துர்கா குதிப்பதற்கு ஏற்ப அசைந்தாட… அதைப் பார்த்த ஆதிக்கு உடல் நரம்புகள் எல்லாம் முறுக்கேற ஆரம்பித்தது.

துர்கா ஆதியின் கையில் இருந்து ஆல்பத்தைப் பிடுங்குவதில் மூழ்கியிருக்க, ஆதியின் பார்வை எங்குச் சென்றது என்று அவள் கவனிக்கவில்லை.

துர்காவிற்கு இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் அந்த ஆல்பத்தை எடுத்துவிடலாம் என்று தோன்ற, அவன் அருகில் சென்று, ஆதியின் தோளில் கை வைத்து வேகமாக குதிக்கப் போக…

அவள் குதித்து ஆல்பத்தைப் பிடிக்கும் நேரத்தில், ஆதியும் சேர்ந்து அவளுடன் உயரக் குதித்தான்.

இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று மோதியது. அவள் மென்மைகள் அவன் திண்ணிய மார்பில் உரச… இப்போதுதான் துர்காவிற்கு தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதே புரிந்தது.

அவள் மார்புகள் அவன் மார்பில் உரசியபடி, அவனோடு ஒன்றி நின்று இருந்தால் துர்கா.

இதற்குப் பிறகு துர்கா அந்த ஆல்பத்தை எடுக்க முயற்சிக்காமல் அப்படியே நின்றுவிட…

இவ்வளவு நேரம் அவள் மென்மைகளில் கண் வைத்திருந்த ஆதி, ‘ஏன் இவள் எதுவும் செய்யாமல் அமைதியாக நின்றுவிட்டாள்?’ என்ற யோசனையோடு நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்க்க…

துர்கா ஆதியின் முன்பு இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனை முறைத்தபடி நின்று இருந்தால்.

“என் துர்கா என் மேல் கோபமாக இருக்கியா? ஏன் இப்படி முறைக்கிற?” என்று கேட்டான் ஆதி எதுவும் தெரியாதவன் போல…

“இப்போ நீ என்னை எங்கே பார்த்துட்டு இருந்த?” என்று கேட்டாள்.

“அவசியம் சொல்லணுமா?” என்றான் வழியும்படி ஆதி.

“கண்டிப்பா சொல்லணும், சொல்லு,” என்றால் துர்கா.

“நான் எங்கே பார்த்தேனே, உனக்குத் தெரியாதா?” என்று சொல்லிக்கொண்டே அவன் பார்வை அவள் முகத்திற்குக் கீழே செல்ல…

எதிரில் நின்று இருந்தாள் ஆதியின் பார்வை எங்கே செல்கிறது என்பதைப் புரிந்தவள், வேகமாக வந்து ஆதியைக் கட்டிக் கொண்டாள்.

ஏற்கனவே அவன் திடகாத்திரமான உடல் இருக்க, அதை என் துர்கா தழுவிக்கொள்ளவும், ஆதிக்கு உடலில் உள்ள நரம்புகள் எல்லாம் முறுக்கேறத் தொடங்கியது.

அவன் பார்வையிலிருந்து தப்பிக்கிறேன் என்று நினைத்த துர்கா, அவனிடமே சென்று மாட்டிக்கொண்டாள்.

ஒரு கையில் ஆல்பத்தை வைத்திருந்த ஆதி, அந்தக் கையை கீழே இறக்கியவன், மறுகையால் துர்காவை இடுப்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அவனைக் கட்டிக் கொண்டிருந்த துர்கா, ஆல்பம் வைத்திருந்த கையை ஆதி கீழே இறக்கியதும், அவனிடமிருந்து அந்த ஆல்பத்தை வாங்கப் போக… சுதாரித்துக் கொண்ட ஆதி, சட்டென்று மீண்டும் தன் கையை மேலே உயர்த்திப் பிடித்தான்.

“ஆதி ப்ளீஸ் ஆதி, அந்த ஆல்பத்தை என் கையில கொடுத்துவிடு,” என்று அவனைக் கட்டிக்கொண்டே அவன் முகத்தைப் பார்த்துத் துர்கா கெஞ்ச…

“ம்ஹும்… மாட்டேன். அதுல அப்படி என்ன நீ பார்த்துட்டு இருந்தேன்னு நான் பார்த்த பிறகுதான் உன் கையில் கொடுப்பேன். அதுவரைக்கும் என்கிட்ட அந்த ஆல்பத்தைப் பறிக்க முயற்சிக்காதே. அது உன்னால முடியாது,” என்றான் ஆதி.

“ஏன் முடியாது? உன் கையில் இருந்து என்னால அந்த ஆல்பத்தை வாங்க முடியாதுன்னு நினைச்சியா?” என்றால் துர்கா.

“ஆமா, நீ இந்த உயரத்தில் இருக்க. ஆல்பம் பாரு, உன்னைவிட உயரத்தில் நான் உயர்த்திப் பிடிச்சிருக்கேன். இதை எப்படி நீ என் கையில் இருந்து வாங்குவ?” என்றான் சிரித்துக் கொண்டு.

“அதெல்லாம் உன் கையில் இருந்து என்னால் அந்த ஆல்பத்தை வாங்க முடியும். பார்க்கிறாயா?” என்றால் துர்கா.

“என்கிட்டயே சவாலா? இந்த ஆதிகிட்டயே சவால் விடுகிறாயா? என் கையில் இருந்து ஆல்பத்தை வாங்க முடியுமா உன்னால்?” என்று கேட்டான் ஆதி.

“ஏன், என்னால் வாங்க முடியாதா?” என்றால் துர்கா.

“அப்படியா? எங்க என் கையில இருக்குற அந்த ஆல்பத்தைப் பிடுங்கு பார்ப்போம்,” என்று தன் கைகளை மேலும் உயர்த்திப் பிடிக்க.

இந்த முறை துர்கா அந்த ஆல்பத்தை எப்படியும் அவனிடம் இருந்து வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தவள்.

தான் அணிந்திருந்த குட்டி டிராயரை மேலே தூக்கிவிட்டு சரிசெய்தவள், தன் அரைக்கைச் சட்டையை மேலே சுருட்டிவிட்டு, என்னவோ சண்டைக்குச் செல்பவர்களைப் போல, கைகள் இரண்டையும் ஆதியின் முன்பு சண்டையிடுபவள் போலத் துர்கா நின்று இருக்க…

அவள் தன்னுடைய உடையைச் சரிசெய்வதைப் பார்த்து ஆதிக்குச் சிரிப்பு வந்தது.

“என்ன ஆதி, என்னைப் பார்த்து சிரிக்கிற? என்னால் உன் கையில் இருந்து அந்த ஆல்பத்தை வாங்க முடியாதுன்னு நினைச்சியா?” என்று கேட்டாள் துர்கா.

“கண்டிப்பா உன்னால் என் கையில் இருந்து அந்த ஆல்பத்தை வாங்க முடியாது,” என்றான் ஆதியும் உறுதியாக.

“இப்ப பாரு, ரெண்டே நிமிஷத்துல அந்த ஆல்பம் என் கைக்கு வந்து சேரப் போகுது,” என்றால் துர்கா.

“அதையும் தான் பார்ப்போமே… எப்படி நீ என் கையில் இருந்து அந்த ஆல்பத்தை வாங்குகிறாய்ன்னு நானும் பார்க்கிறேன்,” என்றான்.

“பாரு பாரு! இன்னும் ரெண்டு நிமிஷம் தான். அந்த ஆல்பம் என் கையில் வந்துவிடும்,” என்று அவன் பேச்சை அலட்சியப்படுத்துபவள் போல வேகமாக ஆதியிடம் சென்று, குதித்து அவன் கையில் இருந்து ஆல்பத்தைப் பிடுங்க முயற்சித்தால்.

ஆனால் ஆதி தன் கைகளை மேலே உயர்த்தி, கூடவே தன் கால்களையும் லேசாக உயர்த்தி நிற்க, துர்காவிற்கு அவன் கையில் இருந்த ஆல்பம் எட்டவில்லை.

மீண்டும் மீண்டும் துர்கா குதித்து அவன் கையிலிருந்த ஆல்பத்தை எடுக்க முயற்சிக்க…

அவள் குதிக்கக் குதிக்க ஆதி தன் கைகளை மேலே உயர்த்திக்கொண்டே இருந்தான்.

ஆல்பம் போயிட்டு இருந்த கையைப் பிடித்து கீழே இழுக்க முயற்சித்தால் துர்கா.

ஆனால் ஆதி கையை கீழே இறக்கவே இல்லை.

அவன் செய்கையில் துர்கா முறைக்க…

“என்ன முறைக்கிற? நீதானே ரெண்டு நிமிஷத்துல என் கையில் இருந்து ஆல்பத்தை வாங்குறேன்னு சொன்ன. எங்க இன்னும் ஒரு நிமிஷம் தான் இருக்கு. ஆனா என் கையில் இருக்குற ஆல்பத்தை எடுக்க உன்னால முடியல,” என்றான் ஆதி.

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, துர்கா திடீரென்று குதித்து அவன் கையில் இருந்த ஆல்பத்தைப் பிடுங்கப் போக…

சுதாரித்துக் கொண்ட ஆதி, இரண்டடி பின்னால் நகர்ந்து அவள் கையில் ஆல்பம் சிக்கிவிடாமல் நின்று கொண்டான்.

“சீக்கிரம் வா, சீக்கிரம் வந்து பிடி. டைம் கம்மியா இருக்கு. ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க?” என்று ஆதி தன் கையில் இருந்த ஆல்பத்தை ஆட்டி அவளிடம் கூற…

மீண்டும் வந்து அவன் அருகில் குதித்த துர்கா, அவன் கையில் இருந்து ஆல்பத்தை எடுக்க முடியாமல் போக…

ஆதி அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடி நின்று இருந்தான். அதைப் பார்த்த துர்கா, அடுத்துச் செய்த செய்கையில் அப்படியே உறைந்து போய் விட்டான் ஆதி.

படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க

You may also like

1 comment

S joshna December 9, 2025 - 1:58 pm

Intha album pidikirathu oru mudivuku varatho🤭😅😍

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured