Episode 188
ரூபேஷுடன் ஷிவுவை அவன் வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் என்று துரை முரண்டு பிடிக்க…
“ஏங்க, இப்படிச் சொன்னா எப்படி? தாலி கட்டின பிறகு நம்ம பொண்ணை வீட்டில் வச்சிட்டு இருந்தா ஊரெல்லாம் நம்மள பத்தி என்ன பேசும்? அவ புருஷன் வீட்டில் போய் இருப்பது தானே அவளுக்கு மரியாதை,” என்றார் கனகா.
“ஊரில் இருக்கிறவங்க பேசுறதுக்கு என் பொண்ணை அவன் நம்பி எல்லாம் என்னால அனுப்ப முடியாது. எவ்வளவு தைரியம் இருந்தால் என் பொண்ணை அவன் கஷ்டப்படுத்தி இருப்பான்? இவனை நம்பி நீ என் பொண்ணை அவன் வீட்டுக்கு அனுப்பச் சொல்றியா டி? எல்லாம் முடியாது கனகா. நான் என் பொண்ணை அனுப்ப மாட்டேன்,” என்று ஷிவுவின் தோளில் கையைப் போட்டு, தன்னோடு சேர்த்து அணைத்தபடி நின்றிருந்தார் துரை.
ரூபேஷின் அம்மா துரையிடம் வந்து, “சம்மந்தி, இதைக் கேட்கிறதுக்கு அருகதை இல்லாதவ தான் நான். என் பையன் இப்படி ஒரு தரங்கெட்ட தனமான விஷயத்தைச் செய்தாலும், எப்போ எனக்குத் தெரிஞ்சதோ அப்பவே நான் அவனை என் பையன் இல்லைன்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டேன். நீங்க அவனை நம்பி உங்க பொண்ணு என் வீட்டுக்கு அனுப்ப வேண்டாம். என்ன நம்பி அனுப்புங்க. இவ என்னோட மருமகள் கிடையாது, என்னோட பொண்ணு. நான் இவளை எவ்வளவு சந்தோஷமாகப் பார்த்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு சந்தோஷமா என்னால் முடிஞ்ச அளவுக்குப் பார்த்துக்கிறேன். என் பையனை நீங்க ஒரு பொருட்டாவே எடுத்துக்காதீங்க. தயவுசெய்து என் மகளை என் வீட்டுக்கு அனுப்பி வையுங்க,” என்று கண்களில் கண்ணீரோடு அவர் முன் நின்று கெஞ்சினார் ரூபேஷின் அம்மா.
இவ்வளவு நாள் தன் மீது தன்னம்மா கோபமாக இருக்கிறார் என்றுதான் நினைத்திருந்தான் ரூபேஷ். ஆனால் இன்று அவனைத் தன் பிள்ளையே இல்லை என்று இத்தனை பேர் முன்னும் சொன்னதும், இதயம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியது.
அப்படிச் சொன்னதும் ரூபேஷ் உடைந்த குரலோடு அவன் அம்மாவிடம் வந்து, “அம்மா, என்னம்மா இப்படி எல்லாம் சொல்றீங்க?” என்று கேட்க வர…
“என் கூடப் பேசாதடா! இனி உன்கிட்ட பேசுறதுக்கு நான் துளியும் விருப்பப்படல. எப்போ ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுத்து அவளைக் கஷ்டப்படுத்தினாயோ, அப்பவே நீ என் பையன் ஸ்தானத்தை இழந்துட்ட… ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ, உன்னைப் பெத்த பாவத்துக்குத்தான் உன்னை இன்னும் அந்த வீட்டில் வச்சிருக்கேன். எப்பவோ நான் இந்த உலகத்தை விட்டுப் போயிருக்க வேண்டியது. நான் மருத்துவமனையில் (ஹாஸ்பிடல்) இருக்கும்போது தற்கொலை செஞ்சுக்க முயற்சி செய்தேன்,” என்றார்.
அதைக் கேட்டதும் ஷிவுவும் ரூபேஷும், அங்கிருந்தவர்களும் கூடப் பதறினர். “அம்மா” என்று ரூபேஷும் ஷிவுவும் கண்ணீரோடு அழைத்தபடி அவர் அருகில் வர…. ஷிவுவைத் தன் அருகில் நிறுத்திக்கொண்டவர், ரூபேஷை விட்டு ஒரு அடி விலகி நின்றார்.
“அம்மா, என்னம்மா சொல்றீங்க? ஏன் இந்த மாதிரி காரியத்தை எல்லாம் செய்யத் துணிஞ்சிட்டீங்க? இதுக்குத்தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேனா?” என்று வருத்தத்தோடு கேட்டான் ரூபேஷ்.
“நீ செய்த காரியத்துக்கு என்னை என்ன செய்ய சொல்ற ரூபேஷ்? இதோ இங்க நிக்கிறாங்களே, இவங்க எல்லாம் நீ செய்த காரியத்திற்காக உன்னை எதுவும் நினைக்க மாட்டாங்க. இப்படிப்பட்ட ஒரு பிள்ளையைப் பெத்துட்டேன்னு சொல்லி என்னைத் தான் கேவலமா நினைப்பாங்க,” என்று சொல்லி அழுதவர்.
“நான் சாகலாம்னு முடிவு பண்ணித் தற்கொலை செய்யப் போனப்போ, ஆதி தம்பி வந்து தான் என்னைத் தடுத்துச்சு. இந்தத் தம்பி வந்து தான் என்னைக் காப்பாற்றி, எனக்கு ஆறுதல் சொல்லி, ‘நீங்க போயிட்டா ஷிவுவுடைய வாழ்க்கை கேள்விக்குறி ஆகிடும். ஷிவுவை யார் பார்த்துக் கொள்வார்கள்?’ என்று அந்தப் பெரிய பொறுப்பை என் கையில் கொடுத்து இருக்கு,” என்று ஆதியைப் பார்த்து சொன்னவர்.
“ஆதி தம்பி சொன்ன ஒரே காரணத்துக்காகத் தான் நான் இன்னும் உயிரோடு இருக்கேன். நீ செய்த பாவத்தை நான் சரி செய்யணும்னு நினைச்சுத்தான் ஷிவுகிட்ட அவ்வளவு தூரம் நான் கெஞ்சிக் கேட்டதுனால தான் ஷிவு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவே சம்மதம் சொன்னா. ஆனாலும் நீ ஷிவாவைக் கல்யாணம் பண்ணிக்கப் பிடிவாதமா இருந்ததுனால, உன் வழியிலேயே போய் உன்னைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்கணும்னு சொல்லித்தான் ஆதி தம்பி உனக்கு அஞ்சு கோடி ரூபாய் பணத்தைத் தரேன்னு சொல்லுச்சு. அவ்வளவு பணம் உனக்குத் தரேன்னு சொல்லியும், ‘ஷிவுவோட அப்பா சொத்தை வித்து பணம் தந்தால் தான் கல்யாணம் பண்ணுவேன்’னு நீ சொன்னப்போதான், பணத்துக்காக நீ பேய் மாதிரி மாறிட்டேன்னு நான் நினைச்சேன். ஏன் இப்படி மாத்துனதுக்குக் காரணம் நான் ஒருத்தி தான். உன் அப்பா மட்டும் குடித்துச் சொத்தை அழிக்காமல் இருந்திருந்தால், இந்த நேரம் நீயும் நல்லவனா தான் இருந்திருப்ப. இதுக்கு நானும் ஒரு காரணம். அதனாலதான் இந்தக் கல்யாணம் எப்படியாவது நடக்கணும்னு நீ சொன்னதுக்கு எல்லாம், ‘சரி சரி’ன்னு தலையாட்டினேன்.”
“நீ செய்த தப்புக்கு என் மகள் வயிற்றில் இழந்துட்டு இருக்குற உன்னோட குழந்தை என்ன பாவம்டா பண்ணுச்சு? இந்தக் குழந்தை பிறக்கும்போது ‘அப்பன் பேரு தெரியாத குழந்தை’ அப்படிங்கற பேரோட வரக் கூடாது என்கிற காரணத்துக்காகத்தான், உன்னை எப்படியாவது ஷிவு கழுத்தில் தாலி கட்ட வைக்கணும்னு நான் இதையெல்லாம் செய்தேன்,” என்றார் ரூபேஷின் அம்மா.
“‘அம்மா’ங்கற உரிமையோட இனிமேல் என்கிட்ட வந்து பேசிடாத,” என்றவர் திரும்பித் துரையிடம், “சம்மந்தி, தயவுசெய்து என்னை நம்பி உங்க பொண்ணு என் வீட்டுக்கு அனுப்பி வையுங்க,” என்று அவர் கெஞ்ச…
அவர் பேசிய பேச்செல்லாம் கேட்ட துரைக்கு மிகவும் கஷ்டமாகப் போய்விட, யோசனையோடு அவர் நின்று இருக்க… துர்கா அவர் அருகில் வந்து, “அப்பா, நீங்க தைரியமா நம்ம ஷிவுவை அத்தை கூட அவங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க,” என்றவள்.
திரும்பி ரூபேஷைப் பார்த்து, “ஷிவுவை எதுவும் கஷ்டப்படுத்தணும்னு ரூபேஷ் நினைச்சா அது நடந்துடும்னு நீங்க நினைக்கிறீங்களா? நம்ம ஷிவுவைப் பற்றி நீங்க அவ்வளவுதான் எடை போட்டு இருக்கீங்களா?” என்று கேட்டாள் துர்கா.
“அவளோட வாழ்க்கையை அவ பாத்துக்குவாப்பா. அவளால் கண்டிப்பா எல்லாத்தையும் கடந்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும். நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமா ஷிவுவை அத்தை கூட வீட்டுக்கு அனுப்பி வையுங்க. அவ நல்லபடியா அவளோட வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவாள்னு நம்பிக்கை எங்களுக்கு எல்லாருக்கும் இருக்கு. உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்துச்சுன்னா, நீங்க தைரியமா ஷிவுவை அனுப்பி வைங்க,” என்று சொன்னாள் துர்கா.
அவள் சொன்னதை எல்லாம் கேட்டவர் திரும்பி ஷிவுவைப் பார்க்க…. அவர் அருகில் வந்த ஷிவு அவரைக் கட்டிக்கொண்டு, அவர் மார்பில் தலை சாய்த்துப் படி, “அப்பா, நீங்க எனக்கு இவ்வளவு ஆதரவாக (சப்போர்ட்டாக) இருப்பீங்கன்னு நான் துளியும் நினைச்சுப் பார்க்கல. அதனால்தான் இத்தனை நாளும் நான் எதையும் வெளிக்காட்டிக்காம அமைதியாவே இருந்துட்டேன். நீங்க என் பக்கத்துல இருக்கும்போது எனக்கு என்னப்பா பயம் வேண்டி இருக்கு? எது வந்தாலும் நான் பாத்துக்குவேன். நீங்க கவலைப்படாதீங்க,” என்றால் ஷிவு.
தன் மகளே தைரியமாக இருக்கிறேன் என்று சொன்ன பிறகு, துரைக்குச் சற்று நம்பிக்கை அதிகமானது. “சரி ஷிவு, நீ தைரியமா போய் வா. எதுனாலும், எந்த நேரமானாலும் யோசிக்காமல் உன் அப்பாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு (போன்) பண்ணு. அடுத்த நிமிஷம் நான் உன் வீட்டுக்கு முன்னாடி வந்து நிற்பேன்,” என்றார் துரை ரூபேஷை முறைத்தபடி.
இத்தனை பேரும் ஒன்று சேர்ந்து கொண்டு தன்னைப் ஒதுக்கியதைப் பார்த்த ரூபேஷிற்கு, இப்போதுதான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உரைத்தது. ‘இந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் இவர்களிடம் மன்னிப்புக் கேட்பேன்? என்னுடைய செயலுக்கு மன்னிப்பே கிடையாது,’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் ரூபேஷ்.
அப்போது அவன் மொபைலில் அறிவிப்புச் சத்தம் (நோட்டிஃபிகேஷன் சவுண்ட்) வர… தன்னிச்சையாக மொபைலை ஆன் செய்து பார்க்க, அவன் கணக்கில் (அக்கவுண்டில்) 5 கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்ட அறிவிப்பு வந்திருந்தது.
அதைப் பார்த்ததும் ரூபேஷ் நிமிர்ந்து ஆதியைப் பார்க்க… ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக அவனைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
நேராக ஆதியிடம் வந்த ரூபேஷ் அவன் காலில் விழுந்து, “என்னை மன்னிச்சிடுங்க ஆதி. நான் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டேன்னு இப்போதான் எனக்குப் புரிஞ்சுது. இந்தக் மன்னிப்புக் கேட்பதற்கு கூட அருகதை எனக்குக் கிடையாது. நான் செய்த பாவத்திற்கான தண்டனை எனக்குக் கண்டிப்பா கடவுள் ஒரு நாள் வழங்குவார். அதை நான் எதிர்பார்த்து காத்துட்டு இருக்கேன். எனக்கு இந்த பணம் வேண்டாம். நான் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேனோ, அவரே என்னை தன் பிள்ளை இல்லை என்று சொன்ன பிறகு, இந்தப் பணம் எல்லாம் எனக்கு எம்மாத்திரம்? எனக்கு இந்த பணம் எல்லாம் எதுவும் வேண்டாம்,” என்று சொல்லி, ஆதி அனுப்பிய பணத்தை அப்பொழுதே திருப்பி அவன் கணக்கிற்கு (அக்கவுண்டுக்கு) மாற்றினான் (ட்ரான்ஸ்ஃபர் செய்தான்) ரூபேஷ்.
அவனுடைய இந்தத் திடீர் மாற்றம் அங்கு இருந்த அனைவருக்கும் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஷிவுவும் அதே மனநிலையில் தான் இருந்தாள். இருந்தும், இவன் எந்த நேரத்திற்குக் எப்படி மாறுவான் என்று தெரியாததால், அவனை முழுவதுமாக நம்ப ஷிவுவின் மனம் இடம்கொடுக்கவில்லை.
ஆதி ரூபேஷின் தோளில் தட்டிக்கொடுத்து, “இந்த உலகத்துல ஒரு ஆணை நம்பி வரப் பெண்கள், அவனுடைய அம்மா, கூடப் பிறந்த அக்கா, தங்கை எல்லாம் அவனோட இரத்த பந்தம். ஆனால், எந்த ரத்த உறவுமே இல்லாமல் வெறும் அன்பையும் காதலையும் மட்டுமே நினைத்து நம்பி வரும் பெண்ணை ஒருபோதும் கைவிடக்கூடாது. நீ செய்தால், அவள் உன்னை நம்பியதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். அவள் நம்பிக்கையே நீ மொத்தமா உடைச்சிட்ட… நீ என்னோட காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிறகும் கூடக் கல்லு மாதிரி ஷிவு நின்னுட்டு இருக்கா பார்த்தியா. அவள் மனசு எவ்வளவு உடைஞ்சு போயிருக்கும்னு இதிலிருந்து நீ புரிஞ்சுக்கோ. நீ எங்க யார்கிட்டயும் மன்னிப்புக் கேட்க வேண்டாம். இது உன்னை மன்னிச்சு, அவளை உன்னோட வாழ்க்கையில ஏத்துக்கிட்டா, நாங்க எல்லாருமே உன்னை மன்னிச்சதுக்குச் சமம். உடனே எதுவும் மாறிடாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாற்ற முயற்சிக்கும். முதல்ல நீ உன்னை முழுசா மாத்திக்கோ. அதைப்பார்த்து கண்டிப்பா ஷிவு உன்னை ஏத்துக்குவா. இனியும் உன்னை நம்பி இருக்கிற உன் அம்மாவையும், உன்னை நம்பி வீட்டுக்கு வந்திருக்க ஷிவுவையும் ஏமாத்திக் கஷ்டப்படுத்திடாத. இதை மட்டும் தான் நான் உனக்குச் சொல்றேன்,” என்றவன் ரூபேஷையும் ஷிவுவையும் அவன் அம்மாவுடன் அவர்கள் வீட்டிற்கு முறையாக அனுப்பி வைத்தான் ஆதி.
மாதவி இப்போதெல்லாம் கல்லூரியில் (காலேஜிலிருந்து) இருந்து வருவது தாமதமாகிக்கொண்டே இருந்தது. சங்கவிக்கு அன்று ஒரு நாள் அவள் காரில் இருந்து வந்து இறங்கி வந்தது மனக்கண்ணில் ஓடிக்கொண்டே இருந்தது.
அதைப் பற்றி விசாரிக்க மாதவியை அவளுக்குத் தெரியாமல், அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்க ஒரு ஆளை நியமித்திருந்தாள் சங்கவி. இரண்டு மூன்று முறை அவன் மாதவி பற்றிய தகவல்கள் கொடுக்கும்போதும், புகைப்படங்களைக் கொடுக்கும்போதும் மாதவி மட்டுமே தெளிவாக இருந்தாள். அவர்களுடன் இருந்த அந்த ஆணின் முகம் மட்டும் சரியாக அவளுக்குப் புகைப்படத்தில் தெரியவில்லை.
மாதவியுடன் இருக்கும் அந்த நபரைப் பற்றியும், அவன் புகைப்படத்தையும் கேட்டிருந்தாள் சங்கவி. அவள் கேட்டது போலவே, சங்கவியின் மின்னஞ்சலுக்கு (மெயிலிற்கு) அனைத்து விவரங்களும் அனுப்பிவிட்டதாக மாதவியைக் கண்காணிக்கச் சொன்ன நபர் சங்கவிக்குப் தொலைபேசி (போன்) பண்ணிச் சொல்ல.
அவனிடம் பேசிவிட்டுப் போனை வைத்தவள், அலுவலகத்திற்கு (ஆபிஸிற்கு) விரைந்தாள். ‘அப்படி யாருடன் மாதவி சுற்றுகிறாள்’ என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அலுவலகம் வந்தவள். மாதவி பழகும் நபர் நல்லவனாக இருந்தால், அவனுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுக்க என்ன செய்ய வேண்டுமோ, தன்னால் முடிந்தவரை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டே சங்கவி தன் தனியறைக்குள் (கேபினுக்குள்) நுழைந்தாள்.
அவசரமாக வந்து தன் கணினியை (கம்ப்யூட்டரை) ஆன் செய்தவள், அதில் வந்திருந்த மின்னஞ்சலில் மாதவி உடன் பழகும் அந்த நபரைப் பற்றிய விவரங்களை வேகமாகத் திறந்து பார்த்தாள்.
புகைப்படம் மங்கலாக ஏற்றம் (லோட்) ஆகிக்கொண்டு இருக்க, சற்று நிமிடத்தில் அந்தப் புகைப்படம் தெளிவாக அந்தத் திரையில் (ஸ்கிரீன்) முழுவதும் தெரிய… மாதவி நின்று இருக்க…. அவளைப் பின்னால் இருந்து கட்டியணைத்தவாறு அவள் தோளில் தன் முகத்தை வைத்துக்கொண்டு, எதையோ கைநீட்டிக் காட்டி மாதவியிடம் பேசுவது போல இருந்தது அந்தப் புகைப்படம்.
மாதவியைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தது போதிதான். மாதவியுடன் அவனைப் பார்த்ததும் சங்கவியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ‘இவன் எப்படி மாதவியுடன் பழகினான்? இவனுக்கும் மாதவிக்கும் எப்படிப் பழக்கம் ஏற்பட்டது?’ என்று யோசித்து யோசித்துச் சங்கவி தலையைப் பிய்த்துக்கொண்டாள்.
அவன் அனுப்பிய புகைப்படங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்த சங்கவி, ஒரு புகைப்படத்தில் வந்ததும் அப்படியே நிலைகுத்தி நின்றாள்.
அது மாதவியின் கல்லூரி விழாவில் (காலேஜ் ஃபங்ஷனில்) எடுத்த புகைப்படம். அதில் ஆதி, துர்கா என்று நின்று இருக்க, போதியருகில் சங்கவி அவன் கையில் பரிசை வாங்கியவாறு நின்று இருந்தாள்.
‘இவள் படிக்கும் கல்லூரிக்கு எப்படி இவர்கள் எல்லாம் வந்தார்கள்?’ என்று யோசித்தபடியே சங்கவி அந்தப் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருக்க… சங்கவி கல்லூரி பெயரை கூகிளில் (Google) தட்டி, அதனுடைய நிறுவனர் யார் என்று சங்கவி போட்டுப் பார்த்தாள்.
அதில் போதியின் புகைப்படத்துடன், அந்தக் கல்லூரி நிறுவனர் அவன்தான் என்று அந்தப் புகைப்படத்திற்குக் கீழ் போதியின் பெயரோடு வர… அதைப் பார்த்துச் சங்கவி, “அப்போ மாதவி நான் படிக்கிறது போதியின் கல்லூரியா? இது இவனோட காலேஜ்ன்னு எனக்கு எப்படித் தெரியாமப் போச்சு?” என்ற சங்கவி யோசனையில் இருந்தவள், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
துர்கா விஷயத்தில் போதி தன்னை ஆதியிடமும் அவன் குடும்பத்திடமும் மாட்டிவிட்டதால், அவனுக்கும் அவளுக்கும் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டிருந்தது. அதனால் போதியுடன் மாதவியைப் பார்க்கச் சங்கவிக்கு ஆத்திரமாக வந்தது. ‘தன் வீட்டில் இருக்கும் ஒரு வேலைக்காரியைப் போல நடத்தாமல் அவளைத் தன் கூடப் பிறந்த சகோதரியாக நடத்தி, அவளுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்த தன்னிடமே இதை எல்லாம் மறைத்து இருந்த மாதவியின் மீதும்,’ சங்கவிக்கு அளவு கடந்த கோபம் வந்தது.
அதே கோபத்தோடு மாதவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினாள் சங்கவி
துரையும் கனகாவும் ஷிவுவையும் ரூபேஷையும் அழைத்துக்கொண்டு ரூபேஷின் வீட்டிற்கு முறையாக அவளைக் கொண்டு வந்து விட, ஷிவுவிற்குச் செய்ய வேண்டிய சீர்களுடன் அவன் வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தனர். ரூபேஷ் காரில் ஏறியதில் இருந்து யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ‘அதான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுவது’ என்று அமைதியாகவே வந்துவிட்டான்.
ஏற்கனவே வீட்டிற்கு வந்து இவர்களை வரவேற்பதற்காக ஆரத்தி கரைத்து எடுத்து வைத்திருக்க, இவர்கள் வீட்டிற்கு வந்ததும். ரூபேஷையும் ஷிவுவையும் வாசலில் ஒன்றாக நிற்க வைத்து இருவருக்கும் ஆரத்தி சுற்றி வீட்டிற்குள் அழைத்து வந்தனர்.
அவர்கள் இருவருக்கும் முறையாகச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்வதற்கு ரூபேஷின் உறவினர்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருக்க… அதையெல்லாம் பார்த்த ரூபேஷின் அம்மா, “இது எல்லாம் எதுக்கு. என் மகளுக்கு இதில் எல்லாம் விருப்பம் இருக்காது. இதெல்லாம் எதுவும் வேண்டாம். அவள் விருப்பம் இல்லாமல் எதையும் செஞ்சு என் மகளைச் சங்கடப்படுத்த வேண்டாம்,” என்று ஷிவுவைத் தன் மகளாகவே பாவித்து, அவளின் மனநிலையைப் புரிந்துகொண்டு ரூபேஷின் அம்மா சொல்ல…
ரூபேஷின் அம்மாவிடம் வந்த கனகா, “சம்மந்தி, என்ன சொல்றீங்க? நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. இப்பதான் மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே புரிய ஆரம்பிச்சிருக்கு. அப்படி இருக்கும்போது நம்ம அவரை விலக்கி வச்சிட்டு இருந்தோம்னா, அவரு எதுலயுமே ஒட்டுதல் இல்லாமல் விலகிப் போவதற்கும் வாய்ப்பு இருக்கு. நீங்க எதுக்காக என் பொண்ணை உங்க வீட்டுக்குக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்தீங்க? உங்க மகன் மனம் திரும்பி என் பொண்ணோட சந்தோஷமா வாழணும்னு தானே,” என்று கேட்டார் கனகா.
“ஆமாம்,” என்று ரூபேஷின் அம்மா தலையாட்ட…
“இப்போ இந்த மாதிரிச் சின்ன சின்ன சடங்குகள்ல தான் அவங்க நெருங்குறதுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்குது. அதனால நீங்க இதை எல்லாம் வேண்டாம் என்று சொல்லி, நீங்களே அவங்க ரெண்டு பேரையும் தள்ளி இருக்க வச்சிடாதீங்க,” என்றார் கனகா.
“சரி சம்மந்தி, உங்க விருப்பம் போலவே நடக்கட்டும். நான் இதுல எதையும் தலையிடல,” என்று ரூபேஷின் அம்மா சொல்லிவிட..
ரூபேஷை அழைத்த கனகா, “மாப்பிள்ளை, இப்படி வந்து சோபாவில் உட்காருங்க,” என்று ஷிவு அமர்ந்திருந்த சோபாவை காட்டிச் சொல்ல…. ஷிவு அருகில் தயங்கி வாரே சோபாவில் அமர்ந்த ரூபேஷ் ஷிவுவைப் பார்க்க.. ஆனால் அவளோ அவன் இருக்கும் பக்கம் திரும்பவே இல்லை.
தன் மீது இன்னும் கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்த ரூபேஷ், ஷிவுவிடம் வழியே சென்று எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
சமையலறைக்குச் (கிச்சனுக்கு) சென்ற கனகா, ஒரு தட்டில் சர்க்கரையும், ஒரு டம்ளரில் பாலும், பழமும் எடுத்து வந்து ஷிவுவின் கையில் கொடுத்து, “இந்த பழத்தை மாப்பிள்ளைக்கு ஊட்டி விடு,” என்று சொன்னார்.
ஷிவு நிமிர்ந்து “அம்மா” என்று கோபமாக கனகாவைப் பார்க்க… அவள் அருகில் குனிந்த கனகா, “இப்போ எதுக்குடி தேவையில்லாம என்ன முறைக்கிற. மாப்பிள்ளையை அவங்க சொந்தக்காரங்க முன்னாடி அசிங்கப்படுத்தனும்னு நினைக்கிறியா? இப்போ வேணா அவரை நீ அசிங்கப்படுத்தலாம் என்று நினைக்கலாம். நாளைக்கே ஒருவேளை நீ மனசு மாறி மாப்பிள்ளை கூடச் சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறப்போ, அவங்க எல்லாருமே உன்னையும் மாப்பிள்ளையையும் பத்தி என்ன நினைப்பாங்க. ஒழுங்கா வாய மூடிட்டு நான் சொல்றத மட்டும் செய்,” என்று அவளை யாருக்கும் தெரியாமல் அதட்ட…
ஷிவு எதுவும் பேசாமல் கனகா நீட்டிய தட்டை வாங்கி ரூபேஷிற்கு வேண்டா வெறுப்பாக ஊட்டிவிட… அவளைப் பார்த்தவாறு அவள் கொடுத்த பழத்தை வாங்கிச் சாப்பிட்டான் ரூபேஷ். பிறகு தட்டில் இருந்த பழத்தை எடுத்து ஷிவுவின் முகத்திற்கு நேராக நீட்ட… அவனை முறைத்தபடியே ரூபேஷ் நீட்டிய பழத்தைச் சாப்பிட்டாள்.
பின்பு மற்ற சடங்குகள் எல்லாம் நடத்தி முடித்த பின்பு, இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு சொந்தங்களாகக் கிளம்பிவிட, கடைசியில் ரூபேஷ், ரூபேஷின் அம்மா, ஷிவு, துரை, கனகா மட்டுமே அங்கு இருந்தனர்.
அவர்களின் சொந்தங்கள் அனைவரும் சென்று விட, ரூபேஷ் இருக்கும் ஷிவுவிற்கும் முதல் இரவு ஏற்பாடுகளை ஷிவு வேண்டாம் என்று சொல்லியும், கனகாவே அவள் அருகில் இருந்து பார்த்துப் பார்த்துச் செய்தவர்.
ரூபேஷை முதல் இரவு அறைக்குள் இருக்கச் சொல்லிவிட்டு, ஷிவுவைத் தயாராக்கி உள்ளே அனுப்புவதாக அவனிடம் சொல்ல… அந்த அறையில் இருந்து அவர் வெளியே செல்லப் போக… “அத்தை ஒரு நிமிஷம்” என்றான் ரூபேஷ்.
அவர் திரும்பி, “சொல்லுங்க மாப்பிள்ளை” என்று சிரித்த முகமாகப் பேச…
“தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க,” என்று சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்தான் ரூபேஷ்.
“ஐயோ மாப்பிள்ளை, எழுந்திருங்க! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று 2 அடி பின்னால் தள்ளி நின்றுகொண்டார் கனகா.
“உங்க பொண்ணுக்கு நான் பண்ணின துரோகத்துக்குத் தான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டேன். அவளுக்கு இந்த விஷயத்தில் விருப்பம் இல்லைன்னா, நீங்க அவளை வற்புறுத்த (போர்ஸ்) பண்ண வேண்டாம் அத்தை,” என்றான்.
“நீங்க உண்மையாவே மனம் திருந்திப் பொண்ணு கூட வாழணும்னு நினைச்சீங்கன்னா, இப்போ நடக்குற விஷயத்தை எதையும் தடுக்காதீங்க. இன்னைக்கு எல்லாமே நடக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. ஆனா, என் மகளோட நீங்க பக்கத்துல இருந்தா தான் உங்க ரெண்டு பேருக்கும் நெருக்கம் வரும். அப்பதான் மனசுவிட்டு எதையுமே பேசித் தெளிவுபடுத்திக்க முடியும்,” என்றார்.
அதற்கு மேலும் ரூபேஷ் அவரிடம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுவிட, “நான் போய்ச் ஷிவுவை அனுப்பி வைக்கிறேன் மாப்பிள்ளை,” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டுச் சென்று விட்டார்.
