Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 195

உன் ரகசிய ரசிகை நான் 195

by Layas Tamil Novel
102 views

EPISODE195

மாதவியை வீட்டில் சென்று பார்க்க லேகா போதி கொடுத்த போனை வாங்கி தன் கைப்பையில் வைத்து அவள் வீட்டிற்கு சென்றாள்.

வாசலிலேயே சங்கவியை கண்ட லேகா சற்று பதட்டமாக அவளை கொண்டு உள்ளே வந்த சங்கவி மாதவியை அழைத்து அவளுடன் பேச சொல்ல…

மாதவியுடன் தனியாக பேச வேண்டும் என்று லேகா தனக்கு பாத்ரூம் வருவதாக பொய் கூறி மாதவியுடன் அவள் அறைக்கு செல்ல போக….

அவள் கொண்டு வந்த ஹேண்ட் பேக்கை சோபாவில் வைத்துவிட்டு சங்கவி உள்ளே செல்லச் சொன்னாள்.

லேகா தங்கியவாறு சங்கமியை பார்க்க என்ன அப்படி பாக்குற ஏன் அந்த ஹேண்ட் பேக்க தூக்கிட்டு தான் நீ பாத்ரூம் போவியா என்று கேட்டால்.

லேகா வேகமாக தலையாட்டி அதெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா எப்படி தன் தோளிலிருந்து ஹேண்ட்பேக்கை கழட்டி சோபாவில் வைத்தவள் மாதவியுடன் அவள் அறைக்கு சென்றாள்.

உள்ளே செல்லும் மாதவியையும் லேகாவையையும் சந்தேக பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்த சங்கவிக்கு போன் வரவும் அதை எடுத்து காதில் வைத்தபடி வெளியே சென்றாள்

ரேகாவை மாதிரி தன்னரைக்கு அழைத்து வந்தவள் பாத்ரூம் அங்கு தான் இருக்கு போயிட்டு வாடி என்று கூற…

அவளுடன் வந்த லேகா அவள் ரூமுக்குள் வந்ததும் சட்டென மாதவியின் அறை கதவை சாற்றினால்.

ஏய் இப்போ எதுக்குடி கதவை சாத்திர சங்கவி அக்கா பார்த்தா ஏதாவது என்ன திட்ட போறாங்க என்று மாதவி பதட்டமாக சென்று கதவை திறக்க போக…

அவள் கையை பிடித்து இழுத்து தன் எதிரே நிற்க வைத்த லேகா நீ என்ன லூசா டி நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்ன இங்க பார்க்க வந்தால் நான் எதுக்காக வந்திருக்கேன்னு கூட உன்னால புரிஞ்சுக்க முடியலையா என்று சொல்லி அவள் தோளில் அடித்தவள்.

ஆமா நீ ஏன் ரெண்டு மூணு நாளா காலேஜுக்கு வரல என்று கேட்டால் லேகா.

அதுவா அது ஒரு பெரிய பிரச்சனை டி நானும் அப்புறம் போன்ல பேசிட்டு இருக்குறத சங்கவி அக்கா பாத்துட்டாங்க.

என் போனை வாங்கி உடைச்சிட்டு என்ன ரூம்குள்ள வச்சு போட்டுட்டாங்க என்ன வெளியே போகக்கூடாது காலேஜ் எங்கேயும் போகக்கூடாதுனு அடிச்சு வச்சுட்டாங்க என்றால் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

ஏண்டி இவ்வளவு விஷயம் நடந்திருக்கு நான் உன்ன பார்க்க இங்க வந்து இருக்கேன்னா முதல்ல நீ அதை என்கிட்ட எப்படியாவது சொல்லணும்னு தானே பார்க்கணும் இப்படி எதுவும் தெரியாதவன் மாதிரி இருந்தா என்னடி பண்றது உன்ன என்றால் லேகா கடுப்பாக.

அது இல்லடி எனக்கு திடீர்னு நீ இங்கே வந்ததும் எதுவும் புரியவே இல்லை. நானே எப்படியாவது இவங்க கிட்ட கெஞ்சி கூத்தாடி உன்னை பார்க்க காலேஜ் வரணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

உன் கூட என்ன பண்ணு விடாம இந்த ரூமுக்குள்ளே வச்சு அடிச்சு வச்சிருக்காங்க என்று மாதவி மிகவும் வருத்தத்தோடு லேகாவிடம் கூறினாள்.

நீ அவரை பார்த்தாயா அவர் கூட பேசி நான் ரெண்டு மூணு நாளுக்கு மேல ஆச்சு அவர்கிட்ட பேசிட்டு இருக்கும் போது தான் சங்கவி அக்கா என்கிட்ட ஃபோனை வாங்கி உடைச்சாங்க.

போன் பேசும்போது திடீர்னு கட்டானதும் அவர் என்னவோ எதுவுமே பதில் இருக்கலாம் நீ அவரை பார்த்தியா அவர் எதுவும் சொன்னாரா என்று மாதவி ஆர்வமாக லேகாவை பார்த்து கேட்க.

அவர பாத்துட்டு தான் இங்க வரேன் அவர்தான் என்ன இங்கே அனுப்பி வச்சாரு என்றால் லேகா.

மாதவியும் லேகாவும் பேசிக் கொண்டிருக்க அப்போது மாதவியின் அரைக்கதவு பலமாக தட்டும் சத்தம் கேட்டதும் இருவரும் திடுக்கிட்டு கதவை பார்த்தனர்.

இருவரும் எதுவும் பேசாமல் கதவையே அதிர்ச்சியாக பார்க்க மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் சுயம் வந்த மாதவி வேகமாக சென்று கதவை திறந்தால்.

சங்கவி தான் வந்திருக்கிறாள் என்று பயந்து படி மாதவி கதவை திறக்க அங்கே அவர்கள் வீட்டு வேலையால் கையில் ஜுசும் ஸ்நாக்ஸ் உடனும் மாதவியின் அரை முன்பு நின்றிருந்தவர் அம்மா இத உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க என்று சொல்ல அதை வாங்கிவிட்டு கதவை வேகமாக சாற்றி உள்ளே வந்தால் மாதவி.

ஸ்னாக்ஸ் தட்டை வைத்துவிட்டு லேகாவிடம் வந்தவள் என்னை எப்படியாவது இங்கிருந்து வெளியே கூட்டிட்டு போயிட்டு என்னால இங்க இருக்க முடியல அவர பாக்காம அவர் கூட பேசாம எனக்கு என்னவோ போல இருக்கு என்று மாதவி புலம்ப…

நான் எப்படி உன்னை இப்போ இங்கு இருந்து கூட்டிட்டு போறது அது இப்போதைக்கு முடியாது ஒரு நிமிஷம் இரு என்று சொன்னவள் தன் உடைக்குள் இவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த போதி மாதவியிடம் கொடுக்கச் சொன்ன போனை வெளியே எடுத்தவள் அவசரமாக மாதவியின் கையில் திணித்து இந்த போனை போதி சார் யாருக்கும் தெரியாம உன்கிட்ட கொடுக்க சொன்னாரு நைட்டு எல்லாரும் தூங்கின பிறகு நீ அவருக்கு போன் பண்ணனும்னு சொன்னாரு என்றால் லேகா.

சரி என்று தலையாட்டிய மாதவி அவசர அவசரமாக ரேகா கொடுத்த போனை வாங்கி அவள் அறையில் இருந்து கபோர்ட்டில் துணிகளுக்கு இடையில் மறைத்து வைத்தால்.

அவளிடம் போனை கொடுத்ததும் மாதவியின் அரை கதவை திறந்து வைத்துவிட்டு பாத்ரூம் செல்வது போல பாவனை செய்து வெளியே வந்தால் லேகா அவள் பாத்ரூமில் விட்டு வெளியே வரவும் சங்கவி அவர்கள் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.

இவ்வளவு நேரமாவா நீ பாத்ரூமுக்குள்ள இருந்த என்று அவளை சங்கவி ஒரு மாதிரியாக பார்த்து கேட்க..

இல்ல நாங்க இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு இப்போதான் நான் பாத்ரூம் போயிட்டு வந்தேன் என்றால் லேகா.

ஓ… சரி இன்று தலையாட்டிய சங்கவி உன்னோட ரெக்கார்ட் நோட் வாங்கிட்டியா என்று கேட்க..

இன்னும் இன்னும் இல்ல அக்கா என்று லேகா தலையாட்டி விட்டு மாதிரியை பார்க்க…

மாதவி இதோ இப்ப எடுத்துக் கொடுத்து விடுகிறேன் என்று அவசர அவசரமாக தன் புத்தகங்கள் வைத்திருந்த அலமாரியில் சென்று எடுத்து ரெக்கார்ட் நோட்டை கொண்டு வந்து லேகாவின் கையில் கொடுத்தால்.

அதை வாங்கிக்கொண்டு லேகா சரிடி மாதிரி நான் போயிட்டு வரேன் இனி எப்போ காலேஜ் வருவ என்று பொதுவாக கேட்டால்.

அவள் அப்படி கேட்டதும் மாதவி திரும்பி சங்கவியை பார்க்க…

உடனே சங்கவி அவ இப்போதைக்கு காலேஜ் வரமாட்டா என்றால் சங்கவி.

அக்கா இன்னும் ஒரு மாசத்துல எக்ஸாம் வரப்போகுது அப்படி லீவு போட்டான்னா எப்படி படிக்க முடியும் என்றால் லேகா.

அதெல்லாம் அவ படிச்சுக்குவா இப்போதைக்கு அவ வர முடியாது அவ்வளவுதான் நீ ரெக்கார்ட் நோட் வாங்கிட்டு இல்ல முதல்ல இங்கிருந்து கிளம்பு என்று அவளை துரத்தாத குறையாக சங்கவி லேகாவிடம் பேச.

லேகா சங்கடத்துடன் மாதவியை பார்க்க மாதவி மன்னிச்சிடு என்பது போல கண்களாலேயே அவளிடம் கெஞ்ச வேறு வழியில்லாமல் லேகா மாதிரி அறையில் இருந்து வெளியே வந்தவள் அவள் பேக்கை எடுத்துக்கொண்டு மாதவியிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றாள்.

❤️

துர்காவை தனியே விட மனம் இல்லாமல் ஆதி திருச்சிக்கு கிளம்ப அவனுடன் கதிர், விக்கி, நிலானி, ரூபேஷ் என்ன நால்வரும் கிளம்பினர்.

அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒருவழியாக ஏர்போர்ட் வந்து இறங்கிய ஆதி ஏற்கனவே வரவழைக்க பாட்டு இருந்த தங்கள் ஆபீஸ் காரில் பயணப்பட…

அவனுடன் கதிரும், ரூபேஷும் ஓட்டிக்கொண்டு ஆதி-யின் காரில் செல்ல..

ஆதி-யின் ஆபிஸில் இருந்து வந்த மற்றொரு காரில் விக்கியும் நிலானியும் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

இவர்கள் தாங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஹோட்டலுக்கு வந்து அவர் அவரவர் அறைக்கு சென்று ரெப்பிரேஷ் ஆகிவிட்டு வெளியே வர..

ஆதி அவர்களிடம் நாம இப்போது நேரில் சென்று துர்காவை பார்க்க ஆசிரமம் சென்றால்.

அவர்கள் மீது அங்கு உள்ளவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும்.அதனால் அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும்.

அதனால் இப்போது நாம ஆசிரமத்திற்கு போக வேண்டாம்.இப்பொழுதே மணி எட்டு ஆகிவிட்டது.

இன்னும் கொஞ்சநேரத்தில் எப்படியும் ஆசிரமத்தில் எல்லோரும் உறங்க சென்றுவிடுவார்கள்.

நாம் எல்லாம் இரவு பதினோரு மணியை போல யாருக்கும் தெரியாமல் ஆசிரமதிக்குள் நுழைந்து துர்காவையும் மற்றவர்களையும் பார்க்க செல்லலாம் என்றான் ஆதி.

நீ சொல்றதும் சரிதான் அண்ணா ஆனா நாம ஏன் நைட் பதினோரு மணிக்கு பார்க்க போகாம இப்பவே கிளம்பி போறோம் என்றான் கதிர்.

கொஞ்சம் முன்னயே போய் ஆசிரமதுக்கு உள்ள போற வழி என்ன இருக்கு வேறு எதுவும் வித்யாசமா இருக்குதான்னு தெரிஞ்சுக்க தான் இப்பவே போறோம் என்றான்.

கதிரும் நீ சொல்றதும் சரிதான் அண்ணா என்றவன் விக்கியிடம் திரும்பி நாம எப்படியும் ஆசிரமதிக்குள் போக லேட் ஆகும் தானே அதுவரை நிலானி வந்து நம்ம கூட அந்த காத்துட்டு இருக்கணுமா.

பேசாம நிலானியை இங்கேயே ரூமில் விட்டுவிட்டு நாம மட்டும் போகலாமா என்று கேட்டான்.

அவன் தன்னை ஹோட்டலில் தனியாக விட்டுவிட்டு போகிறேன் என்று சொன்னதும் வேகமாக ம்ம்ஹும்… மாட்டேன்.

நானும் உங்க கூட வரேன் என்னால எல்லாம் இங்கே தனியாக இருக்க முடியாது என்றாள் நிலானி கதிரின் கையை கட்டிக்கோ கொண்டு.

அவளை சமாதானம் செய்யலாம் என்று கதிர் அது வந்து நிலானி அங்கே நீ எங்க கூட வரது சரியாக இருக்காது. நாங்க சொல்றதை கொஞ்சம் கேளு என்று கூற..

ம்ஹும்… முடியாது அண்ணா என்றாள் நிலானி.

உடனே ஆதி வந்து நிலானி நீ தனியா எல்லாம் ஹோட்டலில் இருக்க வேண்டாம் என்றான்.

அவன் சொந்ததும் பார்த்தீங்களா ஆதி அண்ணாவே என்னை கூட வர சொல்லிட்டாங்க என்று நிலானி சொல்ல…

நீ விக்கி கூட ஹோட்டலிலேயே இரு… நாங்க சொல்ற அப்போ நீங்க ரெண்டு பேரும் அங்கே வந்தா போதும் என்றான்.

ஆதி தங்களுடன் வர சொன்னதும் சிரித்த முகமாக இருட்நைஹ் நிலானியின் முகம் சோகத்தில் கருத்துவிட்டது.

இதற்கு மேலும் அவர்களிடம் மருத்து பேச முடியாததால் வேண்டா வெறுப்பாக சரி என்று தலையை ஆட்டினாள் நிலானி.

அவளோடு சேர்ந்து தானும் இயிலேயே இருப்பதை நினைத்து விக்கி வருத்தப்படட..

அவனை சட்டையே செல்லாமல் சரி அண்ணா நீங்க எல்லாரும் நேர போய் என்ன நிலவரம்னு பார்த்துட்டு எங்களுக்கு தகவல் சொல்லுங்க.

நானும் இவரும் நீங்க சொன்னதும் இங்கே இருந்து கிளம்பி வதுடறோம் என்றாள் நிலானி.

சரி என்ற ஆதி கதிரையும், ரூபேஷையும் தன்னுடன் அழைத்து சென்றான்.

அவர்கள் சென்றதும் வாங்க நாம ரூமுக்கு போகலாம் என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு இருவரும் தங்கி இருந்த அறைக்கு இழுத்து சென்றால்.

❤️

எப்போது நள்ளிரவு ஆகும் என்று காத்திருந்த துர்கா அவள் தங்கைகளும் தங்கள் அறையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதாக நினைத்துக் கொண்டு படுத்தவர்கள் உறங்கிவிட…

பியூன் ஆசிரமத்தை சுற்றியும் ஒரு முறை சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தன்னரைக்கு வந்து கதவடைத்து படுத்து உறங்கிய விட்டார்.

இங்கே மணி 12 தாண்டியும் யாரும் எழுந்திருக்காமல் இரண்டு நாட்களாக அலைந்த கலைப்பில் அனைவரும் உறங்கிவிட…

அப்போது அவர்கள் நால்வரும் இருக்கும் அரை ஜன்னலை திறந்து கொண்டு முகமூடி அணிந்த ஒரு நபர் அவர்கள் அறைக்குள் குதித்தான்.

அவன் குதித்ததும் லேசாக எழுந்த சத்தத்திலேயே கண்விழித்து விட்டால் துர்கா.

அப்போதுதான் தாங்கள் நீண்ட நேரம் உறங்கி விட்டது உணர்ந்தவள் உடனே எழுந்திருக்காமல் யார் தங்கள் அறைக்குள் வந்திருப்பது என்று தூங்குவது போல நடித்து படி பார்த்துக் கொண்டு இருந்தால்.

அறைக்குள் குறித்த அந்த நபர் வாட்டர் சாட்டமாக இருந்தான். ஆறடி உயரம் ஆஜான பகவான உடல் கொண்டவன் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு அறைக்குள் மெதுவாக சத்தம் இல்லாமல் நடந்து வந்தவன் படுக்கையில் படுத்திருந்த ஒவ்வொருவர் முகத்தையும் அந்த இருட்டில் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டு வந்தான்.

முதலில் துர்கா-வின் கட்டிலுக்கு அருகில் அவன் வருவதை பார்த்ததும் துர்கா கண்களை நன்கு மூடிக்கொண்டு உறங்குவது போல படுத்திருக்க…

அவள் முகத்தில் வெளிச்சம் நேராக டார்ச்சை அடிக்காமல் அவள் முகத்தில் வெளிச்சம் பரவும் படி டார்ச் லைட்டை உயர்த்திப் பிடித்தவன் கட்டிலில் படுத்திருந்து துர்காவை பார்த்துவிட்டு அவளை கடந்து அடுத்த கட்டிலுக்கு வந்தான் அங்கே ஷிவு படுத்து உறங்கிக் கொண்டிருக்க..

அவளையும் தாண்டி வந்தவன் மற்றொரு கட்டிலில் தலை முதல் பாதம் வரை முழுவதுமாக போர்த்தி படுத்து இருக்க தன் தேடி வந்த நபர் இந்த கட்டிலில் தான் படுத்து இருப்பதை உறுதி செய்தவன்.

டார்ச் லைட்டை தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு முகத்தில் போர்த்தி படுத்திருந்தவளின் போர்வையை விளக்கப் போக….

அப்போது சரியாக அவன் பின்னால் அவனுக்கு தெரியாமல் வந்த துர்கா கையில் வைத்திருந்த ஒரு கட்டையை வைத்து அவன் தலையில் ஓங்கி நங்கென்று என்று அடித்தாள்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த முகமூடி அணிந்தவன் துர்கா அவன் தலையில் அடித்ததும் தலையைப் பிடித்துக் கொண்டு ஆ என்று அலற…

அவன் அலறியத்தில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கல பதறி அடிட்டுக் கொண்டு எழுந்திருக்க…

அந்த முகமூடி அணிந்தவன் தன்னை யாரும் பார்த்துவிடக கூடாது என்று அங்கிருந்து ஓட போக…

கனவிழித்த அனைவரும் தங்கள் இருந்த அறையில் முகமூடி அணிந்தவனை பார்த்ததும் அதிர்ச்சியில் ஆஹ்…. என்று அலற…

தன் கையில் இருந்த கட்டையையும் அந்த முகமூடி அணிந்தவனையும் மாறி மாறி பார்த்த துர்கா.

என்னடா… இது … இவ்வளவு பெரியருட்டுக் கட்டையில் அடிச்சும் இவன் மயக்கம் போட்டு விழாமல் இருக்கான் என்று யோசித்தவள்.

வாசல் நோக்கி சென்று கொண்டு இருந்தவனின் தலையில் ஓடி சென்று தன் காலை தரையில் ஊன்றி குதித்தவள்.

ஏய்….. என்று கத்திக் கொண்டே அவன் உயரத்திற்கு குதித்தவள் தன் கையில் இருந்த கட்டையை கொண்டு அவன் தலையில் தன் பலம் மொத்தத்திமும் திரட்டி அவன் தலையில் ஓடி அடிக்க…

இவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் வெளியே செல்ல வாசல் கதவை திறக்க கதவையில் கை வைக்க…

சரியாக அப்போது துர்கா அவன் தலையில் அடிக்கவும் அவளை திரும்பி பார்த்த படி கண்கள் இரண்டும் கிறுக்கு கிறுக்க… தலையை சுற்றிக் கொண்டு மயங்கி தரையில் சரிந்தான்.

அவ்வளவு பெரிய ஆஜானுபாகுவான மலை போல இருந்த ஆளையே அடித்து மயக்கம் போட வைத்த துர்காவை கீர்த்திகா, ஷிவு, ராதா மூவரும் ஒன்று போல திரும்பி நம்பமுடியாமல் பார்க்க…

கையில் இருந்த கட்டையை தன் தோளில் கதை போல வைத்துக்கொள் கொண்டு கட்டி இருந்த சேலையை தூக்கி இடுப்பில் சொருகி… மூச்சுவாங்க நின்று கீழே விழுந்தவனை கோபமாக பார்த்தாப்படி நின்று இருந்தாள் துர்கா.

அவளை அருகில் கைத்தக் கொண்டே வந்த ராதா அக்கா சூப்பர்… சூப்பர்… எப்படி அக்கா இவ்வளவு பெரிய ஆளை ஒரேய அடியில் அடிச்சு மயங்க வெச்சுட்டே என்று ஆச்சர்யமாக கேட்டு துர்காவை கட்டிக்க கொள்ள…

இன்னமும் அதிர்ச்சி மாறாமல் இருந்த கீர்த்திகா அதே அதிர்ச்சியுடன் துர்கா-வின் அருகில் வந்து அக்கா நீ தைரியமானவன்னு எனக்கு தெரியும். ஆனா இவ்வளவு பாலசாலின்னு நான் இப்போதான் பார்க்குறேன் என்று சொல்லி அவளை அருகில் வந்து கீர்த்திகாவும் துர்காவை கட்டிக்க கொண்டாள்.

இங்கு நடந்ததை எல்லாம் பார்த்து இன்னும் அதிர்ச்சி மாறாமல் நின்று இருந்த ஷிவு தானாகவே நடந்து வந்து ராதா, கீர்த்திகாவுடன் சேர்ந்து துர்காவை கட்டிக்கோ கொள்ள…

அவர்கள் மூவரையும் உணர்ச்சி பங்க பார்த்த துர்கா என் தங்கைங்க இருக்க அறைக்குள்ள யாருக்கும் தெரியாமல் உள்ளே வர அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்று கோபமான துர்கா.

தள்ளுங்க அப்படி யாரு இந்த ரூமுக்குள் வந்தான்னு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் மூவரையும் தன்னிடம் இருந்து விளக்கி விட்டு கீழே குப்புற விழுந்து கிடந்தவனை திருப்பி படுக்க வைக்க துர்கா முயற்சிக்க…

அவனை சிறிதும் அசைக்க முடியமல் துர்கா திணறினால்.

இதை பார்த்த மூவரும் வந்து அவளுக்கு உதவ குப்புற படுத்து இருந்தவனை திருப்பி படுக்க வைத்தனர்.

அதற்க்கே மூவருக்கும் மூச்சு வாங்கிவிட… யாரு டி இவ்வான் இப்படி கணக்குறான். இவனை எல்ல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா எப்படி பெருசா படுத்து இருக்கான் ப்பாற்று என்ற கீர்த்திகா குனிந்து அவன் முகத்தில் அணிந்து இருந்த முகமூடியை அவிழ்த்தவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்.

கீர்த்திகா மட்டும் அந்த முகமூடி அணிந்தவனை பார்த்து அதிர்ச்சியாக வில்லை.

அவளோடு சேர்த்து மற்ற மூவரும் அதிர்ச்சியாக கீழே மயங்கி விழுந்தவனின் முகத்தை அதிர்ச்சியாக பார்த்த படி நின்று இருத்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured