Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 20

உன் ரகசிய ரசிகை நான் 20

by Layas Tamil Novel
884 views

EPISODE 20

துர்கா தன் முகத்தைப் பார்த்து ஏதோ கூற, அவள் முகம் சட்டென்று மாறியதும், தன் முகத்தில் இருக்கும் கொப்புளங்களைப் பார்த்து அருவருப்பாக நினைத்து தான் அவள் அப்படி செய்கிறாள் என்று நினைத்த ஆதி, அவளிடம் கோபித்துக்கொண்டு பாத்ரூம் சென்று கதவை சாற்றிக்கொண்டான்.

அவன் கோபமாகச் சென்றதைப் பார்த்த துர்கா, “அச்சச்சோ, இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? அவன் கிட்ட இப்படி கோச்சிட்டு போறானே! ஆனா இவனுக்கு இப்படி ப்சுப்புசுனு கோபம் வந்திருது. நான் எப்படி இவனை வச்சு சமாளிக்கப் போறேன்னு தெரியல, ஆண்டவா. என்ன இவங்க கிட்ட இருந்து நீ தான் காப்பாத்தணும்” என்று கடவுளை வேண்டியவள், அவன் வெளியே வரட்டும் என்று காத்திருந்தாள்.

பாத்ரூமிற்குச் சென்று கதவைச் சாற்றிக்கொண்ட ஆதி, ‘உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை நேருக்கு நேரா இப்படி முகத்தை சுளிப்ப? கொஞ்சம் கூட மனசு அப்படிங்கறது இவளுக்கு கிடையாது’ என்று நினைத்தவன், முகம் கழுவப் போகலாம் என்று தண்ணீரைத் திருப்பிவிட்டு, தண்ணீரைப் பிடித்து தன் முகத்தில் அடித்தவன் முகம் அப்போதுதான் எரிய ஆரம்பித்தது.

“ஷ்…” வலியோடு தன் முகத்தை உயர்த்தி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க, அவன் முகத்தில் இருந்த கொப்புளங்கள் உடைந்து அதிலிருந்து லேசாக சீழ் வந்துகொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து ரத்தமும் வர, அவன் முகமே பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்க, அவனுக்குத் தன்னையே பார்த்து வெறுப்பாக இருந்தது.

‘ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனை கொடுக்கிறாய் கடவுளே? நான் என்ன பாவம் பண்ணினேன்?’ என்று தனக்குத்தானே நொந்து கொண்டவன், தன் முகத்தை ஒரு ஈர டவல் கொண்டு லேசாக ஒற்றி எடுத்தான். சிறிது நேரம் அப்படியே நின்று தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தவாறு நின்றிருந்தான். ‘இந்த முகத்தைப் பார்த்தால் யாருக்கு தான் பிடிக்கும் இப்படி? அதுவும் இவ்வளவு பக்கத்துல இந்த மாதிரி காயங்களோடு பார்த்த துர்காவின் முகம் கண்டிப்பா அப்படித்தான் போகும்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாலும், அவனுக்கு துர்கா மீது இருந்த கோபம் குறையவே இல்லை.

கோபத்தோடு பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, துர்கா அவனுக்காகக் கட்டிலில் அமர்ந்து காத்திருக்க, அவனைக் கண்டதும் கட்டிலில் இருந்து எழுந்து நின்ற துர்கா அவனிடம் ஏதோ கூற வர, “ஆதி” என்று அழைக்க, அவள் அழைப்பைக் காதில் கேட்டும் கேட்காதவன் போல வேகமாகச் சென்று கட்டிலில் படுத்து போர்வை போற்றிக்கொண்டான்.

துர்கா அவன் அருகில் வந்து நிற்க, அவன் அருகில் நிழல் ஆடுவதைக் கவனித்தவன், துர்கா தான் அருகில் வந்து நிற்கிறாள் என்பதை உணர்ந்தவன், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.

அவன் படுத்திருந்த பக்கத்தில் நின்ற துர்கா, “ஆதி” என்று அவனை அழைக்க, அவன் எதுவும் பேசாமல் இருக்க, “ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளு. இப்படி கோபப்படாத” என்று துர்கா கூற, அவள் கூறுவதைக் கேட்டு அவன் பதில் பேசப் பிடிக்காமல் திரும்பிப் படுத்துக்கொண்டான் ஆதி.

“ஆதி, ப்ளீஸ். நான் உன்னை பார்த்து தப்பா அசிங்கமா எல்லாம் நினைக்கல. நீ அந்த மாதிரி கற்பனை பண்ணிக்காத. ப்ளீஸ் ஆதி, உன் முகத்தில் திடீரென காயத்தைப் பார்த்ததும், அதில் ரத்தம் வந்ததும், அதைப் பார்த்து எனக்குப் பயமாயிடுச்சு. நான் முதல் தடவை உன் முகத்துல காயங்களைப் பார்த்தது எனக்குப் பயமும், பதட்டமும் ஆயிடுச்சு ஆதி. அதுதான் அப்படியே முகம் காமிச்சிருக்கு. நான் வேணும்னு முகத்தை இப்படி வைக்கல. நீ இப்படி இருக்கிறது எனக்கு ஒண்ணும் அருவருப்பே கிடையாது. தயவுசெய்து புரிஞ்சுக்கோ ஆதி” என்று அவள் கூற.

அவள் தன்னை விளக்க, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதி, ‘யாரும் என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம். அவங்களோட மனசுல இருக்கிறதுதான் முகத்தில் தெரியும்னு சொல்லுவாங்க. உன் முகத்துல என்ன பத்தியான எண்ணம் உன் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது. உனக்கு என்ன பாக்க அருவருப்பா இருக்குன்னு எனக்குத் தெரியுது துர்கா. என்ன பண்றது? கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. இந்த முகத்தை நீ பார்க்க வேண்டிய அவசியம் வராது. கூடிய சீக்கிரமே உனக்கு விருப்பம் இல்லாத இந்த கல்யாணத்திலிருந்து நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்து விடுகிறேன்’ என்று அவன் கூறியதும்.

துர்காவுக்கு அவன் கூறியதை கேட்டதும் இதயம் வெடித்து விடும் போல இருந்தது. “ஆ… ஆதி” என்று அவள் குரல் உடைந்து அவனை அழைக்க, அவள் வருத்தமான குரலில் அழைப்பதை கூட புரிந்துகொள்ளாத ஆதி, “இப்ப எதுக்கு துர்கா இங்க நின்னு பேசி சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க? பேசாமல் போய் படு. என்ன பார்த்துக்க எனக்குத் தெரியும். என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிற வேலையெல்லாம் நீ வெச்சுக்காத” என்று அவளை மேலும் வார்த்தைகளால் துன்புறுத்த.

தன் மனதில் இருப்பதை அவனிடம் கூற வந்த துர்கா, அவன் தன்னை இப்படி உதாசீனப்படுத்தி சுடு சொல்லாகப் பேசவும் துர்காவின் இதயம் மிகவும் வலித்தது.

“ஏன் ஆதி இப்படி நினைக்கிற? நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியுமா? எனக்கு உன்னத் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ மட்டும் தான் என் உலகம்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கேன் ஆதி. என்ன போய் நான் உன் முகத்தைப் பார்த்து அருவருப்பு பட்டுட்டேன்னு சொல்றியே? என்னோட முகத்தைப் பார்த்தமா உனக்கு என்னோட காதல் புரியாம போயிடுச்சு? நீ எப்ப தான் ஆதி என் காதலை புரிந்து கொள்வ? உன் மேல விருப்பம் இல்லாம உன் பணத்துக்காக உன் பின்னாடி சுத்தினவங்க எல்லாரையும் பிரச்சனைப்படுத்தினேன்னு எனக்கு தெரியும். அதே லிஸ்ட்ல என்னையும் சேர்த்துட்டு இல்ல நீ? இனிமேல் என்னோட காதலை உனக்குப் புரிய வெச்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல ஆதி. உனக்கு அதெல்லாம் புரியணும். நான் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறேன்னு என் முகத்தைப் பார்த்து உனக்குத் தெரியாம போயிடுச்சு இல்ல? இதுக்கு மேல நானா வந்து உன்கிட்ட என் காதலை பற்றி சொல்லுவேன்னு இனி கனவிலும் நினைச்சுடாத.”

“நான் பத்து வருஷம் உனக்காகக் காத்திருந்தேன். உன் காதலுக்காகக் காத்திருந்தது எல்லாம் போதும். அதற்கெல்லாம் பதிலா பெருமிதமா நீ இப்ப பேசினது என் மனசு நிறைஞ்சு போச்சு ஆதி. இனிமேல் நீ சொல்வது போல எனக்கு டைவர்ஸ் நீ கொடுக்கிற வரைக்கும் உன்னைப்பத்தி நான் எதுவும் கேட்க மாட்டேன். உன்னோட ஆபீஸ்ல வேலை செய்யுற ஒரு வேலைக்காரியை மட்டும் தான் இனிமேல் நீ என்னைப் பார்ப்பாய்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்ட துர்கா அழுது கொண்டே வேகமாக அங்கிருந்து சென்றவள், அங்கிருந்த ஒரு கேபினை திறந்து அதில் இருந்து ஒரு ஆயின்மென்ட் எடுத்து வந்தவள், அவன் படுத்திருந்த மேசையின் பக்கத்தில் வைத்துவிட்டு.

“ஆதி, உன் விருப்பம் எதுவும் என் விருப்பம் அதுதான். உனக்கு எனக்கு டைவர்ஸ் கொடுக்கிறது சந்தோஷம் என்று நீ நினைக்கிற என்ன, அந்த டைவர்ஸ் என்ன சந்தோஷமா வாங்கிக்க ரெடியாகத்தான் இருக்கிறேன். நாளைக்கு அதற்கான வேலைகளை நீ பார்க்கலாம்” என்று கூறிவிட்டு.

“இந்த டேபிள் மேல உன் காயத்துக்கான ஆயின்மென்ட் எடுத்து வெச்சிருக்கேன். என் மேல் இருக்கிற கோவத்துல உன்னை நீயே தண்டிச்சுக்காத. தயவு செய்து அந்த மருந்தை எடுத்து அப்ளை பண்ணிட்டு அதுக்கப்புறம் படுத்து தூங்கு” என்று கூறியவள் அவன் பதிலுக்கும் காத்திராமல் அந்த அறையை விட்டு கதவைத் திறந்து கொண்டு வெடுக்கென்று வெளியே சென்றாள்.

துர்கா அரைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்வதை உணர்ந்த ஆதி, கதவை மூடும் வரை பொறுமையாக இருந்தவன், கதவு சாற்றப்படும் சத்தம் கேட்டதும் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

‘ச்சே… இவளைப் போய் நான் எவ்வளவு பெருசா நினைச்சுட்டேன். டைவர்ஸ் கொடுக்கிறேன் என்று சொன்னதும் ‘வேண்டாம் ஆதி’ என்று ஒரு வார்த்தையாவது சொல்வாருன்னு நினைச்சேன்.’

‘ஆனா இவ என்னடான்னா நான் கேட்டதும் எதுவுமே மறுப்பு தெரிவிக்காமல் ‘நாளைக்கு எனக்கு டைவர்ஸ் கொடுத்தாலும் சந்தோசம் தான்’னு சொல்லிட்டு போற. அப்போ என்னை டைவர்ஸ் பண்ணிட்டு, அந்த டைவர்ஸ் பண்ற சாக்கை வச்சு என்கிட்ட ஜீவனாம்சமா என்கிட்ட இருக்கிற சொத்துக்கள் எல்லாம் அபகரிக்கணும்னு நினைச்சுட்டாளா இவ?’

‘இவளோட எண்ணத்தை மட்டும் நான் என்னைக்குமே நிறைவேற்றி விடமாட்டேன். இவளுக்கு நான் டைவர்ஸ் கொடுத்தா தானே என்கிட்ட இருந்து என் சொத்துக்களை வாங்கிட்டு வெளியே போய் சந்தோசமா இருக்க முடியும்? நான் உன்கிட்ட சும்மா கோபத்துல ஒரு பேச்சுக்குதான் டைவர்ஸ் கொடுக்கிறேன் என்று சொன்னேன் துர்கா. நீயே என்ன விட்டுப் போறேன்னு நினைச்சாலும் நான் இனிமேல் உன்னை என்கிட்ட இருந்து போக விடவே மாட்டேன். அது நீ விருப்பப்பட்டாலும் சரி விருப்பப்படாட்டியும் சரி.’

‘நீயா டைவர்ஸ் வேணும்னு வாய் திறந்து கேட்டாலும் இனிமேல் உனக்கு டைவர்ஸ் கொடுக்க மாட்டேன். நீ செத்தாலும் சரி, வாழ்ந்தாலும் சரி, அது என்னோட மட்டும்தான் இருக்கும். இனிமேல் தான் நீ இந்த ஆதியின் ஆட்டத்தைப் பார்க்கப் போற. நான் டைவர்ஸ் உனக்கு கொடுக்கிறேன் என்று சொன்னது நீயும் சரின்னு சொல்லிட்டு போன இல்ல? அதே வாயால ‘எனக்கு டைவர்ஸ் வேண்டாம் ஆதி, நீ என்கூட சந்தோசமா வாழணும்’னு உன் வாயாலே என் கிட்ட கெஞ்ச வைக்கிறேனா இல்லையா பாரு?’ என்று நினைத்தவன்.

அருகில் அவள் கொண்டுவந்து வைத்திருந்த மருந்தை திரும்பிப் பார்த்தவன், ‘நான் புண்ணிற்கு இந்த ஆயின்மென்ட் தான் பேசுவான்னு இவளுக்கு எப்படி தெரியும்? சரியாக அந்த மருந்து கொண்டு வந்து வைத்திருக்கிறாள்’ என்று ஆதி அவளை நினைக்க.

அதிலிருந்து கூட அவள் தன் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறாள் என்று உணராத ஆதி, ‘அவள் யார்கிட்டயாவது என்னைப் பத்தி எல்லா விவரமும் கேட்டு தெரிந்து வைத்திருப்பாள். அப்பதானே என்னைக் கைக்குள் போட்டுக்க முடியும்? என் பணத்துக்காக என் பின்னாடி அலைய முடியும்’ என்று அவளைத் தவறாக நினைத்தவன்.

‘அந்த சங்கவி நல்லவளோ கெட்டவளோ, ஆனா அவள் சொன்ன வார்த்தை உண்மை ஆகிடுச்சு பாத்தியா துர்கா? நீ இவ்வளவு மோசமானவள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை துர்கா. உனக்கு நான் டைவர்ஸும் கொடுக்க மாட்டேன், உன் கூட நான் சந்தோசமா வாழவும் மாட்டேன். நீ என் கூட இருக்கிற நாட்கள் எல்லாமே உனக்கு நான் நரகத்தை தான் காட்டப் போறேன். ‘ஏன்டா இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டமே’ என்று நீயே வெறுத்து, நான் உன்னை ஏமாத்த தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்ல வைக்கல என் பேரு ஆதி இல்லை’ என்று நினைத்தவன்.

எழுந்து சென்று கண்ணாடியின் முன் நின்று தன் காயங்களுக்கு மருந்து இட ஆரம்பித்தான்.

ஆனால் அவனுக்குத்தான் தெரியவில்லை, அவன் துர்காவின் காதலை உணரும்போது அவள் அவன் அருகில் இருப்பாளா? அவள் காதல் உணர்ந்த பின் ஆதி தன் மனதில் எழும் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவளிடம் தன் காதல் சொல்வானா?

துர்காவின் காதலை உணரும் போது ஆதியின் மனநிலை அவனையே கொல்லும்.

அவள் காதல் உணர்ந்து அவளிடம் தன் காதல் சொல்லப் போக, துர்காவின் உதாசீனம் அவனை எவ்வளவு தூரம் காயப்படுத்தும் என்று, துர்காவின் வலியைப் போல பன்மடங்கு அவனுக்கு வலி வரப்போகிறது என்று உணராமல் ஆதி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured