Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 201

உன் ரகசிய ரசிகை நான் 201

by Layas Tamil Novel
173 views

Episode 201

எத்தனை நாள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லி சங்கவி மாதவியை சுடச் சொல்ல தன் மகள் மீது பாய்ந்த குண்டை குறுக்கே புகுந்து வாங்கிக் கொண்டார் வேதாச்சலம்.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளையா இப்படி ஒரு கொடூர செயலை செய்தால் அவளுக்கு எப்படி இப்படி ஒரு மனது வந்தது தன்னுடைய ரத்தம் சிறிதும் அவள் உடலில் ஓடாமல் போய்விட்டதா.

அப்படியே இன்னொரு உயிரை எடுக்கும் அளவுக்கு தைரியமும் துணிச்சலும் அவளுக்கு எப்படி வந்தது அவ்வளவு இருக்கும் இல்லாதவளா என்னுடைய மகள்.

இல்ல இல்லவே இல்ல…. இவ கண்டிப்பா என்னோட பிள்ளை இல்ல இவ என் வயித்துல பிறந்தவ இல்ல என் வயிற்றில் பிறந்தவ இப்படி செய்ய மாட்டாள்.

நானும் என் கணவரும் அன்போடும் காதலோடும் ஆசையோடும் வளர்த்து உள்ளாய் இவள் கண்டிப்பாக இருக்கவே முடியாது.

என் கணவர் எப்போது உயிரோடு இல்லை அவர் இருந்திருந்தால் இப்படிப்பட்ட பெண்ணையா நாம் பெற்றெடுத்திருந்தோம் என்று தன்னைத்தானே மாய்த்துக் கொள்வார்.

இப்படி அடுத்த உயிருக்கு தீங்கு நினைக்குவும் துரோகம் நினைக்கும் ஒருத்தி இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவர் வேகமாக சங்கவியின் அருகில் வந்து அவள் கையில் இருந்த துப்பாக்கியை வாங்கி நொடி பொழுதில் திருப்பி சங்கவியை சுட்டு விட்டார்.

இதை யாருமே அங்கிருந்தவர்கள் எதிர்பார்க்கவில்லை. வேதாச்சலம் என் நெஞ்சை பிடித்துக் கொண்டு தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து அவரை பிடிக்கச் சென்று சிவகாமியின் அவரோடு சேர்ந்து தரையில் விழுந்தார் அவர் மடியில் படுத்தவாரு சிவகாமியின் கையைப் பிடித்துக் கொண்டு என்ன மன்னிச்சிடு சிவகாமி என்னால உனக்கு நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கையை தான் கொடுக்க முடிந்தது பெத்த பிள்ளைகளை சரியா பாதுகாக்க தெரியாதா அப்பாவா போயிட்டேன். வளர்ந்த பிள்ளையையும் நல்ல முறையில் வளர்க்காமல் எப்படி கொண்டு வந்து என் மகளை வளர்த்து நிப்பாட்டி வச்சிருக்கேன் பாரு என்று தன் முன்னால் தரையில் விழுந்து இருந்த சங்கவியை காட்டி கூறினார்.

எங்க அதெல்லாம் பிறகு பேசிக்கலாம் முதல்ல வாங்க நம்ம ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்று சொல்ல..

அவர் அருகில் வந்து வேதாச்சலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு அழுத மாதவி அப்பா தயவுசெய்து எதுவும் கொஞ்ச நேரம் பேசாதீங்க முதல்ல ஹாஸ்பிடல் போகலாம் என்று தான் படித்த மருத்துவத்தை வைத்து முதலில் அவருக்கு முதலுதவி செய்தவள் போதியை அழுத விழிகளோடு பார்க்க அவள் பார்வையின் அர்த்தம் புரிந்த போது வேகமாக வேதாச்சலத்தின் அருகில் வந்து மற்றவர்களின் துணையோடு அவரை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றான்.

செண்பகம் சுட்டதில் தரையில் விழுந்து கிடந்த சங்கவியின் அருகில் பந்தா செண்பகம் ஏண்டி இப்படி ஒரு குணத்தோட வந்து என் வயித்துல பிறந்த.

ரொம்ப வருஷம் கழிச்சு காணாமல் போன என் பொண்ண பாக்க போறேன்னு சந்தோஷத்துல இருந்தேன்.

நான் உன்னை பார்த்த அடுத்த நொடியே என் கையால உன்ன சுட வச்சுட்டியேடி என்று சொல்லி தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் செண்பகம்.

தன் முன்னால் தனக்காக அழும் செண்பகத்தை பார்த்த சங்கவி அவரை பார்த்து நக்கலாக சிரித்தவள்.

இதை என்ன ஆசையோடு பார்க்க வந்தவளா என்ன பார்த்து அடுத்த நிமிஷம் என்ன சுட்டுட்டு இப்படி நீலி கண்ணீர் வடிக்காத.

இங்கே யாருமே உண்மையா இல்ல எல்லாரும் நடிக்கிறாங்க யாரையும் நீ நம்பிடாத என்னையும் சேர்த்து தான் சொல்றேன்.

அவ்வளவு அக்கறையை விட நீ என்ன பாக்க வந்திருந்தால் கண்டிப்பா என்ன சுட்டு இருக்க மாட்டே என்று இந்த நேரத்திலும் சங்கவி அவள் அம்மாவையே குற்றம் சொல்ல…

இந்த நிலையிலும் இப்படி இறுக்கிய மனதோடு பேசும் தன் மகளை பார்த்தால் செண்பகத்திற்கு கோவப்படுவதாக அல்லது பாசம் இன்றி ஏங்கித் வைக்கும் தன் மகளை பார்த்து பரிதாபப்படுவதா என்று அவருக்கு தெரியவில்லை.

பாரு இப்ப கூட பார்த்தியா இத்தனை நாளா என் கூட இருந்து எனக்கு துரோகம் பண்ண அந்த ஆளத்தான் காப்பாத்தணும்னு இங்க இருந்து தூக்கிட்டு போறாங்க.

என் பக்கத்தில் ஒரு ஆள் வந்துச்சா பாரு செத்தா செத்துட்டு போகட்டும்னு தானே என்ன இங்க விட்டு வச்சிருக்காங்க என்றால் சங்கவி.

நீ அப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே எல்லாரும் உன்ன மாதிரி கல்நெஞ்சகாரியா இருக்க மாட்டாங்க என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் வந்து குனிந்த துர்கா தன் தங்கைகளை பார்த்து ஒரு கை பிடிங்கடி என்று சொல்ல…

ராதா கீர்த்திகா நிலானி சங்ககியை தூக்க ஷிவு நான் போய் காரை எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு முன்னே செல்ல அவள் கையைப் பிடித்து தன் அருகில் நிறுத்திய ரூபேஷ் நீ வேண்டாம் பெரியவங்க கூட இரு நான் போய் வரேன் என்று சொல்லி ரூபீஸ் காரை எடுக்கச் சென்றான்.

சந்தோஷ் வேதாச்சலத்தை தூக்கிக்கொண்டு செல்லும்போது சிவகாமியுடன் தன் அத்தைக்கு ஆதரவாக சென்று விட்டான்.

தன் அப்பா தனக்காகவும் தன் தங்கைக்காகவும் தான் சங்கவியுடன் இத்தனை நாட்களாக தங்களை பிடிக்காதவர் போல நடந்து கொண்டார் என்று எண்ணி அவரை தூக்கிக்கொண்டு சென்ற காரின் பின்னால் கதிர் கார் ஓட்ட விக்கி அவன் அருகில் அமிர்தவறு அவர்கள் பின்னால் சென்றான்

விசாலாட்சியும், வெங்கடாச்சலமும் சமாதானம் செய்ய முடியாமல் அழுது கொண்டிருக்கும் அவரிடம் நின்று அவரை தியேட்ற முயறு கொண்டு இருந்தனர்.

ஷிவு அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு தூக்கிசென்ற காரின் பின்னால் சென்றனர்.

வேதாச்சலத்தையும் சங்கவியையும் ஒரே ஹாஸ்பிடலில் எமர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்து இருந்தனர் இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபரேஷன் நடந்து கொண்டு இருக்க…

வெளியே பதட்டமாக விக்கியும் சிவகாமியும் அமர்ந்து இருக்க…

செண்பகமும் அவர்களோடு அமைதியாக அமர்ந்திருந்தார் அவர் முகத்தில் இந்த பதட்டமும் இல்லை எந்த ஒரு வருத்தமும் இல்லை சங்கவிய பற்றிய தன் மனதில் எழுந்த எண்ணங்களை என்ன என்று தெரியாமல் அடக்க முயன்று கொண்டு இருந்தார்.

என்னடா செல்லம் விசாலாட்சியும் மட்டுமே அங்கே சற்று முதிர்ந்த மனநிலையில் இருந்தனர்.

ஷிவுவிற்கு ஹாஸ்பிடல் வாடை ஒத்துக் கொள்ளாமல் போகவே அவளை வலுக்கட்டாயமாக அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேறு வழியில்லாமல் ரூபிசுடன் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் அவனுடன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.

சிவகாமிக்கும் விக்கிக்கும் உள்ளே இருக்கும் வேதாச்சலம் நல்ல முறையில் குணமாகி வந்துவிட வேண்டும் என்று தங்கள் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

ஆதிக்கும் துர்காவும் செண்பகத்திடம் அமர்ந்து அவரை எப்படி தேடுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்க…

அவர் அழுவதை பார்க்க முடியாமல் அவர் அருகில் வந்த ராதா செண்பகத்தின் காலுக்கு கீழே முட்டி போட்டு அமர்ந்தவள்.

செண்பகத்தையும், கனகாவையும் ஒன்று போல தான் பாவித்தால் ராதா.

அதே உரிமையோடு செண்பகத்தின் கையைப் பிடித்தவள் இங்க பாரு செண்பகம் நீ இப்படி வெறும் கண்ணீரை வடிச்சிட்டு இருக்குதுல எந்த பிரயோஜனமும் இல்லை.

உள்ளே இருக்கிறது உன்னோட பொண்ணு அவ்ளோதான் உன் மனசுல என்ன நினைக்கிறாயோ அதை வாய் விட்டு சொல்லி அழு…

இப்படி கல்லு மாதிரி உட்கார்ந்து நீ என்னத்த சாதிக்க போற…

உள்ளே இருக்கிறது நல்லவளா? கெட்டவளா? என்ன பாக்காத உள்ள இருக்குறது உன்னோட மகன் ரொம்ப நாள் கழிச்சு நீ பாக்கணும்னு ஏங்கிக்கிட்டு இருந்தா உன்னோட மகள்.

இந்த சம்பவமே அவளுக்கு ஒரு நல்ல பாடமா அமையும் நீ வேணா பாரு ஆப்ரேஷன் முடிஞ்சு நல்லபடியா உன் பொண்ணு வெளியே வருவா…

சங்கவி அக்கா குணமாகி வரும்போது கண்டிப்பா எத்தனை வருடமாக தான் செய்த தவறுகளையும் தன்னை வளர்த்தவரையே மன கஷ்டத்தோடையும் கண்டிப்பா ஒரு நல்ல மனுஷியா மாறி புது மனுஷியா மாறி

தன்னோட அப்ப எல்லாம் திருத்திக்கிற ஒரு புது மனுஷியா கண்டிப்பா உன் பொண்ணு வருவா செண்பகம்.

சங்கவி அக்கா அப்படியே புது மனுஷியா மாறி வரும்போது நம்ம எல்லாரும் அவரை நல்ல முறையில் ஏத்துக்கிற மனநிலையில் இருக்கணும்.

முக்கியமா நீ…. நீதான் அவங்கள முழு மனசோட ஏத்துக்குற நிலையில இருக்கணும் அத்தை இப்படி கண்டு மாதிரி உட்கார்ந்திருந்தால் எப்படி என்று கேட்டால் ராதா.

நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு சந்தோசமா தான் இருக்கு ராதா.ஆனால் உள்ளே இருக்கிறவ வெளியே வரும்போது நீ சொன்னது போல மாறி வந்தா நல்லா தான் இருக்கும்.

எனக்கு என்னவோ அவ அப்படி மனசு மாறி வர மாதிரி தெரியல நெஞ்ச படிச்சுட்டு கீழே விழுந்திருக்கும் போது கூட என்னை தான் தப்பு சொன்னாலே தவிர அவ செஞ்ச தப்ப கொஞ்சம் கூட சங்கவி ஒத்துக்கவே இல்ல.

முதல்ல அவ ஆப்ரேஷன் முடிஞ்சு நல்லபடியா குணமாகி வரட்டும். அதற்குப் பிறகு மத்ததெல்லாம் நம்ம பாத்துக்கலாம் என்றவர் தனக்கு கீழே அமர்ந்திருந்த ராதாவின் தலையை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவர்.

ராதாவின் தோளை பிடித்து தூக்கி விட்டு அவளை தன்னருகில் அமர்த்திக் கொள்ள…

ராதா செண்பகத்தின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டவள் எதுவும் ஆகாத நீ வேணா பாரு. நான் சங்கவி அக்கா ஒரு புது மனுஷியா நமக்கு கிடைப்பாங்க என்று செண்பகத்திடம் நல்ல விதமாக கூறி அவறை ஆறுதல் படுத்தினாள்.

மாதவி மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மாணவி என்பதால் முதலில் அவளை உள்ளே விட அனுமதிக்கவில்லை.

வேதாச்சலத்தையும் சங்கவியையும் அட்மித் செய்திருந்தது போதியின் மருத்துவ கல்லூரியில் இருக்கும் ஹாஸ்பிடலில் தான் என்பதால். அவள் போதிடம் கெஞ்சி அதன் அப்பாவின் அருகில் மட்டும் நான் போய் நின்று கொள்கிறேன் வேறு எதுவும் எனக்கு வேண்டாம் என்று கெஞ்சவும் போதியும் டாக்டர்களிடம் சொல்லி இப்ப அவளை உள்ளே அனுப்பி வைத்தான்.

இந்த மருத்துவக் கல்லூரியின் கரஸ்பாண்டன்டின் வார்த்தையை என்னிடம் முடியாமல் மாதவியை உள்ளே அழைத்துச் சென்றனர் டாக்டர்கள்.

அந்த நாள் முழுவதும் மருத்துவமனையை விட்டு யாரும் எங்கும் செல்லவில்லை.

சந்தோஷ் மட்டும் அவ்வப்போது கேண்டின் சென்று பெரியவர்களுக்கு சாப்பிடாமல் இருந்தால் பிரஷர் சர்க்கரை என இருப்பதால் அவர்களுக்கு மட்டும் அடிக்கடி சாப்பிட எதுவும் வாங்கி கொடுத்து வம்படியாக சாப்பிட வைத்துக் கொண்டு இருந்தான்.

வேத்தாசலத்திற்கும்,சங்கவிக்கும் ஆப்ரேஷன் முடிந்து இருவரும் இப்போது அபாய கட்டத்தை தாண்டி இருக்கிறார்கள் ஒரு நாள் முழுவதும் ஐசியூவில் வைத்திருந்து அதன் பிறகு நார்மல் வாடிற்கு அனுப்புகிறோம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டு சென்ற பிறகுதான் மற்றவர்களுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

இரவு முழுவதும் அனைவரும் ஐசியூவிற்கு வெளியிலேயே இருந்தனர். அவர்களுக்கு அவசரம் என்றால் பக்கத்தில் ஆட்கள் வேண்டும் என்பதால் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை.

இரவு முழுவதும் ஐ சீ யூ வில் வைத்த பார்த்த டாக்டர் ஆதியின் வேண்டுகோளுக்காக மறுநாள் அவர்களை தனிவாடிக்கு மாற்றி வைத்துவிட்டு ஐசியுவியில் இருப்பது போலவே அனைத்து செட்டப்களையும் சிசியுவில் இருப்பது போலவே தனி வார்டில் இருப்பவர்களுக்கு ஏற்பாடு செய்து அவர்களை பக்கத்திலிருந்து மானிட்டர் செய்ய சில நர்சுகளையும் அவர்களுக்காக விட்டுச் சென்றனர் டாக்டர்கள்.

வேதாச்சலத்துடன் விக்கி நிலானி மாதவி இருந்து கொள்ள…. ஆதி துர்கா வெங்கடாசலத்தையும் சிவகாமியையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல சங்கவியோடு இருப்பதாக செண்பகம் ஹாஸ்பிடலிலேயே இருந்து கொண்டார். அவருக்கு துணையாக ராதா அங்கேயே இருப்பதாக சொல்லவும் சந்தோசும் அவளுடன் அங்கே இருந்து கொண்டான். வேதாச்சலம் ஒரு அறையில் இருக்க சங்கவி மற்றொரு அறையில் மானிட்டர் செய்யப்பட்டு கொண்டு இருந்தால். சிவகாமி அவர் அருகில் இருந்து என் வேதாச்சலத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள மற்றவர்கள் அவருக்கு உதவியாக அங்கே இருந்தனர். வேதாச்சலத்தின் உடலில் குண்டு ஒன்றும் அவ்வளவு ஆழமாக இறங்கவில்லை என்பதால் அவர் பற்றிய சில பயம் சற்று அனைவருக்கும் குறைந்து இருந்தது.

ஆனால் செண்பகம் சுட்டதில் சங்கமியின் இதயத்திற்கு அருகில் குண்டு உரசி மிகவும் ஆழமாக சென்று விட்டது. அவளுக்கு ஆபரேஷன் செய்யத்தான் அதிக நேரம் ஆனது போதாக்குறைக்கு ரத்தம் வேறு அதிகம் வெளியேறி இருந்ததால் சங்கவியின் நிலை சற்று கவலையாக தான் இருந்தது. முதலில் அவளை தனி வார்டிற்கு கொண்டு வந்திருந்தவர்கள் அவளின் நிலை சற்று மோசமாக மாற ஆரம்பித்ததுமே உடனே ஐ சி யு விற்கு சங்கவியை அழைத்துச் சென்று விட்டனர். செண்பகத்திற்கு தான் தன் மகளை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது. சங்கவியை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டு இருந்தார். திடீரென ஐசியூவிற்குள் டாக்டர்கள் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்க வெளியில் அமர்ந்திருந்த செண்பகத்திற்கு பயம் தொற்றிக் கொண்டது.

அவரும் ராதாவும் மட்டும்தான் அப்போது ஐசுயுவின் முன்பு அமர்ந்திருந்தனர். டாக்டர்களும் நர்சுகளும் பதட்டமாக உள்ளே சென்று வருவதை பார்த்த இருவருக்குமே அவர்களின் பதட்டம் தொற்றிக் கொண்டது. உள்ள இருந்து அவசரமாக வெளியே வந்த நர்ஸ் செண்பகத்திடம் வந்து உங்க பொண்ணுக்கு மறுபடியும் ரொம்ப கண்டிஷன் மோசமாகி விட்டது. சங்கவிக்கு மூச்சு விட மிகவும் சிரமமாக இருக்கிறது அவர் இதயத்திற்கு அருகில் பாய்ந்த குண்டை ஆப்ரேஷன் செய்து எடுத்து விட்டோம் இப்போது திடீரென அவர் இதயத்தில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்து இருக்கிறது உடனே அதை ஆபரேஷன் செய்துதான் சரி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இந்த ஃபார்மில் சீக்கிரம் சயின்ஸ் செய்யுங்க நீங்க கையெழுத்து போட்ட பிறகுதான் அவங்களுக்கு ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ண முடியும் என்று அவசர அவசரமாக நர்ஸ் செண்பகத்திடம் விபரங்களை கூற தான் அவசரப்பட்டு சங்கவியை சுட்டு அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டோமே என்ற செண்பகம் தன்னையே நொந்து கொண்டு நின்றிருக்க… அருகில் இருந்த ராதா செண்பகத்தின் தோளில் கையை வைத்து அழுத்தியவள் அத்த மத்ததெல்லாம் அப்புறம் யோசிக்கலாம். நீங்க முதல்ல இந்த பார்ம்ல கையெழுத்து போடுங்க அப்பத்தான் அவங்க ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ண முடியும் சீக்கிரம் என்று அவரை அவசரப்படுத்த.. தன் மகளை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டியவர் மனதை கல்லாக்கி கொண்டு அந்த பார்மில் கையெழுத்து போட்டார் செண்பகம்.

You may also like

1 comment

S.joshna December 13, 2025 - 7:01 pm

Ayoo sangavi kandipa maranum🥺avaluku onnum aga kudathu😐

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured