Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 205

உன் ரகசிய ரசிகை நான் 205

by Layas Tamil Novel
161 views

EPISODE-205

சங்கவி ஆதியின் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

அவளுக்காக கொடுக்கப்பட்ட அறைக்குள்ளேயே அதிக நேரம் செலவழித்தால் அந்த அறையை விட்டு வெளியே வருவது என்றால் சாப்பிடுவதற்கு மட்டும்தான் வருவாள்.

சாப்பிட வந்தும் அனைவருடனும் சேர்ந்து சாப்பிடாமல் செண்பகத்துடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தன்னரைக்குள் சென்று கதவடைத்துக் கொள்வாள்.

சங்கவி வேண்டுமென்றே அனைவரின் கவனமும் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்று அனைவரையும் புறக்கணிப்பது போல நடித்து வேண்டுமென்றே ஒரு அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டாள்.

ஆனால் மற்றவர்கள் எல்லாரும் சங்கவி இதற்கு முன்பாக தங்களிடம் நடந்து கொண்டதை நினைத்து வருந்தி அவர்களிடம் ஒதுங்கி இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

அவள் தங்களை பார்த்து பேச சகஜமாக தங்களுடன் பழக சிரமப்படுகிறாள் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு அவளாகவே தங்களுடன் வந்து பேசட்டும் என அவளை தொந்தரவு செய்யாமல் அனைவரும் ஒதுங்கி இருந்தனர்.

சங்கவி இங்கே வந்ததிலிருந்து ஆபீஸிற்கும் செல்லாமல் வெளியே வேறு எங்கும் செல்லாமல் இருக்கும் அறையே கதி என்று இருந்தால்.

செண்பகமும் சங்கவியிடம் வெளியில் வந்து அனைவருடனும் சகஜமாக பேச சொல்லி எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும்.

சங்கவி இல்ல அம்மா வேண்டாம் நான் அவர்களிடம் எல்லாம் மனுஷ தன்மையில்லாமல் இத்தனை நாள் நடந்து இருக்கிறேன்.

அப்படி இருக்க நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டேன் அவர்களை பார்ப்பேன் என்று செண்பகத்திடமும் நடித்தால் சங்கவி.

தன் மகள் இப்படி குற்ற உணர்வுடன் ஒருவரிடமும் சேராமல் ஒதுங்கி இருப்பதை செண்பகத்தினால் பார்க்க முடியவில்லை அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

ஹாலில் நான் மிகவும் சோகமாக செண்பகம் அமர்ந்திருக்க…

இப்போதுதான் ஆதியை ஆபிசுக்கு வழி அனுப்பி விட்டு உள்ளே வந்த துர்கா செண்பகம் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து அவரிடம் வந்தால்.

அம்மா ஏன் ஒரு மாதிரியா ஒக்காந்து இருக்கீங்க என்ன ஆச்சு என்று கேட்டால் துர்கா.

எனக்கு மனசு சரியில்ல துர்கா சங்கவி ரூமுக்குள்ளேயே அடைந்து இருக்கிறாள். வெளியே வந்து உங்க எல்லார்கிட்டயும் சகஜமா பேசி சிரிச்சு பழக சொல்லி கூப்பிட்டா…. இதுக்கு முன்னாடி உங்களையெல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.

நான் எந்த முகத்தை வச்சுக்கிட்டு அவங்களையெல்லாம் பார்க்கிறது என்று கேட்டுட்டு ரூம்குள்ளேயே இருக்கா வெளியே வரவே மாட்டேங்குறா.

நானும் நிறைய முறை சொல்லி பாத்துட்டேன் என்னால அவளை வெளியே அழைச்சிட்டு வந்து எல்லாரும் கூடவும் பழக வைக்க முடியல என்று சங்கடப்பட்டார்.

ஆமாம் செண்பகம் அம்மா நான் கூட சங்கவி வெளிய வருவா… அவகிட்ட பேசலாம்னு பார்த்தா அவ வராமல் ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குற என்று சொன்ன துர்கா.

சரி இருங்க நான் போய் இப்போ சங்கவிய அழைச்சிட்டு வரேன். நீங்க இங்கேயே இருங்க என்று சொன்னால்.

இல்ல துர்கா அவ யார்கிட்டயும் சரியா பேச மாட்டேங்குற நீ போய் கூப்பிட்டாலும் அவ வரமாட்டா என்று செண்பகம் வருத்தமாக கூற..

அதெல்லாம் நான் கூப்பிட்டா வருவா அம்மா நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க என்றால் துர்கா.

செண்பகத்திடம் சொல்லிவிட்டு நேராக சங்கவியின் அறைக்கு வந்த துர்கா அவள் அறைக் கதவை தட்ட…

சங்கவி வந்து கதவை திறந்தால். சங்கவி தன் அரை கதவை திறந்ததும் வெளியே சிரித்து முகமாக நின்றிருந்த துர்காவைப் பார்த்தவள் அவளைப் பார்க்க சங்கடப்பட்டு லேசாக சிரித்தபடி வா…துர்கா என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அதை சிரித்த முகத்தோடு சங்கவியின் அறைக்கு உள்ளே வந்த துர்கா ஏன் சங்கவி ரூமுக்குள்ளேயே அடஞ்சி இருக்க வெளியே வரலாம் இல்லையா…

செண்பகம் அம்மா நீ வெளியே வந்து யார்கிட்டயும் சகஜமா பேச மாட்டேங்கறேனு ரொம்ப வருத்தப்படுறாங்க.

உனக்காக இல்லைன்னாலும் அவங்களுக்காகவாது நீ வெளியே வரலாம் இல்லையா என்று கேட்டால் துர்கா.

துர்காவின் முகத்தை பார்த்து பேச பிடிக்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு நான் எப்படி துர்கா வெளியே வந்து சகஜமா எல்லார்கிட்டயும் பேசுவேன்.

உங்க எல்லாரையும் நான் எவ்வளவு காயப்படுத்தி இருக்கேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் அப்படி இருக்கப்போ நான் எப்படி சகஜமா எல்லார் கூடவும் பேசி பழக முடியும் என்றால்.

அது எல்லாம் எப்பவும் நடந்தது சங்கவி நீ ஏன் பழசை எல்லாம் நெனச்சிட்டு இப்படி ஒதுங்கி இருக்க அதை எல்லாம் யாரும் இப்போ நினைச்சு பார்க்க விரும்பல.

நீ எதை பத்தியும் கவலைப்படாம சகஜமா எல்லார் கூடவும் பேசிப் பழகு சங்கவி அதுதான் இங்கு எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கும் நீ இப்படி வெளியே வராமல் ரூமுக்குள்ள இருக்கிறது அவங்க எல்லாரையுமே ரொம்ப வருத்தப்பட வைக்குது கொஞ்சம் புரிஞ்சுக்கோ என்றால் துர்கா.

இல்ல துர்கா நான் இப்படி இருக்கிறத தான் எல்லாருக்கும் நல்லது. நான் ஒதுங்கி இருக்கிறது தான் எனக்கும் மரியாதை.

நான் சகஜமா வெளியே வந்து பேசினா என் கூட எல்லாரும் சகஜமா பேசி பழகுவாங்கறது நிச்சயம் இல்ல.

கண்டிப்பா அவங்க மனசுக்குள்ள நான் அவங்களுக்கு செய்த விஷயங்கள் எல்லாம் என் முகத்தை பார்த்தாலே ஞாபகம் வரும் அப்படி ஞாபகம் வந்த அவங்களால என்கிட்ட சகஜமா பேச முடியாது.

நான் ஏன் அவங்களை கஷ்டப்படுத்தனும்னு தான் நான் இங்கேயே இருக்கேன். எனக்கு என் அம்மா கிடைச்சதை இப்போ போதும்கிற நிலைமையில் நான் இருக்கேன் எனக்கு அதை தவிர்த்து வேறு எதுவும் வேண்டாம் என்றால் சங்கவி.

இதுவரை சங்கவியிடம் மிகவும் சாதாரணமாக சகஜமாக பேசிக் கொண்டிருந்த துர்கா.

சங்ககியை பார்த்து நீ சொல்றது தான் சரி சங்கவி இத்தனை நாள் எங்களை எல்லாருக்கும் நீ கொடுத்த குறைச்சலுக்கு நீ வெளியே வராம இந்த அறைக்குள்ளையே இருக்கிறது தான் உனக்கு நல்லது.

நீ வெளியே வந்து மறுபடியும் எங்களை எல்லாம் தொந்தரவு பண்ணாம ரூமுக்குள்ளேயே இருந்தா எனவே நீ எங்களுக்கு செய்யுற பெரிய உதவி.

பாவம் செண்பகம் அம்மா உன்னை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்காகவாவது நீ இந்த அறையை விட்டு வெளியே வராமல் இருப்பது தான் ரொம்ப ரொம்ப நல்லது.

ஏன்னா நீ பாட்டுக்கு எங்க எல்லார்கிட்டயும் சகஜமா பேசி பழகுறேன்னு வெளியே வந்துட்டேன்னு வை அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா உன்னோட ஆட்டத்தை ஆரம்பிச்சிடுவ.

அப்புறம் இந்த விஷயம் செண்பகம் அத்தைக்கு தெரிஞ்சா அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க அதனால நீ எப்பவும் போல இந்த ரூமுக்குள்ளயே அடைஞ்சு இருந்துக்கோ மறந்தும் வெளியே வந்துடாதே என்றாள் துர்கா.

துர்கா பேசியது சங்கவிக்கு ஏதோ உணர்த்தியதைப் போல இருந்தாலும் அதை உடனே ஒப்புக்கொள்ளவோ அதை வெளிக்காட்டிக் கொள்ளவோ அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

என்ன துர்கா சொல்ற எனக்கு புரியல என்னோட அம்மாவுக்காக தான் நான் ஒதுங்கி இருக்கேன்.

நான் வெளியே வந்து சகஜமா பேசி பழக நினைச்சாலும் உங்கள்ள யாராவது ஒருத்தர் என்கிட்ட எதுவும் முகம் கொடுத்து சரியா பேசாமல் போயிட்டா நான் அதை பொறுத்துக்குவேன்.

ஆனா என் அம்மா அவங்களை நினைச்சா தான் எனக்கு கஷ்டமா இருக்கு. அவங்க என்னை நினைச்சு ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு தான் நான் இந்த ரூமுக்குள்ளேயே அடஞ்சி இருக்கேன்.

எனக்கு வேற எதுவும் தேவை இல்லை துர்கா. நீ ஏன் என்கிட்டே இப்படி பேசுற… நீ சொன்னது போலவே நான் இந்த ரூமுக்குள்ளயே இருந்துகிறேன்.

என்னால யாருக்கும் சிரமம் வராது. ஒருவேளை நான் இங்கே இருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிடு துர்கா.

நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுறேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னோட அம்மாவை மட்டும் என்கூட அனுப்பி வச்சுருங்க என்று சங்கவி கெஞ்சுவது போல துர்காவிடம் பேச..

அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த துர்கா. வாவ்….சங்கவி சூப்பர் என்று கை தட்டினாள்.

சங்கவி புரியாமல் முகத்தை சுருக்கி கொண்டு துர்காவைப் பார்க்க…

என்ன சங்கவி அப்படி பார்க்கிற.. நீ பேசுனது எல்லாம் கேட்டுட்டு சூப்பர்னு நான் கை தட்டுறேன்னு ஆச்சரியமா இருக்கா என்ற துர்கா.

எப்படி சங்கவி இவ்வளவு அழகா நடிக்கிற உன் நடிப்பு எங்க கிட்ட நடிச்சு ஏன் வீணாக்குற… பேசாம நீ சினிமாவிலேயே போய் நடிச்சா உனக்கு ஆஸ்கர் அவார்டே கொடுப்பாங்க..

அந்த அளவுக்கு ரொம்ப எதார்த்தமா நடிக்கிற வாய்ப்பே இல்லை என்று சொன்ன துர்கா மீண்டும் கைதட்டினால்.

துர்காவுக்கு தான் நடிப்பது தெரிந்து விட்டதை உணர்ந்த சங்கவி.

அப்பாடா நான் நடிக்கிறேன்னு உனக்கு ஏற்கனவே தெரியுமா நான் இப்பதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.

சும்மா எல்லார்கிட்டயும் நல்லவளா பேசி நடிக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எப்படித்தான் நீங்க எல்லாம் இத்தனை வருஷமா இப்படி இருக்கீங்களோ தெரியல.

அப்பாப்பா நல்லவலா நடிக்கிறது ரொம்ப சிரமமா இருக்கு. இப்படி நடிச்சு நடிச்சு நான் நல்லவளா ஆக்டிவேட் போல எனக்கே கொஞ்சம் பயம் வந்துருச்சு..

இந்த வீட்டுக்குள்ள எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க என்னோட முகத்தை யார்கிட்டயும் காட்டவே முடியல நான் வேற நல்லவன்னு எல்லாரையும் நம்ப வெச்சிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்துட்டேனா அதான்.

நான் இப்போ எனக்கு எந்த பிரச்சனையுமே இல்ல உனக்கு தான் நான் நடிக்கலேன்னு தெரிஞ்சிருச்சே…

இனி உன்கிட்ட நான் நடிக்க வேண்டிய அவசியம் இருக்காது நான் எப்படி இருக்குன்னு அப்படியே உன்கிட்ட பேசலாம் நடந்துக்கலாம் ஏன் உண்மையான முகம் உன்னோட ஒருத்திக்கு மட்டும் தானே இந்த வீட்டில் தெரியும் என்றால் சங்கவி.

ஆமா ஆமா உன்னோட உண்மையான முகம் இப்போதைக்கு எனக்கு மட்டும்தான் தெரியும் கூடிய சீக்கிரமே நீ எப்படிப்பட்டவன் என்பதை இந்த வீட்டில் இருக்கிறவங்க எல்லாருக்கும் நான் வெளிச்சம் போட்டு காட்ட போறேன் பொறுத்திருந்து பார் என்றால் துர்கா.

ஓஹோ நீங்க அந்த அளவுக்கு என்ன கவனிச்சுட்டு வரீங்களா என்ற சங்கவி சரி அதையும் தான் பார்ப்போம் எப்படி நீ என்ன பத்தி இங்கே இருக்கிறவங்க எல்லார்கிட்டயும் சொல்லி நம்ப வைக்க போறேன்னு நானும் பார்க்கிறேன் அதை பார்க்க ரொம்ப ஆவலா காத்திட்டு இருக்கேன் என்றால் சங்கவி கையை கட்டிக்கொண்டு துர்கா முன் நின்று.

அதையும் தான் பார்க்கலாம் என்ற துர்கா கூடிய சீக்கிரமே இந்த வீட்டில் இருக்கிற எல்லார்கிட்டயும் உன்னோட உண்மையான முகத்தை காட்ட தயாரா இரு சங்கவி என்றவள். வரட்டுமா…..என்று சங்கவியின் கன்னத்தை தட்டி விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள் துர்கா.

துர்கா சொல்லிவிட்டு செல்வதையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த சங்கவி.

கூடிய சீக்கிரமே உனக்கும் தெரியும் துர்கா இந்த வீட்டில் இருக்கிற ஒவ்வொருவரையும் நான் எப்படி இந்த வீட்டை விட்டு துரத்துறேன்னு பாரு அவங்க எல்லாரும் இந்த விட்டு விட்டு போன பிறகு கடைசியா உன்ன தான் நான் இங்கே இருந்தேன் அனுப்ப போறேன் ஒவ்வொருத்தரும் இங்கிருந்து கஷ்டப்பட்டு வெளியே போறத தடுக்க முடியாம நீ பத்தி வெளியே சொல்ல முடியாம உனக்குள்ளேயே புழுங்கி இருக்க போற அதையும் நான் பார்க்கத்தான் போறேன் என்ற சங்கவி.

இவ இவ்வளவு தூரம் வந்து எப்படி இவ்வளவு தைரியமா பேசிட்டு போறா… இவ நமக்கு கொஞ்சம் டஃப் கொடுப்பா போல இருக்கே… என்று யோசித்த சங்கவி.

சரி அதையும் தான் பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி என்ன செஞ்சு என் முகத்தை இவங்க கிட்ட எல்லாம் வெளிச்சம் போட்டி காட்ட போறான்னு பார்க்கிறேன் என்றவள்.

அப்பாடா இப்பதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு என்று நினைத்துக் கொண்டே தன் மெத்தையில் படுத்தவள் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தால் சங்கவி.

❤️

You may also like

1 comment

S.joshna December 14, 2025 - 12:02 pm

Epdi durga ku therinjithu epdi iruthalum intha sangavi thirunthamata😮🤔😅😒

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured