Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 206

உன் ரகசிய ரசிகை நான் 206

by Layas Tamil Novel
167 views

EPI 206

மது இரண்டு மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால்.

முதலில் அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்துக் கொண்ட நிலானி மதுவிடம் ஹாஸ்பிடல் போகலாம் என்று அழைக்க..

அவள் தனக்கு ஒன்றும் இல்லை நான் நன்றாக தான் இருக்கிறேன் நான் எங்கும் வெளியில் வரவில்லை என்று சொல்லி நிலானியுடன் வெளியே செல்ல மறுத்துவிட்டால்.

எப்படி இருப்பதற்கு வேறு எதுவும் காரணம் இருக்கிறது என்று நிலானி மதுவிடம் பேசிப் பார்க்க…

ஆனால் மதுவோ நிலானியிடம் பிடி கொடுத்தும் பேசவே இல்லை.

ஏற்கனவே வீட்டில் மாதவிக்கும் போதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க… அதில் அனைவரும் பிசியாக இருப்பதால் நிலானிக்கு யாரிடம் சென்று என்ன சொல்லி மனக்குமுறலை கூட்டத் தீர்ப்பது என்று தெரியவில்லை.

தன் அக்கா இப்படி மூன்று நாட்களாக சரியாக சாப்பிடாமல். ஆபீசிற்க்கும் செல்லாமலும்…யாரிடமும் முகம் கொடுத்தும் பேசாமல் இருப்பதை பார்த்து நிலானிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

மது எப்படி இருப்பதால் என்னவோ எல்லா நிலானிக்கும் அவள் மனநிலையே தொற்றிக் கொண்டது.

தன் அக்காவை நினைத்த நிலானியும் சரிவர சாப்பிடாமல் இருந்தால்.

மாதவி திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொண்டு அதில் ரபிசியாக இருந்த விக்கி. நிலானியிடம் மேலும் செலவிடுவது மிகவும் குறைவாக போய்விட்டது.

காலேஜ் போவதற்கு பிடிக்கவில்லை அவள் சோர்வாக ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டிவியை வெறித்தபடி இன்று முழுவதும் ஹாலிலேயே அமர்ந்து இருந்தால் இன்னும் சாப்பிட வராமல் தூங்க செல்லாமல் ஹாலிலேயே அமர்ந்திருந்தால் நிலானி

அப்போது தான் கிச்சனிலிருந்து வந்த சிவகாமி நிலானி சோர்வாக ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்தவர். அவர் அருகில் வந்து அமர்ந்து நிலானியின் தலையை வருடிக் கொடுக்க..

சிவகாமி பார்த்த நிலானி அவரிடம் எதுவும் பேசாமல் அவர் தோளில் சாய்ந்த படி அமர்ந்து கொண்டாள்.

தாயில்லாமல் வளர்ந்த நிலானிக்கு சிவகாமி கிடைத்ததில் இருந்து தாய்ப்பாசம் என்றால் என்ன என்பதை உணர்ந்து இருந்தால்.

சிவகாமியின் நிலானிடம் தன் மகளைப் போலவே பாவித்து நடந்து கொண்டார்.

இருவருமே தாய் மகள் போலத்தான் இத்தனை நாட்கள் பழகிக் கொண்டு இருந்தனர்.

சிவகாமியின் தோளில் சாய்ந்த நிலானி அம்மா எனக்கு மனசு சரியில்லை என்றால்.

அதை நிமிர்த்தி பார்த்த சிவகாமியை ஏன்டா என்ன ஆச்சு என்று கேட்டால்.

அக்கா சரியா சாப்பிட்டு மூன்று நாள் ஆச்சு என்கிட்ட சரியா பேச மாட்டேங்குற ஆபீஸுக்கும் மூணு நாளா போகல.. உடம்பு சரியில்லையான்னு கேட்டா அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்னு சொல்றா.

ஏன் இப்படி இருக்க உனக்கு என்ன ஆச்சுன்னு கேட்டா அதுக்கு சரியா பதில் சொல்லாமல் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கா. எனக்கு என் அக்காவை அப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா என்றால் சிவகாமியிடம்.

நீ நல்லா கேட்டு பார்த்தியா மது எதுவுமே உன் கிட்ட சொல்லலையா என்று கேட்டார் சிவகாமி.

அக்கா கிட்ட எதுவும் கேட்டுக்கலைன்னாலும் என்னால் விசாரிச்சவர அக்கா லவ் பண்ற பவனுக்கும் அக்காவுக்கும் தான் இடையில் ஏதோ பிரச்சனை என நினைக்கிறேன்.

அங்க ரெண்டு பேரும் இப்போ கொஞ்ச நாளா சரியா பேசிக்கிறது இல்ல. அவங்களுக்குள்ள என்ன நடந்தது என்று எனக்கு சரியா தெரியல அம்மா என்றால் நிலானி.

நிலானி சொன்னதை பொறுமையாக கேட்டவர். நான் மது ஃப்ரீயா இருக்கிறப்போ அவகிட்ட பேசி பார்க்கிறேன். என்ன இருக்குன்னு யாராவது அவள் கிட்ட பேசினா தானே தெரியும் என்றார் சிவகாமி.

அப்படி யாராவது கிட்ட மனசு விட்டு பேசினா தானே என்ன இருக்குன்னு மத்தவங்களுக்கும் தெரியும் அவளுக்கும் கொஞ்சம் பாரம் கொஞ்சம் மாதிரியும் இருக்கும்.

எவ்வளவோ முறை நான் மதுகிட்ட பேசி பார்த்துட்டேன். ஆனா அவள் என்கிட்ட படி கொடுத்தும் பேச மாட்டேங்குறா என்றாள் நிலானி வருத்தமாக.

நீ கவலைப்படாத நிலானி நான் உன் அக்காவிடம் பேசி நிறைய விஷயம் என்னன்னு தெரிஞ்சுகிட்டு சொல்றேன் முடிஞ்சா அந்த விஷயத்தை சரி பண்ண பார்க்கிறேன் என்றவர் சரி சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் விக்கி வர லேட் ஆகும்னு சொல்லிட்டா நீ சாப்பிட்டுவிட்டு போய் படுத்து தூங்கு என்றவர் நிலானியை அனுப்பி வைத்தார்.

நிலானி தட்டில் உணவே போட்டு விட்டு நான் என்னோடு ரூமுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன் மா என்று சொன்னவள் தன் போனை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.

நிலானி சென்றதும் சிவகாமி எழுந்து வந்து ஒரு தட்டில் செய்து வைத்திருந்த உணவை போட்டுக்கொண்டு மதுவின் நோக்கி சென்றார்.

மதுவின் அரை கதவை சிவகாமி தட்ட… நெருப்பில் வந்து மது அவள் அரைக்கதவை திறக்க…. அவள் முன்பு சிரித்து முகமாக கையில் உணவு தட்டுடன் நின்றிருந்தார் சிவகாமி.

அவரை இந்த நேரத்தில் அதுவும் கையில். உணவுடன் மது சிவகாமியை எதிர்பார்க்க வில்லை.

தன் கண்களில் கண்ணீரோடு வந்து கதவை திறந்து இருந்த மது. சிவகாமியிடமிருந்து தன் கண்ணீரை மறைக்க கஷ்டப்பட்டவாறே வாங்க மா… என்று அழைத்தால்.

ஏன் மது காலையிலிருந்து நீ சாப்பிடவே வரலைன்னு நிலானி சொன்னா என்ன ஆச்சு என்று கேட்டார் சிவகாமி.

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா எனக்கு பசி இல்ல அதனால தான் சாப்பிட வரல என்று பொய் சொன்னால் மது.

ஏன் மது என்கிட்டே பொய் சொல்ற ஒரு அம்மாவுக்கு தெரியாதா தன் பிள்ளையோட முகம் எதுக்காக வாடி இருக்குன்னு என்றார் சிவகாமி.

அம்மா என்று சொன்னதும் இவ்வளவு நேரம் தன் அழகிய கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடமிருந்து மறைத்துக் கொண்டிருந்த மது

அம்மா… என்று அழுதபடி சிவகாமியை கட்டிக்கொண்டால்.

இந்த சிவகாமியின் தன் கையில் வைத்திருந்த தட்டை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு மதுவை ஆறுதலாக அவள் தலையை வருடிவிட்டார்.

மது சிவகாமி கண்டு அவர் தோளில் ள முகம் புதைத்துக் கொண்டு வெடித்து அழ …

அவர் மறுபடியும் எந்த கேள்வியும் கேட்காமல் அவள் முதுகை வருட்டி விட்டு தட்டிக் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினார்.

அவளாகவே அழுது ஓயட்டும் என்று சிவகாமி பொருமையாக காத்திருந்தார்.

எவ்வளவு நேரம் மது சிவகாமியை கட்டிக்கொண்டு இருந்த இடத்திலேயே அழுது கொண்டிருந்தால் என்று அவளுக்கு தெரியவில்லை.

நீண்ட நேரம் அழுது ஓய்ந்த பின்பு தன்னை பிரித்துக் கொண்டவள் சாரிமா எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல நீங்க வந்து அம்மா… என்று ஒரு வார்த்தை சொன்னதும் என்னை மறந்து நான் உங்களை கட்டிப் பிடிச்சு அழ ஆரம்பிச்சிட்டேன் என்றால்.

பரவாயில்லை மது என்னையும் அம்மாவா நினைச்சு என்கிட்ட உரிமையா நீ அழுறது கூட எனக்கு பிடிச்சிருக்கு என்றார் சிவகாமி அதே சிரித்து முகத்தோடு.

அவரை வித்தியாசமாக பார்த்த மது,,,, தனக்கும் ரவிக்கும் இடையில் நடந்த பிரச்சனையையும் அதன் பின்பு அவனை சந்தித்தது அவனுடன் சிம்லா சென்று வந்தது அங்கே தங்களுக்கு நடந்த விஷயங்கள் அதன் பிறகு அவனை தான் திரும்பவும் செய்து கொள்ள மறுத்தது என ஒன்று விடாமல் மது பொறுமையாக கூறினார்.ள்

அதனால என்ன இப்பொழுது முடிந்து போன வாழ்க்கையையோ அல்லது முடிஞ்சு போன விஷயத்தையும் நினைத்து இப்பொழுது நம் கண் முன்னே நடக்கும் நல்ல விஷயங்களை போட்டு விட்டு விடுகிறோம்.

தல உனக்கு எதிரே இருக்க அழகான வாழ்க்கையை யோசிச்சு பாரு தூங்கினால் நீ அந்த ரவி கிட்ட மாட்டிகிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்ப…

நீதான் அவனை விட்டு பிரிந்து வந்ததுக்கு அவனுக்கு தான் நன்றி சொல்லணும் என்ற சிவகாமி மதுவை பார்க்க…

மதுவும் சிவகாமி என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்னை பாக்குறே… அந்த ரவியை வேண்டாம்னு முடிவு பண்ணினதுனால் தானே நீ பவனை இப்போ காதலிக்குறே அவன் கூட சந்தோசமா வாழணும்னு நினைக்குற… இது எல்லாமேம் ரவி கூட இருந்து இருந்தா வந்திருக்குமா இல்லை தானே என்றார்.

மதுவும் ஆமாம் என்று தலையை ஆட்ட.. இங்கே பாரு மது எல்லாருக்கும் வாழ்க்கை ஒரே மாதிறி அமையிறது இல்ல.

ஆனா சிலருக்கு மட்டும்தான் வாழ்க்கையில இரண்டாவது முறையா வாழ்ந்து பார்க்க சான்ஸ் கொடுத்திருக்கும்.

அதை நாம ஏற்கனவே நடந்த பழைய நினைவுகளை மாதிரி இந்த வாழ்க்கையும் எப்படி இருக்குமோனு பயந்துட்டு கிடைச்ச வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமயே முடிவு பண்ணிரக் கூடாது.

பவன் நீ அவன் கூட திருமணம் செய்யாமல் வாழ சம்மதம் சொன்னதுக்கும் சரின்னு தானே சொன்னான்.

அவன் உன்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அவன் அம்மாவையே எதிர்த்து உன்கூட வாழ தயாரா இருக்கான். அப்பறோம் ஏன் யோசிக்குற என்றார்.

அவர் பேசியதில் பாதி தெளிவு அடைந்த மது அம்மா பவன் நான் சொன்னதுக்கு சம்மதம் சொல்லி என்கூட வாழ தயாரா இருக்கான்.

ஆனா அவன் அம்மா…. என்று நிறுத்தியவல் அவருக்கும் என்னை பிடிச்சிருக்கு. ஏற்கனவே கல்யாணம் ஆகி டிவெர்ஸ் ஆக போறவன்னு தெரிஞ்சும் என்னை பவன் லவ் பன்றானு தெரிஞ்சதும் எங்க காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்க.

ஆனா… ஆனா… நான் பவன் கிட்டே சம்மதம் வாங்கின மாதிரி அவன் அம்மாகிட்டே சம்மதம் வாங்க முடியலை அவங்க இதுக்கு சம்மதிக்க மாட்டேன்குறாங்க என்றாள் மது.

அவங்க எப்படி சம்மதிப்பாங்க மது என்றார்

மது சிவகாமியை ஆச்சர்யமாக பார்க்க… என்னை பாக்குற மது அவரை மாதிரியே நானும் சொல்றேன்னு பாக்கறியா என்றார்.

ஆமாம் என்று மது தலையை ஆட்ட…

அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து நிலானியை நீ இவ்வளவு வருஷமா அம்மா இல்லாத குறையே தெரியாம வளர்த்து படிக்க வெச்சு இருக்க…

அவளும் உன்மேல அக்காங்குற உறவை தாண்டி உன்னை தன் அம்மாவை நினைச்சுட்டு இருக்கா…

நீ எப்படி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு நினைச்சு அந்த ரவியை விட்டுட்டு வந்தியோ அதே போல உன் வாழ்க்கையும் நல்ல படியா அமையணும்னு மதுவும் விரும்புறா..

தன் அக்கா எல்லார் முன்னாடியும் அவளை மாதிரி ஒரு மதிப்பும் மரியாதையோடும் உனக்குன்னு ஒரு குடும்பத்தை உருவாக்கி அதில் சந்தோசமா வாழனும்னு ஆசைப்படரா..

இது அவளோட ஆசை மட்டும் கிடையாது என்னோட அம்மாவோட ஆசையுந்தான் தன்மகன் மனசுக்கு பிடிச்ச பொண்ணு கல்யாணம் பண்ணி இந்த சமூகத்துல ஒரு நல்ல அந்தஸ்து ஓட வாழனும்னு நான் அதை கண்கூட பார்த்து சந்தோஷப்படணும்னு நினைப்பாங்க.

நீ எடுத்துக்க நிலானி இந்த மாதிரி கல்யாணம் பண்ணாம என் பையன் கூட ஒரு வீட்ல கொடுத்து நடத்தணும்னு சொன்னா நீ அதுக்கு சம்மதிப்பியா?உன் மனசு அதுக்கு இடம் கொடுக்குமா? என்று கேட்டார்.

மது சிறிதும் யோசிக்காமல் மாட்டேன் என்று தலையை இடவலமாக ஆட்ட..

என்ன சிரிப்பு என்ற சிவகாமி… அப்புறம் நீ மட்டும் இந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்காம வாழணும்னு ஆசைப்பட்டா ஒதுக்க மாட்டே….

ஆனா உன்ன சுத்தி உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா நீ எடுத்து முடிவுக்கு சம்மதம் சொல்லுவாங்கனு நினைக்குறதுல என்னை நியாயம் இருக்கு மது.

உனக்கு. ஒரு நியாயம் உன் தங்கச்சிக்கு ஒரு நியாயமா என்றார் சிரித்துக் கொண்டே…

நீ எடுத்த இந்த மாதிரி முடிவுக்கு பவன், நிலானி ரெண்டு பேருமே சம்மதம் சொல்றாங்கன்னா.. அவளுக்கு வேற வழி தெரியல இப்போதைக்கு உன்ன சமாதானப் படுத்த நிலானி மட்டும் இல்லை நீ நல்லா இருக்கணும்னு நினைச்சவங்க எல்லாம் உனக்காக தான் நீ எடுத்த முடிவுக்கு சம்மதம் சொல்லி இருப்பாங்க

ஆனா நிச்சயமாக உன்னோட முடிவுக்கு முழு மனசா உன்னிடம் சம்மதம் சொல்லி இருக்க வாய்ப்பே இல்ல என்றார் சிவகாமி.

முதல்ல உன்னோட பழைய வாழ்க்கையை நினைச்சிட்டு அது போலவே இப்போ கிடைச்ச வாழ்க்கையும் தப்பா முடிஞ்சிருமோன்னு யோசிக்காத.

முழு மனசோட நம்பிக்கையா உன் வாழ்க்கையை ஆரம்பி மற்ற எல்லாம் தானா நடக்கும் உனக்கு பிடிச்ச மாதிரியே என்றார் சிவகாமி.

இரண்டு மூன்று நாட்களாக குழப்பத்தில் இருந்த மதுவுக்கு இப்போது சிவகாமியிடம் பேசியதில் ஒரு தெளிவு பிறந்து இருந்தது.

சரி நீ சாப்பிட்டு படு மது காலையில நேரமே பவனை பார்க்க போகணும்ல என்றார் சிரித்த படி.

அவள் அப்போதுதான் பவனை காலையில் சீக்கிரமே சந்தித்து தான் எடுத்த முடிவை

அவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்ககையில் அவள் மனதை படித்தது போல சிவகாமியும் சொல்ல…

எப்படி மா!!! என்று ஆச்சர்யம் ஆனால் மது.

நான் உன் ரூமுக்கு வரும்போது குழப்பமா இருந்த உன்னோட முகம் இப்போ தெளிஞ்ச நீரோடை மாதிரி உன் மனசை அப்படியே பிரதிபலிக்குது என்றவர்.

என் மகளோட மனசு எனக்கு புரியாதா என்று அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தார்.

அவர் கைகளை பிடித்துக்கொண்டு தேங்க்ஸ் மா… என் மனசை தெளிய வெச்சதுக்கு என்று சிவகாமிக்கு நன்றி சொன்னாள்.

வேத்தாசலத்திற்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சிவகாமி மதுவின் அறையில் இருந்து சென்றார்.

சிவகாமி சென்றதும் மது தன் போனை எடுத்து பவனுக்கு அழைத்தவள் பவன் இடம் காலையில் சீக்கிரமே பவனை சந்திக்க வேண்டும் என்றவல் இருவரும் வழக்கமாக நாம் சந்திக்கும் இடத்திற்கு வந்து விடு என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

தன் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ வேண்டும் என்று சொன்னதற்கு சம்மதிக்கவில்லை என்று கேள்விப்பட்டதிலிருந்து மது அவனிடம் சரியாக பேசாமல் இருந்தால் ஆனால் இப்பொழுது அவளாகவே போன் செய்து அவனை சந்திக்க வேண்டும் என்று மிகவும் உற்சாகமான குரலில் கூறவும் பவுனுக்கு ஏதோ மது எப்படி பேசியது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

காலையில் அவளைக் காணும் ஆவலின் அது அணிந்த சட்டையை போட்டு இருந்த தலையனையை கட்டிக் கொண்டு அதை மது என்று நினைத்து அதற்கு முத்தமிட்டவன் அதனுடன் உறங்கிப் போனான்.

❤️

You may also like

1 comment

S joshna December 14, 2025 - 12:11 pm

Ayooo naduvula intha Ravi varama iruntha seri than😒

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured