EPI 213
மறுநாள் வழக்கம் போல அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருக்க ஆதி கிளம்பி ஆபிஸிற்கு சென்றான்.
அவனிடம் வந்த ரியா இன்றைய ஆதியின் மீட்டிங் விபரங்களை பற்றி சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட…
இவ்வளவு நேரம் ரியாவைக் காணாமல் ஆபீஸ் முழுவதும் அவளை தேடிக்கொண்டிருந்த ஸ்ரீ… ரியாவை கண்டதும் அவளிடம் ஓடி வந்தவன், “ரீயா குட்டி” என்று சொல்லி அவள் முன்னால் வந்து நிற்க…
இவ்வளவு நேரம் என் வேலையில் டென்ஷனாக இருந்த ரியா, ஸ்ரீயை பார்த்ததும் சந்தோஷமானாள்.
“டேய் இடியட், இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்த? நான் காலையில வந்ததிலிருந்து உன்னை பார்க்கவே இல்லையே” என்று கேட்டாள்.
“ஒன்னும் இல்லடி செல்லம், விக்கி மாமா ஒரு முக்கியமான மீட்டிங் பத்தி விவரம் கேட்டு இருந்தார். அவருக்கு அந்த டீடைல் எல்லாம் கொடுக்க அவர் கேபினுக்கு போயிருந்தேன். அந்த கேப்ல தான் நீ வந்துட்ட” என்றான் ஸ்ரீ.
“சரி ஏன் செல்லம் உன் முகம் ரொம்ப சீரியஸா இருக்கு?” என்று கேட்டான்.
“இல்லடா, சில மாசத்துக்கு முன்னாடி துர்கா மேடம் டென்மார்க்ல ஒரு ஷூட்டிங்க்காக போயிருந்தாங்களே அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.
நேற்று யோசித்த ஸ்ரீ, “ஆமாம், அங்கு ஏதோ மாடலிங்க்காக போயிருந்தாங்க தானே. அங்க தானே அவங்களுக்கு கூட ஆக்சிடென்ட் ஆச்சு அப்படின்னு அவங்களுக்கு அசிஸ்டென்டா இருந்த லதா மேடம் சொல்லித் தான் கேட்டு இருக்கேன்” என்றான்.
“அதேதான், அந்த ஆட் இன்னும் துர்கா மேடம் முழுசா முடிச்சு கொடுக்கல போல. அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு இவ்வளவு நாளா அந்த ஏட் கம்பெனி வெயிட் பண்ணிட்டு இருந்திருக்காங்க.
தனலட்சுமி மேடம்க்கு உடம்பு நல்ல குணமாயிடுச்சு, அதனால ஆதி சார் அவங்கள டென்மார்க் அழைச்சிட்டு போக பிளான் போட்டு இருக்காரு. அதுக்கான ஃபார்மலிட்டிஸ் எல்லாம் செய்ய சொல்லி சில டீடெயில்ஸ் என்கிட்ட கொடுத்துட்டாரு.
நான் இத்தனை நாளா சின்ன சின்ன ஆபீஸ் வொர்க் மட்டும் தான் இங்கே செஞ்சிட்டு இருந்தேன். முதல் முறையா ஆதி சார் என்கிட்ட ஒரு முக்கியமான பொறுப்பு கொடுத்து அதை எல்லாம் சரியா பிளான் போட்டு செய்ய சொல்லி இருக்காரு. அதுல எதுவும் குளறுபடி வராம சரியா செய்யணுமேன்னு தான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு ஸ்ரீ, வேற எதுவும் இல்லை” என்றாள் ரியா.
“ஏய் இவ்வளவுதானா? இதுக்காக ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகிட்டு இருக்க? இப்ப என்ன துர்கா மேடமும் ஆதி சாரும் டென்மார்க் போறதுக்காக பக்கா பிளான் போட்டு கொடுக்கணும் அவ்வளவுதானே? கொஞ்சம் வெயிட் பண்ணு, எனக்கு ஒரு சின்ன வேலை விக்கி மாமா கொடுத்திருக்கிறார். அதை முடிச்சு குடுத்துட்டு வந்து நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்று ஸ்ரீ ரியாவிடம் பேசிக்கொண்டு இருக்க…
தான் கேட்ட விபரத்தை இன்னும் கொண்டு வராமல் ஸ்ரீ என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தன் கேபின் வழியாக ஸ்ரீயை விக்கி தேடிக்கொண்டிருக்க, அவன் ரியாவிடம் பல்லை காட்டி வழிந்தபடி பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன்…
“இவனுக்கு…. இவனுக்கு லவ் செட் ஆனாலும் ஆச்சு…. எந்த நேரமும் ரியா கூட பேசிக்கிட்டே இருக்கான், ஒழுங்கா வேலைய பாக்குறது இல்ல…. கிடைக்கிற நேரம் எல்லாம் அந்த ரியா கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தா ஆபீஸ் வேலை எல்லாம் யார் பாக்குறது” என்றவன், “இவனுக்கு இன்னிக்கு இருக்கு” என்று சொல்லிவிட்டு ரியாவை இன்டர்காமில் அழைத்தான்.
இன்டர்காமில் விக்கி அழைப்பதை பார்த்தவள், “சார் தான் கால் பண்றாரு…. நீ போய் வேலையை பாரு, அவரு நீ என் கூட பேசிட்டு இருக்குறத பார்த்துட்டு தான் கால் பண்ணி இருப்பார்ன்னு நினைக்கிறேன்” என்று சொன்ன ரியா போனை அட்டென்ட் செய்து “ஹலோ சார் சொல்லுங்க” என்றாள்.
“என்ன நான் உனக்கு கால் பண்றேன்னு சொன்னதும் உன் ஆள அழுகாம எஸ்கேப் பண்ணி அவன் கேபினுக்கு அனுப்ப பார்க்கிறாயா? ஒழுங்கா ரெண்டு பேரும் என் கேபினுக்கு வாங்க” என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்தான் விக்கி.
“அய்யய்யோ நான் பேசுவது இவருக்கு எப்படி தெரிஞ்சது” என்று பயந்த ரியா, ஸ்ரீயை பார்க்க… அவன் அப்போதுதான் தன் கேபினுக்கு சென்று கொண்டு இருந்தான். வேகமாக அவன் பின்னால் ஓடிய ரியா, ஸ்ரீயின் சட்டையை பிடித்து இழுத்தவாறு, “எல்லாம் உன்னால் வந்ததுடா… ஒழுங்கா நான் பாட்டுக்கு வேலை பார்த்துட்டு இருந்தேன், எனக்கு ஹெல்ப் பண்றேன் அதை பண்றேன்னு சொல்லி விக்கி சார்கிட்டே வசமா மாட்டி விட்டுட்ட… வா…. உன்னையும் தான் கூப்பிடுறாரு” என்று அவன் சட்டை காலரை பிடித்து தன்னோடு இழுத்துக் கொண்டு விக்கியின் கேபினுக்குள் சென்றாள்.
ஸ்ரீயை இழுத்து வந்து விக்கியின் முன்பு நிற்க வைத்த ரியா, அவன் அருகில் அமைதியாக நின்று கொள்ள…. அவளை பாவமாக பார்த்த ஸ்ரீ, “உனக்கு வேலையில ஹெல்ப் பண்றேன்னு சொன்னது ஒரு குத்தமாடி? இப்படி கூட்டிட்டு வந்து என் மாமன் முன்னாடி ஏதோ குற்றவாளி மாதிரி நிக்க வெச்சிட்டியே” என்று அவளை பார்த்தான்.
ஆனால் ரியாவோ அவனை திரும்பியும் பார்க்காமல் மிக நல்லவள் போல தலையை குனிந்து கொண்டு விக்கி முன்பு நிற்க… “இந்த மாதிரியா ரொம்ப நல்லவன் மாதிரி என் முன்னாடி நடிக்காத. இவ்வளவு நேரம் அவன் கூட சேர்ந்து நீயும் பல்லை காட்டி சிரிச்சு பேசிக்கிட்டு தானே இருந்த? அதை நான் பார்க்கவில்லை என்று நினைச்சியா…” என்றான் விக்கி.
விக்கி பேசியதை கேட்டு பதறிய ரியா, “சார் நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல. நான் ஆதி சார் சொன்ன வேலையைத்தான் செஞ்சுட்டு இருந்தேன். ஸ்ரீ தான் என்கிட்ட வந்து எனக்கு ஹெல்ப் பண்றேன்னு என்னை வேலை விடாமல் தொண தொணைன்னு பேசி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தான்” என்று பாவமாக வைத்துக்கொண்டு பழியை முழுவதும் ஸ்ரீயின் மேல் போட்டாள் ரியா.
அவள் பேசியதெல்லாம் கேட்டு அதிர்ச்சியானவன், “அடிப்பாவி” என்பது போல அவளை பார்க்க… அவள் ஸ்ரீயை பார்த்து பார்வையாலேயே “ப்ளீஸ் டா…” என்று கெஞ்ச, “சரி பிழைத்து போ…” என்று அமைதியாக நின்று கொண்டான் ஸ்ரீ.
ரியா பேசியது எல்லாம் கேட்ட விக்கி ஸ்ரீயை பார்த்து, “ஏண்டா ரியா சொன்னதெல்லாம் உண்மையா? நீ அவளை வேலை செய்ய விடாம இடைஞ்சல் பண்ணிக்கிட்டு இருந்தியா?” என்றான்.
“நான் எதுவுமே பண்ணல மாமா, சும்மாதான் அவ ஏதோ டென்ஷன்ல இருக்காளே என்ன பண்றான்னு பார்க்கப் போனேன். அவ கிட்டே போய் ‘ஏன் ரியா ரொம்ப டென்ஷனா இருக்கே?’ன்னு மட்டும் தான் கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா மாமா?” என்றான் ஸ்ரீ.
“என்னடா சொன்னா?” என்று விக்கி ஆர்வமாக கேட்க… “அதுவா மாமா, நீயும் ஆதி சாரும் சேர்ந்து இவளுக்கு நிறைய வேலையை கொடுத்து அவளை கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்க விடாமல் வேலையா வாங்குறீங்களாமா…. இத்தனை பேர் வேலைக்கு இருந்தாலும் நீ எப்போ பார்த்தாலும் ரியாவை கூப்பிட்டு அவ கிட்ட வேலை வாங்குறியாம்…. என்னை மட்டும் ஃப்ரீயா விட்டு வச்சிருக்கேன்னு உன்னை திட்டினா மாமா” என்றான் ஸ்ரீ.
ஸ்ரீ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான ரியா, “டேய் ஸ்ரீ என்னடா சொல்ற!!!” என்று அவனிடம் கேட்க… “நீ மட்டும் இப்போ என்ன என் மாமாகிட்ட மாட்டி விட்ட இல்ல… அதுக்கு தான் பதிலுக்கு பதில்” என்று சொன்னவன், திரும்பி விக்கியின் முன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கையை கட்டியவாறு நின்றான்.
ஸ்ரீ சொன்னதைக் கேட்ட விக்கி ரியாவை பார்த்து, “ஏம்மா உன்ன நான் என்ன அவ்வளவு வேலையா வாங்குறேன்? அப்பப்போ ஏதாவது ஒரு பைலை மட்டும் தான் கொண்டுவரச் சொல்றேன், அது கூட உனக்கு வேலை செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கா?” என்று கேட்டான்.
“நல்லா அவளுக்கு உரைக்கிற மாதிரி கேளு மாமா, உன்னை வேற என்ன எல்லாம் சொன்னா தெரியுமா?” என்று ஸ்ரீ மேலும் விக்கியை ஏற்றி விட… “என்னடா ஸ்ரீ நீ சொல்றதெல்லாம் பார்த்தா சரியா என்ன பத்தி எக்கச்சக்கமா ஏதோ உன்கிட்ட சொல்லி இருப்பா போல, என்ன சொன்னான்னு சொல்லு” என்று விக்கி கேட்டான்.
அவர்கள் இருவருக்கும் இடையில் வந்த ரியா, “சார் இவன் சொல்றதெல்லாம் கேட்காதீங்க, இவன் வேணும்னே உங்ககிட்ட என்னை மாட்டி விடறதுக்காக பொய் சொல்றான்” என்று கூற… “நீ கொஞ்ச நேரம் சும்மா இரும்மா, என் மாமன் மகன் பொய் சொல்ல மாட்டான். அவன் எப்பவுமே உண்மைதான் பேசுவான், உனக்கு தெரியாது நீ கம்முனு இரு” என்று ரியாவை பேசவிடாமல் செய்து, விக்கி தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து வந்தவன் ஸ்ரீயின் அருகில் வந்து அவன் தோளில் கை வைத்து “நீ சொல்லுடா, என்ன பத்தி ரியா என்ன எல்லாம் சொன்னா?” என்று கேட்டான்.
“அதுவா மாமா, காலையில வந்ததுல இருந்து ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போற வரைக்கும் ஒரு நிமிஷம் கூட ரியாவை உட்கார விடாம மாத்தி மாத்தி நீயும் ஆதி சாரும் அவள வேலை வாங்குறீங்களாமா…. நேரம் காலம் இல்லாம வேலை பார்த்தும் எந்த பிரயோஜனமும் இல்லை, அவளோட வேலைக்கு தகுந்த மாதிரி சம்பளம் தர மாட்டேங்குறாங்க, ஒரு நாள் லீவு கூட எக்ஸ்ட்ரா கேட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க, எப்ப பாரு வேலை வச்சு என்னோட கழுத்தை அறுக்கறாங்க அப்படின்னு சொன்னா மாமா” என்றான்.
சொன்னதைக் கேட்டு ஷாக் ஆனது போல நடித்த விக்கி ரியாவை பார்த்து, “ஏன் மா ரியா, உன்னை அப்படியா நாங்க இங்கே வேலை வாங்குறோம்?” என்று அவளைப் பார்த்து கண்ணடிக்க… அவன் தன்னைப் பார்த்து ஜாடை செய்து ஏதோ சொல்வதை உணர்ந்த ரியா, அவனுக்கு தகுந்தார் போல முக பாவனைகளை மாற்றிக்கொண்டு, “ஆமா சார் அவன் சொல்றதெல்லாம் உண்மைதான். இங்கே என்னோட வேலைக்கு தகுந்த மாதிரி சம்பளம் யாரும் கொடுக்க மாட்டேங்கிறீங்க… ஒரு நாள் லீவு கூட எனக்கு கொடுக்க மாட்டேங்கறீங்க… நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே வேலை பார்க்கிறேன் என்று தெரியுமா?” என்று ரியாவும் பதிலுக்கு விக்கியோடு சேர்ந்து நடித்தாள்.
“இப்படி கஷ்டப்பட்டுட்டு நீ ஒன்னும் எங்க கம்பெனில வேலை பார்க்கணும்னு அவசியம் இல்லமா. ஆதி கிட்ட நான் சொல்லிக்கிறேன். உனக்கு எந்த கம்பெனி வேலையே வாங்காம சம்பளம் கொடுக்கிறாங்களோ நீ அங்கேயே போய் சேர்ந்துக்க…. எங்க கம்பெனியிலிருந்து இப்பவே வேலையை விட்டு போயிடுமா, எனக்கு உன்னை வேலை சொல்லி கஷ்டப்படுத்தின பாவம் எல்லாம் எதுவும் சேர வேண்டாம்” என்று விக்கி ரியாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டவன், “உடனே இங்கே இருந்து கிளம்புமா, எங்க கம்பெனியில் இனிமேல் உனக்கு வேலை இல்லை” என்று அவளிடம் நடித்தான்.
“ரொம்ப நன்றி சார், நானே எப்படா இந்த கம்பெனியை விட்டு போகலாம்னு இருந்தேன், நீங்களே என்னை போக சொல்லிட்டீங்க ரொம்ப வசதியா போயிடுச்சு” என்றவள், ஸ்ரீயிடம் திரும்பி “இதுக்கு எல்லாம் நான் உனக்கு தான் நன்றி சொல்லணும் ஸ்ரீ… நீ மட்டும் நான் சொன்னதை எதையும் மறைக்காம விக்கி சார்கிட்ட சொல்லாம இருந்திருந்தா, இந்த நேரம் எனக்கு இந்த கம்பெனியை விட்டு போகிற வாய்ப்பு கிடைத்திருக்காது” என்றாள்.
ஸ்ரீ பார்க்க… “நான் விளையாட்டுத்தனமா ஆரம்பிச்சது இப்படி வினையாகி போயிடுச்சு. நான் சொன்ன பொய்யை நம்பி இந்த லூசு மாமா இவளை வேலை விட்டு போகச் சொல்றாரு, இப்ப நான் என்ன பண்ணுவேன்?” என்று ஸ்ரீ பதட்டமாக… அவன் பதட்டமாவதை பார்த்த ரியா, “என்னடா டென்ஷன் ஆகுதா? இருக்கட்டும், என்னை ஒரு நிமிஷத்துல எவ்வளவு டென்ஷன் பண்ணிட்ட? கொஞ்ச நேரம் இப்படியே கிட” என்று நினைத்தபடி விக்கியைப் பார்த்து, “சார் நான் என்னோட வேலையை ரிசைன் பண்றேன்” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே செல்ல போக…
ரியாவின் கையைப் பிடித்து இழுத்து விக்கி முன்பு நிற்கவைத்த ஸ்ரீ, “ஐயோ லூசு மாமா… நான் என்ன சொன்னாலும் நீ அப்படியே நம்புவியா? யார் சொன்னது நான் பொய்யே பேச மாட்டேன்னு…. நான் வாயை திறந்தா பொய் மட்டும் தான் பேசுவேன்னு உனக்கு தெரியாதா?” என்றான்.
தன்னைப் பற்றி தானே சொல்லிக் கொள்ளும் ஸ்ரீயை பார்த்து விக்கியும் ரியாவும் அவனுக்கு தெரியாமல் சிரித்துக் கொள்ள… “நான் சொன்னதை அப்படியே நம்பிட்ட…. சரியான லூசுயா நீ…. உன் பாட்டுக்கு என் ரியாவை வேலையை விட்டு போக சொல்லிட்டே…. இவ ஆபீஸை விட்டு போயிட்டான்னா நான் என்ன செய்யறது? ரியா இல்லாம எனக்கு இங்கே கையும் ஓடாது காலும் ஓடாது” என்றான்.
உடனே விக்கி, “நீ ஏண்டா கவலைப்படற மாப்பிள்ளை? ரியா போனா வேற ஒரு பொண்ணு அந்த இடத்துல புதுசா அப்பாயின்ட் பண்ணிக்கலாம். ரியா ரொம்ப ஓவரா பேசுற மாப்பிள்ளை, நான் எவ்வளவு வேலை கொடுக்குற மாதிரி பில்டப் பண்ணிட்டு இருக்கா… இவ இங்கே வேலைக்கு வேண்டாம் போகட்டும்” என்று சொல்ல… “யோவ் மாமா நான் இவ்வளவு நேரம் கத்திக்கிட்டு இருக்கிறது உன் காதுல விழுகலையா…. இவ்வளவு நேரம் நான் சொன்னதெல்லாம் பொய்… நான் சொன்னதை நீ நம்பிட்டு இப்படியா ரியாவை வேலை விட்டு போக சொல்லுவியா?” என்று கத்தினான் ஸ்ரீ.
“அப்படி வாடா மாப்பிள்ளை வழிக்கு! என்ன சொன்ன? யோவ் மாமாவா? பாவம் அந்த பொண்ணு இங்கேயும் அங்கேயும் வேலை செஞ்சு அல்லாடிக்கிட்டு இருக்கு… அவளை என்கிட்ட இருந்து திட்டு வாங்காம காப்பாத்துவியா? அதை விட்டுட்டு நீயே அவளை என்கிட்ட மாட்டி விடுற?” என்று அவன் காதை பிடித்து திருகியவன், ரியாவிடம் திரும்பி “ரியா நீ சொல்லு இவனை என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.
தன் காதை திருகிக் கொண்டிருந்த விக்கியின் கையைப் பிடித்து எடுத்த ஸ்ரீ, “மாமா வலிக்குது” என்றவன், “இவ என்னை வேணும்னே உன்கிட்ட மாட்டி விட பார்த்தாள், அதுக்கு பதிலா தான் நானும் அவளை சும்மா விளையாட்டுக்கு மாட்டி விட்டேன். இத போய் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு சீரியஸா எடுத்துட்டு இருக்கீங்க” என்று பேச…
“அவளே சின்ன பொண்ணு, அவளுக்கு என்னடா தெரியும்? விளையாட்டுக்கு செய்யப்போய் நீ இவ்வளவு சீரியஸா அவளை என்கிட்ட மாட்டிவிடுற? இதுவே இந்த இடத்துல என்னை தவிர வேற யாராவது இருந்திருந்தால், இந்த நேரம் நீ ரியாவை பற்றி சொன்னதெல்லாம் கேட்டுட்டு உண்மைன்னு நம்பி அவளை வேலையை விட்டு தூக்கி இருப்பாங்க. ஏதோ நானா இருக்க போய் ரியாவுடைய வேலை தப்பிச்சுது” என்றான் விக்கி.
“ஆமாம்” என்று தலையை ஆட்டிய ரியா, “சார் இவனுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும். உங்ககிட்ட என்னை பற்றி தப்பு தப்பா நான் இருக்கும்போதே சொல்லிக் கொடுக்குறானே… இவனுக்கு ஏதாவது பெருசா செய்யணும்” என்று ஸ்ரீயை முறைக்க… “ஆமாம் ரியா இவனை ஏதாவது செய்யணும்” என்று விக்கி சீரியஸாக யோசித்துக் கொண்டிருக்க…
“அவனுக்கு மட்டும் இல்லை, உனக்கும் சேர்ந்து நான் தண்டனை கொடுக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு விக்கியின் கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஆதி.
ஆதி உள்ளே வந்ததும் “ஐயோ… இவன் எதுக்கு இப்போ இங்கே வந்தான்?” என்று விக்கி திருதிருவென விழித்துக்கொண்டு நிற்க… விக்கியிடம் வந்து நின்ற ஆதி, “ரொம்ப நடிக்காத விக்கி, உனக்கு இது செட் ஆகலை” என்றவன், ரியாவிடம் திரும்பி, “ரியா நான் துர்கா டென்மார்க்கில் மாடலிங் செய்த விளம்பரம் குறித்து டீடைல்ஸ் கேட்டிருந்தேனே, ரெடியா?” என்றான்.
“சார் அது.. அது வந்து… நான் நீங்க கேட்ட டீடைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டு இருந்தேன், அதுக்குள்ள…” என்று சொல்லி தலையை சொறிந்தாள்.
“ம்ம்ம்… ஆக மொத்தம் நான் சொன்ன வேலையை நீ செய்யாம இங்கே நின்னு நீங்க எல்லாம் தேவை இல்லாமல் நேரத்தை வீண் பண்ணிட்டு அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க அப்படித்தானே?” என்றான் ஆதி.
ஆதி சொன்னதைக் கேட்டு முதலில் “ஆமாம்” என்று தலையை ஆட்டிய மூவரும் பின் உடனே “இல்லை இல்லை” என்று வேகமாக தலையை ஆட்ட… அவர்கள் மூவரையும் பார்த்து சிரித்த ஆதி ரியாவிடம் திரும்பி, “உனக்கு இப்போ ஸ்ரீக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும் அப்படித்தானே?” என்றான்.
ரியா ஸ்ரீயை பார்த்துவிட்டு “இல்லை சார் நான் சும்மா விக்கி சார் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்” என்றாள் தயங்கியபடி. “அப்போ அவனுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாமா?” என்றான் ஆதி. ரியா அவசரமாக வேண்டாமென்று தலையை ஆட்ட… “சரி அப்போ அவனுக்கு தண்டனை கொடுக்கலை” என்றான்.
“ரியா, துர்காவும் நானும் அடுத்த வாரம் டென்மார்க் போறோம். அங்கே துர்காவுக்கு பெண்டிங் இருக்க ஷூட்டிங்ஸ், அப்புறம் ஏற்கனவே கமிட் ஆகியிருக்க மாடலிங் ஒர்க் எல்லாம் முடிக்க வேண்டி இருக்கு. துர்காவுக்கு அசிஸ்டன்ட்டா ஏற்கனவே லதா கமிட் ஆகிட்டாங்க. லதா கூட ஒர்க் பார்த்துட்டு இருந்த விவேக் வேலையை ரிசைன் செய்ததுனால அந்த வேலைக்கு ரியா உன்னைத்தான் செலக்ட் பண்ணிருக்கோம்” என்றான் ஆதி.
“அடுத்த வாரம் டென்மார்க் துர்கா கூட நீ கிளம்பணும். அங்கே ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு திரும்ப வர எப்படியும் பத்து நாளைக்கு மேல ஆகும், அதுக்கு தகுந்த மாதிரி திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிக்கோ” என்றான்.
டென்மார்க் செல்கிறோம், அதுவும் லதாவிற்கு அசிஸ்டன்ட் ஆக செல்கிறோம் என்று கேட்டதும் தனக்கு அடுத்த புரமோஷன் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை ஸ்ரீயை விட்டு பத்து நாள் பிரிந்து செல்வதை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியாமல் ரியா விழித்தாள்.
ரியா பத்து நாட்கள் தன்னை விட்டு பிரிந்து செல்லப் போகிறாள் என்று கேட்டதும், ஸ்ரீ வேகமாக ஆதியிடம் வந்து “சார் ரியா கண்டிப்பா டென்மார்க் போகணுமா?” என்றான். “ஆமாம்” என்று தலையை ஆட்டினான் ஆதி. விக்கியிடம் சென்று “மாமா நீ சொல்லு ஆதி சார் கிட்ட, ரியாவை டென்மார்க் கூட்டிட்டு போகவேண்டாம்னு சொல்லு, நீ சொன்னா ஆதி சார் கேட்பாருல்ல” என்றான் ஸ்ரீ.
“நான் சொல்லி என்னிக்குடா அவன் கேட்டிருக்கான்? நான் என்ன அவன் பொண்டாட்டியா? நான் சொன்னதும் கேட்டுட்டு சரின்னு தலையை ஆட்ட…” என்றான் விக்கி. ஸ்ரீ செய்வதறியாது ரியாவை பார்க்க… அவளும் அதே மனநிலையில் தான் ஸ்ரீயை பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.
இவர்கள் இருவரையும் பார்த்த ஆதி லேசாக சிரித்தவன், “ஸ்ரீ நீ சொன்னது போல ரியாவை எங்க கூட அழைச்சிட்டு போகலை” என்றான். அதைக் கேட்டு சந்தோசம் அடைந்த ஸ்ரீ நிம்மதி அடைந்து ஆதிக்கு நன்றி கூறினான்.
“ஆனா நீ டென்மார்க் கண்டிப்பா போய் ஆகணும்” என்றான் ஆதி. “சார்…” என்று ஸ்ரீ அதிர்ச்சியாகி பார்க்க… “ஆதி சொன்னான்… நான் ரியாவை லதாவிற்கு அசிஸ்டன்டாகவும், உன்னை அந்த விவேக்கிற்கு பதிலாகவும் அழைச்சிட்டு போலாம்னு இருந்தேன். ஆனா நீதான் ரியாவை கூட கூட்டிட்டு போக வேண்டாம்னு சொல்லிட்டியே” என்று ஆதி தோளை குலுக்க…
அப்போதான் தாங்கள் அனைவருமே டென்மார்க் செல்கிறோம் என்ற செய்தியே தெரிந்தது. அனைவரும் ஒன்றாக செல்கிறோம் என்ற சந்தோசம் தொற்றிக் கொண்டது. கிட்டதட்ட விக்கியின் பொறுப்பை ஸ்ரீயை நம்பி ஆதி தனக்கு கொடுத்து இருப்பதை எண்ணி மகிழ்ந்த ஸ்ரீ ஆதிக்கு நன்றி சொல்ல…
“ஸ்ரீ உன்னை இந்த வேலைக்காக டென்மார்க் அனுப்ப சொன்னதே விக்கி தான். அவன் தான் நீ இந்த வேலையை பெர்ஃபெக்ட்டா செய்வேன்னு உனக்காக என்கிட்ட ரெக்கமெண்ட் பண்ணினான்” என்றான் ஆதி. “ஓகே நான் வந்த வேலை முடிஞ்சிது, எல்லாரும் போங்க போங்க வேலையைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு ஆதி வெளியே செல்ல… ரியாவும் ஸ்ரீயை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆதியின் பின்னால் சென்றாள்.
தன்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை விக்கி கொடுத்திருக்கிறான் என்று எண்ணி சந்தோசப்பட்ட ஸ்ரீ விக்கியை பார்க்க… விக்கி “என்னடா எல்லாம் ஓகேவா?” என்றான். “மாமா ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லி ஓடி வந்த ஸ்ரீ, விக்கியை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் வைக்க…
“டேய் ஸ்ரீ விடுடா, என் பொண்டாட்டி மட்டும் முத்தம் கொடுத்த கன்னம்டா இது… இப்படி நீ வந்து முத்தம் கொடுத்து என் கன்னத்தை அழுகிடாதே” என்றான் விக்கி. “பரவாயில்லை மாமா” என்று மீண்டும் ஒரு முறை விக்கியின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு விக்கியின் கேபினை விட்டு வெளியே சென்றான் ஸ்ரீ. அவன் சந்தோசமாக செல்வதை பார்த்த விக்கி லேசாக சிரித்தவன், “பாசக்கார பையன்டா என் மாமன் மகன்” என்று நினைத்தபடி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
